Pages

Wednesday, May 13, 2009

நியூட்டனின் 3-ம் விதி..! நம் தலைவிதி..!

13-05-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

காமாந்திரத்தனமான கதையை வைத்து, காமாந்திரத்தனமாக காட்சியமைப்புகளால், காமாந்திரத்தனமான நடிகரை வைத்து, காமாந்திரத்தனமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இதனைப் பார்த்துத் தொலைத்தற்கு பேசாமல் ஏஸி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று 'பசங்க' திரைப்படத்திற்கே சென்றிருக்கலாமே என்று தோன்றுகிறது.

உடம்பு சொகுசு கேட்டதுக்காக தியேட்டர் மாறிப் போய் உட்கார்ந்த எனக்கு இதுவும் வேணும்..! இன்னமும் வேணும்..!

ஒரேயொரு ஆறுதல் கதாநாயகி ஷயாலி. கதாநாயகனைவிடவும் நன்கு நடிப்பு வருகிறது.

இதில் கதாநாயக நடிகர், “பொதுவா இந்த மாதிரி ஐடியால்லாம் எனக்குத்தானே வரும்..” என்று தனது கெரகத்தை ஒத்துக் கொள்வதும் ஒரு கொடுமைதான்.

சில பேருக்கு என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் புத்தி வராது என்பார்கள். அந்த லிஸ்ட்டில் இந்தக் கதாநாயகரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

முன்பாதியில் வருகின்ற வசனங்களில் முக்கால்வாசியை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. செவிட்டு மிஷினையே தூக்கியெறிந்துவிடலாமா என்று கோபம் கோபமாக வந்தது. அம்புட்டும் டபுள், டிரிபுள் அர்த்தங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. ஏதோ அந்தக் காலத்து சினிமித்ரன், விருந்து, மருதம் புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது.

'ஏ சர்டிபிகேட்' என்று பெரிதாக எழுதிப் போட்டு '18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை' என்று சொல்லியும் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து அருகில் அமர்ந்திருந்த ஒரு தகப்பனை பார்த்தவுடன் வெட்டலாமா என்ற வெறியே வந்தது..

இந்தப் படத்துக்கு விமர்சனம் ஒரு கேடா..!

ஆனாலும் ஏன் எழுதினேன் என்றால், இனிமேலும் போக விரும்பியிருப்பவர்கள் தங்கள் மனதை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். காசாவது மிச்சமாகும்..

திரைப்படத்தின் ஸ்டில்லை போடக்கூட மனசில்லை..!

'நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..

53 comments:

  1. என்னாங்க எல்லாரும் படம் நல்லா இருக்கு திரைக்கதை சூப்பர்னு போடுறாங்க நீங நல்லா இல்லன்னு சொல்றீங்க

    ReplyDelete
  2. me the first NAம்ப முடியவில்லை

    ReplyDelete
  3. எல்லாரும் நல்லா இருக்கு ஹீரோயின் தான் சோதப்பல்னு சொல்லி விமர்சன பதிவு போட்டு இருக்காங்க நீ அப்படியே எதிர் மறையா சொல்லுறிங்க

    தலைவா ! ... என்ன அப்போ பார்க்கவேணாம் என்று சொல்லுறிங்களா

    ReplyDelete
  4. "நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு.."

    :-)))))))))))))))

    ReplyDelete
  5. என்னங்க ...........?????

    நம்ம எதிர் நாளைய இயக்குனர்கள் எல்லாம் என்ன ஆகுறது? இந்தமாதிரி எதுவும் எழுதட்டா அவுங்க எல்லாரும் என்ன ஆவாங்க?

    ReplyDelete
  6. //'நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..//

    ஒரு நாள் மட்டும் ‘மாப்பு’ கொடுத்திட்டு மத்த நாள்லாம் ஆப்பு அடிக்கப் போறீங்களா? :)

    ReplyDelete
  7. ஏன் இவ்வளவு கொல வெறி?

