Pages

Sunday, May 17, 2009

தம்பி சரத்பாபுவிற்கு ஒரு சல்யூட்..!

17-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



அரசியல் ஒரு சாக்கடை என்று திருக்குறளைப் போல் எழுதி வைத்துக் கொண்டு ஒப்பாரி மேல் ஒப்பாரி வைக்கும் ஒப்பற்ற தமிழர்களில் நானும் ஒருவன்.

புலம்புகிற நேரத்தில் அந்தச் சாக்கடைக்குள் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்யலாமே என்று எவராவது கேட்டுவிட்டால், பதில் சொல்ல நெஞ்சக்கூட்டில் மாஞ்சா இல்லை என்பதால் அப்போதைக்கு ஜூட் விடுவதுதான் இதுவரையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அன்னைக்குச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கும்போது இருப்பதையும் தொலைத்துவிட்டு பின்பு எதனை வைத்து வயிற்றை நிரப்புவது என்கின்ற பிரச்சினையால்தான் பெருவாரியான அரசியல் மீது அனுதாபமுள்ள இளைஞர்கள் அரசியலை பேசுவதோடு சரி.. உள்ளே இறங்காமல் தவிர்க்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

அதோடு இன்றைய அரசியலில் கவுன்சிலர் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்றால்கூட குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். போட்டதை அள்ள வேண்டும் என்று நினைத்தால் சாக்கடையைச் சுத்தம் செய்த வந்தவனாகத் தன்னைக் கருதக் கூடாது.. தன்னையும் ஒரு பன்றியாக நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இது இல்லாமல் நிஜமாகவே கவுன்சிலராகி மக்கள் சேவை செய்ய பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் முன் வரும் இந்தியர்கள் அல்லது தமிழர்களை தேடித்தான் பிடிக்க வேண்டும். இங்கு யாருக்கும் பணம் வீட்டில் முளைப்பதில்லை. வேறெங்கும் மரத்தில் காய்ப்பதில்லை. கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம்.

கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பதை மக்கள் பணியில் செலவழிக்கலாம். ஆனால் இங்கு இறக்கப்படும் பணம் முறைகேடாக பல்வேறு வழிகளில் அரசியல்வியாதிகளின் சின்னவீடு வரையிலும் சென்று சேர்வதால்தான் அந்த தயாள எண்ணம் கொண்டவர்கள்கூட இந்தச் சாக்கடையில் இறங்காமல் வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவியளித்து வருகிறார்கள்.

தேர்தல்களில் போட்டியிடுவது ஒரு பெயருக்காக அல்லது பிரபலத்துக்காக என்று வைத்துக் கொண்டாலும், தோற்கத்தான் போகிறோம் என்பது தெரிந்துதான் அனைத்து சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் எதிர்ப்பது கட்சிகளை வைத்து அரசுப் பணத்தை சுரண்டி தங்களது மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டு அரசு மரியாதையோடு செத்துப் போக விரும்புகின்ற அரசியலில் செத்த தலைவர்களுக்கும், அவர்தம் கொள்ளைக்கூட்டக் கம்பெனிக்கும் எதிரானவை என்பதால் நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்.


இதற்கெல்லாம் ஒரு தனி தைரியம் வேண்டும்தான்.. தோற்றால் பணமும் காலியாகும். மீண்டும் அந்தப் பணத்தை சம்பாதிக்க பெரும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பதெல்லாம் தெரிந்தும், உண்மையான
அக்கறையோடும், சமூக நோக்கத்தோடும் இந்தத் தேர்தலில் நின்றிருக்கிறார் அருமைத் தம்பி சரத்பாபு.


தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தம்பி சரத்பாபு அத்தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேச்சைகளிலும் அதிகப்படியான ஓட்டுக்களை வாங்கியுள்ளார்.

தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இல.கணேசன் பெற்ற ஓட்டுக்கள் 42,925.

பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.

ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.

வலையுலகத்தில் தம்பி பற்றி வெளியான செய்திகளினாலும், பத்திரிகைகள் அவருக்குக் கொடுத்த விளம்பரத்தினாலும் இந்தத் தம்பி அனைத்து சுயேச்சைகளையும் முந்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

இந்த விளம்பரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான தகுதி அவருக்கு உண்டு. இப்படியொரு பொடியன் தேர்தலில் நிற்கிறானே என்கிற ஆச்சரியும், மகிழ்ச்சியும் 14101 பேரை திருப்தி செய்து அவருக்கு வாக்களிக்க வைத்துள்ளது.

வெற்றிக்கும், தோல்விக்குமான ஓட்டு வித்தியாசத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றியிருக்கும் இவரால்தான் திமுகவுக்கு தோல்வி என்பதில்லை. ஆனால் அவர்களையும் தாண்டி 14101 வாக்காளர்கள் இந்தத் தம்பியும் ஜெயித்து வந்தால் நல்லதுதான் என்றெண்ணி தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளார்களே. அந்த நம்பிக்கையைப் பெற்றதற்காகவாவது அந்தத் தம்பியை மனதார வாழ்த்துகிறேன்.

இந்த 14101 ஓட்டுக்களில் நான் செலுத்திய எனது ஓட்டு ஒன்றும் சேர்ந்துள்ளது என்பதால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம். ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் தேர்தல்களில் தொடரும்பட்சத்தில் ஏதேனும் ஒரு நாளில் ஒரு தொகுதியில் சக்தியுள்ள யாரேனும் ஒருவர் தேர்தலில் நிற்க முன் வரும் சாத்தியக் கூறுகள் உண்டு. அந்த ஒருவர் ஜெயித்தால்கூட அதற்கு சரத்பாபு மாதிரியான தம்பிகளே காரணமாக இருப்பார்கள் என்பதால் இவர் போன்றவர்களை மனதார வரவேற்போம். ஆதரிப்போம்..

வாழ்க சரத்பாபு..

144 comments:

  1. அண்ணே அவரு பெற்ற வாக்குகள் 17+

    ReplyDelete
  2. 17,000+ அது பத்தி போஸ்ட் செய்யுறேன்

    ReplyDelete
  3. //பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.
    //

    அவர் எந்த தொழிலதிபரை கலங்கடித்தார் என்று விளக்க முடியுமா

    ஸ்பென்சர் பிளாசாவையா அல்லது தலைகவச (ஹெல்மெட்) நிறுவன தொழிலதிபர்களையா அல்லது அடித்தட்டு மக்கள் பொருட்கள் வாங்கும் நிறுவன அதிபர்களையா

    ReplyDelete
  4. //தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம்.//

    ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார்

    // ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.//

    நீங்களே கூறிவிட்டீர்கள்

    --

    ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம்

    ReplyDelete
  5. எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாமல் தனது தனி மனிதத் தகுதியை மட்டும் வைத்து களத்தில் இறங்கிய சரத்பாபு போன்ற இளைஞரகளை நாம் எவ்வளவு குறைவாக ஊக்குவித்திருக்கிறோம் என்பதை எண்ணும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
    அறியாமையில் உழலும் நமது தகுதிக்கேற்ற தலைவர்கள்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள்.
    ஜனநாயகம் என்பது நாடே கூடி ஆடும் சூதாட்டம் என்ற எனது எண்ணம் இன்னும் வலுப் பட்டிருக்கிறது,சரவணன்.

    ReplyDelete
  6. @ டாக்டர் Burno

    #########################

    //தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம்.//

    ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார்

    // ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.//

    நீங்களே கூறிவிட்டீர்கள்

    --

    ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம்
    ########################


    நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...

    என்ன தலைவா உங்க பத்தி நல்லவிதமா கேள்வி பட்டு இருக்கிறேன்..

    //ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம்//

    எப்படி இப்படி எல்லாம் வித்தியாசமா யோசிக்கிறிங்க...


    //ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார்//

    அவர் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர் யூத் icon வாங்கி இருக்காரு, அவர பத்தி ஒரு 3 ஆண்டுக்கு முன்னாடியே தெரியும்...

    இப்படி தான் விளம்பரம் பெற அவருக்கு அவசியம் இல்லை அந்த நேரத்தில் இந்த ஒரு மாதத்தில் அவர் தொழிலில் நேரம் செலவு செய்து இருந்தால் இன்னும் பல் கோடிகள் வந்து இருக்கும்..

    அவர் வந்து ஏதோ முயற்சி செய்து இருக்கிறார் அதையும் சந்தேக கண்ணோடு பார்த்தா என்ன செய்றது..

    அவரோடு பேசி இருக்கிறேன்.. இன்னும் இந்த கட்சிகள் மக்களை சிந்திக்க முடியாம் வச்சி இருக்கு, இதுக்கு தனியா எதும் செய்ய முடியாது வாங்க என்று எல்லாரையும் கூப்பிடுகிறார்...

    சரி சீதையே சந்தேக பட்ட ஊரு இது... நீங்க சந்தேக படலாம்..

    அப்போ ஒன்னு பண்ணுங்க தலைவா நீங்க அடுத்த தேர்தல நில்லுங்க உங்களுக்கு விளம்பரமும் , அதிக பணமும் வசுல் ஆகும் .. நான் உங்களும் பிளாகில் பிராச்சாரம் செய்யுறேன்..

    என்ன தில் இருக்கா நிக்க டாக்டர் ...

    அவன் அவன் குடும்பம் தன் வாழ்கை என்று பயணிக்கும் போது இப்படி நிக்கவே ஒரு தில் வேணும் ...

    உங்களுக்கு இருக்கா .. இருந்தா நில்லுங்க

    ReplyDelete
  7. //நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...
    //

    சுரேசு, ஏன் இப்படி டென்ஷன் ஆகுறிங்க. இதுல சீப் என்ன இருக்கு? ட்ராபிக் ராமசாமிக்கே தேர்தல் செலவுக்கு பணம் வேணுமான்னு கேட்டிருக்காங்க, சரத்பாபுவை கேட்டிருக்க மாட்டாங்களா? அவரு யூத் ஐகானா இருந்தப்போ உங்களை மாதிரி ஒரு சில யூத்துகளுக்கு மட்டும் தான் தெரியும் (என்னையும் சேர்த்து). ஆனால் தேர்தலில் கிடைத்த விளம்பரம் அதிகம். அந்த விளம்பரம் அவரது வியாபாரத்திலும் எதிரொலிக்கும்.

    அவர் பெற்ற வாக்குகளுக்காக அவரை வாழ்த்துவோம். துவண்டுவிடாமல் இருக்க தோள் கொடுப்போம். மக்கள் பணி செய்ய ஊக்குவிப்போம். அதை விட்டுட்டு அவரோட கொ.ப.சே ரேஞ்சுக்கு பேசிக்கிட்டு இருக்கக்கூடாது. பொறவு உங்களுக்கு "அல்லங்கை" பட்டம் தான் கிடைக்கும் :-). உங்க சரத்பாபுக்கு என்னோட ஒரு சின்ன அட்வைஸ்: அவரை அரசியல்ல கொஞ்சம் ஆரம்பக்கட்டங்களில் இருந்து தொடங்க சொல்லுங்க. எடுத்ததுமே எம்பி சீட்டுக்கு நிக்கிறதை விட அவரோட வார்டிலே கவுன்சிலர் ஆகி அந்த பகுதிக்கு நல்லது செஞ்சு படிப்படியா மேல வரச் சொல்லுங்க. அப்போ தான் அடித்தளம் பலமாக இருக்கும்.

    ReplyDelete
  8. என்னைக் கேட்டால் இவர் தேர்தலில் நின்று இருக்க வேண்டாம்.வேஸ்ட் செய்து விட்டார்.

    He should understand the ground realities before venturing into this.

    இவரை போல் படித்தவர், டீசெண்ட் fellow,பண்பானவர், என்ற ரேஞ்சில்
    இதற்கு முன் இவரைப் போல் கொத்து கொத்தாக வூடி கட்டி நின்றார்கள் பல வருடங்களுக்கு முன்னும்.

    1.வெங்கடேஸ்வரன்(IFS)2.Dr.ருத்ரன்
    3.GV 4.

    என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.நடிகை ரேவதி கூட
    நின்றதாக ஞாபகம்.


    ஆனால் தொகுதியில் இருக்கும் படித்த, டீசெண்ட் fellow,பண்பான வாக்காளார்கள் நிறைய பேர் போடுவித்தில்லை.காரணம்?

    “இவங்கெல்லாம் எங்க ஜெயிக்க போறாங்க”என்ற syndrome.

    தமிழ் நாட்டில் பப்பு வேகுமா? கஷ்டம்.

    எங்கள் பிளாட்டில் இருக்கும் 250 பேரில் ஆறு பேருக்குதான் இவரை தெரிகிறது(என்னையும் சேர்த்து)

    டிராபிப் ராமசாமி - 4 பேருக்கு.


    ”படித்தவர்கள் வர வேண்டும்” என்ற கான்செப்டில் நின்ற யாரும் ஜெயிச்சதாக வரலாறு இல்லை.

    உங்களைப் போல் போல் எனக்கும் ஆசைதான். ஆனால்...யதார்த்தம்..?

    இங்கு மலை முழுங்கிஅரசியல்வாதிகள்
    இருக்கிறார்கள்.

    அதனால் இந்த மாதிரி காமெடியெல்லாம்
    விட்டு அடி மட்டத்திலிருந்து ஆரம்பித்து மேல் வர வேண்டும்.

    It is a bitter truth.We have to digest.No other go.

    ReplyDelete
  9. சரத்பாவுவிற்கு வாழ்த்துகள்.

    // புருனோ Bruno said...

    ////தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம்.//

    ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார் //

    புருனோ.... தேர்தலுக்கு மட்டும் ஈழம் பேசுன ஜெயலலிதாவை விடவும்... திடீர் உண்ணாவிரதம் கண்டுபிடித்த கருணாநிதியை விடவுமா இவருக்கு விளம்பரம் கிடைத்திருக்கிறது!!!!

    // ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம் //

    புருனோ.. இப்பிடியும் யோசிச்சுப் பாருங்க... இவருக்கே நன்கொடை குவிஞ்சிருக்குன்னா.... தலைக்கு ஆயிரம் ரூவா குடுத்து பிரியாணி போட்டு ஓட்டு வாங்குன மகன்களுக்கும் பேரன்களுக்கும் எவ்ளோ நன்கொடை கிடைச்சிருக்கும்!!!!!! பேச்சுக்குன்னே அவர் நன்கொடைக்காகச் செஞ்சாருன்னு வெச்சுக்கிட்டாலும்.... .. தான் விரும்பும் அரசியல் கட்சியும் தலைவரும் மட்டுமே தப்பு செய்யலாம்! அது ராஜதந்திரம். ஆனா அடுத்தவன் எதுவும் செய்யக்கூடாது. :-) நல்லாருக்கு. ராமனின் மனைவி மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளா இருக்கனும்.

    ReplyDelete
  10. // ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.

    வலையுலகத்தில் தம்பி பற்றி வெளியான செய்திகளினாலும், பத்திரிகைகள் அவருக்குக் கொடுத்த விளம்பரத்தினாலும் இந்தத் தம்பி அனைத்து சுயேச்சைகளையும் முந்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

    இந்த விளம்பரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான தகுதி அவருக்கு உண்டு. இப்படியொரு பொடியன் தேர்தலில் நிற்கிறானே என்கிற ஆச்சரியும், மகிழ்ச்சியும் 14101 பேரை திருப்தி செய்து அவருக்கு வாக்களிக்க வைத்துள்ளது//


    வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  11. உ.த அண்ணாச்சி, இந்த பதிவு நீங்க எழுதாம இருந்திருக்கலாம். சரத்பாபு அரசியலுக்கு வர ஆசைப்படறது சந்தோஷமான விஷயம். ஆனா அவருக்கான வரவேற்பு? என்ன தான் உங்கள மாதிர் ஆளுங்க எதிர்பார்ப்புன்னே புரியலை.

    //பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.

    ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.//

    இதைப் படிக்கவே கேவலமா இருக்கு. எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் மக்களுக்காக பல வழக்குகள் போட்டு அதில் சாதித்த பொதுநலவாதி ராமசாமிக்கு 1693 ஓட்டுகள். ஆனால் வெத்து தேர்தல் அறிக்கையும் இங்க்லீச்ல பீட்டர் வெப்சைட்டையும் வச்சிட்டு நன்கொடை வசூல் பண்ணி போட்டியிட்ட ஒரு பிசினச்மேனுக்கு 14000 ஓட்டுகள். இதுல நானும் போட்டேன்னு பெருமை வேற?

    தன்னை பொதுநலவாதியாக நிரூபித்துக் காட்டின ராமசாமிக்கு ஓட்டுப் போடாம வெறும் பகட்டுட்டு ஓட்டுப் போட்டிருக்கிங்களே.. இதை எப்டி வெளிய வேற சொல்லிட்டு ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்றிங்க?

    ஒன்னு, சீமான், பரதிராஜான்னு சினிமா வேஷதாரிகளை புகழ்றிங்க. இல்லைனா பகட்டுத் தோற்றம் கொண்ட சரத்பாபுவை ஆதரிக்கிறிங்க. கொடுமை அண்ணாச்சி. :(

    ReplyDelete
  12. //நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...//

    இதில் எது சீப் என்று கூறுங்கள்

    ReplyDelete
  13. //அவர் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர் யூத் icon வாங்கி இருக்காரு, அவர பத்தி ஒரு 3 ஆண்டுக்கு முன்னாடியே தெரியும்...//

    எத்தனை பேருக்கு அவரை பற்றி பிப் 1, 2009 தெரியும்

    எத்தனை பேருக்கு அவரை பற்றி மே 13 2009 தெரியும்

    ஆக அவர் விளம்பரம் பெற்றார் என்பது உண்மைதானே

    இதை உங்களால் மறுக்க முடியுமா

    ReplyDelete
  14. //அவர் வந்து ஏதோ முயற்சி செய்து இருக்கிறார் அதையும் சந்தேக கண்ணோடு பார்த்தா என்ன செய்றது..//

    அரசியலில் ஈடுபட அவருக்கு முழு உரிமை உள்ளது.

    ஆனால் ஒரு வார்டு கவுன்சிலராக கூட தேர்தலில் நிற்காதவர் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா.

    கண்டிப்பாக முடியாது என்று தான் நினைக்கிறேன்

    (கட்சி சார்பாக போட்டியிட்டால் வெல்லலாம்)

    தமிழகத்தில் போட்டியிடுபவர் வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்தில் வைத்திருந்தாரே

    அப்படி இருக்க தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் அவர் போட்டியிட்ட காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா

    ReplyDelete
  15. //அப்போ ஒன்னு பண்ணுங்க தலைவா நீங்க அடுத்த தேர்தல நில்லுங்க உங்களுக்கு விளம்பரமும் , அதிக பணமும் வசுல் ஆகும் .. நான் உங்களும் பிளாகில் பிராச்சாரம் செய்யுறேன்..

