Pages

Sunday, May 10, 2009

சேலத்தில் பாரதிராஜா-சீமான் கூட்டணியின் முழக்கம்..!

10-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாரதிராஜா தலைமையிலான திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் சேலத்தில் கடந்த 5-ம் தேதி பொதுக்கூட்டம் நடந்துள்ளது.

அக்கூட்டம் பற்றி நேற்று வெளிவந்திருந்த ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கே உங்களுக்காக தருகிறேன்..

இனி ஜூனியர் விகடனில் இருந்து..!

‘இருப்பாய் தமிழா நெருப்பாய்..' என்ற முழுக்கத்தோடு தமிழ்த்திரை உலகினர் காங்கிரஸுக்கு எதிரான அனல் பறக்கும் பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார்கள்.

“தமிழ் இனத் துரோகிகளை அடையாளம் காட்டுகிறோம். அவர்களுக்கு வாக்காளிக்காதீர்கள்..” என்பதுதான் இவர்களது பிரதான குரல். காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகள்தான் இவர்களின் டார்கெட்.

இயக்குநர்கள் பாரதிராஜாவும், சீமானும் அனல் கக்கும் பிரச்சாரத்துக்குத் தலைமையேற்று செல்கிறார்கள். பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் கடந்த 40ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பிடிபிடியெனப் பிடித்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினார் சீமான். வழி நெடுக, காங்கிரஸின் கை சின்னத்துக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டபடியே சேலம் போய் சேர்ந்தார்கள்.

5-ம் தேதி மாலை சேலம் போஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடைக்கு முதல் ஆளாக வந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. “கேப்டன் பிரபாகரனை உருவாக்கியவன் நான்தான். தமிழ்நாட்டில் பிரபாகரனைப் பற்றி அதிகம் பேச வைத்தவனும் நான்தான்.. தமிழகத்தில் தமிழினத் துரோகிகள் பதினாறு பேர் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள். வாக்குச்சீட்டு என்கிற ஆயுதம் இப்போது நம் கையில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அந்தப் பதினாறு துரோகிகளையும் ஓட ஓட விரட்டியடிப்போம்..” என்று அறிமுக உரை கொடுத்தார்.

அந்தச் சமயத்தில் பாரதிராஜாவும், சீமானும் மேடையேற, 'தென்னகத்து பிரபாகரன் சீமான் வாழ்க..!' என்ற கோஷங்களும், கரவொலியும் விண்ணைப் பிளந்தது.

கவிஞர் அறிவுமதி பேசும்போது, “தலைவன் பிரச்சாரத்துக்கு வந்தாலே காசு கொடுத்துத்தான் ஆளைப் பிடிச்சிட்டு வர்றாங்க.. ஆனா வராத ஒரு தலைவனுக்கு(பிரபாகரன்) இங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. தமிழ் உணர்வுள்ள அத்தனை கட்சியினரும் இங்கே கூடியிருக்கீன்னு எனக்குத் தெரியும். நாங்க சென்னைல இருந்து வரும்போது, தி.மு.க.வினர் பலர் எங்களைச் சந்திச்சு உணவு கொடுத்து உபசரிச்சாங்க..” என்று பேசினார்.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாகப் பேச வந்த ராஜபிரபு, “சேலத்துல சத்தியமா தங்கபாலுவை ஜெயிக்கவிட மாட்டோம். அந்த ஆளு மட்டும் ஜெயிச்சிட்டா.. இந்த போஸ் மைதானத்துலேயே நான் தீக்குளிச்சு சாவேன்.. எங்க தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது ஆச்சுன்னா.. ஜாக்கிரதை..” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

அடுத்து மைக் பிடித்தவர் பாரதிராஜா,

“என் இனிய தமிழ் மக்களே..” என்று தன் வழக்கமான பாணியில் ஆரம்பித்தவர், “என் அப்பனும், ஆத்தாளும் அந்தக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்தவர்கள். நானே பல காங்கிரஸ் மேடைகளில் பொய்யாகப் பேசியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு உணர்வோடு, உண்மையாக உங்கள் முன் பேச வந்திருக்கிறேன். சினிமாவில் நாங்கள் எப்போதுமே கதாநாயகனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் இங்கே வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். வில்லன் யார் என்பதை நாங்கள் உங்களுக்கு அடையாளம் காட்டப் போகிறோம்.. கதாநாயகன் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..” என்றவர் சற்றே தொனியை மாற்றிக் கொண்டு


“சோனியாம்மா.. நீங்க வெளிநாட்டுப் பொம்பளையா இருந்தாலும் எங்க மண்ணுக்கு வந்ததால உங்களைப் பெருந்தன்மையோட ஏத்துக்கிட்டு அழகு பார்த்தது எங்க மண். ஆனா, உங்களுக்கு அந்தப் பெருந்தன்மை கொஞ்சம்கூட இல்லாமப் போச்சேம்மா.. உங்களோட ஒரு தாலி அறுந்ததுக்காக எம்தமிழச்சிகளோட ஒரு லட்சம் பேரோட தாலிகலை அறுத்துப் போட்டிருக்கீங்களே.. இது நியாயமா தாயி..” என்று வடக்கு நோக்கி இறைஞ்சிவிட்டுத் தொடர்ந்தார்.

