Pages

Sunday, April 19, 2009

ஈழப் போராட்டம் - ராஜபக்சே அரசுக்கும், இந்திய, தமிழக அரசுகளுக்கும் வித்தியாசமில்லை..!

19-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை போர்ப்படையினரைக் கண்டித்து உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன.


லண்டனில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்பாக சுப்ரமணியன் என்பவர் உள்ளிட்ட சில தமிழ் இளைஞர்கள் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.


இங்கிலாந்து தேசத்திலேயே இதுவரையில்லாத அளவுக்கான பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்தியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.


ஜெர்மனியில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் முன்பாக கடந்த செவ்வாய்கிழமை முதல் 14 தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இன்றோடு சேர்த்து 5 நாட்களாகிறது.. மணி தெரசா சூபைப்பிள்ளை(68), சதீசுவன்(49), கோபாலகிருட்டினன்(57), புவனேசுவரன்(27), குகதாசுதேவன்(27), சீத்தாராம்(29), சுதர்சன் சிவாநந்தன்(28), செயந்தி சூரியகுமார்(44), இரஞ்சனி செல்வமாணிக்கம்(48), செயந்தி கீதப்பொன்கலன்(43), சரோசினி தேவி தங்கரத்தினம்(57), கங்கா சுப்பிரமணியம்(37), அலெக்சு ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிருட்டின அம்பலவாணன் என்பவர் கடந்த 13-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அங்கும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இவருடைய போராட்டத்தின் பலனாக சுவிஸ் அரசு ஈழப் பிரச்சினை தொடர்பாக கலந்து பேச இவரை அழைத்திருக்கிறதாம்.


மேலும் ஜெனீவா நகரில் தினந்தோறும் மிகப் பெரும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.


ஜூரிச் நகரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் கார் பேரணியும் நடத்தி வருகிறார்கள் தமிழ இளைஞர்கள்.


தென்னாப்பிரிக்காவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கைக்கான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கா.வேழவேந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று 10-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

நெதர்லாந்தில் உள்ள டென்காக் என்னும் ஊரில் 7-வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கிறார்கள் பிரேமினி ஜெஸ்லின், கஸ்தூரி ரவீந்திரன் என்கிற ஈழத்துப் பெண்கள். தொடர் ஊர்வலங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.


இத்தாலி பலெர்லாமில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கனடாவில் டொராண்டா நகரில் ஈழத் தமிழர்கள் பெரும் திரளாக ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் போர் நிறுத்தம்கோரி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஜூரம் பிடித்து அரசியல் கட்சியினர் அலைவதால் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிகளும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பலரின் காதில் விழாமல் இருக்கிறது. அல்லது காதில் வாங்கவே மாட்டேன் என்கிறார்கள்.

தமிழ்ப் பெண்கள் கூட்டமைப்பு என்கின்ற இயக்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் நடத்தப் போகிறோம் என்று காவல்துறையினரிடம் அனுமதி கேட்டபோது கிடைக்கவேயில்லை. எப்படி கொடுப்பார்கள்..? வேறு வழியில்லாத பெண்கள் கூட்டமைப்பினர் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அதே கொளத்தூர் பிரதான வீதியில் அதே இடத்தில் உட்கார்ந்து உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். ஓடி வந்த காவல்துறையினர் இன்னிக்கு ஒரு நாள்தான்.. சாயந்தரம் போயிரணும்.. இல்லைன்னா அரெஸ்ட்தான்.. என்று அன்பாகவே மிரட்டினார்கள்.

மறுநாள் கொளத்தூர் வியாபாரிகள் சங்கத்தில் உண்ணாவிரதத்தைத் துவக்கியிருக்கிறார்கள் பெண்கள் கூட்டமைப்பினர். இப்போதும் காவல்துறையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது. அனைத்துப் பெண்களுமே சிறைக்குள் சென்றுவிட்டால் தமிழகத்தில் தாங்கள் செய்ய நினைத்த கவன ஈர்ப்பு முடியாமல் போகும் என்று நினைத்த அந்தப் பெண்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அடைக்கலம் கொடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தின் வாசலில் அமர்ந்த பெண்களில் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து போராடி வருகிறார்கள்.

இவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. மிகக் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டி உடனேயே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இந்திய அரசு இலங்கையை கட்டாயப்படுத்தி போர் நிறுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்பதுதான். யார் காதில் விழுகிறது..?


சோனியா அம்மாவுக்கு ஊர்ப்பட்ட கவலை.. 90 சீட்டு வருமா.. 120 சீட்டு வருமா..? பிரிஞ்சு போனவங்க திரும்பி வந்து நம்மளை காப்பாத்துவாங்களா..? என்ற கவலையில் இருக்கிறார். இந்தியாவின் பிரதமர் என்று சொல்லப்படும் திருவாளர் மன்மோகன்சிங்கோ தனது எஜமானி சோனியாம்மா எதற்கும் மனம் வருத்தப்பட்டுவிடக் கூடாது என்கிற ஒரு அம்சத் திட்டத்தோடு இந்த ஐந்தாண்டு காலமும் உழைத்தவர், அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் இதே போல் உழைக்கக் காத்திருப்பதால் வாய்மூடி மெளனியாக இருக்கிறார்.


தமிழகத்திலோ எத்தனையோ வருடங்களாக இலங்கை பிரச்சினையை ஊறுகாய் போல தேர்தலுக்குத் தேர்தல் பயன்படுத்திக் கொண்ட அனுபவம் இருப்பதினால் கலைஞர் இப்போதும் அதன்படியே பயன்படுத்தி வருகிறார்.

தி.மு.க.வைத் தவிர வேறு யாரும் இலங்கை பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதனால்தான் நேற்றைய தேர்தல் பிரச்சார அறிமுகப் பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் மூலமாகத் தன்னைவிட்டால் தமிழர்களுக்கு நாதி இல்லை என்று மறுபடியும் சொல்லச் சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார். இன்னும் எத்தனை தடவைதான் இப்படி தன்னையே புகழ்ந்து கொள்வாரோ தெரியவில்லை..? இனிமேல் தமிழக வரலாற்றில் 'தற்பெருமை மன்னன்' என்று இவரை மட்டுமே அழைக்க வேண்டும்.

இவருக்குத்தான் உதவி செய்ய மனமில்லையென்றாலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு உதவியாவது செய்யலாமே..

பிரச்சினையைத் திசை திருப்புவதற்கு ஆளும் கட்சியினர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தமிழக வாக்காளர் பெருமக்களைக் கேட்டால் தெளிவாகச் சொல்வார்கள். இப்போது சென்னையில் இருந்து புலிகளுக்கு ஆயுதம் கடத்த முற்பட்டதாக முகுந்தன், குகன், பாபு ஆகிய இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்களைக் கைது செய்த இடம் திருவான்மியூர் பேருந்து நிலையம் என்றவுடனேயே லோக்கல் பத்திரிகையாளர்களுக்கு இந்த கைது நடிக்க வைக்கப்பட்ட நாடகம் என்பது புரிந்துவிட்டது.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த இலங்கை விசுவமடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்கிற முத்தண்ணா(39)வை புலி என்கிற சந்தேகத்தில் காவல்துறை கைது செய்திருக்கிறதாம். இதனை வைத்து ஒரு நாள் சீன் ஓட்டியாகிவிட்டது.

இனிமேல் பாருங்கள்.. தொடர்ந்து யாராவது ஒரு ஈழத்து இளைஞர் புலி என்ற முத்திரையின்கீழ் தினமும் கைது செய்யப்பட்டு காராகிரஹத்தில் அடைக்கப்படுவார். புலி பயம் தமிழகத்து மக்களிடம் வலிந்து திணிக்கப்பட்டு தமிழ் ஈழத்து மக்களின் கதறல் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் ஒளியும், ஒலியில் சமாதியாக்கப்படும்.


