Pages

Friday, May 08, 2009

ஈரோட்டில் பாரதிராஜாவின் முழக்கம்

08-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தின் முதல் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியது இது..



“நான் எத்தனையோ சினிமா சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுத்தாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அரசியல் மேடைகளில் பேசி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

என்னுடைய அம்மா, அப்பா, என் குடும்பம் முழுவதும் காங்கிரஸ் குடும்பம். 1962-67-களில் காங்கிரஸ் கட்சிக்காக மேடையேறி பேசியிருக்கிறேன். அப்போது எதை எல்லாம் பேச வேண்டும் என்று ஒரு குறிப்பு தருவார்கள். நான் கேட்பேன் “எல்லாம் பொய்யாக இருக்கிறதே..” என்று.. “அரசியல் என்றால் இப்படி எல்லாம் பேச வேண்டும்..” என்று சொல்லி பேசச் சொல்வார்கள். பிறகு எதற்கு பொய் சொல்லும் அரசியல்..? கலைத்தொழிலே போதும் என்று அரசியலைவிட்டு விலகிவிட்டேன். அன்று ‘பொய் பேச வேண்டாம்' என்று அரசியலை விட்டேன். இப்போது ‘மெய் பேச வேண்டும்' என்று இந்தக் கூட்டத்தில் பேச வந்திருக்கிறேன். என்னை இழுத்து வந்துவிட்டார்கள்.

டெல்லி அரசு எனக்கு ‘பத்மஸ்ரீ' விருது கொடுத்தது. ‘பத்மஸ்ரீ பாரதிராஜாவா'..? ‘தமிழன் பாரதிராஜாவா..?' எனற கேள்வி வந்தபோது ‘தமிழன் பாரதிராஜா' என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.

“பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்குத் தெரியுமா..?” என்கிறார் இளங்கோவன். அவருக்குத் தெரியுமா? நானும், வயலார் ரவியும் 25 ஆண்டு கால நண்பர்கள் என்று.

“முத்துக்குமாரை தெரியாது..” என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா..?
தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களைத் தேடிக் கொள்ளுங்கள். 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியைத் தொடங்க இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாற வேண்டும்.

ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே.. பொதுமக்களே.. நீங்கள் உங்கள் வீடுகளில் கருப்புத் துணியைக் கட்டுங்கள். சிறு கருப்புத் துணியை அணிந்து கொள்ளுங்கள். யராவது கேட்டால் ‘சோனியா வரும் நாள் எங்களுக்குத் துக்க நாள்..' என்று சொல்லுங்கள்..”

இதே கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியது..


“தந்தை பெரியாருக்கு காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளியில் வந்துள்ளேன். இன்னும் 10 நாடகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொல¨யை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம் தலாய்லாமா நாட்டைப் பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை ஒருமைப்பாடு இல்லையா..?

யாரும் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் ‘தனி ஈழம்தான் தீர்வு..' என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவரை வணங்குகிறேன்.

நான் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம் நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள். தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார். இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும்..”


இக்கூட்டத்தில் இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், கவுதமன், சிபிசந்தர், பாடலாசிரியர் அறிவுமதி, எழுத்தாளர் தேவிசந்திரா, பெப்ஸி செயலாளர் சிவா, கலை இலக்கிய சங்கத் தலைவர் சண்முகம், ம.தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் வக்கீல் ராமசிவசங்கர் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் சீனாவின் முற்றுகையில் இந்தியா என்ற புத்தகத்தை பாரதிராஜா வெளியிட்டார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வரவேற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி : தினத்தந்தி

36 comments:

  1. பொய் சொன்னால்தான் அது உண்மையான அரசியல் என்றாகிவிட்டது இப்போது. இல்லவிட்டால் அரசியலில் நிலைக்க முடியாது. உண்மையே பேச வேண்டுமானால் அரசியல் நமக்கு ஏற்றதல்ல. வேறு பல துறைகள் இருக்கின்றன.

    ReplyDelete
  2. சரியான களப்பணி..!

    ReplyDelete
  3. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டில் கடைசி தேர்தலாக இருக்க கடவுளை பிராத்திக்கிறேன்!!

