Pages

Tuesday, June 09, 2009

டாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும்..!

09-06-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!




அவனை
அந்த நிலையில்
நான்
பார்த்திருக்கவே கூடாது..!

வெயிலில்
வாடி வதங்கி

டாஸ்மாக் கடையின்
குப்பைத் தொட்டி
இலை போல்
இருந்தான்
அந்தக் குடிமகன்..!

உச்சி வெயில்
தலையைப்
பொளந்தாலும்

உள்ளுக்குள் ஏற்றிய
டாஸ்மாக்கால்
நிற்கக்கூட
முடியாமல்

நின்றிருந்தான்..!!

வா
என்றும் சொல்லவில்லை
..!
போ
என்றும் சொல்லவில்லை..!

ஆனால்
என்னை மீறி

உள்ளே வந்தான்..!

ஏதேதோ உளறினான்..!
உள்ளே போன
சரக்கு

அவனை முழுதாக
பேச
விடாமல் செய்தது..!

இயக்குநர் சிங்கங்களிடம்
தப்பிதம் கண்டுபிடித்தே
பேர் வாங்கிய
இவனுக்கு

என் இருப்பிடம்
எப்படித் தெரிந்தது
என்று தெரியவில்லை..!

வந்தவனுக்கு
படுப்பதற்கு
இடம் தேவை என்பது
எனக்கு
இப்போது புரிந்தது..!!


இத்தனை
லட்சம் பேர்
இருக்கின்ற சென்னையில்
ஒரு குடிமகனுக்கு
வசீகர சிரிப்புடன்
"வாங்க" என்று
வீட்டுக்குள் அழைக்கும்
மனிதர்கள் இல்லாததுதான்
பெரும்குறை..!

செய்த வேலையை
விட்டுவிட்டு
அவனைப் பற்றிய
ஆராய்ச்சியில்
ஓடியது
என் மனம்..
!

இவனுக்கு
என்ன கவலையோ..?
என்ன சோதனையோ..?

இவன் ஒரு வேளை
முருகனை
வேண்டாதவனோ..?
வேண்டியிருக்கலாம்.
ஒருவேளை
வன் சொல்லித்தான்
இந்த அமுதத்தை
அருந்தியிருப்பானோ
என்றெல்லாம்
எனது மனம்
முழுக்க, முழுக்க
குடிமகனது
மனமாக
மாறிவிட்டது..!

நிமிடத்திற்கு
ஐந்து சுற்றே சுற்றும்
ஓட்டை பேனின்
காற்று போதாமல்
தனது
சட்டைப் பட்டன்களை
கிழித்துக் கொண்டு
தனது மார்பைக் காட்டி
காற்று வாங்கி
வாய் திறந்து
மூச்சு விட்டு

மல்லாக்க படுத்திருக்கும்
வருங்கால
இயக்குநர் சிங்கம் ஒன்றை
நான் சோகத்துடன்
பார்த்தபடியிருந்தேன்..!

அணிந்திருந்த பேண்ட்டில்
பட்டிருந்த
அழுக்குகளும், மண்களும்
எங்கோ புரண்டு, எழுந்து
வந்திருக்கும்
அவனது வீரத்தைக்
காட்டியது..!

கடவாய் ஓரம்
ஒட்டியிருந்த மிக்சர்
டாஸ்மாக் கடையை
விளம்பரப்படுத்தியது..!

இப்படியே
தவழ்ந்து வந்திருந்தால்
தெருவில் எத்தனை பேர்
பார்த்திருப்பார்களோ..?

நாளை
நான்
வெளிசெல்லும்போது

என் மீதான
அவர்களது
பார்வைக்கு

எனது பதில் என்ன..?

மனம் குழம்பியது..!
ஒரு குடிமகனுக்கு
இடம் கொடுப்பது
தவறா..?
அல்லது
இந்தக் குடிமகனுக்கு
வீடு திறக்காத
ஜனத்திரள்களின் தவறா..?

ஒரே நேரத்தில்
அனைத்து வகை
சரக்குகளையும்
ஒன்றாய் அடித்ததுபோல்
என் மனம் தள்ளாடியது..!

என்றைக்கும்
என் வீடு
குடிமகன்களுக்காக
திறந்ததில்லையே..!
இன்றைக்கு
இவனுக்கு
என்ன சிறப்பு..?


வந்தான்..
உளறினான்..

படுத்தான்..
இதோ

நிம்மதியான உறக்கத்தில்
ஒரு குடிமகன்..
!

எனது
இருந்த வேலையும்
நிறுத்தப்பட்டது.
கை ஓட
தயாராக இருந்தாலும்
மனம் ஓடவில்லை..!
அப்படியென்ன
இவனுக்குக் கவலை..?

