Pages

Thursday, May 07, 2009

இட்லி-தோசை-வடை-சட்னி-சாம்பார்-07-05-09

07-05-09

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஊனமுற்றோர் அடையாள அட்டை

மிகவும் போராடி எனக்கான ஊனமுற்றோர் அடையாள அட்டையை வாங்கிவிட்டேன். சென்னை மாவட்டத்தில் இருக்கும் மனநலம் குன்றியவர்கள், காது கேளாதவர்கள், வாய்பேச முடியாதவர்களுக்கு உதயம் தியேட்டர் அருகேயிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் இதற்கான பரிசோதனை நடத்தப்படுகிறது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டுமே இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இருப்பிடச் சான்றிதழ், (ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதேனும் ஒன்று) 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இதனுடன் வந்தால் உடனேயே பரிசோதித்து உடனேயே கொடுத்துவிடுகிறார்கள். இதன் பெயர் தேசிய உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டை.

எனக்கு என்னைக்கு ஒரு விஷயத்தை உருப்படியா செஞ்சு கொடுத்திருக்கான் அந்த கோவணான்டி..?

முதல் வாரம் காலை பத்தரை மணிக்கு போனபோது, “காலைல 9 மணிக்குள்ள வந்து டோக்கன் வாங்கினால்தான் அன்றைக்கு பார்க்க முடியும். நீங்க போயிட்டு அடுத்த வாரம் வாங்க..” என்றார்கள்.

அடுத்த வாரம் காலையில் எட்டரை மணிக்கே போன போது எனக்கு முன்பாக 20 பேர் நின்றிருந்தார்கள். உட்கார்வதற்கு இருந்த பெஞ்சுகள் குறைவாக இருந்ததால், அடுத்த 4 மணி நேரமும் கியூவில்தான் நின்றிருந்தோம். நான் சென்ற அன்றைக்கு அடுத்த சோதனையாக மருத்துவர் சற்றுத் தாமதமாக வந்தார். அதனாலேயும் கியூவில் நின்றிருந்த நேரம் நீண்டுவிட்டது.

பரிசோதனை முடிந்து கையெழுத்தாகும்போது தலைமை மருத்துவர் ஒரு வார விடுமுறையில் போய்விட்டதாக சொன்னார்கள். “அடுத்த வாரம் வாருங்கள்..” என்றார்கள். மறுவாரம் சென்றேன்.. மிகச் சரியாக என்னுடைய அட்டையை மட்டும் காணவில்லை. தேடோ, தேடு என்று தேடினார்கள். கையைப் பிசைந்து கொண்டார்கள். பின்பு “அடுத்த வாரம் வாருங்களேன். தேடி வைக்கிறோம்..” என்றனர்.

கோவணான்டி வேலையைக் காட்டுறான்னு நல்லாப் புரிஞ்சு போச்சு. அவனை எதிர்க்க முடியுமா..? தலையாட்டிட்டு சென்ற வாரம் திரும்பவும் சென்றேன். தேடி வைத்திருந்தார்கள். வாங்கி விட்டேன். “நீண்ட தூர பேருந்து கட்டணங்களில்(ஏஸி வசதியுள்ள பேருந்துகளைத் தவிர) 4-ல் ஒரு பங்குதான் ஊனமுற்றோருக்கு. அந்த சலுகையை இதை வைத்துப் பெற்றுக் கொள்ளுங்கள்..” என்று அறிவுறுத்தினார்கள். சந்தோஷம் என்று வந்துவிட்டேன்.

எதையும் அவ்வளவு சுலபமாக எனக்குக் கொடுத்துவிட மாட்டான் என் அப்பன். போட்டு புரட்டி எடுத்திட்டு புண்ணுல மருந்து தடவுறதுதான் அவன் எனக்குச் செய்ற கருணை.. இப்பவாவது புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்..

இளிச்சவாய மிடில் கிளாஸ் கேணையர்கள்..!

பணமும், பணத்திற்கு வளைந்து கொடுக்கும் அதிகாரமும் இருந்தாலே போதும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சட்டத்தையே வளைக்கலாம் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் மிகச் சமீபத்தில் நடந்துள்ளது.

மடிப்பாக்கம் வேலாயுதம் என்பவர் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுவரையில் இவர் யார், எவர் என்று அக்கட்சித் தொண்டர்களுக்கே தெரியாது. ஆனால் இதனைவிடவும் இவர் மீதிருந்த 171 கோடி ரூபாய் மோசடி புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுதான், இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.

விஷயம் ரொம்ப சிம்பிள். தரமணி அருகே இருந்த ஏக்கர் கணக்கிலான நிலத்தை தனது சொந்த நிலம் என்றும் அதனை விற்பனை செய்ய விரும்புவதாகவும் புரூடா விட்டு மும்பையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து 171 கோடி ரூபாயை முன் பணமாகப் பெற்றுள்ளார் இந்த வேலாயுதம்.