    ReplyDelete
  4. எல்லாம் நல்லா தான் முழங்குறாங்க ஆனா இடி தான் விழ வேண்டியவங்க மேல விழ மாட்டேங்குது

    ReplyDelete
  5. ஈரோட்டுல காங்கிரஸ்சுக்கு ஆப்பு தான்!

    ReplyDelete
  6. பொதுமக்களே, குட்டையை குழப்பி டைம்பாஸ் செய்வதை ஆரம்பிக்கிரேன், உங்களை கைகூப்பி வரவேற்று, ஆளுக்கு ஒரு குச்சியை கொடுக்கிறேன், எல்லொரும் சேர்ந்து குட்டையை குழப்புவோம் - பாரதிராஜா

    ஜிஞ்ஜர்

    ReplyDelete
  7. காங்கிரஸ் அட்லீஸ் 16 தொகுதிகளில் தோற்க தமிழன் காரணமாக இருக்கவேண்டும்...

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி தமிழா

    ReplyDelete
  9. //காங்கிரஸ் அட்லீஸ் 16 தொகுதிகளில் தோற்க தமிழன் காரணமாக இருக்கவேண்டும்...//
    அப்படியே வழிமொழிகிறேன்...
    காமராஜரோடு காங்கிரஸ் முடிந்துவிட்டிருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு கலைஞரே சீட்டு தர விரும்பாத அளவிற்கு படுதோல்வி அடைய வேண்டும்.

    ReplyDelete
  10. //அப்படியே வழிமொழிகிறேன்...
    காமராஜரோடு காங்கிரஸ் முடிந்துவிட்டிருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு கலைஞரே சீட்டு தர விரும்பாத அளவிற்கு படுதோல்வி அடைய வேண்டும்.//

    வெங்கிராஜா, தமிழகத்தை பொருத்த வரை மாநில கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டனி வைப்பது சீட்டுக்காக இல்லை.. நோட்டுகாக..

    ReplyDelete
  11. என்ன பதிவு ரொம்ப ரொம்ப பெருசாய் இருக்கு.
    அப்படியே இவர்கள் பேசியது வீடியோ வடிவில் கிடைக்குமென்றால்
    இன்னும் நல்லாய் இருக்கும்.

    ReplyDelete
  12. தொடரட்டும் இவர்களின் களப்பணி...

    இவர்களின் பிரச்சாரத்தை முடிந்த அளவு ஆவணப்படுத்துங்கள்...

    ReplyDelete
  13. //ananth said...

    பொய் சொன்னால்தான் அது உண்மையான அரசியல் என்றாகிவிட்டது இப்போது. இல்லவிட்டால் அரசியலில் நிலைக்க முடியாது. உண்மையே பேச வேண்டுமானால் அரசியல் நமக்கு ஏற்றதல்ல. வேறு பல துறைகள் இருக்கின்றன.//

    அரசியல் என்றில்லை ஆனந்த்..

    யாராலும் உண்மையே பேசிக் கொண்டிருக்க முடியாது..

    அரசியல் பொய் என்பதற்கு ஊழல், முறைகேடு, லஞ்சம் என்றெல்லாம் பல்வேறு மொழிகள் உண்டு..

    ReplyDelete
  14. //டக்ளஸ்....... said...
    சரியான களப்பணி..!//

    நன்றி டக்ளஸ்..

    ReplyDelete
  15. //Bhuvanesh said...

    இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டில் கடைசி தேர்தலாக இருக்க கடவுளை பிராத்திக்கிறேன்!!//

    நானும் இதையே என் அப்பன் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  16. //வால்பையன் said...
    ஈரோட்டுல காங்கிரஸ்சுக்கு ஆப்புதான்!//

    ஆஹா வாலே சொல்லிட்டாரு. அப்போ இளங்கோவன் தோல்வி உறுதி..

    ReplyDelete
  17. //Ginger said...