    ReplyDelete
  8. //ஒரேயொரு ஆறுதல் கதாநாயகி ஷயாலி. கதாநாயகனைவிடவும் நன்கு நடிப்பு வருகிறது.//

    நீங்கள்லாம் கதாநாயகி பத்தி எழுதாமலே இருக்கலாம். :(

    கதாநாயகி நடிக்கிறத பார்க்க நீங்க தமிழ் படத்துக்கு போவீங்களா? முருகா இவருக்கு கொஞ்சம் நல்ல புத்தியைக் கொடேன்.

    ReplyDelete
  9. movie is quite Ok. logical and very interesting

    ReplyDelete
  10. என்னண்ணே...

    உடம்பு ஏதும் சுகமில்லையா..?

    என்னாச்சு இப்பல்லாம் ஆரம்பிக்கறப்பவே பதிவை முடிச்சுடறீங்க. உடம்ப பாத்துக்கண்ணே... இந்த மாதிரில்லாம் நீ எழுத ஆரம்பிச்சா ரசிகக்கண்மணிகள் நாங்க எங்க போய் நியாயம் சொல்ல... :((

    ReplyDelete
  11. *****
    நம்ம எதிர் நாளைய இயக்குனர்கள் எல்லாம் என்ன ஆகுறது? இந்தமாதிரி எதுவும் எழுதட்டா அவுங்க எல்லாரும் என்ன ஆவாங்க
    ******

    தருமி சார் :)- பாவம் விட்டுடுங்க.

    ReplyDelete
  12. தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர்

    யார் என உங்களுக்கு தெரிந்து இருக்கும், இந்த தேர்தலில் ஊர்ஜிதமாக்கபட்டுள்ளது.. ஏன் என்பதை இங்கே பாருங்கள் ...
    http://kulambiyagam.blogspot.com/2009/05/blog-post_14.html

    ReplyDelete
  13. \\ஏதோ அந்தக் காலத்து சினிமித்ரன், விருந்து, மருதம் புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது.
    \\

    இதெல்லாம் இன்னும் வச்சுருக்கீங்களா? இல்லை எடைக்குப் போட்டுட்டீங்களா?

    ReplyDelete
  14. நல்லவேளை!!
    பலபேர் புண்ணியம் உங்களுக்கு!!!

    ReplyDelete
  15. //அம்புட்டும் டபுள், டிரிபுள் அர்த்தங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது//

    ஏன்?.. நீங்க சிங்கிளா தான போனீங்க.. அப்போ சிங்கிளாத்தான் யோசிக்கணும்.
    டபுள் மீனிங் எல்லாம் டபுள்ஸா போறவுங்களுக்கு பாஸ்..

    இதை தவிர வேற எதும் கஷ்டம்(குறை) இருக்கா படத்துல?

    நிறய பேரு திரைக்கதைய பாராட்டி இருக்காங்க... நீங்க என்ன இப்படி சொல்லுறீங்க.

    யார் சொல்லுறத நம்புறது?..
    :-(

    ReplyDelete
  16. மன்னிக்கவும் அண்ணா

    நீங்கள் கூறும் அளவு படம் மோசமாக இல்லை

    ReplyDelete
  17. நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..//

    நீயும் எமாந்திட்டியா?

    ReplyDelete
  18. //ஒரேயொரு ஆறுதல் கதாநாயகி ஷயாலி. கதாநாயகனைவிடவும் நன்கு நடிப்பு வருகிறது.//

    நீங்கள்லாம் கதாநாயகி பத்தி எழுதாமலே இருக்கலாம். :(

    கதாநாயகி நடிக்கிறத பார்க்க நீங்க தமிழ் படத்துக்கு போவீங்களா? முருகா இவருக்கு கொஞ்சம் நல்ல புத்தியைக் கொடேன்.///

