Pages

Monday, June 01, 2009

புதிய கொள்ளைக்கூட்டக் கும்பல் - சில புள்ளி விபரங்கள்

01-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அடுத்து ஐந்தாண்டுகளுக்கு நாட்டைக் கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றிருக்கும் கும்பல் பதவியேற்றுவிட்டது.

தனித்தனிக் கட்சிகளாகக் கொள்ளையடித்தால் அது நாளை பிரச்சினையாகும் என்பதால் கூட்டுக் கொள்ளைக்கு அவர்களே தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கையில் கத்தியை எடுத்துவிட்டார்கள்.

தமிழினத்தின் முதல் துரோகியான கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக கோபாலபுரத்தில் இருந்து அண்ணா சமாதிவரைக்கும் மட்டுமே வர முடிந்தவர், இப்போது தனது மகனுக்கு பேரனுக்கு, அடிப்பொடிகளுக்கு கொள்ளை பதவி வேண்டும் என்பதால் டில்லிவரை காவடி எடுத்து தான் நினைத்ததை சாதித்துவிட்டார்.


தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவரான அவருடைய தவப்புதல்வர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் ஒருவர் என்பதுதான் இந்த 15-வது லோக்சபாவின் திருஷ்டிப் பொட்டு. இதற்கு மேல் வேறொரு சிறப்பு இந்தியத் திருநாட்டுக்கு எதுவுமே தேவையில்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன்.

பதவியேற்றிருக்கும் கும்பல்களின் முழுப் பட்டியல் இது..

கேபினட் அமைச்சர்கள்

1.மன்மோகன்சிங் - பிரதமர்

2.பிரணாப் முகர்ஜி - நிதி

3.ஷரத் பவார் - வேளாண்மை

4.ஏ.கே.அந்தோணி - பாதுகாப்பு

5.ப.சிதம்பரம் - உள்துறை

6.மம்தா பானர்ஜி - ரயில்வே

7.எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவு

8.குலாம் நபி ஆசாத் - சுகாதாரம், குடும்ப நலம்

9.சுஷீல் குமார் ஷிண்டே - மின்சாரம்

10.எம்.வீரப்ப மொய்லி - சட்டம், நீதி

11.எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற மேம்பாடு

12.கமல் நாத் - தரைவழிப் போக்குவரத்து

13.வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்

14.முரளி தியோரா - பெட்ரோலியம்

15.கபில் சிபல் - மனிதவள மேம்பாடு

16.அம்பிகா சோனி - தகவல் ஒளிபரப்பு

17.பி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு மாநில மேம்பாடு

18.ஆனந்த் ஷர்மா - வர்த்தகம், தொழில்துறை

19.சி.பி.ஜோஷி - கிராம மேம்பாடு

20.வீரபத்ரசிங் - உருக்குத் துறை

21. விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரக தொழில் துறை

22. பரூக் அப்துல்லா - புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறை

23. தயாநிதி மாறன் - ஜவுளி

24. ஆ.ராசா - தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

25. மல்லிகார்ஜூனே கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு

26. குமாரி செல்ஜா - வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா

27. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்

28. எம்.எஸ்.கில் - இளைஞர் நலன், விளையாட்டு

29. ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து

30. பவன்குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்

31. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி

32. காந்திலால் புரியா - பழங்குடியினர் நலன்

33. மு.க. அழகிரி - ரசாயனம், உரம்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

34. பிரஃபுல் படேல் - விமானப் போக்குவரத்து

35. பிரித்விராஜ் சவாண் - அறிவியல், தொழில் நுட்பம்

36. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல்

37. சல்மான குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்

38. தின்ஷா படேல் - குறு, சிறு தொழில்கள்

39. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்

40. கிருஷ்ணா தீரத் - பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

இணையமைச்சர்கள்

41.இ. அகமது - ரயில்வே

42.வி. நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்

43.ஸ்ரீகாந்த் ஜேனா - ரசாயனம், உரம்

44. முல்லபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை

45. புரந்தேஸ்வரி - மனிதவள மேம்பாடு

46.பனபாக லட்சுமி - ஜவுளி

47.அஜய் மாரெகன் - உள்துறை

48.கே.எச்.முனியப்பா - ரயில்வே

49.நமோ நாராயண் மீனா - நிதி

50.ஜோதிராதித்ய சிந்தியா - தொழில், வர்த்தகம்

51.ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

52.சாய் பிரதாப் - உருக்கு

53.குருதாஸ் காமத் - தொலைத்தொடர்புத் துறை, ஐ.டி.

54.பல்லம் ராஜு - ராணுவம்

55.மகாதேவ் கண்டேலா - நெடுஞ்சாலை, தரைவழி போக்குவரத்து

56.ஹரீஷ் ராவத் - தொழிலாளன் நலன், வேலை வாய்ப்பு

57.கே.வி.தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது
விநியோகம்


58.சுவுகதா ராய் - நகர்ப்புற மேம்பாடு

59.சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு

60.தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலம்

61.சுல்தான் அகமது - சுற்றுலா

62.முகுல் ராய் - கப்பல்

63.மோகன் ஜாதுவா - தகவல் ஒளிபரப்பு

64.எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - நிதி

65.டி.நெப்போலியன் - சமூக நீதி

66.எஸ். ஜெகத்ரட்சகன் - தகவல் ஒளிபரப்பு

67.எஸ். காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலம்

68.பிரீனித் கவுர் - வெளியுறவு

69.சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு, ஐ.டி.

