Pages

Tuesday, July 07, 2009

வலையுலக வாத்தியார் சுப்பையா அவர்களின் கதைகள் - விமர்சனம்..!

06-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கல்வி எதற்காக..? உலகம் அறிந்து கொள்வதற்காக.. உலகமெனில் அசையும், அசையாப் பொருட்கள், அவற்றின் மூலதாரம், மனிதர்கள், இவர்தம் படைப்புகள், அந்தப் படைப்புகளின் வரலாறு, உலகத்தின் இயல்பு, நடப்பு, இவை அத்தனையையும் சுருக்கி ஒரு கடுகளவைவிட மிகக் குறைந்த அளவே நம்மால் கற்க முடிகிறது.

இதை வைத்து வாழ்ந்துவிட முடியுமா..? முடியாது.. கல்வி தரும் அங்கீகாரத்தில் கிடைக்கும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது கிடைக்கின்ற பாடங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமக்குக் கிடைத்த கல்வி நமக்கு உபயோகமாக இருக்கிறதா அல்லது வீணாகிப் போனதா என்பதே தெரிய வரும்.

“படித்தவன் பாழும் செய்தால் ஐயோவென்று போவான்” என்பார்கள். இதையே படிக்காதவன் செய்துவிட்டால் இந்த “ஐயோ..”வில் கொஞ்சம் இரக்கக் குணமும் சேர்ந்துவரும்.. “பாவம்.. படிக்காதவன்..” என்று..

ஆகக்கூடி வாழ்க்கையில் எது நல்லது.. எது கெட்டது என்று நாம் தெரிந்து கொள்ள கல்வி பயன்படுகிறது என்றாலும், அதனை பரிசோதித்து பார்க்கின்றபோது சில படித்தவர்கள் படிக்காதவர்கள் போலவும், பல படிக்காதவர்கள் படித்தவர்கள் போலவும் மாறிவிடுவது நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில நிகழ்வுகள்.

அப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளைத்தான் நமது வலையுலக வாத்தியார் திரு.சுப்பையா அவர்கள் தனது செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஒன்றல்ல இரண்டல்ல.. இதுவரையில் 52 கதைகளை எழுதியிருக்கும் நமது வாத்தியார் அவற்றில் தேர்ந்தெடுத்த 20 கதைகளை மட்டும் இந்த முதல் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அத்தனையும் கற்கண்டுகள். சந்தேகமில்லை.

புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் செட்டி நாட்டு அறுசுவை மணக்கிறது. செட்டி நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், நடை, உடை பாவனைகள் என்று அத்தனையையும் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

ஒருவர் மீதான இனம் காணாத வெறுப்பும், பார்த்த மாத்திரத்திலேயே எழும் கோபம் சுடுகாடுவரையிலும் நீடிக்கும் தன்மையும் இன்றைக்கும் நாட்டு மக்களிடையே புழங்கி வரும் இன்றைய இயந்திரச் சூழலில் இரண்டுக்கும் முடிச்சுப் போடுவது போல அன்பான பேச்சிலும், நடத்தையிலுமே ஒருவர் மனதை ஒருவரால் வெல்ல முடியும் என்பதை தனது கதைகளில் சொல்லியிருக்கிறார் வாத்தியார்.

வார்த்தை ஜாலங்கள் இல்லை. வார்த்தை விளையாட்டுக்களை காணோம். முடிச்சுக்கள் தெரியவில்லை. சொற்றொடர்களின் ஆதிக்கம் உணரவில்லை.. ஆனால் அந்த செட்டி மண்ணின் மனம் மணக்கிறது. இந்த மணத்துடன் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தாற்போல் வாழ்க்கை அனுபவங்களை நம் முன் வைத்திருக்கிறார்.

செட்டி நாட்டு அரண்மனைகளின் வெளிப்புறம் நமக்கு அளிக்கும் தோற்றத்திற்கும் உட்புறமாக இருக்கும் மாந்தர்களின் மனப்போக்கிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை வேறொரு கோணத்தில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் வாத்தியார்.