குடித்தால்
கவலை போய்விடுமா..?
ஆழ்ந்த தூக்கத்திற்கு
டாஸ்மாக் கடை
தண்ணிதான் மருந்தா..?
எந்த மருத்துவன்
எழுதிக் கொடுத்தான்
இந்த
மருத்துவக் குறிப்பை..?

எழுந்தவுடன்
என்ன செய்வானோ..?
என்ன கேட்பானோ..?
என்று
கிறுக்கு மனம்
குறுகுறுத்தது..!

ராத்திரி
கட்டிங்கிற்கு
பணம் கேட்டால்
"இல்லை' என்பதற்கு
என்னென்ன காரணங்கள்
சொல்லலாம்.."
என் மனம்
வசனம்

எழுதியது..!

டேபிளில்
கிடந்த
சில
ரூபாய் நோட்டுக்களுடன்

சில்லரைக் காசுகளையும்
அவசரமாக அள்ளி
டிராயரில் போட்டு
சாவியைத் திருப்பி
லாக் செய்தவுடன்தான்
மனம்
ஓரணியில் நின்றது..!

மாலைவரையில்
அவனுக்கும்
எனக்குமான
பேசாத போராட்டத்தில்
அவனே ஜெயித்தான்..!

என்னால்
அவனை
நித்திரையில் இருந்து
எழுப்ப முடியவில்லை..!
டாஸ்மாக்கின் ஆதிக்கம்
தயிர் சாதத்தை
வீழ்த்தியது..!

எழுந்தவன்
அதுவரையில்
தோன்றாத சிரிப்புடன்
என்னிடம் பேசினான்..!

"ஏவி.எம். ஸ்டூடியோ

புதிய
பிள்ளையார் மேல்

ஆணையாக
நான் கதவைத்
திறக்க மாட்டேன்.."
என்று
எனது திரையுலக

நண்பர்களின் சவாலை
தான் இன்றைக்கு
முறியடித்ததாக
சொல்லிச் சிரித்தபோது
எனக்கே
இப்போது
டாஸ்மாக் கடைக்குப்
போக வேண்டும்
போல் இருந்தது..!

ஏதேதோ
சொன்னான்..!
பேசினான்..!

"படம்,

தயாரிப்பாளர்
எதுவும்
செட்டாகவில்லை"
என்று
வருந்தினான்..!

கதை என்றால்
தயாரிப்பு,
தயாரிப்பு
என்றால் கதை..
என்று
ஒருவர் மாற்றி ஒருவர்
காலை வாரும்
சினிமாவுலகின்
பரமபதப் பலகையில்
தான்
பல முறை
பாம்புக் கடி

பட்ட கதையை
உருக்கினான்..


கடைசியாக
சந்தித்த

திருச்சி பருப்பு வியாபாரி
படமெடுக்கும் முன்னர்
“அந்த
வெல்லமண்டி மூக்கழகியை
அழைத்து வா..
பின்பு
படம் பண்ணுவோம்”

என்று கேட்டதைச்
சொல்லி சிரித்தான்..

“அவன்
தொந்தியைப் பார்க்கணுமே..!
படுத்தா
அவனைத்
தாண்டி இருக்குறது

யாருன்னே தெரியாது.
அவனுக்கு
அந்த 'ரஸகுல்லா'
வேணுமாம்..”

சொல்லிவிட்டு வீடே

அதிரும்படி சிரித்தான்..!

எனக்கு
இப்போது அந்த
நடிகையைவிட,
இவன்

எப்போது கிளம்புவான்
என்பதே பெரும்பாடாக
இருந்தது..

"அழுக்காக இருக்கிறேன்"
என்று சொல்லி
குளித்தான்..
!

திரும்பவும்
உடை மாற்றும்போது
அவனது பர்ஸ்
தலைகீழாகக் கவிழ
அதிலிருந்த
கத்தையான
காந்தி தாத்தா
நோட்டுக்கள்

என்னைப் பார்த்து
பல்லைக் காட்டி
சிரித்தன..!

"என்ன பார்க்குற..?
அப்பன் சொத்தைப்
பிரிச்சுக் கொடுத்து
தலை முழுகிட்டான்..
இருக்கு..
இருக்குறவரைக்கும்
ஓடும்
இந்தக் கட்டை..
!"

"இதுவரைக்கும்
பத்து பைசா
கடன் இல்லை..!
தெரியுமா உனக்கு..?"

"எவன்கிட்டேயும்
கைமாத்தா
அஞ்சு காசு
வாங்கினதா
என் சரித்திரத்துல
இல்லை..
தெரியுமா உனக்கு..?"

அவன் விட்ட
அஸ்திரத்தில்
நான்
அடிக்காமலேயே
அடித்த
டாஸ்மாக் சரக்கு

சர்ரென்று
இறங்கியது..