    பொதுமக்களே, குட்டையை குழப்பி டைம்பாஸ் செய்வதை ஆரம்பிக்கிரேன், உங்களை கைகூப்பி வரவேற்று, ஆளுக்கு ஒரு குச்சியை கொடுக்கிறேன், எல்லொரும் சேர்ந்து குட்டையை குழப்புவோம் - பாரதிராஜா

    ஜிஞ்ஜர்//

    சந்தோஷம்.. குட்டையைக் குழப்புவது அது தெளிவாகத்தான்..

    கசடுகளும், அழுக்குகளும் அப்போதுதான் ஓடி ஒளியும்.. நல்ல தண்ணீர் தங்குத் தடையின்றி போக வேண்டிய இடத்தைச் சென்றடையும்..

    ReplyDelete
  18. //செந்தழல் ரவி said...

    காங்கிரஸ் அட்லீஸ் 16 தொகுதிகளில் தோற்க தமிழன் காரணமாக இருக்கவேண்டும்...//

    நிச்சயம் இது நடக்க வேண்டும்..!

    ReplyDelete
  19. //♠புதுவை சிவா♠ said...

    பதிவுக்கு நன்றி தமிழா//

    வருகைக்கு நன்றி சிவா..

    ReplyDelete
  20. ///வெங்கிராஜா said...

    //காங்கிரஸ் அட்லீஸ் 16 தொகுதிகளில் தோற்க தமிழன் காரணமாக இருக்கவேண்டும்...//

    அப்படியே வழிமொழிகிறேன்... காமராஜரோடு காங்கிரஸ் முடிந்துவிட்டிருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு கலைஞரே சீட்டு தர விரும்பாத அளவிற்கு படுதோல்வி அடைய வேண்டும்.///

    அப்படியே கலைஞருக்கும் தர்மஅடி கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்..

    ReplyDelete
  21. ///Bhuvanesh said...

    //அப்படியே வழிமொழிகிறேன்...
    காமராஜரோடு காங்கிரஸ் முடிந்துவிட்டிருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு கலைஞரே சீட்டு தர விரும்பாத அளவிற்கு படுதோல்வி அடைய வேண்டும்.//

    வெங்கிராஜா, தமிழகத்தை பொருத்த வரை மாநில கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டனி வைப்பது சீட்டுக்காக இல்லை.. நோட்டுகாக..///

    உண்மைதான் புவனேஷ்..

    அவர்கள் சம்பாதிக்க வேண்டிய பணத்திற்காக மக்கள் பணத்தை மக்களுக்கே பிச்சை போட்டு ஏமாற்றுகிறார்கள்..

    ReplyDelete
  22. //லேகா பக்க்ஷே said...

    என்ன பதிவு ரொம்ப ரொம்ப பெருசாய் இருக்கு.
    அப்படியே இவர்கள் பேசியது வீடியோ வடிவில் கிடைக்குமென்றால்
    இன்னும் நல்லாய் இருக்கும்.//

    இது பெரிசா..? என்னம்மா இப்படி பேசுற.. உடனே ஓடிப் போய் கண்ணை செக்கப் பண்ணு.. போ..

    ReplyDelete
  23. ///பதி said...

    தொடரட்டும் இவர்களின் களப்பணி...

    இவர்களின் பிரச்சாரத்தை முடிந்த அளவு ஆவணப்படுத்துங்கள்...///

    என்னால் முடிந்த அளவு நிச்சயம் செய்வேன் பதி..

    தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி..

    ReplyDelete
  24. ஒஸ்கார் மட்டுமல்ல
    விட்டால்
    உலகத்தின் கண்ணுக்குள்ளேயே
    விரல் விட்டு ஆட்டுவாய் நீ.
    விமானம் கட்டிப் பறப்பதும்
    நீர்மூழ்கி செய்து நீந்துவதும்..
    ஏய் தமிழா
    நீ செய்யத்தக்க செயல்களா இவை!
    தருவதை திண்டுகொண்டு
    அவனுகள் பேண்டதை அள்ளிக்கொண்டு
    அரசியல் நீரோட்டத்தில் கலந்து போன
    இழிந்த தமிழினத் துரோகிகளாய் வாழ்வதில்
    உனக்கென்ன பிரச்சனை!