முதல் கதையான ‘மதிப்பும், மரியாதை'யுமே என்னை அசர வைத்துவிட்டது.. என்னே ஒரு கதைக்கரு..! நிமிடத்தில் ஏற்படும் கோபத்தின் விளைவால் பெற்றெடுத்த பிள்ளைகள் வேண்டாதவர்களாகி விடுவார்களா என்ன..? வேண்டாம் என்கிறார் வாத்தியார். ஆனால் அதற்காக அவர் சொல்கின்ற சமாதானம்தான் அருமை..

ஒவ்வொருவரின் ஊரிலும், ஏதோவொரு தெருவில் மீனி ஆச்சியைப் போல ஒருத்தரை நம்மால் பார்க்க முடியும். எனது சொந்த அனுபவத்திலும் நான் கண்டிருக்கிறேன். “அது, அது கொழுப்பெடுத்து அலையுதுக..” என்று காலம் முழுவதும் பழிச்சொல்லை சுமந்து கொண்டு திரிந்த அந்த ஜீவன்களின் அகத்தையும், புறத்தையும் ஒருசேர கண்டுணர்ந்திருக்கிறார் அந்தக் கதையில்.. மெளனமும் ஒரு மொழி என்பதை அவர் காண்பிக்கும் அந்த இடம் ஒரு ஹைக்கூ கவிதை..

கருப்பஞ்செட்டியாரின் கஞ்சத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற கதையில் வாத்தியார் சொல்கின்ற நீதி, “போகும்போது எதைக் கொண்டு போகப் போகிறாய்..? இருக்கும்போது இருப்பவர்களுக்குக் கொடு.. அந்தப் புண்ணியமே நீ விடைபெறும்போது உடன் வரும்..” என்கிற தத்துவத்தை அழகாக போதிக்கிறது.

சந்தேகம்.. சந்தேகம்.. எல்லாவற்றையும் தானே இழுத்துப் போட்டு செய்துகொண்டு நேரமில்லை நேரமில்லை என்று அலுத்துக் கொள்வதிலும் சிலர் முனைப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் ஒரு நீதிக்கதை உண்டு.. ‘நல்ல துணை'யில்.. உண்மையில் இது மாதிரியான ஒரு பக்கத்தை நாம் இதுவரையில் திரும்பிப் பார்க்காததால்தான் இந்த புலம்பல்கள் அதிகம் உலவுகின்றன என்று நினைக்கிறேன்.

உடன் பிறந்தோரை சந்தேகத்துடன் பார்க்கும் சில உடன்பிறப்புக்கள், பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், ஒன்று சேர வைக்கத் துடிக்கும் கணவன்மார்கள், விதவையான மாமியாரை தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க ஆசைப்பட்ட மனைவி, ஆசை, ஆசையாக வளர்த்த தனது பாட்டியின் பூர்வீக வீட்டை நிலை நிறுத்த ஆசைப்படும் பேரன்.. அம்மாவையும் அனுசரித்து மனைவி வீட்டாரையும் பெருமிதப்படுத்தும் கணவன், நட்சத்திரம், ஜாதகம் என்று நம்பிக் கொண்டு மகனுக்கு பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஒரு பெற்றோர் என்று நமது கண் முன்னே அக்கம்பக்கம் வீடுகளையே கொண்டு வந்து காட்டுகிறார் வாத்தியார்.

இவர்களுக்கு சொல்கின்ற தீர்வுதான் நாம் முன்பு யோசித்திராத கோணம். திரைப்படங்களில் இதுவரையில் பார்த்திராத காட்சியமைப்புகள்தான் கைதட்டல் பெறும். அதே போலத்தான் வாத்தியாரின் கதை சொல்லும் நீதி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

கோவிலுக்கு சமமான வீட்டையே இடித்துத் தரைமட்டமாக்கும் தொழில் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் அவ்வளவுதான் என்று நினைத்த செட்டியாருக்கு, அதற்கான ‘பரிசு' கிடைத்தவுடன் அவர் மூலம் கேட்கின்ற கேள்வியில் இருக்கிறது நமது வாத்தியாரின் பாடம் சொல்லித் தரும் திறமை.

