Pages

Tuesday, June 16, 2009

இட்லி, தோசை, பொங்கல், வடை, சட்னி, சாம்பார்-16-06-2009

16-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சீமான்-சேகுவேரா டூ..?


ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தற்காக கியூபா தேசத்தின் மீது அளவற்ற கோபத்தில் இருக்கிறார்கள் தமிழகத்து சேகுவேராவின் ஆதரவாளர்கள்.

பிரபாகரனைவிடவும் சேகுவேராவின் புகைப்படங்களும், ஸ்டிக்கர்களும் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக புழக்கத்தில் உள்ளன. இந்தப் புழக்கங்கள் எல்லாம் சென்ற மாதம் புழுக்கங்களாக மாறிவிட்டன. ஏன் கியூபா இப்படி செய்தது என்பதற்கான காரணம் தெரியாமல் மட்டையாகிவிட்டனர் கியூபாவின் தோழர்கள்.

பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது இதனைக் குறிப்பிட்டு கியூபாவை ஒரு பிடி பிடித்தார். கடைசியாக “சேகுவேராவைவிடவும் பல மடங்கு உயர்ந்தவன், திறமைமிக்கவன் என் தலைவன் பிரபாகரன்..” என்று சொல்லி பலத்த கை தட்டலையும் அள்ளிக் கொண்டு போனார்.

இந்த நிகழ்வுக்குப் பின்பு சேவின் புகைப்படம் போட்ட பனியனுடன் வெளியில் வருவதை அவரும், அவருடைய அருமைத் தம்பிமார்களும் நிறுத்திக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்து பட்சிகள் தெரிவிக்கின்றன.


மூன்று தேவிகள்

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு விழாவில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



தலைவர்களைவிடவும் அவர்களுடைய இல்லத்தரசிகளுக்கே அதிக எதிர்பார்ப்பாம்.. அப்படி என்னதான் பேசியிருப்பாங்க என்று ஒரு பிரெஞ்சு பத்திரிக்கை போட்டியே வைத்திருக்கிறதாம்.



அதிகபட்சம் டிரெஸ்ஸை பத்தி இருக்கலாம்னு நான் நினைக்கிறேன்.. போட்டோவை பார்த்து பதிவர்களுக்கு கமெண்ட்டுகள் ஏதேனும் பொங்கி வந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..! சிறந்த பின்னூட்டத்தை இந்த அம்மணிகளுக்கு அனுப்பி வைத்து பரிசுகளை அவர்கள் வழங்கினால் உங்களிடம் சொல்கிறேன்..!

தமிழ்மணம் கருவிப் பட்டை..!

தமிழ்மணம் நிர்வாகம் தங்களது கருவிப்பட்டையில் வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த மாற்றம் நல்ல பலனைத் தந்துள்ளது.

ஒரு சமயத்தில் நூறையெல்லாம் கடந்து போய்க்கொண்டிருந்த கட்டற்ற ஆதரவுக் கரம், இப்போதெல்லாம் 20-ஐ தாண்டுவதற்கே குட்டிக்கரணம் போட வேண்டியுள்ளது.

இன்றைக்கு அதிசயத்திலும், அதிசயமாக அதிகபட்ச வாக்குகளை யாருமே பெறவில்லை என்று அறிவிப்பு வேறு தமிழ்மணத்தில் ஓடியது. சந்தோஷம்..

ஹா.. ஹா.. ஹா.. இந்தியத் தேர்தல் கமிஷன் மாதிரி தமிழ்மணத்தின் இந்த அதிரடி உத்தரவு, சில நல்ல பயன்களையும் தருகிறது.. ஒரே ஐ.பி.யின் கீழ் பல லாகின் ஐடிக்களை வைத்து குத்து குத்தென்று குத்திய நல்ல உள்ளங்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

வாழ்க தமிழ்மணம்..!

நெதர்லாந்து நாட்டு பயங்கரம்..!

நெதர்லாந்து நாட்டில் அரச குடும்பத்தினர் கலந்து கொண்ட ஒரு விழாவின்போது திடீரென்று ஒரு கார் அங்கு நின்றிருந்தவர்கள் மீது அசுர வேகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாம்..

எனக்கு இப்போதுதான் மெயிலில் புகைப்படங்கள் வந்தன.






புகைப்படக்காரர்களின் வேகத்திற்கு இது போன்ற படுபாதகச் சம்பவங்கள் கிடைத்தால்தான் உதாரணமாக்கலாம் போலிருக்கிறது.

புகைப்படங்கள் நொடிக்கணக்கில் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

பலரது கண்களின் பாப்பாவில் இந்த விபத்து விழுகாமல் இருப்பது. ஐயையோ என்று அலறுவதற்கு முதல் நொடி புகைப்படம் என்றெல்லாம் இந்தப் புகைப்படங்களை வரிசைப்படுத்தலாம்.


சினிமா படங்களின் தலைப்புகள்

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்த பின்பு நல்ல தமிழ்ப் பெயர்களைத் தேடி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அலையோ அலை என்று அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி வேறு ஒரு வழியில் வழக்குத் தமிழ் என்ற சொல்லுடன் வரிவிலக்கைப் பெற்றதால் இதனையே முன்னுதாரணமாகக் காட்டி பல்வேறு வழக்குத் தமிழ்ச் சொற்களும் தலைப்பாக வந்து பயமுறுத்துகின்றன.