70.சசி தரூர் - வெளியுறவு

71.பரத்சிங் சோலங்கி - மின்சாரம்

72.துஷார்பாய் செளத்ரி - பழங்குடியினர் நலம்

73.அருண் யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு

74.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் - கனரகம் பொதுத்துறை

75.ஆர்.பி.என். சிங் - தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

76.வின்சென்ட் பாலா - நீர்வளம்

77.பிரதீப் ஜெயின் - கிராம மேம்பாடு

78.அகதா சங்மா - கிராம மேம்பாடு

தற்போதைக்கு இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு 78 பேர் தலைமையேற்றுள்ளனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி மத்திய அமைச்சரவையில் 82 அமைச்சர்கள் வரையிலும் இருக்கலாமாம். அப்படியானால் 'இத்தாலி அம்மா' மனம் வைத்தால் மேலும் 4 பேர் கூட்டுக் கொள்ளையில் இடம் பெறலாம்.

இதில் சில சுவாரயஸ்யமான அம்சங்களாக பத்திரிகைகளில் நான் படித்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்..?

இதில் 206 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 கேபினட் அமைச்சர்கள், 6 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 26 இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 60 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

18 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.க.வுக்கு 3 கேபினட் மற்றும் 4 இணை அமைச்சர்கள் என்று 7 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

9 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 1 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரும், 1 இணை அமைச்சரும் உள்ளனர்.

19 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 6 இணை அமைச்சர்களும் கிடைத்துள்ளனர்.

3 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் கேரள முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இணை அமைச்சர் பதவி கிட்டியிருக்கிறது.

வயசான பார்ட்டிகதான் அதிகம்..!

ஏதோ இளைய சமுதாயம்தான் இந்தியாவை தள்ளிக் கொண்டு போகிறது என்று பலரும் சரக்கடிக்காமலேயே சரக்கடித்த போதையில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் இந்த அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கையில் வைத்திருக்கும் 27 அமைச்சர்களின் வயது 65-க்கும் மேல். சாகுறவரைக்கும் பதவியை விட மாட்டோம் என்று வெறி பிடித்து அலைவதில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை என்று நினைக்கிறேன்.

புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாதான் இந்த அமைச்சரவையிலேயே மிக அதிக வயதானவர். ஜஸ்ட் 77தான். மிகக் குறைந்த வயதுடையவர் மேகலாயவில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசுதாசங்மா. இவரது வயது 28.

மாநில வாரியாக அமைச்சர்களின் பிரதிநிதித்துவம்

மாநில வாரியாக பட்டியலிட்டுப் பார்த்தால்

ஆந்திரா - 1 கேபினட் அமைச்சர், 5 இணை அமைச்சர்கள்

அசாம் - 2 கேபினட் அமைச்சர்கள்

பீகார் - 1 கேபினட் அமைச்சர்

குஜராத் - 3 இணை அமைச்சர்கள்

அரியானா - 1 கேபினட் அமைச்சர்

இமாச்சலப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள்

காஷ்மீர் - 2 கேபினட் அமைச்சர்கள்

ஜார்கண்ட் - 1 கேபினட் அமைச்சர்

கர்நாடகா - 3 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

கேரளா - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மத்தியப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மகாராஷ்டிரா - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மேகாலயா - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

ஒரிசா - 1 இணை அமைச்சர்

பஞ்சாப் - 2 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

ராஜஸ்தான் - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

தமிழ்நாடு - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

உத்தரண்ட் - 1 இணை அமைச்சர்

உத்தரப்பிரதேசம் - 1 இணை அமைச்சர்

மேற்குவங்கம் - 2 கேபினட் அமைச்சர்கள், 6 இணை அமைச்சர்கள்

டில்லி - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

புதுவை - 1 இணை அமைச்சர்

சண்டிகர் - 1 இணை அமைச்சர்

அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் பதவிகள் கிட்டவில்லை. அதேபோல் யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகியவைகளுக்கும் அமைச்சர் பதவி ஹி..ஹி..

இந்த அமைச்சரவைப் பட்டியலில் 5 பேர் முஸ்லீம்கள், 3 பேர் கிறிஸ்தவர்கள். மிச்சம் மீதி இருப்பவர்களில் 10 பேர் ஆதி திராவிடர்கள்.

பதவி உயர்வு

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 இணை, துணை அமைச்சர்களுக்கு இந்த முறை கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இணை அமைச்சர்களாக இருந்த ஜி.கே.வாசன், பவன்குமார் பன்சல், சுபோத்காந்த் சகாய், குமாரி செல்ஜா, எம்.எஸ்.கில், கான்டிலால் புரியா ஆகியோர் இந்த முறை கேபினட் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இருந்த பிரகாஷ்ஜெய்ஸ்வால், ஜெய்ராம் ரமேஷ், பிரித்விராஜ் சவான், தின்ஷா படேல் ஆகியோருக்கு இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேபினட் அமைச்சர்களான முன்னாள் முதல்வர்கள்..!

இந்த அமைச்சரவையில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம்நபிஆசாத், கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்களான சரத்பவார், சுசில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ்தேஷ்முக் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முடிந்த அளவுக்கு போட்ட காசை அள்ள வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பதவிக்கு வந்திருக்கும் இவர்களைத் தட்டிக் கேட்கவோ, எதிர்த்துப் பேசவோ இந்தியாவில் எந்த ஒரு அமைப்போ, அதிகாரமோ இல்லையாததால் நான் எனது கோரிக்கையை கெஞ்சலாகவே இவர்களிடம் வைக்கிறேன்.

கொஞ்சமா சுரண்டுங்கப்பா..!

மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

என்ன நான் சொல்றது..?

60 comments:

  1. //கொஞ்சமா சுரண்டுங்கப்பா..!

    மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

    //

    ஐ லைக் திஸ்!

    ReplyDelete
  2. தமிழ் நாட்டுக்குத்தான் அதிகம் போல..