கொஞ்சமும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. ஒவ்வொரு கதையாடலிலும் ஒரு விஷயத்தைச் சொல்லித் தருகிறார். பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். பூர்வீக மண்ணைத் துறந்து அயல் மண்ணில் பணம் ஈட்டும் மகனது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படும் பாட்டிகள் அத்தனை ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கவலைப்படுகின்ற விஷயம் அயல் நாட்டில் இருக்கின்ற அந்த இளசுகளுக்குத் தெரியுமா? புரியுமா..? புரிந்தாலும், புரியாவிட்டாலும் பாட்டிகளின் மனநிலை இதுதான் என்பதை புரிய வைக்கிறார் ஒரு கதையில்..

‘மண் கெட்டது மனசால.. பெண் கெட்டது வாயாலே' என்கிற பழமொழிக்கேற்ப பேசியே வம்பை வாங்கும் ஒரு மனைவியை திருத்த கணவன் செய்யும் முயற்சிகளை மிக, மிக வித்தியாசமாக அணுகியிருக்கிறார் வாத்தியார். சாட்சாத் இது மனோதத்துவ ரீதியான அனுபவம். சிறுகதைகளுக்குள் பெரும் உரையாடல் இது..

கதைகளைச் சொல்வதற்கு ரொம்ப மெனக்கெடவில்லை வாத்தியார். மிகச் சுலபமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி, மிக எளிமையாக, படிக்கத் தூண்டுகின்ற விதத்தில் ‘நச்' என்று முடிவை மட்டும் முடித்து வைத்து அடுத்த கதையை படிக்க வைக்கிறார்.

“பாடம், படிக்காமல் கெட்டது.. பிள்ளை, கண்டிக்காமல் கெட்டது.. கடன், கேட்காமல் கெட்டது.. உறவு, பார்க்காமல் கெட்டது..” என்று நமது வாழ்க்கை ரகசியங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் வாத்தியார்.

துணைக்கு என் அப்பன் முருகனையும், அவரது மற்றும் எனது ஆரூயிர்க் காதல் கவிஞன் கண்ணதாசனையும் அழைத்துக் கொண்டுள்ள வாத்தியார் பக்கத்திற்கு பக்கம் இவர்களை முறைப்படுத்தி பெருமிதப்பட்டுள்ளார்.

வாழ்க்கையை வாழ்வதற்கு யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆனால் வாழ விடுகிறதா வாழ்க்கை அனுபவம்..? சோகங்களும், ஆற்றாமைகளும் சேர்ந்து மனிதரை துயரக்கடலில் தள்ளிவிடும்போது துணைக்கு நம்முடன் நிற்பது அந்த இறைவன் மட்டுமே எனும்போது அதுதான் நமது கடைசி நம்பிக்கை.. இந்த 20 கதையிலும் யாரோ ஒருவருக்கு அந்த அப்பன்தான் துணைக்கு இருக்கிறான். இதுவே நெஞ்சுக்கு நிம்மதி என்கிறார் வாத்தியார்.

நூறு சுய முன்னேற்ற நூல்களைப் படித்தாலும் இதில் இருக்கும் கதைகளின் அனுபவத்தினையும், பாடத்தினையும் உங்களால் பெற முடியாது..

இதுவே வாழ்க்கை என்கிறார் வாத்தியார்..!

அதை வாழ்ந்து பார் என்கிறார் வாத்தியார்..!

நன்றியிலும் நன்றி வாத்தியாருக்கு...!

படித்துப் பாருங்கள்..! மனித வாசனை புரியும்..!!!


செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்
எழுதியவர் : SP.VR. சுப்பையா
பக்கங்கள் : 160
விலை : ரூபாய் 75.

வெளியீடு

உமையாள் பதிப்பகம்
பழைய எண் 94 : புது எண் 14
சொர்ணாம்பிகா லே அவுட்
ராம் நகர்
கோயம்புத்தூர் - 641 009.
அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்
18 / 171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை - 600001
தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர்
சென்னை-600017
தொலைபேசி எண் - 24353742

35 comments:

  1. நீங்கள் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொல்வதற்குச் சமம் உண்மைத்தமிழரே!
    நீங்கள் எழுதிய விமர்சனம் நூறு விமர்சகர்கள் எழுதிய விமர்சனத்திற்குச் சமம்

    ஒராயிரம் நன்றி!