தற்போது எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படங்களின் சில தலைப்புகளை பார்த்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

"18 வயசுப் பயலே..
ஆட்டம்
ஆச்சரியம்
ஆட்ட நாயகன்
அழகான பொண்ணுதான்
என் இனிய தமிழ் மக்களே..
எனக்கே எனக்கா
என்னை நீதான் பிரிந்தாலும்
என்னை ஏன் மறந்தாய்..?
பிளாஷ்பேக்
ஹாய்
ஈஸா
இடியட்
இடம் வலம்
இது காதல் உதிரும் காலம்
காதல் எக்ஸ்பிரஸ்
காதல் எஃப்.எம்.
மதுரை திமிரு
வரேண்டா மதுரைக்கு
வங்கி
வீரமும் ஏறணும்
தடக்.. தடக்..
திரு.. திரு.. துரு.. துரு..
தொட்டுப் பார்
பார்க்கலாம் பூக்காலம்
பிறகு
பூமாலையே தோள் சேரவா
புறா
ஓடிப் போலாமா?
ஓடு மச்சி ஓடு
நான் ஒரு மாதிரி
நான் ரெடி? நீ ரெடியா..?"

இது மாதிரியாக தமிழ் அகராதிகளைச் சலித்துப் பார்த்து வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து தலைப்புகளை வைக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் நமது இயக்குநர்கள்.

தலைப்புக்குத்தான் இந்த அடிதடி.. கதையைப் பத்தி யாரும் மூச்சுவிடமாட்டாங்க..

அது எவனுக்கு வேணும்..?


எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் பற்றிய அலசல்..!

ஞாயிறு மாலை 4 மணிக்கு ஞாநியின் கே.கே.நகர் வீட்டில் கேணி என்கிற அமர்வின் கீழ் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் பற்றி பேசப் போவதாக குறுஞ்செய்தி வந்து கொண்டேயிருந்தது.

நானும் சென்றிருந்தேன். நிஜமாகவே வீட்டுக்குப் பின்புறமிருந்த ஒரு கேணியின் அருகில்தான் கூட்டம் நடந்தது. கிட்டத்தட்ட 50 பேராவது வந்திருப்பார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பேசுவது என்பதே அல்வா சாப்பிடுவது போல.. மனிதர் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டேயிருந்தார். சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும்.. அதனை எப்படி வழங்க வேண்டும்..? என்ன மாதிரியான அமைப்பியலில் அது இருத்தல் வேண்டும் என்றெல்லாம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

இடையிடையே அவர் சொன்ன பல சிறுகதைகள்தான் கூட்டத்தை கலகலக்க வைத்தது. ரஷ்ய இலக்கியங்கள்தான் தன்னை உருமாற்றியதாகவும், சிறுகதைகள் பற்றிய தனது எண்ணத்தினை பெரிதும் மாற்றி தன்னை எழுத்தாளனாக திசை திருப்பியதும் ரஷ்ய சிறுகதைகள்தான் என்றும் சொன்னார்.

நிகழ்வு முடிந்த பின்பும் பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகப் பொறுமையாக அவர் பதிலளித்தவிதம் ஒரு சிறந்த பேராசிரியரை தமிழகத்தில் உள்ள ஏதோ ஒரு பல்கலைக்கழகம் இழந்துவிட்டது என்றே நினைக்க வைக்கிறது.

ஞாநியை பார்த்தேன். மனிதர் உடல்நலக்குறைவால் மிகவும் மெலிந்து போயிருந்தார். “மூணு மாசம் படுத்த படுக்கையாதான் இருந்தேன்.. யார்கிட்டேயும் சொல்ல வேணாம்னு நான்தான் சொல்லியிருந்தேன்..” என்றார். அவரை இந்தக் கோலத்தில் பார்ப்பது எனக்கு முதல் முறை என்பதால் ரொம்பவே வருத்தமாக இருந்தது. அவருடைய உடல் நலத்திற்கு ஒரு குறையும் வராமல் இருக்க.. அப்பன் முருகன் அருள் புரியட்டும்..

அசர வைத்த மனிதாபிமானம்..!

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் எஸ்.என்.வசந்த் சமீபத்தில் மரணமடைந்தார்.


அவருக்கு அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது. சின்னத்திரை கலைஞர்கள் முக்கால்வாசி பேர் திரண்டு வந்திருந்தனர். சின்னத்திரை நடிகர்களுக்காகவே ஒரு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி அதற்காக பல தீவிர முயற்சிகளை செய்து அச்சங்கம் துவங்க முக்கிய காரணமாக இருந்தவர் வசந்த் என்பதால் வந்திருந்த பலருக்கும் அவருடைய இழப்பினால் ரொம்பவே வருத்தம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இவர் நடித்துக் கொண்டுதான் இருந்தார். நடிகை பானுப்பிரியா தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமான 'மெல்லப் பேசுங்கள்' திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் 'பாலைவனரோஜாக்கள்' திரைப்படத்தில் நளினியின் தம்பியாக நடித்தவர். பல மலையாளப் படங்களில் கதாநாயகனாகவே நடித்தவர். ஆனால் கடைசிவரையிலும் டூவீலரில்தான் ஷூட்டிங்கிற்கு வந்து கொண்டிருந்தார்.