    ReplyDelete
  25. உங்களுக்கெள்ளாம் ஒன்று சொல்கிறேன். திமுகவாவது ஓரளவு பரவாயில்லை. உட்கட்சி ஜனநாயகம் ஓரளவுகாகவாவது இருக்கிறது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் இருக்கிறார்கள். பேராசிரியருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அதிமுகவில் எங்கே அப்படி இருக்கிறது. எல்லாம் அம்மா நாயகம்தான். அங்கே நாமத்திற்கு மட்டும்தான் அண்ணா. (நெற்றியில் போடும் நாமம் என்று யாராவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல). வரம் கொடுக்காத தெய்வம் வேண்டாம். சரி வரம் கொடுக்குமோ இல்லையோ சாத்தான்தான் வேண்டும் என்கிறீகள். இது இயக்குனர் இமயத்திற்கும் சேர்த்துதான் சொல்கிறேன்

    ReplyDelete
  26. ///ilhamaran said...

    ஒஸ்கார் மட்டுமல்ல
    விட்டால்
    உலகத்தின் கண்ணுக்குள்ளேயே
    விரல் விட்டு ஆட்டுவாய் நீ.
    விமானம் கட்டிப் பறப்பதும்
    நீர்மூழ்கி செய்து நீந்துவதும்..
    ஏய் தமிழா
    நீ செய்யத்தக்க செயல்களா இவை!
    தருவதை திண்டுகொண்டு
    அவனுகள் பேண்டதை அள்ளிக்கொண்டு
    அரசியல் நீரோட்டத்தில் கலந்து போன இழிந்த தமிழினத் துரோகிகளாய் வாழ்வதில்
    உனக்கென்ன பிரச்சனை!///

    இளமாறன் ஸார்..

    கோபம் கொப்பளிப்பது போல் தெரிகிறது..

    -)))))))))))))))

    ReplyDelete
  27. //ananth said...

    உங்களுக்கெள்ளாம் ஒன்று சொல்கிறேன். திமுகவாவது ஓரளவு பரவாயில்லை. உட்கட்சி ஜனநாயகம் ஓரளவுகாகவாவது இருக்கிறது. இரண்டாம் நிலைத் தலைவர்கள் இருக்கிறார்கள். பேராசிரியருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அதிமுகவில் எங்கே அப்படி இருக்கிறது. எல்லாம் அம்மா நாயகம்தான். அங்கே நாமத்திற்கு மட்டும்தான் அண்ணா. (நெற்றியில் போடும் நாமம் என்று யாராவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொருப்பல்ல). வரம் கொடுக்காத தெய்வம் வேண்டாம். சரி வரம் கொடுக்குமோ இல்லையோ சாத்தான்தான் வேண்டும் என்கிறீகள். இது இயக்குனர் இமயத்திற்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.//

    ஆனந்த் ஸார்..

    இயக்குநர் இமயமோ, சீமானோ அ.இ.அ.தி.மு.க.வில் சேரப் போவதில்லை. ஆகவே அவர்களுடைய உட்கட்சி நிலைகள் அவர்களுக்கோ, நமக்கோ தேவையில்லாதது.

    அவர்கள் விரும்புவது தனி ஈழத்திற்கு குரல் கொடுப்பவரை ஆதரிப்போம் என்பதுதான்.