    மோகன்தாஸ் கருத்துக்கு உடன்படுகிறேன்

    ReplyDelete
  19. நான் திரையரங்குகளுக்கு போய் திரைப்படம் பார்த்து நாள், வார, மாதக் கணக்கு போய் வருடத்தில் வந்து நிற்கிறது. காரணம் (1) பல சமயங்களில் விமர்சனங்களெ படத்தை பார்த்த திருப்தியை அளித்து விடுகின்றன. காரணம் (2) 30 km பயணிக்க வேண்டும். காரணம் (3) எனக்கு வாய்த்த மனைவி. எதற்கு தண்ட செலவு. இன்னும் சில மாதங்கள் பொருத்திருந்தால் தொலைக்காட்சியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்பார்.

    எல்லாம் சரி கதாநாயகன் யார் என்று சொல்லவில்லையே.

    ReplyDelete
  20. ///shabi said...
    என்னாங்க எல்லாரும் படம் நல்லா இருக்கு திரைக்கதை சூப்பர்னு போடுறாங்க நீங நல்லா இல்லன்னு சொல்றீங்க///

    அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு..?

    மக்கள்ஸ் எல்லாத்தையும் ஜீரணிக்குற அளவுக்கு போயிட்டாங்களா..?

    ReplyDelete
  21. ///shabi said...
    me the first NAம்ப முடியவில்லை///

    என்னாலும்தான்..

    இதுதான் தங்களது முதல் வருகையோ..!

    நன்றி. நன்றி.. நன்றி...!

    ReplyDelete
  22. ///Suresh said...
    எல்லாரும் நல்லா இருக்கு ஹீரோயின்தான் சோதப்பல்னு சொல்லி விமர்சன பதிவு போட்டு இருக்காங்க நீ அப்படியே எதிர் மறையா சொல்லுறிங்க
    தலைவா! என்ன அப்போ பார்க்கவேணாம் என்று சொல்லுறிங்களா///

    பார்க்கவே வேணாம்.. காசு மிச்சம்..!

    ReplyDelete
  23. ///♠புதுவை சிவா♠ said...

    "நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு.."

    :-)))))))))))))))///

    உங்க ஆசீர்வாதம் சிவா.. செஞ்சர்றேன்..

    ReplyDelete
  24. ///தருமி said...
    என்னங்க ...........????? நம்ம எதிர் நாளைய இயக்குனர்கள் எல்லாம் என்ன ஆகுறது? இந்த மாதிரி எதுவும் எழுதட்டா அவுங்க எல்லாரும் என்ன ஆவாங்க?///

    ஒண்ணும் ஆக மாட்டாங்க..

    இப்படி ஒரு தரித்திரப் படமும் வந்திருக்கேன்னு நினைச்சுக்குவாங்க..!

    அரசியல்வாதிக மாதிரி சமயம் பார்த்து குத்துங்க..! ம்..

    ReplyDelete
  25. ///Sridhar Narayanan said...

    //'நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..//

    ஒரு நாள் மட்டும் ‘மாப்பு’ கொடுத்திட்டு மத்த நாள்லாம் ஆப்பு அடிக்கப் போறீங்களா? :)///

    ஆஹா..

    மாப்பு வேற ஆப்பு வேறய்யா.. தெரியாம போயிருச்சே..!

    ReplyDelete
  26. ///அமர பாரதி said...
    ஏன் இவ்வளவு கொல வெறி?/

    80 ரூபா வேஸ்ட்டா போச்சே..!

    ReplyDelete
  27. ///மோகன்தாஸ் said...

    //ஒரேயொரு ஆறுதல் கதாநாயகி ஷயாலி. கதாநாயகனைவிடவும் நன்கு நடிப்பு வருகிறது.//

    நீங்கள்லாம் கதாநாயகி பத்தி எழுதாமலே இருக்கலாம். :(//

    தம்பி.. கதாநாயகனைவிடவும்னு கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கேன்னு பாருங்க..