இருதய ஆபரேஷன் செய்து பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தியிருந்தார். தன்னுடைய மகன் பிளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்றதற்காக நண்பர்களுக்கு அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டபோது திடீரென்று நெஞ்சு வலிக்கிறது என்று மயங்கி விழுந்தவர்தான்.. முருகனிடம் ஐக்கியமாகிவிட்டார். பாவம்.. 52 வயதெல்லாம் சாகின்ற வயதா..?

அமைச்சர் பரிதிஇளம்வழுதி வசந்தின் புகைப்படத்தைத் திறந்து வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

சின்னத்திரை கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து அக்குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முடிவு செய்து பண வசூல் செய்தார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் கலெக்ஷன் ஆனது.

ஆனால் இதையெல்லாம்விட விழாவிற்கே முத்தாய்ப்பாக வசந்தின் நண்பரான ஒருவர் 50 லட்சம் ரூபாயை வசந்தின் குடும்பத்திற்கு நிதியுதவியாக வழங்கியது வந்தவர்களை அசர வைத்துவிட்டது.

செத்துப் போனா கொடுத்த கடனையே மீட்க முடியாமல் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இவ்ளோ பெரிய தொகையை தனது நண்பரின் குடும்பத்திற்கு வழங்க முன் வந்த அந்த நண்பரை வகைதொகையில்லாமல் அனைவரும் பாராட்டித் தள்ளினார்கள். நானும் வாழ்த்துகிறேன்.

இறந்த பின்பும் தனது பண்பினால் தன்னை நிரூபித்திருப்பதாக வசந்தின் நண்பர்கள் கண்ணீர் மல்க மேடையில் பேசினார்கள். நிச்சயம் இது அவருடைய தனிப்பட்ட குணத்தினால் கிடைத்த பாராட்டு போலத்தான்.. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..

கடைசியாக ஒரு புகைப்படம்..!

எப்படியெல்லாம் போட்டோ எடுக்க கஷ்டப்படுறாங்க பாருங்க..!


இப்போதைக்கு இது போதும்..

மீண்டும் அடுத்து நேரம் கிடைக்கும்போது சந்திக்கலாம்..!

51 comments:

  1. தல

    அந்த சேகுவேரா மேட்டர் தான் டாப்பு..இது நான் பல தடவை நினைத்தது உண்டு..உள்ளூர் போராளிகள் ஒருவர் பெயர் தெரியாதவர்கள் எல்லாம் சேகுவேராவை தலை மேல் தூக்கி வைத்து கொண்டு ஆடினார்கள்..
    அவர் ஒரு International brand அவ்வளவே..சீமான் தமிழகத்தில் அறிமுகபடுத்திய ஒரு பிராண்ட்..

    இப்ப அவரே ஜகா வாங்கிட்டாரு மற்றவர்களை பொறுத்து இருந்து பாப்போம்..

    ReplyDelete
  2. சீமான் சே க்வெராவை வெறுப்பதின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. அவர்களின் எதிர்ப்பு காஸ்ட்ரோ என்பவரை நோக்கி இருக்க வேண்டும். சே இன்று உயிரோடு இருந்திருந்தால் கூபாவின் (thanks Charu)தற்போதைய வாரிசு அரசியலை எதிர்த்தும், ஈழத்தை ஆதரித்தும் குரல் கொடுத்திருக்கலாம். யார் கண்டது?

    ReplyDelete
  3. //இப்போதைக்கு இது போதும்..//

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள் போலும். பதிவு இன்னும் சில பக்கங்கள் இருக்கும் என்று நினைத்தேன். சேகுவேரா முடிவு? அவலை நினைத்து உரலை இடித்த கதை.

    ReplyDelete
  4. [[[வினோத்கெளதம் said...
    தல அந்த சேகுவேரா மேட்டர் தான் டாப்பு.. இது நான் பல தடவை நினைத்தது உண்டு.. உள்ளூர் போராளிகள் ஒருவர் பெயர் தெரியாதவர்கள் எல்லாம் சேகுவேராவை தலை மேல் தூக்கி வைத்து கொண்டு ஆடினார்கள்..
    அவர் ஒரு International brand அவ்வளவே.. சீமான் தமிழகத்தில் அறிமுகபடுத்திய ஒரு பிராண்ட்..
    இப்ப அவரே ஜகா வாங்கிட்டாரு மற்றவர்களை பொறுத்து இருந்து பாப்போம்..]]]

    அதுதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு..

    அதுவும் சேகுவேராவை விடவும் பிரபாகரன் உசத்தி என்று சொன்னதும் கேட்பதற்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது..

    ReplyDelete
  5. [[[Indian said...
    சீமான் சே க்வெராவை வெறுப்பதின் நோக்கம் எனக்குப் புரியவில்லை. அவர்களின் எதிர்ப்பு காஸ்ட்ரோ என்பவரை நோக்கி இருக்க வேண்டும். சே இன்று உயிரோடு இருந்திருந்தால் கூபாவின் (thanks Charu) தற்போதைய வாரிசு அரசியலை எதிர்த்தும், ஈழத்தை ஆதரித்தும் குரல் கொடுத்திருக்கலாம். யார் கண்டது?]]]

    உண்மைதான்..

    கியூபாவின் தற்போதைய ஆட்சியாளர்களைத்தான் இதற்காக குற்றம் சொல்ல வேண்டுமே தவிர.. சே இந்த விஷயத்தில் என்ன செய்தார்.. அவரைக் குற்றம் சொல்ல..?!