    ReplyDelete
  3. எவன் எவன்டியோ திட்டுவாங்கி
    ரா பகலா தூக்கத்தை விட்டு இவங்களுக்கு வரி தந்தா

    எந்த ---------------------- பசங்க நோகாம கொள்ளை அடிகுறங்க

    எந்த எல்லாம் பார்த்த வரி ஏன் தரணும் தோனுது

    வாழ்க ஜனநாயகம் வளர்க மக்கள் ஆட்சி

    ReplyDelete
  4. தமிழ்நாட்டிற்க்கும் மகராஷ்டிரத்திற்கும் சம பங்கு. மற்றவர்களுக்கு குறைவாக இருக்கிறது. அரசியலில் மட்டுமா சுரண்டுகிறார்கள். இது எல்லா துறைகளிலும் இருக்கிறது. என்ன அரசியலில் எது நடந்தாலும் மக்களுக்கு தெரிந்து விடுகிறது. அவ்வளவே. எப்படியோ போகட்டும். மக்களுக்கு நல்லதும் (சேவை) செய்வார்கள் என நம்புவோம்.

    வயதானவர்கள் அதிகம்தான் ஆனால் முந்தைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை. வாஜ்பாய் ஏன் அதற்கு முந்தைய காலத்திலிருந்து கவணித்தால் இது தெரியும்.

    இறுதியாக ஒன்று. கட்டுரை ஒரு சார்பாகவே இருக்கிறது. நடுநிலையோடு எழுத முற்படுங்கள். தங்கள் எழுத்துகளுக்கு இன்னும் வரவேற்பு இருக்கும்.

    ReplyDelete
  5. உண்மைத்தமிழன் அண்ணாச்சி வீட்டுக்கு ஒரு டாடா சுமோ பார்சல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  6. உண்மை தமிழன்,
    அருமை, ஆச்சரியம், ஒவ்வொறு வார்த்தையிலும் அழுகு, ஆழ்ந்த கருத்துகள்..ஆனால் இந்த கொள்ளை கூட்டத்தை அழிக்கவோ அல்லது அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ உங்களிடம் மாற்று வழிமுறைகள் உள்ளதா? ஏதாவது செய்யும் திட்டம் உள்ளதா? வெறும் பதிவு மட்டும் தானா(னே)?

    ReplyDelete
  7. கொள்ளை கும்பலா! உங்க அரசியல் அரிப்பு தீரும் வரை செங்கள் வச்சி தேச்சிக்கவும்!

    ReplyDelete
  8. 206 சீட் ஜெயித்தும் காங்கிரசுக்கு பயம் போகவில்லை.

    ReplyDelete
  9. //என் இனிய வலைத்தமிழ் மக்களே..!//

    என்னா வேணும்? :)

    ReplyDelete
  10. //அடுத்து ஐந்தாண்டுகளுக்கு நாட்டைக் கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றிருக்கும் கும்பல் பதவியேற்றுவிட்டது.//

    அப்டியா? இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடிச்சா? எப்போ? :)

    ReplyDelete
  11. //தனித்தனிக் கட்சிகளாகக் கொள்ளையடித்தால் அது நாளை பிரச்சினையாகும் என்பதால் கூட்டுக் கொள்ளைக்கு அவர்களே தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கையில் கத்தியை எடுத்துவிட்டார்கள்.//

    வாவ்.. அற்புதமான கவிதை.. கவித்துவமான வார்த்தைப் பிரயோகங்கள். :)

    ReplyDelete
  12. //தமிழினத்தின் முதல் துரோகியான கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக கோபாலபுரத்தில் இருந்து அண்ணா சமாதிவரைக்கும் மட்டுமே வர முடிந்தவர், இப்போது தனது மகனுக்கு பேரனுக்கு, அடிப்பொடிகளுக்கு கொள்ளை பதவி வேண்டும் என்பதால் டில்லிவரை காவடி எடுத்து தான் நினைத்ததை சாதித்துவிட்டார்.//

    பால் காவடியா? பன்னீர்க் காவடியா? புஷ்பக் காவடியா? டில்லியில அப்பன் முருகன் கோவில் இருக்கா?:)

    ReplyDelete
  13. //தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவரான அவருடைய தவப்புதல்வர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் ஒருவர் என்பதுதான் இந்த 15-வது லோக்சபாவின் திருஷ்டிப் பொட்டு. இதற்கு மேல் வேறொரு சிறப்பு இந்தியத் திருநாட்டுக்கு எதுவுமே தேவையில்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன்.//

    போதும் போதும்.. நன்றி.. ;)

    ReplyDelete
  14. அண்ணே.. ரொம்ப நன்றிங்க்ணே.. இந்த மந்திரிமாருங்க லிஸ்ட எப்டிதான் தமிழ்ல டைப்பறதுன்னு கவலைப் பட்டுட்டு இருந்தேன். உங்க அனுமதி இல்லாமலே விரவில் என் பதிவில் போடப் போறேன். :)

    ReplyDelete
  15. "எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

    என்ன நான் சொல்றது..?"

    :-))))))))))))))))))))

    ReplyDelete
  16. It seems Kalaignar has allocated all three cabinet berths to his family. Do you know anything about it?

    ReplyDelete
  17. //மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!//

    நல்லா சொன்னிங்க பாஸ்..

    :)))

    ReplyDelete
  18. //தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவரான அவருடைய தவப்புதல்வர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் ஒருவர் என்பதுதான்//

    உங்க ஊட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.....

    ReplyDelete
  19. [[Raju said...
    Super! ;-)]]

    மிக்க நன்றி ராஜூ..

    ReplyDelete
  20. [[[நாமக்கல் சிபி said...

    //கொஞ்சமா சுரண்டுங்கப்பா..!

    மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

    //

    ஐ லைக் திஸ்!]]]

    தேங்க்ஸ்டா கண்ணா..!

    ReplyDelete
  21. [[[லோகு said...
    தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் போல..]]]

    அதிகமான எம்.பி.க்களையும் இங்கிருந்துதானே கொடுத்திருக்கிறார்கள். அதுதான்..!

    ReplyDelete
  22. [[[muthukumar said...