    //கதாநாயகி நடிக்கிறத பார்க்க நீங்க தமிழ் படத்துக்கு போவீங்களா? முருகா இவருக்கு கொஞ்சம் நல்ல புத்தியைக் கொடேன்.///

    அவன் கொடுத்த புத்தியே இதுதான.. குண்டக்க.. மண்டக்க..!

    ReplyDelete
  28. ///muthukumar said...

    movie is quite Ok. logical and very interesting///

    வயசுக் கோளாறு..!

    ReplyDelete
  29. ///சென்ஷி said...

    என்னண்ணே...

    உடம்பு ஏதும் சுகமில்லையா..?

    என்னாச்சு இப்பல்லாம் ஆரம்பிக்கறப்பவே பதிவை முடிச்சுடறீங்க. உடம்ப பாத்துக்கண்ணே... இந்த மாதிரில்லாம் நீ எழுத ஆரம்பிச்சா ரசிகக் கண்மணிகள் நாங்க எங்க போய் நியாயம் சொல்ல... :((///

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா.. நல்ல மேட்டர் கிடைச்சா போட்டிரலாம்..

    இதுக்கெல்லாம் இவ்ளோ எழுதினதே அதிகம்தான்..!

    ReplyDelete
  30. ///மணிகண்டன் said...

    *****
    நம்ம எதிர் நாளைய இயக்குனர்கள் எல்லாம் என்ன ஆகுறது? இந்தமாதிரி எதுவும் எழுதட்டா அவுங்க எல்லாரும் என்ன ஆவாங்க
    ******

    தருமி சார்:)- பாவம் விட்டுடுங்க.///

    மணிகண்டன் ஆறுதலுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  31. ///Gokul said...

    தமிழ்நாட்டின் பாவப்பட்ட நடிகர்

    யார் என உங்களுக்கு தெரிந்து இருக்கும், இந்த தேர்தலில் ஊர்ஜிதமாக்கபட்டுள்ளது.. ஏன் என்பதை இங்கே பாருங்கள் ...
    http://kulambiyagam.blogspot.com/2009/05/blog-post_14.html///

    தவறு கமல் மீதில்லை..

    கணக்கெடுக்க வந்த அரசு ஊழியர்கள் மீதுதான்..

    அவர் வீட்டில் இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக குடியிருக்கவில்லை என்று அர்த்தமில்லை..

    அரசு இயந்திரங்களின் அலட்சியப் போக்கால் இந்த முறை ஆயிரக்கணக்கானோர் வோட்டுப் போட முடியாமல் தவித்துள்ளார்கள்.

    ReplyDelete
  32. ///முரளிகண்ணன் said...

    \\ஏதோ அந்தக் காலத்து சினிமித்ரன், விருந்து, மருதம் புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது.\\

    இதெல்லாம் இன்னும் வச்சுருக்கீங்களா? இல்லை எடைக்குப் போட்டுட்டீங்களா?///

    முரளி..

    ஒரு காலத்துல கலெக்ஷன் புக்ஸ்ன்னு நிறைய வைச்சிருந்தேன்..

    ம்.. அதெல்லாம் ஒரு காலம்..

    அதையெல்லாம் எடைக்கு எடை போட முடியுமா?

    குப்பைத் தொட்டிலதான் போட்டேன்..!

    ReplyDelete
  33. //thevanmayam said...
    நல்லவேளை!! பல பேர் புண்ணியம் உங்களுக்கு!!!///

    அப்பாடா.. ஒருத்தராச்சும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாருப்பா..

    சந்தோஷம் தேவன்மயம்..!

    ReplyDelete
  34. ///தீப்பெட்டி said...