பணம் கொடுத்த பின்புதான் அந்த நிறுவனத்திற்குத் தெரிந்ததாம் தரமணியில் ஒரு துண்டு நிலம்கூட வேலாயுதம் பெயரில் இல்லை என்பது.. நிறுவனம் பணத்தைத் திருப்பிக் கேட்க கைக்குக் கிடைத்த பணத்தை வேலாயுதம் பல வழிகளிலும் அள்ளிவீச தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகள் பணத்தால் அடிக்கப்பட்டுள்ளனர். எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதால் அந்த நிறுவனமே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

மும்பையில் இருக்கும் நிறுவனம், மிகப் பெரிய தொகை, மற்றும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன், மத்திய குற்றப் பிரிவு, கமிஷனர் அலுவலகம் என்று எங்கெல்லாமோ முட்டி மோதியும் நீதி கிடைக்காதது.. இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளது. இதுவே மாநில அரசுக்கு கேவலம்தான்.. கேவலத்தையெல்லாம் யார் பார்க்கப் போறா..?

சிபிஐ வழக்குப் பதிவு செய்த பின்பும் உடனடி கைதெல்லாம் இல்லை. மனிதர் ரொம்பவே கூலாக முன் ஜாமீன் கோரினார். வழக்கு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றத்தில் பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்டது வேலாயுதம் தரப்பு. அதில் பாதி தொகையை நீதிமன்றத்தில் உடனே கட்டும்படி நீதிபதி சொல்லியிருக்கிறார். அப்போதே கட்டிவிட்டார்கள். மீதமிருந்த தொகைக்கு வங்கியில் இருந்து ஷ்யூரிட்டி காட்டச் சொன்னார் நீதிபதி. அதையும் வேலாயுதரம் தரப்பு உடனேயே செய்து கொடுத்தது. அன்று மாலையே அவருக்கு முன் ஜாமீன் கிடைத்துவிட்டது.

முடிந்ததா..? இது அத்தனையும் ஒரே நாளில் நடந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதச் சம்பளத்தில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து கிடைக்கின்ற சொற்பத்திலேயே இன்கம்டாக்ஸ் என்று கை வைத்து எடுத்துவிட்டுத்தான் பாக்கியைக் கொடுக்கிறார்கள். கட்டாவிட்டால் கோர்ட், கேஸ் என்று நாயாய் அலைய விடுகிறது வருமான வரித்துறை.

ஆனால் இந்த விஷயத்தில் என்னதான் செய்ததாம்..? அப்படி ஒரு துறை இருக்கிறதா இல்லையா என்பதுகூட இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது. வங்கி மூலமாக இவ்வளவு பெரிய தொகை பட்டுவாடா செய்யப்படுவதை பார்த்து ஏதும் கேட்க மாட்டார்களா..? எதற்காக இது..? என்ன காரியம் நடக்கிறது..? வாங்குகின்ற நபர் வரி கட்டுபவர்தானா..? நிலம் கொடுக்கல் வாங்கல் என்றால் அதற்கான ஆதாரங்களைக் கேட்க மாட்டார்களா..?

ம்.. பெருமூச்சுதான் வருகிறது.. மிடில் கிளாஸ் மகாதேவன்கள்தான் இளிச்சவாயர்கள்..

100 ரூபாய் மாமூல் கேட்ட வழக்கிற்காக 3 வருட சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்கள் சிலர். இவர்களுக்கு எத்தனை வருட சிறைத்தண்டனை கொடுக்கலாம்..? கிடைக்குமா..?

இதயமுள்ள நடிகர் பாலாஜி


இதயக்கனி திரைப்படத்தின் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் வயது கடந்து பாசத்துடன் பழகும் எனது நண்பர்.

சில வருடங்களுக்கு முன்பு அவரிடத்தில் ஒரு முறை மலையாளத் திரைப்படத்திற்கான கதை ஒன்றை சொன்னேன். கேட்டுவிட்டு “நன்றாக இருக்கிறது.. மலையாளத்தில் செய்யலாம்..” என்றார்.

சொல்லிவிட்டால் போதுமா? முயற்சி செய்ய வேண்டுமே என்பதற்காக மோகன்லாலை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். சென்னை எழும்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் கேரளாவிற்கே குடிபோய்விட்டதாகச் சொன்னார்கள்.

மோகன்லால் பழம்பெரும் நடிகர் பாலாஜியின் மருமகன்தான் என்பதால் பாலாஜியைப் பிடித்தால் மோகன்லால் எப்போது சென்னை வருவார் என்பது தெரியும் என்று நினைத்தேன். ஜெகந்நாதன் ஸார் மூலமாக பாலாஜி வீட்டு நம்பர் கிடைத்தது.

அன்றைக்கு ஒரு நாள் போன் செய்தேன். வீட்டில் ஒரே சப்தம். சலசலவென்று இருந்தது. பாலாஜியே லைனுக்கு வந்தார். விஷயத்தைச் சொன்னேன். கொஞ்சம் சன்னமான குரலில், “மோகன்லால் இப்ப இங்கதான் இருக்கார்.. ஆனா கொஞ்சம் பிஸியா இருக்கார்.. இப்ப வந்தா பேச முடியாது.. நீங்க எதுக்கும் ஒரு மூணு, நாலு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வாங்களேன்.. பார்க்க முடியும்..” என்றார்.