    ReplyDelete
  28. திரைப் படக் கலைஞர்கள் கட்சி சார்பில்லாமல் ஈழத்தமிழ் மக்களிடம் உள்ள அக்கறையினால் மட்டுமே செயல்படுகிறார்கள் ,அவர்கள் எம்பி பதவிக்காகவோ ,அமைச்சர் பதவிக்காகவோ இதைச் செய்யவில்லை.இன்றைய சூழலில் ஈழத்தமிழருக்கு எதிராக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு உதவிய காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி வர வேண்டும் என்ற பாதையில் அவர்கள் செயல்படுவது சரியே.
    இந்த சமயத்தில் பல கருத்துகள் தமிழக தேர்தல் பற்றி வந்து கொண்டு இருக்கின்றன .இந்தத் தேர்தலில் ஈழ விஷயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிலர் சொல்கிறார்களே.
    உண்மைத்தமிழன்
    நீங்கள் அங்கு இருப்பவர் ,நீங்கள் மக்களை நாடி பிடித்துப் பார்த்ததில் அங்கு தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது.?
    ஜெயலலிதாவின் தமிழ் ஈழ நிலைப்பாடு பற்றி பலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.அவர்களின் சந்தேகம் நியாயமானதே ,அவர் எதிர் காலத்தில் எப்படியான நிலைப்பாடு எடுப்பார் என்பதே சரியாகத் தெரியாவிட்டாலும், அவர் இப்போது எடுத்த நிலைப்பாடு சரி என்ற ரீதியில்தான் ஈழதமிழர்கள் அவருடைய நிலைப்பாட்டிற்கு ஆதருவு தெரிவித்துள்ளார்கள்.
    பல காலமாக ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் போக்கில் நேர்மையாக இருந்தார்கள். தன் கையே தனக்குதவி என்று நேர்மையாகவும், நேர்கோட்டிலும் தமது விடுதலைப் பயணத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்கள் ,அதே சமயம் சிங்கள அரசு மிக மோசமான அரசியல் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
    இந்தியாவிடமிருந்தும் உதவி,அதே சமயம் சீனா பாகிஸ்தானிடமும் உதவி பெற்றது.
    ஈரானிடமும் உதவி அதே சமயம் இஸ்ரேலிடமும் உதவி பெற்றார்கள்.
    அமெரிக்காவிடமும் உதவி அதே சமயம் ரஷ்யாவிடமும் உதவி .
    இந்த விஷ்யத்தில் அரசியல் நேர்மை ,ராஜதந்திர நாகரிகம் என்று ஒன்றுமே ஸ்ரீலங்கா அரசு கடைப்பிடிக்கவில்லை.
    தமிழர் தரப்புக்கு இந்தியாவின் எதிரிகளிடம் இருந்து ஆயுத, மற்றைய உதவிகள் தருவதாக இரகசிய வேண்டுகோள் வந்ததாகவும் அதற்கு அவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போகமுடியாது,செயல்படமுடியாது என்று சொன்னதாக செய்திகள் வருகின்றன.
    இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைய உலக ஒழுங்கில் தனித்து நின்று ஒரு சக்தியாகப் போராடி தனி நாடு பெறுவது நடக்க முடியாத காரியம்.
    சிங்கள அரசு தனது நன்மைக்காக மிகுந்த கபடத்தனத்துடன் திட்டம் போட்டு அரசியல் விபச்சாரம் செய்து ஆயுதம், பணம் , ராணுவ ராஜதந்திர உதவி என்று எல்லா நாடுகளிடமிருந்தும் உதவி பெற்றுக் கொண்டிருக்கிறது.
    தமிழர் அவ்வளவு மோசமாக நடக்காவிட்டாலும், சமயோசிதமாக நடந்து எமக்கு ஆதரவான சக்திகளை திரட்ட வேண்டும்.
    அப்படியான சமயத்தில் ஜெயலலிதா ஈழத்துக்கு அதரவு தருகின்றேன் என்று சொன்னால் அதனை நாம் ஏன் தட்டிக் கழிக்க வேண்டும். அவர் சொவது அரசியல் பல்டியாக இருக்கலாம்,
    அப்படி இருந்து அவர் ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தலின் பின்பு எடுத்தால் ,இருக்கவே இருக்கிறது சட்டமன்றத் தேர்தல் ,அந்தத் தேர்தலில் அவருக்கு தீர்ப்பு சொல்லலாம்தானே?
    --வானதி

    ReplyDelete
  29. நண்பர்களே,

    எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை, காங்கிரசை தோல்வியடைய வைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுவதில் தவறில்லை , ஆனால் காங்கிரஸின் மத்திய ஆட்சியில் இவ்வளவு நாள் பதவியில் இருந்து விட்டு ஆனால் ஈழத்தமிழருக்காக எதுவுமே செய்யாத தி.மு.க , பா.ம.க போன்ற கட்சிகளுக்கு தண்டனை என்ன?