    //அம்புட்டும் டபுள், டிரிபுள் அர்த்தங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது//

    ஏன்?.. நீங்க சிங்கிளாதான போனீங்க.. அப்போ சிங்கிளாத்தான் யோசிக்கணும். டபுள் மீனிங் எல்லாம் டபுள்ஸா போறவுங்களுக்கு பாஸ்.. இதை தவிர வேற எதும் கஷ்டம்(குறை) இருக்கா படத்துல?//

    இதுலயே உக்கார முடியல.. இதுக்கு மேல வேறென்ன வேணும்..?

    //நிறய பேரு திரைக்கதைய பாராட்டி இருக்காங்க... நீங்க என்ன இப்படி சொல்லுறீங்க. யார் சொல்லுறத நம்புறது?..:-(//

    இதைத்தான் திரைக்கதையில கலந்து கட்டி கொடுத்திருக்காங்க..

    மலத்தை அழகா பார்சல் பண்ணி வைச்சிருக்காங்க.. பிரிச்சுப் பார்த்து சாப்பிட்டே ஆவேன்னா சாப்பிடுங்க..

    யார் வேணாம்னா..?

    ReplyDelete
  35. ///புருனோ Bruno said...
    மன்னிக்கவும் அண்ணா. நீங்கள் கூறும் அளவு படம் மோசமாக இல்லை.///

    உங்களது கருத்திற்கு மிக்க நன்றி..

    ஆங்.. அதென்ன அண்ணா. நல்லாயில்லீங்களேண்ணா..

    நீங்கதான எனக்கு அண்ணன்.. நான் உங்க தம்பிங்கண்ணா. தம்பின்னு கூப்பிடுங்கண்ணா..

    ReplyDelete
  36. ///jackiesekar said...

    நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..//

    நீயும் எமாந்திட்டியா?///

    அடப்பாவி நீயுமா..?

    பரவாயில்லை.. எனக்கும் ஒரு தோஸ்த்து இருக்காப்புல..!

    ReplyDelete
  37. ///jackiesekar said...

    //ஒரேயொரு ஆறுதல் கதாநாயகி ஷயாலி. கதாநாயகனைவிடவும் நன்கு நடிப்பு வருகிறது.//

    நீங்கள்லாம் கதாநாயகி பத்தி எழுதாமலே இருக்கலாம். :(

    கதாநாயகி நடிக்கிறத பார்க்க நீங்க தமிழ் படத்துக்கு போவீங்களா? முருகா இவருக்கு கொஞ்சம் நல்ல புத்தியைக் கொடேன்.///

    மோகன்தாஸ் கருத்துக்கு உடன்படுகிறேன்.///

    சேம் சைட் கோல் அடிப்பதை நிறுத்து ஜாக்கி..

    நான் சத்தியமா நடிப்பை பார்க்கத்தான் சினிமாவுக்கு போறேன்..

    வேற எதையும் பார்க்க இல்ல..

    நம்புங்கப்பா..!

    ReplyDelete
  38. ///ananth said...
    நான் திரையரங்குகளுக்கு போய் திரைப்படம் பார்த்து நாள், வார, மாதக் கணக்கு போய் வருடத்தில் வந்து நிற்கிறது. காரணம் (1) பல சமயங்களில் விமர்சனங்களெ படத்தை பார்த்த திருப்தியை அளித்து விடுகின்றன. காரணம் (2) 30 km பயணிக்க வேண்டும். காரணம் (3) எனக்கு வாய்த்த மனைவி. எதற்கு தண்ட செலவு. இன்னும் சில மாதங்கள் பொருத்திருந்தால் தொலைக்காட்சியிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்பார்.//

    நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவரு.

    இது மாதிரி மனைவி வாய்க்க கொடுத்து வைச்சிருக்கோணும்..

    //எல்லாம் சரி கதாநாயகன் யார் என்று சொல்லவில்லையே.///

    அந்தக் கர்மத்தை வேற தனியா சொல்லணுமாக்கும்..!

    ReplyDelete
  39. அண்ணே என்ன இப்படி சொல்றீங்க..விகடனில் 40/100 மார்க் கொடுத்து இருக்காங்க..