வாசல்புறத்தில்
என்னுடைய
செருப்புக்களே

ஐந்து இருந்தன..!

எதை வைத்து
என்னை

.......................................................
என்பதில்
எனக்கே

இப்போது குழப்பம்..!

67 comments:

  1. வெல்ல மண்டி நடிகைன்னா யாரு? தலைவா?

    ReplyDelete
  2. ON THE OTHER SIDE நீங்க கும்மி அடிக்கும் அனாநிகளிடம் பட்டப் பாடை பாடுன மாதிரி இருக்கு))). ETHIR KAVUJA SUPERAA PAADA ORU NALLA KAVUJA)))

    NAYANDI NAINA I AM EAGERLY WAITING FOR YOUR ETHIR KAVUJA))))))

    ReplyDelete
  3. அண்ணே கவிதையும் பெருசா தான் போடனுமா!

    தாவூ தீருது!

    ReplyDelete
  4. இது கவிதையா இல்ல காவியமா ;))

    நாலு நாள் லீவ் போட்டுட்டு படிச்சுட்டு வந்து கமெண்டுறேன்!

    ReplyDelete
  5. நீள் பதிவையே பிச்சு பிச்சு
    எழுதிவிட்டு
    கவுஜையாக்கும் கவிஞரே
    இதுநாள் வரைக்கும் பதிவுலக முத்திரைகளான தாவு தீருதுக்கு அர்த்தம் புரியவில்லை. படித்த முடித்தபின் நன்றாகவே புரிந்துவிட்டது.

    ReplyDelete
  6. Why cant you write this as a short story for that contest organised by Sivaraman aka paithiyakkaran.
    You need to add few names like foucault, deleuze, nietzche here and there with some brand names like old monk, kalyani. You should write in such a way that sivaraman should be tempted to write Konar Urai for it :). are you in the game?.

    ReplyDelete
  7. நிற்காமல் நின்றான்........என்ன நைனா அர்த்தம்...?ம்..போங்க..நமக்குஎன்ன தொழில் கவிதையா?

    ReplyDelete
  8. ///பினாத்தல் சுரேஷ் said...
    அருமையான நீள்கவிதை!///

    பெனாத்தலு.. தாங்கள்தானா..?

    நலமா..? ரொம்ப நாளாச்சு பார்த்து..

    வந்ததுக்கு நன்றி..!

    ReplyDelete
  9. [[[குழலி / Kuzhali said...
    வெல்ல மண்டி நடிகைன்னா யாரு? தலைவா?]]]

    அவ்ளோ சுலபமா சொல்லிருவோமா நாங்க..?!!!

    அவனே அதை நினைச்சுத்தான் மண்டை காஞ்சு போய் வந்திருக்கான்..

    ReplyDelete
  10. [[[SPIDEY said...

    ON THE OTHER SIDE நீங்க கும்மி அடிக்கும் அனாநிகளிடம் பட்டப் பாடை பாடுன மாதிரி இருக்கு))). ETHIR KAVUJA SUPERAA PAADA ORU NALLA KAVUJA)))

    NAYANDI NAINA I AM EAGERLY WAITING FOR YOUR ETHIR KAVUJA))))))]]]

    நையாண்டி நைனாவின் எதிர்ப்பாட்டைக் கேட்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் ஸ்பைடி..!

    ReplyDelete
  11. [[[வால்பையன் said...
    அண்ணே கவிதையும் பெருசாதான் போடனுமா! தாவூ தீருது!]]]

    அட போங்கப்பா..!

    இதைவிட சி்ன்னதுதான்னா நானும் டாஸ்மாக் சரக்கடிச்சாத்தான் வரும்..!

    ReplyDelete
  12. [[[சென்ஷி said...
    இது கவிதையா இல்ல காவியமா ;))நாலு நாள் லீவ் போட்டுட்டு படிச்சுட்டு வந்து கமெண்டுறேன்!]]]

    பிச்சுப்புடுவேன் பிச்சு..

    ஓவரா நக்கல் பண்றடா நீயி..

    ஏதோ இத்தூணூண்டுதான் எழுதியிருக்கேன்னு நானே வருத்தத்துல இருக்கேன்..!

    ReplyDelete
  13. [[[Sathia said...

    நீள் பதிவையே பிச்சு பிச்சு
    எழுதிவிட்டு கவுஜையாக்கும் கவிஞரே
    இதுநாள்வரைக்கும் பதிவுலக முத்திரைகளான தாவு தீருதுக்கு அர்த்தம் புரியவில்லை. படித்த முடித்தபின் நன்றாகவே புரிந்துவிட்டது.]]]