    அடிப்படையே தவறாகிறது..!

    ReplyDelete
  6. உண்மைதான்..

    கியூபாவின் தற்போதைய ஆட்சியாளர்களைத்தான் இதற்காக குற்றம் சொல்ல வேண்டுமே தவிர.. சே இந்த விஷயத்தில் என்ன செய்தார்.. அவரைக் குற்றம் சொல்ல..?!

    அடிப்படையே தவறாகிறது..!///////////

    தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான பாதைகளுக்கு எடுத்து காட்டு தான் கியுபா . இப்போது கம்யூனிஸ்ட் கட்சியே தவறான கொள்கையில் தான் சென்று கொண்டிருக்கிறது .

    ReplyDelete
  7. //சேகுவேராவைவிடவும் பல மடங்கு உயர்ந்தவன், திறமைமிக்கவன் என் தலைவன் பிரபாகரன்..//

    எதற்கு இந்த தேவையற்ற ஒப்பீடுகள்..
    இவர்களின் புரிதல் குழப்பமளிக்கிறது..

    நாளை இந்தியாவின் தவறு காந்தியின் மீதான வெறுப்பாக வெளிப்படுமா?

    கம்யூனிச நாடுகள் அனைத்தும் இலங்கையை ஆதரித்தன..

    காரல்மாக்ஸ்,லெனின் இன்ன பிற கம்யூனிச பெருந்தலைகள் பற்றியும் கம்யூனிச தத்துவங்களை பற்றியும் இவர்களின் நிலைப்பாட்டை எப்போது சொல்ல போகிறார்கள்..

    ReplyDelete
  8. சீமான் அவர்கள் 'சே' வைக் குற்றம் சொல்வது அர்த்தமற்றது. அவர் குற்றம் சொல்ல வேண்டியது காஸ்ட்ரோவை மட்டுமே.ஒருவேளை 'சே' காஸ்ட்ரோவின் கனவில் வந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லியிருப்பின் சே வை குறை கூறலாம் சீமான்.

    ReplyDelete
  9. பிரபாகரனை 'சே' வுடன் ஒப்பிட்டதே உங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறதெனில், சமீபத்தில் மதுரையின்
    அஞ்சா நெஞ்சனின் படத்தை 'சே' வின் முகத்தில் கண்டேன். இதுக்கு இன்னா சொல்றீங்கோ....?

    ReplyDelete
  10. உண்மைத் தமிழன்,
    நீங்கள் ஆரம்பத்தில் சரியாகவே இலங்கை தமிழர் பற்றி யதார்த்தத்தை எழுதிவந்தீர்கள். ஆனால் பின்பு பாரதிராசாவின் செயல்பாட்டுக்கு பின் புலிகளை ஆதரிக்க தொடங்கிவிட்டீர்கள். ஏமாற்றமே.

    ReplyDelete
  11. [[[Suresh Kumar said...

    உண்மைதான்.. கியூபாவின் தற்போதைய ஆட்சியாளர்களைத்தான் இதற்காக குற்றம் சொல்ல வேண்டுமே தவிர.. சே இந்த விஷயத்தில் என்ன செய்தார்.. அவரைக் குற்றம் சொல்ல..?!

    அடிப்படையே தவறாகிறது..!///////////

    தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான பாதைகளுக்கு எடுத்து காட்டுதான் கியுபா . இப்போது கம்யூனிஸ்ட் கட்சியே தவறான கொள்கையில்தான் சென்று கொண்டிருக்கிறது.]]]

    உண்மைதான் சுரேஷ்..

    தனி நாடு கேட்கும் இனங்களையே அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கின்றன அனைத்து நாடுகளும்..

    ஒரு நாட்டிற்கு ஆதரவு கொடுத்தாலும் அடுத்த நாடும் கேட்குமே என்கிற குறுகிய மனப்பான்மையில்தான் இந்த பாசத்தை இலங்கை மீது பல நாடுகள் காட்டி வருகின்றன.

    ReplyDelete
  12. [[[தீப்பெட்டி said...

    //சேகுவேராவைவிடவும் பல மடங்கு உயர்ந்தவன், திறமைமிக்கவன் என் தலைவன் பிரபாகரன்..//

    எதற்கு இந்த தேவையற்ற ஒப்பீடுகள்.. இவர்களின் புரிதல் குழப்பமளிக்கிறது..
    நாளை இந்தியாவின் தவறு காந்தியின் மீதான வெறுப்பாக வெளிப்படுமா?
    கம்யூனிச நாடுகள் அனைத்தும் இலங்கையை ஆதரித்தன..
    காரல்மாக்ஸ்,லெனின் இன்ன பிற கம்யூனிச பெருந்தலைகள் பற்றியும் கம்யூனிச தத்துவங்களை பற்றியும் இவர்களின் நிலைப்பாட்டை எப்போது சொல்ல போகிறார்கள்..]]]

    நல்ல கேள்விதான் தீப்பெட்டி..

    ஆனால் பதில் சொல்லத்தான் பொறுத்தமான தோழர்கள் யாரும் இந்தியாவில் இல்லை..!