    எவன் எவன்டியோ திட்டுவாங்கி
    ரா பகலா தூக்கத்தை விட்டு இவங்களுக்கு வரி தந்தா

    எந்த ---------------------- பசங்க நோகாம கொள்ளை அடிகுறங்க

    எந்த எல்லாம் பார்த்த வரி ஏன் தரணும் தோனுது

    வாழ்க ஜனநாயகம் வளர்க மக்கள் ஆட்சி]]]

    வரி கட்டும்போதுதான் கோபம் வருது..

    எவன் வீட்டுக் காசை எடுத்து எவனுக்குக் கொடுத்து இவனுக ஆட்சில உக்கார்றானுகன்னு..

    உண்மைதான் முத்துக்குமார்..

    ReplyDelete
  23. [[[ananth said...

    தமிழ்நாட்டிற்க்கும் மகராஷ்டிரத்திற்கும் சம பங்கு. மற்றவர்களுக்கு குறைவாக இருக்கிறது. அரசியலில் மட்டுமா சுரண்டுகிறார்கள். இது எல்லா துறைகளிலும் இருக்கிறது. என்ன அரசியலில் எது நடந்தாலும் மக்களுக்கு தெரிந்து விடுகிறது. அவ்வளவே. எப்படியோ போகட்டும். மக்களுக்கு நல்லதும் (சேவை) செய்வார்கள் என நம்புவோம்.]]]

    நானும் நம்புகிறோம்.. வேறு வழியில்லாத காரணத்தினால்..!

    [[வயதானவர்கள் அதிகம்தான் ஆனால் முந்தைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை. வாஜ்பாய் ஏன் அதற்கு முந்தைய காலத்திலிருந்து கவணித்தால் இது தெரியும்.]]

    பரவாயில்லை.. அர்ஜூன்சிங்கை கழட்டிவிட்டார்களே.. அதுவரைக்கும் சந்தோஷம்..

    [[இறுதியாக ஒன்று. கட்டுரை ஒரு சார்பாகவே இருக்கிறது. நடுநிலையோடு எழுத முற்படுங்கள். தங்கள் எழுத்துகளுக்கு இன்னும் வரவேற்பு இருக்கும்.]]]

    ஐயோ முருகா.. நான் நடுநிலையாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்..

    தாங்கள் வேறாகச் சொல்கிறீர்கள்..!

    ReplyDelete
  24. [[[ராஜா | KVR said...

    உண்மைத்தமிழன் அண்ணாச்சி வீட்டுக்கு ஒரு டாடா சுமோ பார்சல்ல்ல்ல்ல்]]]

    டாட்டா சுமோவே பார்சல்ன்னா.. அதுல வர்றவங்களும், கொண்டு வர்றதையும் எந்த லிஸ்ட்டுல சேர்க்கிறது கண்ணா..!

    ReplyDelete
  25. [[[அக்னி பார்வை said...

    உண்மை தமிழன், அருமை, ஆச்சரியம், ஒவ்வொறு வார்த்தையிலும் அழுகு, ஆழ்ந்த கருத்துகள்.. ஆனால் இந்த கொள்ளை கூட்டத்தை அழிக்கவோ அல்லது அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ உங்களிடம் மாற்று வழிமுறைகள் உள்ளதா? ஏதாவது செய்யும் திட்டம் உள்ளதா? வெறும் பதிவு மட்டும்தானா(னே)?]]]

    என்ன செய்வது..?

    என்னால் முடிந்தது இவ்வளவுதான்..!

    ReplyDelete
  26. [[[அபி அப்பா said...
    கொள்ளை கும்பலா! உங்க அரசியல் அரிப்பு தீரும்வரை செங்கள் வச்சி தேச்சிக்கவும்!]]]

    அன்பான வழிகாட்டலுக்கு நன்றி..

    உடன்பிறப்புகள் வேறென்ன சொல்வார்கள்..?!!!

    ReplyDelete
  27. [[[வாழவந்தான் said...

    206 சீட் ஜெயித்தும் காங்கிரசுக்கு பயம் போகவில்லை.]]]

    மெஜாரிட்டிக்கு 66 கம்மியாச்சே.. பயம் இருக்காதா என்ன..?

    ReplyDelete
  28. [[[$anjaiGandh! said...

    //என் இனிய வலைத்தமிழ் மக்களே..!//

    என்னா வேணும்? :)]]]

    கொஞ்சம் தவிடும், புண்ணாக்கும் கொடுத்தா மாட்டோட மாட்டா எங்களையும் கணக்குல எடுத்துக்கலாம்..!

    ReplyDelete
  29. [[[$anjaiGandh! said...

    //அடுத்து ஐந்தாண்டுகளுக்கு நாட்டைக் கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றிருக்கும் கும்பல் பதவியேற்றுவிட்டது.//

    அப்டியா? இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிடிச்சா? எப்போ?:)]]]

    லீகுவான்யூ மாதிரி ஒரு தலைவன் இந்தியாவிற்குக் கிடைத்துவிட்டால்.. அன்றைக்கு..!

    ReplyDelete
  30. [[[$anjaiGandh! said...

    //தனித்தனிக் கட்சிகளாகக் கொள்ளையடித்தால் அது நாளை பிரச்சினையாகும் என்பதால் கூட்டுக் கொள்ளைக்கு அவர்களே தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு கையில் கத்தியை எடுத்துவிட்டார்கள்.//

    வாவ்.. அற்புதமான கவிதை.. கவித்துவமான வார்த்தைப் பிரயோகங்கள். :)]]]

    தேங்க்யூ.. தேங்க்யூ.. தேங்க்ஸ் வெரிமச்..

    ReplyDelete
  31. [[[$anjaiGandh! said...