    காங்கிரஸ் தமிழகத்தில் ஏற்கனவே செத்த பாம்பு, செத்த பாம்பை அடிக்கும் வீரர்களே உயிரோடு இருக்கும் பாம்புக்களான பா.ம.க , தி.மு.க போன்ற கட்சிகளிடம் உங்கள் நிலை என்ன? காங்கிரசை எதிர்த்து பேசும் நீங்கள் , தி.மு.கவை எதிர்த்து கூட்டம் போடுவீர்களா?

    சோனியா தமிழினத்தின் விரோதி , ஆனால் தி.மு.காவும் , பா.ம.காவும் தமிழினத்தின் துரோகிகள் அல்லவா? சோனியா காந்தியாவது இத்தாலி தேசத்தவர் , தன் கணவனை கொன்றவர்களை பழி வாங்குகிறார் (அதற்காக லட்சகணக்கான மக்களை கொலை செய்வதை நான் சரி என்று சொல்ல வில்லை) ஆனால் இது எதுவுமே இல்லாமல் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து , தமிழருக்காகவே கட்சி ஆரம்பித்து, தமிழ் காற்றை சுவாசித்து,தமிழர்களின் ஓட்டில் அமைச்சராகி உள்ள ராசா , அன்புமணி (ராஜ்ய சபா ஆனாலும் ) போன்றவர்களுக்கு தண்டனை என்ன? தமிழக அரசு சூழ்நிலை கைதி என்றால் தமிழக காங்கிரசும் சூழ்நிலை கைதி அல்லவா? தி.மு.கவிற்காவது மாநில அரசில் காங்கிரஸ் தயவு தேவை , ஆனால் பா.ம.காவிற்கு இது எதுவுமே இல்லையே, அவர்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்கள், பாரதிராஜா , சீமான் போன்றவர்கள் பா.ம.கவை ஏன் எதிர்க்கவில்லை?

    காங்கிரசை எதிர்த்து போராடும் பாரதிராஜா போன்றவர்கள் , தி.மு.கவை எதிர்க்கிறார்களா இல்லையா? முக்கியமாக பா.ம.க விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? பா.ம.க கடைசி வரை பதவியில் இருந்ததை பாரதிராஜா சீமான் போன்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

    அதாவது தி.மு.க கூட்டணி வெல்ல வேண்டும் ஆனால் அதில் உள்ள காங்கிரஸ் மட்டும் தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்களா? ஒரு காலத்தில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்த போது ரஜினியும் இதையேதான் சொன்னார், தி.மு.க கூட்டணி வெல்ல வேண்டும் , ஆனால் பா.ம.க தோற்க வேண்டும் என, எல்லோரும் அதை கடுமையாக விமர்சித்தார்கள் / சிரித்தார்கள்.

    இதை உண்மையிலேயே புரியாமல் / தெரியாமல் கேட்கிறேன், இதற்கு யாராவது பதில் சொல்லி இருந்தால் அதற்கான சுட்டியை கொடுங்கள் நானும் படிக்கிறேன்.

    ReplyDelete
  30. ///vanathy said...

    இந்த சமயத்தில் பல கருத்துகள் தமிழக தேர்தல் பற்றி வந்து கொண்டு இருக்கின்றன. இந்தத் தேர்தலில் ஈழ விஷயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிலர் சொல்கிறார்களே. உண்மைத்தமிழன்
    நீங்கள் அங்கு இருப்பவர், நீங்கள் மக்களை நாடி பிடித்துப் பார்த்ததில் அங்கு தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது.?//

    நகர்ப்புறங்களில் படித்த, படிக்காத இளைஞர்களிடையே ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிகள் கட்சிகளின் துரோகம் கோபமாகத் தென்படுகிறது. இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்.

    உட்புற கிராமங்களில் பெரும்பாலும் பெண்கள் அவரவர் ஊர்ப் பிரச்சினைகளை மையமாக வைத்துத்தான் வாக்களிப்பார்கள்.

    அங்கேயும் ஆண்களில் பெருவாரியானோர் ஈழப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு வாக்களித்தார்களானால் காங்கிரஸுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது..