    ReplyDelete
  13. [[[டக்ளஸ்....... said...
    சீமான் அவர்கள் 'சே' வைக் குற்றம் சொல்வது அர்த்தமற்றது. அவர் குற்றம் சொல்ல வேண்டியது காஸ்ட்ரோவை மட்டுமே. ஒருவேளை 'சே' காஸ்ட்ரோவின் கனவில் வந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லியிருப்பின் சே வை குறை கூறலாம் சீமான்.]]]

    என்னுடைய கருத்தும் இதுதான் டக்ளஸ்..

    அமெரிக்காவை இலங்கை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பார்முலாவில் கியூபா இலங்கைக்கு உதவுகிறது என்று நினைக்கிறேன். போதாக்குறைக்கு ரஷ்யாவும், இந்தியாவும் உதவுகின்றன. போதாதா..?

    ReplyDelete
  14. [[[டக்ளஸ்....... said...
    பிரபாகரனை 'சே' வுடன் ஒப்பிட்டதே உங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறதெனில், சமீபத்தில் மதுரையின் அஞ்சா நெஞ்சனின் படத்தை 'சே' வின் முகத்தில் கண்டேன். இதுக்கு இன்னா சொல்றீங்கோ....?]]]

    உங்க தலையெழுத்து அந்தக் கன்றாவியையெல்லாம் பார்க்கணும்னு இருக்கு.. அதுக்கு நான் இன்னா சொல்றது..?

    ReplyDelete
  15. [[[thequickfox said...
    உண்மைத் தமிழன், நீங்கள் ஆரம்பத்தில் சரியாகவே இலங்கை தமிழர் பற்றி யதார்த்தத்தை எழுதிவந்தீர்கள். ஆனால் பின்பு பாரதிராசாவின் செயல்பாட்டுக்கு பின் புலிகளை ஆதரிக்க தொடங்கிவிட்டீர்கள். ஏமாற்றமே.]]]

    புலிகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பது.. பிரபாகரனை தவறே செய்யாதவர் என்று உயர்த்திப் பிடிப்பது.. இந்த இரண்டையும் நான் இப்போதும் செய்யவில்லை.

    உங்களுக்கு எந்த ஏமாற்றமும் வேண்டாம்..

    பாரதிராஜா ஏற்பாடு செய்த மேடையில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்டதுகூட பிடிக்கவில்லைதான்.. ஆனால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்போது நாமும் சில வழிகளை கையாளத்தான் வேண்டும்.. வேறு வழியில்லை..

    காலத்திற்கேற்றாற்போல் நாம் மாறவில்லையெனில் எதிரிதான் ஜெயிப்பான்.. இப்போதும் அதனால்தான் ஜெயித்திருக்கிறான்..

    மாறியிருக்க வேண்டியது பிரபாகரன்.. செய்யவில்லை. அதனால்தான் இந்த நான்காம் யுத்தம் இவ்வளவு பெரிய சோகத்தில் முடிந்திருக்கிறது..

    ReplyDelete
  16. நல்ல கதம்பமான பதிவுகள்.ரசித்தேன்.

    ReplyDelete
  17. //ஆனால் இதையெல்லாம்விட விழாவிற்கே முத்தாய்ப்பாக வசந்தின் நண்பரான ஒருவர் 50 லட்சம் ரூபாயை வசந்தின் குடும்பத்திற்கு நிதியுதவியாக வழங்கியது வந்தவர்களை அசர வைத்துவிட்டது.//

    உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய நபர்
    :-))

    ReplyDelete
  18. ஏன் தான் இப்படி ஒப்பிடுகிறாற்களோ? வேறு யாராவது தலைமையில் தமிழீழம் கிடைத்தால் இவர்கள் பிரபாகரனையும் தூக்கி போடுவார்களோ எனமோ?

    பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  19. [[[கே.ரவிஷங்கர் said...
    நல்ல கதம்பமான பதிவுகள். ரசித்தேன்.]]]

    நன்றி ரவி ஸார்..!

    ReplyDelete
  20. கிண்டி கிழங்கு எடுக்காமே வெறும் பிரசன்ட் மட்டும் போட்டா கண்டுக்க மாட்டீங்களா....

    இருங்க இருங்க அடுத்த பதிவுலே வந்து பழி தீர்குறேன்.

    ReplyDelete
  21. [[[T.V.Radhakrishnan said...

    //ஆனால் இதையெல்லாம்விட விழாவிற்கே முத்தாய்ப்பாக வசந்தின் நண்பரான ஒருவர் 50 லட்சம் ரூபாயை வசந்தின் குடும்பத்திற்கு நிதியுதவியாக வழங்கியது வந்தவர்களை அசர வைத்துவிட்டது.//

    உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய நபர்:-))]]]

    ஆமாம் ஸார்..

    யாராலேயும் நம்ப முடியல.. எவ்ளோ பெரிய மனசு பாருங்க..

    ஒரு மனுஷனோட புகழை அவன் செத்த பின்னாடிதான் உணர முடியும்னு சொல்வாங்க.. அதுக்கு நல்லதொரு உதாரணம் வஸந்த் ஸார்தான்..

    ReplyDelete
  22. [[[நாஞ்சில் நாதம் said...
    ஏன்தான் இப்படி ஒப்பிடுகிறாற்களோ? வேறு யாராவது தலைமையில் தமிழீழம் கிடைத்தால் இவர்கள் பிரபாகரனையும் தூக்கி போடுவார்களோ எனமோ?]]]