நான் சும்மா இல்லாமல், “நல்ல கதைதான் ஸார்.. ஜெகந்நாதன் ஸாரே படிச்சிட்டு உங்ககிட்ட சொல்லச் சொன்னார் ஸார்.. ஒரு பதினைஞ்சு நிமிஷம் சந்திச்சா போதும் ஸார்.. இன்னிக்கே வர்றனே ஸார்..” என்றேன். “இல்லப்பா.. இன்னிக்கு முடியாதுப்பா.. கொஞ்சம் கோச்சுக்காத தம்பி.. நீ மெட்ராஸ்தான.. மூணு நாள் கழிச்சு வாயேன்..” என்றார்.

இதன் பின்பும் விடாமல் சில நிமிடங்கள் அனத்திப் பார்த்து ஓய்ந்து சத்தம் அளவுக்கதிகமாக இருந்ததால் எனது ஓட்டைக் காதில் சில வார்த்தைகள் புரியாததாலும் அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வைத்து எனக்கே வெறுத்துப் போனது.. “சரிங்க ஸார்.. மூணு நாள் கழிச்சு வர்றேன் ஸார்..” என்று சொல்லி டொக்கென்று போனை வைத்தேன்.

மறுநாள் காலை தினத்தந்தியை புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி கண்ணில் பட்டது.

நடிகர் பாலாஜியின் மனைவி மரணம். நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்று இருந்தது.

இதற்குப் பின் அந்த மலையாளக் கதை விஷயமாக யாரையுமே நான் அணுகவில்லை. அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன்..

எப்படி முடிந்தது..!

ஒரு அலுவலகத்தின் வாசலில் நின்றிருந்தேன். பக்கத்தில் குடியிருக்கும் பெண்மணி தனது குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். குழந்தை படு சுட்டி. ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்க.. தாயும் பின்னாலேயே ஓடியபடியே சமாளித்து ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த ஒரு ஹீரோ ஹோண்டோ பைக்கில் கால் வைத்து ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது குழந்தை. அம்மா அவளைத் தூக்கி கீழே விடுவதும், குழந்தை அதில் விடாப்பிடியாக ஏறுவதுமாக விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நொடியில் தாயின் கவனம் திசை திரும்ப குழந்தை பட்டென்று மேலே ஏறி சீட்டில் அமர பேலன்ஸ் தவறி கீழே விழுக.. ஈர மண்ணில் போட்டிருந்த ஸ்டேண்ட் அமுங்கி வண்டியே குழந்தை மீது விழுந்துவிட்டது.

நொடியில் தாய் சோற்றுக் கிண்ணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்த வேகத்தில் ஹோண்டா வண்டியை நொடியில் தூக்கி பின்புறமாகத் தள்ளிவிட்டாரே பார்க்கணும்.. அசந்து போனேன்.. காரணம்..

அந்தப் பெண் என்னைவிட ஒல்லியானவர்.. அவருக்கே தினமும் நான்கைந்து குளுகோஸ் பாட்டிலை ஏற்ற வேண்டும் போலிருந்தது அவருடைய உடல் வாகு.. இதை வைத்துக் கொண்டு எப்படி முடிந்தது அவரால்..? ஆச்சரியம்தான் போங்க..

யாரைத்தான் நம்புவதோ..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து பெண்கள் இதழ்களிலும் முகப்பு அட்டையை அலங்கரித்தவர் சென்னை பாஸ்போர்ட் அலுவலக மண்டல அதிகாரி சுமதி ரவிச்சந்திரன். இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண் அதிகாரி என்பதால் அவ்வளவு பப்ளிசிட்டி.

“லஞ்சத்தை ஒழிப்பேன்.. அது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.. அதுக்காகத்தான் ஆபீஸ் முழுக்க கேமிரா பொருத்தியிருக்கேன். எந்த முறைகேட்டுக்கும் வழியில்லை.. ஒரே நாள்ல எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சிரும்..” என்றெல்லாம் தனது பராக்கிரமங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.

இன்றைக்கு அவர் ஆட்டம் போட்ட அதே அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து குற்றவாளியாக கையெழுத்துப் போட்டுவிட்டு போவதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.

இனிமேல் அரசு அதிகாரிகளில் ஆண், பெண் என்ற பேதமெல்லாம் பார்க்காமல் ஒரே கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதுதான் நமக்கு நல்லது என்று நினைக்கிறேன்.

இவர் இந்தப் பதவிக்கு வந்ததே சிபாரிசானால்தானாம்.. நியாயமான வழியில் இல்லையாம். தி.மு.க. மூத்த அமைச்சர் அன்பழகனின் அக்கா மருமகளாம் இவர். மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறாராம்.

ஆரம்பமே அனர்த்தம் என்றால் அனைத்துமே அப்படித்தான் இருக்கும்..

கலைஞரை ஏன் திட்டுகிறேன்..!


மறுபடியுமாடா என்று நீங்கள் முறைப்பது எனக்கு நன்கு தெரிகிறது. ஆனால் ஒரு விஷயம்.. வேண்டுமென்றே யாரும் அவரைத் திட்டுவதில்லை. பேசுவதில்லை. அவர் செய்கின்ற செயல்களைப் பொறுத்துத்தான் பேசுகிறோம். கடிந்து கொள்கிறோம்..

இப்போது பாருங்கள்..

