Pages

Friday, June 12, 2009

பதிவர்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள்..!

12-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

பிரச்சினைகள் எனக்குப் புதிதல்ல.. புதிய, புதிய பிரச்சினைகளை அன்றாடம் எதிர்கொள்வதென்பது எனது தினப்படியான வேலைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இப்போது சில நாட்களாக இன்னுமொரு பிரச்சினை.


திடீரென்று எனது வலைப்பதிவுத் தளம் திறப்பதற்கு ரொம்பவே சண்டித்தனம் செய்கிறது. அடங்க மறுக்கிறது. சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. நானும் எப்படியெல்லாம் கெஞ்ச வேண்டுமோ..? எப்படியெல்லாம் கொஞ்ச வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டேன். ம்ஹும்.. எனக்கு கரிசனம் காட்ட மறுக்கிறது தளம்.

எனது பதிவுகளுக்கு வரும் பதிவர்களும் இதையே சொல்லிச் சொல்லிக் காட்டி, இப்போது எனக்கு வந்த இந்த வைரஸ் தலைவலி, எனது கிட்னிவரைக்கும் பாய்ந்துவிட்டது.

எனது வலைப்பூவின் உள்ளே ஏதோ ஒரு வைரஸ் புகுந்துதான் இப்படி ஆட்டி வைப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த வைரஸின் பெயர் [[[cicak.socmedia.com.my.]]]

இந்தப் பெயர் கொண்ட தளத்தை அப்டேட் செய்வதாகக் கூறித்தான் எனது தளம் குறைந்தபட்சம் 3 நிமிடங்களாவது ஸ்தம்பித்துப் போய் நிற்பதாக அண்டார்டிகாவில் இருந்து அலாஸ்கா வரையிலான நமது பதிவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

என்னுடைய இயங்குதளத்தின் html file-ல் இரண்டு இடங்களில் இந்த வைரஸ் ஒளிந்துள்ளது.

அதனை நான் எப்படியெல்லாமோ நீக்கிப் பார்த்துவிட்டேன். முடியவில்லை. நீக்கிய பின்பு save ஆக மறுக்கிறது. அதற்கு மேல் என்னதான் செய்வது என்று எனக்கும் தெரியவில்லை.

இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டை நீக்கும் வழிமுறைகளைப் பற்றி கழகத்தின் கண்மணிகள் யாரேனும் சொல்லிக் கொடுத்தால், அது வொர்க்அவுட் ஆகி வெற்றி பெற்றால், அவர்களது பெயரில் வடபழனி முருகன் கோவிலில் அன்னதானமும், அங்கபிரதட்சணையும், பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், உடல் முழுவதும் அலகு குத்தி ஊர்வலம் வருவது, தங்கத் தேர் இழுப்பது என்று சகலத்தையும் எனது அருமை தம்பி மாநக்கல் சிபி செய்யக் காத்திருக்கிறான் என்பதையும் மறவாமல் ஞாபகப்படுத்துகிறேன்..

விரைந்து ஓடி வந்து தீர்வைச் சொல்லுங்கள் தோழர்களே..

18 comments:

  1. ஒட்டுமொத்தமாக வேறு டெம்ப்ளேட்டுக்கு மாறுங்கள். மாறும்போது ஜாவாஸ்க்ரிப்ட் இத்யாதிகளை அப்டேட் செய்யாமல் மாறிப் பாருங்கள். ஸ்டேட் கவுண்டர் உள்ளிட்ட முக்கியமான சில விஷயங்களை மட்டும் பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. அண்ணா. உங்க டெம்ப்ளேட் ஃபைல்ல தான் பிரச்சினை இருக்கும்ன்னு நினைக்குறேன். உங்களோட வழக்கமான 60 பக்க பதிவே உடனே ஓப்பன் ஆகுறப்ப இந்த கையெழுத்து பதிவு ஓப்பன் ஆகாம அடம்பிடிக்குது.