    இந்த சந்தேகம் இப்போது எனக்கும் வந்துள்ளது ஸார்..

    [[[பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் அருமை.]]]

    தங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றி ஸார்..!

    ReplyDelete
  23. [[[நையாண்டி நைனா said...
    Oru present pottukaren.]]]

    அச்சச்சோ..

    நைனா.. கொஞ்சூண்டு மறந்துட்டேன் நைனா..

    கோச்சுக்காத நைனா..

    ReplyDelete
  24. [[[ananth said...

    //இப்போதைக்கு இது போதும்..//

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள் போலும். பதிவு இன்னும் சில பக்கங்கள் இருக்கும் என்று நினைத்தேன்.]]]

    எழுதலாம் என்றுதான் நினைத்தேன். நேரமில்லாத காரணத்தால் முடியவில்லை ஆனந்த்..

    [[[சேகுவேரா முடிவு? அவலை நினைத்து உரலை இடித்த கதை.]]]

    சீமானின் கருத்து தவறானதுதான்.. அவசரத்தனமானதும்கூட..

    ReplyDelete
  25. [[[நையாண்டி நைனா said...
    கிண்டி கிழங்கு எடுக்காமே வெறும் பிரசன்ட் மட்டும் போட்டா கண்டுக்க மாட்டீங்களா.... இருங்க இருங்க அடுத்த பதிவுலே வந்து பழி தீர்குறேன்.]]]

    ஐயோ போதும் நைனா.. கோபம் வேண்டாம்..

    கண்டுக்கிட்டேன்..

    ஏதோ தெரியாம நடந்து போச்சு.. மன்னிச்சுக்குங்க..

    இந்த கிண்டி கிழங்கெடுக்குற வேலைக்கெல்லாம் என் பதிவுல வேலையிருக்காதே..?))))))))))

    ReplyDelete
  26. //ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தற்காக கியூபா தேசத்தின் மீது அளவற்ற கோபத்தில் இருக்கிறார்கள் தமிழகத்து சேகுவேராவின் ஆதரவாளர்கள்.//

    கியூபா ஒரு கம்யூனிஷ நாடு, சினா ஒரு கம்யூனிஷ நாடு.

    சீனா இலங்கைக்கு சொம்பு தூக்குது,
    கியுபா ஆரம்பத்திலிருந்தே சீனாவுக்கு சொம்பு தூக்குது, காரணம் ஒரு வல்லரசின் சப்போர்ட் வேணும் அதுக்கு.

    ஒன்னும் சொல்றதுகில்ல,

    நண்பனுக்கு நண்பன் நண்பனாகி விட்டான்!

    ReplyDelete
  27. //இந்த நிகழ்வுக்குப் பின்பு சேவின் புகைப்படம் போட்ட பனியனுடன் வெளியில் வருவதை அவரும், அவருடைய அருமைத் தம்பிமார்களும் நிறுத்திக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்து பட்சிகள் தெரிவிக்கின்றன.//

    இது கேனதனமா இருக்கு,
    சே ஒன்றும் கியூபாவின் சொத்தல்ல, மொத்த போராளிகளின் முன்னோடி.

    ReplyDelete
  28. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், இலங்கை விஷ்யத்தில் ஏன் தான் சேவை இழுக்கிறார்கள் என்று, கேணி பற்றி விரிவாக பதிவு செய்த்மைக்கு நன்றி..

    உங்காளை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  29. //கடைசியாக ஒரு புகைப்படம்..!//

    நீங்க எடுத்த போட்டோ யாருக்கு வேணும்,

    ”அந்த” கேமராவுல இருக்குர படத்தை போடுங்க!

    ReplyDelete
  30. [[[வால்பையன் said...

    //ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தற்காக கியூபா தேசத்தின் மீது அளவற்ற கோபத்தில் இருக்கிறார்கள் தமிழகத்து சேகுவேராவின் ஆதரவாளர்கள்.//

    கியூபா ஒரு கம்யூனிஷ நாடு, சினா ஒரு கம்யூனிஷ நாடு. சீனா இலங்கைக்கு சொம்பு தூக்குது,
    கியுபா ஆரம்பத்திலிருந்தே சீனாவுக்கு சொம்பு தூக்குது, காரணம் ஒரு வல்லரசின் சப்போர்ட் வேணும் அதுக்கு. ஒன்னும் சொல்றதுகில்ல,
    நண்பனுக்கு நண்பன் நண்பனாகி விட்டான்!]]]

    வாலு..

    அபாரமான பிக்கப்.. உலக அரசியலை பத்தி நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க..

    கீப் இட் அப்..

    ReplyDelete
  31. [[[வால்பையன் said...

    //இந்த நிகழ்வுக்குப் பின்பு சேவின் புகைப்படம் போட்ட பனியனுடன் வெளியில் வருவதை அவரும், அவருடைய அருமைத் தம்பிமார்களும் நிறுத்திக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்து பட்சிகள் தெரிவிக்கின்றன.//

    இது கேனதனமா இருக்கு, சே ஒன்றும் கியூபாவின் சொத்தல்ல, மொத்த போராளிகளின் முன்னோடி.]]]

    ஓகே.. கூல் டவுன் வாலு..

    அவர் இல்லைன்னா என்ன நீங்களும், நானும் போட்டுக்கலாம்.. என்ன குறைஞ்சு போச்சு..?!!