    பெங்களூரில் 5 நாள் கூட இந்த படம் ஓடவில்லை..

    விகடனில் வந்த விமர்சனத்தின் கடைசி வரி

    “விறுவிறு முதல் பாதி வினை என்றால், இரண்டாம் பாதி எதிர்வினை!”

    ReplyDelete
  40. அரசியல் மேல் இருந்த சினம் இந்தப் படத்தின் மீதும் பாய்ந்து விட்டதா,சரவணன்?

    ReplyDelete
  41. Newton’s third law that to every action there is an equal but opposite reaction. இதற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் வில்லன் செய்த கொடிய செயலுக்கு தகுந்த தண்டனை கிடைக்கிறதாம். படத்தைப் பார்த்த ஒருவர் சொன்னது. என்ன ஒரு புதுமை. தலையில் அடித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  42. அண்ணாத்த நமக்கு நல்ல வேலை ஆயிரம் இருக்கச் சொல்லோ... எதுக்கு இந்த வீண் வேலை. உலகத்திரைப்படங்கள் பார்த்து ரசித்த உள்ளங்களுக்கு இந்த திரைப்படம் அவ்வளவாக பிடிக்காது என நம்ம குதிரை ஓட்டுநர் சொன்னாரு...

    நீங்க அதுல ஒரு படி மேல உள்ள ஆசாமி.

    விதி வலியது.

    டார்வின் விதி, ஐன்ஸ்டீனின் ஐந்தாம் விதி, அப்துல்கலாமின் ராக்கெட் விதி, தமிழ்நாட்டு மக்களின் தலவிதி - என்கிற ரீதியில் அடுத்தடுத்து படங்கள் வராமல் நாம் தப்பிக்கச் செய்ததற்கு இயக்குநருக்கு வணக்கங்கள்.

    ஆயினும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    பேரன்பு நித்யன்

    ReplyDelete
  43. ///Arun Kumar said...

    அண்ணே என்ன இப்படி சொல்றீங்க.. விகடனில் 40/100 மார்க் கொடுத்து இருக்காங்க..

    பெங்களூரில் 5 நாள் கூட இந்த படம் ஓடவில்லை..

    விகடனில் வந்த விமர்சனத்தின் கடைசி வரி

    “விறுவிறு முதல் பாதி வினை என்றால், இரண்டாம் பாதி எதிர்வினை!”///

    விகடனில் இப்போதெல்லாம் புத்தக வியாபாரத்தையும் மனதில் வைத்துத்தான் விமர்சனம் செய்கிறார்கள்.

    ஏனெனில் அடுத்தப் படம் பற்றிய செய்திகள் தங்களுக்குக் கிடைக்காமல் போகும் என்ற பயம்தான்..

    எனக்குப் பிடிக்கலை.. அவ்ளோதான்..

    ReplyDelete
  44. ///ஷண்முகப்ரியன் said...

    அரசியல் மேல் இருந்த சினம் இந்தப் படத்தின் மீதும் பாய்ந்து விட்டதா, சரவணன்?///

    இல்ல ஸார்..

    முதல் பாதியில் இருந்த வக்கிரமே மனதில் மேலோங்கி நின்றதால் இரண்டாம் பாதியில் பலரும் சொல்வதைப் போல் இருக்கும் சினிமா திரைக்கதை என்னைக் கவரவில்லை..

    ReplyDelete
  45. ///ananth said...

    Newton’s third law that to every action there is an equal but opposite reaction.

    இதற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் வில்லன் செய்த கொடிய செயலுக்கு தகுந்த தண்டனை கிடைக்கிறதாம்.

    படத்தைப் பார்த்த ஒருவர் சொன்னது.

    என்ன ஒரு புதுமை. தலையில் அடித்துக் கொண்டேன்.///

    வேற என்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  46. ///நித்யகுமாரன் said...