    என்ன தில் இருக்கா நிக்க டாக்டர் ...

    அவன் அவன் குடும்பம் தன் வாழ்கை என்று பயணிக்கும் போது இப்படி நிக்கவே ஒரு தில் வேணும் ...

    உங்களுக்கு இருக்கா .. இருந்தா நில்லுங்க//

    எனக்கு விளம்பரமும் தேவையில்லை
    கருப்பு பணத்தை வெள்ளையாக்க அவசியமும் இல்லை

    ReplyDelete
  16. ஒருவேளை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினால் நான் இந்த அறிவுரையை கட்டாயம் கடைபிடிப்பேன்

    //அவரை அரசியல்ல கொஞ்சம் ஆரம்பக்கட்டங்களில் இருந்து தொடங்க சொல்லுங்க. எடுத்ததுமே எம்பி சீட்டுக்கு நிக்கிறதை விட அவரோட வார்டிலே கவுன்சிலர் ஆகி அந்த பகுதிக்கு நல்லது செஞ்சு படிப்படியா மேல வரச் சொல்லுங்க. அப்போ தான் அடித்தளம் பலமாக இருக்கும்.//

    நன்றி ராஜா | KVR சார்

    ReplyDelete
  17. //“இவங்கெல்லாம் எங்க ஜெயிக்க போறாங்க”என்ற syndrome.//

    அப்படி இல்லை

    அவர் வார்டு கவுன்சிலராகவோ ஊராட்சி மன்ற தலைவராகவோ ஒரு 5 வருடம் பணிபுரிந்திருந்தால் அந்த சாதனையை காட்டினால் கட்டாயம் மக்கள் வாக்களிப்பார்கள்

    நேரடியாக நாடாளுமன்றத்திற்கு நிற்பது தான் பிரச்சனையே

    ReplyDelete
  18. //புருனோ.. இப்பிடியும் யோசிச்சுப் பாருங்க... இவருக்கே நன்கொடை குவிஞ்சிருக்குன்னா..//

    ஹி ஹி ஹி

    நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை.

    இந்தியாவில் தேர்தலில் சுயேட்சையாக நிற்பதற்கு ஒரு காரணம் உள்ளது

    அது நன்கொடை பெறுவதில்லை. நன்கொடை பெற்றதாக கூறுவது.

    இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. ஹி ஹி ஹி

    ReplyDelete
  19. //அது நன்கொடை பெறுவதில்லை. நன்கொடை பெற்றதாக கூறுவது.

    இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. ஹி ஹி ஹி
    //

    Bruno sir, பதிவுக்கூ சம்பந்தம் இல்லாத கேள்வி. சுயேச்சை ஒருவர் தேர்தலுக்காக நன்கொடை பெறும்போது வரிச்சலுகை எதாவது உண்டா?

    //ஒருவேளை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினால் நான் இந்த அறிவுரையை கட்டாயம் கடைபிடிப்பேன்//

    நன்றி சார்

    ReplyDelete
  20. சரத்பாபு, சர்கரை,உண்மை தமிழன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

    அதே நேரம் டாக்டர் புரூனோ, சஞ்சய் ஆகியவர்களுக்கு கண்டனம்! தேவை இல்லாமல் காமடிபீஸ்களுக்காக உங்கள் நேரத்தை விரயம் செய்ததுக்கு!

    ReplyDelete
  21. //Bruno sir, பதிவுக்கூ சம்பந்தம் இல்லாத கேள்வி. சுயேச்சை ஒருவர் தேர்தலுக்காக நன்கொடை பெறும்போது வரிச்சலுகை எதாவது உண்டா?//

    பதிவிற்கு சம்பந்தம் உள்ள கேள்விதான் :) :) :)

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  22. டாக்டர் சொல்வது போல் சரத்பாபு தேர்தலில் போட்டியிடப் போவதாக வலைபதிவுகளில் படிக்கும் முன் அவரை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அபப்டி ஒருவர் இருப்பது உட்பட.

    நான் இப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தன் சாதனைகளை மக்களுக்கான போராட்டத்தை நிரூபித்த ட்ராபிக் ராமசாமியை விட்டு வெறு பகட்டு விளம்பரம் செய்த சரத் பாபுவை ஆதரித்து, அவருக்கும் ஓட்டும் போட்ட அதிமேதாவிகளை தான் வன்மையாகக் கண்டிக்க விரும்பறேன். கண்ணுக்குத் தெரிஞ்சி நல்லது பன்ற ஒருத்தரை விட்டு வெத்து சீன் போட்டவரை ஆதரிக்கும் இவர்களை என்ன செய்வது? இவர்களை எல்லாம் பார்த்தால் நானெல்லாம் ஒரு சார்பாக அரசியல் சப்பைக் கட்டுவதில் என்ன தவறு?

    ராமசாமியை விட சரத்பாபு சிறந்தவர் என எண்ணும் இது போன்ற மேதாவிகள் இருக்கும் போது எவனுக்கு நல்லது பண்ண ஆசைவரும்?. ஒருவேளை சரத்பாபு தான் கோழிபிரியாணியும் குவார்ட்டரும் வாங்கிக் குடுக்க முடியும். ஓட்டாண்டி ராமசாமி பின்னால போனா என்ன கிடைக்கும்னு நினைக்கிறாங்க போல.

    ReplyDelete
  23. மிகவும் நன்றி சரத்துக்கு ஓட்டு போட்டு 14 ஆயிரத்தி நூறில் ஒருவராக வந்ததற்கு.
    நானும் இதைப்பற்றி ஒரு பதிவையிட இருந்தேன். இது இளைய சமுதாயத்திற்கு கிடைக்கப் போகும் வெற்றியின் தொடக்கம்......

    ReplyDelete
  24. //ராமசாமியை விட சரத்பாபு சிறந்தவர் என எண்ணும் இது போன்ற மேதாவிகள் இருக்கும் போது //

    ராமசாமி பிராமணர் என்பதால் ஏற்பட்ட பிராமண எதிர்ப்பு மனநிலை காரணமாக இருக்குமோ ;-) (எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கய்யா'ன்னு உண்மைத்தமிழரு சொல்றது காதுல விழுது - வுடு ஜூட்)

    ReplyDelete
  25. குத்தம்பாக்கம் இளங்கோ என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காரைக்குடியில் உள்ள சிக்ரியில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். பத்தாண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அடித்தள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் கிராமமான குத்தம்பாக்கத்திற்குத் திரும்பி தேர்தலில் நின்றார். இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். இன்று ஊர் உலகத்திற்கே ஓர் உதாரணமாக மாறியிருக்கிறது. (மேலும் விவாங்களுக்கு காண்க http://thoughtsintamil.blogspot.com/2006/08/vs.html )

    சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்த வ்ழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
    அரசியலைத் தூய்மைப்படுத்த தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை

    ReplyDelete
  26. //இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். இன்று ஊர் உலகத்திற்கே ஓர் உதாரணமாக மாறியிருக்கிறது. (மேலும் விவாங்களுக்கு காண்க http://thoughtsintamil.blogspot.com/2006/08/vs.html )

    சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்த வ்ழியைத் தேர்ந்தெடுக்கலாம்.//

    வழிமொழிகிறேன்

    //அரசியலைத் தூய்மைப்படுத்த தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை//

    தேர்தலில் நிற்கலாம். ஆனால் கட்சி பின்புலம் இல்லாவிட்டால் படிப்படியாக வருவது தான் நடைமுறைக்கு சாத்தியம்

    அதை விடுத்து நேரடியாக நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டால் எங்களுக்கு சந்தேகிக்க உரிமை உண்டு

    ReplyDelete
  27. //குத்தம்பாக்கம் இளங்கோ என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

    அவரைப் பற்றியும் அவரது சேவைகளையும் ஒரு வலைத்தளத்தில் (பத்ரியுடையதல்ல) படித்திருக்கிறேன் மாலன் ஐயா. அவர் தனது கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மற்ற பஞ்சாயத்து பிரசிடெண்டுகளுக்கும் கிராம வளர்ச்சிப்பணிகளில் உதவிட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    சிதம்பரத்திற்கு அருகில் இருக்கும் கீரப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தனது கிராம வளர்ச்சிக்கு முன்னின்று பணியாற்றியவர். கட்சி சார்பில் அதிமுகவாக இருந்தாலும் ஊரில் அனைவரது மதிப்பையும் பெற்றவர். ஒரு வளர்ச்சியும் இல்லாது இருந்த கீரப்பாளையம் இன்று அந்தச் சுற்றுப்புறத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர அவரும் ஒரு காரணம்(பெயர் பன்னீர்செல்வம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை)

    ReplyDelete
  28. புருனோ அவர்கள் சொன்னது போல கருப்பை வெள்ளையாக்க அவர் தேர்தலில் நின்று இருந்தாலும் பல இளைஞர்களுக்கு அவரால் புதிய உத்வேகமும் அரசியல் நம்பிக்கையும் கிடைத்ததை மறுக்க முடியாது. இந்தியாவில் எந்த அரசியல் கட்சி நிதி வசூலிக்காமல் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் வரையறுத்த அளவு செலவு செய்தது? எந்த அரசியல் கட்சியின் வரலாறிலும் தூய்மையை தேடினாலும் கிடைக்காது.

    டிராபிக் ராமசாமிக்கு போட்டு இருக்கலாம் நமக்கு இரண்டு ஓட்டுக்கள் இல்லையே.. இருந்த ஒன்றை இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க பயன்படுத்தியதில் சந்தோசமே... அதனால் சில இளைஞர்களுக்கு நம்ம்பிக்கை ஒளி தென்படுகிறது...

    காந்தியையும், நேதாஜியையும் குறை சொல்லுபவர்களும் அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிப்பவர்களும் இருக்கும் நாடுதான் நமது ஜனநாயக நாடு. அவர்களின் கருத்துக்கள் சரத்தின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் மாற வேண்டுமென்பதே எனது விருப்பம்.

    ReplyDelete
  29. //அவர்களின் கருத்துக்கள் சரத்தின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் மாற வேண்டுமென்பதே எனது விருப்பம்.
    //

    வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  30. //Suresh said...
    அண்ணே அவரு பெற்ற வாக்குகள் 17+//

    தினமலரைப் பார்த்து எழுதினேன்.. தப்பா..?

    ReplyDelete
  31. [[Suresh said...

    17,000+ அது பத்தி போஸ்ட் செய்யுறேன்]]

    சீக்கிரமா செய்யுங்கள். அவரிடம் கேட்டாவது சொல்லுங்கள்..

    ReplyDelete
  32. [[[புருனோ Bruno said...

    //பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.//

    அவர் எந்த தொழிலதிபரை கலங்கடித்தார் என்று விளக்க முடியுமா ஸ்பென்சர் பிளாசாவையா அல்லது தலைகவச (ஹெல்மெட்) நிறுவன தொழிலதிபர்களையா அல்லது அடித்தட்டு மக்கள் பொருட்கள் வாங்கும் நிறுவன அதிபர்களையா]]]

    இவர்களைத்தான் டாக்டர்..

    ReplyDelete
  33. [[[புருனோ Bruno said...

    //தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம்.//
    ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார்]]

    இந்த விளம்பரத்தை வைத்து என்ன செய்ய..?

    // ஆனால் அவருடைய தைரியமான மனத்திடத்தினால், பல ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.//

    நீங்களே கூறிவிட்டீர்கள்]]

    அதனால்தான் பதிவெழுதினேன்..

    [[ஒரு வேளை அவரது செலவைவிட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம்]]]

    இப்படி ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்பட்டுக் கொண்டே சென்றால் நமக்காக பேச ஒருவரும் வர மாட்டார்கள். இருக்கவும் மாட்டார்கள்.

    ரவுடிகளும், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும்தான் இருப்பார்கள்..

    ReplyDelete
  34. [[ஷண்முகப்ரியன் said...

    எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாமல் தனது தனி மனிதத் தகுதியை மட்டும் வைத்து களத்தில் இறங்கிய சரத்பாபு போன்ற இளைஞரகளை நாம் எவ்வளவு குறைவாக ஊக்குவித்திருக்கிறோம் என்பதை எண்ணும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

    அறியாமையில் உழலும் நமது தகுதிக்கேற்ற தலைவர்கள்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள்.
    ஜனநாயகம் என்பது நாடே கூடி ஆடும் சூதாட்டம் என்ற எனது எண்ணம் இன்னும் வலுப் பட்டிருக்கிறது, சரவணன்.]]

    உண்மைதான் ஸார்..

    இன்னும் நிறைய வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்..!

    ReplyDelete
  35. [[[Suresh said...

    நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...

    என்ன தலைவா உங்க பத்தி நல்லவிதமா கேள்வி பட்டு இருக்கிறேன்..]]

    இதுதான் மருத்துவர் புருனோ.. எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்பது எவருக்கும் தெரியாது..

    [//ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம்//

    எப்படி இப்படி எல்லாம் வித்தியாசமா யோசிக்கிறிங்க...]]]

    அதனாலதான் கேட்டிருக்காரு..

    [//ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார்//

    அவர் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர் யூத் icon வாங்கி இருக்காரு, அவர பத்தி ஒரு 3 ஆண்டுக்கு முன்னாடியே தெரியும்...]]

    ஆனால் எனக்கு இப்போது, தேர்தலில் நிற்கும்போதுதான் தெரியும்..

    [[இப்படிதான் விளம்பரம் பெற அவருக்கு அவசியம் இல்லை அந்த நேரத்தில் இந்த ஒரு மாதத்தில் அவர் தொழிலில் நேரம் செலவு செய்து இருந்தால் இன்னும் பல் கோடிகள் வந்து இருக்கும்.. அவர் வந்து ஏதோ முயற்சி செய்து இருக்கிறார் அதையும் சந்தேக கண்ணோடு பார்த்தா என்ன செய்றது.. அவரோடு பேசி இருக்கிறேன்.. இன்னும் இந்த கட்சிகள் மக்களை சிந்திக்க முடியாம் வச்சி இருக்கு, இதுக்கு தனியா எதும் செய்ய முடியாது வாங்க என்று எல்லாரையும் கூப்பிடுகிறார்...
    சரி சீதையே சந்தேகபட்ட ஊரு இது... நீங்க சந்தேகபடலாம்..]]

    வழி மொழிகிறேன்..

    [[அப்போ ஒன்னு பண்ணுங்க தலைவா நீங்க அடுத்த தேர்தல நில்லுங்க உங்களுக்கு விளம்பரமும், அதிக பணமும் வசுல் ஆகும் .. நான் உங்களும் பிளாகில் பிராச்சாரம் செய்யுறேன்.. என்ன தில் இருக்கா நிக்க டாக்டர்... அவன் அவன் குடும்பம் தன் வாழ்கை என்று பயணிக்கும் போது இப்படி நிக்கவே ஒரு தில் வேணும்...
    உங்களுக்கு இருக்கா.. இருந்தா நில்லுங்க]]

    புருனோ அண்ணன் நின்னாலும் நான் இப்படித்தான் அவரை ஆதரிச்சு எழுதுவேன்.. ஓட்டுப் போடுவேன்..

    நன்றி சுரேஷ்..

    ReplyDelete
  36. [[ராஜா | KVR said...

    //நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...//

    சுரேசு, ஏன் இப்படி டென்ஷன் ஆகுறிங்க. இதுல சீப் என்ன இருக்கு? ட்ராபிக் ராமசாமிக்கே தேர்தல் செலவுக்கு பணம் வேணுமான்னு கேட்டிருக்காங்க, சரத்பாபுவை கேட்டிருக்க மாட்டாங்களா? அவரு யூத் ஐகானா இருந்தப்போ உங்களை மாதிரி ஒரு சில யூத்துகளுக்கு மட்டும்தான் தெரியும் (என்னையும் சேர்த்து). ஆனால் தேர்தலில் கிடைத்த விளம்பரம் அதிகம். அந்த விளம்பரம் அவரது வியாபாரத்திலும் எதிரொலிக்கும்.]]

    அது எப்படி வியாபாரத்தில் எதிரொலிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    யாரவது சொல்லலாம்.. பேசலாம்.. இவர் எலெக்ஷன்ல நின்னவர்.. அதுக்காக இவர் தயாரிக்கிற தொழிலுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    [[அவர் பெற்ற வாக்குகளுக்காக அவரை வாழ்த்துவோம். துவண்டு விடாமல் இருக்க தோள் கொடுப்போம். மக்கள் பணி செய்ய ஊக்குவிப்போம். அதை விட்டுட்டு அவரோட கொ.ப.சே ரேஞ்சுக்கு பேசிக்கிட்டு இருக்கக்கூடாது.]]

    ஏங்க எனக்கில்லாத தைரியம் உனக்கிருக்கேடா ராசான்னு வாழ்த்தினா நான் அவரோட கொ.ப.செ.வா.. நல்லாயிருக்கே உங்க ஞாயம்..?

    [[பொறவு உங்களுக்கு "அல்லங்கை" பட்டம்தான் கிடைக்கும் :-).]]

    அதான் ஏற்கெனவே எனக்குக் கிடைச்சாச்சே..

    [[உங்க சரத்பாபுக்கு என்னோட ஒரு சின்ன அட்வைஸ்:]]

    ஏன் இப்படி பிரிச்சுப் பிரிச்சுப் பேசுறீங்கன்னா.. நம்ம சரத்பாபுன்னு பேசுங்கண்ணா..

    [[அவரை அரசியல்ல கொஞ்சம் ஆரம்பக் கட்டங்களில் இருந்து தொடங்க சொல்லுங்க. எடுத்ததுமே எம்பி சீட்டுக்கு நிக்கிறதை விட அவரோட வார்டிலே கவுன்சிலர் ஆகி அந்த பகுதிக்கு நல்லது செஞ்சு படிப்படியா மேல வரச் சொல்லுங்க. அப்போதான் அடித்தளம் பலமாக இருக்கும்.]]

    இதுவும் நல்ல ஐடியாதான்.. ஆனா முடிவெடுக்க வேண்டியது அவர்தான்..

    ஒரு சிலருக்கு ஒண்ணு பிடிக்கும். ஒண்ணு பிடிக்காது.. அந்த லிஸ்ட்ல இதுவும் சேரும்.