    நான் ஓராயிரம் முறை சொன்னால் அது ஒன்றிற்குச் சமம்!
    ஆகவே ஓராயிரம் நன்றிகள் உனாதானா!

    ReplyDelete
  2. Nandri Unmai thamizhan for ur short version of Vaathiar Subbiah book.Definitely 'Human' is felt.Also thank u for the info abt the details of the availability of the book.Plz come to my when u find time.

    ReplyDelete
  3. அண்ணனுடைய விமர்சனமே புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. நான் இங்கே இருந்துக் கொண்டு புத்தகத்தை பெருவதென்பது கஷ்டம். அடுத்து பதிப்பு வெளிவருவதற்குள் ஏதாவது ஆவன செய்ய வேண்டும். செய்கிறேன்.

    ReplyDelete
  4. ஒன்று கேட்க மறந்து விட்டேன். தமிழ்மணத்தார் தங்கள் மேல் கொல வெறியோடு இருக்கிறார்களா. தங்கள் பதிவிற்கு ஓட்டு குத்தமுடியவில்லை. வேறு சில(ர்) பதிவுகளில் முடிகிறது. It seems to be you are singled out to be penalized.

    ReplyDelete
  5. ///SP.VR. SUBBIAH said...

    நீங்கள் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொல்வதற்குச் சமம் உண்மைத்தமிழரே!

    நீங்கள் எழுதிய விமர்சனம் நூறு விமர்சகர்கள் எழுதிய விமர்சனத்திற்குச் சமம்

    ஒராயிரம் நன்றி!

    நான் ஓராயிரம் முறை சொன்னால் அது ஒன்றிற்குச் சமம்! ஆகவே ஓராயிரம் நன்றிகள் உனாதானா!///

    வாத்தியாரே...

    உமது வாழ்வியல் அனுபவங்கள் அனைத்தும் எங்களுக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள்..

    பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.. உங்களையும் சேர்த்துத்தான்..!

    ReplyDelete
  6. ///நையாண்டி நைனா said...

    supero super.///

    நன்றி நைனா..

    புத்தகதத்தைப் படித்துவிட்டு வாத்தியாருக்கு ஒரு லெட்டர் எழுதி சொல்லிரு தம்பீ..

    ReplyDelete
  7. [[[Muniappan Pakkangal said...
    Nandri Unmai thamizhan for ur short version of Vaathiar Subbiah book. Definitely 'Human' is felt. Also thank u for the info abt the details of the availability of the book. Plz come to my when u find time.]]]

    நன்றி டாக்டர் ஸார்..!

    புத்தகம் முழுவதும் இருப்பது மனித வாடைதான்.. அதைத் தவிர வேறில்லை..

    மனிதர்களுக்கு நிச்சயம் அது பிடிக்கும்.

    வாங்கிப் படித்துப் பாருங்கள்..!

    ReplyDelete
  8. [[[ananth said...
    அண்ணனுடைய விமர்சனமே புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. நான் இங்கே இருந்துக் கொண்டு புத்தகத்தை பெருவதென்பது கஷ்டம். அடுத்து பதிப்பு வெளிவருவதற்குள் ஏதாவது ஆவன செய்ய வேண்டும். செய்கிறேன்.]]]

    இங்கே வரும்போது வாங்கிச் செல்லுங்கள் ஆனந்த்..

    சென்னையிலும் இப்புத்தகம் கிடைக்கிறது..!

    ReplyDelete
  9. [[[ananth said...
    ஒன்று கேட்க மறந்து விட்டேன். தமிழ்மணத்தார் தங்கள் மேல் கொல வெறியோடு இருக்கிறார்களா. தங்கள் பதிவிற்கு ஓட்டு குத்தமுடியவில்லை. வேறு சில(ர்) பதிவுகளில் முடிகிறது. It seems to be you are singled out to be penalized.]]]

    இல்லை ஆனந்த்..

    தமிழ்மண கருவிப்பட்டையை பின்னூட்டங்களுக்கும் கடைசியாக வைத்துள்ளேன்.