உண்ணாவிரதம் முடிந்த மறுநாளோ, அல்லது அடுத்த நாளா நினைவில்லை. அறிவாலயத்தில் பேட்டியளிக்கிறார். முகத்தில் அப்படியொரு சிரிப்பு. பூரிப்பு.. கேட்கின்ற கேள்விகளோ இலங்கை பிரச்சினை பற்றியது..

“உங்களுடைய உண்ணாவிரதத்திற்குப் பின்பும் ஈழத்தில் குண்டு மழை பொழிகிறதே..” என்பது பத்திரிகையாளர்களின் கேள்வி. ஐயா புன்சிரிப்போடு சொன்ன பதில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை..”

“யார் சொல்லியும் கேட்காமல் ராஜபக்சே போரை நடத்துகிறாரே.. என்ன செய்யப் போகிறீர்கள்..?” இது கேள்வி.. ஐயாவிடமிருந்து உடனுக்குடன் பதில் வருகிறது “நாம என்ன செய்யறது? வாங்க போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்..” சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார் பாருங்கள்..

அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..

அப்பன் முருகனிடம் ஒரு பேச்சு

இது எனக்கும் என் அப்பன் முருகனுக்கும் மட்டும் புரியுற விஷயம்.. உங்களுக்குப் புரியாது.. விட்ருங்க..

“அன்பு அப்பனே..

உன்னிடம் நான் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. எனக்கு நல்ல வேலை கொடுன்னு நான் கேக்கலை.. பணம் கொடுன்னு நான் கேக்கலை.. நல்ல வாழ்க்கையைக் கொடுன்னு நான் கேக்கலை.. ஆனா புதுசு, புதுசா பிரச்சினையை மட்டும் கொடுக்காதடா சாமி.. அதைச் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. தாங்க முடியலை... இதைத்தான கேட்டேன்.

கேட்டியா.. என்னிக்காவது நான் கேட்டதை செஞ்சிருக்கியா நீயி.. இப்ப என்ன பண்ணிருக்க..? கேட்கும்போதெல்லாம் செய்யாம.. இப்ப வண்டவாளம் தண்டவாளத்துல ஏறுற நேரத்துல உதவின்னு சொல்லி ஒரு உபத்திரவத்தைச் செஞ்சு தொலைஞ்சிருக்க..

உன்கூட மோதுற அளவுக்கெல்லாம் எனக்கு சக்தியில்லடா சாமி.. நீதான செஞ்ச.. ஏதாவது ஒண்ணுன்னா உன்கிட்டயே தள்ளி விடுறேன்.. நீயாச்சு.. அவங்களாச்சு..

44 comments:

  1. அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..
    இதேதான் தலைவரே எனக்கும்...!

    ReplyDelete
  2. \\இது எனக்கும் என் அப்பன் முருகனுக்கும் மட்டும் புரியுற விஷயம்.. உங்களுக்குப் புரியாது.. விட்ருங்க..\\
    அப்பறம் எதுக்கு இது இங்கே...!

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்குங்க,,

    ஆனாலும் படிச்சு முடுச்ச பிறகு சோகமா இருக்கு...

    ReplyDelete
  4. // புதுசு, புதுசா பிரச்சினையை மட்டும் கொடுக்காதடா சாமி.. அதைச் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. தாங்க முடியலை... இதைத்தான கேட்டேன். //

    அப்படியே நம்ம பேரையும் கோத்துவுட்டுக்குங்க! அவர் கிட்ட:)

    ReplyDelete
  5. அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..////


    அண்ணே எனக்கு ஒரு சான்ஸ்....

    ReplyDelete
  6. அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..////


    அண்ணே எனக்கு ஒரு சான்ஸ்....

    ReplyDelete
  7. //
    அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..//

    செருப்பு தூக்கி அடிக்குறது ஓல்டு ஃபேஷன் ஆகிடுச்சா என்ன?!

    இருந்தாலும் தமிழினத்தலைவரை இப்படில்லாம் அசிங்கப்படுத்தக்கூடாது, இதைவிட கேவலமா ஏதாவது எழுதுங்க.

    அப்புறம் அந்த முருகன் மேட்டர். நீங்க ஏன் வேற நல்ல சாமிகிட்ட விண்ணப்பம் போடக்கூடாது!

    ReplyDelete
  8. //அப்புறம் அந்த முருகன் மேட்டர். நீங்க ஏன் வேற நல்ல சாமிகிட்ட விண்ணப்பம் போடக்கூடாது!//

    ஏன் முருகன்(சுப்பிரமணியன்) நல்ல சாமி இல்லயா?

    பை
    சுப்பு (எ) சுப்பிரமணியன்

    ReplyDelete
  9. ///.. உதவின்னு சொல்லி ஒரு உபத்திரவத்தைச் செஞ்சு தொலைஞ்சிருக்க.. ///


    அஹஹ் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்தாச்சா??
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. // SUBBU said...

    //அப்புறம் அந்த முருகன் மேட்டர். நீங்க ஏன் வேற நல்ல சாமிகிட்ட விண்ணப்பம் போடக்கூடாது!//

    ஏன் முருகன்(சுப்பிரமணியன்) நல்ல சாமி இல்லயா?