“ஈழத்தில் எம் தமிழ்ப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக விட்டு ரசித்துப் பார்க்கிறான் சிங்கள வெறியன். குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்து பார்த்து ஆறு மாத காலமாக என்னால் தூங்கக்கூட முடியவில்லை. கண்ணை மூடினால் ரத்தமும் சதையுமாகக் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைகள்தான் வந்து நிற்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய யாருமே கேட்கவில்லை. மாறாக அவர்களுடன் கைகோர்த்துக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

சேலத்தில் என் அன்புக்குரிய நண்பர் தங்கபாலு போட்டியிடுகிறார். ஈரோட்டில் பெரியாரின் பேரன் என்று அவருடைய பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இளங்கோவன் போட்டியிடுகிறார். சிவகங்கையிலே ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி சிதம்பரம் நிற்கிறார். உங்க அத்தனை பேருக்கும் கண்டிப்பாக எம்தமிழர்கள் பாடம் புகட்டுவார்கள். உலகத் தமிழர்களுக்கெல்லாம் ஒரே அடையாளம் எங்கள் பிரபாகரன்தான் என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் நிரூபிப்பார்கள்..” என்று உணர்ச்சிப் பிழம்பாக பேசி முடிக்க மேடையிலிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

நிறைவாக இயக்குநர் சீமான் சிவந்த கண்களோடு வந்து நின்றார்.

“காமராஜர் ஆட்சி அமைக்கிறோம்னு காங்கிரஸ்காரங்க சொல்றாங்க.. ரொம்ப சந்தோஷம்.. ஆனா உங்கள்ல யாரு காமராஜர்னு முதல்ல சொல்லுங்க.. ஈழத்து எம்தமிழர்கள் செத்து ஊரே அழுதுட்டு இருக்காங்க. இங்கே நீங்க வாயெல்லாம் பல்லைக் காட்டிகிட்டு வாக்குக் கேட்க வர்றீங்களே.. வெட்கமா இல்லே..? எழவு வீட்டுல வந்து ஓட்டுக் கேட்குறீங்களே..? உங்களுக்கெல்லாம் மானமே கிடையாதா..? எங்ககிட்ட வாக்கு இல்லடா.. வாக்கரிசிதான் இருக்கு.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரியாருக்கு உறவு வழியில் பேரனா இருக்கலாம். நான் உணர்வு வழிப் பேரன்.


ஈரோட்டு நான் இப்படி சொன்னதைக் கேட்ட இளங்கோவன், “எங்க தாத்தா சின்ன வயசுல கொஞ்சம் அப்படி, இப்படின்னு இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. அப்படி இருந்ததுல இவரு பொறந்திருக்கலாம்னு என்னைக் கிண்டல் பண்ணியிருக்காரு.. அந்த ஈனப் பயலை என்னன்னு சொல்றது..?

நான் தப்பாப் பேசியதாச் சொல்லி என்னைக் கைது செய்யச் சொன்னார் கருணாநிதி. பெரியாரைப் பத்தி இப்படி தரக்குறைவா பேசும் லூசுப்பயல் இளங்கோவன் மேல கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப் போறாரு..?

அங்கே ஈழத்தில் செத்துப் போன தாயின் மடியில் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது. எந்தக் கல்நெஞ்சக்காரனுக்கும் இதைப் பார்த்தால் இரக்கம் வரும். ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்களோ.. அங்குள்ள நம் தமிழர்களை அழிக்க உதவி செஞ்சுக்கிட்டிருக்காங்க.. இங்கே இலை மலர்ந்தால்தான்.. அங்கே ஈழம் மலரும்.. அதனால இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க..” என்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டு இரவு பத்து மணிக்குள் தன் பேச்சை முடித்தார்.

பாவம் காங்கிரஸ்.. தி.மு.க. கூட்டணி..!

கொட்டல் குடைச்சலை இன்னும் எத்தனை திசையிலிருந்துதான் சமாளிக்க வேண்டுமோ..?