    இதனால் நேரடியாக எனது தளத்திற்குள் நுழைந்தவர்களுக்கு அது தெரியாது.

    அப்படி நுழைந்தால் மறுபடியும் தலைப்பை ஒரு முறை கிளிக் செய்யுங்கள்..

    இப்போது தளம் பின்னூட்டங்களுடன் விரியும். இப்போதுதான் கருவிப்பட்டை தெரியும்.

    நன்றி ஆனந்த்..!

    ReplyDelete
  10. [[[நாஞ்சில் நாதம் said...

    :)))))]]]

    நன்றி நாஞ்சில் நாதம் ஸார்..!

    ReplyDelete
  11. நல்ல நேர்மையான விமர்சனம்

    ReplyDelete
  12. வாத்தியார் எழுத்துக்கு வலிமை அதிகமாச்சேப்பா.

    இன்னும் படிக்கலை.

    கிடைக்குதான்னு பார்க்கணும்!

    ReplyDelete
  13. ///தீப்பெட்டி said...

    நன்றி..

    :)///

    எதுக்கு நன்றி..?

    புத்தகத்தை வாங்கிப் படிச்சிட்டு வாத்தியாருக்கு நன்றிக் கடிதம் எழுதிருங்க தீப்பெட்டி..!

    ReplyDelete
  14. ///KaveriGanesh said...
    நல்ல நேர்மையான விமர்சனம்///

    என்ன காவேரி ஸார்.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..

    மறந்துட்டீங்களே..?!!!

    ReplyDelete
  15. [[[துளசி கோபால் said...

    வாத்தியார் எழுத்துக்கு வலிமை அதிகமாச்சேப்பா. இன்னும் படிக்கலை.
    கிடைக்குதான்னு பார்க்கணும்!]]]

    டீச்சர்..

    சென்னையில் குமரன் பதிப்பகத்திலும், உமா பதிப்பகத்திலும் கிடைக்குது.. இவங்க அட்ரஸை பதிவுல எழுதியிருக்கேன்.. பார்த்துக்குங்க..

    வருகைக்கு நன்றிங்கோ டீச்சர்..!

    ReplyDelete
  16. வாத்தியார் எதாவது போட்டி கீட்டி வெச்சா அதில் கலந்துக்கிட்டு வெற்றி பெற்று இந்த அற்புதமான புத்தகத்தை பரிசா பெறுவேன்....

    ReplyDelete
  17. எப்படியோ ஓசியில் கிடைத்தால்தான் படிப்பீர்கள் என்ன ரவி தம்பி. விளங்கிவிடும்.

    ReplyDelete
  18. ///Blogger செந்தழல் ரவி said...
    வாத்தியார் எதாவது போட்டி கீட்டி வெச்சா அதில் கலந்துக்கிட்டு வெற்றி பெற்று இந்த அற்புதமான புத்தகத்தை பரிசா பெறுவேன்.////

    உங்களுக்கு எதற்குப்போட்டி?
    இணையத்தின் அதிரடி எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்!
    நீண்ட நாட்களாக எழுதுபவர்!
    வேலைவாய்ப்பு சேவை வேறு செய்கிறீர்கள்!
    உங்களுக்குப் பரிசாகவே ஒரு புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
    உங்கள் முகவரியை என் மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள் செந்தழலாரே!
    என் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    அன்புடன்,
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  19. ஹைய்யா மீன் சிக்கிடுச்சு...!!!!

    எப்படி எங்க வாத்தியார் அய்யாக்கிட்ட இப்படி போட்டு அப்படி வாங்கிட்டேன்...

    நன்றி நன்றி நன்றி...!!!!

    ஆனா புத்தகக்கடையில் எங்க வாத்தியார் புத்தகம் என்று ரைட்டில் திரும்பி மனைவியிடம் பெருமிதமாக சொல்லிவிட்டு வாங்கும் மன திருப்தி இருக்காது இல்லையா..ஹும்...

    ..

    ..

    சரி மின்னஞ்சல் உடனே அனுப்பறேன்...