    //தமிழினத்தின் முதல் துரோகியான கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக கோபாலபுரத்தில் இருந்து அண்ணா சமாதிவரைக்கும் மட்டுமே வர முடிந்தவர், இப்போது தனது மகனுக்கு பேரனுக்கு, அடிப்பொடிகளுக்கு கொள்ளை பதவி வேண்டும் என்பதால் டில்லிவரை காவடி எடுத்து தான் நினைத்ததை சாதித்துவிட்டார்.//

    பால் காவடியா? பன்னீர்க் காவடியா? புஷ்பக் காவடியா? டில்லியில அப்பன் முருகன் கோவில் இருக்கா?:)]]]

    இவர் எடுத்தது தமிழினத் துரோகக் காவடி..!

    ReplyDelete
  32. [[[$anjaiGandh! said...

    //தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவரான அவருடைய தவப்புதல்வர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் ஒருவர் என்பதுதான் இந்த 15-வது லோக்சபாவின் திருஷ்டிப் பொட்டு. இதற்கு மேல் வேறொரு சிறப்பு இந்தியத் திருநாட்டுக்கு எதுவுமே தேவையில்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன்.//

    போதும் போதும்.. நன்றி.. ;)]]]

    என்ன அவ்வளவு கூச்ச சுபாவமா இவங்க..

    ஆச்சரியமா இருக்கு..!

    ReplyDelete
  33. [[[$anjaiGandh! said...
    அண்ணே.. ரொம்ப நன்றிங்க்ணே.. இந்த மந்திரிமாருங்க லிஸ்ட எப்டிதான் தமிழ்ல டைப்பறதுன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன். உங்க அனுமதி இல்லாமலே விரவில் என் பதிவில் போடப் போறேன்.:)]]]

    போட்டுக்கடா ராசா.. உனக்கில்லாததா..?!!!

    ReplyDelete
  34. [[[♠புதுவை சிவா♠ said...

    "எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

    என்ன நான் சொல்றது..?"

    :-))))))))))))))))))))]]]

    கரெக்ட்தான சிவா..!

    ReplyDelete
  35. [[[K said...
    It seems Kalaignar has allocated all three cabinet berths to his family. Do you know anything about it?]]]

    ரெண்டுதான்..

    ஒண்ணு மட்டும் கூட்டுக் கொள்ளைக்காக விட்டுக் கொடுத்திருக்காரு..

    ReplyDelete
  36. [[[தீப்பெட்டி said...

    //மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!//

    நல்லா சொன்னிங்க பாஸ்..

    :)))]]]

    நன்றி தீப்பெட்டி..!

    ReplyDelete
  37. [[[அத்திரி said...

    //தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரவுடிக் கும்பல் தலைவரான அவருடைய தவப்புதல்வர் அழகிரியும் இந்தக் கூட்டத்தில் ஒருவர் என்பதுதான்//

    உங்க ஊட்டுக்கு ஆட்டோ அனுப்பப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.....]]]

    மாலை வாங்கித் தயாராக வைத்திருக்கவும்..

    ReplyDelete
  38. //உங்க அரசியல் அரிப்பு தீரும் வரை செங்கள் வச்சி தேச்சிக்கவும்//
    டபுள் மீனிங்கா இருக்கே தல..

    சூப்பர் அனாலிஸிஸ் உ.த அண்ணன் அவர்களே! காரசாரமா எறங்கிட்டீங்க போலத் தெரியுது.. போட்டுத்தாக்குங்க!

    ReplyDelete
  39. //கொஞ்சமா சுரண்டுங்கப்பா..!

    மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

    //

    ஐ லைக் திஸ்!

    Read more: http://truetamilans.blogspot.com/2009/06/blog-post.html#ixzz0HDAruJgV&B

    ReplyDelete
  40. //
    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!
    //

    இன்னுமா ஒங்களுக்கு நம்பிக்கை இருக்கு???

    ஒரு ரூவாய்க்கு அரிசி கோதுமையும், இலவசமா ஜட்டியும் குடுப்பாங்க...அது தான் நம்ம வாரிசுக்கெல்லாம்...
    அதுவும் கட்சில தொண்டனாயிருந்தா புது ஜட்டி...இல்லாட்டி செகன்ட் ஹான்ட் ஜட்டி தான்!

    ReplyDelete
  41. ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாடா, ரொம்ப கஷ்டப்பட்டு ஒங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டேன் அண்ணே...

    ReplyDelete
  42. You missed the point! Carefully read my previous comment. Say, for "Kootu kollai" why wasn't the cabinet berth given to T. R. Baalu?

    ReplyDelete
  43. [[[வெங்கிராஜா said...

    //உங்க அரசியல் அரிப்பு தீரும்வரை செங்கள் வச்சி தேச்சிக்கவும்//

    டபுள் மீனிங்கா இருக்கே தல..

    சூப்பர் அனாலிஸிஸ் உ.த அண்ணன் அவர்களே! காரசாரமா எறங்கிட்டீங்க போலத் தெரியுது.. போட்டுத்தாக்குங்க!]]]

    அபியப்பா.. கழகத்தின் துபாய் நாட்டின் தேச செயலாளர்.. இப்படித்தான் பேசுவார்..!

    ReplyDelete
  44. [[[ILA said...

    //கொஞ்சமா சுரண்டுங்கப்பா..!

    மொத்தத்தையும் உங்க வம்சத்துக்கே கொண்டு போயிராதீங்கப்பா..!

    எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!

    //

    ஐ லைக் திஸ்!

    Read more: http://truetamilans.blogspot.com/2009/06/blog-post.html#ixzz0HDAruJgV&B]]]

    தேங்க்ஸ் இளா..

    ReplyDelete
  45. [[[அது சரி said...

    //எங்க வாரிசுகளுக்கும் ஏதாவது மிச்சம், மீதி வைங்கப்பா..!//

    இன்னுமா ஒங்களுக்கு நம்பிக்கை இருக்கு???