    வருகைக்கு நன்றி ராஜா ஸார்..!

    ReplyDelete
  37. [[[கே.ரவிஷங்கர் said...

    என்னைக் கேட்டால் இவர் தேர்தலில் நின்று இருக்க வேண்டாம். வேஸ்ட் செய்து விட்டார்.]]

    எதை ரவிசங்கர்...?

    [[He should understand the ground realities before venturing into this.

    இவரை போல் படித்தவர், டீசெண்ட் fellow, பண்பானவர், என்ற ரேஞ்சில்
    இதற்கு முன் இவரைப் போல் கொத்து கொத்தாக வூடி கட்டி நின்றார்கள் பல வருடங்களுக்கு முன்னும்.
    1.வெங்கடேஸ்வரன்(IFS)2.Dr.ருத்ரன்
    3.GV 4. என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.நடிகை ரேவதி கூட
    நின்றதாக ஞாபகம்.]]

    ஆமாம்.. உண்மைதான்.. மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ரேவதி நெடுஞ்செழியனைவிடவும் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

    [[ஆனால் தொகுதியில் இருக்கும் படித்த, டீசெண்ட் fellow, பண்பான வாக்காளார்கள் நிறைய பேர் போடுவித்தில்லை. காரணம்?
    “இவங்கெல்லாம் எங்க ஜெயிக்க போறாங்க”என்ற syndrome.
    தமிழ்நாட்டில் பப்பு வேகுமா? கஷ்டம்.
    எங்கள் பிளாட்டில் இருக்கும் 250 பேரில் ஆறு பேருக்குதான் இவரை தெரிகிறது(என்னையும் சேர்த்து)
    டிராபிப் ராமசாமி - 4 பேருக்கு.
    ”படித்தவர்கள் வர வேண்டும்” என்ற கான்செப்டில் நின்ற யாரும் ஜெயிச்சதாக வரலாறு இல்லை.
    உங்களைப் போல் போல் எனக்கும் ஆசைதான். ஆனால்...யதார்த்தம்..?

    இங்கு மலை முழுங்கி அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
    அதனால் இந்த மாதிரி காமெடியெல்லாம்
    விட்டு அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து மேல் வர வேண்டும்.

    It is a bitter truth. We have to digest. No other go.]]

    நல்லது ரவி.. அடிமட்டத்திலிருந்து வருவதென்றால் அடியோடு போய்விடுவார் சரத்..

    சட்டசபைத் தேர்தல், மக்களவைத் தேர்தலாவது பரவாயில்லை. சுயேச்சைகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.

    ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் இவ்வளவு தைரியமாக யாராலும் நிற்க முடியாது.

    உயிர் போனாலும் போய்விடும்..

    நான் தேர்தலில் நிற்க முடிவெடுத்தாலும் எடுத்த எடுப்பிலேயே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.விற்குத்தான் முயல்வேன்..

    வெற்றி தோல்வி என்பது அடுத்த விஷயம்.

    ReplyDelete
  38. //அது எப்படி வியாபாரத்தில் எதிரொலிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. //

    குழந்தை மாதிரி பேசாதிங்க. டெண்டுல்கர் யாருக்கும் தெரியாம ஓட்டல் நடத்துறதுக்கும் டெண்டுல்கர் ஓட்டல்னு விளம்பரம் பண்ணி நடத்தறதுக்கும் வித்தியாசம் இருக்கு? இதுல எது லாபம்னு சொல்லனுமா?

    ReplyDelete
  39. [[[G.Ragavan said...
    சரத்பாவுவிற்கு வாழ்த்துகள்.
    // புருனோ Bruno said...
    /தம்பி இதில் பணத்தை இழந்திருக்கலாம்./
    ஆனால் விளம்பரம் பெற்றிருக்கிறார் சார் //

    புருனோ.... தேர்தலுக்கு மட்டும் ஈழம் பேசுன ஜெயலலிதாவை விடவும்... திடீர் உண்ணாவிரதம் கண்டுபிடித்த கருணாநிதியை விடவுமா இவருக்கு விளம்பரம் கிடைத்திருக்கிறது!!!!]]]

    விளம்பரம் கொஞ்சம்தான்.. அதாவது வலையுலகில் நான்கு பேருக்குத் தெரிந்தது.. பத்திரிகைகளைத் தொடர்ச்சியாக படித்தவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவ்வளவுதான்..

    [//ஒரு வேளை அவரது செலவை விட அவர் பெற்ற நன்கொடை அதிகமாக கூட இருக்கலாம் //

    புருனோ.. இப்பிடியும் யோசிச்சுப் பாருங்க... இவருக்கே நன்கொடை குவிஞ்சிருக்குன்னா.... தலைக்கு ஆயிரம் ரூவா குடுத்து பிரியாணி போட்டு ஓட்டு வாங்குன மகன்களுக்கும் பேரன்களுக்கும் எவ்ளோ நன்கொடை கிடைச்சிருக்கும்!!!!!! பேச்சுக்குன்னே அவர் நன்கொடைக்காகச் செஞ்சாருன்னு வெச்சுக்கிட்டாலும்.... .. தான் விரும்பும் அரசியல் கட்சியும் தலைவரும் மட்டுமே தப்பு செய்யலாம்! அது ராஜதந்திரம். ஆனா அடுத்தவன் எதுவும் செய்யக்கூடாது. :-) நல்லாருக்கு. ராமனின் மனைவி மட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளா இருக்கனும்.]]

    இது நல்லாயிருக்கே..

    ஆனா இதை நான் சொன்னா சட்டையைப் பிடிக்க வருவாங்க நாலு பேரு..

    கட்சிப் பாசம் பொங்கி வரும்..

    இது பற்றி வாக்குவாதம் பண்ணாம நம் கருத்து நமக்கு.. உன் கருத்து உனக்குன்னு சொல்லிட்டுப் போயிர வேண்டியதுதான்..

    ஜி.ராகவன் ஸார்.. ரொம்ப மாசம் கழித்து வந்ததுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  40. [[[Kanna said...

    // ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.

    வலையுலகத்தில் தம்பி பற்றி வெளியான செய்திகளினாலும், பத்திரிகைகள் அவருக்குக் கொடுத்த விளம்பரத்தினாலும் இந்தத் தம்பி அனைத்து சுயேச்சைகளையும் முந்தியிருக்கிறார் என்பது புரிகிறது.

    இந்த விளம்பரம் சும்மா கிடைக்கவில்லை. அதற்கான தகுதி அவருக்கு உண்டு. இப்படியொரு பொடியன் தேர்தலில் நிற்கிறானே என்கிற ஆச்சரியும், மகிழ்ச்சியும் 14101 பேரை திருப்தி செய்து அவருக்கு வாக்களிக்க வைத்துள்ளது//


    வழிமொழிகிறேன்...]]]

    நன்றி கண்ணா..!

    ReplyDelete
  41. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    உ.த அண்ணாச்சி, இந்த பதிவு நீங்க எழுதாம இருந்திருக்கலாம். சரத்பாபு அரசியலுக்கு வர ஆசைப்படறது சந்தோஷமான விஷயம். ஆனா அவருக்கான வரவேற்பு? என்னதான் உங்கள மாதிர் ஆளுங்க எதிர்பார்ப்புன்னே புரியலை.]]]

    இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட திராவிட அரசியல்வியாதிகளும், பதவி ஒன்றையே மையமாக வைத்து கட்சி பிஸினஸ் செய்து வரும் காங்கிரஸும், மத வெறியைத் தூண்டிவிட்டு அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க நினைத்து பிஜேபியும் அல்லாமல் யாராவது, எவராவது வந்து நல்ல வழி காட்ட மாட்டாரா என்பதுதான் எனது எதிர்பார்ப்பு..

    [//பல வருடங்களாக மாநில அரசுகளையும், தொழிலதிபர்களையும், காவல்துறையினரையும் கலங்கடித்து வரம் டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகர் பெற்ற ஓட்டுக்கள் 1693.

    ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலமே பிரபலமான நமது அன்புத் தம்பி சரத்பாபு பெற்றுள்ள ஓட்டுக்கள் 14101.//

    இதைப் படிக்கவே கேவலமா இருக்கு. எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் மக்களுக்காக பல வழக்குகள் போட்டு அதில் சாதித்த பொதுநலவாதி ராமசாமிக்கு 1693 ஓட்டுகள். ஆனால் வெத்து தேர்தல் அறிக்கையும் இங்க்லீச்ல பீட்டர் வெப்சைட்டையும் வச்சிட்டு நன்கொடை வசூல் பண்ணி போட்டியிட்ட ஒரு பிசினச்மேனுக்கு 14000 ஓட்டுகள். இதுல நானும் போட்டேன்னு பெருமை வேற?]]]

    தன்னை பொதுநலவாதியாக நிரூபித்துக் காட்டின ராமசாமிக்கு ஓட்டுப் போடாம வெறும் பகட்டுட்டு ஓட்டுப் போட்டிருக்கிங்களே.. இதை எப்டி வெளிய வேற சொல்லிட்டு ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்றிங்க?]]

    ஏன் இவ்ளோ கோபம்..?

    ரெண்டு பேருமே தோக்கப் போறாங்கன்னு எனக்கு மட்டுமில்ல.. அவங்களுக்கே தெரியும்..

    ராமசாமி ஐயா ரொம்ப வருஷமா பொதுவாழ்க்கையில இருக்காரு. ஆனா தம்பி இப்பத்தான் உள்ளயே பூந்திருக்காரு..

    யாரை உற்சாகப்படுத்தணும்..? தம்பியைத்தான.. அதான் செஞ்சேன்..

    [[ஒன்னு, சீமான், பரதிராஜான்னு சினிமா வேஷதாரிகளை புகழ்றிங்க. இல்லைனா பகட்டுத் தோற்றம் கொண்ட சரத்பாபுவை ஆதரிக்கிறிங்க. கொடுமை அண்ணாச்சி. :(]]]

    சீமான், பாரதிராஜாவால்தான் தொங்கபாலுவும், திமிர் பிடிச்ச இளங்கோவனும், தொகுதிப் பக்கமே வராத மணிசங்கரய்யரும் தோத்துப் போயிருக்காங்க..

    வாழ்க பாரதிராஜா, சீமான்..

    ReplyDelete
  42. [[[புருனோ Bruno said...

    //நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...//

    இதில் எது சீப் என்று கூறுங்கள்.]]]

    தம்பியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு செய்கையில் குற்றம் கண்டுபிடிக்க முயல்கிறீர்களே.. அது நியாயமா என்கிறார்..

    ReplyDelete
  43. [[[புருனோ Bruno said...

    //அவர் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவர் யூத் icon வாங்கி இருக்காரு, அவர பத்தி ஒரு 3 ஆண்டுக்கு முன்னாடியே தெரியும்...//

    எத்தனை பேருக்கு அவரை பற்றி பிப் 1, 2009 தெரியும்

    எத்தனை பேருக்கு அவரை பற்றி மே 13 2009 தெரியும்

    ஆக அவர் விளம்பரம் பெற்றார் என்பது உண்மைதானே

    இதை உங்களால் மறுக்க முடியுமா?]]]

    புருனோ ஸார்..

    நானும், நீங்களும் பெற்றிருப்பது, பெறுவதுகூட விளம்பரம்தான்..

    இதனால் உங்களுக்கும், எனக்கும் கிடைத்தது என்ன..?

    எனக்கு மைனஸ் பூஜ்யம்.. உங்களுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    இதனால் என்ன விளைந்துவிட்டது நமக்கு..?

    அது போலத்தான்..!

    ReplyDelete
  44. மாலன் said,

    //சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்த வ்ழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
    அரசியலைத் தூய்மைப்படுத்த தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை//

    இப்படி எல்லாராலும் ஒதுக்கப்பட்டுதான் அரசியல் இன்னைக்கு தெருத்தெருவா நாறிக்கிட்டு இருக்கு....

    தேர்தலில் நின்னும் மக்களுக்கு நல்லது பண்ணலாம்னு யாரும் யோசிக்க மட்டுறீங்க.... அந்த அளவுக்கு நேற்றைய அரசியல்வாதிகள் அரசியலை தீண்டத்தகாத அருவருப்பான விசயமாக்கிவிட்டர்கள்..

    ReplyDelete
  45. [[[புருனோ Bruno said...

    //அவர் வந்து ஏதோ முயற்சி செய்து இருக்கிறார் அதையும் சந்தேக கண்ணோடு பார்த்தா என்ன செய்றது..//

    அரசியலில் ஈடுபட அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு வார்டு கவுன்சிலராககூட தேர்தலில் நிற்காதவர் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா.
    கண்டிப்பாக முடியாது என்று தான் நினைக்கிறேன். (கட்சி சார்பாக போட்டியிட்டால் வெல்லலாம்)
    தமிழகத்தில் போட்டியிடுபவர் வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்தில் வைத்திருந்தாரே
    அப்படி இருக்க தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் அவர் போட்டியிட்ட காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா.]]]

    ஏன் இதை ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு கலகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது..

    கேவலங்களான இந்த திராவிட அரசியல் கட்சிகளை எதிர்த்து துணிந்து நிற்க முன் வந்திருக்கிறாரே.. அதுவே போதாதா..?

    ReplyDelete
  46. ******[[[புருனோ Bruno said...


    //நீங்க இப்படி எல்லாம் சீப்பாய் யோசிப்பிங்க என்று எனக்கு தெரியாது...//

    இதில் எது சீப் என்று கூறுங்கள்.]]]

    தம்பியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு செய்கையில் குற்றம் கண்டுபிடிக்க முயல்கிறீர்களே.. அது நியாயமா என்கிறார்.. *****

    சரியாக சொன்னிங்க அண்ணேன் நான் இதை தான் சொன்னேன்...

    புதுசா வரவங்களுக்கு புத்துணர்ச்சி தரவில்லைனாலும் அவர்களை எங்கே என்ன சொல்லாம் என்று இவர்கள் ஏன் கவுன்சலரா நிக்க கூடாது...

    ReplyDelete
  47. //இப்படி எல்லாராலும் ஒதுக்கப்பட்டுதான் அரசியல் இன்னைக்கு தெருத்தெருவா நாறிக்கிட்டு இருக்கு....

    தேர்தலில் நின்னும் மக்களுக்கு நல்லது பண்ணலாம்னு யாரும் யோசிக்க மட்டுறீங்க.... அந்த அளவுக்கு நேற்றைய அரசியல்வாதிகள் அரசியலை தீண்டத்தகாத அருவருப்பான விசயமாக்கிவிட்டர்கள்..//

    சரியா சொன்னிங்க தோழா

    ReplyDelete
  48. [[[புருனோ Bruno said...

    //அப்போ ஒன்னு பண்ணுங்க தலைவா நீங்க அடுத்த தேர்தல நில்லுங்க உங்களுக்கு விளம்பரமும், அதிக பணமும் வசுல் ஆகும் .. நான் உங்களும் பிளாகில் பிராச்சாரம் செய்யுறேன்.. என்ன தில் இருக்கா நிக்க டாக்டர் ...

    அவன் அவன் குடும்பம் தன் வாழ்கை என்று பயணிக்கும் போது இப்படி நிக்கவே ஒரு தில் வேணும் ...

    உங்களுக்கு இருக்கா .. இருந்தா நில்லுங்க//

    எனக்கு விளம்பரமும் தேவையில்லை. கருப்பு பணத்தை வெள்ளையாக்க அவசியமும் இல்லை.]]]

    ஓ.. அப்படியானால் சரத்பாபு தன்னிடமிருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கத்தான் தேர்தலில் நிற்கிறார் என்கிறீர்களா..?

    இது அரசியல்வியாதிகள், எதிர்க்கட்சி சதியால்தான் என் வீட்டு மாடு கன்னு போடவில்லை என்று சொல்வது போல் சொல்லவது..

    ReplyDelete
  49. //இதுதான் மருத்துவர் புருனோ.. எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்பது எவருக்கும் தெரியாது.. //

    பாரட்டுக்கு நன்றி அண்ணாச்சி

    ஒருவர் தேர்தலில் நிற்கிறார் என்றால் என்ன காரணம்

    1. வெற்றி பெற ஆசை

    கட்சி சார்பில்லாமல் (அல்லது சினிமா பிரபலம் இல்லாமல்) ஒருவரால் எடுத்த எடுப்பில் நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா

    ஒருவேளை இது ஊராட்சி மன்ற தேர்தல் என்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது இதே சரத்பாபு ஊராட்சி மன்ற தேர்தலில் நின்றால் அதை நான் வரவேற்கவே செய்வேன்தோற்பது உறுதி என்று தெரிந்தும் ஒருவர் தேர்தலில் நின்றால் என்ன காரணங்கள் (அதுவும் சுயேட்சையாக)

    1. ஓட்டுக்களை பிரித்து மற்றொருவரை வெற்றி பெற வைக்க
    2. விளம்பரம்
    3. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க

    இது எனது அறிவிற்கு தெரிந்த விஷயங்கள்

    அதை கூறுவது தவறா.

    தவறு என்றால் இதில் எது தவறு என்று நீங்களே கூறுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்

    ReplyDelete
  50. //[[Suresh said...

    17,000+ அது பத்தி போஸ்ட் செய்யுறேன்]]

    சீக்கிரமா செய்யுங்கள். அவரிடம் கேட்டாவது சொல்லுங்கள்..//

    அவரு எனக்கு அனுப்பிய குறுந்தகவல் வைத்து தான் சொன்னேன்

    ReplyDelete
  51. டாக்டர் ரெடியா தேர்தல் இல்லை வேணாம் சமுக சேவை பண்ணலாம் வாங்க நான் ரெடி நீங்க ரெடியா.. என்னோட கை கோர்க

    ReplyDelete
  52. [[[புருனோ Bruno said...

    //“இவங்கெல்லாம் எங்க ஜெயிக்க போறாங்க”என்ற syndrome.//

    அப்படி இல்லை

    அவர் வார்டு கவுன்சிலராகவோ ஊராட்சி மன்ற தலைவராகவோ ஒரு 5 வருடம் பணிபுரிந்திருந்தால் அந்த சாதனையை காட்டினால் கட்டாயம் மக்கள் வாக்களிப்பார்கள்

    நேரடியாக நாடாளுமன்றத்திற்கு நிற்பது தான் பிரச்சனையே]]]

    அவர் நிற்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை..? இதுதான் எனக்குப் புரிய மறுக்கிறது..

    உங்களுக்குப் பிடித்திருந்தால் போடுங்கள்.. இல்லையெனில் விடுங்கள்..