    பை
    சுப்பு (எ) சுப்பிரமணியன்//

    அட நல்லவரா இருந்தா பரவாயில்லை சுப்புண்ணா.. அவரு ரொம்ப நல்லவரா இருக்குறதாலேயே நம்ம அண்ணாத்த ஆப்ளிகேசனை பார்க்குறது இல்லைன்னு நினைக்குறேன்!

    ReplyDelete
  11. நண்பரே நான் முன்பு சொன்னது மாதிரி உடல் ஊணமுற்றவர் அடையாள அட்டை வாங்குவதற்குள் மண்டை காய்ஞ்சு போயிட்டீங்க. இவங்க அப்பன் வீட்டு சொத்தை தூக்கிக் கொடுக்கற மாதிரி தான் அங்க போனா வருபவர்களை நடத்துவார்கள். எல்லாம் பணம் தின்னி பேய்கள். செத்தவன் உடலில் இருந்து கூட எதாவது திருடலாமான்னு பார்ப்பாங்க.

    நம் நாட்டில் சட்டம் ஏழைகளுக்கு மட்டும்தான். மடிப்பாக்கம் வேலாயுதங்களுக்கு கிடையாதுங்க. வருமான வரி என்று டார்ச்சர் செய்வது, ரூ 50,000 க்கு மேல் எடுத்தால் பான் கார்டு கேட்பது எல்லாம் நம்ம மாதிரி இருப்பவர்களுக்குத்தான்.

    என்னப்பன் முருகனிடம் தள்ளிட்டீங்க, கவலைப் படாதீங்க அவர் பார்த்துப்பாரு..

    ReplyDelete
  12. //“மழை விட்டும் தூவானம் விடவில்லை..” //

    நீங்கள் எல்லாம் ஒரு தமிழரா?

    கவிதைத்துவமா ஒரு வார்த்தை சொன்னா ரசிக்க தெரியாத உங்களுக்கு..

    //“நாம என்ன செய்யறது? வாங்க போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்..” சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார் பாருங்கள்..//

    ஆமாம்.. போகுறது எவனோ உசுரு தானே.. சிரிக்காம என்ன செய்யனும்?

    ஆனா, 60 வருசமா கடினமா உழைச்சு தமிழையும் தமிழ்நாட்டையும் மட்டுமே நேசித்த கருணாவை இப்படி எல்லாம் கல்லு கூட சம்பந்தப்படுத்துறத பார்த்த அவங்க தொண்டர்கள் (அல்லக்கைகள் என்றோ, ரசிக, பக்த சிகாமணிகள் என்றொ படித்தால் நான் பொறுப்பல்ல) மனசு எவ்வளவு பாடுபடும்? அவங்க பூப்போன்ற மனசு முக்கியமா இல்லை ஈழத் தமிழனின் உயிர் முக்கியமா??

    என்னமோ போங்க...

    ReplyDelete
  13. அண்ணே அப்படி என்ன விஷயம்ண்ணே உங்களுக்கு முருகன் செஞ்சிட்டான்..? எனக்கு கூட தெரியாம..?

    ReplyDelete
  14. மத்த மேட்ரெல்லாம் ஒகே!

    முருகன் கிட்ட என்ன பேசுனிங்கன்னு தான் தெரியல!

    ReplyDelete
  15. பக்தனே!வாழ்க்கையில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை?வாழ்வின் சுவாரசியமே பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும்,தீர்ப்பதிலும் தானே அடங்கி இருக்கிறது?
    "நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா மகனே!"

    ReplyDelete
  16. ராகவன் நைஜீரியா கருத்தோடு ஒத்துப்போகிறேன்.................

    ReplyDelete
  17. வாவ் ! இவ்வளவு பொறுமையா அவருக்கு (பாலாஜி)....

    //
    இவர் இந்தப் பதவிக்கு வந்ததே சிபாரிசானால்தானாம்.. நியாயமான வழியில் இல்லையாம். தி.மு.க. மூத்த அமைச்சர் அன்பழகனின் அக்கா மருமகளாம் இவர். மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறாராம்.
    //
    அப்படியா கதை ?

    ReplyDelete
  18. //டக்ளஸ்....... said...
    அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா.. இதேதான் தலைவரே எனக்கும்...!//

    டக்ளஸ் இந்த தலைவரே என்கிற வார்த்தை எதற்கு..?

    பின்பு கல்லடி வாங்க நான் தயாராக இல்லை..!

    ReplyDelete
  19. ///டக்ளஸ்....... said...

    \\இது எனக்கும் என் அப்பன் முருகனுக்கும் மட்டும் புரியுற விஷயம்.. உங்களுக்குப் புரியாது.. விட்ருங்க..\\

    அப்பறம் எதுக்கு இது இங்கே...!///

    மனசுல இருக்குறதை இறக்கி வைக்கணும்ல.. அதுக்குத்தான்..

    ReplyDelete
  20. ///லோகு said...

    ரொம்ப நல்லா இருக்குங்க, ஆனாலும் படிச்சு முடுச்ச பிறகு சோகமா இருக்கு...///

    சோகம்.. தங்களுக்கும் புரிந்து, ஒட்டி விட்டதா..?

    இதுவே பெரிய சோகம்..!

    ReplyDelete
  21. ///குசும்பன் said...