ஈழத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக நண்பன் முத்துக்குமார் முதல் நபராக தனது உயிரைக் கொடுக்க, இதோ நேற்று கரூரைச் சேர்ந்த சிவானந்தம் என்கிற பெயிண்டராக வேலை செய்யும் ஒரு தமிழர், சென்னை வடபழனியில் தீக்குளித்து மாண்டுள்ளார்.

இவரோடு சேர்த்து இதுரையிலும் ஈழத்துப் பிரச்சினைக்காக தமிழகத்தில் தீக்குளித்தவர்களின் எண்ணி்க்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அரசு எங்கே கண்டு கொண்டது..? எத்தனை பேர் செத்தால் என்ன..? உயிரோடு இருப்பவர்களையே இறந்தவர்கள் லிஸ்ட்டில் வைத்திருக்கும், இந்த அரசுகள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன..?


கடந்த 3 மாத காலத்திலேயே 4800 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வே அறிவித்துள்ளது. கடந்த 1 வருடத்தில் மட்டும் 77 ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த இறப்பு புள்ளி விவரங்களினால்தான் இத்தனை தமிழர்கள் ஈழத்தில் வாழ்ந்து வருவது இந்திய அரசியல்வாதிகளுக்கு தெரிய வந்திருக்கிறது.

இன்றைய புள்ளிவிவரக் கணக்குப்படி புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டு வீசியதில் 169 தமிழர்கள் கொலை.. நேற்று 178 தமிழர்கள் கொலை.. இன்னும் ஒரே மாதத்தில் அங்கே தமிழர்கள் என்றொரு இனம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது என்கிற வார்த்தையை உண்மையாக்கப் போகிறது ராஜபக்சே அரசு.

வெறுமனே புலி எதிர்ப்பு என்கிற போர்வையில் ராஜபக்சே அரசு செய்து வரும் இந்த திட்டமிட்ட இன அழிப்பை தடுக்கும் சக்தி கொண்ட நாடுகளும் பல்வேறு காரணங்களினால் தப்பித்து வருகின்றன.

தமிழ் ஈழத்துப் பகுதி மக்களை அரசியல்தான் வஞ்சித்தது என்றால் இயற்கையும் வஞ்சித்துவிட்டது.. ஆப்பிரிக்க தேசங்களைப் போல எந்தவொரு இயற்கை கனிமவளமும் ஈழத்தில் இல்லை.. வல்லரசு நாடுகளுக்குத் தேவையான எந்தவொரு தேவைகளும் ஈழத்தில் இல்லாது போனது நமது துரதிருஷ்டமே.

இஸ்ரேலியர்களைப் போன்று வல்லரசு நாடுகளுக்கு உதவிடும் அளவுக்கு எமது தமிழர்களுக்கு அறிவும், வாழ்க்கைத் தரமும் இல்லை. சொந்த அரசும், தார்மீக உரிமையுள்ள அரசும் புறக்கணித்து வரும் வேளையில், உலக நாடுகளும் நம்மை புறக்கணித்து வருவது நமது துரதிருஷ்டம்தான்..

வருகின்ற புதன்கிழமை ஐ.நா.வில் வன்னியில் சிக்கியிருக்கும் மக்கள் பற்றி பேசப் போகிறார்களாம். பேசட்டும்.. ஏதாவது ஒரு தீர்வாவாவது கண்டு அந்த அப்பாவி மக்கள் உயிரோடு வந்திட மாட்டார்களா என்ற நப்பாசை அனைத்து தமிழர்களுக்கும் இருப்பதைப் போல் எனக்கும் உண்டு.