    இப்போது தேர்தலில் ஜெயித்திருக்கும் அத்தனை பேரும் வார்டு உறுப்பினர் பதவியிலிருந்தா தங்களது பதவி வேட்டையைத் துவக்கியிருக்கிறார்கள்..?

    லிஸ்ட்ட காட்டுங்க பார்ப்போம்..!

    ReplyDelete
  53. [[[புருனோ Bruno said...

    //புருனோ.. இப்பிடியும் யோசிச்சுப் பாருங்க... இவருக்கே நன்கொடை குவிஞ்சிருக்குன்னா..//

    ஹி ஹி ஹி நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

    இந்தியாவில் தேர்தலில் சுயேட்சையாக நிற்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அது நன்கொடை பெறுவதில்லை. நன்கொடை பெற்றதாக கூறுவது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. ஹி ஹி ஹி]]]

    மறைமுகமாக பணம் சம்பாதிக்கத்தான் சரத்பாபு தேர்தலில் நிற்பதாகச் சொல்கிறீர்கள்..

    நான் அதை நம்பவில்லை. அதனால்தான் அவருக்கு வாக்களித்தேன்..

    முடிந்தது பிரச்சினை..

    இனி உங்களுடன் பேசிப் புண்ணியமில்லை.

    ReplyDelete
  54. [[[ராஜா | KVR said...

    //அது நன்கொடை பெறுவதில்லை. நன்கொடை பெற்றதாக கூறுவது. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. ஹி ஹி ஹி//

    Bruno sir, பதிவுக்கூ சம்பந்தம் இல்லாத கேள்வி. சுயேச்சை ஒருவர் தேர்தலுக்காக நன்கொடை பெறும்போது வரிச்சலுகை எதாவது உண்டா?

    //ஒருவேளை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினால் நான் இந்த அறிவுரையை கட்டாயம் கடைபிடிப்பேன்//
    நன்றி சார்]]]

    நிச்சயமாக இல்லை. ஆனால் அரசியல்வியாதிகள் இதில்தான் மஞ்சள் குளிக்கிறார்கள்.

    யாரோ ஊர், பேர் தெரியாதவர்கள் பெயரில் போலி வவுச்சர்களைத் தயாரித்து அவர்கள் கொடுத்ததாகச் சொல்லி தாங்கள் மறைமுகமாகச் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை கணக்கில் காட்டி முறைப்படி அனுமதி வாங்கிவிடுவார்கள் இந்த அயோக்கிய சிகாமணிகள்..

    ReplyDelete
  55. [[[அபி அப்பா said...

    சரத்பாபு, சர்கரை, உண்மை தமிழன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
    அதே நேரம் டாக்டர் புரூனோ, சஞ்சய் ஆகியவர்களுக்கு கண்டனம்! தேவை இல்லாமல் காமடிபீஸ்களுக்காக உங்கள் நேரத்தை விரயம் செய்ததுக்கு!]]]

    ஆமாமாம்..

    உங்கள் தலைவர்கள் மட்டுமே வாழ வேண்டும்.. உங்களது தலைவர்களது குடும்பங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும். அவர்களுடைய வாரிசுகள் மட்டுமே மந்திரிகளாக இருக்க வேண்டும். அந்த பன்னாடைகளின் வாரிசுகள் மட்டுமே தமிழ்நாட்டில் மனிதர்களாக இருக்க வேண்டும்..

    மற்றவர்களெல்லாம் மலம் தின்னும் பிராணிகள் அல்லவா.. உங்களுக்கு காமெடியாகத்தான் இருக்கும்..!

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  56. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    டாக்டர் சொல்வது போல் சரத்பாபு தேர்தலில் போட்டியிடப் போவதாக வலைபதிவுகளில் படிக்கும் முன் அவரை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அபப்டி ஒருவர் இருப்பது உட்பட.

    நான் இப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தன் சாதனைகளை மக்களுக்கான போராட்டத்தை நிரூபித்த ட்ராபிக் ராமசாமியை விட்டு வெறு பகட்டு விளம்பரம் செய்த சரத்பாபுவை ஆதரித்து, அவருக்கும் ஓட்டும் போட்ட அதிமேதாவிகளைதான் வன்மையாகக் கண்டிக்க விரும்பறேன்.]]]

    நாங்கள் அவருக்கு வாக்களித்தது அவரைப் போன்ற தைரியமுள்ள இளைஞர்கள் வாய்ப்புக் கிடைத்தால் இப்படி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற உற்சாகத்தைத் தோற்றுவிப்பதற்காககவே..

    [[கண்ணுக்குத் தெரிஞ்சி நல்லது பன்ற ஒருத்தரை விட்டு வெத்து சீன் போட்டவரை ஆதரிக்கும் இவர்களை என்ன செய்வது?]]

    எந்தக் கம்னாட்டி எங்களுக்கு நல்லது செஞ்சிருக்கானாம்..?

    [[இவர்களை எல்லாம் பார்த்தால் நானெல்லாம் ஒரு சார்பாக அரசியல் சப்பைக் கட்டுவதில் என்ன தவறு?]]

    தவறே இல்லை. அவரவர்க்கு அவரவர் கட்சிகளே பெரிது. அவரவர் எண்ணங்களே உன்னதம்.. இதில் தவறில்லை.

    [[ராமசாமியைவிட சரத்பாபு சிறந்தவர் என எண்ணும் இது போன்ற மேதாவிகள் இருக்கும் போது எவனுக்கு நல்லது பண்ண ஆசைவரும்?. ஒருவேளை சரத்பாபுதான் கோழிபிரியாணியும் குவார்ட்டரும் வாங்கிக் குடுக்க முடியும். ஓட்டாண்டி ராமசாமி பின்னால போனா என்ன கிடைக்கும்னு நினைக்கிறாங்க போல.]]]

    இதுக்கு பதில் மேலேயே சொல்லியிருக்கேன்..

    ReplyDelete
  57. ஒருவேளை இது ஊராட்சி மன்ற தேர்தல் என்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது இதே சரத்பாபு ஊராட்சி மன்ற தேர்தலில் நின்றால் அதை நான் வரவேற்கவே செய்வேன்தோற்பது உறுதி என்று தெரிந்தும் ஒருவர் தேர்தலில் நின்றால் என்ன காரணங்கள் (அதுவும் சுயேட்சையாக)

    1. ஓட்டுக்களை பிரித்து மற்றொருவரை வெற்றி பெற வைக்க
    2. விளம்பரம்
    3. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க

    இது எனது அறிவிற்கு தெரிந்த விஷயங்கள்

    இது தான் தப்பாவே யோசிக்கும் அறிவாளிகளின் தீங்கிங்

    ஏன்

    1. தான் ஒன்னுமே இல்லாம வந்தோம் யாரச்சும் வந்து தான் அகனும் ஏன் நம்ம ஒரு முன் உதாரணமா இருக்க கூடாது...

    2. தூங்கி கிடந்த இளைஞர்களை தட்டி எழுப்ப அவர் கொடுத்த விலை தான் இந்த தேர்தல் தோல்வி, அவரது ஒரு மாத உழைப்பு...

    3. இப்போ அவரிடம் அத்துனை செயல் வீரர்கள் எல்லாம் பிரியானி காசு பணத்துக்கு ஜால்ராக்களுக்கு விலை போகாத கூட்டம்...

    4. இதை நல் வழியில் எடுத்து செல்ல பல செயல் திட்டத்தை வைத்து இருக்கிறார்...

    5. அப்படி கஷ்டப்பட்டு இவர்களு நல்லது செய்து நம்ம என்ன பண்ண போறோம் எவன் கெட்டா என்ன..

    இல்ல எதிலும் ஒரு சுய லாபம் இருந்தால் தான் செய்வென் என்று யோசிக்கும் கயவர்கள் போல் அவர் இல்லாமல் இருக்கலாம்

    6. இல்லை தன் பலத்தை கான்பித்து ஒரு கட்சியில் சேர்ந்து அதில் வெற்றி பெற்று கூட நல்லது செய்யலாம்..

    தான் யார் இளையன் யார் என்று அவர் நிருப்பிக்க கொடுத்த விலை நிறையா...

    சும்மா ஒரு போட்டியில் நிக்கனும் என்றால் தில் வேணும்..

    ஒரு வேளை அவரு இதை ஒரு பிஸ்னஸ்க்கு பண்ணுறாரு என்றால் ஒரு கட்சியில் சேர்ந்து நல்லா செலவு பண்ணி இருக்காலாம்..

    அய்யா கருப்பு பணத்தை ஒழிக்க வழியா இல்லை...

    என்ன டாக்டர் காமெடி பண்ணுறிங்க

    ஒரு பழமொழி கொஞ்சம் டீசண்டா சொல்லுறேன்..

    கோவணம் கட்டின ஊருல பேண்ட் போட்டவன் லூஸ் அது மாதிரி இப்படி தான் இருக்குனும் என்று இருக்கிற வாழ்வில் எவனாச்சும் எதாச்சும் பண்ணினா இப்படி தான் பேசுவாங்க

    சரி கவுன்சலர். அப்புறம் வெளிய தெரியாம நல்லது இது எல்லாம் செய்யலாம் ஆனா ஒரு எம்.பி ஆனா அவ்வளவு செய்யலாம்

    சரி நீங்க நீல்லுங்க நான் உங்களும் பதிவு போடுறேன்

    ReplyDelete
  58. [[[தீப்பெட்டி said...
    மிகவும் நன்றி சரத்துக்கு ஓட்டு போட்டு 14 ஆயிரத்தி நூறில் ஒருவராக வந்ததற்கு. நானும் இதைப் பற்றி ஒரு பதிவையிட இருந்தேன். இது இளைய சமுதாயத்திற்கு கிடைக்கப் போகும் வெற்றியின் தொடக்கம்......]]]

    ஒத்தாசைக்கு மிக்க நன்றி தீப்பெட்டி ஸார்..!

    ReplyDelete
  59. [[[ராஜா | KVR said...

    //ராமசாமியை விட சரத்பாபு சிறந்தவர் என எண்ணும் இது போன்ற மேதாவிகள் இருக்கும்போது//

    ராமசாமி பிராமணர் என்பதால் ஏற்பட்ட பிராமண எதிர்ப்பு மனநிலை காரணமாக இருக்குமோ ;-) (எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கய்யா'ன்னு உண்மைத்தமிழரு சொல்றது காதுல விழுது - வுடு ஜூட்)]]]

    இந்த விஷயத்துல இது ஒண்ணுதான் இதுவரைக்கும் வரலை.. நீங்க சொல்லிட்டீங்க ராஜா..

    இருந்தாலும் இருக்கலாம்..

    ReplyDelete
  60. [[[மாலன் said...

    குத்தம்பாக்கம் இளங்கோ என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காரைக்குடியில் உள்ள சிக்ரியில் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். பத்தாண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அடித்தள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் கிராமமான குத்தம்பாக்கத்திற்குத் திரும்பி தேர்தலில் நின்றார். இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். இன்று ஊர் உலகத்திற்கே ஓர் உதாரணமாக மாறியிருக்கிறது. (மேலும் விவாங்களுக்கு காண்க http://thoughtsintamil.blogspot.com/2006/08/vs.html )
    சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்த வ்ழியைத் தேர்ந்தெடுக்கலாம். அரசியலைத் தூய்மைப்படுத்த தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை]]]

    அவர் செய்வது அரசியல் சேவை அல்ல.. சமூக சேவை..

    அரசியல் சாக்கடையில் சுற்றிக் கொண்டிருக்கும் பன்றிகளை அடையாளம் காட்ட வேண்டுமெனில் நாமளும் அந்தச் சாக்கடையில் குதித்துதான் காட்ட வேண்டும். வெளியில் இருந்தால் எதுவும் தெரியாது..

    வருகைக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  61. [[[புருனோ Bruno said...

    //இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். இன்று ஊர் உலகத்திற்கே ஓர் உதாரணமாக மாறியிருக்கிறது. (மேலும் விவாங்களுக்கு காண்க http://thoughtsintamil.blogspot.com/2006/08/vs.html )

    சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்த வ்ழியைத் தேர்ந்தெடுக்கலாம்.//

    வழிமொழிகிறேன்

    //அரசியலைத் தூய்மைப்படுத்த தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை//

    தேர்தலில் நிற்கலாம். ஆனால் கட்சி பின்புலம் இல்லாவிட்டால் படிப்படியாக வருவதுதான் நடைமுறைக்கு சாத்தியம். அதை விடுத்து நேரடியாக நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டால் எங்களுக்கு சந்தேகிக்க உரிமை உண்டு]]]

    இதில் சந்தேகிக்க என்ன இருக்கிறது..?

    ஒருவன் ஊரில் ரவுடித்தனம் செய்து கொண்டிருந்தால் தட்டிக் கேட்க முடியாமல் நீ போய் எப்படி இவனை அழிக்கிறதுன்னு பாடம் படிச்சிட்டு அப்புறமா வான்னு சொல்ற மாதிரியிருக்கு..

    டாக்டர் என்னாச்சு உங்களுக்கு?

    ReplyDelete
  62. //டாக்டர் ரெடியா தேர்தல் இல்லை வேணாம் சமுக சேவை பண்ணலாம் வாங்க நான் ரெடி நீங்க ரெடியா.. என்னோட கை கோர்க//

    என்ன பண்ண போறீங்க. சொல்லுங்க

    ReplyDelete
  63. [[[ராஜா | KVR said...

    //குத்தம்பாக்கம் இளங்கோ என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

    அவரைப் பற்றியும் அவரது சேவைகளையும் ஒரு வலைத்தளத்தில் (பத்ரியுடையதல்ல) படித்திருக்கிறேன் மாலன் ஐயா.

    அவர் தனது கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மற்ற பஞ்சாயத்து பிரசிடெண்டுகளுக்கும் கிராம வளர்ச்சிப் பணிகளில் உதவிட தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். சிதம்பரத்திற்கு அருகில் இருக்கும் கீரப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தனது கிராம வளர்ச்சிக்கு முன்னின்று பணியாற்றியவர். கட்சி சார்பில் அதிமுகவாக இருந்தாலும் ஊரில் அனைவரது மதிப்பையும் பெற்றவர். ஒரு வளர்ச்சியும் இல்லாது இருந்த கீரப்பாளையம் இன்று அந்தச் சுற்றுப்புறத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர அவரும் ஒரு காரணம்(பெயர் பன்னீர்செல்வம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை)]]]

    இரண்டு இடங்களைத்தானே உங்களால் சொல்ல முடிகிறது ராஜா..

    மீதியெல்லாம்..?!

    பன்னீர்செல்வங்களும், இளங்கோக்களும் இல்லையா..? அல்லது அங்கெல்லாம் அரசியல்வியாதிகள் இளிச்சவாயத்தனமாகவர்களாக இல்லையா..?

    ReplyDelete
  64. //அவர் நிற்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை..? இதுதான் எனக்குப் புரிய மறுக்கிறது..//

    நான் எழுதியதை திரும்ப படியுங்கள், திறந்த மனதுடன்

    //இப்போது தேர்தலில் ஜெயித்திருக்கும் அத்தனை பேரும் வார்டு உறுப்பினர் பதவியிலிருந்தா தங்களது பதவி வேட்டையைத் துவக்கியிருக்கிறார்கள்..?//

    நான் எழுதியதை திரும்ப படியுங்கள், திறந்த மனதுடன்

    எத்தனை முறை கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் வேறுபாட்டை கூறியிருக்கிறேன்

    மறுமுறை கேட்கிறீர்களே அண்ணா

    படிக்கும் போது கண்களுடன் மனதையும் திறக்க வேண்டும் :) :) :)

    ReplyDelete
  65. [[[தீப்பெட்டி said...

    புருனோ அவர்கள் சொன்னது போல கருப்பை வெள்ளையாக்க அவர் தேர்தலில் நின்று இருந்தாலும் பல இளைஞர்களுக்கு அவரால் புதிய உத்வேகமும் அரசியல் நம்பிக்கையும் கிடைத்ததை மறுக்க முடியாது. இந்தியாவில் எந்த அரசியல் கட்சி நிதி வசூலிக்காமல் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் வரையறுத்த அளவு செலவு செய்தது? எந்த அரசியல் கட்சியின் வரலாறிலும் தூய்மையை தேடினாலும் கிடைக்காது.

    டிராபிக் ராமசாமிக்கு போட்டு இருக்கலாம் நமக்கு இரண்டு ஓட்டுக்கள் இல்லையே.. இருந்த ஒன்றை இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க பயன்படுத்தியதில் சந்தோசமே... அதனால் சில இளைஞர்களுக்கு நம்ம்பிக்கை ஒளி தென்படுகிறது...

    காந்தியையும், நேதாஜியையும் குறை சொல்லுபவர்களும் அவர்கள் செயலில் குற்றம் கண்டுபிடிப்பவர்களும் இருக்கும் நாடுதான் நமது ஜனநாயக நாடு. அவர்களின் கருத்துக்கள் சரத்தின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் மாற வேண்டுமென்பதே எனது விருப்பம்.]]]

    -))))))))))))))))))))

    ReplyDelete
  66. //மறைமுகமாக பணம் சம்பாதிக்கத்தான் சரத்பாபு தேர்தலில் நிற்பதாகச் சொல்கிறீர்கள்..//

    இல்லை

    நான் இதை கூறவில்லை :) :)

    மறுபடி படியுங்கள்

    //நிச்சயமாக இல்லை. ஆனால் அரசியல்வியாதிகள் இதில்தான் மஞ்சள் குளிக்கிறார்கள்.

    யாரோ ஊர், பேர் தெரியாதவர்கள் பெயரில் போலி வவுச்சர்களைத் தயாரித்து அவர்கள் கொடுத்ததாகச் சொல்லி தாங்கள் மறைமுகமாகச் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை கணக்கில் காட்டி முறைப்படி அனுமதி வாங்கிவிடுவார்கள் இந்த அயோக்கிய சிகாமணிகள்//

    தெளிவா சொல்லீட்டிங்களே சார்

    இதை நான் கூறினால் மட்டும் குற்றமா

    ReplyDelete
  67. [[[ராஜா | KVR said...
    //அவர்களின் கருத்துக்கள் சரத்தின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் மாற வேண்டுமென்பதே எனது விருப்பம்.//
    வழிமொழிகிறேன்...]]]

    கருத்துக்கு நன்றி ராஜா..

    ReplyDelete
  68. இவங்களுக்கு எல்லாம் எப்படினா எல்லாரும் 1std , 2nd , 3rd இப்படி படித்து தான் வரனும்.. எவனாச்சும் டபுள் பிரோமஷன் வாங்கினா பத்திக்கிட்டு வரும் அது எப்படி நாங்க எல்லாம் இப்படி தான் வந்தோம் ..