    // புதுசு, புதுசா பிரச்சினையை மட்டும் கொடுக்காதடா சாமி.. அதைச் சமாளிக்கவே எனக்கு நேரம் சரியாயிருக்கு. தாங்க முடியலை... இதைத்தான கேட்டேன். //

    அப்படியே நம்ம பேரையும் கோத்துவுட்டுக்குங்க! அவர்கிட்ட:)///

    குசும்பா.. இந்த சரவணனை சொன்னாலும் அந்த சரவணனுக்கும் அது பொருந்துமாம்..

    கோவணான்டி சொல்றான்.

    ReplyDelete
  22. ////pappu said...

    அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..////


    அண்ணே எனக்கு ஒரு சான்ஸ்....///

    என்ன இது அக்கிரமமா இருக்கு..? ஓட்டுப் போட கூட இப்படி கேக்க மாட்டாங்க.. கல்லடிக்கிறதுக்கு ஆர்வமா..?

    ReplyDelete
  23. ///SUBBU said...

    அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..////


    அண்ணே எனக்கு ஒரு சான்ஸ்....///

    கியூல நில்லுங்கப்பா.. சான்ஸ் வரட்டும் தர்றேன்..

    ReplyDelete
  24. ///சென்ஷி said...

    //அப்படியே கைல ஒரு கல்லு இருந்திருந்தா..//

    செருப்பு தூக்கி அடிக்குறது ஓல்டு ஃபேஷன் ஆகிடுச்சா என்ன?!
    இருந்தாலும் தமிழினத் தலைவரை இப்படில்லாம் அசிங்கப்படுத்தக்கூடாது, இதைவிட கேவலமா ஏதாவது எழுதுங்க.///

    இதைவிடக் கேவலமாவா.. யோசிக்கிறேன்ப்பூ..

    ///அப்புறம் அந்த முருகன் மேட்டர். நீங்க ஏன் வேற நல்ல சாமிகிட்ட விண்ணப்பம் போடக்கூடாது!///

    நமக்கு எல்லா சாமியும் ஒண்ணுதான் தம்பி..

    ReplyDelete
  25. ///SUBBU said...

    //அப்புறம் அந்த முருகன் மேட்டர். நீங்க ஏன் வேற நல்ல சாமிகிட்ட விண்ணப்பம் போடக்கூடாது!//

    ஏன் முருகன்(சுப்பிரமணியன்) நல்ல சாமி இல்லயா?

    பை
    சுப்பு (எ) சுப்பிரமணியன்///

    சுப்பு.. முருகன் நல்ல சாமிதான்.. ஆனா என்ன படுத்தி எடுத்துட்டுத்தான் ஏதாவது செய்வான்.. அதுதான் கஷ்டம்..!

    ReplyDelete
  26. ///லேகா பக்க்ஷே said...

    ///.. உதவின்னு சொல்லி ஒரு உபத்திரவத்தைச் செஞ்சு தொலைஞ்சிருக்க.. ///


    அஹஹ் கல்யாணத்துக்கு பொண்ணு பாத்தாச்சா??
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.///

    லேகா.. பொய்..

    இது வேற விஷயம்..!

    ReplyDelete
  27. ///சென்ஷி said...

    // SUBBU said...

    //அப்புறம் அந்த முருகன் மேட்டர். நீங்க ஏன் வேற நல்ல சாமிகிட்ட விண்ணப்பம் போடக்கூடாது!//

    ஏன் முருகன்(சுப்பிரமணியன்) நல்ல சாமி இல்லயா?

    பை
    சுப்பு (எ) சுப்பிரமணியன்//

    அட நல்லவரா இருந்தா பரவாயில்லை சுப்புண்ணா.. அவரு ரொம்ப நல்லவரா இருக்குறதாலேயே நம்ம அண்ணாத்த ஆப்ளிகேசனை பார்க்குறது இல்லைன்னு நினைக்குறேன்!///

    இதுதான் கரீக்ட்டுன்னு நினைக்கிறேன்.. ஏன்னா சரவணன்னு பேர் இருக்குறவங்களுக்கெல்லாம் இப்ப கஷ்ட காலம்தானாம்..

    ReplyDelete
  28. ///இராகவன் நைஜிரியா said...

    நண்பரே நான் முன்பு சொன்னது மாதிரி உடல் ஊணமுற்றவர் அடையாள அட்டை வாங்குவதற்குள் மண்டை காய்ஞ்சு போயிட்டீங்க. இவங்க அப்பன் வீட்டு சொத்தை தூக்கிக் கொடுக்கற மாதிரி தான் அங்க போனா வருபவர்களை நடத்துவார்கள். எல்லாம் பணம் தின்னி பேய்கள். செத்தவன் உடலில் இருந்து கூட எதாவது திருடலாமான்னு பார்ப்பாங்க.///

    இப்போது கொஞ்சம் பரவாயில்லை ஸார்.. சீக்கிரமாவே முடிஞ்சிரும்.. இது மத்திய அரசு கொடுப்பது. மாநில அரசும் தனியாக ஒரு அட்டை கொடுக்கிறது.. அதையும் வாங்க வேண்டும்..