நேற்றைய தினம் வரையிலும் இந்திய அரசு எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வருத்தப்படுவதாக ஏதோ எழவு வீட்டுக்கு வந்து போவதைப் போல் பேசுகிறது.. அதிலும் பிரணாப்முகர்ஜி அளித்திருக்கும் பேட்டியில் “இடையில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை..” என்று சொல்லியிருப்பது எப்பேர்ப்பட்ட துரோகச் செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பக்கத்து நாட்டில் மனிதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். நம்முடைய இனத்தவர்கள்.. சக மனிதர்கள் என்றெல்லாம் இரக்கம் காட்டாமல் “நடுவுல போக மாட்டோம்.. பேச மாட்டோம்.. செத்தா அஞ்சலி மட்டும் தெரிவிப்போம்..” என்று சொல்வது இந்திய அரசுக்கு காங்கிரஸ் அரசால் கிடைக்கின்ற மிகப் பெரிய அவமானம்.

வருகின்ற 20-ம் தேதி சோனியா சென்னை வருவதையொட்டி இதுவரையிலும் மேல் நடவடிக்கை ஏதும் இல்லையே என்கிற ஆதங்கத்தில் சென்னை உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்களில் சுமார் 100 பேர் எழும்பூரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் நடத்தியவர்களை அவசரம், அவசரமாக கைது செய்து அப்புறப்படுத்துவதில்தான் இந்த அரசு மும்முரமாக இருந்ததே தவிர, இது பற்றிய ஒரு செய்தியைக்கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. காவல்துறையினர் முரட்டுத்தனமாக பெண்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்தபோது இந்த அரசின் ஈழ அணுகுமுறையின் கோரம் தெளிவாகவே புரிகிறது. கண் பார்வையில்லாத இளைஞர்களைக்கூட கொத்தாகத் தூக்கி வண்டிக்குள் வீசியது காவல்துறை. இங்கே யாருக்குக் கண்ணில்லை என்பது கேள்விக்குரிய விஷயம்.?

ராயப்பேட்டையில் இருக்கும் காங்கிரஸின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடச் சென்ற பெண்கள் அமைப்பினரை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் போலீஸார் அராஜகமாக கூட்டத்தைக் கலைத்து இழுத்துச் சென்றார்கள்.

தொப்புள்கொடி உறவுள்ள தமிழகத்தில் இந்த கொடூர நிலைமை. சொந்தங்களின் சாவுக்கு வாய் விட்டு அழுக முடியாத நிலைமை.

இப்போது ஈழப் பிரச்சினையில் அமைதி திரும்ப போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சோனியாவை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகம் சார்பில் தொடர் முழுக்கப் போராட்டம் நடத்தப் போவதாக இப்போது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

தாயகத்தில் மயங்கிக் கிடக்கும் பெண்கள் கூட்டத்தினரை தனது சக இயக்குநர்களோடு நேரில் சென்று பார்த்து அவர்களது உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். முதலில் 21-ம் தேதியே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவி்த்திருந்தார்.

ஆனாலும் திங்கள்கிழமை ஒரு வேளை புதுச்சேரி சிறையிலிருந்து இயக்குநர் சீமான் விடுதலையாகவில்லை என்றால் போராட்டத்திற்கு வலு கிடைக்காது என்பதால் இரண்டு நாட்கள் தள்ளி துவக்குவதாகச் சொல்லியிருக்கிறார். சீமானி்ன் வருகைக்காக இவர்களின் அடுத்தக் கட்டப் போராட்டம் காத்திருக்கிறது. இந்த அளவுக்காவாவது முன் வருகிறார்களே அதுவே மிகப் பெரிய விஷயம்..


அக்கம் பக்கம் நாடுகளில் போராட்டம் நடத்த இடம் கொடுத்து, அந்தப் போராட்டத்தின் பயனாக சம்பந்தப்பட்ட நாடுகளே செவிசாய்த்து நாங்கள் இலங்கை அரசிடம் பேசுகிறோம்.. பேசுவோம்.. நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கனவுடன், பாசத்துடன், நேசத்துடன், பரிவுடன் பேசி வரும் சூழலில் தாய்த்தமிழகத்தில் அடக்குமுறை, அராஜகம், பாஸிசம் என மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் இவர்களுக்கும் ராஜபக்சே அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ராஜபக்சே சொல்லிவிட்டுச் செய்கிறார். இவர்கள் சொல்லாமல் செய்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.