    இவன் மட்டும் எப்படி, தலைவா

    அவர் அந்த வயசுல நம்மல விட ந்லல பிஸன்ஸ் பண்ணுற வித்தை கத்து இருக்காரு, கஷ்டப்பட்டு தான் கத்து காசும் பாத்து இருக்காரு...

    இப்படி தான் பிளான் எலலம் போட்டு வந்தா அவருக்கு வயது 30 அயி இருக்கும்.. அப்ப மட்டும் நம்ம மக்கள் செயிக்க வெச்சிடுவாங்களா என்ன ...

    படிச்சவன் ஆயிரம் பேச்சு பேசிட்டு வோட்ட மட்டும் போடமா இருப்பான்

    தானும் வரமாட்டான் வந்தவனையும் விடமாட்டான் நம்ம படிச்ச அறிவாளிங்க எப்போதும் அப்படி தான் நினைப்பாங்க...

    சரி நீங்க ஏன் பத்திரிக்கையில் எழுதுறிங்க .. அதுவும் பொறுப்பு ஆசிரியராய்..

    நாங்க எல்லாம்..பிளாக் எழுதி சின்ன பத்திரிக்கையில் எழுதி அப்புறமா தான் வந்தோம்.. அப்படி எல்லாம் வந்தா பேஸ் இருக்காது..

    இப்படி தான் எனக்கு விழி முறைகள் என்று வருபவர்க்ளை பிரக் த ரூல்ஸ் என்று விதி மாற்றி அமைத்தவர்களும் உண்டு

    சும்மா எதாச்சும் பினாத்தனும் பேசக்கூடாது

    ReplyDelete
  69. [[[ராஜா | KVR said...
    //அவர்களின் கருத்துக்கள் சரத்தின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் மாற வேண்டுமென்பதே எனது விருப்பம்.//
    வழிமொழிகிறேன்...]]]


    நானும் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  70. சுரேஷ் சார்

    நீங்கள் பயங்கர புத்திசாலி

    உங்களுக்கு பேசி புரியவைக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை

    எனவே நீங்கள் கூறுவது சரி என்று வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  71. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    //அது எப்படி வியாபாரத்தில் எதிரொலிக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. //

    குழந்தை மாதிரி பேசாதிங்க. டெண்டுல்கர் யாருக்கும் தெரியாம ஓட்டல் நடத்துறதுக்கும் டெண்டுல்கர் ஓட்டல்னு விளம்பரம் பண்ணி நடத்தறதுக்கும் வித்தியாசம் இருக்கு? இதுல எது லாபம்னு சொல்லனுமா?]]]

    ராஜா..

    முழிச்சிட்டிருக்கும்போதே கண்ணு முழியைத் திருடிட்டுப் போற மாதிரி போபர்ஸ் ஊழலையும், இப்ப ஸ்பெக்ட்ரம் ஊழலையும் செஞ்சிட்டு மலை விழுங்கு மகாதேவன்கள் மானம், ரோஷம், வெட்கமில்லாம வோட்டு கேட்க வரும்போது..

    இந்தத் தம்பி தன் கடை வாசல்ல நான் சென்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவன் என்று எழுதி வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்பேன்.

    ReplyDelete
  72. என்ன பண்ண போறீங்க. சொல்லுங்க

    நான் மாதம் ஒரு முறை அரசு பள்ளிகு சென்று உதவிகள் செய்வேன் அடுத்த முறை நீங்கள் கூறும் பள்ளிக்கு செல்லாம் சரியா

    இல்லை நீங்க நல்ல விஷியம் பண்ணினா சொல்லுங்க நானும் வரேன்

    ReplyDelete
  73. //முழிச்சிட்டிருக்கும்போதே கண்ணு முழியைத் திருடிட்டுப் போற மாதிரி போபர்ஸ் ஊழலையும், இப்ப ஸ்பெக்ட்ரம் ஊழலையும் செஞ்சிட்டு மலை விழுங்கு மகாதேவன்கள் மானம், ரோஷம், வெட்கமில்லாம வோட்டு கேட்க வரும்போது.//

    ஸ்ஸபாஆஆ.. அவன் நடு ஊட்ல ஆய்ப் போறான்னு சொன்னா.. ஏன் இவன் போவலையான்னு கேக்கறவங்களை என்ன செய்ய?

    சரி சரி.. சரத்பாபுவே கடையை கவனிக்கப் போயாச்சி.. நீங்க எதுக்கு இன்னும் அவர் கடைல சுட்ட பழைய இட்லிக்கு இங்க கடை விரிச்சி வச்சிக்கிட்டு கொடுமை பண்றிங்க? :)))

    ReplyDelete
  74. [[[தீப்பெட்டி said...
    மாலன் said,
    //சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் இந்த வ்ழியைத் தேர்ந்தெடுக்கலாம். அரசியலைத் தூய்மைப்படுத்த தேர்தலில் நிற்க வேண்டிய அவசியமில்லை//

    இப்படி எல்லாராலும் ஒதுக்கப்பட்டுதான் அரசியல் இன்னைக்கு தெருத்தெருவா நாறிக்கிட்டு இருக்கு.... தேர்தலில் நின்னும் மக்களுக்கு நல்லது பண்ணலாம்னு யாரும் யோசிக்க மட்டுறீங்க.... அந்த அளவுக்கு நேற்றைய அரசியல்வாதிகள் அரசியலை தீண்டத்தகாத அருவருப்பான விசயமாக்கிவிட்டர்கள்..]]]

    நன்றி தீப்பெட்டி ஸார்..

    என் கருத்தும் இதுதான்..

    ரவுடிகள் துணையோடு அரசியலில் வலம் வரும் இந்த ரவுடி ராஜாக்கள் கையில்தான் நாடு இருக்கிறது..

    கண்டு கொள்ளாமல் வீட்டுக்கு வீடு போய் கதாகாலாட்சேபம் செய் என்று சொன்னால் என்ன சொல்வது..?

    ReplyDelete
  75. [[[Suresh said...
    தம்பியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு செய்கையில் குற்றம் கண்டுபிடிக்க முயல்கிறீர்களே.. அது நியாயமா என்கிறார்.. *****
    சரியாக சொன்னிங்க அண்ணேன் நான் இதை தான் சொன்னேன்...
    புதுசா வரவங்களுக்கு புத்துணர்ச்சி தரவில்லைனாலும் அவர்களை எங்கே என்ன சொல்லாம் என்று இவர்கள் ஏன் கவுன்சலரா நிக்க கூடாது...]]]

    நல்ல கேள்விதான்..

    அதுக்கெல்லாம் நிறைய தைரியமும், கொஞ்சமா பணமும் வேணும்..!

    ReplyDelete
  76. //என்ன பண்ண போறீங்க. சொல்லுங்க

    நான் மாதம் ஒரு முறை அரசு பள்ளிகு சென்று உதவிகள் செய்வேன் அடுத்த முறை நீங்கள் கூறும் பள்ளிக்கு செல்லாம் சரியா

    இல்லை நீங்க நல்ல விஷியம் பண்ணினா சொல்லுங்க நானும் வரேன்//

    சுரேஷ்

    உங்கள் தெளிவு என்னை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  77. [[[Suresh said...

    //இப்படி எல்லாராலும் ஒதுக்கப்பட்டுதான் அரசியல் இன்னைக்கு தெருத்தெருவா நாறிக்கிட்டு இருக்கு.... தேர்தலில் நின்னும் மக்களுக்கு நல்லது பண்ணலாம்னு யாரும் யோசிக்க மட்டுறீங்க.... அந்த அளவுக்கு நேற்றைய அரசியல்வாதிகள் அரசியலை தீண்டத்தகாத அருவருப்பான விசயமாக்கிவிட்டர்கள்..//

    சரியா சொன்னிங்க தோழா]]]

    நன்றி சுரேஷ்.. என் கருத்தும் இதுதான்..!

    ReplyDelete
  78. @ புருனோ Bruno

    // சுரேஷ் சார்//

    நான் யாரையும் சார் என்று அழைப்பது இல்லை பெயர் சொல்லி இல்லனா வாங்க போங்க இல்லைனா மாமா மச்சான்

    //நீங்கள் பயங்கர புத்திசாலி//

    அதை ஒரு புத்திசாலி சொல்லி இருந்தா சந்தோச பட்டு இருப்பேன்

    //உங்களுக்கு பேசி புரியவைக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை//

    எனக்கும் அறிவு இருக்கு ஆனா உங்களை மாதிரி நிகடிவ் திங்கிங் வியாதி இல்லை.. விவாதிகலாம் விதாண்டா வாதம் தான் கூடாது..

    நீங்க சொன்னது எல்லாம் ஒரு சுயேட்சைக்கு என்றே வைத்து கொண்டாலும் அது மாதிரி நின்னு ஜெயித்த கவுன்சலர் யாரும் எம்.பி ஆவது இல்லை.

    உங்க கருத்து படி... சின்ன சின்ன ரோலில் நடித்து தான் ஹீரோ ஆவனும் சுயமா வரவ்ங்கள தான் சொல்லுறேன்..

    நம்ம அரியா மாதிரி டக்னு எல்லாம் வர கூடாது...

    // எனவே நீங்கள் கூறுவது சரி என்று வைத்துக்கொள்ளுங்கள்//

    இனியாவது நல்லதை ஆதரியுங்கள் அதை சந்தேகப்பட்டு அப்புறம் நொல்லை ஆக்காதிர்கள்

    ReplyDelete
  79. //சுரேஷ்

    உங்கள் தெளிவு என்னை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.//

    நன்றி டாக்டர்...

    சரி நிங்க எங்க இருக்கிங்க வாங்க போகலாம் இல்லை சொல்லுங்கள் நான் வருகிறேன்.. போவோம் தமிழகத்தின் ஒரு பள்ளிக்கு உதவி செய்வோம்... ரொம்ப பணம் இல்லைனா கூட நம்மால முடிந்த உதவிகள் ஊக்கங்கள் கொடுக்கலாம்

    ReplyDelete
  80. சரி டாக்டர் எனக்கு வேளை இருக்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க sakkaraisuresh@gmail.com நம்ம அடுத்த முறை அரசு பள்ளிக்கு செல்வோம்

    கண்டிப்பா மெயில் பண்ணுங்க நீங்க ரொம்ப நல்லவரு ;) அவ்

    ReplyDelete
  81. [[[புருனோ Bruno said...

    //இதுதான் மருத்துவர் புருனோ.. எந்த நேரத்தில் என்ன பேசுவார் என்பது எவருக்கும் தெரியாது.. //

    பாரட்டுக்கு நன்றி அண்ணாச்சி
    ஒருவர் தேர்தலில் நிற்கிறார் என்றால் என்ன காரணம்
    1. வெற்றி பெற ஆசை
    கட்சி சார்பில்லாமல் (அல்லது சினிமா பிரபலம் இல்லாமல்) ஒருவரால் எடுத்த எடுப்பில் நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா
    ஒருவேளை இது ஊராட்சி மன்ற தேர்தல் என்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது இதே சரத்பாபு ஊராட்சி மன்ற தேர்தலில் நின்றால் அதை நான் வரவேற்கவே செய்வேன். தோற்பது உறுதி என்று தெரிந்தும் ஒருவர் தேர்தலில் நின்றால் என்ன காரணங்கள் (அதுவும் சுயேட்சையாக)
    1. ஓட்டுக்களை பிரித்து மற்றொருவரை வெற்றி பெற வைக்க
    2. விளம்பரம்
    3. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க
    இது எனது அறிவிற்கு தெரிந்த விஷயங்கள்
    அதை கூறுவது தவறா.
    தவறு என்றால் இதில் எது தவறு என்று நீங்களே கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.]]]

    நான் அறிந்தவரையில் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் சார்பில் நிற்பவர்களின் வெற்றியைத் தடுக்க வேண்டி அவர்களது பெயர்களைக் கொண்ட வாக்காளர்களைத் தேடிப் பிடித்து சுயேச்சையாக நிற்க வைப்பார்கள்.

    இப்படி நின்றால் நிச்சயமாக கட்சி உள்ளடி வேலை.. அல்லது எதிர்க்கட்சிகளின் சதி வேலை என்று நானும் சொல்வேன்.

    விளம்பரம் கிடைப்பதற்காக பணம் செலவழித்து தேர்தலில் இறங்குகிறார்கள் என்று புகார் சொன்னால் அது நாளைய சமுதாயத்தினரை தேர்தல் பக்கமே வர விடாமல் தடுக்க வைக்கும் வாதமாக அமைந்துவிடுகிறது.

    கருப்புப் பணத்தை வெள்ளையாக்க என்றால் உறுதியாக நீங்கள் சரத்பாபு இதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

    மற்றவர்கள் செய்கிறார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை.

    ஆனால் நான் இந்தத் தம்பி சரத்பாபு விஷயத்தில் அப்படி நினைக்கவில்லை.

    எனக்குத் தோன்றியதெல்லாம் அவருடைய தைரியம்தான்..

    ReplyDelete
  82. [[[Suresh said...

    //[[Suresh said...

    17,000+ அது பத்தி போஸ்ட் செய்யுறேன்]]

    சீக்கிரமா செய்யுங்கள். அவரிடம் கேட்டாவது சொல்லுங்கள்..//

    அவரு எனக்கு அனுப்பிய குறுந்தகவல் வைத்து தான் சொன்னேன்.]]]

    கேட்டாவது சொல்லுங்கள் சுரேஷ்..

    ReplyDelete
  83. //ஏங்க எனக்கில்லாத தைரியம் உனக்கிருக்கேடா ராசான்னு வாழ்த்தினா நான் அவரோட கொ.ப.செ.வா.. நல்லாயிருக்கே உங்க ஞாயம்..?
    //

    அண்ணாச்சி, நான் உங்களுக்கு கொடுத்த பின்னூட்டமல்ல அது. முழுக்க முழுக்க சுரேஷ் அண்ணாச்சிக்குச் சொன்னது. உங்களை சொன்ன மாதிரி தோற்றம் இருந்தா மன்னிச்சிக்கோங்க...

    ReplyDelete
  84. [[[Suresh said...

    டாக்டர் ரெடியா தேர்தல் இல்லை வேணாம் சமுக சேவை பண்ணலாம் வாங்க நான் ரெடி நீங்க ரெடியா.. என்னோட கை கோர்க.]]]

    போச்சுடா.. யாருக்கு இங்க நேரமிருக்கு..!

    மருத்துவர் இப்போது செய்து வருவதே சமூக சேவைதான்..!

    ReplyDelete
  85. [[[Suresh said...

    ஒருவேளை இது ஊராட்சி மன்ற தேர்தல் என்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது இதே சரத்பாபு ஊராட்சி மன்ற தேர்தலில் நின்றால் அதை நான் வரவேற்கவே செய்வேன்தோற்பது உறுதி என்று தெரிந்தும் ஒருவர் தேர்தலில் நின்றால் என்ன காரணங்கள் (அதுவும் சுயேட்சையாக)

    1. ஓட்டுக்களை பிரித்து மற்றொருவரை வெற்றி பெற வைக்க
    2. விளம்பரம்
    3. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க

    இது எனது அறிவிற்கு தெரிந்த விஷயங்கள்

    இது தான் தப்பாவே யோசிக்கும் அறிவாளிகளின் தீங்கிங்

    ஏன்

    1. தான் ஒன்னுமே இல்லாம வந்தோம் யாரச்சும் வந்து தான் அகனும் ஏன் நம்ம ஒரு முன் உதாரணமா இருக்க கூடாது...

    2. தூங்கி கிடந்த இளைஞர்களை தட்டி எழுப்ப அவர் கொடுத்த விலை தான் இந்த தேர்தல் தோல்வி, அவரது ஒரு மாத உழைப்பு...

    3. இப்போ அவரிடம் அத்துனை செயல் வீரர்கள் எல்லாம் பிரியானி காசு பணத்துக்கு ஜால்ராக்களுக்கு விலை போகாத கூட்டம்...

    4. இதை நல் வழியில் எடுத்து செல்ல பல செயல் திட்டத்தை வைத்து இருக்கிறார்...

    5. அப்படி கஷ்டப்பட்டு இவர்களு நல்லது செய்து நம்ம என்ன பண்ண போறோம் எவன் கெட்டா என்ன..

    இல்ல எதிலும் ஒரு சுய லாபம் இருந்தால் தான் செய்வென் என்று யோசிக்கும் கயவர்கள் போல் அவர் இல்லாமல் இருக்கலாம்

    6. இல்லை தன் பலத்தை கான்பித்து ஒரு கட்சியில் சேர்ந்து அதில் வெற்றி பெற்று கூட நல்லது செய்யலாம்..

    தான் யார் இளையன் யார் என்று அவர் நிருப்பிக்க கொடுத்த விலை நிறையா...

    சும்மா ஒரு போட்டியில் நிக்கனும் என்றால் தில் வேணும்..

    ஒரு வேளை அவரு இதை ஒரு பிஸ்னஸ்க்கு பண்ணுறாரு என்றால் ஒரு கட்சியில் சேர்ந்து நல்லா செலவு பண்ணி இருக்காலாம்..

    அய்யா கருப்பு பணத்தை ஒழிக்க வழியா இல்லை...

    என்ன டாக்டர் காமெடி பண்ணுறிங்க

    ஒரு பழமொழி கொஞ்சம் டீசண்டா சொல்லுறேன்..

    கோவணம் கட்டின ஊருல பேண்ட் போட்டவன் லூஸ் அது மாதிரி இப்படி தான் இருக்குனும் என்று இருக்கிற வாழ்வில் எவனாச்சும் எதாச்சும் பண்ணினா இப்படி தான் பேசுவாங்க

    சரி கவுன்சலர். அப்புறம் வெளிய தெரியாம நல்லது இது எல்லாம் செய்யலாம் ஆனா ஒரு எம்.பி ஆனா அவ்வளவு செய்யலாம்

    சரி நீங்க நீல்லுங்க நான் உங்களும் பதிவு போடுறேன்]]]

    நான் ஓட்டும் போடுவேன் மருத்துவருக்கு..!