நன்றி : ஜூனியர் விகடன்(மே 13, 2009)

45 comments:

  1. படிச்சிட்டு வர்றேன்

    ReplyDelete
  2. //அங்கே ஈழத்தில் செத்துப் போன தாயின் மடியில் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது. எந்தக் கல்நெஞ்சக்காரனுக்கும் இதைப் பார்த்தால் இரக்கம் வரும். ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்களோ..//

    அதிகாரமும், பணமும் இருந்தாப்போதும்ணே........ எவன் எப்படிப்போனா நமக்கென்ன அண்ணே..
    வாழுக பண நாயகம்

    ReplyDelete
  3. யாரு ஜனம் பேசுறத கேட்குறாங்க..எல்லாம் பணம் பேசுறத கேட்குறாங்க...

    ReplyDelete
  4. Ritsih started distributing Rs. 500-1000/vote in Ramnad constituency. We have to wait and watch the effect of Ealam on village voters.

    ReplyDelete
  5. ஒட்டுக்கு ரூ.500.00 சூரியன் கிட்டவரது......

    வோணம் சொல்லவங்களா.......


    ஒர நா பொழப்பு சாமியோ............!

    ReplyDelete
  6. We Will Just Wait till May-13.....!
    Let us See Tamilan's Reaction...!

    ReplyDelete
  7. டாக்டர்கிட்ட கண்ணை காண்பிச்சாச்சு... எல்லாம் ஓகே என்ரு கூட சொல்லியாச்சு.
    இப்பவும் அதே மாதிரிதாண்ணே தெரியுது.
    சின்ன சின்ன பதிவா போடுவிங்க, இப்ப எப்பிடிண்ணே பெரிசா எழுதுறிங்க ???
    **
    In your previous post I was joking only. It was a small post compare to your other posts -thats why!

    ReplyDelete
  8. இந்த தேர்தலில் மக்கள் தான் ஒரு நல்ல பதிலளிக்க வேண்டும்.

    காத்திருக்க இன்னும் அவகாசமில்லை...

    கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்பு...
    தமிழா புரிந்து செயல்படு...

    இன்று நாம் தெளிந்து செயல்படா விட்டால்
    நாளை தமிழனுக்கில்லை...

    ReplyDelete
  9. //அத்திரி said...

    படிச்சிட்டு வர்றேன்//

    இருக்கிறதே ரெண்டு பக்கம்.. அதுக்கு ஒரு பில்டப்பா..!

    ReplyDelete
  10. ///அத்திரி said...

    //அங்கே ஈழத்தில் செத்துப் போன தாயின் மடியில் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது. எந்தக் கல்நெஞ்சக்காரனுக்கும் இதைப் பார்த்தால் இரக்கம் வரும். ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்களோ..//

    அதிகாரமும், பணமும் இருந்தாப் போதும்ணே........ எவன் எப்படிப்போனா நமக்கென்ன அண்ணே.. வாழுக பண நாயகம்///

    அதான் நீயே சொல்லிட்டியே ராசா.. நான் வேற என்னத்த சொல்ல முடியும்..?!

    ReplyDelete
  11. ///விஷ்ணு. said...
    யாரு ஜனம் பேசுறத கேட்குறாங்க.. எல்லாம் பணம் பேசுறத கேட்குறாங்க...///

    மக்களிடம் உள்ள பலவீனமே அதுதான்..

    நான் நம்புவதெல்லாம் இளைய சமுதாயத்தினரைத்தான்..!

    ReplyDelete
  12. ///K said...
    Ritsih started distributing Rs. 500-1000/vote in Ramnad constituency. We have to wait and watch the effect of Ealam on village voters.///

    பணம் இருக்குறவன் எடுக்குறான்..? ஆனா இந்தப் பணம் எங்கிட்டிருந்துத்தான் அவனுக்கு வந்துச்சுன்னு யாராச்சும் கேட்க முடியுமா.. அதுதான் இந்திய அரசியல்..

    கிராமத்து மக்கள் பொதுவாகவே அதிகம் படிப்பறிவில்லாதவர்கள். முற்றிலும் தங்களது வாழ்க்கையை வைத்துத்தான் எதையும் கணக்கிடுவார்கள்.

    ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து அவர்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்..!

    ReplyDelete
  13. ///senthil said...
    ஒட்டுக்கு ரூ.500.00 சூரியன் கிட்ட வரது...... வோணம் சொல்லவங்களா.......
    ஒர நா பொழப்பு சாமியோ.!///

    சரி கொடுத்தா வாங்கிக்குங்க.

    ஆனா வோட்டை மட்டும் மாத்தி போட்டிருங்க..

    புண்ணியம் கிடைக்கும்..!

    ReplyDelete
  14. //டக்ளஸ்....... said...
    We Will Just Wait till May-13.....! Let us See Tamilan's Reaction...!///

    நானும்தான்..