    புரிஞ்சுச்சுல்ல.. தட்சணையை எடுத்து வைங்க..

    ReplyDelete
  14. [[[i criticize periyar said...
    Why cant you write this as a short story for that contest organised by Sivaraman aka paithiyakkaran. You need to add few names like foucault, deleuze, nietzche here and there with some brand names like old monk, kalyani. You should write in such a way that sivaraman should be tempted to write Konar Urai for it :). are you in the game?.]]]

    அந்தப் போட்டியில் நான் கலந்து கொள்வதாக இல்லை என்று ஏற்கெனவே வேறொரு பதிவில் நான் சொல்லியிருக்கிறேன்..!

    ReplyDelete
  15. [[[தண்டோரா said...
    நிற்காமல் நின்றான்........ என்ன நைனா அர்த்தம்...? ம்.. போங்க.. நமக்கு என்ன தொழில் கவிதையா?]]]

    அதுதான் கவிதை..

    புரிந்ததுபோலும் இருக்க வேண்டும்..

    புரியாததுபோலும் இருத்தல் வேண்டும்..

    ReplyDelete
  16. //அட போங்கப்பா..!

    இதைவிட சி்ன்னதுதான்னா நானும் டாஸ்மாக் சரக்கடிச்சாத்தான் வரும்..!//

    இது நல்ல யோசனையா இருக்கு... !!!!

    அப்போ சீக்கிரமா கவிதையை எதிர்பார்கலாம் !!! ;))))

    ReplyDelete
  17. போச்சுடா.... நையாண்டி நைனா இன்னொரு கவுஜ போடப்போறாரு

    ReplyDelete
  18. குடித்தவர் அருகில் வந்தவுடனேயே கவிஞராகி விட்டீர்கள்,பார்த்தீர்களா?இனிமேலாவது குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள்,சரவணான்.

    ReplyDelete
  19. /குடித்தவர் அருகில் வந்தவுடனேயே கவிஞராகி விட்டீர்கள்,பார்த்தீர்களா?இனிமேலாவது குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள்,சரவணான்.//

    ரிப்பீட்டேய்.. அப்படியில்லைன்னா எனக்காவது வாங்கி கொடுங்க.. அதுசரி.. கவித கூட நீளமாத்தான் எழுதுவீங்களா..?

    ReplyDelete
  20. அண்ணா மன்னிச்சுருங்க உங்களப் போய் தப்பா பேசிட்டேன்.
    இதப்போய் பாருங்க.

    http://tamilpukkal.blogspot.com/2009/06/2009.html

    ReplyDelete
  21. அண்ணே..ஹைக்கூ அருமை..என்ன கொஞ்சம் ஹைட்டுதான் கூட

    ReplyDelete
  22. அண்ணாத்த.. இதனை நாள்ல எல்லாரும் உங்கள 15 சீட்டர், 20 சீட்டர் பதிவர்னு சொன்னப்போ புரியாதஎனக்கு இன்னைக்கு நெஜமாவே அந்துபோச்சுபா..
    (முதல் கமெண்ட்டே இப்படி அமைந்ததற்கு சாரி பாஸு..)

    ReplyDelete
  23. [[[பதி said...

    //அட போங்கப்பா..! இதைவிட சி்ன்னதுதான்னா நானும் டாஸ்மாக் சரக்கடிச்சாத்தான் வரும்..!//

    இது நல்ல யோசனையா இருக்கு... !!!! அப்போ சீக்கிரமா கவிதையை எதிர்பார்கலாம் !!! ;))))]]]

    எப்படியோ என்னை குடிகாரனாக்கும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

    ஆனால் இந்த மீன் எந்த வலையிலும் சிக்காதாக்கும்..!

    ReplyDelete
  24. [[[Keith Kumarasamy said...
    போச்சுடா.... நையாண்டி நைனா இன்னொரு கவுஜ போடப்போறாரு///

    போடட்டுமே..

    கவிதைக்கு எதிர் கவிதை வந்தால்தான் கவிதைத் தொழில் வளரும்..

    ReplyDelete
  25. [[[ஷண்முகப்ரியன் said...
    குடித்தவர் அருகில் வந்தவுடனேயே கவிஞராகி விட்டீர்கள், பார்த்தீர்களா? இனிமேலாவது குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள், சரவணான்.]]]

    ஆஹா.. நல்ல அறிவுரை..

    தங்களுடைய சித்தப்படியே நடக்கிறேன். ஆனால் பின்பு நடக்க முடியாமல் போனால் தாங்குவதற்குத் தாங்கள் தயாரா..?

    ReplyDelete
  26. [[[Cable Sankar said...