    ReplyDelete
  86. புருனோ சார், நம்ம சுரேஷோட வலிமை தெரியாம நீங்க வாயைக் கொடுக்கறிங்க. அவர் ஒரு விஷயத்தை ஆதரிச்சா அதுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கும். இது வரைக்கும் அவர் கூட வலையில் மோதி பின்னங்கால் பிடறி அடிக்க ஓடியவர்கள் பலர். இப்போ அதுல நீங்களும். ஹய்யோ.. ஹய்யோ.. :))

    மனசாட்ச்சியோட யோசிங்க. சுரேஷ் எதுனா ஒரு பாயிண்டாவது தப்பா பேசியிருக்காரா? 1, 2, 3ன்னு போகாம டபுள் புரமோஷன் போறதை பத்தி உங்களால எதுனா சொல்ல முடியுமா? வேணும்னா விதண்டாவாடத்துக்கு சொல்விங்க. டபுள் புரமோஷனுக்கும் எல்கேஜி கூட படிக்காம காலேஜ் சேர ஆசைப்படறதுக்கும் வித்தியாசம் இருக்குன்னு.

    ஒருத்தர் நல்ல விஷயம் சொன்னா ஏத்துக்க பழகுங்க. விதண்டாவாதம் பண்ணாதிங்க.

    ReplyDelete
  87. [[[புருனோ Bruno said...

    //டாக்டர் ரெடியா தேர்தல் இல்லை வேணாம் சமுக சேவை பண்ணலாம் வாங்க நான் ரெடி நீங்க ரெடியா.. என்னோட கை கோர்க//

    என்ன பண்ண போறீங்க. சொல்லுங்க]]]

    ஓ.. டாக்டர் ரெடியாத்தான் இருக்கார் போலிருக்கு..!

    ReplyDelete
  88. [[[புருனோ Bruno said...

    //அவர் நிற்பதில் உங்களுக்கென்ன பிரச்சினை..? இதுதான் எனக்குப் புரிய மறுக்கிறது..//

    நான் எழுதியதை திரும்ப படியுங்கள், திறந்த மனதுடன்

    //இப்போது தேர்தலில் ஜெயித்திருக்கும் அத்தனை பேரும் வார்டு உறுப்பினர் பதவியிலிருந்தா தங்களது பதவி வேட்டையைத் துவக்கியிருக்கிறார்கள்..?//

    நான் எழுதியதை திரும்ப படியுங்கள், திறந்த மனதுடன் எத்தனை முறை கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் வேறுபாட்டை கூறியிருக்கிறேன். மறுமுறை கேட்கிறீர்களே அண்ணா. படிக்கும் போது கண்களுடன் மனதையும் திறக்க வேண்டும்:):):]]]

    மருத்துவர் அண்ணே..

    எத்தனை முறை படிச்சாலும் உங்களுடைய எதிர்ப்புக்கான காரணம் எனக்குப் புரியவில்லை.

    தனிப்பட்ட கொடுக்கல், வாங்கல் ஏதாவது இருக்கா..?

    ReplyDelete
  89. //புருனோ சார், நம்ம சுரேஷோட வலிமை தெரியாம நீங்க வாயைக் கொடுக்கறிங்க. அவர் ஒரு விஷயத்தை ஆதரிச்சா அதுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கும். இது வரைக்கும் அவர் கூட வலையில் மோதி பின்னங்கால் பிடறி அடிக்க ஓடியவர்கள் பலர். இப்போ அதுல நீங்களும். ஹய்யோ.. ஹய்யோ.. :))//


    //மனசாட்ச்சியோட யோசிங்க. சுரேஷ் எதுனா ஒரு பாயிண்டாவது தப்பா பேசியிருக்காரா? 1, 2, 3ன்னு போகாம டபுள் புரமோஷன் போறதை பத்தி உங்களால எதுனா சொல்ல முடியுமா? வேணும்னா விதண்டாவாடத்துக்கு சொல்விங்க. டபுள் புரமோஷனுக்கும் எல்கேஜி கூட படிக்காம காலேஜ் சேர ஆசைப்படறதுக்கும் வித்தியாசம் இருக்குன்னு.

    ஒருத்தர் நல்ல விஷயம் சொன்னா ஏத்துக்க பழகுங்க. விதண்டாவாதம் பண்ணாதிங்க.//

    ஆமாம் சார்
    அதனால் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே !!


    Read more: "தம்பி சரத்பாபுவிற்கு ஒரு சல்யூட்..! ~ உண்மைத்தமிழன்" - http://truetamilans.blogspot.com/2009/05/blog-post_17.html#ixzz0FliGc6PD&A

    ReplyDelete
  90. [[[புருனோ Bruno said...

    //மறைமுகமாக பணம் சம்பாதிக்கத்தான் சரத்பாபு தேர்தலில் நிற்பதாகச் சொல்கிறீர்கள்..//

    இல்லை

    நான் இதை கூறவில்லை :) :)

    மறுபடி படியுங்கள்

    //நிச்சயமாக இல்லை. ஆனால் அரசியல்வியாதிகள் இதில்தான் மஞ்சள் குளிக்கிறார்கள்.

    யாரோ ஊர், பேர் தெரியாதவர்கள் பெயரில் போலி வவுச்சர்களைத் தயாரித்து அவர்கள் கொடுத்ததாகச் சொல்லி தாங்கள் மறைமுகமாகச் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை கணக்கில் காட்டி முறைப்படி அனுமதி வாங்கிவிடுவார்கள் இந்த அயோக்கிய சிகாமணிகள்//

    தெளிவா சொல்லீட்டிங்களே சார்

    இதை நான் கூறினால் மட்டும் குற்றமா?]]]

    அப்படிச் சொல்லவில்லையெனில் சரத்பாபுவிற்கான எதிர்ப்பில் ஏன் இதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

    ReplyDelete
  91. [[[Suresh said...

    இவங்களுக்கு எல்லாம் எப்படினா எல்லாரும் 1std , 2nd , 3rd இப்படி படித்து தான் வரனும்.. எவனாச்சும் டபுள் பிரோமஷன் வாங்கினா பத்திக்கிட்டு வரும் அது எப்படி நாங்க எல்லாம் இப்படிதான் வந்தோம் ..

    இவன் மட்டும் எப்படி, தலைவா
    அவர் அந்த வயசுல நம்மலவிட ந்லல பிஸன்ஸ் பண்ணுற வித்தை கத்து இருக்காரு, கஷ்டப்பட்டுதான் கத்து காசும் பாத்து இருக்காரு...
    இப்படிதான் பிளான் எலலம் போட்டு வந்தா அவருக்கு வயது 30 அயி இருக்கும்.. அப்ப மட்டும் நம்ம மக்கள் செயிக்க வெச்சிடுவாங்களா என்ன...
    படிச்சவன் ஆயிரம் பேச்சு பேசிட்டு வோட்ட மட்டும் போடமா இருப்பான்
    தானும் வரமாட்டான் வந்தவனையும் விடமாட்டான் நம்ம படிச்ச அறிவாளிங்க எப்போதும் அப்படிதான் நினைப்பாங்க... சரி நீங்க ஏன் பத்திரிக்கையில் எழுதுறிங்க.. அதுவும் பொறுப்பு ஆசிரியராய்.. நாங்க எல்லாம்.. பிளாக் எழுதி சின்ன பத்திரிக்கையில் எழுதி அப்புறமாதான் வந்தோம்.. அப்படி எல்லாம் வந்தா பேஸ் இருக்காது..
    இப்படிதான் எனக்கு விழி முறைகள் என்று வருபவர்க்ளை பிரக் த ரூல்ஸ் என்று விதி மாற்றி அமைத்தவர்களும் உண்டு. சும்மா எதாச்சும் பினாத்தனும் பேசக்கூடாது.]]]

    போச்சுடா.. சுரேஷ் தம்பி ரொம்ப கொதிக்கிறாப்புல தெரியுது..

    கூல் டவுன் சுரேஷ்..

    ReplyDelete
  92. [[[Suresh said...

    [[[ராஜா | KVR said...
    //அவர்களின் கருத்துக்கள் சரத்தின் வருங்கால செயல்பாடுகளின் மூலம் மாற வேண்டுமென்பதே எனது விருப்பம்.//
    வழிமொழிகிறேன்...]]]


    நானும் வழிமொழிகிறேன்.]]]

    நன்றிகள் சுரேஷ்..

    ReplyDelete
  93. அண்ணே, கூகுள்காரனுங்க மெயில் அனுப்பி இருக்காங்க.

    “ பதிவு தான் பக்கம் பக்கமா போடறாருன்னு பார்த்தா பின்னூட்டம் அதைவிட பெரிசு பெரிசா போடறாரு. உண்மைத்தமிழன் ப்ளாக் நிர்வகிக்கவே நாங்க இப்போ தனி சர்வர் உபயோகிக்கிறோம். ஆட்சென்ஸ்ல சம்பாதிக்கிறது எல்லாம் இவருக்கே சரியா இருக்கும் போல. எங்க கம்பனியை காப்பாத்துங்க.”

    அண்ணே.. கொஞ்சம் மனசு வைங்க. :))

    ReplyDelete
  94. [[[புருனோ Bruno said...

    சுரேஷ் சார்

    நீங்கள் பயங்கர புத்திசாலி

    உங்களுக்கு பேசி புரியவைக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை

    எனவே நீங்கள் கூறுவது சரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.]]]

    அப்பாடா..

    மருத்துவர் ஸார் ஒரு வழியா விஷயத்துக்கு மங்களம் பாடிட்டார்..! விட்ருவோம்..! விடுங்க..

    ReplyDelete
  95. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    //முழிச்சிட்டிருக்கும்போதே கண்ணு முழியைத் திருடிட்டுப் போற மாதிரி போபர்ஸ் ஊழலையும், இப்ப ஸ்பெக்ட்ரம் ஊழலையும் செஞ்சிட்டு மலை விழுங்கு மகாதேவன்கள் மானம், ரோஷம், வெட்கமில்லாம வோட்டு கேட்க வரும்போது.//

    ஸ்ஸபாஆஆ.. அவன் நடு ஊட்ல ஆய்ப் போறான்னு சொன்னா.. ஏன் இவன் போவலையான்னு கேக்கறவங்களை என்ன செய்ய?

    சரி சரி.. சரத்பாபுவே கடையை கவனிக்கப் போயாச்சி.. நீங்க எதுக்கு இன்னும் அவர் கடைல சுட்ட பழைய இட்லிக்கு இங்க கடை விரிச்சி வச்சிக்கிட்டு கொடுமை பண்றிங்க? :)))]]]

    எனக்கில்லாத தைரியம் அந்தத் தம்பிக்கு வந்திருக்கே.. பாராட்ட வேண்டாமா..?!!!!!!!!!!

    ReplyDelete
  96. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    //முழிச்சிட்டிருக்கும்போதே கண்ணு முழியைத் திருடிட்டுப் போற மாதிரி போபர்ஸ் ஊழலையும், இப்ப ஸ்பெக்ட்ரம் ஊழலையும் செஞ்சிட்டு மலை விழுங்கு மகாதேவன்கள் மானம், ரோஷம், வெட்கமில்லாம வோட்டு கேட்க வரும்போது.//

    ஸ்ஸபாஆஆ.. அவன் நடு ஊட்ல ஆய்ப் போறான்னு சொன்னா.. ஏன் இவன் போவலையான்னு கேக்கறவங்களை என்ன செய்ய?]]]

    அப்ப நடுரோட்ல ஆய் போன அந்த நாய்களை ஏன் இப்படி தாங்கிக்கிட்டிருக்க ராசா..? விட்டுத் தொலைக்க வேண்டியதுதான..!

    ReplyDelete
  97. [[[Suresh said...

    என்ன பண்ண போறீங்க. சொல்லுங்க
    நான் மாதம் ஒரு முறை அரசு பள்ளிகு சென்று உதவிகள் செய்வேன் அடுத்த முறை நீங்கள் கூறும் பள்ளிக்கு செல்லாம் சரியா
    இல்லை நீங்க நல்ல விஷியம் பண்ணினா சொல்லுங்க நானும் வரேன்.]]]

    எப்படியோ நாலு பேருக்கு நல்லது நடந்தா சரி..

    செய்யுங்க ராசா.. செய்யுங்க..!

    ReplyDelete
  98. உண்மைத்தமிழரே, சரத்பாபுக்கான உங்களது பாராட்டுகளையோ அல்லது அவர் தேர்தலில் நின்றதையோ நான் சந்தேகிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நானும் எனது நண்பர் ஒருவரிடம் சரத்பாபுக்கு ஓட்டுப் போடச் சொன்னேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் 14101 ஓட்டுகளில் அவருடைய ஓட்டும் ஒன்று. ஆனால் அவருக்கு ஓட்டுப் போடச் சொன்னதற்கு காரணம் இவரைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கான உற்சாக டானிக்காக இந்த ஓட்டும் இருக்கட்டும் என்ற எண்ணம் மட்டுமே. சரத் 14101 ஓட்டுகள் வாங்கி இருப்பதிலும் பெருமிதம் அடைகிறேன்.

    ஆனால், உண்மையிலேயே சரத்பாபு மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் என்றால் அவரை அடிப்படையில் இருந்து தொடங்கச் சொல்லுங்கள். சுரேஷ் சொல்வதைப் போல அதிக மக்களுக்கு சேவை செய்ய என்ற ஜல்லிகளோடு நேரடியாக பாராளுமன்றத் தேர்தலில் நின்று அடுத்த நாளே ஜெயித்து மக்கள் சேவை செய்திட இது ஒன்றும் திரைப்படம் இல்லை. சரத்பாபு உண்மையிலேயே சேவை மனப்பாண்மையோடு அரசியலுக்கு வந்திருக்கிறாரா என்பதை அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளே தீர்மானிக்கும். அடிப்படையில் இருந்து தொடங்காமல் ஒவ்வொரு நாடாளுமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே நிற்பாரெனில் டாக்டரைப் போலவே மற்றவர்களும் சந்தேகிக்க நேரிடும்.

    ReplyDelete
  99. //எதை ரவிசங்கர்...?//

    காலம் & பணம் $ எனர்ஜி.

    நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.என்ன ஹோம் வொர்க்? முதலில் தன் தொகுதியில் இருக்கும் 6 லட்சம் வாக்காள்ருக்கு தன்னை தெரியுமா என்பது.அதற்குண்டான செயல் முறை திட்டங்கள் வகுக்க வேண்டும்.வகுக்க பணம்? மினிமம்
    10 லட்சம் வேண்டும்.இதை எலக்‌ஷன் ஆரம்பிபத்ற்கு முன்னேயே(ஒருவருடம் முன்பே) ground work செய்ய வேண்டும்.ஆள் கட்டு வேண்டும்.
    வண்டி வேண்டும்.மீடியா வேண்டும். இப்படி பல.முகம் ரிஜிஸ்டர் ஆக வேண்டும்.


    பிறகு கண்டிப்பாக தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும்.


    முடியுமா சார்! நுரை தள்ளி விடும்.

    //ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் இவ்வளவு தைரியமாக யாராலும் நிற்க முடியாது.

    உயிர் போனாலும் போய்விடும்//

    இதைத்தான் அடிப்படை யதார்த்தம்(ground reality) என்று சொன்னேன்.

    தெரியாமல் காலை விடக்கூடாது.

    விட்டால் கைவசம் ஐநூறு அட்டாக் பாண்டிகள்,அம்பது டாடா சுமோ, டெம்போ ட்ரவலர் முழுவதும் பணம்
    வைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  100. /Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    புருனோ சார், நம்ம சுரேஷோட வலிமை தெரியாம நீங்க வாயைக் கொடுக்கறிங்க. அவர் ஒரு விஷயத்தை ஆதரிச்சா அதுக்கு பல நியாயமான காரணங்கள் இருக்கும். இது வரைக்கும் அவர் கூட வலையில் மோதி பின்னங்கால் பிடறி அடிக்க ஓடியவர்கள் பலர். இப்போ அதுல நீங்களும். ஹய்யோ.. ஹய்யோ.. :))

    மனசாட்ச்சியோட யோசிங்க. சுரேஷ் எதுனா ஒரு பாயிண்டாவது தப்பா பேசியிருக்காரா? 1, 2, 3ன்னு போகாம டபுள் புரமோஷன் போறதை பத்தி உங்களால எதுனா சொல்ல முடியுமா? வேணும்னா விதண்டாவாடத்துக்கு சொல்விங்க. டபுள் புரமோஷனுக்கும் எல்கேஜி கூட படிக்காம காலேஜ் சேர ஆசைப்படறதுக்கும் வித்தியாசம் இருக்குன்னு.

    ஒருத்தர் நல்ல விஷயம் சொன்னா ஏத்துக்க பழகுங்க. விதண்டாவாதம் பண்ணாதிங்க.

    //

    நண்பா கண்டிப்பா நல்லது சொன்ன சத்தியமா எத்துகறது தப்பு இல்லையே நானும் அதை செய்வேன் அவரு நின்னே முடிச்சிட்டாரு அதுக்கு நம்ம அண்ணாச்சி பதிவு போட்டு இருக்காரு,

    அவரை போய் தப்பா சொன்னது தான் தப்பு அதுவும் நம்ம டாக்டர் சொன்னது தான் ஆச்சிரியம் சரி நண்பா விடுங்க எல்லாரும் சந்தோசமா இருப்போம்...

    நல்லது சொன்னா கண்டிப்பா ஏத்துக்களாம்

    ReplyDelete
  101. 100 முடிந்தது அண்ணாச்சி ;) வரட்டா

    ReplyDelete
  102. உங்கள் பதிவு குப்புற விழுந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை என்ற மாதிரி இருக்கு .

    ReplyDelete
  103. [[[ராஜா | KVR said...

    //ஏங்க எனக்கில்லாத தைரியம் உனக்கிருக்கேடா ராசான்னு வாழ்த்தினா நான் அவரோட கொ.ப.செ.வா.. நல்லாயிருக்கே உங்க ஞாயம்..?//

    அண்ணாச்சி, நான் உங்களுக்கு கொடுத்த பின்னூட்டமல்ல அது. முழுக்க முழுக்க சுரேஷ் அண்ணாச்சிக்குச் சொன்னது. உங்களை சொன்ன மாதிரி தோற்றம் இருந்தா மன்னிச்சிக்கோங்க...]]]

    எதுக்கு சாமி இதுக்கெல்லாம் பெரிய, பெரிய வார்த்தையெல்லாம்..

    லூஸ்ல விடுங்கோ..!

    ReplyDelete
  104. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    அண்ணே, கூகுள்காரனுங்க மெயில் அனுப்பி இருக்காங்க.
    “ பதிவுதான் பக்கம் பக்கமா போடறாருன்னு பார்த்தா பின்னூட்டம் அதைவிட பெரிசு பெரிசா போடறாரு. உண்மைத்தமிழன் ப்ளாக் நிர்வகிக்கவே நாங்க இப்போ தனி சர்வர் உபயோகிக்கிறோம். ஆட்சென்ஸ்ல சம்பாதிக்கிறது எல்லாம் இவருக்கே சரியா இருக்கும் போல. எங்க கம்பனியை காப்பாத்துங்க.”
    அண்ணே.. கொஞ்சம் மனசு வைங்க.:))]]]

    அடேய் லொள்ளு பிடிச்சவனே..

