Pages

Friday, July 03, 2009

இட்லி - தோசை - வடை- பொங்கல் - சட்னி - சாம்பார் - 03-07-2009

03-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பிரபாகரன் மரணம் - உண்மைதான் என்ன..?!!



பிரபாகரனின் மரணம் இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் தமிழ்ப் பத்திரிகைகளின் சர்க்குலேஷனை தற்போது பிரபாகரனே தீர்மானித்து வருகிறார். நக்கீரனும், ஜூனியர் விகடனும், குமுதம் ரிப்போர்ட்டரும் கட்டாயமாக ஒவ்வொரு இதழிலும் 2, 3 பக்கங்களை பிரபாகரனுக்காகவே ஒதுக்கி வருகிறார்கள்.

அவர் மரணமடையவில்லை என்று சீமானும், வைகோவும், நெடுமாறனும் இன்ன பிற தீவிர ஆதரவாளர்களும் சொல்லி வருகிறார்கள். இறந்துவிட்டார் என்று எதிர்ப்பாளர்களும், நடுநிலையாளர்களும் சொல்லி வருகிறார்கள். இதில் எப்படி, எப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று பத்திரிகைகள் தலையைப் பிய்த்துக் கொண்டுதான் உள்ளன.

நக்கீரனுக்கு பரவாயில்லை. ஜெகத் கஸ்பார் சிக்கியுள்ளார். மனிதர் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய புகைப்படங்களை வைத்து, புதிய புதிய சம்பவங்களைச் சொல்லி வருகிறார்.

30 பகுதிகளுக்குப் பின்பு இன்றைக்குத்தான் பிரபாகரனின் மகள் துவாரகாவும் சிங்களப் படைகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்ததாக கஸ்பார் சொல்லியிருக்கிறார். கஸ்பார் இதை எப்போது, எங்கே போய் முடிப்பார் என்று தெரியவில்லை.. அதற்குள் புத்தகத்திற்கு ஆர்டரே சேகரிக்கத் துவங்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன்..

ஜூனியர் விகடனும், குமுதம் ரிப்போர்ட்டரும் அனைத்து வலைத்தளங்களையும், இணையத் தளங்களையும் அலசி, ஆராய்ந்து, மேய்ந்து அதிலிருந்து பெயர்த்தெடுத்து செய்திகளைத் தொகுத்தளித்து வருகிறார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது..

உண்மையாகவே பிரபாகரன் மரணமடையவில்லை எனில் அந்த வீடியோவில் காட்டப்படுபவர் யார் என்பது கேள்விக்குறிதான். இல்லை என்பவர்கள் முக அடையாளம் சற்று மாறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எதுவோ.. அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கட்டும். அது பிரபாகரன்தான் என்று உறுதியாகச் சொல்லும் ஜூனியர்விகடன் அவர் நெற்றியில் விழுந்திருக்கும் கோடாரி வெட்டு எப்படி விழுந்தது என்பதை கதையாகச் சொல்லியிருக்கிறது. வழக்கம்போல அர்ச்சனையை வாங்கிக் கொண்டுவிட்டார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. தமிழகத்தில் பிரபாகரனின் மரணத்தை அவரது ஆதரவாளர்கள் ஒத்துக் கொண்டாலோ அல்லது இல்லை என்று நிரூபித்தால் ஒழிய, மறுபடியும் தமிழக மக்களிடையே ஈழம் குறித்தான கோபக்குரல் எழும்ப சாத்தியமில்லை.

----------------------

ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..!

தமிழக சட்டசபையில் சென்ற வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் நேருவுக்கும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையில் சொற்போர்.

“1000 கோடி, 2000 கோடி என்று போக்குவரத்துக் கழகங்களின் வசூல் தொகை வந்தாலும் எப்போதும் பற்றாக்குறை என்றே கணக்குக் காட்டுகிறீர்களே.. மிச்சம், மீதியிருக்கும் தொகையெல்லாம் எங்கேதான் செல்கிறது..?” என்றார் செங்கோட்டையன்.

பதிலளித்த நேரு, “உங்களது ஆட்சியிலும் இதே தொகையைத்தான் சொன்னீர்கள். இதே கணக்கைத்தான் காட்டினீர்கள்.. அப்போதும் மிச்சம், மீதிருந்த தொகையெல்லாம் எங்கே போனதோ, அதே இடத்திற்குத்தான் இப்போதும் செல்கிறது..” என்றார்.

அள்ளுவதிலும், மிஞ்சுவதிலும், விஞ்சுவதிலும், காட்டிக் கொடுப்பதிலும் கழகத்தினர் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றால் சும்மாவா..?

-----------------------------

கலைஞர்களை மதிக்கத் தெரிந்த கேரள அரசு..!


சென்ற 29-ம் தேதியன்று கொச்சியில் மரணமடைந்த மலையாளத் திரைப்படக் கதாசிரியரும், இயக்குநருமான நீலலோகிததாஸின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சியில் பார்த்து கொஞ்சம் பெருமிதப்பட்டேன்.

தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றிருக்கும் அந்தக் கலைஞனுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்திக் கொடுத்திருக்கிறது கேரள அரசு. பாராட்ட வேண்டிய விஷயம்.

நடிகை ஸ்ரீவித்யாவையும் இதே போன்று போலீஸ் மரியாதையுடன்தான் மேலுலகம் அனுப்பி வைத்தது அப்போதைய கேரள அரசு.


இது போன்று கலைஞர்களை மதிக்கத் தெரிந்த அரசுகளும், மக்களும்தான் நமக்குத் தேவை. படிப்பறிவில் முதலிடம் என்பதோடு கலைஞர்களை கவுரவிப்பதிலும் முதலிடம் பிடிக்கிறது கேரளா.

வாழ்க அம்மாநில அரசும், மக்களும்..!

நம் ஊரிலும்தான் இந்த ஆண்டு மக்களால் போற்றத்தக்க கலைஞர்கள் மூவர் இறந்தார்கள். கண்டு கொண்டார்களா இவர்கள்..?

ம்.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்..!

நமக்கு இம்புட்டுத்தான்..!

------------------------------

நல்லதொரு தீர்ப்பு..!


இன்றைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

“ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமானதுதான்.. அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதல்ல..” என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவும், நீதிபதி மல்ஹோத்ராவும்.

வரவேற்க வேண்டிய விஷயம்.

புனிதம், புனிதம் என்று நமக்குள்ளேயே ஆயிரத்தெட்டு சாக்கடைகளை வைத்துக் கொண்டு மருத்துவ ரீதியான குணங்களை உடையவர்களை சமூகக் கேடுகள் என்று விமர்சிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கான எண்ணம் ஒருவருக்கு எப்போது, எப்படி ஏற்படுகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத சூழல் இருக்கின்றபோது அது பிறப்பிலேயே அப்படித்தான்.. மருத்துவ ரீதியான குணம் அல்லது குறைபாடு என்று நினைத்து நாம் அதை அரவணைத்துச் செல்லத்தான் வேண்டும்.

“உலக நாடுகளை பாருங்கள்.. என்ன வளர்ச்சி பாருங்கள்.. என்ன உழைப்பு பாருங்கள்..” என்றெல்லாம் வாய் கிழியப் பேசும், எழுதும் சிலர் இதை மட்டும் முகத்தைச் சுழித்துக் கொண்டு எதிர்ப்பது கேலிக்கூத்தான விஷயம்.

இது பொதுமக்களிடையே சாதாரண விஷயம் என்ற ரீதியில் வந்தால்தான் இது போன்ற கவர்ச்சிகள் பிஸ்கோத்தாகி வரவிருக்கும் நம்முடைய சந்ததியினரின் கவனம் வேறு பக்கம் திரும்பும். இந்தத் தீர்ப்பை மனதாரக் கை தட்டி வரவேற்கிறேன்.

இதேபோல் பாலியல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை கொடுத்து அவர்களையும் நெறிப்படுத்திவிட்டால் அதுவும் நியாயமானதுதான். எந்த ஆட்சி வந்தாலும், என்ன செய்தாலும் அந்தத் தொழிலை வீழ்த்த முடியாது என்பதால் நாம் அதற்கு இணங்கிப் போவதுதான் புத்திசாலித்தனம்.

ம்.. எல்லாம் நாம பேசலாம்.. நம்ம அரசியல்வியாதிகளுக்கு எங்க இதெல்லாம் தோணப் போகுது..?