    ReplyDelete
  15. ///லேகா பக்க்ஷே said...

    டாக்டர்கிட்ட கண்ணை காண்பிச்சாச்சு... எல்லாம் ஓகே என்ரு கூட சொல்லியாச்சு.
    இப்பவும் அதே மாதிரிதாண்ணே தெரியுது.
    சின்ன சின்ன பதிவா போடுவிங்க, இப்ப எப்பிடிண்ணே பெரிசா எழுதுறிங்க ???
    **
    In your previous post I was joking only. It was a small post compare to your other posts -thats why!///

    அந்தப் புத்தகத்துல அவ்வளவுதாம்மா போட்டிருந்துச்சு-)))))))))))))))))))

    ReplyDelete
  16. ///தீப்பெட்டி said...

    இந்த தேர்தலில் மக்கள் தான் ஒரு நல்ல பதிலளிக்க வேண்டும்.

    காத்திருக்க இன்னும் அவகாசமில்லை...

    கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்பு...
    தமிழா புரிந்து செயல்படு...

    இன்று நாம் தெளிந்து செயல்படா விட்டால்
    நாளை தமிழனுக்கில்லை...///

    தீப்பெட்டி ஸார்..

    நன்றி.. நன்றி.. நன்றி..

    கவிதை இனிக்கிறது..

    எனக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராதது இந்தக் கவிதை மட்டும்தான்..!

    நல்லவேளை எல்லாரும் தப்பிச்சாங்க..!

    ReplyDelete
  17. ஏன் சார், எல்லாருமா சேர்த்து இரட்டை இலைக்கு ஓட்டு போட சொல்லுறிங்களே,
    அது எதை வைச்சு? ஈழம் மலர வழி செய்வாங்கள் என்றா இல்லை கருணாநிதியை தோட்கடிக்கவா?? இல்லை தமிழ் நாட்டு அரசியலில் வேற வழியே இல்லை என்றா???
    என்னை பொறுத்த வரையில் ஈழம் மலரவோ அல்லது ஈழ தமிழர்களுக்கு உதவும் என்னமோ ஜெயலலிதா அம்மாவின் மனதில் அறவே இல்லை. இது வெறும் தேர்தல் பிரச்சாரமே.

    ReplyDelete
  18. பாரதிராஜா,சீமான் மேடைப்பேச்சுக்கள் உணர்ச்சிக்களம்.திராவிட கட்சிகளிடமிருந்த நாவன்மை இயக்குநர்களிடம் போய் சரணடைந்து விட்டது.

    //எனக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராதது இந்தக் கவிதை மட்டும்தான்..!//

    ஆமாம்!கவிதையெல்லாம் எழுதுனா ரெண்டு வரில விசயத்தை சொல்ல வேண்டி வரும்.உரைநடைன்னா நம்ம வூட்டுக் கச்சேரிதான்!இல்ல:)

    ReplyDelete
  19. ///லேகா பக்க்ஷே said...

    ஏன் சார், எல்லாருமா சேர்த்து இரட்டை இலைக்கு ஓட்டு போட சொல்லுறிங்களே, அது எதை வைச்சு? ஈழம் மலர வழி செய்வாங்கள் என்றா இல்லை கருணாநிதியை தோட்கடிக்கவா?? இல்லை தமிழ் நாட்டு அரசியலில் வேற வழியே இல்லை என்றா???
    என்னை பொறுத்த வரையில் ஈழம் மலரவோ அல்லது ஈழ தமிழர்களுக்கு உதவும் என்னமோ ஜெயலலிதா அம்மாவின் மனதில் அறவே இல்லை. இது வெறும் தேர்தல் பிரச்சாரமே.///

    அப்படின்னு நாங்க நினைக்கலே. ஏன்னா இனி வரும் காலக்கட்டங்களில் தமிழ்நாட்டில் இது போன்ற செய்வது கடினம்.. அதனால்தான் பாரதீய ஜனதாவில் இருந்து கலைஞர் வரையிலும் தனி தமிழ் ஈழத்திற்கு ஆதரவான இறுதிக் குரலை வழங்க மறுக்கிறார்கள்.

    அம்மா எப்பவும் போல்டுதான்.. அதான் போட்டுத் தாக்கிட்டாங்க..

    இப்ப அவங்க சைடுல ஜெயிச்சாலும் சரி.. மத்தியில கூட்டணில வேண்ணா அவங்க சேரலாம். அவங்களே பிரதமரா ஆக முடியாது..

    இருந்தாலும் அமைச்சரவை சகாக்கள் மூலமாக பேச வைக்கலாம்..

    இப்போது யாருமே பேச முன் வராத நிலையில் இது ஒரு முதல் படிதானே..