    அந்த ஆட்சென்ஸை பத்தி மட்டும் என்கிட்ட பேசாத.. கொலைகாரனா மாறிருவேன்..

    வருஷக்கணக்கா அதை வைச்சிருந்தும் ஒரு டாலர் நோட்டைக்கூட இன்னும் என் கண்ல காட்டலை அந்த கூகுள்காரனுங்க..

    என்னிக்காச்சும் நேர்ல வரட்டும். பிச்சுப்புடறேன்.. பிச்சு..

    ReplyDelete
  105. ஹலோ, நியாயமா பார்த்தா நீங்க தான் அவங்களுக்குக் காசு குடுக்கனும்.

    பெரிசு பெரிசா பதிவு போடறவங்களுக்கு எல்லாம் பெட்ரமாஸ் லைட்டு தரதில்லையாம். :)

    ReplyDelete
  106. உண்மைத்தமிழன்,

    நல்ல விஷயம்!!!

    வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் ஏதாவது செய்யவேண்டுமென்று களத்தில் இறங்கிய சரத்பாபுவை தாரளமாக பாராட்டலாம்...

    அலுவலகத்தில் தென் சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் சரத்பாபுவைப் பற்றி பேசிய போது அவருக்கும் ஆச்சரியம், சாலிகிராமத்தில் இருந்தும் அவருக்கு சரத்பாபு போன்ற ஒரு ஆள் நிற்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதன் பின் அவர் அவருக்குத்தான் ஓட்டு போடுவதாக சொன்னார்.

    ஆனால், இடையில் ஒருமுறை என்னிடம் சொன்ன விஷயம், சரத்பாபுவுக்குதான் ஓட்டுபோடப்போவதாக சொன்னதும் அவருக்கு தெரிந்த வட்டாரங்களில் சொன்னவுடன் மற்றவர்கள் சொன்ன பதில், எதற்காக ஓட்டை வீணடிக்கிறாய் என்பதுதான்...

    மந்தைகளாய் இருப்பதில்தான் மக்களுக்கு எவ்வளவு பிரியம்!

    எனக்கு புரிபடாத ஒரு விஷயம், ராகுல் காந்தியோ, அழகிரியோ எத்தனை கவுன்சிலர் எலக்சனில் நின்று வந்தார்கள் என்பதுதான்???

    தென்சென்னையில் நின்ற மற்ற பெரிய வேட்பாளர்களிடம் ஒப்பிடும் போது எந்த விதத்தில் அவர் குறைந்து காணப்படுகிறார்???

    குத்தம்பாக்கம் இளங்கோவின் சேவை உணர்வை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவரைப் போன்ற ஆட்களை பற்றி இந்த சமுதாயத்தில் அதிகமாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவரைப் போல் மாதிரிதான் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். இளங்கோ மாதிரியான ஆட்கள் அமைச்சராக இருந்திருந்தால், அவர் வேலையை உதறிவிட்டு சமூக சேவை செய்திருக்க வேண்டியதில்லை???

    அவரை சந்தேகிக்க உரிமை இருக்கிறது என்பது எல்லாம் சரி??? ஆனால் சரத்பாபு தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக அவரை கமெடியனாக, குற்றவாளியாக பேசுவது எல்லாம் காமெடியாக இருக்கிறது.

    ஒருவேளை அழகிரி போன்றோர் நிற்கும் தேர்தலில் சரத்பாபு போன்றோர் நிற்பது தப்புதானோ என்னமோ???

    ReplyDelete
  107. //குத்தம்பாக்கம் இளங்கோவின் சேவை உணர்வை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவரைப் போன்ற ஆட்களை பற்றி இந்த சமுதாயத்தில் அதிகமாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவரைப் போல் மாதிரிதான் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். இளங்கோ மாதிரியான ஆட்கள் அமைச்சராக இருந்திருந்தால், அவர் வேலையை உதறிவிட்டு சமூக சேவை செய்திருக்க வேண்டியதில்லை???//

    அருமையா சொன்னிங்க நண்பா

    //அவரை சந்தேகிக்க உரிமை இருக்கிறது என்பது எல்லாம் சரி??? ஆனால் சரத்பாபு தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக அவரை கமெடியனாக, குற்றவாளியாக பேசுவது எல்லாம் காமெடியாக இருக்கிறது.//

    ஹா ஹா இவர்களால் முடிந்தது இதுவே ;) என்ன செய்ய நண்பா அவர் தன் பாதையில் சிறப்பாய் சென்று கொண்டு தான் இருக்கிறார்

    //ஒருவேளை அழகிரி போன்றோர் நிற்கும் தேர்தலில் சரத்பாபு போன்றோர் நிற்பது தப்புதானோ என்னமோ???//

    நச் என்று சொன்னிங்க தலைவா

    ReplyDelete
  108. சரத்பாபு போல நன்மையில் நம்பிக்கையுள்ள இளைஞர்களை வாழ்த்துவோம். அவருக்கு வாக்களித்த சொரணையுள்ளவர்களையும் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  109. ஐ.நா சபை கூட நடுநிலைமையாக செயல்படாமல் சாக்கடை போல நாறிக்கிட்டிருக்கு. சரத்பாபு ஐ.நா செயலர் பதவிக்கு போட்டியிட்டால் முழு உலகத்தின் அரசியல் சாக்கடையையும் சுத்தம் செய்யலாமே, அதை ஏன் தென் சென்னையோடு சுருக்கவேண்டும்?

    வினவு

    ReplyDelete
  110. ///ராஜா | KVR said...
    உண்மைத்தமிழரே, சரத்பாபுக்கான உங்களது பாராட்டுகளையோ அல்லது அவர் தேர்தலில் நின்றதையோ நான் சந்தேகிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நானும் எனது நண்பர் ஒருவரிடம் சரத்பாபுக்கு ஓட்டுப் போடச் சொன்னேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் 14101 ஓட்டுகளில் அவருடைய ஓட்டும் ஒன்று. ஆனால் அவருக்கு ஓட்டுப் போடச் சொன்னதற்கு காரணம் இவரைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கான உற்சாக டானிக்காக இந்த ஓட்டும் இருக்கட்டும் என்ற எண்ணம் மட்டுமே. சரத் 14101 ஓட்டுகள் வாங்கி இருப்பதிலும் பெருமிதம் அடைகிறேன்.

    ஆனால், உண்மையிலேயே சரத்பாபு மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் என்றால் அவரை அடிப்படையில் இருந்து தொடங்கச் சொல்லுங்கள். சுரேஷ் சொல்வதைப் போல அதிக மக்களுக்கு சேவை செய்ய என்ற ஜல்லிகளோடு நேரடியாக பாராளுமன்றத் தேர்தலில் நின்று அடுத்த நாளே ஜெயித்து மக்கள் சேவை செய்திட இது ஒன்றும் திரைப்படம் இல்லை. சரத்பாபு உண்மையிலேயே சேவை மனப்பாண்மையோடு அரசியலுக்கு வந்திருக்கிறாரா என்பதை அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளே தீர்மானிக்கும். அடிப்படையில் இருந்து தொடங்காமல் ஒவ்வொரு நாடாளுமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே நிற்பாரெனில் டாக்டரைப் போலவே மற்றவர்களும் சந்தேகிக்க நேரிடும்.///

    உங்களுடைய நம்பிக்கை வீண் போகாது என்றே நானும் நம்புகிறேன்..

    நண்பர் சரத்பாபு தனது அரசியல் கடமையை தொடர்ந்து செய்வார் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  111. [[[Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    ஹலோ, நியாயமா பார்த்தா நீங்கதான் அவங்களுக்குக் காசு குடுக்கனும்.

    பெரிசு பெரிசா பதிவு போடறவங்களுக்கு எல்லாம் பெட்ரமாஸ் லைட்டு தரதில்லையாம். :)]]]

    நக்கலு. கோயம்புத்தூர்ல அதான்.. தானா காவிரி தண்ணி மாதிரி கொட்டுது..

    ReplyDelete
  112. நெக்ஸ்ட் தேர்தல்ல மீ கூட சாக்கடைய க்ளீன் பண்ணலாம்னு திங்கிங்ல இருக்கேன்.

    யுவர் சப்போர்ட்டை ஐ ஆம் எக்ஸ்பெக்டிங்.

    ReplyDelete
  113. டிராபிக் ராமசுவாமி ஆயிரத்து சொச்சம் ஓட்டுகள் மட்டும் பெற்றது வருத்தம் அளிக்கும் நிகழ்வு. என்னை பொறுத்தவரை சரத்பாபுவை விட டிராபிக் ராமசுவாமி பொது நலனில் அக்கறை உள்ளவர் . அவர் தேர்தலில் நின்றதை யாரும விளம்பரப்படுத்த வில்லை

    ReplyDelete
  114. [[[Naresh Kumar said...
    எனக்கு புரிபடாத ஒரு விஷயம், ராகுல் காந்தியோ, அழகிரியோ எத்தனை கவுன்சிலர் எலக்சனில் நின்று வந்தார்கள் என்பதுதான்???]]

    நல்லதொரு கேள்வி.. பதில்தான் கிடைக்காது..

    [[[ஒருவேளை அழகிரி போன்றோர் நிற்கும் தேர்தலில் சரத்பாபு போன்றோர் நிற்பது தப்புதானோ என்னமோ???]]]

    நச்சென்ற மில்லியன் டாலர் கேள்வி நரேஷ்..

    தங்களது வருகைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  115. [[செல்வேந்திரன் said...
    சரத்பாபு போல நன்மையில் நம்பிக்கையுள்ள இளைஞர்களை வாழ்த்துவோம். அவருக்கு வாக்களித்த சொரணையுள்ளவர்களையும் வாழ்த்துவோம்.]]

    உங்களது முதல் வருகையை எனது தளம் பெருமையுடன் எதிர்கொள்கிறது செல்வேந்திரன்..

    பக்க பலமான கருத்துக்கும் எனது நன்றி..!

    ReplyDelete
  116. [[[வினவு said...
    ஐ.நா சபை கூட நடுநிலைமையாக செயல்படாமல் சாக்கடை போல நாறிக்கிட்டிருக்கு. சரத்பாபு ஐ.நா செயலர் பதவிக்கு போட்டியிட்டால் முழு உலகத்தின் அரசியல் சாக்கடையையும் சுத்தம் செய்யலாமே, அதை ஏன் தென்சென்னையோடு சுருக்க வேண்டும்?
    வினவு]]]

    வாவ்.. யாரது இது..?

    அண்ணன் வினவுவா..?

    வாங்கண்ணேன்.. செளக்கியந்தானா..?

    தங்களது முதல் வருகையை எனது தளம் பெருமையுடன் எதிர் கொள்கிறது.

    நன்றி.. நன்றி.. நன்றி..

    முழு உலகச் சாக்கடையையும் சுத்தம் பண்ணிட்டுத்தான் தென்சென்னை சாக்கடையைச் சுத்தம் செய்யணும்னா..

    தாங்களும் தங்களுடைய இயக்கத்தினரும் எந்தக் காரணத்திற்காக இயக்கம் நடத்தி வருகிறீர்களோ தெரியலையே முருகா..?

    ச்சும்மா.. ஷோ கேஷுக்காகத்தான் இத்தனை பேரும் குரூப், குரூப்பா இருக்கீங்களாக்கும்..!

    அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற அதே அலட்சியப் போக்கு அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கின்ற உங்களைப் போன்றவர்களுக்கும் இருப்பதுதான் காலக்கொடுமை..

    ReplyDelete
  117. [[[♫சோம்பேறி♫ said...

    நெக்ஸ்ட் தேர்தல்ல மீ கூட சாக்கடைய க்ளீன் பண்ணலாம்னு திங்கிங்ல இருக்கேன். யுவர் சப்போர்ட்டை ஐ ஆம் எக்ஸ்பெக்டிங்.]]]

    கண்டிப்பா.. உங்களுக்கு இல்லாததா சோம்பேறி..

    அப்படியே மதுரைல போய் நில்லுங்களேன்.. எங்களுக்கும் கொஞ்சம் சவுகரியமா இருக்கும் எல்லாத்துக்குமே..!!!!!!!

    ReplyDelete
  118. [[muthukumar said...

    டிராபிக் ராமசுவாமி ஆயிரத்து சொச்சம் ஓட்டுகள் மட்டும் பெற்றது வருத்தம் அளிக்கும் நிகழ்வு. என்னை பொறுத்தவரை சரத்பாபுவை விட டிராபிக் ராமசுவாமி பொது நலனில் அக்கறை உள்ளவர். அவர் தேர்தலில் நின்றதை யாரும் விளம்பரப்படுத்தவில்லை.]]

    முத்துக்குமார் ஸார்..

    டிராபிக் ராமசாமி சிறந்த சமூக சேவகர் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை.

    அதே சமயம் புதிய புதிய இளைஞர்கள் தற்போதைக்கு கட்சி சார்பில்லாமல் களத்தில் இறங்க வேண்டிய சூழல் உள்ளது. அப்படி வருகின்ற ஒருவரை வரவேற்று உற்சாகப்படுத்த வேண்டியிருந்ததால்தான் சரத்பாபுவிற்கு ஓட்டளித்தேன்..

    ReplyDelete
  119. //இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட திராவிட அரசியல்வியாதிகளும் //

    இது தே மு தி க சேர்த்து சொல்லறீங்களா ? சேர்காம சொல்லறீங்களா ?

    ReplyDelete
  120. புருனோ சார்..யாரையும் தாக்காமல் உங்கள் கருத்தைமட்டும் highlight செய்யும் உங்கள் பக்குவம் என்னை வியப்படைய வைக்கிறது.. நாளை நானும் எதேனும் வாக்குவாதத்தில் பங்குபெற நேர்ந்தால் இந்த மாதிரி அணுக முயற்சிக்கிறேன்..

    நண்பா சுரேஷ்,
    புருனோ சார் சொல்வது மாற்றுகருத்தாக கூட இருக்கலாம்.. அதுக்காக தனிமனித தாக்குதல் அவசியமா?

    ReplyDelete
  121. //நக்கலு. கோயம்புத்தூர்ல அதான்.. தானா காவிரி தண்ணி மாதிரி கொட்டுது//

    காவிரி கொட்டுதா?? இப்போ தொட்டு நக்கத்தான் முடியும்...

    (கோவைல சிறுவாணி கொட்டுது!!)

    ReplyDelete
  122. நரேஷ்குமார் & உண்மைத்தமிழன்: நாம் அரசியல்வாதிகளின் வாரிசுகளையும், பணத்தைக் கொட்டி தேர்தலில் வெற்றிபெறும் ரித்திஷ் வகையறாக்களையும் பற்றிப் பேசவில்லை. உண்மையாகவே மக்களுக்குத் தொண்டாற்றும் எண்ணத்துடன் தேர்தலில் நிற்கும் சுயேட்சைகளைப் பற்றியே பேசுகிறோம்.

    சரத்பாபுவின் தொழிலையே எடுத்துக்கொள்வோம். அவர் தனது வியாபாரத்தை சிறிய அளவில் ஆரம்பித்து தானே இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறார், எடுத்ததுமே ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட கிளம்பவில்லையே!! அது போல தான் அரசியலில் தனிநபர் சாதிக்க விரும்புவதும் ஆரம்பநிலையில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறேன். இது புரியாம நான் அழகிரி, ராகுலோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வேன் என்று அடம் பிடித்தால்.......... அப்படியே இருங்க சாமின்னு போய்கிட்டே இருக்க வேண்டியது தான், வேறென்னச் சொல்ல??

    ReplyDelete
  123. சரத்பாவுவிற்கு வாழ்த்துகள்..

    மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



    தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

    http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

    இதை நீங்கள் படித்து கருத்து சொல்லணும்.

    ReplyDelete
  124. //அவரை போய் தப்பா சொன்னது தான் தப்பு //

    என்ன தப்பு?
    அவரு என்ன மஹாத்மாவா?

    ஜெயலலிதா/கருணாநிதி பக்தர்களாக இருப்பதர்க்கும், ஸரத்பாபு பக்தர்களாக இருப்பதர்க்கும் என்ன வேறுபாடு?

    மெய்ப்பொருள் காண்பது அறிவு!

    ReplyDelete
  125. நூறு ஓட்டு கூட விழாதுனு காமெடியன், கைப்புள்ளனு எல்லாம் கிண்டல் பண்ணதெல்லாம் மீறி இவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கறது யாருக்கும் ஆச்சரியமா தெரியல :)

    இவர் கொடுத்த வாக்குறுதியில தவறிருந்தா சொல்லலாம். அவர் ஏன் அந்த எலக்ஷன்ல நிக்கல, ஏன் இந்த எலக்ஷன்ல நிக்கலனு கேள்வி கேட்பவர்களுக்கு அவர் ஓரளவு தெளிவாகவே பதில் சொல்லியிருக்கிறார்னு நினைக்கிறேன். குறைந்தபட்சம் அவர் கொடுத்த வாக்குறுதியில மரம் நடுவதையாவது சென்னைல வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர்கள் நிறைவேற்றினால் நல்லது.

    சரத்பாபு இதே துடிப்புடன் அடுத்த எலக்ஷன்ல நின்னாருனா நிச்சயம் வெற்றி பெறுவார்.

    ReplyDelete
  126. சுரேஷ்,
    மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? உங்களுக்காகத்தானே என் பதிவுல சொல்லியிருந்தேன். விமர்சனம் செய்பவர்களை எங்கே அதை நீ செய்து காட்டுனு சொல்றது சரியில்லைனு. இங்க வந்து டாக்டர்கிட்டயும் அதே சண்டையா. பள்ளிக்கூடத்துக்கு வா, எலக்ஷன்ல நில்லுனு எல்லாம் சொல்றது காமெடினு உங்களுக்கு தெரியலையா? நாளைக்கு உங்களுக்கு பிடித்த ஒருவர் டைரக்ட் செய்யும் படம் மொக்கை என்று யாராவது எழுதினால் "எங்க நீ வந்து டைரக்ட் பண்ணி காட்டு"னு சொல்லுவீங்களா?