-----------------------------

கிசுகிசு - 1

தமிழர்கள் எங்கே இருந்தாலும் ஒருவர் மாற்றி ஒருவர் காலை இழுத்துவிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நண்டு கதையைச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதேபோல் தமிழர்களின் தலையாய்ந்த புண்ணியமார்த்தமான குழுமத்திலும் இப்போது அடிதடி, உட்கட்சிப் பூசல். நான்தான் அடுத்த ஆய்வாளர்.. எனக்குத்தான் பதவி.. அவனுக்குக் கொடுக்கக் கூடாது.. நான் எத்தனை எழுதியிருக்கேன் என்று கண்ணீர் விடாத குறையாக அப்ளிகேஷன்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பித்த கனவான் பாவம்.. விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.

கிசுகிசு - 2

பல வருடங்களாக வலையுலகத்திற்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த வைரஸானவரின் தளத்திலும் இப்போது உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது.

என்னால்தான்.. உன்னால்தான்.. இல்லை அவனால்தான் என்றெல்லாம் மாறி, மாறி எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தமிழை இருபத்திரண்டாம் நூற்றாண்டு அழைத்துப் போகப் போகிறார்களாம்.

தமிழ் வளரும்.. தமிழர்கள்..?

--------------------------------

அவங்க நடிகருங்க.. இவங்க..?

நடிகர் சங்கத்து பக்கம் டீ குடிக்கப் போயிருந்தேன். இரண்டு புள்ளிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். காது கொடுத்ததில் கிடைத்தது ஒரு பிட்டு நியூஸ்..

“கொச்சில அம்மா பங்ஷன்ல மோகன்லால் மேடைல உக்காந்திருக்கார். மம்முட்டி எதிர்த்தாப்புல கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்திருக்கார். ஒருத்தர் பாக்கியில்லே.. அத்தனை நடிகர், நடிகைகளும் ஆஜர் ஆகியிருக்காங்க.. இங்க நம்ம சங்கத்துல வருஷத்துக்கு ஒரு தடவை நடத்துற பொதுக்குழுவுக்கு ஆயுட்கால உறுப்பினர்களே வர மாட்டேங்குறாங்க.. அப்புறம் எப்படிய்யா தமிழ் சினிமா வளரும்..?”

இன்னொருத்தர் சொன்ன பதில்.. “அவங்க மலையாள சினிமாவுக்காக நடிக்க வந்திருக்காங்க.. நம்மாளுக அவங்க குடும்பத்துக்காக நடிக்க வந்திருக்காங்க.. அவ்ளோதான்..”

“விடக்கூடாதுய்யா.. அடுத்த மீட்டிங்ல பாரு.. நான் எப்படி பேசுறேன்னு..?” என்றார் மூத்தவர்.

பார்ப்போம்.. என்ன நடக்கும்னு..?

-----------------------------------------

பதிவர்களின் தாகசாந்தி சந்திப்பு..!

வலையுலக நண்பர் தண்டோரா மணியை பார்க்க அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். மாலை மங்கியதும், அசத்தலான நடை, உடை பாவனையிலும், புல் மேக்கப்பிலும் கேபிள்சங்கர், நித்யகுமாரன், ஜாக்கிசேகர் மூவரும் வந்தனர்.

“சும்மா பதிவர் சந்திப்புதான்.. ஏன் நாங்க பேசக் கூடாதா..? பேசுவோம்ல.. என்ன அண்ணே..?” என்றெல்லாம் கொஞ்சியவர்கள், கெஞ்சியவர்கள் ஒரு மணி நேரம் கழித்து தாகசாந்தியில் ஐக்கியமான பின்பு பேசிய பேச்சு இருக்கிறதே பாருங்க..

எதையுமே எழுத முடியாதுங்கண்ணா.. அவ்ளோ மேட்டரை எடுத்து அள்ளி விடுறாங்க.. பவுன்ஸரா வருது.. சிக்ஸரா பறக்குது.. அண்ணன்ற வார்த்தை யோவ்ல போய் முடிஞ்சு எனக்கே ஜிகர்தண்டா சாப்பிடுற நிலைமை ஆயிருச்சு..

இனிமே இது மாதிரி தாகசாந்தி நிகழ்ச்சியை எல்லாம் ரகசியமா கேமிரால பதிவு பண்ணி வலையேத்தணும்யா.. எத்தனை பேர் வண்டவாளம்லாம் வெளில வரும்னு பார்க்கலாம்.

இதுல எனக்கே உலை வைக்கப் பார்த்தாரு ஜாக்கி. ரெண்டு 'நெப்போலியனை' கைல கொடுத்து “சும்மா தூக்கிப் பாருண்ணே”ன்னு சொல்ல, நானும் பாட்டிலை தூக்கிக் காட்டுன உடனேயே போட்டோ புடிச்சு பத்திரப்படுத்தி வைச்சிக்கிட்டாரு. எனக்கா தெரியாது என்ன செய்வாங்கன்னு..? நான் ரகசியமா அதை டெலீட் செஞ்சதுல ஜாக்கி தம்பிக்கு மனம் கொள்ளா வருத்தம்..

'பிரபல பதிவரின் உண்மை முகம்'ன்ற தலைப்புல பதிவா போட நினைச்சிருந்தவரோட நினைப்புல, மண்ணள்ளிப் போட்டுட்டேன்னு பொறுமிக்கிட்டிருக்காரு.

கொஞ்சம் கூல் வாட்டரா குடிண்ணே..! வயித்தெரிச்சல் அடங்கிரும்..!

--------------------------------

அசராமல் சிரிக்க வைக்கும் 'வில்லு..!'

'வில்லு' படம் ஓடி முடித்து டப்பாவில் சுருண்டிருக்கும் இப்போதும் அது தொடர்பான நகைச்சுவைகள் குறைந்தபாடில்லை போலும்.

நண்பர் ஒருவர் எனக்கு மெயிலில் அனுப்பியிருந்த இந்த யூடியூப் படத்தில் இருக்கும் நகைச்சுவை ஏ ஒன் ரகம்.

கச்சிதமான வசனங்கள். அழுத்தமான, நியூஸ் ரீடிங்கை போன்ற படிப்பு, நல்ல குரல் வளத்தேர்வு, பேட்டி, முடிவுரை என்று கலக்கியிருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். நீங்களும் கேட்டுப் பாருங்கள்..

யூடியூபை வலைத்தளத்தில் இணைப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே முகவரியை மட்டும் தருகிறேன். கோபிக்க வேண்டாம்.

http://www.youtube.com/watch?v=9S4cEcwV0IA

--------------------------------


FACEBOOK-ல் ஒரு கலகம்..!

முகம் தெரியாத நண்பர்கள் தெரிந்தவர்களுடன் சங்கிலித் தொடர்போல தொடர்பு கொண்டபடியே செல்ல இத்தளம் மிகவும் உதவுகிறது. ஆர்க்குட்டைவிட எனக்கு இதனை மிகவும் பிடிக்கிறது.

ஆனால் இதிலும் ஆர்க்குட் போலவே போலித்தனம் தலைவிரித்தாடுகிறது. இதில் கலைஞரின் மகள் கனிமொழியின் பெயரில் ஒரு முகவரி இருக்கிறது. அதில் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் லின்க் இருப்பதால் பலரும் இணைந்துவிட்டார்கள். கடைசியில் பார்த்தால் அது கனிமொழி கிடையாதாம். யாரோ அவர் பெயரில் நடத்தி வருகிறார்களாம்.

இது போன்று பல பிரபலங்களின் பெயர்களில், பல நடிகைகளின் புகைப்படங்களுடன், பல அடையாளம் தெரியாத பெண்களின் புகைப்படங்களுடன் முகவரிகள் திறக்கப்பட்டிருப்பதாக தெரிந்த நண்பர் தெரிவித்தார்.


நானும் பார்த்து பார்த்துத்தான் இணைந்தபடியுள்ளேன். சிலருடைய நட்பு சுவையாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சூர்யா, தல அஜீத். நம்முடைய முன்னாள் வலைப்பதிவர் ஐகாரஸ் பிரகாஷ் தினமும் தவறாமல் இங்கு ஆஜராகி ஏதாவது ஒரு தத்துவத்தையோ, அல்லது செய்தியையோ சொல்லியபடியே இருக்கிறார். ஆனால் மூணே வரி.. பேஸ்புக்கின் பிரபலத்திற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.