    /குடித்தவர் அருகில் வந்தவுடனேயே கவிஞராகி விட்டீர்கள்,பார்த்தீர்களா?இனிமேலாவது குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள்,சரவணான்.//

    ரிப்பீட்டேய்.. அப்படியில்லைன்னா எனக்காவது வாங்கி கொடுங்க.. அதுசரி.. கவிதகூட நீளமாத்தான் எழுதுவீங்களா..?]]]

    யோவ் ஏய்யா இப்படி ஓசில சரக்கடிக்கணும்னே நினைக்குறீங்க..

    சொந்தக் காசுல சரக்கடிங்கய்யா. அப்பத்தான் வாந்தி வராது..!

    ReplyDelete
  27. [[[Sathia said...
    அண்ணா மன்னிச்சுருங்க உங்களப் போய் தப்பா பேசிட்டேன்.இதப் போய் பாருங்க.
    http://tamilpukkal.blogspot.com/2009/06/2009.html]]]

    இப்பப் புரியுதா தம்பி..

    நானெல்லாம் இந்த விஷயத்துல ஒரு சின்ன கொசுதான்..

    ReplyDelete
  28. [[[தண்டோரா said...
    அண்ணே.. ஹைக்கூ அருமை.. என்ன கொஞ்சம் ஹைட்டுதான் கூட]]]

    ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லலைன்னா தூக்கம் வராதே..

    எல்லாம் ஏத்தம்யா..!

    ReplyDelete
  29. [[[சுரேஷ் குமார் said...
    அண்ணாத்த.. இதனை நாள்ல எல்லாரும் உங்கள 15 சீட்டர், 20 சீட்டர் பதிவர்னு சொன்னப்போ புரியாதஎனக்கு இன்னைக்கு நெஜமாவே அந்துபோச்சுபா.. முதல் கமெண்ட்டே இப்படி அமைந்ததற்கு சாரி பாஸு..)]]]

    சீட்டர்னா இன்னா தம்பி..

    அத்த மொதல்ல சொல்லு.. அப்பால மெய்யாலுமே நீ வாழ்த்துறியா.? இல்ல பொடனில தட்டுறியான்னு தெரிஞ்சுக்குறேன்..!

    ReplyDelete
  30. நீங்க ஹைக்கூ தான எழுதியிருக்கீங்க..

    எப்புடி கண்டுபிடிச்சேன் பாத்திங்களா..

    //வாசல்புறத்தில்
    என்னுடைய
    செருப்புக்களே
    ஐந்து இருந்தன..!//

    5(?) உங்களுக்கு ராசியான நம்பருங்களா..

    உங்க ஹைக்கூவ
    படிச்சுட்டு நானும்
    வாசல்புறத்தில்
    என்னுடைய செருப்புகளை
    எண்ணிப் பார்க்கிறேன்..

    ;)

    ReplyDelete
  31. வெல்ல மண்டி நடிகை மேட்டரு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..? அதான் கவிதையா கொட்றீங்க..

    சும்மா கும்முன்னு இருக்கு.

    ReplyDelete
  32. \\அண்ணே..ஹைக்கூ அருமை..என்ன கொஞ்சம் ஹைட்டுதான் கூட\

    தண்டோராவை வழிமொழிகிறேன்.


    உ த அண்ணே, வெல்லமண்டி மேட்டர ஓப்பன் பண்ணுங்க. மண்டை காயுது

    ReplyDelete
  33. இன்று எங்கள் பகுதியில் மின் வெட்டு (ஏற்பட்டது அல்லது ஏற்படுத்தி விட்டார்கள்) அதனால் சற்று தாமதம். என்னவென்றால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மின் கம்பிகளையும் மற்றும் அது சம்பந்தமான மற்றவற்றையும் பரிசோதிக்க வேண்டுமாம். சரி நம் எல்லோருடைய பாதுகாப்பிற்குதானே என்று பேசாமல் இருந்து விட்டேன்.

    இந்த கவிதையின் மூலம் என்ன சொல்ல வருகிறீகள் என்றுதான் புரியவில்லை. பார்ப்பதற்குதான் நீளம். வரிகள் சிறிதாக இருப்பதால் நீளம் என்றும் சொல்ல முடியாது. எனக்கு கவிதை என்றாலே ஒரு வித வெறுப்பு. இருந்தாலும் தங்கள் மேல் உள்ள அபிமானத்தால் இதைப் படித்து முடித்தேன்.

    ReplyDelete
  34. //நீங்க கும்மி அடிக்கும் அனாநிகளிடம் பட்டப் பாடை பாடுன மாதிரி இருக்கு
    //

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  35. //சீட்டர்னா இன்னா தம்பி..

    அத்த மொதல்ல சொல்லு.. அப்பால மெய்யாலுமே நீ வாழ்த்துறியா.? இல்ல பொடனில தட்டுறியான்னு தெரிஞ்சுக்குறேன்..!//

    அதாங்க 15/20 டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் வெச்சி பதிவு போடுறீங்களாம்!