    ஒரு ரூவாய்க்கு அரிசி கோதுமையும், இலவசமா ஜட்டியும் குடுப்பாங்க...அதுதான் நம்ம வாரிசுக்கெல்லாம்... அதுவும் கட்சில தொண்டனாயிருந்தா புது ஜட்டி... இல்லாட்டி செகன்ட் ஹான்ட் ஜட்டிதான்!]]]

    ஹா.. ஹா.. ஹா..

    சிரிப்பு சிரிப்பா வருது அதுசரியாரே..!

    ReplyDelete
  46. [[[அது சரி said...

    ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பாடா, ரொம்ப கஷ்டப்பட்டு ஒங்களுக்கு ஓட்டுப் போட்டுட்டேன் அண்ணே...]]]

    கையைக் கொடுங்க.. மிக்க நன்றி..

    இப்ப பார்த்தீங்களா.. ரெண்டே நாள்ல எல்லா பதிவுக்கும் ஓட்டுப் போடுறது குறைஞ்சு போச்சு..!

    ReplyDelete
  47. //கையைக் கொடுங்க.. மிக்க நன்றி..//

    கை எப்போவும் தேவைப் படும்ணே.. மனசுல வச்சிக்கோங்க.. :)))

    ReplyDelete
  48. [[[K said...
    You missed the point! Carefully read my previous comment. Say, for "Kootu kollai" why wasn't the cabinet berth given to T. R. Baalu?]]]

    கே ஸார்..

    ஸ்பெக்ட்ரம் ஊழலில் இன்னும் முடிக்க வேண்டிய நிறைய இருக்கிறது.. அதற்கு ராசா அமைச்சராக இருந்தாக வேண்டும். அதனால் அவர் மந்திரி..

    மதுரையின் அஞ்சாநெஞ்சனுக்கு அப்பா இருக்கும்போதே சுலபமாக மந்திரியாகிவிட வேண்டும் என்ற கவலை.. அதனால் அவர் ஓகே..

    சன் குழுமத்தின் தயவு தி.மு.க. கட்சிக்கு மிகவும் தேவை. அதனால் தயாநிதி ஓகே..

    இப்போதைக்கு செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்துவிட்டதால் டி.ஆர்.பாலுவுக்கு ஆப்பு..!

    அவ்வளவுதான் விஷயம்..

    ReplyDelete
  49. [[[$anjaiGandh! said...

    //கையைக் கொடுங்க.. மிக்க நன்றி..//

    கை எப்போவும் தேவைப்படும்ணே.. மனசுல வச்சிக்கோங்க..:)))]]]

    அடப்பாவி.. இப்பவும் என் வூட்டாண்டை நோட்டம் பார்த்துக்கின்னுதான் இருக்கியா..?

    படு டேஞ்சரான பார்ட்டியா இருக்க கீது..!

    ReplyDelete
  50. கூட்டுக்கொள்ளையை விவரித்தது சரி, உங்களைப் போல பிறக்கும் போதே எழுதும் வரத்துடன் பிறந்தோருக்கு கடமை ஓண்ணிருக்கண்ணே --- சமுதாய சீர்திருத்தம் --- சோனியா அம்மாவை கேம்பிறிச்சில படிக்கலே அப்பிடி இப்பிடீன்னு யு ரியூப் சொல்லுதே --- அதுவளை பத்தி எங்கேண்ணே எழுதினீங்க ---
    இல்லே நீங்களும் இவனுவளோட
    கூட்டாயிட்டீங்களோ ? !

    ReplyDelete
  51. [[[bena said...

    கூட்டுக்கொள்ளையை விவரித்தது சரி, உங்களைப் போல பிறக்கும்போதே எழுதும் வரத்துடன் பிறந்தோருக்கு கடமை ஓண்ணிருக்கண்ணே --- சமுதாய சீர்திருத்தம் --- சோனியா அம்மாவை கேம்பிறிச்சில படிக்கலே அப்பிடி இப்பிடீன்னு யு ரியூப் சொல்லுதே --- அதுவளை பத்தி எங்கேண்ணே எழுதினீங்க ---
    இல்லே நீங்களும் இவனுவளோட
    கூட்டாயிட்டீங்களோ ? !]]]

    பென்ஸ் ஸார்..

    இந்தத் தகவல் எனக்குப் புதியது..

    ராகுல்காந்திதான் கேம்ப்ரிட்ஜ்ல பெயிலாட்டியதா ஆதாரத்தோட நியூஸ் வந்திருக்கு..

    இது என்ன புதுசு..?

    லின்க் இருந்தா கொடுங்க.. படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்..

    ReplyDelete
  52. உனா தானா அண்ணாச்சி சுப்ரமணிய சுவாமி அவர்கள் தான்
    You Tube இல் தோன்றி விளக்கமாக கூறுகின்றார் ---
    University மாணவர்களுக்கு என நினைக்கிறேன் ---
    சோனியாவின் அக்கா இதலில்யில் பழம் பண்டைய
    பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளாராம் ---
    அங்கு இந்தியாவின் பெறுமதி வாய்ந்த பொருட்களே
    நிரம்பி உள்ளதாம் --- இவை எவ்வாறு வெளி நாடு
    சென்றன என்றும் மனிசன் கேட்கிறார்.
    சோனியா ஐந்து வருடங்கள் இங்கிலாத்தில் வாழ்ந்தசமயம்
    கேம்ப்ரிஜில் படித்தாக சொன்னார் --- விசாரித்து அது பொய்
    என்று அறிவித்ததும் வாய் மூடிவிட்டார் என்றாலும்
    அவர் அக் காலத்தில் இங்கலாந்தில் என்ன செய்தார் என்று நாட்டுக்கு பெரியவர்களில் ஒருவரான சோனியா இந்திய
    மக்களுக்கு சொல்லத்தான் வேண்டும் என்குது மனிசன்

    You Tube ல் தேடி எடுத்து தர தெண்டிகின்றேன்---
    ருசியான பதிவுகளை ஈமெயில் மூலம் தந்து உதவுங்கள் --- ஓர் பழைய படத்தின் உங்களது
    விமர்சனத்தை வாசிக்க விரும்புகிறேன் ---
    மொவ்ளியின் Flight 173 (Am not sure of Title please)
    ஓர் நகைச்சுவை படம் --- ப்ளீஸ்

    ReplyDelete
  53. [[[bena said...