    அரசியல்ல நின்னா இந்த மாதிரி கேள்விகள் நிச்சயம் வரத்தான் செய்யும். அதை எல்லாம் நல்ல முறைல எடுத்து பதில் சொல்லனும். அப்படியும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் we should learn to agree to disagreஎ. அவ்வளவு தான்.

    பிரியாணி, டாஸ்மாக் சரக்கு, கவர் அனைத்தையும் மீறி 17,000 பேர் ஏற்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியான முறையில் ஆறு மாதத்திற்கு முன்பே வேலையை ஆரம்பித்தால் பலரை சென்றடையும். அதில் கவனத்தை செலுத்தவும்.

    ReplyDelete
  127. ராஜா\டாக்டர் புருனோ,
    உங்கள் கேள்விகள் நிச்சயம் சரியே. பிசினஸை ஆயிரம் ரூபாயிலிருந்து (குறைவா கூட இருக்கலாம்) ஆரம்பித்து தானே கோடிக்கு போயிருக்கிறார். அதே போல் இதையும் கீழிருந்து ஆரம்பித்திருக்கலாமே என்று.

    அவர் கைல கோடி ரூபாய் இருந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவர் துவங்கவில்லை. கையிலிருப்பதை வைத்து துவங்கி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். அவர் கையில் கோடி ரூபாய் இருந்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து தான் துவங்கியிருப்பார்.

    இன்று அவருக்கு இருக்கும் மீடியா சப்போர்ட் அவருக்கு இந்த தன்னம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும். அவர் கீழிருந்து மேல் வருவதற்குள் இதே துடிப்பான இளைஞனாக இருப்பாரா என்பதும் கேள்விக்குறி. இல்லை ஐம்பது வயது இளைஞன் சரத்பாபு உங்களுக்காக உழைக்க ஓட்டு கேட்கிறேனு வந்து நின்னா, இதெல்லாம் நாங்க இருபது வருஷத்துக்கு முன்னாடியே கேட்டுட்டோம்னு சொல்லிடுவோம்.

    இந்த தேர்தலில் அவர் தோற்றிருந்தாலும், அவருக்கு கிடைத்த இந்த ஓட்டுக்களும், அனுபவங்களும் அடுத்த தேர்தலுக்கு நிச்சயம் உதவும். சரியான முறையில் அவர் அதை பயன்படுத்தினால் வெற்றி பெற சாத்தியங்கள் இருக்கின்றன. ஏதாவது கட்சியிலே சீட்டு கொடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  128. ராஜா,

    இங்கு பதில்கள் அனைத்தும் அவர் தேர்தலில் நின்ற ஒரே காரணத்திற்காக அவரை காமெடியனாக, வில்லனாக சித்தரித்ததன் அவசியத்தை கேள்விக்குட்படுத்தத்தான்...

    ஒருவேளை, இந்த தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் அவரை அடுத்த சட்டமன்ற தேர்தலிலோ அல்லது வேறு கவுன்சிலர் தேர்தலிலோ வெற்றியை பெற்றுத்தரவும்....

    பதிவின் நோக்கம், ஒரு படித்த மனிதன் தேர்தலில் போட்டியிட்ட முறையையும், இது போன்ற நிகழ்ச்சிகளே ஒரு மாற்று சக்தியையோ அல்லது நல்ல ஆட்சியையோ கொடுக்க துணைபுரியும் என்பதற்காக பாராட்டுவதே! அதில் அப்படி செய்திருக்க வேண்டும், இப்படித்தான் செய்திருக்கவேண்டும் என்று சொல்லி, அப்படியெல்லாம் செய்யாததால் அவர் கெட்டவர் என்று பேசுவது வருத்தத்திற்குரியது...

    சாதாரண கல்லூரியில் எம்பிஏ படித்தால் ட்ரெய்னியாகத்தான் வேலைக்கு எடுப்பார்கள், அதே ஐஐஎம் ல் படித்தால் எடுத்தஉடனே மிடில் மேனேஜ்மெண்ட்டிற்கு செலக்ட் செய்வார்கள், அந்த அடிப்ப்டையில் கூட அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம்...

    எம் எஸ் உதயமூர்த்தி போன்ற ஆட்களையும் தோற்கடித்த ஆட்கள் நாம், இப்பொழுது அவரைப் போன்ற ஆட்கள் நின்றிருந்தாலும் ஜெயித்திருப்பார்களா என்பது சந்தேகமே, இந்தச்சூழலில் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது குறைந்தபட்சம் அங்கீகாரம் கொடுப்பது நம் கடமை என்றே எண்ணுகிறேன்....

    ReplyDelete
  129. சரத் ஜெயிக்கிராரோ,டெபாசிட் இழக்கிராரோ அது வேறு விஷயம். வலைப்பதிவர்கள் கும்மியடிக்க இந்த ஒரு மேட்டர் கிடைச்சுதல்ல அது போதும்.

    ReplyDelete
  130. ///Bhuvanesh said...

    //இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட திராவிட அரசியல்வியாதிகளும் //

    இது தே மு தி க சேர்த்து சொல்லறீங்களா ? சேர்காம சொல்லறீங்களா ?///

    சேர்க்காமத்தான் சொல்றேன்..

    ReplyDelete
  131. [[[Bhuvanesh said...

    புருனோ சார்.. யாரையும் தாக்காமல் உங்கள் கருத்தைமட்டும் highlight செய்யும் உங்கள் பக்குவம் என்னை வியப்படைய வைக்கிறது.. நாளை நானும் எதேனும் வாக்குவாதத்தில் பங்குபெற நேர்ந்தால் இந்த மாதிரி அணுக முயற்சிக்கிறேன்..]]

    அதுதான் மருத்துவர் புருனோவின் ஸ்பெஷலாட்டி..

    [[நண்பா சுரேஷ், புருனோ சார் சொல்வது மாற்றுகருத்தாககூட இருக்கலாம்.. அதுக்காக தனிமனித தாக்குதல் அவசியமா?]]]

    நியாயமான கேள்விதான்.. என் வாக்கையும் செலுத்துகிறேன்.. நன்றி புவனேஷ் தம்பி..

    ReplyDelete
  132. [[[Suresh said...
    100 முடிந்தது அண்ணாச்சி ;) வரட்டா]]]

    வருகைக்கும், கலந்துரையாடலுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    அடுத்த முறை கொஞ்சம் காரத்தைக் குறைத்துக் கொள்வது நலம்.

    ReplyDelete
  133. [[[malar said...
    உங்கள் பதிவு குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற மாதிரி இருக்கு.]]]

    எனக்கா? சரத்பாபுவிற்கா..?

    ReplyDelete
  134. [[[Bhuvanesh said...

    //நக்கலு. கோயம்புத்தூர்ல அதான்.. தானா காவிரி தண்ணி மாதிரி கொட்டுது//

    காவிரி கொட்டுதா?? இப்போ தொட்டு நக்கத்தான் முடியும்... (கோவைல சிறுவாணி கொட்டுது!!)]]]

    ஓ.. பழக்க தோஷத்துல காவிரின்னு சொல்லிட்டேன் தம்பி..

    அவ்ளோதான்.. ஆனா ஊர்க்கொழுப்புன்னு ஒண்ணு இருக்கே..?

    ReplyDelete
  135. [[ராஜா | KVR said...

    நரேஷ்குமார் & உண்மைத்தமிழன்: நாம் அரசியல்வாதிகளின் வாரிசுகளையும், பணத்தைக் கொட்டி தேர்தலில் வெற்றிபெறும் ரித்திஷ் வகையறாக்களையும் பற்றிப் பேசவில்லை. உண்மையாகவே மக்களுக்குத் தொண்டாற்றும் எண்ணத்துடன் தேர்தலில் நிற்கும் சுயேட்சைகளைப் பற்றியே பேசுகிறோம்.

    சரத்பாபுவின் தொழிலையே எடுத்துக்கொள்வோம். அவர் தனது வியாபாரத்தை சிறிய அளவில் ஆரம்பித்து தானே இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறார், எடுத்ததுமே ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட கிளம்பவில்லையே!! அது போல தான் அரசியலில் தனி நபர் சாதிக்க விரும்புவதும் ஆரம்ப நிலையில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறேன். இது புரியாம நான் அழகிரி, ராகுலோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வேன் என்று அடம் பிடித்தால்.......... அப்படியே இருங்க சாமின்னு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான், வேறென்னச் சொல்ல??]]]

    ராஜா உங்களது வாதம் நகைப்புக்குரியது.

    ரித்தீஷும், நெப்போலியனும், கனிமொழியும், அழகிரியும், தயாநிதி மாறனும் ஒரு போதும் தொண்டர்களாக இருந்தவர்களில்லை.. எடுத்த எடுப்பிலேயே தலைவர்கள் ஆனவர்கள்தான். அதற்குக் காரணம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது உதிரம் சிந்தி கட்டி வைததிருக்கும் திமுக என்னும் கோட்டை.

    அதில் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்து வைக்காமல் உள்ளே சொகுசாக இருக்கப் போகிறார்கள்.

    இதற்கு தம்பி சரத்பாபுவின் இந்த நேரடி போட்டி எவ்வளவு மேல்..!

    ReplyDelete
  136. [[[வண்ணத்துபூச்சியார் said...

    சரத்பாவுவிற்கு வாழ்த்துகள்..

    மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



    தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

    http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

    இதை நீங்கள் படித்து கருத்து சொல்லணும்.]]]

    தாங்கள் எழுதியதை படித்து விமர்சனம் செய்யக்கூடிய நிலைமையிலா நான் இருக்கிறேன்..

    ஏன் ஸார் காமெடி பண்றீங்க..? ஹி..ஹி.. நல்லாயிருக்கு..

    கொஞ்ச காலம் சினிமாவை விட்டுட்டு இதைப் பின் தொடருங்கள்..

    ReplyDelete
  137. [[[Indian said...

    //அவரை போய் தப்பா சொன்னதுதான் தப்பு //

    என்ன தப்பு?
    அவரு என்ன மஹாத்மாவா?

    ஜெயலலிதா/கருணாநிதி பக்தர்களாக இருப்பதர்க்கும், ஸரத்பாபு பக்தர்களாக இருப்பதர்க்கும் என்ன வேறுபாடு? மெய்ப்பொருள் காண்பது அறிவு!]]]

    இந்தியன் ஸார்..

    என்னமோ நான் இப்பவே போய் சரத்பாபுகிட்ட தொண்டனா சேர்ந்துக்கிட்ட மாதிரி சொல்றீங்களே..

    கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..

    ReplyDelete
  138. [[[வெட்டிப்பயல் said...

    நூறு ஓட்டுகூட விழாதுனு காமெடியன், கைப்புள்ளனு எல்லாம் கிண்டல் பண்ணதெல்லாம் மீறி இவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கறது யாருக்கும் ஆச்சரியமா தெரியல :)

    இவர் கொடுத்த வாக்குறுதியில தவறிருந்தா சொல்லலாம். அவர் ஏன் அந்த எலக்ஷன்ல நிக்கல, ஏன் இந்த எலக்ஷன்ல நிக்கலனு கேள்வி கேட்பவர்களுக்கு அவர் ஓரளவு தெளிவாகவே பதில் சொல்லியிருக்கிறார்னு நினைக்கிறேன். குறைந்தபட்சம் அவர் கொடுத்த வாக்குறுதியில மரம் நடுவதையாவது சென்னைல வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர்கள் நிறைவேற்றினால் நல்லது.
    சரத்பாபு இதே துடிப்புடன் அடுத்த எலக்ஷன்ல நின்னாருனா நிச்சயம் வெற்றி பெறுவார்.]]]

    வெட்டி ஸார்..

    உங்களது ஆதரவிற்கு நன்றி..

    ஆனால் அடுத்தத் தேர்தலிலும் சரத்பாபு நின்றால் ஓட்டுக்களைக் கூடுதலாக வாங்குவாரே ஒழிய ஜெயிக்க முடியாது..

    ReplyDelete
  139. [[[வெட்டிப்பயல் said...

    சுரேஷ், மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? உங்களுக்காகத்தானே என் பதிவுல சொல்லியிருந்தேன். விமர்சனம் செய்பவர்களை எங்கே அதை நீ செய்து காட்டுனு சொல்றது சரியில்லைனு. இங்க வந்து டாக்டர்கிட்டயும் அதே சண்டையா. பள்ளிக்கூடத்துக்கு வா, எலக்ஷன்ல நில்லுனு எல்லாம் சொல்றது காமெடினு உங்களுக்கு தெரியலையா? நாளைக்கு உங்களுக்கு பிடித்த ஒருவர் டைரக்ட் செய்யும் படம் மொக்கை என்று யாராவது எழுதினால் "எங்க நீ வந்து டைரக்ட் பண்ணி காட்டு"னு சொல்லுவீங்களா?
    அரசியல்ல நின்னா இந்த மாதிரி கேள்விகள் நிச்சயம் வரத்தான் செய்யும். அதை எல்லாம் நல்ல முறைல எடுத்து பதில் சொல்லனும். அப்படியும் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் we should learn to agree to disagre. அவ்வளவுதான்.
    பிரியாணி, டாஸ்மாக் சரக்கு, கவர் அனைத்தையும் மீறி 17,000 பேர் ஏற்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியான முறையில் ஆறு மாதத்திற்கு முன்பே வேலையை ஆரம்பித்தால் பலரை சென்றடையும். அதில் கவனத்தை செலுத்தவும்.]]]

    நல்ல அறிவுரை வெட்டி ஸார்..

    இணையத்துடன் தொடர்புடையவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு அடுத்தத் தேர்தலிலும் நிற்க முடியாது.

    சரத்பாபு கட்சி சாராத குடும்பத்தினரின் அன்பையும், ஆதரவையும் பெற வேண்டும். அதற்கான வழி முறைகளை அவர் ஆராயட்டும்..!

    ReplyDelete
  140. [[[வெட்டிப்பயல் said...

    ராஜா\டாக்டர் புருனோ,

    உங்கள் கேள்விகள் நிச்சயம் சரியே. பிசினஸை ஆயிரம் ரூபாயிலிருந்து (குறைவா கூட இருக்கலாம்) ஆரம்பித்து தானே கோடிக்கு போயிருக்கிறார். அதே போல் இதையும் கீழிருந்து ஆரம்பித்திருக்கலாமே என்று.

    அவர் கைல கோடி ரூபாய் இருந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து அவர் துவங்கவில்லை. கையிலிருப்பதை வைத்து துவங்கி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். அவர் கையில் கோடி ரூபாய் இருந்திருந்தால் நிச்சயம் அதிலிருந்துதான் துவங்கியிருப்பார்.

    இன்று அவருக்கு இருக்கும் மீடியா சப்போர்ட் அவருக்கு இந்த தன்னம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும். அவர் கீழிருந்து மேல் வருவதற்குள் இதே துடிப்பான இளைஞனாக இருப்பாரா என்பதும் கேள்விக்குறி. இல்லை ஐம்பது வயது இளைஞன் சரத்பாபு உங்களுக்காக உழைக்க ஓட்டு கேட்கிறேனு வந்து நின்னா, இதெல்லாம் நாங்க இருபது வருஷத்துக்கு முன்னாடியே கேட்டுட்டோம்னு சொல்லிடுவோம்.
    இந்த தேர்தலில் அவர் தோற்றிருந்தாலும், அவருக்கு கிடைத்த இந்த ஓட்டுக்களும், அனுபவங்களும் அடுத்த தேர்தலுக்கு நிச்சயம் உதவும். சரியான முறையில் அவர் அதை பயன்படுத்தினால் வெற்றி பெற சாத்தியங்கள் இருக்கின்றன. ஏதாவது கட்சியிலே சீட்டு கொடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.]]]

    ஐயோ.. பார்றா இந்த அக்கிரமத்தை..

    வெட்டி ஸார் விட்டா சரத்பாபுவிற்கு கொ.ப.செ. ஆகி என்னையவே ஓவர் டேக் வாங்கிருவாரு போலிருக்கு..!

    ReplyDelete
  141. [[[Naresh Kumar said...

    பதிவின் நோக்கம், ஒரு படித்த மனிதன் தேர்தலில் போட்டியிட்ட முறையையும், இது போன்ற நிகழ்ச்சிகளே ஒரு மாற்று சக்தியையோ அல்லது நல்ல ஆட்சியையோ கொடுக்க துணைபுரியும் என்பதற்காக பாராட்டுவதே! அதில் அப்படி செய்திருக்க வேண்டும், இப்படித்தான் செய்திருக்கவேண்டும் என்று சொல்லி, அப்படியெல்லாம் செய்யாததால் அவர் கெட்டவர் என்று பேசுவது வருத்தத்திற்குரியது...]]

    சாதாரண கல்லூரியில் எம்பிஏ படித்தால் ட்ரெய்னியாகத்தான் வேலைக்கு எடுப்பார்கள், அதே ஐஐஎம் ல் படித்தால் எடுத்த உடனே மிடில் மேனேஜ்மெண்ட்டிற்கு செலக்ட் செய்வார்கள், அந்த அடிப்ப்டையில்கூட அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம்...

    எம் எஸ் உதயமூர்த்தி போன்ற ஆட்களையும் தோற்கடித்த ஆட்கள் நாம், இப்பொழுது அவரைப் போன்ற ஆட்கள் நின்றிருந்தாலும் ஜெயித்திருப்பார்களா என்பது சந்தேகமே, இந்தச்சூழலில் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது குறைந்தபட்சம் அங்கீகாரம் கொடுப்பது நம் கடமை என்றே எண்ணுகிறேன்....]]]

    நரேஷ் ஸார்..

    மிக்க நன்றி.. தங்களுடைய விளக்கவுரை எனக்கு கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது..

    பதிவின் நோக்கம் திசைதிரும்பி எங்கெங்கோ சென்றாலும், உங்களைப் போன்ற அன்பர்கள் உண்மையை இது போன்று வெளிப்படுத்துவது ரொம்ப சந்தோஷம்..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  142. [[[சந்திரா said...
    சரத் ஜெயிக்கிராரோ,டெபாசிட் இழக்கிராரோ அது வேறு விஷயம். வலைப்பதிவர்கள் கும்மியடிக்க இந்த ஒரு மேட்டர் கிடைச்சுதல்ல அது போதும்.]]]

    அடப்பாவிகளா..

    வலையுலகத்தை திருத்தவே முடியாது போலிருக்கே..!

    ReplyDelete
  143. //என்னமோ நான் இப்பவே போய் சரத்பாபுகிட்ட தொண்டனா சேர்ந்துக்கிட்ட மாதிரி சொல்றீங்களே..
    //

    அது உங்களுக்கு இல்ல.

    ReplyDelete