    ஒரே நேரத்துல ஒரு அலுவலகத்தில் எத்தனை பேர் அமர முடியும் என்பதையே சீட்டர் என்று குறிப்பிடுவார்கள்!

    உதாரணம் : 50 சீட்டர்/100 சீட்டர்!

    ReplyDelete
  36. //அதுசரி.. கவிதகூட நீளமாத்தான் எழுதுவீங்களா..?]]]//

    அட வந்தியெடுத்தாக் கூட வண்டி வண்டியாத்தான் எடுப்பாரு!

    ReplyDelete
  37. ஒரு கவிதையையே கவிதை புக் போடும் அளவுக்கு எழுதிய உண்மைத்தமிழன் அண்ணன் வாழ்க

    ReplyDelete
  38. [[[தீப்பெட்டி said...

    நீங்க ஹைக்கூதான எழுதியிருக்கீங்க..

    எப்புடி கண்டுபிடிச்சேன் பாத்திங்களா..

    //வாசல்புறத்தில்
    என்னுடைய
    செருப்புக்களே
    ஐந்து இருந்தன..!//

    5(?) உங்களுக்கு ராசியான நம்பருங்களா..

    உங்க ஹைக்கூவ
    படிச்சுட்டு நானும்
    வாசல்புறத்தில்
    என்னுடைய செருப்புகளை
    எண்ணிப் பார்க்கிறேன்..

    ;)]]]

    அப்போ ஹைக்கூ நான் இத்தனை நாளா நினைச்சிட்டிருந்தது எல்லாம் பொய்யா..?

    ReplyDelete
  39. [[[வண்ணத்துபூச்சியார் said...

    வெல்ல மண்டி நடிகை மேட்டரு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா..? அதான் கவிதையா கொட்றீங்க..
    சும்மா கும்முன்னு இருக்கு.]]]

    ஆமாங்க பூச்சியாரே..

    உங்களை மாதிரியே கும்முன்னுதான் இருக்கு..!

    ReplyDelete
  40. [[[முரளிகண்ணன் said...
    \\அண்ணே.. ஹைக்கூ அருமை.. என்ன கொஞ்சம் ஹைட்டுதான் கூட\

    தண்டோராவை வழிமொழிகிறேன்.
    உ த அண்ணே, வெல்லமண்டி மேட்டர ஓப்பன் பண்ணுங்க. மண்டை காயுது.]]]

    அதெப்படி அவ்ளோ ஈஸியா சொல்லிர முடியுங்களா மு.க..?

    தட்சணை வையுங்க..

    ReplyDelete
  41. [[[ananth said...
    இந்த கவிதையின் மூலம் என்ன சொல்ல வருகிறீகள் என்றுதான் புரியவில்லை. பார்ப்பதற்குதான் நீளம். வரிகள் சிறிதாக இருப்பதால் நீளம் என்றும் சொல்ல முடியாது. எனக்கு கவிதை என்றாலே ஒரு வித வெறுப்பு. இருந்தாலும் தங்கள் மேல் உள்ள அபிமானத்தால் இதைப் படித்து முடித்தேன்.]]]

    ஆஹா ஆனந்த் ஸார்..

    தங்களுடைய பொறுமைக்கு எனது நன்றி..

    சொந்த வந்த விஷயத்தைத்தான் கடைசியில் சொல்லியிருக்கிறேனே..?

    ReplyDelete
  42. [[[நாமக்கல் சிபி said...

    //நீங்க கும்மி அடிக்கும் அனாநிகளிடம் பட்டப் பாடை பாடுன மாதிரி இருக்கு//

    ரிப்பீட்டேய்!]]]

    நீயே அனானியா வந்து திட்டிட்டு இப்போ நீயே அதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்குறியா..?

    ReplyDelete
  43. //பினாத்தல் சுரேஷ் said...
    அருமையான நீள்கவிதை! //

    அண்ணே, பாருங்க இந்த பினாத்தலார, நீங்க துக்குனூண்டா எழுதுன கவிதையப் போயி நீள் கவிதைன்னு சொல்றாரு.

    ReplyDelete
  44. [[[நாமக்கல் சிபி said...

    //சீட்டர்னா இன்னா தம்பி..

    அத்த மொதல்ல சொல்லு.. அப்பால மெய்யாலுமே நீ வாழ்த்துறியா.? இல்ல பொடனில தட்டுறியான்னு தெரிஞ்சுக்குறேன்..!//

    அதாங்க 15/20 டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் வெச்சி பதிவு போடுறீங்களாம்!