    அண்ணாத்த நமக்கு நல்ல வேலை ஆயிரம் இருக்கச் சொல்லோ... எதுக்கு இந்த வீண் வேலை. உலகத் திரைப்படங்கள் பார்த்து ரசித்த உள்ளங்களுக்கு இந்த திரைப்படம் அவ்வளவாக பிடிக்காது என நம்ம குதிரை ஓட்டுநர் சொன்னாரு...

    நீங்க அதுல ஒரு படி மேல உள்ள ஆசாமி.

    விதி வலியது. டார்வின் விதி, ஐன்ஸ்டீனின் ஐந்தாம் விதி, அப்துல்கலாமின் ராக்கெட் விதி, தமிழ்நாட்டு மக்களின் தலவிதி - என்கிற ரீதியில் அடுத்தடுத்து படங்கள் வராமல் நாம் தப்பிக்கச் செய்ததற்கு இயக்குநருக்கு வணக்கங்கள்.

    ஆயினும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    பேரன்பு நித்யன்///

    பேரன்பு கொண்ட தம்பியே..

    இந்தப் படத்திற்குச் சென்றுவிடாதே..

    அதுவே நீ என் மேல் வைத்திருக்கும் பேரன்பிற்குச் சான்று..!

    நல்ல வேளை.. தப்பிச்ச..!

    ReplyDelete
  47. //'நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..//

    யாரந்த நல்ல மனுசன்?

    ReplyDelete
  48. எனக்கு ஒரு சந்தேகம் இது உண்மைத்தமிழன் அண்ணனின் பதிவு தானா?..... பதிவு ரொம்ப சின்னதா இருக்கே

    ReplyDelete
  49. ///வால்பையன் said...

    //'நல்லாயிருக்குண்ணே!' என்று சொல்லி தூண்டிவிட்ட பார்ட்டிக்கு, ஒரு நாள் மாப்பு இருக்கு..//

    யாரந்த நல்ல மனுசன்?///

    நல்ல மனுஷன் இல்லே.. கெட்ட மனுஷன்..!

    ReplyDelete
  50. ///அத்திரி said...
    எனக்கு ஒரு சந்தேகம் இது உண்மைத்தமிழன் அண்ணனின் பதிவுதானா?..... பதிவு ரொம்ப சின்னதா இருக்கே///

    பதிவின் கருத்திற்கேற்றாற்போல் பதிவின் நீளம் கூடவோ, குறையவோ செய்யும்..

    தம்பி அத்திரி ராசா.. சந்தேகம் தீர்ந்ததா..?

    ReplyDelete
  51. //டபுள், டிரிபுள் அர்த்தங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. ஏதோ அந்தக் காலத்து சினிமித்ரன், விருந்து, மருதம் புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது.//

    உண்மைத் தமிழரே... மலரும் நினைவுகள்னு அந்தக் கதைகளை வழக்கமா எழுதும் "சின்ன பதிவு" மாதிரி எழுதும் எண்ணம் ஏதும் உண்டா??

    ச்சும்மா ஒரு பொது அறிவுக் கேள்வி தான் !!!!!! :)))))

    //சென்ஷி said...

    என்னண்ணே...

    உடம்பு ஏதும் சுகமில்லையா..?

    என்னாச்சு இப்பல்லாம் ஆரம்பிக்கறப்பவே பதிவை முடிச்சுடறீங்க. உடம்ப பாத்துக்கண்ணே... இந்த மாதிரில்லாம் நீ எழுத ஆரம்பிச்சா ரசிகக்கண்மணிகள் நாங்க எங்க போய் நியாயம் சொல்ல... :((//

    இதுக்கு ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்... :)))

    ReplyDelete
  52. நியூட்டனின் 3ம் விதியை விடுங்கள். கட்சிகளின் தலைவிதி நாளை தெரிந்துவிடும். அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி (ஈழத்தமிழர் விஷயத்தில்) யோசிக்க வேண்டும்.

    ReplyDelete