    உனா தானா அண்ணாச்சி சுப்ரமணிய சுவாமி அவர்கள் தான்
    You Tube இல் தோன்றி விளக்கமாக கூறுகின்றார் ---
    University மாணவர்களுக்கு என நினைக்கிறேன் ---
    சோனியாவின் அக்கா இதலில்யில் பழம் பண்டைய
    பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளாராம் ---
    அங்கு இந்தியாவின் பெறுமதி வாய்ந்த பொருட்களே
    நிரம்பி உள்ளதாம் --- இவை எவ்வாறு வெளி நாடு
    சென்றன என்றும் மனிசன் கேட்கிறார்.
    சோனியா ஐந்து வருடங்கள் இங்கிலாத்தில் வாழ்ந்தசமயம்
    கேம்ப்ரிஜில் படித்தாக சொன்னார் --- விசாரித்து அது பொய்
    என்று அறிவித்ததும் வாய் மூடிவிட்டார் என்றாலும்
    அவர் அக்காலத்தில் இங்கலாந்தில் என்ன செய்தார் என்று நாட்டுக்கு பெரியவர்களில் ஒருவரான சோனியா இந்திய
    மக்களுக்கு சொல்லத்தான் வேண்டும் என்குது மனிசன்
    You Tube ல் தேடி எடுத்து தர தெண்டிகின்றேன்---]]]

    அனுப்புங்கள் பார்க்கிறேன்..

    [[[ஓர் பழைய படத்தின் உங்களது
    விமர்சனத்தை வாசிக்க விரும்புகிறேன் ---
    மொவ்ளியின் Flight 173 (Am not sure of Title please)
    ஓர் நகைச்சுவை படம் --- ப்ளீஸ்]]]

    ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன்.. ஆனால் பார்த்ததில்லை.. விசாரிக்கிறேன்.. அது டிவிடி வடிவில் வந்திரு்ப்பதாகத் தெரிகிறது.. கிடைத்தால் நிச்சயம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..

    வருகைக்கு நன்றி பென்ஸ் ஸார்..!

    ReplyDelete
  54. [[[ அக்னி பார்வை said...
    உண்மை தமிழன்,
    அருமை, ஆச்சரியம், ஒவ்வொறு வார்த்தையிலும் அழுகு, ஆழ்ந்த கருத்துகள்..ஆனால் இந்த கொள்ளை கூட்டத்தை அழிக்கவோ அல்லது அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ உங்களிடம் மாற்று வழிமுறைகள் உள்ளதா? ஏதாவது செய்யும் திட்டம் உள்ளதா? வெறும் பதிவு மட்டும் தானா(னே)? ]]]

    ஓர் சிறிய சுலபமான வழி இருக்குதே !
    Open, Transparent Governance

    பதிவு உண்மை தமிழன் அவர்களின் கடமை ---திறமாக முடித்துள்ளார் --- மேற்கொண்டு எமது கடமை --- அழுத்தம் கொடுத்து --- சட்டம் இயற்ற வழிவகுப்பது -
    தேர்தல் சமயம் சகல வேட்பாளர்களும் தமது சொத்து விபரங்களை பகிங்கரமாக அறிவிக்க வேண்டும் -
    இவ்வறிக்கை வருடாவருடம் தொடர வேண்டும் -
    மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினர்களது சொத்து விபரங்கள் தேவை இருப்பின் பரிசீலிக்கபடலாம் -
    பொது குடிமகன் அல்லது மகள் உறிதியான விபரங்களுடன் பரிசீலினை கோரலாம் -
    புதிய சொத்துகள் சேர்த்த பண விபரம் பாராளமன்ற சபாநாயகர் அலுவலகத்துக்கோ அல்லது குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டும் -
    சொத்து விபரங்களை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம் -
    தற்போது இங்கிலாந்தில் நடப்பவை எமக்கு
    ஒரு திறமான பாடமே !

    ReplyDelete
  55. [[[ஓர் பழைய படத்தின் உங்களது
    விமர்சனத்தை வாசிக்க விரும்புகிறேன் ---
    மொவ்ளியின் Flight 173 (Am not sure of Title please)
    ஓர் நகைச்சுவை படம் --- ப்ளீஸ்]]]
    ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன்.. ஆனால் பார்த்ததில்லை.. விசாரிக்கிறேன்.. அது டிவிடி வடிவில் வந்திரு்ப்பதாகத் தெரிகிறது.. கிடைத்தால் நிச்சயம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..

    வருகைக்கு நன்றி பென்ஸ் ஸார்..!

    DVD இல இருக்குது சார் --- திறமான நடிப்பு ---
    பாமரர்காக சற்று இளுதட்டிபும் உண்டு ---
    தங்களுக்கு பெருமை சேர்க்கும் ---
    எங்களுக்கு சுவையான அறிவைதரும் சார்

    ReplyDelete
  56. [[[ Unmai Thamilan said ---
    இது என்ன புதுசு..?
    லின்க் இருந்தா கொடுங்க.. படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்.]]]