    ReplyDelete
  32. [[[அக்னி பார்வை said...

    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும், இலங்கை விஷ்யத்தில் ஏன் தான் சேவை இழுக்கிறார்கள் என்று]]]

    அவரும் போராளி.. பிரபாகரனும் போராளி என்று அவர்கள் நம்பினார்கள். அதனால்தான்.. சேகுவேராவைப் போல பிரபாகரன் என்றார்கள்..

    [[[கேணி பற்றி விரிவாக பதிவு செய்த்மைக்கு நன்றி..]]]

    தனிப்பதிவாத்தான் போட்டிருக்கணும்.. ஆனா நேரமில்லை. அதோட குறிப்பெடுக்காம விட்டுட்டேன்.. அதுனால மிஸ்ஸாயிருச்சு..

    [[[உங்காளை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி]]]

    எனக்கும்தான் அக்னிபார்வை..

    ReplyDelete
  33. [[[வால்பையன் said...

    //கடைசியாக ஒரு புகைப்படம்..!//

    நீங்க எடுத்த போட்டோ யாருக்கு வேணும், ”அந்த” கேமராவுல இருக்குர படத்தை போடுங்க!]]]

    நானும் கூகிளாண்டவர்கிட்ட கேட்டிருக்கேன்.. கொடுத்தாருன்னா தர்றேன்..

    ReplyDelete
  34. இட்லி சூப்பர்....

    அப்புறம் வால்பையனுக்கு அந்த புகைப்படம்.. (பக்கத்து இலைக்கு சாம்பார் கேட்பதுபோல :))) )

    ReplyDelete
  35. [[[ஊர்சுற்றி said...
    இட்லி சூப்பர்.... அப்புறம் வால்பையனுக்கு அந்த புகைப்படம்.. (பக்கத்து இலைக்கு சாம்பார் கேட்பதுபோல :))) )]]]

    குடுப்போம்ல.. இதுக்கெல்லாம் ஒரு கூட்டணி வேறயா..?

    ReplyDelete
  36. You didn't mention the name of Vasanth's friend. Several year's ago, in Trichy, one student read a fantastic poem and the function was presided over by Vairamuthu. Vairamuthu didn't mention that student's name during his speech. Few years later, another student from the same college raised this issue to Vairamuthu. Vairamuthu's response was "nanbare antha maanavanin perai neengal eppadi kurippidaamal maranthu poneergalo, adhe pola naanum maranthu ponen" Can you reveal the name of the donor? I am a new blogger, in your free time, if you don't mind, can you please go through my blog and comment on it. It will be very helpful to improve my blogging. thank you.
    http://yaazhumvaazhum.blogspot.com/

    ReplyDelete
  37. [[[kicha said...
    You didn't mention the name of Vasanth's friend. Several year's ago, in Trichy, one student read a fantastic poem and the function was presided over by Vairamuthu. Vairamuthu didn't mention that student's name during his speech. Few years later, another student from the same college raised this issue to Vairamuthu. Vairamuthu's response was "nanbare antha maanavanin perai neengal eppadi kurippidaamal maranthu poneergalo, adhe pola naanum maranthu ponen" Can you reveal the name of the donor? I am a new blogger, in your free time, if you don't mind, can you please go through my blog and comment on it. It will be very helpful to improve my blogging. thank you. http://yaazhumvaazhum.blogspot.com/
    ]]]

    நண்பரே..

    50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த வஸந்தின் நண்பர் ஒரு அறக்கட்டளை நடத்தி வருவதாகச் சொன்னார்கள்.

    அதோடு கூடவே வஸந்தின் மரண நிகழ்வின்போதுகூட மருத்துமனைக்கு பில் கட்டியதுகூட அவர்தானாம்..

    இறுதிச் சடங்கில் முன் நின்று பலவற்றையும் செய்திருக்கிறார் அந்த நண்பர்.

    நான் அந்த விழாவில் ஒரு சக உறுப்பினராக கலந்து கொண்டேன். மேடையில் அவருடைய பெயர் உச்சரிக்கப்படாததால் எனக்குத் தெரியவில்லை.

    அதே நேரம் இந்த நிகழ்வை பதிவாக எழுத நினைத்தது கடைசி நிமிடத்தில்தான் என்பதால் அந்த நல்ல இதயத்தின் பெயரை அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது..

    வருந்துகிறேன்..

    ReplyDelete
  38. எனக்கு தெரிந்தவரையில் , நீங்கள் புகைப்படம் போட்டிருக்கு விபத்து ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்தது.. ஆனால் அது நெதர்லாந்து அரச விழாவில் தான்..சரி பார்க்கவும்

    ReplyDelete
  39. Fidel isn't in power and Raul Castro is in control of Cuba. In my opinion, even if Cuba voted against SriLanka, there is no use. For example, International criminal court has issued warrant to arrest Sudanese President Omar Hassan al-Bashir for war crimes. But, nobody know who will carry out the arrest! The president is living happily.

    ReplyDelete
  40. [[[mvalarpirai said...
    எனக்கு தெரிந்தவரையில் , நீங்கள் புகைப்படம் போட்டிருக்கு விபத்து ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்தது.. ஆனால் அது நெதர்லாந்து அரச விழாவில்தான்.. சரி பார்க்கவும்]]]

    அப்படியா..? எனக்குத் தெரியவில்லையே..