    நம்பிக்கைதான் இதற்கான காரணம்.. வேறில்லை.

    அதோடு இன்னொன்று காங்கிரஸ் தோற்றே தீர வேண்டும். அதற்கு ஒரே வழி எதிரணி இப்போதைக்கு ஜெயித்தாக வேண்டும்.

    இப்போது நடப்பது இந்த யுக்தியின் அடிப்படையில் நடக்கும் சொற்போர்தான்..

    ReplyDelete
  20. ///ராஜ நடராஜன் said...

    பாரதிராஜா, சீமான் மேடைப் பேச்சுக்கள் உணர்ச்சிக் களம். திராவிட கட்சிகளிடமிருந்த நாவன்மை இயக்குநர்களிடம் போய் சரணடைந்து விட்டது.//

    ஆமாண்ணே.. உண்மைதாண்ணே..

    ///எனக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராதது இந்தக் கவிதை மட்டும்தான்..!//

    ஆமாம்! கவிதையெல்லாம் எழுதுனா ரெண்டு வரில விசயத்தை சொல்ல வேண்டி வரும். உரைநடைன்னா நம்ம வூட்டுக் கச்சேரிதான்! இல்ல:)///

    ஐயோ.. ஐயோ.. எப்படி எழுதினாலும் இப்படி கும்முறீங்களேய்யா.. நியாயமா..?

    ReplyDelete
  21. உங்க நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா? யார நம்புறிங்க தெரியுமா?நாளைக்கு அம்மா காங்கிரஸ் க்கு ஆதரவ குடுத்து உங்க நம்பிக்கைய காப்பாத்து வாங்க

    ReplyDelete
  22. Due to his help to fishermen and as a nice man, Thirunavukkarasar has an edge over the rest. Indeed, the recent assesment indicates that DMK will be 4th after BSP (Brisilla Pandian will get the whole SC/ST vote). The SC/ST village people are not allowing other party candidates to enter the village. These votes were supposed to be for DMK. Ritish realised it and is focussing on distributing money to non SC/ST villages. It seems, even after his money distribution, he would lose. The effect of Ealam would be seen from vilages around Rameshwaram and Ramnad. I am hoping that people feel for the carnage created by the DMK-Congress in SL and kick them off TN. Somebody like Thirunavukarasar, who has been silently helping Ealam tamils should win (some of his relatives are SL tamils living in colombo).

    ReplyDelete
  23. இந்த கீழே உள்ள இணைப்பிலுள்ள படங்களை யாராவது பார்த்தீர்களா?

    http://defence.lk/new.asp?fname=20090506_Album1

    ReplyDelete
  24. ///Maithili said...

    உங்க நம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா? யார நம்புறிங்க தெரியுமா? நாளைக்கு அம்மா காங்கிரஸ் க்கு ஆதரவ குடுத்து உங்க நம்பிக்கைய காப்பாத்து வாங்க///

    எங்களுக்கும் இப்படியொரு வாய்ப்பு உள்ளது என்பது நன்கு தெரியும்.

    செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் சொல்கிறோம்.

    செய்தால் என்கிறீர்கள். இதற்கு எப்படி பதிலளிப்பது..?!

    ReplyDelete
  25. ///K said...

    Due to his help to fishermen and as a nice man, Thirunavukkarasar has an edge over the rest. Indeed, the recent assesment indicates that DMK will be 4th after BSP (Brisilla Pandian will get the whole SC/ST vote). The SC/ST village people are not allowing other party candidates to enter the village. These votes were supposed to be for DMK. Ritish realised it and is focussing on distributing money to non SC/ST villages. It seems, even after his money distribution, he would lose. The effect of Ealam would be seen from vilages around Rameshwaram and Ramnad. I am hoping that people feel for the carnage created by the DMK-Congress in SL and kick them off TN. Somebody like Thirunavukarasar, who has been silently helping Ealam tamils should win (some of his relatives are SL tamils living in colombo).///

    ராமநாதபுரம் தொகுதியில் திருநாவுக்கரசர்தான் ஜெயிப்பார் என்று அனைவருமே எதிர்பார்க்கிறார்கள்.

    தி.மு.க.வுக்கு ஈழத்துப் பிரச்சினையால் தோல்வி கிட்ட வாய்ப்புண்டு. கிடைத்தால் சந்தோஷந்தான்.. பணத்தை வைத்து ரொம்ப நாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது.. ரித்திஷுக்கு அது இந்தத் தேர்தலில் புரியும்..

    ReplyDelete
  26. //Selvaraj said...