'டயானா மரியம் கூரியன்' என்ற பெயரில் நயன்தாராவின் புகைப்படத்துடன் கூடிய முகவரி ஒன்றும் உள்ளது. அதில் நேற்றில் இருந்து திடீரென்று பிரபுதேவாவும் நயன்தாரா நிற்கும் புகைப்படம் சுயவிவரப் பக்கத்தில் இருக்கிறது. கேட்பவர்களிடமெல்லாம் நான்தான் நடிகை நயன்தாரா என்று பதில் வருகிறது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை. விசாரணை கமிஷன்தான் வைக்க வேண்டும் போலும்..!

அசத்துகின்ற நாடோடிகள் கூட்டம்..!



அருமையாக உள்ளது 'நாடோடிகள்' திரைப்படம். 'நிச்சயம் சூப்பர் ஹிட்' என்று இடைவேளையிலேயே சசிகுமாரின் சட்டையைப் பிடித்துக் கொஞ்சிப் பேசி சொல்லிவிட்டார்கள் ரசிகர்கள்.

இது போன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போதுதான் இந்த 'அல்டாப்பு', 'சிக்ஸ்ட்டி பேக்கு'.. 'பார்ட்டி பேக்கு' ஹீரோக்கள் எல்லாம் டங்குவாரு அந்துபோயி வீட்டுக்கு ஓடுவாங்க..

கதைதாங்க ஹீரோ. அதைக் கச்சிதமா சுமக்கிறதுதாங்க ஹீரோத்தனம்.. இந்தப் படத்தின் வெற்றி சொல்லும் ரகசியம் என்னவெனில் இனிமேலும் தமிழ் சினிமா ரசிகனை ஏமாற்ற முடியாது என்பதுதான். வாழ்க சசிகுமாரும், சமுத்திரகனியும்.

எனது முழு நீள விமர்சனத்தை மிகச் சரியாக 'நாடோடிகள்' திரைப்படம் வெளியான 30-வது நாளில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன். என்ன சரிதானே..?

மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!!!

95 comments:

  1. இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி......................................................

    ReplyDelete
  2. இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி......................................................

    ReplyDelete
  3. ME THE FIRST............................................

    ReplyDelete
  4. அண்ணே,

    பதிவுதான் பெரிசா எழுதுறீங்கன்னு பார்த்தா தலைப்பும் பெரிசா இருக்கே.
    அவியல், காக்டெயில்னு ஒரு வார்த்தையில வைங்கண்ணே.

    ReplyDelete
  5. சத்தியமா முழுசா படிச்சேன் சலிக்கவேயில்லை.

    ReplyDelete
  6. // shabi said...

    இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி...................................................... //

    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  7. // பதிவர்களின் தாகசாந்தி சந்திப்பு..! //

    அண்ணே என்னாது இது... போட்டுப் பார்த்தீட்டீங்களே..

    ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்..

    ReplyDelete
  8. நாங்க யாராவது எழுதினோமா..? நீஙக் வந்து ஒரு பாட்டில் நெப்போலியனை நானே குடிப்பேன்னு அடம்பிடிச்சி.. கடைசியா.. ஒரு பெக்கில மட்டையானதை பத்தி.. எப்படி சொல்றது. நாங்க தண்ணி யடிச்சதை பத்தி நீங்க எழுதினது எங்களுக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்ல.. ஆனா நீஙக் தண்ணி அடிச்சி மட்டையானத ஊருக்கு தெரியபடுத்திருவோம்னு பயந்து காமெடிக்கு எடுத்த போட்டோவை கூட மப்பில மறக்காம டெலிட் பண்ணீங்க பாருஙக்.. எதுக்குண்ணே.. இவ்வள்வு தேவையில்லாத இமேஜ்.. நீங்க என்ன பெரிய ஹீரோயினா..? அடிச்சா அடிசேன்னு சொல்லுங்க.. நீஙக் தண்ணி அடிச்சீங்களா இல்லையாங்கிறது.. அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கிற மாதிரி நீங்களே நான் நல்லவனு எழுதி மாட்டிகிட்டீங்க.. அடுத்த முறை லைட்டா பீர்ல ஆரம்பிங்க..

    ReplyDelete
  9. வழக்கம் போலவே கலக்கல் பதிவு!...


    ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத்தான் பின்னூட்டமும் களை கட்டியிருக்குது. குறிப்பா அண்ணாச்சியோட தலைப்பு மேட்டர் ஓஹோ :)

    ReplyDelete
  10. உண்மையிலேயே இன்னைக்கு ரொம்ப கண்டென்ட்புல்லா இருந்துச்சு.

    ReplyDelete
  11. உண்மை தமிழன் அண்ணே உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் நீங்க யோக்கியன்னு மக்கள் கிட்ட காட்டினா.... மெரினா பீச்சில சிலை வைப்பாங்கன்னு நினைப்பா....??? நீ ஆப்பாயில் போட்டதை நாங்கதான் விழிச்சி போட்டோம் .... ஒரு பெக்குக்கே குப்னு தூக்குது ...யப்பா யாருகிட்டயும் சொல்லிடாதீங்கன்னு திரும்ப திரும்ப சொன்னது நீதான்...

    அப்பவும் நாங்க சொன்னோம்...மூடியை மோந்தாலே மப்பு உனக்கு ஏறும் வானாம் வீட்டுக்கு போயிடுன்னு எவ்வளவோ சொன்னோம் நீ கேட்கலை நான் என்ன செய்யறது சொல்லு.....

    தலைவரே நீ என்னதான் போட்டோ டெலிட் பண்ணாலும் அந்த படத்தை ஈசியா என்னால ரெக்கவர் பண்ணி போட முடியும்....

    அதே போல எனக்கு ஹிட் வேனும் நான் நினைச்சா உன்னை எதுக்கு நான் வம்புக்கு இழுக்கனும்...

    அது மட்டும் அல்ல பிரபல பதிவரின் உண்மை முகம்னு உன் போட்டோவை போய் யாராவது போடுவாங்களா?

    போங்கன்னே உங்களுக்கு ரொம்பதான் நம்பிக்கையும் குசம்பும்...

    ReplyDelete
  12. நல்ல புல் மீல்ஸ்,..

    கலக்குங்க..

    ReplyDelete
  13. சினிமா கிசுகிசு என்றால் உடனே கண்டுபிடித்துவிடுவேன் இது கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது யார் அந்த புண்ணியவான் என கொஞ்சம் க்ளூ கொடுங்கள்.

    உங்கள் இட்லி வடை பூரி சப்பாத்தி தோசை எல்லாம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  14. அண்ணே..மீதியிருந்த கால் பாட்டிலையும் பையில் மறைச்சுகிட்டு போயிட்டீங்களே..அதுல என்னை பூச்செடியா வளர்க்க போறீங்க...அப்புறம் மப்புல உளர்னதை ரெக்கார்டு பண்ணி வச்சிருக்கேன்வோய்...

    ReplyDelete
  15. //நீங்க என்ன பெரிய ஹீரோயினா..? அடிச்சா அடிசேன்னு சொல்லுங்க.. நீஙக் தண்ணி அடிச்சீங்களா இல்லையாங்கிறது.. அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கிற மாதிரி நீங்களே நான் நல்லவனு எழுதி மாட்டிகிட்டீங்க
    //

    கேபிள், அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க... வீட்டுல பொண்ணு பாத்திட்டு இருக்கும் போது இந்த மாதிரியெல்லாம் பொத்தாம் பொதுவா ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்க மாட்டாருங்க..!!

    ReplyDelete
  16. ////மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!!!////

    இப்பப் போட்டுள்ளதே ஜீரணமாக இரண்டு நாளாகும். அதை மனசுல வச்சுக்கிட்டு அடுத்த பதிவைப் போடுங்க ஊனா தானா!

    ReplyDelete
  17. சீமாச்சு அண்ணே.. பொண்ணு பார்த்தா என்னா.. அந்த பொறுப்பு கூட இல்லாம போதையில அவரு பண்ணினத நான் என்னன்ன் சொல்ல. வேணாமின்னு, வேணாமின்னு சொல்ல.. எதுக்கு ஒரு ஆரம்பம் வேணாமான்னு ஆரம்பிச்சதே அவ்ருதான்..

    ReplyDelete
  18. // shabi said...

    இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி //

    ரிப்பீட்டேய்!!!