    லக்கி சொன்னா மாதிரி செஞ்சு பார்த்துட்டு சக்ஸஸ்னா உடனே மாநக்கலார் முதுகுல அலகு குத்துங்க :)

    ReplyDelete
  3. தமிழிஸ் பட்டனுக்கு மேல இந்த உரல் கொண்ட ஜாவா ஸ்கிரிப்ட் இருக்கு
    http://cicak.socmedia.com.my/cicak/munyit/monkeysmiliesforblogger.user.js
    எடுத்துவிடுங்க சரியாயிடும்ன்னு நினைக்கிறேன்.

    வெங்கடேஷ்

    ReplyDelete
  4. அப்பன் முருகன் அடிக்கடி ஏன் இப்படி சோதனையை குடுக்கறான்னு தெரியலையே?????

    ReplyDelete
  5. /லக்கி சொன்னா மாதிரி செஞ்சு பார்த்துட்டு சக்ஸஸ்னா உடனே மாநக்கலார் முதுகுல அலகு குத்துங்க :
    /

    யோவ் சென்ஷி! உமக்கேன்யா இந்த வேலை?

    ReplyDelete
  6. // jackiesekar said...

    அப்பன் முருகன் அடிக்கடி ஏன் இப்படி சோதனையை குடுக்கறான்னு தெரியலையே?????//

    அப்படியாவது சின்னதா எழுதித் தொலைக்கிறாரான்னு பார்ப்போம்னு ஒரு நப்பாசைலதான்!

    ReplyDelete
  7. இது இந்த மாதிரி விடாப்பிடியா பெரிய பெரிய பதிவா எழுதி கூகிள் சர்வரை ஸ்தம்பிக்க வைக்கிற பதிவர்களை ஓரம்கட்டி விட கூகிளே செய்யும் ஏற்பாடு!

    உ.த அண்ணே ஏமாந்து போயி வலைப்பூவை டெலிட் செஞ்சிடாதீங்க!

    ReplyDelete
  8. உங்க டெம்பிளேட் உள்ள அந்த //தமிழிஸ் பட்டனுக்கு மேல இந்த உரல் கொண்ட ஜாவா ஸ்கிரிப்ட் இருக்கு
    http://cicak.socmedia.com.my/cicak/munyit/monkeysmiliesforblogger.user.js
    எடுத்துவிடுங்க சரியாயிடும்ன்னு நினைக்கிறேன்./

    மிக சரி, அந்த வைரஸ் அங்க தான் இருக்கு, இல்லை லக்கி சொன்ன மாதிரி முக்கியமான ஜாவா சிரிப்பிட்டு வைத்து கொண்டு மற்றவை எடுத்துவிடுங்கள்

    மற்க்காமல் பேக் பக் எடுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  9. //சென்ஷி said...

    அண்ணா. உங்க டெம்ப்ளேட் ஃபைல்ல தான் பிரச்சினை இருக்கும்ன்னு நினைக்குறேன். உங்களோட வழக்கமான 60 பக்க பதிவே உடனே ஓப்பன் ஆகுறப்ப இந்த கையெழுத்து பதிவு ஓப்பன் ஆகாம அடம்பிடிக்குது.

    லக்கி சொன்னா மாதிரி செஞ்சு பார்த்துட்டு சக்ஸஸ்னா உடனே மாநக்கலார் முதுகுல அலகு குத்துங்க :)

    //
    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

    ”தள” அலகு குத்திக்கிட்டு அழகா தங்க தேர் இழுக்கும்போது ஒரு போட்டோ புடிச்சு, பதிவுல போட்டீங்கன்னா புண்ணியமா போகும் பாஸ்! :)))))

    ReplyDelete
  10. பின்னூட்டமிட்ட அன்பு நண்பர்களே..

    உங்களுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும் மிக்க நன்றி..

    நம்ம அருண் தம்பி எனது html file-ஐ ரிப்பேர் செஞ்சு மெயில் பண்ணினாரு.

    அதை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணின உடனே பிராப்ளம் சரியாயிருச்சு..