41 comments:

  1. காங்கிரசு நாய்கலை ஓட ஓட செறுப்பால் அடித்து விரட்டுவோம்!
    தமிழன் என்று சொல்லடா...
    தலை நிமிர்ந்து நில்லடா!

    ReplyDelete
  2. உலகத்தமிழர்களின் உள்ளக்குமுறல்களை வலிகளோடு பதிவு செஞ்சிருக்கீங்க. ஈழப்பிரச்சினை தேர்தலில் எடுபடாது என நினைத்த கலைஞர், காங்கிரசின் நினைப்பை தவிடு பொடியாக்க அம்மா நேத்துல இருந்து பிரச்சாரத்துல இந்த பிரச்சினை பற்றி பேசுறாஙக்......என் கட பக்கம் வரவும் பக்கம் வரவும்

    ReplyDelete
  3. புலம்பெயர்ந்த தமிழர்கள் கருணாநரியிடமும் கனிமோடியிடமும் ஜெயவெடிகுண்டிடமும் நொங்கபாழுவிடமும் சோத்தியாவிடமும் கெஞ்சவில்லை. உங்களைப் போல, ஈழத்தமிழரை ஆதரிக்கிரேன் புலிகளைக் கடிக்கிறேன் கண்டிசன் கேசுங்ககிட்டவும் காப்பாத்துன்னு கேக்கலையே. இனி எத வெச்சு பொழைக்கப்போறீங்க சென்னை பார்பன சாமிங்களா? அவுங்க உன்மைத்தமிழ்அடியாளுங்களா?

    ReplyDelete
  4. அருமையான பதிவு தமிழ்ர்களிடம் எழுச்சி வேண்டும் சோம்பேறிகளா இருந்து அழிந்து போகும் இணம்

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete
  6. ///வெறுமனே புலி எதிர்ப்பு என்கிற போர்வையில் ராஜபக்சே அரசு செய்து வரும் இந்த திட்டமிட்ட இன அழிப்பை தடுக்கும் சக்தி கொண்ட நாடுகளும் பல்வேறு காரணங்களினால் தப்பித்து வருகின்றன. ///

    இலங்கை விசயத்தில் இந்திய ஆளுமையை தடுக்க மற்ற நாடுகள் விரும்பவில்லை. இந்த துணை கண்டத்தில் நீ தான் வல்லரசு என்ற ரொட்டி துண்டு இவர்கள் முன் நீட்டப்படுகிறது,
    அவர்களுக்கு சொல்லப்படுவது இதுதான். "வாலை ஆட்டி கொண்டு இரு! நாளை நாங்கள் உலகையும் உன் வீட்டையும் கொள்ளை அடிக்கும் போது விசுவாசமாக என் காலை நக்கி விடவேண்டும்"

    ReplyDelete
  7. அண்ணே....உங்க கைய கொடுங்க...

    எனது ஆதரவு உங்களுக்கும் மற்றும் உணர்வுடன் போராடும் மக்களுக்கும் என்றும் உண்டு உண்டு உண்டு.

    ReplyDelete
  8. ஒரு தலைபட்சமான கட்டுரை உங்களுடையது.

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/8001338.stm

    ReplyDelete
  9. //
    அக்கம் பக்கம் நாடுகளில் போராட்டம் நடத்த இடம் கொடுத்து, அந்தப் போராட்டத்தின் பயனாக சம்பந்தப்பட்ட நாடுகளே செவிசாய்த்து நாங்கள் இலங்கை அரசிடம் பேசுகிறோம்.. பேசுவோம்.. நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கனவுடன், பாசத்துடன், நேசத்துடன், பரிவுடன் பேசி வரும் சூழலில் தாய்த்தமிழகத்தில் அடக்குமுறை, அராஜகம், பாஸிசம் என மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் இவர்களுக்கும் ராஜபக்சே அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
    //

    இது உண்மை...