    ''படிச்சா மட்டும் போதுமா ?''
    தங்களது நீண்ண்ட ஆழமான
    விமர்சனம் வேண்டும் சார் ---
    நீளமான விமர்சனத்தை தேவையானோர்
    படிக்கட்டும் - ஏனையோர் மேலோட்டமாக
    மேய்யட்டும் - மற்றோர் அழிகட்டும் ---
    Subramanyam Swamy - anti christian - anti sikh

    http://www.youtube.com/watch?v=aeCG1hRzTRE

    Hindu's under SIEGE

    http://www.youtube.com/watch?v=IFU-iAP43M0

    Dr. Swamy on Rahul Gandhi's education & citizenship

    http://www.youtube.com/watch?v=z5As3uAc0vU

    Dr. Subramaniam Swamy on Sonia's family smugglilng

    http://www.youtube.com/watch?v=1mjdFujlVwo

    Dr. Swamy on Rahul Gandhi's education & citizenship

    http://www.youtube.com/watch?v=z5As3uAc0vU

    Yuvraj label insulting: Rahul Gandhi

    http://www.youtube.com/watch?v=FVFelgb136s


































    .

    ReplyDelete
  57. [[[bena said...
    [[அக்னி பார்வை said...
    உண்மை தமிழன், அருமை, ஆச்சரியம், ஒவ்வொறு வார்த்தையிலும் அழுகு, ஆழ்ந்த கருத்துகள்..ஆனால் இந்த கொள்ளை கூட்டத்தை அழிக்கவோ அல்லது அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ உங்களிடம் மாற்று வழிமுறைகள் உள்ளதா? ஏதாவது செய்யும் திட்டம் உள்ளதா? வெறும் பதிவு மட்டும் தானா(னே)?]]]

    ஓர் சிறிய சுலபமான வழி இருக்குதே!
    Open, Transparent Governance
    பதிவு உண்மை தமிழன் அவர்களின் கடமை ---திறமாக முடித்துள்ளார் --- மேற்கொண்டு எமது கடமை --- அழுத்தம் கொடுத்து --- சட்டம் இயற்ற வழிவகுப்பது - தேர்தல் சமயம் சகல வேட்பாளர்களும் தமது சொத்து விபரங்களை பகிங்கரமாக அறிவிக்க வேண்டும் - இவ்வறிக்கை வருடாவருடம் தொடர வேண்டும் - மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினர்களது சொத்து விபரங்கள் தேவை இருப்பின் பரிசீலிக்கபடலாம் -
    பொது குடிமகன் அல்லது மகள் உறிதியான விபரங்களுடன் பரிசீலினை கோரலாம் -
    புதிய சொத்துகள் சேர்த்த பண விபரம் பாராளமன்ற சபாநாயகர் அலுவலகத்துக்கோ அல்லது குறிப்பிட்ட அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டும் - சொத்து விபரங்களை பத்திரிகைகள் பிரசுரிக்கலாம் - தற்போது இங்கிலாந்தில் நடப்பவை எமக்கு
    ஒரு திறமான பாடமே !///

    பென்ஸ் ஸார்..

    ஏற்கெனவே எங்களது அரசியல்வியாதிகள் தங்களது சொத்துப் பட்டியலை தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால் அந்தப் பணம் எங்கேயிருந்து, எப்படி சம்பாதித்தார்கள் என்பதற்குத்தான் ஒரு கணக்கும் இல்லை..

    ReplyDelete
  58. [[[bena said...

    [[ஓர் பழைய படத்தின் உங்களது
    விமர்சனத்தை வாசிக்க விரும்புகிறேன் ---
    மொவ்ளியின் Flight 173 (Am not sure of Title please)
    ஓர் நகைச்சுவை படம் --- ப்ளீஸ்]]]
    ஆமாம்.. நானும் கேள்விப்பட்டேன்.. ஆனால் பார்த்ததில்லை.. விசாரிக்கிறேன்.. அது டிவிடி வடிவில் வந்திரு்ப்பதாகத் தெரிகிறது.. கிடைத்தால் நிச்சயம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..

    வருகைக்கு நன்றி பென்ஸ் ஸார்..!]]

    DVD இல இருக்குது சார் --- திறமான நடிப்பு --- பாமரர்காக சற்று இளுதட்டிபும் உண்டு --- தங்களுக்கு பெருமை சேர்க்கும் ---
    எங்களுக்கு சுவையான அறிவை தரும் சார்]]]

    நிச்சயம் பார்க்கிறேன் ஸார்.. கொஞ்சம் டயம் கொடுங்க..!

    ReplyDelete
  59. [[[bena said...

    [[[ Unmai Thamilan said ---
    இது என்ன புதுசு..?
    லின்க் இருந்தா கொடுங்க.. படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்.]]]

    ''படிச்சா மட்டும் போதுமா ?''
    தங்களது நீண்ண்ட ஆழமான
    விமர்சனம் வேண்டும் சார் ---
    நீளமான விமர்சனத்தை தேவையானோர்
    படிக்கட்டும் - ஏனையோர் மேலோட்டமாக
    மேய்யட்டும் - மற்றோர் அழிகட்டும் ---
    Subramanyam Swamy - anti christian - anti sikh

    http://www.youtube.com/watch?v=aeCG1hRzTRE

    Hindu's under SIEGE

    http://www.youtube.com/watch?v=IFU-iAP43M0

    Dr. Swamy on Rahul Gandhi's education & citizenship

    http://www.youtube.com/watch?v=z5As3uAc0vU

    Dr. Subramaniam Swamy on Sonia's family smugglilng

    http://www.youtube.com/watch?v=1mjdFujlVwo

    Dr. Swamy on Rahul Gandhi's education & citizenship

    http://www.youtube.com/watch?v=z5As3uAc0vU

    Yuvraj label insulting: Rahul Gandhi

    http://www.youtube.com/watch?v=FVFelgb136s]]]

    பென்ஸ் ஸார்..

    எனது கணினியில் ஓப்பன் ஆவதற்கே பத்து நிமிடங்கள் ஆகிறது.

    போதாக்குறைக்கு ஆங்கிலத்தில் பொளந்து கட்டுகிறார் சுவாமி.

    எனக்கும், ஆங்கிலத்திற்கும் ரொம்ப தூரம் ஸார்..

    விடுங்க.. அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.. இதுவே போதும்..!

    ReplyDelete