    ஒரே நேரத்துல ஒரு அலுவலகத்தில் எத்தனை பேர் அமர முடியும் என்பதையே சீட்டர் என்று குறிப்பிடுவார்கள்!

    உதாரணம் : 50 சீட்டர்/100 சீட்டர்!]]]

    அடப்பாவிகளா..

    நான் எழுதினா மட்டம் ஏன்யா இப்படி குண்டக்க மண்டக்க எதையாவது நினைச்சு குழம்பிக்கிறீங்க..?!!

    ReplyDelete
  45. [[[நாமக்கல் சிபி said...

    //அதுசரி.. கவிதகூட நீளமாத்தான் எழுதுவீங்களா..?]]]//

    அட வந்தியெடுத்தாக் கூட வண்டி வண்டியாத்தான் எடுப்பாரு!]]]

    அப்ப இது வாந்தியா..? கவிதை இல்லியா..?

    போச்சுடா..!

    அவன்தான்யா குடிச்சான்.. நான் குடிக்கலியேய்யா.. பின்ன எப்படி எனக்கு வாந்தி வரும்..?!!!

    ReplyDelete
  46. [[[செந்தழல் ரவி said...
    ஒரு கவிதையையே கவிதை புக் போடும் அளவுக்கு எழுதிய உண்மைத்தமிழன் அண்ணன் வாழ்க]]]

    வந்துட்டான்யா சூரப்புலி..

    அல்லாரும் ஒரு நினைப்பாத்தான் திரியறான்ங்க..!

    ReplyDelete
  47. [[[ஜோசப் பால்ராஜ் said...

    //பினாத்தல் சுரேஷ் said...
    அருமையான நீள்கவிதை! //

    அண்ணே, பாருங்க இந்த பினாத்தலார, நீங்க துக்குனூண்டா எழுதுன கவிதையப் போயி நீள் கவிதைன்னு சொல்றாரு.]]]

    தம்பி ஜோசப்பு..

    உள்குத்து நல்லாவே புரியுது..

    ஆடிக்கொரு தடவை.. அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பி்ன்னூட்டம் போடுறீங்க.. அதையும் இப்படித்தான் போடணுமா..?

    முருகா..

    ReplyDelete
  48. ஏன் கண்ணுகளா..?

    இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்களே..

    ஒருத்தருக்குக்கூடவா கருவிப்பட்டைல குத்தணும்னு தோணலை..

    ஏன் ராசா இப்படி சோதிக்கிறீங்க..?

    ஒண்ணே ஒண்ணே கண்ணே ஒண்ணு ஒண்ணுதான் வாங்கிருக்கு இந்தப் பதிவு.. அதையும் நான்தான் குத்தினேன்.. வெளில சொன்னா வெக்கக்கேடுதான்.. ஆனா சொல்ல வைக்குறீங்களே..!

    ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு சோம்பேறித்தனம் ஆகாதுப்பா..!

    ReplyDelete
  49. 49-லயே நின்னு போனா நல்லாயிருக்காது. அதுனால இந்த அம்பதாவது கமெண்ட்டை நானே போட்டுக்குறேன்..!

    ReplyDelete
  50. அண்ணாச்சி,
    உங்க கிட்ட இருக்கிற அந்த சாஃப்ட்வேர் குடுங்களேன். கதைய அப்படியே வரிக்கு வரி கீழ அனுப்பிச்சு கவுஜ ஆக்கிடுச்சு பாருங்களேன். இதையே ஏன் நீங்க கதைப் போட்டிக்கு அனுப்பப் பிடாதுன்னு சொல்லுங்க

    ReplyDelete
  51. ஆமாம் ஐந்து செருப்புன்னா?ஜோடிக்கு ஒண்ணு குறையுதே?

    ReplyDelete
  52. அண்ணே கவிதை எங்க.... திறந்தோன நேரா பின்னூட்ட பாக்ஸ் தெரியுதே....

    ReplyDelete
  53. //இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்களே..

    ஒருத்தருக்குக்கூடவா கருவிப்பட்டைல குத்தணும்னு தோணலை..

    ஏன் ராசா இப்படி சோதிக்கிறீங்க..?//

    நெகடிவ் குத்துதானே கேக்குறீங்க?

    ReplyDelete
  54. [[[Jeeves said...

    அண்ணாச்சி, உங்ககிட்ட இருக்கிற அந்த சாஃப்ட்வேர் குடுங்களேன். கதைய அப்படியே வரிக்கு வரி கீழ அனுப்பிச்சு கவுஜ ஆக்கிடுச்சு பாருங்களேன். இதையே ஏன் நீங்க கதைப் போட்டிக்கு அனுப்பப்பிடாதுன்னு சொல்லுங்க.]]]

    ஜீவ்ஸ் தம்பி..