    ராஜ பக்சே மனித குல எதிரி... இந்தியாவின் அரசியல்வியாதிகள் மனித குல துரோகிகள்...

    எதிரிகளுக்கும், முதுகில் குத்திய துரோகிகளுக்கும், இதை வைத்து ஓட்டு வியாபாரம் செய்யும் அரசியல் விபச்சாரிகளுக்கும் எதிர்காலம் தீர்ப்பு சொல்லும்!

    ReplyDelete
  10. //ttpian said...
    காங்கிரசு நாய்கலை ஓட ஓட செறுப்பால் அடித்து விரட்டுவோம்!
    தமிழன் என்று சொல்லடா...
    தலை நிமிர்ந்து நில்லடா!//

    எதற்கு செருப்பு, நாய்கள் என்றெல்லாம்..

    மக்கள் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பார்கள் என்றே நான் உறுதியுடன் நம்புகிறேன்..

    ReplyDelete
  11. //அத்திரி said...
    உலகத் தமிழர்களின் உள்ளக் குமுறல்களை வலிகளோடு பதிவு செஞ்சிருக்கீங்க. ஈழப்பிரச்சினை தேர்தலில் எடுபடாது என நினைத்த கலைஞர், காங்கிரசின் நினைப்பை தவிடு பொடியாக்க அம்மா நேத்துல இருந்து பிரச்சாரத்துல இந்த பிரச்சினை பற்றி பேசுறாஙக்...... என் கட பக்கம் வரவும் பக்கம் வரவும்.//

    பேசட்டும்.. இப்பவாவது புத்தி வந்துச்சேன்னு சந்தோஷப்படு தம்பி..

    ReplyDelete
  12. //வில்லங்கம் விக்னேஷ் said...
    புலம் பெயர்ந்த தமிழர்கள் கருணாநரியிடமும் கனிமோடியிடமும் ஜெயவெடிகுண்டிடமும் நொங்கபாழுவிடமும் சோத்தியாவிடமும் கெஞ்சவில்லை.

    உங்களைப் போல, ஈழத்தமிழரை ஆதரிக்கிரேன் புலிகளைக் கடிக்கிறேன் கண்டிசன் கேசுங்ககிட்டவும் காப்பாத்துன்னு கேக்கலையே. இனி எத வெச்சு பொழைக்கப் போறீங்க சென்னை பார்பன சாமிங்களா? அவுங்க உன்மைத் தமிழ்அடியாளுங்களா?//

    புலி எதிர்ப்பு என்ற ஒன்றை வைத்துத்தான் இந்தியாவை மயக்கி வைத்திருக்கிறார் ராஜபக்சே.

    அதையே முன் வைத்து பல ஆதரவுகளை நீங்கள் இழக்க வேண்டும் வில்லங்கம்..

    எமக்கு ஈழத்து மக்கள் மீதிருக்கும் அன்பும், பாசமும் அளவில்லாதது.. நாங்கள் என்றென்றைக்கும் இதைத்தான் பேசுவோம்.. செய்வோம்..

    ReplyDelete
  13. //Suresh said...
    அருமையான பதிவு தமிழ்ர்களிடம் எழுச்சி வேண்டும் சோம்பேறிகளா இருந்து அழிந்து போகும் இணம்.//

    சோம்பேறிகள் என்றில்லை சுரேஷ்.. சுயநலம்..

    தான், தன் குடும்பம், தன் கட்சி, தன் சுற்றத்தார் நன்றாக இருந்தாலே போதும் என்று நினைக்கின்ற எண்ணம்தான் மக்களிடமிருந்து எமது அரசியல்வியாதிகளை அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது..

    ReplyDelete
  14. //வண்ணத்துபூச்சியார் said...
    அருமையான பதிவு.//

    நன்றி பூச்சியாரே..!