    ReplyDelete
  19. Cable Sankar said...

    /

    //

    அவனா நீயீ...
    //


    :::))))
    ::))))



    காலாகலத்துக்கு கால் கட்டு போட்டு இருந்தா இப்படி ஆகிருக்குமா,,??


    :::)))))

    (டெலிட்)

    ReplyDelete
  20. 'ஆரம்பித்த கனவான்'

    you mean badri?.

    ReplyDelete
  21. எங்கள் அண்ணன்...
    கார் வண்ண கண்ணன்,
    எங்கள் தங்கம்,
    தட்டச்சு திலகம்,
    பொறுமையின் இலக்கணம்,
    பதிவுலக பீஷ்மன்......
    உண்மை தமிழனை நீங்கள் (மட்டுமே) கார்னர் செய்து அடிப்பதை வன்மையாக எதிர்கிறோம், கண்டிக்கிறோம்.

    இப்படிக்கு
    -நையாண்டி நைனா -
    -பொருளாளர்
    -அகில இந்திய உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.
    (எங்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறு வேண்டுகிறோம். அவ்வளவே...)

    ReplyDelete
  22. ///shabi said...
    இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி......................................................///

    நல்லாயிருக்கு..

    புதுசு, புதுசா பேரு கண்டுபிடிக்கிறீங்களேப்பா..!

    ஷபி நன்றி..!

    ReplyDelete
  23. [[[வடகரை வேலன் said...

    அண்ணே,

    பதிவுதான் பெரிசா எழுதுறீங்கன்னு பார்த்தா தலைப்பும் பெரிசா இருக்கே.
    அவியல், காக்டெயில்னு ஒரு வார்த்தையில வைங்கண்ணே.]]]

    போச்சுடா.. பாராட்டவே மாட்டீங்களாண்ணே..!

    பல செய்திகளை கலந்துகட்டி போடறதால இத்தனை பெரிய தலைப்பு தேவையா இருக்குங்கண்ணே..!

    ReplyDelete
  24. [[[குடுகுடுப்பை said...
    சத்தியமா முழுசா படிச்சேன் சலிக்கவேயில்லை.]]]

    ஆஹா.. பொறுமையின் சிகரமே.. நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  25. உ.த

    ஒரு பதிவில இவ்வளவு தகவலா. சூப்பர்

    ReplyDelete
  26. [[[செந்தழல் ரவி said...

    super......]]]

    நொந்தழல் கவி..

    நன்றி..!

    ReplyDelete
  27. [[[இராகவன் நைஜிரியா said...

    // shabi said...

    இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி...................................................... //

    ரிப்பீட்டேய்....]]]

    ஷபிக்கு போட்ட நன்றி பின்னூட்டம் இங்க ரிப்பீட்டேய்..!

    ReplyDelete
  28. [[[இராகவன் நைஜிரியா said...

    // பதிவர்களின் தாகசாந்தி சந்திப்பு..! //

    அண்ணே என்னாது இது... போட்டுப் பார்த்தீட்டீங்களே..

    ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்..]]]

    அப்படீன்னு அவங்கதான் சொன்னாங்க ராகவன் ஸார்..!

    வருகைக்கு மிக்க நன்றிகள்..!

    ReplyDelete
  29. [[[Cable Sankar said...
    அவனா நீயீ...]]]

    அவனேதான் நானு..

    நானேதான் அவன்..!

    இப்ப இன்னாங்குற கண்ணா..?!!!

    ReplyDelete
  30. [[[Cable Sankar said...
    நாங்க யாராவது எழுதினோமா..? நீஙக் வந்து ஒரு பாட்டில் நெப்போலியனை நானே குடிப்பேன்னு அடம்பிடிச்சி.. கடைசியா.. ஒரு பெக்கில மட்டையானதை பத்தி.. எப்படி சொல்றது. நாங்க தண்ணியடிச்சதை பத்தி நீங்க எழுதினது எங்களுக்கு ஒண்ணும் பெரிய விஷயமில்ல.. ஆனா நீஙக் தண்ணி அடிச்சி மட்டையானத ஊருக்கு தெரியபடுத்திருவோம்னு பயந்து காமெடிக்கு எடுத்த போட்டோவைகூட மப்பில மறக்காம டெலிட் பண்ணீங்க பாருஙக்.. எதுக்குண்ணே.. இவ்வள்வு தேவையில்லாத இமேஜ்.. நீங்க என்ன பெரிய ஹீரோயினா..? அடிச்சா அடிசேன்னு சொல்லுங்க.. நீஙக் தண்ணி அடிச்சீங்களா இல்லையாங்கிறது.. அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கிற மாதிரி நீங்களே நான் நல்லவனு எழுதி மாட்டிகிட்டீங்க.. அடுத்த முறை லைட்டா பீர்ல ஆரம்பிங்க..]]]

    ஹா.. ஹா.. ஹா..

    கண்ணா ஊர், உலகம் இப்பல்லாம் ரொம்ப தெளிவா முழிச்சிக்கிட்டிருக்கு..

    யார் சொன்னாலும் நம்பாது..!

    ReplyDelete
  31. [[[சென்ஷி said...
    வழக்கம் போலவே கலக்கல் பதிவு!...
    ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத்தான் பின்னூட்டமும் களை கட்டியிருக்குது. குறிப்பா அண்ணாச்சியோட தலைப்பு மேட்டர் ஓஹோ :)]]]

    தம்பி சென்ஷி..

    தலைப்பையும் சுருக்கணுமா..?

    இப்படியே போனா என்னையவே சுருக்கிருவீங்க போலிருக்கே..!

    ReplyDelete
  32. [[[pappu said...
    உண்மையிலேயே இன்னைக்கு ரொம்ப கண்டென்ட்புல்லா இருந்துச்சு.]]]

    நன்றி பாப்பூ..!

    ReplyDelete
  33. [[[jackiesekar said...

    உண்மை தமிழன் அண்ணே உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் நீங்க யோக்கியன்னு மக்கள்கிட்ட காட்டினா.... மெரினா பீச்சில சிலை வைப்பாங்கன்னு நினைப்பா....??? நீ ஆப்பாயில் போட்டதை நாங்கதான் விழிச்சி போட்டோம்.... ஒரு பெக்குக்கே குப்னு தூக்குது... யப்பா யாருகிட்டயும் சொல்லிடாதீங்கன்னு திரும்ப திரும்ப சொன்னது நீதான்...
    அப்பவும் நாங்க சொன்னோம்... மூடியை மோந்தாலே மப்பு உனக்கு ஏறும் வானாம் வீட்டுக்கு போயிடுன்னு எவ்வளவோ சொன்னோம் நீ கேட்கலை நான் என்ன செய்யறது சொல்லு.....
    தலைவரே நீ என்னதான் போட்டோ டெலிட் பண்ணாலும் அந்த படத்தை ஈசியா என்னால ரெக்கவர் பண்ணி போட முடியும்.... அதே போல எனக்கு ஹிட் வேனும் நான் நினைச்சா உன்னை எதுக்கு நான் வம்புக்கு இழுக்கனும்... அது மட்டும் அல்ல பிரபல பதிவரின் உண்மை முகம்னு உன் போட்டோவை போய் யாராவது போடுவாங்களா?
    போங்கன்னே உங்களுக்கு ரொம்பதான் நம்பிக்கையும் குசம்பும்...]]]

    அச்சச்சோ தம்பீ..!

    நீ இன்னாதான் திரைக்கதை எழுதினாலும் அது கதை மாதிரின்னு நல்லாத் தெரியுது..

    ஓகே.. அடுத்த சந்திப்புக்கு வீடியோ கேமிராவோட வர்றேன்..

    வைச்சுக்கலாம் கச்சேரியை..!

    ReplyDelete
  34. [[[தீப்பெட்டி said...
    நல்ல புல் மீல்ஸ்,..
    கலக்குங்க..]]]

    போதுமா தீப்பெட்டி..!?

    ReplyDelete
  35. [[[வந்தியத்தேவன் said...
    சினிமா கிசுகிசு என்றால் உடனே கண்டுபிடித்துவிடுவேன் இது கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது யார் அந்த புண்ணியவான் என கொஞ்சம் க்ளூ கொடுங்கள். உங்கள் இட்லி வடை பூரி சப்பாத்தி தோசை எல்லாம் நல்லாயிருக்கு.]]]