    ReplyDelete
  20. ///செந்தழல் ரவி said...
    வாத்தியார் எதாவது போட்டி கீட்டி வெச்சா அதில் கலந்துக்கிட்டு வெற்றி பெற்று இந்த அற்புதமான புத்தகத்தை பரிசா பெறுவேன்....///

    ///செந்தழல் ரவி said...

    ஹைய்யா மீன் சிக்கிடுச்சு...!!!!

    எப்படி எங்க வாத்தியார் அய்யாக்கிட்ட இப்படி போட்டு அப்படி வாங்கிட்டேன்...

    நன்றி நன்றி நன்றி...!!!!

    ஆனா புத்தகக்கடையில் எங்க வாத்தியார் புத்தகம் என்று ரைட்டில் திரும்பி மனைவியிடம் பெருமிதமாக சொல்லிவிட்டு வாங்கும் மன திருப்தி இருக்காது இல்லையா..ஹும்...

    ..

    ..

    சரி மின்னஞ்சல் உடனே அனுப்பறேன்...///

    எப்படி நார்வேக்கு கூரியர்ல அனுப்பணுமா..?

    ம்.. வாத்தியாருக்கும், புள்ளைக்கும் பாசம் எல்லை கடந்து கரை புரண்டோடுதுன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  21. [[[ananth said...
    எப்படியோ ஓசியில் கிடைத்தால்தான் படிப்பீர்கள் என்ன ரவி தம்பி. விளங்கிவிடும்.]]]

    ஆனந்த்.. இது பாசத்தோட பேசுற பேச்சு..

    தயவு செஞ்சு இது மாதிரி எடுத்தேன், கவுத்தேன்னு பேசாதீங்க..

    பழைய பதிவர்களுக்கிடையே ஒருவித இணக்கமும், பிணக்கும், நட்பும் உண்டு. அதை அவர்கள் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவார்கள்.

    தெரியாதவர்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது..

    ஸாரி கோச்சுக்காதீங்க..!

    ReplyDelete
  22. நல்ல அறிமுகத்திறகு நன்றி நண்பரே...

    விரைவில் வாங்கி வாசிக்கிறேன்.

    ReplyDelete
  23. அப்படியே நீங்க எழுதுனது எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்.......ஆஹா, மஹாபாரதம் அளவுக்கு பெரிசால்ல போயிடும்..:0)))

    ReplyDelete
  24. அண்ணன் அவர்கள் சொன்னால் சரிதான். நான் அப்படி சொல்லியிருக்க கூடாதுதான். மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  25. ///வண்ணத்துபூச்சியார் said...
    நல்ல அறிமுகத்திறகு நன்றி நண்பரே... விரைவில் வாங்கி வாசிக்கிறேன்.///

    நல்லது.. படியுங்கோ பூச்சியாரே..

    ReplyDelete
  26. ///அது சரி said...
    நல்லதொரு அறிமுகம்... அப்படியே நீங்க எழுதுனது எல்லாம் புக்கா போட்டா எப்படி இருக்கும்....... ஆஹா, மஹாபாரதம் அளவுக்கு பெரிசால்ல போயிடும்..:0)))///

    சொல்லிட்டீங்கள்லே.. போட்டிருவோம்..!

    விலை சுமாரா ஆயிரம் ரூபான்னு வைச்சிருவோம்.. நீங்கதான் முதல் போணி.. ஒரு ஆயிரம் புத்தகமாச்சும் வாங்கிக்கணும்..

    ஓகேவா..?

    ReplyDelete
  27. [[[ananth said...
    அண்ணன் அவர்கள் சொன்னால் சரிதான். நான் அப்படி சொல்லியிருக்க கூடாதுதான். மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.]]]

    அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. புரிஞ்சுக்கிட்டா சரிதான் தம்பி..!

    ReplyDelete
  28. //
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    சொல்லிட்டீங்கள்லே.. போட்டிருவோம்..!

    விலை சுமாரா ஆயிரம் ரூபான்னு வைச்சிருவோம்.. நீங்கதான் முதல் போணி.. ஒரு ஆயிரம் புத்தகமாச்சும் வாங்கிக்கணும்..

    ஓகேவா..?