    ReplyDelete
  15. ///தீப்பெட்டி said...

    ///வெறுமனே புலி எதிர்ப்பு என்கிற போர்வையில் ராஜபக்சே அரசு செய்து வரும் இந்த திட்டமிட்ட இன அழிப்பை தடுக்கும் சக்தி கொண்ட நாடுகளும் பல்வேறு காரணங்களினால் தப்பித்து வருகின்றன. ///

    இலங்கை விசயத்தில் இந்திய ஆளுமையை தடுக்க மற்ற நாடுகள் விரும்பவில்லை. இந்த துணை கண்டத்தில் நீதான் வல்லரசு என்ற ரொட்டி துண்டு இவர்கள் முன் நீட்டப்படுகிறது,

    அவர்களுக்கு சொல்லப்படுவது இதுதான். "வாலை ஆட்டி கொண்டு இரு! நாளை நாங்கள் உலகையும் உன் வீட்டையும் கொள்ளை அடிக்கும் போது விசுவாசமாக என் காலை நக்கிவிட வேண்டும்"///

    அதேதான்.. சீனாவுக்கு திபெத்.. அமெரிக்காவுக்கு இஸ்ரேல்.. ரஷ்யாவுக்கு அதன் முன்னாள் உறுப்பு நாடுகள்.. இந்தியாவுக்கு தமிழகம்.. பாகிஸ்தானுக்கு இந்தியா.. இஸ்ரேலுக்கு இந்தியாவின் பாலஸ்தீன ஆதரவு..

    இப்படி பல்வேறு காரணங்களினால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர் இலங்கை மக்கள்..

    ReplyDelete
  16. //நையாண்டி நைனா said...
    அண்ணே....உங்க கைய கொடுங்க.
    எனது ஆதரவு உங்களுக்கும் மற்றும் உணர்வுடன் போராடும் மக்களுக்கும் என்றும் உண்டு உண்டு உண்டு.///

    நைனா கையைக் கொடுத்திட்டேன்.. பிடிச்சிட்டீங்கள்லே.. விட்ராதீங்க..

    ReplyDelete
  17. ///Chandran said...
    ஒரு தலைபட்சமான கட்டுரை உங்களுடையது.
    http://news.bbc.co.uk/2/hi/south_asia/8001338.stm///

    எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்..?

    ReplyDelete
  18. ///அது சரி said...

    //அக்கம் பக்கம் நாடுகளில் போராட்டம் நடத்த இடம் கொடுத்து, அந்தப் போராட்டத்தின் பயனாக சம்பந்தப்பட்ட நாடுகளே செவிசாய்த்து நாங்கள் இலங்கை அரசிடம் பேசுகிறோம்.. பேசுவோம்.. நீங்கள் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்றெல்லாம் கனவுடன், பாசத்துடன், நேசத்துடன், பரிவுடன் பேசி வரும் சூழலில் தாய்த்தமிழகத்தில் அடக்குமுறை, அராஜகம், பாஸிசம் என மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் இவர்களுக்கும் ராஜபக்சே அரசுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.//

    இது உண்மை... ராஜபக்சே மனித குல எதிரி... இந்தியாவின் அரசியல் வியாதிகள் மனித குல துரோகிகள்... எதிரிகளுக்கும், முதுகில் குத்திய துரோகிகளுக்கும், இதை வைத்து ஓட்டு வியாபாரம் செய்யும் அரசியல் விபச்சாரிகளுக்கும் எதிர்காலம் தீர்ப்பு சொல்லும்!///

    அது சரியின் சரியான வார்த்தைகள்..!

    இது சரிதான்..