    இன்னும் கொஞ்ச நாளில் தானாகவே தெரிந்துவிடும் வந்தியத்தேவன்..

    காத்திருங்கள்..

    அந்தப் புண்ணியவானின் பெயரை(சந்தேகம்தான்) மட்டும் சொல்கிறேன்.. யார்கிட்டேயும் சொல்லிராதீங்க..

    சதீசுகுமார் என்கிறார்கள்.

    ReplyDelete
  36. [[[Seemachu said...

    //நீங்க என்ன பெரிய ஹீரோயினா..? அடிச்சா அடிசேன்னு சொல்லுங்க.. நீஙக் தண்ணி அடிச்சீங்களா இல்லையாங்கிறது.. அவசரப்பட்டு எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கிற மாதிரி நீங்களே நான் நல்லவனு எழுதி மாட்டிகிட்டீங்க//

    கேபிள், அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க... வீட்டுல பொண்ணு பாத்திட்டு இருக்கும் போது இந்த மாதிரியெல்லாம் பொத்தாம் பொதுவா ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்க மாட்டாருங்க..!!]]]

    ஐயையோ சீமாச்சு ஸார்..

    சத்தியமா அப்படியொண்ணும் நடக்கவே இல்ல ஸார்..!

    பயபுள்ளைக பொய்யிலேயே பிறந்து, பொய்யிலேயே தவழ்ந்து, பொய்யிலேயே வாழ்றவனுக.. அதான் கதையா தீட்டுறானுக.. நம்பாதீங்க ஸார்..!

    ReplyDelete
  37. [[[தண்டோரா said...
    அண்ணே.. மீதியிருந்த கால் பாட்டிலையும் பையில் மறைச்சுகிட்டு போயிட்டீங்களே.. அதுல என்னை பூச்செடியா வளர்க்க போறீங்க... அப்புறம் மப்புல உளர்னதை ரெக்கார்டு பண்ணி வச்சிருக்கேன்வோய்...]]]

    ஐயையோ..

    இது மூணாவது கதையா..?

    நல்லா வெட்டுறாங்கப்பா கழுத்தை..!

    ReplyDelete
  38. \\இப்படியே போனா என்னையவே சுருக்கிருவீங்க போலிருக்கே..! //


    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  39. [[[SP.VR. SUBBIAH said...

    //மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!!!//

    இப்பப் போட்டுள்ளதே ஜீரணமாக இரண்டு நாளாகும். அதை மனசுல வச்சுக்கிட்டு அடுத்த பதிவைப் போடுங்க ஊனா தானா!]]]

    ஓகே வாத்தியாரே..

    காத்திருந்து போடுறேன்..!

    ReplyDelete
  40. [[[Cable Sankar said...
    சீமாச்சு அண்ணே.. பொண்ணு பார்த்தா என்னா.. அந்த பொறுப்பு கூட இல்லாம போதையில அவரு பண்ணினத நான் என்னன்ன் சொல்ல. வேணாமின்னு, வேணாமின்னு சொல்ல.. எதுக்கு ஒரு ஆரம்பம் வேணாமான்னு ஆரம்பிச்சதே அவ்ருதான்..]]]

    அச்சச்சோ.. என்ன பாசம்..? என்ன பாசம்..?

    கண்ணுல தண்ணி வருது கேபிளு..?!!

    ReplyDelete
  41. [[[Indian said...

    // shabi said...

    இதுக்கு பேரு இட்லி-வடை இல்லங்க UN LIMITED MEALS எப்பூடி //

    ரிப்பீட்டேய்!!!]]]

    நன்றி இந்தியன் ஸார்..!

    ReplyDelete
  42. [[[நாடோடி said...

    Cable Sankar said...

    /

    //

    அவனா நீயீ...
    //
    :::))))
    ::))))
    காலாகலத்துக்கு கால் கட்டு போட்டு இருந்தா இப்படி ஆகிருக்குமா,,??
    :::)))))

    (டெலிட்)]]]

    நாடோடி ஸார்..

    வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க..

    அப்புறம் இன்னிக்கு பூரா வேலை ஓடாது..!

    நல்லாயிருங்க..!

    ReplyDelete
  43. [[[vaasagan said...

    'ஆரம்பித்த கனவான்'

    you mean badri?.]]]

    இல்லை வாசகன்..!

    ReplyDelete
  44. [[[நையாண்டி நைனா said...
    எங்கள் அண்ணன்...
    கார் வண்ண கண்ணன்,
    எங்கள் தங்கம்,
    தட்டச்சு திலகம்,
    பொறுமையின் இலக்கணம்,
    பதிவுலக பீஷ்மன்......
    உண்மை தமிழனை நீங்கள் (மட்டுமே) கார்னர் செய்து அடிப்பதை வன்மையாக எதிர்கிறோம், கண்டிக்கிறோம்.
    இப்படிக்கு
    -நையாண்டி நைனா -
    -பொருளாளர்
    -அகில இந்திய உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.
    எங்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறு வேண்டுகிறோம். அவ்வளவே...)]]]

    ஓ.. உள்குத்து, வெளிகுத்து, நடுகுத்து எல்லாம் சேர்த்து ஒரு குத்து குத்துறியா ராசா..?

    நேர்ல வா பேசிக்கிறேன்..!

    ReplyDelete
  45. [[[நாஞ்சில் நாதம் said...
    உ.த ஒரு பதிவில இவ்வளவு தகவலா. சூப்பர்]]]

    அதனாலதான் ஸார் அவ்ளோ பெரிய தலைப்பு..

    வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  46. வீடியோவ கேட்டுகிட்டு இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்!

    கார்க்கிக்கு இந்த விசயத்தை பாஸ் பண்ணனுமே!

    ReplyDelete
  47. [[[வால்பையன் said...

    வீடியோவ கேட்டுகிட்டு இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்!

    கார்க்கிக்கு இந்த விசயத்தை பாஸ் பண்ணனுமே!]]]

    பாஸ் பண்ணுங்க பாஸ்..!

    ReplyDelete
  48. வரவர துணுக்கு மாதிரி போஸ்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க.

    நல்லா நறுக்குனு நாப்பாதாயிரம் வரில ஒரு பதிவு போடுங்கண்ணே..

    சின்னபுள்ளத்தனமா.. குட்டியூண்டு குட்டியூண்டா.. பதிவுப்போட்டுட்டு..

    (ஆமா நெப்போலியனால் மட்டையாகிட்டீங்களாமே.. நிஜமாவா? )

    ReplyDelete
  49. ////அதிஷா said...
    வர வர துணுக்கு மாதிரி போஸ்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க. நல்லா நறுக்குனு நாப்பாதாயிரம் வரில ஒரு பதிவு போடுங்கண்ணே..
    சின்னபுள்ளத்தனமா.. குட்டியூண்டு குட்டியூண்டா.. பதிவுப் போட்டுட்டு..//

    பெரிசா போட்டா.. சின்னதா போடுங்குறீங்க..?

    சின்னதா போட்டா பெரிசா போடுங்குறீங்க..?

    அட போங்கப்பா..!

    ///ஆமா நெப்போலியனால் மட்டையாகிட்டீங்களாமே.. நிஜமாவா?)///

    சதிகார தம்பிமார்களின் சூழ்ச்சியில் சிக்காமல் கடைசி நேரத்தில் தப்பிவிட்டேன்..

    இது முழுக்க, முழுக்க அபாண்டமான புனைவு..

    ReplyDelete
  50. /
    'பிரபல பதிவரின் உண்மை முகம்'ன்ற தலைப்புல பதிவா போட நினைச்சிருந்தவரோட நினைப்புல, மண்ணள்ளிப் போட்டுட்டேன்னு பொறுமிக்கிட்டிருக்காரு.

    கொஞ்சம் கூல் வாட்டரா குடிண்ணே..! வயித்தெரிச்சல் அடங்கிரும்..!

    /
    :)))))))))))))))))

    ReplyDelete
  51. /
    இது போன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போதுதான் இந்த 'அல்டாப்பு', 'சிக்ஸ்ட்டி பேக்கு'.. 'பார்ட்டி பேக்கு' ஹீரோக்கள் எல்லாம் டங்குவாரு அந்துபோயி வீட்டுக்கு ஓடுவாங்க..
    /

    இது சூப்பரு!!

    ReplyDelete
  52. ///மங்களூர் சிவா said...