    இந்த கீழே உள்ள இணைப்பிலுள்ள படங்களை யாராவது பார்த்தீர்களா?
    http://defence.lk/new.asp?fname=20090506_Album1//

    பார்த்தேன்..

    ReplyDelete
  27. தேர்தல் முடியட்டும். அம்மா கையில் ஆட்சி அதிகாரம் வரட்டும். யார் யாரெல்லாம் பிரபாகரன் பெயரை வீர முழக்கமிட்டார்களோ, அவர்களைளெல்லாம் புழல் சிறைக்கு நிரந்தர உரிமையாளராக ஆக்கிவிடுவார்.அம்மா கையில் கோப்பு உங்க கையில் காப்பு

    ReplyDelete
  28. முதலில் இலங்கையில் நடப்பது நம் நாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் தெரியாது . இங்கு எந்த செய்தியும் படத்தோடு வருவதில்லை அவர்கள் எத்தனை பேர் இலங்கையில் இறந்தார்கள் என்று சின்ன செய்தி வெளி வருகிறது . முதலில் இந்தியர் அனைவருக்கும் இந்தசெய்திகளை படத்தோடு காட்டுவோம் . அந்த தாக்கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும் . லண்டனில் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த இரு ஈழத் தமிழர்கள் போல நீங்கள் நம் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க தயாரா ? சேர்ந்து இருக்க நங்கள் தயார் .
    தனி ஈழம் அமைப்போம் என்று கூறிய அ.தி.மு.க ஏன் 2001-2006 ஆட்சியின் போது கூறவில்லை. 2005 லில் தான் ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார் அப்பொழுது தமிழகத்தை ஆண்டது அ.தி.மு.க மெஜாரிட்டி அரசு தானே ஏன் சொல்லவில்லை?அவர்களுக்கு நீங்கள் ஒட்டு வாங்கி தர முடிவு செய்து உள்ளிர்கள் . இப்பொழுது மக்களை சந்திக்க விமானத்தில் வந்தவர் ஏன் தமிழக மீனவர்கள் இறந்த பொழுது வரவில்லை அப்பொழுது விமானம் வேலை செய்யவில்லையா அல்லது கண்டுப்பிடிக்க படவில்லையா ? எனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வந்தேன் என்று கூறியவர் தீவிரவாதிகள் என்று கூறியது யாரை பார்த்து (விடுதலை புலிகளா ??). நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் .
    நீங்கள் உங்கள் குரலை உயர்த்த சரியான இடம் நம் பாராளுமன்றம் தான் .ஒரு மேலவை எம்.பி யாக மாறுங்கள். உங்கள் பேச்சால் ஓட்டு வாங்க துடிக்கும் அ.தி.மு.க அல்லது பா.ம.க விடம் மேலவை எம்.பி யாக ஒரு இடம் கேளுங்கள் .அல்லது ஈழ பிரச்சனையை வைத்து ஒரு படத்தை எடுத்து இந்தியா முழுவதும் திரை இடுங்கள் . ஈரான் படத்தை புரிந்து கொள்ளும் இந்தியன் உங்கள் படத்தையும் புரிந்து கொள்வார்.
    சேவின் உருவப்படம் பொறித்த அடைகளை அணியும் நீங்கள் எதாவது செய்தால் உங்கள் உருவப்படம் பொறித்த அடைகளை அணிய ஒரு கூட்டம் உருவாகும் . 2001-2006 ஆட்சியின் பொழுது நீங்கள் இது போல பேசி இருந்தால் நீங்கள் வைகோ போல தொடர்ந்து சிறையில் இருந்து இருப்பிர்கள்.
    நீங்கள் இதுவரை எங்களுக்கு ஒரு ! . தொடர்ந்து காந்தி, கோட்சே என்று பேசி வந்தால் ? யாக மாறி விடுவிர்கள் .

    ReplyDelete
  29. http://irumbuthirai.blogspot.com/2009/05/blog-post_09.html

    enathu pathivu

    ReplyDelete
  30. சரி கொடுத்தா வாங்கிக்குங்க.

    ஆனா வோட்டை மட்டும் மாத்தி போட்டிருங்க..

    புண்ணியம் கிடைக்கும்..!

    கண்டிப்பாக அதேதான் செய்வேன்......!!!!!!!!

    ReplyDelete
  31. 2 நாள் விடுப்பிற்கு பிறகு மீண்டும் வருகிறேன். வேலை பழு வேறு அதிகமாகி விட்டது. பதிவை படித்து விட்டு நேரம் இருந்தால் மட்டும் பின்னூட்டம் இடுவேன். இந்திய அரசியலை பல வருடமாக கவணித்து வருகிறேன். இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த கட்சியாக இருந்தாலும் சந்தர்ப்பவாத கூட்டணி சந்தர்ப்பவாத கொள்கைதான். எல்லாம் தேர்தல் வரைக்கும்தான். ஈழத் தமிழர் விஷயத்தில் அப்படியில்லாமல் நியாயமாக நடந்துக் கொண்டால் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  32. //கவிதை இனிக்கிறது.. //

    கவிதையா?!?