    தேடிக் கண்டுபிடித்து தவறைச் சரி செய்து விடுகிறேன்..

    தகவலுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  41. [[[kicha said...
    Fidel isn't in power and Raul Castro is in control of Cuba. In my opinion, even if Cuba voted against SriLanka, there is no use. For example, International criminal court has issued warrant to arrest Sudanese President Omar Hassan al-Bashir for war crimes. But, nobody know who will carry out the arrest! The president is living happily.]]]

    கிச்சா..

    கியூபா செய்தது தன்னுடைய சொந்த நாட்டு நலனுக்காகத்தான்..

    இந்தியா, ரஷ்யா, சீனா என்று அதன் நட்பு நாடுகள் மூன்றுமே ஆதரிக்கும்போது தானும் ஆதரிப்பதுதான் தனது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது என்று நினைத்திருக்கிறார்கள் அதன் தற்போதைய ஆட்சியாளர்கள்..

    நீங்கள் சொன்னதைப் போல சூடான் சர்வாதிகாரி அமெரிக்காவுக்கு இப்போதைக்கு தேவையில்லை. ஆகவே விட்டு வைத்திருக்கிறார்கள். இது போல் பின்லேடன் இருக்க முடியுமா..?

    அது தேவையைப் பொறுத்த விஷயம் ஸார்..!

    தங்களது முதல் வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  42. நிறைய விஷயங்கள் நிறைந்த பதிவு.
    முழுசா படிச்சிட்டேன்.

    ReplyDelete
  43. [[[மங்களூர் சிவா said...
    நிறைய விஷயங்கள் நிறைந்த பதிவு. முழுசா படிச்சிட்டேன்.]]]

    தம்பீ..

    முழுசா படிச்சேன் சொல்லி என் மனசை டச் பண்ணிட்ட ராசா..

    நல்லாயிரு..!

    ReplyDelete
  44. //தமிழ்மணம் நிர்வாகம் தங்களது கருவிப்பட்டையில் வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த மாற்றம் நல்ல பலனைத் தந்துள்ளது.//


    உண்மைதான்
    வாக்களிக்கும் முறை ஒழுங்குபடுத்தப்பட்டபின்னர் என்ன நிலைமை என்று இங்கு பாருங்கள்

    ReplyDelete
  45. அது சரி

    இது போல் ப்ளாக்கரும் ஒரே ஐ.பியில் இருந்து வேறு அனானியாக மறுமொழி எழுதுவதை தடை செய்தால்

    இடுகை எழுதப்பட்ட உடன் அதை திட்டி வரும் அனானி மறுமொழிகள் குறையுமா என்று கூற முடியுமா

    ReplyDelete
  46. கியூபாவின் தற்போதைய ஆட்சியாளர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். சேகுவேராவை குற்றம் சொல்வது அர்த்தமற்றது. அவர் குற்றம் சொல்ல வேண்டியது காஸ்ட்ரோவை மட்டுமே.

    ReplyDelete
  47. ///புருனோ Bruno said...

    //தமிழ்மணம் நிர்வாகம் தங்களது கருவிப்பட்டையில் வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த மாற்றம் நல்ல பலனைத் தந்துள்ளது.//

    உண்மைதான். வாக்களிக்கும் முறை ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னர் என்ன நிலைமை என்று இங்கு பாருங்கள்///

    புருனோ ஸார்..

    அதில் என்ன தவறு இருக்கிறது..?

    தமிழ்மணம் நிர்வாகத்தார் தங்களது வசதிக்காக இன்னுமொரு வாய்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்..

    வைத்துவிட்டுப் போகட்டும்..

    தங்களுடைய பெயரும் முதல் பக்கத்தில் தெரிகிறதே.. தெரியாமல் இருந்தால்தானே பிரச்சினை..?

    ReplyDelete
  48. [[[புருனோ Bruno said...

    அது சரி. இது போல் ப்ளாக்கரும் ஒரே ஐ.பி.யில் இருந்து வேறு அனானியாக மறுமொழி எழுதுவதை தடை செய்தால் இடுகை எழுதப்பட்ட உடன் அதை திட்டி வரும் அனானி மறுமொழிகள் குறையுமா என்று கூற முடியுமா?]]]

    நிச்சயம் குறையும்..

    அதைவிட பலன் தரக்கூடியது தமிழ்மணம் போன்ற திரட்டிகளே தங்களது திரட்டியில் இணைந்த பதிவர்களின் ஐ.பி.எண்ணை பகிரங்கமாக வெளியிட்டுவிட்டால் இந்த அனானிகளின் ஆட்டம் அடங்கிவிடும்.

    ReplyDelete
  49. [[[Thomas Ruban said...
    கியூபாவின் தற்போதைய ஆட்சியாளர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். சேகுவேராவை குற்றம் சொல்வது அர்த்தமற்றது. அவர் குற்றம் சொல்ல வேண்டியது காஸ்ட்ரோவை மட்டுமே.]]]

    உண்மைதான்.. ஆனால் சேகுவேராவின் செயல்பாடுகளை எதனால் பிரபாகரனின் செயல்பாடுகளோடு ஓப்பிட்டார் என்று எனக்கும் தெரியவில்லை.

    கொஞ்சம் முட்டாள்தனமான முரண்பாடுதான் அது..

    ReplyDelete