    /'பிரபல பதிவரின் உண்மை முகம்'ன்ற தலைப்புல பதிவா போட நினைச்சிருந்தவரோட நினைப்புல, மண்ணள்ளிப் போட்டுட்டேன்னு பொறுமிக்கிட்டிருக்காரு. கொஞ்சம் கூல் வாட்டரா குடிண்ணே..! வயித்தெரிச்சல் அடங்கிரும்..!/
    :)))))))))))))))))////

    அவங்க அந்த வாட்டர் குடிச்சதால வந்த வினை..

    அதுனாலதான் கூல்வாட்டர் குடிக்கச் சொல்லியிருக்கேன் சிவா..!

    ReplyDelete
  53. அண்ணாத்த,

    “இரும்பு அடிக்கிற எடத்துல ஈக்கு என்ன வேலை?” ன்னு ஜாக்கி கேட்டப்ப, நீங்க ரொம்ப நல்லவரோன்னு தப்பா நினைச்சுட்டேன்.

    அபாண்டாமான புனைவு, அது இதுன்னு சாரு ரேஞ்சுல பில்டப் கொடுக்கவேண்டாம். உங்களுக்கு குருவி புராணத்தின்படி தண்டணை கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

    1. விஜய், விஷால் இவங்களோட அடுத்த படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வைப்பது.

    2. அதிரடி பதிவர்களுக்கு அறிமுகமான வைத்தியக்கார நள்ளிரவு போன் காரரிடம் முக்கால் மணிநேரம் பேச வைப்பது.

    3. அடுத்த தடவை கட்டாயம் ஒரு சொட்டு கூட தராம உங்களை பாக்க வச்சிட்டே குடிக்கிறது. (அதனால நீங்க ஏங்கறத பாக்குறது)

    கட்டாயம் எல்லா தண்டணைகளும் நிறைவேற்றப்படும்.

    எல்லாம் அவன் செயல். ( முருகன் தான்)

    அன்புத்தம்பி நித்யன்.

    ReplyDelete
  54. [[[மங்களூர் சிவா said...
    /இது போன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போதுதான் இந்த 'அல்டாப்பு', 'சிக்ஸ்ட்டி பேக்கு'.. 'பார்ட்டி பேக்கு' ஹீரோக்கள் எல்லாம் டங்குவாரு அந்துபோயி வீட்டுக்கு ஓடுவாங்க../

    இது சூப்பரு!!]]]

    ரொம்ப தேங்க்ஸு தம்பி..!

    ReplyDelete
  55. ஏன் கண்ணுகளா..?

    கிட்டத்தட்ட 755 பேர் படிச்சும் ஒருத்தருக்கு மட்டும்தான் ஆதரவு குத்து குத்தணும்னு தோணுச்சா..

    இது அநியாயம்பா..!

    ஒரு அஞ்சு குத்தாவது குத்தியிருந்தா தமிழ்மணத்துல நிக்கும்ல..!

    ReplyDelete
  56. ///நித்யகுமாரன் said...

    அண்ணாத்த, “இரும்பு அடிக்கிற எடத்துல ஈக்கு என்ன வேலை?” ன்னு ஜாக்கி கேட்டப்ப, நீங்க ரொம்ப நல்லவரோன்னு தப்பா நினைச்சுட்டேன்.
    அபாண்டாமான புனைவு, அது இதுன்னு சாரு ரேஞ்சுல பில்டப் கொடுக்கவேண்டாம். உங்களுக்கு குருவி புராணத்தின்படி தண்டணை கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
    1. விஜய், விஷால் இவங்களோட அடுத்த படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வைப்பது.
    2. அதிரடி பதிவர்களுக்கு அறிமுகமான வைத்தியக்கார நள்ளிரவு போன்காரரிடம் முக்கால் மணிநேரம் பேச வைப்பது.
    3. அடுத்த தடவை கட்டாயம் ஒரு சொட்டுகூட தராம உங்களை பாக்க வச்சிட்டே குடிக்கிறது. (அதனால நீங்க ஏங்கறத பாக்குறது)
    கட்டாயம் எல்லா தண்டணைகளும் நிறைவேற்றப்படும்.
    எல்லாம் அவன் செயல். (முருகன்தான்)
    அன்புத் தம்பி நித்யன்.///

    ஓகே.. ஓகே.. ஓகே..

    என்ன செய்றது..? சேர்வார் சேர்க்கை சரியல்லைன்னா எல்லாத்தையும் அனுபவிச்சுத்தான் ஆகணும்னு சொல்வாங்க..

    அனுபவிக்கிறேன்..!

    முருகா.. நீயே துணை..!

    ReplyDelete
  57. ///

    ///நித்யகுமாரன் said...

    அண்ணாத்த, “இரும்பு அடிக்கிற எடத்துல ஈக்கு என்ன வேலை?” ன்னு ஜாக்கி கேட்டப்ப, நீங்க ரொம்ப நல்லவரோன்னு தப்பா நினைச்சுட்டேன்.
    அபாண்டாமான புனைவு, அது இதுன்னு சாரு ரேஞ்சுல பில்டப் கொடுக்கவேண்டாம். உங்களுக்கு குருவி புராணத்தின்படி தண்டணை கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
    1. விஜய், விஷால் இவங்களோட அடுத்த படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வைப்பது.
    2. அதிரடி பதிவர்களுக்கு அறிமுகமான வைத்தியக்கார நள்ளிரவு போன்காரரிடம் முக்கால் மணிநேரம் பேச வைப்பது.
    3. அடுத்த தடவை கட்டாயம் ஒரு சொட்டுகூட தராம உங்களை பாக்க வச்சிட்டே குடிக்கிறது. (அதனால நீங்க ஏங்கறத பாக்குறது)
    கட்டாயம் எல்லா தண்டணைகளும் நிறைவேற்றப்படும்.
    எல்லாம் அவன் செயல். (முருகன்தான்)
    அன்புத் தம்பி நித்யன்.///

    ஓகே.. ஓகே.. ஓகே..

    என்ன செய்றது..? சேர்வார் சேர்க்கை சரியல்லைன்னா எல்லாத்தையும் அனுபவிச்சுத்தான் ஆகணும்னு சொல்வாங்க..

    அனுபவிக்கிறேன்..!

    முருகா.. நீயே துணை..!

    ///

    இப்படி ஒழுங்கா ஒத்துக்கிட்டா பதிவுலகே உங்களை பாராட்டும். அத விட்டுட்டு நமக்கெதுக்குண்ணா அந்த இமேஜ். அந்த சினிமாக்காரங்கதான் அத வச்சிட்டு அழறானுங்க.. உங்கள மாதிரி கட்டுடைக்கறவங்களுக்கு சாரி சாரி... தட்டச்சு இயந்திரம் உடைக்கிறவங்களுக்கு எதுக்கண்ணா...

    மப்போடு வாழ வாழ்த்துக்கள்

    ப்ரிய நித்யன்

    ReplyDelete
  58. அண்ணே
    லோகிதாஸ் மிக சிறந்த இயக்குநர். அவரின் பல படங்களை பார்த்து இருக்கிறேன். தமிழில் அவரின் கஸ்தூரி மான் படமும் நல்ல படமே.
    அவர் மறைவு மிக பெரிய இழப்பு.

    ReplyDelete
  59. ///நித்யகுமாரன் said...
    இப்படி ஒழுங்கா ஒத்துக்கிட்டா பதிவுலகே உங்களை பாராட்டும். அத விட்டுட்டு நமக்கெதுக்குண்ணா அந்த இமேஜ். அந்த சினிமாக்காரங்கதான் அத வச்சிட்டு அழறானுங்க.. உங்கள மாதிரி கட்டுடைக்கறவங்களுக்கு சாரி சாரி... தட்டச்சு இயந்திரம் உடைக்கிறவங்களுக்கு எதுக்கண்ணா... மப்போடு வாழ வாழ்த்துக்கள்.
    ப்ரிய நித்யன்///

    எப்படியோ சுத்தி வளைச்சு என்னை குடிகாரன்னு காட்டணும்னு நினைக்குற..?

    ம்.. அப்பா முருகா.. உனக்கு வந்த சோதனைய பார்த்தியா..?

    ReplyDelete
  60. [[[Arun Kumar said...
    அண்ணே லோகிதாஸ் மிக சிறந்த இயக்குநர். அவரின் பல படங்களை பார்த்து இருக்கிறேன். தமிழில் அவரின் கஸ்தூரிமான் படமும் நல்ல படமே. அவர் மறைவு மிக பெரிய இழப்பு.]]]