    இதுக்கு நீங்க ஏதாவது கெட்ட வார்த்தையில திட்டி இருக்கலாம்...

    ReplyDelete
  33. லேட்டஸ்ட் செய்தி தூக்கி உள்ள வச்சிடாங்க!

    ReplyDelete
  34. ///பொன் எண்ணம் said...

    தேர்தல் முடியட்டும். அம்மா கையில் ஆட்சி அதிகாரம் வரட்டும். யார் யாரெல்லாம் பிரபாகரன் பெயரை வீர முழக்கமிட்டார்களோ, அவர்களைளெல்லாம் புழல் சிறைக்கு நிரந்தர உரிமையாளராக ஆக்கிவிடுவார்.அம்மா கையில் கோப்பு உங்க கையில் காப்பு///

    பொன் எண்ணம் தங்களுடையது நல்ல எண்ணம்..

    ReplyDelete
  35. ///aravind said...

    முதலில் இலங்கையில் நடப்பது நம் நாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் தெரியாது. இங்கு எந்த செய்தியும் படத்தோடு வருவதில்லை அவர்கள் எத்தனை பேர் இலங்கையில் இறந்தார்கள் என்று சின்ன செய்தி வெளி வருகிறது. முதலில் இந்தியர் அனைவருக்கும் இந்த செய்திகளை படத்தோடு காட்டுவோம். அந்த தாக்கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். லண்டனில் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருந்த இரு ஈழத் தமிழர்கள் போல நீங்கள் நம் பாராளுமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க தயாரா? சேர்ந்து இருக்க நங்கள் தயார்.
    தனி ஈழம் அமைப்போம் என்று கூறிய அ.தி.மு.க. ஏன் 2001-2006 ஆட்சியின் போது கூறவில்லை. 2005லில்தான் ராஜபக்சே ஆட்சிக்கு வந்தார். அப்பொழுது தமிழகத்தை ஆண்டது அ.தி.மு.க மெஜாரிட்டி அரசுதானே ஏன் சொல்லவில்லை? அவர்களுக்கு நீங்கள் ஒட்டு வாங்கி தர முடிவு செய்து உள்ளிர்கள். இப்பொழுது மக்களை சந்திக்க விமானத்தில் வந்தவர் ஏன் தமிழக மீனவர்கள் இறந்த பொழுது வரவில்லை அப்பொழுது விமானம் வேலை செய்யவில்லையா அல்லது கண்டுப்பிடிக்கபடவில்லையா ? எனக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வந்தேன் என்று கூறியவர் தீவிரவாதிகள் என்று கூறியது யாரை பார்த்து (விடுதலை புலிகளா ??). நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் குரலை உயர்த்த சரியான இடம் நம் பாராளுமன்றம்தான். ஒரு மேலவை எம்.பி யாக மாறுங்கள். உங்கள் பேச்சால் ஓட்டு வாங்க துடிக்கும் அ.தி.மு.க அல்லது பா.ம.க விடம் மேலவை எம்.பி யாக ஒரு இடம் கேளுங்கள். அல்லது ஈழ பிரச்சனையை வைத்து ஒரு படத்தை எடுத்து இந்தியா முழுவதும் திரை இடுங்கள். ஈரான் படத்தை புரிந்து கொள்ளும் இந்தியன் உங்கள் படத்தையும் புரிந்து கொள்வார்.
    சேவின் உருவப்படம் பொறித்த அடைகளை அணியும் நீங்கள் எதாவது செய்தால் உங்கள் உருவப்படம் பொறித்த அடைகளை அணிய ஒரு கூட்டம் உருவாகும். 2001-2006 ஆட்சியின் பொழுது நீங்கள் இது போல பேசி இருந்தால் நீங்கள் வைகோ போல தொடர்ந்து சிறையில் இருந்து இருப்பிர்கள்.
    நீங்கள் இதுவரை எங்களுக்கு ஒரு!. தொடர்ந்து காந்தி, கோட்சே என்று பேசி வந்தால் ? யாக மாறி விடுவிர்கள்.///

    அரவிந்தன் ஸார்..

    இதுக்கு நான் என்ன எழுதறதுன்னு எனக்கே தெரியலை..

    காலங்கள் மாறினால் காட்சிகள் மாறும் என்பதைப் போலத்தான் ஜெயலலிதா தனது கொள்கையை இப்போது மாற்றிக் கொண்டுள்ளார்.