    //ஜெயலலிதாவின் தமிழ் ஈழ நிலைப்பாடு பற்றி பலர் சந்தேகம் எழுப்புகிறார்கள். அவர் ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தலின் பின்பு எடுத்தால் ,இருக்கவே இருக்கிறது சட்டமன்றத் தேர்தல், அந்தத் தேர்தலில் அவருக்கு தீர்ப்பு சொல்லலாம்தானே?
    --வானதி///

    நிச்சயம் சொல்லலாம்.. அவரும் அதனை எதிர்பார்த்துத்தான் சொல்லியிருக்கிறார்.

    எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என்கிற கட்டாய விருப்பத்தில் ஜெயலலிதா இதனைச் சொல்லியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. முழு மனதுடன் சொல்லியிருக்க மாட்டார்.

    ReplyDelete
  31. ///Gokul said...

    நண்பர்களே, எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை, காங்கிரசை தோல்வியடைய வைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டுவதில் தவறில்லை, ஆனால் காங்கிரஸின் மத்திய ஆட்சியில் இவ்வளவு நாள் பதவியில் இருந்து விட்டு ஆனால் ஈழத் தமிழருக்காக எதுவுமே செய்யாத தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு தண்டனை என்ன?//

    நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து அமைப்புகளுமே ஒரே நேரத்தில் அனைவரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கின்ற கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன. அதுதான் காரணம்.

    அன்றைய போராட்டத் தினத்தில் தாமரையை பேச விடாமல் தடு்த்ததுகூட இதனால்தான்..

    //காங்கிரஸ் தமிழகத்தில் ஏற்கனவே செத்த பாம்பு, செத்த பாம்பை அடிக்கும் வீரர்களே உயிரோடு இருக்கும் பாம்புக்களான பா.ம.க., தி.மு.க. போன்ற கட்சிகளிடம் உங்கள் நிலை என்ன? காங்கிரசை எதிர்த்து பேசும் நீங்கள், தி.மு.கவை எதிர்த்து கூட்டம் போடுவீர்களா?

    சோனியா தமிழினத்தின் விரோதி , ஆனால் தி.மு.காவும் , பா.ம.காவும் தமிழினத்தின் துரோகிகள் அல்லவா? சோனியா காந்தியாவது இத்தாலி தேசத்தவர் , தன் கணவனை கொன்றவர்களை பழி வாங்குகிறார் (அதற்காக லட்சகணக்கான மக்களை கொலை செய்வதை நான் சரி என்று சொல்ல வில்லை) ஆனால் இது எதுவுமே இல்லாமல் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து , தமிழருக்காகவே கட்சி ஆரம்பித்து, தமிழ் காற்றை சுவாசித்து, தமிழர்களின் ஓட்டில் அமைச்சராகி உள்ள ராசா , அன்புமணி (ராஜ்யசபா ஆனாலும் ) போன்றவர்களுக்கு தண்டனை என்ன? தமிழக அரசு சூழ்நிலை கைதி என்றால் தமிழக காங்கிரசும் சூழ்நிலை கைதி அல்லவா? தி.மு.க.விற்காவது மாநில அரசில் காங்கிரஸ் தயவு தேவை , ஆனால் பா.ம.க.விற்கு இது எதுவுமே இல்லையே, அவர்கள் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்கள், பாரதிராஜா , சீமான் போன்றவர்கள் பா.ம.கவை ஏன் எதிர்க்கவில்லை?//

    இதுதான் தமிழர்களின் அரசியல்.. முட்டாள்தனம்தான் இது.. ஆனால் வேறு வழியில்லை. இப்போது போராட முன் வருபவர்களும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒவ்வொரு கட்சியிடமும் சரண்டராக இருப்பவர்கள்தான்.

    //காங்கிரசை எதிர்த்து போராடும் பாரதிராஜா போன்றவர்கள் , தி.மு.கவை எதிர்க்கிறார்களா இல்லையா? முக்கியமாக பா.ம.க விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? பா.ம.க கடைசி வரை பதவியில் இருந்ததை பாரதிராஜா சீமான் போன்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?//

    இப்போது இவர்களது குறி காங்கிரஸ் மட்டுமே.. ஏனெனில் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்த்துக் கொண்டு ஒருவன் மனநோயாளியாகக்கூட திரிய முடியாது. அந்த அளவுக்கு அபாயமானது அது. அதை உணர்ந்துதான் அமைதி காக்கிறார்கள்.