    உண்மைதான் தம்பி..

    அவருடைய திரைப்படங்களின் தாக்கம்தான் நல்ல திரைப்படங்களைத் தேடித் தேடி என்னை பார்க்க வைத்தது..!

    அந்த நல்ல திருப்பத்துக்குச் சொந்தக்காரர் அவர்தான்..!

    ReplyDelete
  61. Somuch news in a post,Good,i'll go thru it in detail.

    ReplyDelete
  62. சூப்பர்.. சூப்பர்..


    கலக்கல்...

    ReplyDelete
  63. ///Muniappan Pakkangal said...
    So much news in a post,Good, i'll go thru it in detail.///

    நன்றி டாக்டர்..!

    அடிக்கடி வாங்க..!

    முதலில் தங்களுடைய தளத்தினை திரட்டிகளில் இணைத்துவிடுங்கள்..!

    ReplyDelete
  64. [[[வண்ணத்துபூச்சியார் said...
    சூப்பர்.. சூப்பர்.. கலக்கல்...]]]

    நன்றி பூச்சியாரே..!

    ReplyDelete
  65. வில்லு ரீமிக்ஸ் சூப்பரு...

    ReplyDelete
  66. ///வெண்பூ said...
    வில்லு ரீமிக்ஸ் சூப்பரு...///

    ரொம்ப நாள் கழிச்சு வந்த வெண்பூ சூப்பரு..!

    ReplyDelete
  67. //கிட்டத்தட்ட 755 பேர் படிச்சும் ஒருத்தருக்கு மட்டும்தான் ஆதரவு குத்து குத்தணும்னு தோணுச்சா..//

    அந்த ஒருத்தன் நான் தான்!

    ReplyDelete
  68. ///வால்பையன் said...

    //கிட்டத்தட்ட 755 பேர் படிச்சும் ஒருத்தருக்கு மட்டும்தான் ஆதரவு குத்து குத்தணும்னு தோணுச்சா..//

    அந்த ஒருத்தன் நான்தான்!///

    சல்யூட் அடிக்கிறேன் வாலு..!

    ReplyDelete
  69. அண்ணை சிறுகதை சூப்பர்!:)

    ReplyDelete
  70. ///குசும்பன் said...
    அண்ணை சிறுகதை சூப்பர்!:)///

    அடேய் தம்பீ..

    அதை அந்தப் பதிவுல சொல்லாம இங்க எதுக்கு கண்ணு சொல்ற..?!!!

    ReplyDelete
  71. வழக்கம்போல நல்ல (நீளமான) பதிவு.... அப்புறம் அந்த வில்லு பட விவகாரமெல்லாம் ரொம்ப ஒல்டு மேட்டரு. எப்பவோ மெயில்ல வந்திடுச்சு. கொஞ்சம் லேட்டஸ்ட் நீயூஸா சொல்லுங்க பாஸூ. :)

    ReplyDelete
  72. Nalla post with concern Unmai thamizhan.Glad to know that Kerala Govt. has honoured the death of Neela Lohithadoss.Namma kathai vera.Thaaha saanthi is every where,athu kaalathin kattayam aahi pochchu.Vijaykku Villu mattum thaana ? Nayanthara-PrabhuDeva,wish them Goodluck.Nice tips abt Facebook.You've pointed out nicely-Story is the base for the film & itz the real Hero.

    ReplyDelete
  73. ///ஊர்சுற்றி said...
    வழக்கம்போல நல்ல (நீளமான) பதிவு.... அப்புறம் அந்த வில்லு பட விவகாரமெல்லாம் ரொம்ப ஒல்டு மேட்டரு. எப்பவோ மெயில்ல வந்திடுச்சு. கொஞ்சம் லேட்டஸ்ட் நீயூஸா சொல்லுங்க பாஸூ. :)///

    ஊர் சுற்றி ஸார்..

    எனக்கு இது லேட்டஸ்ட் நியூஸ்..

    நான் இப்பத்தான பார்த்தேன். அதான் போட்டேன்..

    இட்ஸ் ஓகே..

    ReplyDelete
  74. ///Muniappan Pakkangal said...
    Nalla post with concern Unmai thamizhan. Glad to know that Kerala Govt. has honoured the death of Neela Lohithadoss. Namma kathai vera. Thaaha saanthi is every where, athu kaalathin kattayam aahi pochchu. Vijaykku Villu mattum thaana ? Nayanthara-PrabhuDeva, wish them Goodluck. Nice tips abt Facebook. You've pointed out nicely-Story is the base for the film & itz the real Hero.///

    பின்னூட்டத்திற்கு நன்றி முனியன் ஸார்..!

    ReplyDelete
  75. ”என் வூட்டுக்காரரு குடிச்சாலும் நல்ல மனுசரு”ன்னு சொல்ற மாதிரி ஒரு தங்கமணிய புடிச்சிடலாம், கவலைய வுடுங்க. இதுக்காக அடிச்ச தண்ணிய அடிக்கலைன்னு சொல்லக்கூடாது ;-)

    ஜாக்கி அண்ணாச்சி நீங்க டெலிட் பண்ண ஃபோட்டோவை எதாவது “அண்டெலிட்” சாஃப்ட்வேர் வச்சி திரும்ப எடுக்க முயற்சி செய்யிறாராமே, அதைப் பத்தி ஒண்ணும் தெரியாதா உங்களுக்கு?

    ReplyDelete
  76. ///ராஜா | KVR said...
    ”என் வூட்டுக்காரரு குடிச்சாலும் நல்ல மனுசரு”ன்னு சொல்ற மாதிரி ஒரு தங்கமணிய புடிச்சிடலாம், கவலைய வுடுங்க. இதுக்காக அடிச்ச தண்ணிய அடிக்கலைன்னு சொல்லக்கூடாது ;-)///

    அடப்பாவிகளா..? அப்ப நெசமாவே நான் தண்ணியடிக்குறவன்னு நினைச்சுட்டீங்களா..?!!

    ///ஜாக்கி அண்ணாச்சி நீங்க டெலிட் பண்ண ஃபோட்டோவை எதாவது “அண்டெலிட்” சாஃப்ட்வேர் வச்சி திரும்ப எடுக்க முயற்சி செய்யிறாராமே, அதைப் பத்தி ஒண்ணும் தெரியாதா உங்களுக்கு?///

    நானும் கேள்விப்பட்டேன்..! நான்தான் முந்திக்கிட்டு என்ன நடந்ததுன்னு எழுதிட்டனே..?

    பிறகென்ன பயம் எனக்கு..?

    ReplyDelete
  77. உடல் நலமின்மையால் சில நாட்களாக வரவில்லை. உங்கள் நண்பர்கள் (so called) உங்களை நன்றாகவே வாருகிறார்கள். அவர்களுக்கு உங்கள் மேல் என்ன காண்டு என்று புரியவில்லை.

    ரவிக்கு முன்னால் இருக்கும் செந்தழல் என்பது அவருடைய ஊரின் பெயரா. நொந்தழல் என்றீர்களே எதன் காரணமாகவாவது நொந்து போய் இருக்கிறாரா.

    நேரமின்மை காரணமாக ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித் தனி பின்னூட்டம் இட முடியவில்லை

    ReplyDelete
  78. ///ananth said...
    உடல் நலமின்மையால் சில நாட்களாக வரவில்லை. உங்கள் நண்பர்கள் (so called) உங்களை நன்றாகவே வாருகிறார்கள். அவர்களுக்கு உங்கள் மேல் என்ன காண்டு என்று புரியவில்லை.
    ரவிக்கு முன்னால் இருக்கும் செந்தழல் என்பது அவருடைய ஊரின் பெயரா. நொந்தழல் என்றீர்களே எதன் காரணமாகவாவது நொந்து போய் இருக்கிறாரா.
    நேரமின்மை காரணமாக ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித் தனி பின்னூட்டம் இட முடியவில்லை.///

    பரவாயில்லை ஆனந்த்..

    உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

    பின்பு மெதுவாக வந்து படித்துக் கொள்ளலாம்.

    இது ஓய்வு நேரத்தில் செய்யக் கூடியது.. அவ்வளவே..