    //நம் நாட்டில் சட்டம் ஏழைகளுக்கு மட்டும்தான். மடிப்பாக்கம் வேலாயுதங்களுக்கு கிடையாதுங்க. வருமான வரி என்று டார்ச்சர் செய்வது, ரூ 50,000 க்கு மேல் எடுத்தால் பான் கார்டு கேட்பது எல்லாம் நம்ம மாதிரி இருப்பவர்களுக்குத்தான்.//

    ஏழைகள்தானே எல்லாருக்கும் இளக்காரம்..

    //என்னப்பன் முருகனிடம் தள்ளிட்டீங்க, கவலைப்படாதீங்க அவர் பார்த்துப்பாரு..///

    அவன் பார்த்துப்பான்.. பார்த்துக்குவான்னு உக்காந்துதான் நம்ம நிலைமை இப்படிக் கிடக்கு..!

    ReplyDelete
  29. ///பதி said...

    //“மழை விட்டும் தூவானம் விடவில்லை..” //

    நீங்கள் எல்லாம் ஒரு தமிழரா? கவிதைத்துவமா ஒரு வார்த்தை சொன்னா ரசிக்க தெரியாத உங்களுக்கு..///

    தெரியாதுய்யா தெரியாது.. சோத்துக்கே பஞ்சப்பாடு இருக்கும்போது கவிதையா தொண்டைல இறங்கப் போகுது. அட போங்கப்பா..

    //“நாம என்ன செய்யறது? வாங்க போய் ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்..” சொல்லிவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார் பாருங்கள்..//

    ஆமாம்.. போகுறது எவனோ உசுருதானே.. சிரிக்காம என்ன செய்யனும்?///

    இதுதான்.. இந்த அலட்சியம்தான்.. அவரை சிரிக்க வைக்கிறது.. இதனால் விளைந்த அவமானம் உயிர் கொடுத்த அப்பாவிகளுக்குத்தான்..

    //ஆனா, 60 வருசமா கடினமா உழைச்சு தமிழையும் தமிழ்நாட்டையும் மட்டுமே நேசித்த கருணாவை இப்படி எல்லாம் கல்லு கூட சம்பந்தப்படுத்துறத பார்த்த அவங்க தொண்டர்கள் (அல்லக்கைகள் என்றோ, ரசிக, பக்த சிகாமணிகள் என்றொ படித்தால் நான் பொறுப்பல்ல) மனசு எவ்வளவு பாடுபடும்? அவங்க பூப்போன்ற மனசு முக்கியமா இல்லை ஈழத் தமிழனின் உயிர் முக்கியமா?? என்னமோ போங்க...///

    இப்படிச் சொல்லியே ஈழத்துல மக்கள் தொகையைக் குறைச்சுக்கிட்டிருக்காங்க..

    பார்ப்போம்.. நாளைய வரலாறு சொல்லும்..

    ReplyDelete
  30. ///Cable Sankar said...
    அண்ணே அப்படி என்ன விஷயம்ண்ணே உங்களுக்கு முருகன் செஞ்சிட்டான்..? எனக்குகூட தெரியாம..?///

    உமக்குத் தெரியாதா..? உண்மையாவா..?

    ReplyDelete
  31. ///வால்பையன் said...

    மத்த மேட்ரெல்லாம் ஒகே!

    முருகன்கிட்ட என்ன பேசுனிங்கன்னுதான் தெரியல!///

    வாலு..

    இதுக்குத்தான் சொல்றது அடிக்கடி முருகன் மாதிரியான ஆளுககிட்ட பேசணும்.. பழகணும்.. சகவாசம் வைச்சுக்கணும்னு..

    வைச்சிருந்தீங்கன்னா இப்போ சொன்னது பக்கு்னனு புரிஞ்சிருக்கும்..!

    ReplyDelete
  32. ///முருகப் பெருமான் said...

    பக்தனே! வாழ்க்கையில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை? வாழ்வின் சுவாரசியமே பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும், தீர்ப்பதிலும் தானே அடங்கி இருக்கிறது? "நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா மகனே!"///

    அப்பனே..

    இப்படி நீவிர் சுவாரஸ்யமாக வாழ்க்கையை கவனிப்பதற்கு என்னைப் போன்ற ஏமாளிதான் கிடைத்தானா..?

    நான் ஒருத்தன் எத்தனையைத்தான் தாங்குறது..?

    ReplyDelete
  33. ///அத்திரி said...

    ராகவன் நைஜீரியா கருத்தோடு ஒத்துப்போகிறேன்.................///

    நல்ல பின்னூட்டம்..!

    நன்றி ராசா..!

    ReplyDelete
  34. ///Boston Bala said...

    :)///

    நன்றி பாபாஜி...

    ReplyDelete
  35. ///சுட்டி குரங்கு said...

    வாவ்! இவ்வளவு பொறுமையா அவருக்கு (பாலாஜி)....///

    பொறுமையையும், நாகரிகத்தையும் பார்த்தீர்களா..? மரணச் செய்தியைக் கேட்டதும் எனது கண்கள் நொடியில் கலங்கிவிட்டன..

    //இவர் இந்தப் பதவிக்கு வந்ததே சிபாரிசானால்தானாம்.. நியாயமான வழியில் இல்லையாம். தி.மு.க. மூத்த அமைச்சர் அன்பழகனின் அக்கா மருமகளாம் இவர். மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்கள் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறாராம்.//

    அப்படியா கதை ?///

    அப்படித்தான் கதை..! நல்லாயிருக்குல்ல..