    //

    ஒரு புக்கு ஆயிரம் ரூபாயா?? அப்படின்னா ஆயிரம் காப்பி, ஒரு லட்சம் தான் வருது....இப்பவே ஆர்டர் குடுத்துரலாம்...

    ஆனா.....

    ஆயிரம் புக்கை ஸ்டோர் பண்ண ஒரு பதினைஞ்சி மாடி பங்களா இல்ல வேணும்....அதுக்கு நான் எங்க போவ??

    ReplyDelete
  29. ///அது சரி said...

    //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    சொல்லிட்டீங்கள்லே.. போட்டிருவோம்..! விலை சுமாரா ஆயிரம் ரூபான்னு வைச்சிருவோம்.. நீங்கதான் முதல் போணி.. ஒரு ஆயிரம் புத்தகமாச்சும் வாங்கிக்கணும்..
    ஓகேவா..?//

    ஒரு புக்கு ஆயிரம் ரூபாயா?? அப்படின்னா ஆயிரம் காப்பி, ஒரு லட்சம்தான் வருது....இப்பவே ஆர்டர் குடுத்துரலாம்...

    ஆனா..... ஆயிரம் புக்கை ஸ்டோர் பண்ண ஒரு பதினைஞ்சி மாடி பங்களா இல்ல வேணும்.... அதுக்கு நான் எங்க போவ??///

    எங்கேயும் போக வேண்டாம்..

    மொதல்ல ஒரு பத்தாயிரம் புத்தகத்தை வாங்கி வித்திருங்க.. காசு அள்ளிரலாம்..

    அந்தக் காசுல மாடி வீடு கட்டுங்க..

    அதுக்கப்புறமா உங்களுக்குன்னு ஆயிரம் புத்தகத்தை வாங்கிக்குங்க..

    எப்படி ஐடியா..?

    ReplyDelete
  30. //
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    எங்கேயும் போக வேண்டாம்..

    மொதல்ல ஒரு பத்தாயிரம் புத்தகத்தை வாங்கி வித்திருங்க.. காசு அள்ளிரலாம்..

    அந்தக் காசுல மாடி வீடு கட்டுங்க..

    அதுக்கப்புறமா உங்களுக்குன்னு ஆயிரம் புத்தகத்தை வாங்கிக்குங்க..

    எப்படி ஐடியா..?

    Friday, July 10, 2009 6:29:00 PM
    //

    ஐடியாவெல்லாம் நல்லாத் தான் இருக்கு ஊட்டி அண்ணே...காசு பணம் பாக்க யாருக்கு தான் ஆசை இருக்காது...

    ஆனா, வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டெஸ்ட்ரக்ஷனை ஸ்டோர் பண்ணி வெச்சிருந்ததா என்னை பொடாவுல உள்ள போட்ற மாட்டாய்ங்களே??

    :0))

    ReplyDelete
  31. அது சரி said...

    //
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    எங்கேயும் போக வேண்டாம்..

    மொதல்ல ஒரு பத்தாயிரம் புத்தகத்தை வாங்கி வித்திருங்க.. காசு அள்ளிரலாம்..

    அந்தக் காசுல மாடி வீடு கட்டுங்க..

    அதுக்கப்புறமா உங்களுக்குன்னு ஆயிரம் புத்தகத்தை வாங்கிக்குங்க..

    எப்படி ஐடியா..?//

    ஐடியாவெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஊட்டி அண்ணே... காசு பணம் பாக்க யாருக்குதான் ஆசை இருக்காது... ஆனா, வெப்பன்ஸ் ஆஃப் மாஸ் டெஸ்ட்ரக்ஷனை ஸ்டோர் பண்ணி வெச்சிருந்ததா என்னை பொடாவுல உள்ள போட்ற மாட்டாய்ங்களே??
    :0))///

    போட்டா என்னங்க ஸார்..

    காப்பாத்த நாங்க இல்லே..

    ஆளுக்கு நூறு ரூபாய் மொய் போட்டு ஒரு நல்ல வக்கீலை பிடிச்சு ஒரு அஞ்சு வருஷத்துக்குள்ள உங்களை வெளில கொண்டு வந்திருவோம்..

    கவலைப்படாதீங்க..!

    ReplyDelete