    நண்பர்கள் உரிமை இருப்பதால் உரிமையுடன் காலை வாருகிறார்கள்.. அவ்வளவுதான்.. வலையுலகில் இதையெல்லாம் ஸ்போர்ட்டிவ்வாக, கிண்டலாக எடுத்துக் கொள்வார்கள்.. நீங்களும் அப்படியே இருங்கள்..

    அக்கறையுடன் விசாரித்தமைக்கு நன்றிகள் ஆனந்த்..

    ReplyDelete
  79. எனது ஓரே ஓரு மகனது அரிகண்ட வீட்டில் இருந்து இப்போது தான் வெளியேறி மன நிறைவுடன் உங்களது சிறு கதையில் யதார்த்த பிழை கண்டேன் --- மூன்று மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு மூன்று தடவை சென்றால் பதினெட்டு மைல் நடக்கணுமே என்ற எண்ணம் வாட்டி எடுத்திசண்ணே!

    ReplyDelete
  80. தண்ணி அடிப்பது மனிதனின் மதிப்பை குறைக்கும் தான்
    மதுவை பருகுவதால் பல நன்மைகளும் நன் மதிப்பும் கிட்டும் என்பதை ஞாபகப் படுத்த விரும்புகின்றேன்

    ReplyDelete
  81. அண்ணே யார் எது சொன்னாலும் நீங்கள் என் மனதில் மதிப்புக்குரியவரே என்றென்றும் !

    ReplyDelete
  82. ///bena said...
    எனது ஓரே ஓரு மகனது அரிகண்ட வீட்டில் இருந்து இப்போதுதான் வெளியேறி மன நிறைவுடன் உங்களது சிறு கதையில் யதார்த்த பிழை கண்டேன் --- மூன்று மைல் தொலைவில் உள்ள பள்ளிக்கு மூன்று தடவை சென்றால் பதினெட்டு மைல் நடக்கணுமே என்ற எண்ணம் வாட்டி எடுத்திசண்ணே!///

    மன்னிக்கணும் பென்ஸ் ஸார்..

    திருத்திக் கொள்கிறேன்..!

    ReplyDelete
  83. ///தண்ணி அடிப்பது மனிதனின் மதிப்பை குறைக்கும்தான்.

    மதுவை பருகுவதால் பல நன்மைகளும் நன்மதிப்பும் கிட்டும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.///

    பென்ஸ் ஸார்..

    இதென்ன குண்டக்க மண்டக்க பின்னூட்டம்..?

    முதல் வரில மதிப்பைக் குறைக்கும்றீ்ங்க..?

    அடுத்த வரில நன்மை பயக்கும்ன்றீங்க..?

    வாட் இஸ் திஸ்..?

    ReplyDelete
  84. [[[bena said...
    அண்ணே யார் எது சொன்னாலும் நீங்கள் என் மனதில் மதிப்புக்குரியவரே என்றென்றும் !]]]

    உங்களுக்கு அண்ணனா நான்..? ஏன் ஸார் காமெடி பண்றீங்க..?

    ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு ஸார்..!

    ReplyDelete
  85. [[[sankarkumar said...
    goood article]]]

    நன்றி சங்கர்குமார்..!

    ReplyDelete
  86. [[[முதல் வரில மதிப்பைக் குறைக்கும்றீ்ங்க..?
    அடுத்த வரில நன்மை பயக்கும்ன்றீங்க..?
    வாட் இஸ் திஸ்..?]]]
    My Dearest UT, this is what !
    ஓன்று தண்ணி அடிப்பது, மற்றயது மது பருகுவது.
    Omarkayam நன்றாகவே விளக்கின்றாரே

    ReplyDelete
  87. உங்களுக்கு அண்ணனா நான்..? ஏன் ஸார் காமெடி பண்றீங்க..?
    --------------------------
    மீண்டும் ஓர் முறை - உடலின் வயது வைத்தியருக்காகலாம்,
    அறிவின் தரம், நிலை மட்டுமே நான் கணிப்பது.
    நான் பயித்தியக்காரனாக தோன்றினாலும் நீக்கள் எனக்கு அண்ணன் தான்.
    X-Box ல் கார் ஓட்டுவதில் எனது ஏழு வயது பேரன் அண்ணனானாலும் அச்சிறுவனை நான் அண்ணன் என்று அழைத்து அவமானப்படுத்துவதில்லை அய்யா.

    ReplyDelete
  88. ///bena said...
    [[[முதல் வரில மதிப்பைக் குறைக்கும்றீ்ங்க..?
    அடுத்த வரில நன்மை பயக்கும்ன்றீங்க..?
    வாட் இஸ் திஸ்..?]]]

    My Dearest UT, this is what !
    ஓன்று தண்ணி அடிப்பது, மற்றயது மது பருகுவது.
    Omarkayam நன்றாகவே விளக்கின்றாரே///

    அன்புள்ள பென்ஸ் ஸார்..

    தண்ணி அடி்ப்பது என்பதே எங்க ஊர் வழக்கப்படி மது அருந்துவதுதான்..

    நீங்கள் வெறும் தண்ணீரை சொல்கிறீர்களோ.. அப்படியென்றால் அது அடிப்பது கணக்கில் வராது.. குடிப்பது என்றுதான் வரும்..!

    ReplyDelete
  89. ///bena said...
    உங்களுக்கு அண்ணனா நான்..? ஏன் ஸார் காமெடி பண்றீங்க..?
    --------------------------

    மீண்டும் ஓர் முறை - உடலின் வயது வைத்தியருக்காகலாம்,
    அறிவின் தரம், நிலை மட்டுமே நான் கணிப்பது.
    நான் பயித்தியக்காரனாக தோன்றினாலும் நீக்கள் எனக்கு அண்ணன்தான்.
    X-Box ல் கார் ஓட்டுவதில் எனது ஏழு வயது பேரன் அண்ணனானாலும் அச்சிறுவனை நான் அண்ணன் என்று அழைத்து அவமானப்படுத்துவதில்லை அய்யா.////

    சரிங்கண்ணே ஒத்துக்குறேண்ணே.. விடுங்கண்ணே..!

    நீங்க எனக்கு தம்பிதாண்ணே..!))))))))

    ReplyDelete
  90. உனா தானா அண்ணே, உங்க ஊரு நம்ம ஊரு எல்லாம் தமிழுக்கு நம்மட ஊரு தானேண்ணை --- தமிழ் நாடு மூத்தது தமிழ் ஈழம் இளையது --- இரண்டுமே தமிழ் தாயின் உத்தம புத்திரர்களே --- தமிழ் உலகத்தில் தமிழ் அறிவுக் குடும்பம் உள்ளது --- அதில் நீங்கள் அண்ணன் நான் மற்றவன் --- இந்த தண்ணி அடி மற்றும் மது பாவிப்பு விஷயத்தில் நான் பாட்டன் நீங்கள் பேரன் --- உங்களுக்கு அனுபவம் கம்மி, எனக்கு பத்து இருபது வருடங்கள் முன்னர் நேரத்துக்கு ஓரு 750 மில்லி முழுப் போத்தல் இல்லாது ரேபிளில் உட்கார மாட்டேன் --- மரியாதையான குடும்ப இளம் பெண் பிள்ளைகளை தாய் தகப்பன் என்னை நம்பி ஓப்படைப்பர் --- குடி வெறியில் ஓரு போதும் அசம்பாவிதத்தினால் கெட்ட பெயர் வாங்காது வாழ்க்கையில் தப்பிவிட்டேள் --- இப்போது தண்ணி அடியும் இல்லை மது பருகுவதும் இல்லை ---
    இலக்கணம் இதோ --- தண்ணி அடிப்பது நிதானமில்லா வெறியில் முடியும், இழிப் பெயர் தவறாது வந்து சேரும், இதைத் தான் உங்களது அன்பர்கள் உங்களுக்கு சூட்டப்பார்க்கின்றனர் ---
    பட்டை அல்லாத, உயர் தர மதுவை சிப் செய்து, ஆழமான பழுவான கருத்துக்களை பரிமாறி, சுமுகமாக காலம் செலுத்தி, நாலு பேர் மனமகிழ உரையாடி வீடு சேர்ந்து, மறு நாள் நல்ல பெயர் வாங்குவதே மது பருகுவது என்றேன்.
    இரண்டுக்கும் இன்னமும் வித்தியாசம் கிடைக்காது போனால் பரவாயில்லை அய்யா, அது என் சுத்தமான அண்ணனுக்கு தேவையே இல்லை.

    ReplyDelete