    இதை நான் போட்டிக்கு அனுப்பினா வார்த்தைகள் கூட இருக்குன்னு அதிகாரத்தின் அதிகார வர்க்கக் குரலோடு பதிவை தள்ளுபடி செய்வார்கள்..

    அதனால் இதனை அனுப்ப மாட்டேன்..

    ReplyDelete
  55. [[[தண்டோரா said...

    ஆமாம் ஐந்து செருப்புன்னா? ஜோடிக்கு ஒண்ணு குறையுதே?]]]

    ஐயையோ..

    டாஸ்மாக் கடை பார்ட்டிகன்றதை கரெக்ட்டா காட்டுறாங்கப்பா..!

    ReplyDelete
  56. [[[VIKNESHWARAN said...
    அண்ணே கவிதை எங்க.... திறந்தோன நேரா பின்னூட்ட பாக்ஸ் தெரியுதே....]]]

    அதெப்படி கண்ணு தெரியும்..?

    ReplyDelete
  57. [[[நாமக்கல் சிபி said...

    //இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 பேர் பின்னூட்டம் போட்டிருக்கீங்களே..

    ஒருத்தருக்குக்கூடவா கருவிப்பட்டைல குத்தணும்னு தோணலை..

    ஏன் ராசா இப்படி சோதிக்கிறீங்க..?//

    நெகடிவ் குத்துதானே கேக்குறீங்க?]]]

    அப்படியாவது குத்தித் தொலையேன்..

    என்ன குறைஞ்சா போயிட்ட?

    சோம்பேறி.. சோம்பேறி.. சோம்பேறி..

    ReplyDelete
  58. [[[மங்களூர் சிவா said...
    ஹைக்கூ ஜூப்பரு!!]]]

    ரொம்ப நாள் கழிச்சு வர்றியே..

    இது ஜூப்பருப்பூ..!

    ReplyDelete
  59. தமிழ்மணத்தில் ஒன்றும் குத்த முடியவில்லை. இன்று குத்தினால் அடுத்து ஒரு வாரம் சென்றுதான் குத்த முடிகிறது. இதற்கு தீர்வு? 1) உங்கள் முகத்தில் குத்தலாம் 2) தமிழ்மணத்தின் பொறுப்பாளர்கள் முகத்தில் குத்தலாம்.

    ReplyDelete
  60. /
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    [[[மங்களூர் சிவா said...
    ஹைக்கூ ஜூப்பரு!!]]]

    ரொம்ப நாள் கழிச்சு வர்றியே..

    இது ஜூப்பருப்பூ..!
    /

    அண்ணே நீங்க எளுதற ச்சின்ன ச்சின்ன பதிவுகளுக்கு வரதான் முடியும் படிக்கவா முடியும் ஆப்பீஸ்ல வார கணக்குல லீவு குடுக்க மாட்டிக்கிறாங்களே

    :))))))))))))

    ReplyDelete
  61. குத்தியாச்சு.. குத்தியாச்சு..

    ReplyDelete
  62. [[[ananth said...
    தமிழ்மணத்தில் ஒன்றும் குத்த முடியவில்லை. இன்று குத்தினால் அடுத்து ஒரு வாரம் சென்றுதான் குத்த முடிகிறது. இதற்கு தீர்வு? 1) உங்கள் முகத்தில் குத்தலாம் 2) தமிழ்மணத்தின் பொறுப்பாளர்கள் முகத்தில் குத்தலாம்.]]]

    ஆலோசனை எண் 1-யே தேர்வு செய்யுங்கள்..

    எப்போது வருகிறீர்கள்..?

    ReplyDelete
  63. [[[மங்களூர் சிவா said...

    /உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[மங்களூர் சிவா said...
    ஹைக்கூ ஜூப்பரு!!]]]
    ரொம்ப நாள் கழிச்சு வர்றியே..
    இது ஜூப்பருப்பூ..!/

    அண்ணே நீங்க எளுதற ச்சின்ன ச்சின்ன பதிவுகளுக்கு வரதான் முடியும் படிக்கவா முடியும் ஆப்பீஸ்ல வார கணக்குல லீவு குடுக்க மாட்டிக்கிறாங்களே
    :))))))))))))]]]

    சரி.. என் நேரம் அப்படியிருக்கு.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?

    நேரம் சரியில்லைன்னா யானைக்கே அடி சறுக்குமாம்..!

    ReplyDelete
  64. [[[தீப்பெட்டி said...
    குத்தியாச்சு.. குத்தியாச்சு..]]]

    நன்றி தீப்பெட்டி ஸார்..

    நன்றி தீப்பெட்டி ஸார்..

    ReplyDelete
  65. சூப்பர் நீண்ட கவிதை

    ReplyDelete