    அதுனால வந்தவங்களுக்கும், வராதவங்களுக்கும் சேர்த்து மொத்தமா நன்றி சொல்லி மேட்டரை முடிச்சுக்குறேன்.

    இப்ப பெங்களூர் அருண் தம்பி பேருல நம்ம நாமக்கல் சிபி செய்யப் போகும் விரதங்கள், வேண்டுதல்கள், காணிக்கைகள், அன்னதானங்கள், ஊர்வலங்கள் பற்றிய விவரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.

    பதிவர்கள் வந்து அலகு குத்திவிட்டால்தான் நன்றாக இருக்கும் சிபியார் கருதுவதால் அது சமயம் மறக்காமல் அனைவரும் வந்துவிடுங்கள்..!

    அனைவரின் வருகைக்கும் நன்றி..!

    ReplyDelete
  11. அண்ணனுடைய பிரச்சினை சரியானதில் மிக்க மகிழ்ச்சி. என் பங்குக்கு நானும் வந்து அலகு குத்தி விடட்டுமா.

    ReplyDelete
  12. அண்ணே.. இது திட்டமிட்ட சதியா இருக்கும்னு தெரியுது.. நீங்க நீட்ட நீட்டமா, பெரிசு, பெருசா எழுதற அழகை பார்த்து உங்க சைட்டுல வைரஸை உட்டுட்டானுங்களோன்னு சந்தேகம் வருது.. இதை பத்தி நாம ஏன் உடனடியாய் ஒரு விசாரணை கமிஷன் முருகன் கிட்ட வைக்க கூடாது..?:)

    ReplyDelete
  13. [[[ananth said...
    அண்ணனுடைய பிரச்சினை சரியானதில் மிக்க மகிழ்ச்சி. என் பங்குக்கு நானும் வந்து அலகு குத்தி விடட்டுமா.]]]

    தாராளமாக குத்தலாம் ஆனந்த்..

    நாமக்கல் சிபி எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்..!

    ReplyDelete
  14. [[[Cable Sankar said...
    அண்ணே.. இது திட்டமிட்ட சதியா இருக்கும்னு தெரியுது.. நீங்க நீட்ட நீட்டமா, பெரிசு, பெருசா எழுதற அழகை பார்த்து உங்க சைட்டுல வைரஸை உட்டுட்டானுங்களோன்னு சந்தேகம் வருது.. இதை பத்தி நாம ஏன் உடனடியாய் ஒரு விசாரணை கமிஷன் முருகன்கிட்ட வைக்க கூடாது..?:)]]]

    எனக்கும் இப்படித்தான் தோணுது..

    ஏன்னா அந்த வைரஸ் எப்படி என்னோட தளத்துக்குள்ள நுழைஞ்சதுன்னு என்னால கண்டுபிடிக்கவே முடியலே..

    விசாரணை கமிஷன் வைக்கலாம். ஆனா கமிஷன் தலைவரே கமிஷன் வாங்குறவரா வந்து வாய்ச்சுட்டா என்ன செய்யறது..?

    விடு. முருகன் பார்த்துக்குவான்..!

    ReplyDelete
  15. சக்ஸஸ் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஓப்பன் ஆகுது, உடனே மாநக்கலார் முதுகுல அலகு குத்துங்க.

    ம் சீக்கிரம்.
    :))

    ReplyDelete
  16. [[[மங்களூர் சிவா said...
    சக்ஸஸ் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம ஓப்பன் ஆகுது, உடனே மாநக்கலார் முதுகுல அலகு குத்துங்க. ம் சீக்கிரம்.:))]]]

    சிவா..

    மாநக்கலார் மொதல்ல சரின்னார்.. ஆனா இப்போ துணைக்கு யாராச்சு நாக்குல வேல் குத்திக்கிட்டாத்தான் முதுகுல அவர் குத்திக்குவாராம்..

    உன் பேரைத்தான் சொல்றாரு..!

    ReplyDelete
  17. ur post r very well-ekambavanan,film co director

    ReplyDelete