    //அதாவது தி.மு.க கூட்டணி வெல்ல வேண்டும் ஆனால் அதில் உள்ள காங்கிரஸ் மட்டும் தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்களா? ஒரு காலத்தில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்த போது ரஜினியும் இதையேதான் சொன்னார், தி.மு.க கூட்டணி வெல்ல வேண்டும் , ஆனால் பா.ம.க தோற்க வேண்டும் என, எல்லோரும் அதை கடுமையாக விமர்சித்தார்கள் / சிரித்தார்கள்.//

    இப்போதும் இதைப் பார்த்து சிரித்துக் கொள்வோம். என்ன ஒரு விஷயம்.. இந்த அளவுக்காச்சும் இவர்கள் இறங்கியிருக்கிறார்களே என்று ஆறுதல் சந்தோஷப்படலாம்..

    //இதை உண்மையிலேயே புரியாமல் / தெரியாமல் கேட்கிறேன், இதற்கு யாராவது பதில் சொல்லி இருந்தால் அதற்கான சுட்டியை கொடுங்கள் நானும் படிக்கிறேன்.///

    தேர்தல் முடிந்த பின்பு தொடர்ந்து பத்திரிகைகளைப் படியுங்கள்.. உங்களுக்குத் தானாகவே புரியும்..

    மிக்க நன்றி.. உங்களுடைய பொன்னான நேரத்தை என்னுடன் செலவிட்டதற்கு..!

    ReplyDelete
  32. எல்லாக் கட்சிக் காரங்களும் துரோகம் செய்வானுக, சான்ஸ் கெடச்சா. அதனால சான்ஸ் கிடைக்காதவன விடறதோ, கிடைச்சவன திட்டுறதோ முடிவு தரப் போறதில்ல.

    ReplyDelete
  33. என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது? ஹெல்ப் மி?

    ஒய்?...ஒய்?....ஒய்?

    ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?

    ReplyDelete
  34. ///pappu said...
    எல்லாக் கட்சிக்காரங்களும் துரோகம் செய்வானுக, சான்ஸ் கெடச்சா. அதனால சான்ஸ் கிடைக்காதவன விடறதோ, கிடைச்சவன திட்டுறதோ முடிவு தரப் போறதில்ல.///

    வேறென்ன பாப்பு செய்யறது..? துரோகத்தை அந்த நேரத்துலேயே துரோகம் சொன்னாத்தான் பின்னாடி நமக்கு நல்லது..

    ReplyDelete
  35. ///pappu said...

    என்ன கொரும சார் இது! நான் புது போஸ்டிங் போட்டா அப்டேட் ஆகல, பதிவ டைப் பண்ணவே கஷ்டப் பட்டுட்டேன், எடிட்டும் சரியா வேல செய்யாம தப்பும் தவறுமா ஒரு பதிவு வெளியீடு. ஐயகோ! வைகைக்கரைத் தமிழை அணை போட்டு த்டுத்துவிட்டார்களே! இந்த ப்ளாக்கரே இப்படித்தான்! எப்படி சரி செய்யுறது? ஹெல்ப் மி?
    ஒய்?...ஒய்?....ஒய்?
    ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?///

    பிளாக்கர்ல அப்படியே டைப் பண்ணாதீங்க..

    மொதல்ல வேர்ட்ல டைப் பண்ணி ஸேவ் பண்ணி வைச்சிட்டு அப்புறமா அங்க இருந்து காப்பி பண்ணி கொண்டாங்க. அதுதான் நல்லது..

    கொட்டேஷன் மார்க்ஸ், கமா, புள்ளிஸ்டாப் இதையெல்லாம் யுனிகோட்ல செய்யுங்க..

    ஒருவேளை இதுனாலேயும் ஆனாலும் ஆகலாம்..!

    ReplyDelete