    ReplyDelete
  36. தாங்கள் திருமணமாகாதவர் என்று தங்களுடைய பழைய பதிவு ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டேன். உடல் ஊணமுற்றவர், திரைப்பட இயக்குனர் என்று இப்போதுதான் தெரிகிறது. தங்களுக்கு பொருத்தமான பெண் எவரும் இன்னும் அகப்படவில்லையா.

    எங்கள் நாட்டில் மக்களுக்கு தேவை என்றால் அரசு அலுவலகம் நள்ளிரவு வரை கூட திறந்திருக்க வேண்டும் (இது பல முறை நடந்திருக்கிறது). போதுமான அலுவலர்களும் இருக்க வேண்டும். சரியான காரணமில்லாமல் அலுவலர் யாரும் தாமதமாகவும் வர முடியாது. சரியாக செயல்படாத அதிகாரிகள் மேடையில் ஏற்றப்பட்டு எல்லார் முன்னிலையிலும் துடைப்பம் பரிசாக வாங்கியதும் நடந்திருக்கிறது.

    முருகனுக்கு வேறு வேலை இல்லையா தங்களைப் போன்றவர்களை தேடிப்பிடித்து சோதிக்க. எல்லாம் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன்தான். தீதும் நன்றும் பிறர் தர அல்ல முருகன் தர வாரா.

    ReplyDelete
  37. //எங்கள் நாட்டில் மக்களுக்கு தேவை என்றால் அரசு அலுவலகம் நள்ளிரவு வரை கூட திறந்திருக்க வேண்டும் (இது பல முறை நடந்திருக்கிறது).

    nengga entha urel erukika....?

    ReplyDelete
  38. அயர்ச்சி, ஆதங்கம், நெகிழ்ச்சி, எரிச்சல், கோபம், சரணாகதி என்று எல்லாம் கலந்து கட்டி அக்மார்க் உ.த. அண்ணாச்சி பதிவு.

    அனுஜன்யா

    ReplyDelete
  39. //nengga entha urel erukika....?//

    கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு. என்னைப் பற்றி எனது profile பார்த்தலே தெரியுமே. அதில் சொல்லப் பட்டவை யாவும் உண்மைத் தகவல்கள்தாம்.

    ReplyDelete
  40. //ananth said...

    தாங்கள் திருமணமாகாதவர் என்று தங்களுடைய பழைய பதிவு ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டேன். உடல் ஊணமுற்றவர், திரைப்பட இயக்குனர் என்று இப்போதுதான் தெரிகிறது. தங்களுக்கு பொருத்தமான பெண் எவரும் இன்னும் அகப்படவில்லையா.//

    முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை.

    //எங்கள் நாட்டில் மக்களுக்கு தேவை என்றால் அரசு அலுவலகம் நள்ளிரவு வரை கூட திறந்திருக்க வேண்டும் (இது பல முறை நடந்திருக்கிறது). போதுமான அலுவலர்களும் இருக்க வேண்டும். சரியான காரணமில்லாமல் அலுவலர் யாரும் தாமதமாகவும் வர முடியாது. சரியாக செயல்படாத அதிகாரிகள் மேடையில் ஏற்றப்பட்டு எல்லார் முன்னிலையிலும் துடைப்பம் பரிசாக வாங்கியதும் நடந்திருக்கிறது.//

    அதுதான் உண்மையான ஜனநாயக நாடு..

    //முருகனுக்கு வேறு வேலை இல்லையா தங்களைப் போன்றவர்களை தேடிப்பிடித்து சோதிக்க. எல்லாம் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன்தான். தீதும் நன்றும் பிறர் தர அல்ல முருகன் தர வாரா.//

    என்னைப் பொறுத்தவரையில் முருகனுக்கு என்னை சோதிப்பதைத் தவிர வேறு வேலையில்லை என்றே நினைக்கிறேன்..

    ReplyDelete
  41. ///Dr.Sintok said...

    //எங்கள் நாட்டில் மக்களுக்கு தேவை என்றால் அரசு அலுவலகம் நள்ளிரவு வரை கூட திறந்திருக்க வேண்டும் (இது பல முறை நடந்திருக்கிறது).

    nengga entha urel erukika....?///

    மலேசியாவாம் ஸார்..

    ReplyDelete
  42. //அனுஜன்யா said...

    அயர்ச்சி, ஆதங்கம், நெகிழ்ச்சி, எரிச்சல், கோபம், சரணாகதி என்று எல்லாம் கலந்து கட்டி அக்மார்க் உ.த. அண்ணாச்சி பதிவு.

    அனுஜன்யா//

    கவிதைத்தனமான உங்களது பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் கவிஞரே..!

    ReplyDelete
  43. ///ananth said...

    //nengga entha urel erukika....?//

    கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு. என்னைப் பற்றி எனது profile பார்த்தலே தெரியுமே. அதில் சொல்லப்பட்டவை யாவும் உண்மைத் தகவல்கள்தாம்.///

    அவர் பார்க்காமல் சொல்லிவிட்டார் ஆனந்த் ஸார்..

    கோபிக்க வேண்டாம்..

    ReplyDelete