    அதனை அவர் உறுதிபடச் செய்வாரா.. பின்பற்றுவாரா என்பது அவரைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது..

    நிச்சயமாகச் செய்வார் என்ற நம்பிக்கையில்தான் சீமானும் மற்றவர்களும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்கிறார்கள்.

    வேறு வழியில்லை.. இந்த நிலையில், இந்த நம்பிக்கையைத் தவிர போராட்டக்காரர்களிடம் வேறில்லை என்பதுதான் வெட்கக்கேடான விஷயம்..

    ReplyDelete
  36. ///senthil said...

    சரி கொடுத்தா வாங்கிக்குங்க.

    ஆனா வோட்டை மட்டும் மாத்தி போட்டிருங்க..

    புண்ணியம் கிடைக்கும்..!

    கண்டிப்பாக அதேதான் செய்வேன்......!!!!!!!!///

    நன்றி செந்தில்..

    ReplyDelete
  37. ///ananth said...

    2 நாள் விடுப்பிற்கு பிறகு மீண்டும் வருகிறேன். வேலை பழு வேறு அதிகமாகி விட்டது. பதிவை படித்து விட்டு நேரம் இருந்தால் மட்டும் பின்னூட்டம் இடுவேன். இந்திய அரசியலை பல வருடமாக கவணித்து வருகிறேன். இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த கட்சியாக இருந்தாலும் சந்தர்ப்பவாத கூட்டணி சந்தர்ப்பவாத கொள்கைதான். எல்லாம் தேர்தல் வரைக்கும்தான். ஈழத் தமிழர் விஷயத்தில் அப்படியில்லாமல் நியாயமாக நடந்துக் கொண்டால் மகிழ்ச்சியே.///

    அந்த எதிர்பார்ப்பில்தான் பலரும் உள்ளோம்..

    ReplyDelete
  38. ///தீப்பெட்டி said...

    //கவிதை இனிக்கிறது.. //

    கவிதையா?!?

    இதுக்கு நீங்க ஏதாவது கெட்ட வார்த்தையில திட்டி இருக்கலாம்...///

    தீப்பெட்டி அண்ணே..

    எனக்கு அப்படியெல்லாம் பேசத் தெரியாதுண்ணேன்..

    அதுனாலதான் இப்படி குண்டக்க.. மண்டக்க..

    ReplyDelete
  39. ///வால்பையன் said...

    லேட்டஸ்ட் செய்தி தூக்கி உள்ள வச்சிடாங்க!///

    கலைஞர் ஒழிக..! தி.மு.க. வீழ்க..!

    எதிரியைவிட துரோகிதான் அழிக்கப்பட வேண்டியவன்..

    ReplyDelete
  40. ///aravind said...

    http://irumbuthirai.blogspot.com/2009/05/blog-post_09.html

    enathu pathivu///

    பார்த்தேன்.. படித்தேன்.. வருத்தப்படுகிறேன்..

    ReplyDelete
  41. ///தமிழ்நெஞ்சம் said...
    Politicians' Drama 2009///

    இரண்டுமே பப்ளிசிட்டி ஸ்டண்டுதான்..!

    ReplyDelete
  42. ungaluku oru urget request. pls ask ur uk frinds blog friends and everone u know to elect her for eu parliment. only uk votes. thanks.
    votejan4mep.org. ungaluku eppadi mail podutarhtu endu theiyalla. call pannina late nite. not good.

    ReplyDelete
  43. ......இந்த சூனியர் விகடன்காரன் இருக்கானே.....வாராவாரம் "புலிகள் வட்டாரத்தில் விசாரித்ததில் " அப்பன்டின்னு பீலா உடுவான்.....பேசினாராம் ....தாடியை சொரிந்து கொண்டே கேட்டாராம்....லேசான செருமலுடன் சிரித்தாராம்....என்று "ராம்" மொழியில் புலனாய்வு பத்திரிக்கை நடத்தி வரும் சூனிய விகடன் சூ...ல் வச்சாங்கப்பா மொளகாய ....ரசினியை தூக்கிக்கொண்டு ரொம்ப நாள் ஊர்வலம் வந்தவனுங்க இந்த ஒரு வருஷமா "ராஜீவ் காந்தி தற்கொலை தான் செய்து கொண்டார்" ங்கற ரேஞ்சுக்கு டகால்டி விட ஆரம்பிச்சுட்டானுக.......இந்த தேர்தல் முடிவுகள் சூனிய விகடன் மாதிரி மேஜை மேல உக்காந்து பீடி குடிச்சுகிட்டே ஈழம் , பிரபாகர சரிதம் என்று பாடியவங்களுக்கு ஒரு மரண அடி

    ReplyDelete