    ReplyDelete
  19. Dear Truetamilan
    It is very good article M.K is selfist.
    He Never do any thing
    for Tamil Elam and Tamil Nadu also.
    Thanks
    V.Ramachandran

    ReplyDelete
  20. http://dbsjeyaraj.com/dbsj/archives/343

    please read this.this article puts light on more on safe zone and plight of innocent peoples.

    your article is targeting only on srilankan government at the same side tigers are also equally responsible

    ReplyDelete
  21. அழுத்தமான பதிவு உண்மைத் தமிழன். எக்காரணம் கொண்டும், ஈழத் தமிழர் பிரச்சனை முடி வு செய்ய்ம் காரணியாக மாறிவிடக்கூடாது என்பதில் கலைஞர் உறுதியோடு இருக்கிறார். இதற்காக எந்த நிலைக்கும் தரம் தாழ தயாராக இருக்கிறார்!!!

    நரேஷ்
    www.nareshin.wordpress.com

    ReplyDelete
  22. //
    இஸ்ரேலியர்களைப் போன்று வல்லரசு நாடுகளுக்கு உதவிடும் அளவுக்கு எமது தமிழர்களுக்கு அறிவும்,//

    தலீவா உங்களுக்கு என்ன ஆச்சு? இஸ்ரேலியர்கள் போன்று தமிழர்களுக்கு அறிவு இல்லை என்று சொல்றீங்க.. நமக்கு இருக்கற அறிவு உலகத்துல யாருக்கு இல்லண்ணே..
    யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு பாடினவங்கண்ணே.. நா மட்டும் நல்லாயிருந்தா போதும்னு நினைக்காம எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கற கூட்டம்.. ஒற்றுமைதான் இல்லய தவிர அறிவு ரொம்பவே இருக்கு..
    வசதிகள் வச்சிக்கிட்டு செழிப்பா இருக்கறவங்கள விட எந்தவொரு வசதியும், உதவியும் இல்லாம வாழ்கை தரத்தை கொஞ்சம் கொஞ்சமா உயர்திக்கிட்டு வர்ற தமிழர் கூட்டத்த லேச எட போட்டுடாதீங்க..
    //


    தமிழ் ஈழத்துப் பகுதி மக்களை அரசியல்தான் வஞ்சித்தது என்றால் இயற்கையும் வஞ்சித்துவிட்டது.. ஆப்பிரிக்க தேசங்களைப் போல எந்தவொரு இயற்கை கனிமவளமும் ஈழத்தில் இல்லை.. வல்லரசு நாடுகளுக்குத் தேவையான எந்தவொரு தேவைகளும் ஈழத்தில் இல்லாது போனது நமது துரதிருஷ்டமே.

    வாழ்க்கைத் தரமும் இல்லை. சொந்த அரசும், தார்மீக உரிமையுள்ள அரசும் புறக்கணித்து வரும் வேளையில், உலக நாடுகளும் நம்மை புறக்கணித்து வருவது நமது துரதிருஷ்டம்தான்.//

    இத சொன்னீங்களே இது நியாயமான வார்த்தைகள்.
    தமிழன் கிட்ட வேகம் இருக்கு.. கொஞ்சம் விவேகமும் வேணும். இப்ப குரல் கொடுக்கும் வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இவ்வளவு நாள் ஏன் உலக நாடுகளின் கவனத்தை கவர வில்லை.?
    சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்பது போல பல உயிர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது ... தான் அவர்கள் வேக வேகமாக செயல் படுகிறார்கள்...
    மன்னிக்கணும் அவர்கள் போராட்டத்தை நான் குறை கூறவில்லை. அவர்களின் உணர்வுக்கு தலைவணங்குகிறேன்.

    இன்று நம் தமிழக முதல்வரின் தேர்தல் காய்ச்சலின் காரணமாக சில உளரல்களை கேட்க நேரிடுகிறது..
    இதை என்னவென்று சொல்ல?

    புலிகள் தற்காப்புக்காக ஆயுதம் எடுத்தார்கள்.. ஆனால் அதை வைத்தே போரட்டத்தை தொடர்ந்தது தப்புதான்.

    1983 முதல் இலங்கையில் எத்தனை உயிர்கள் மாண்டுள்ளன?
    தமிழர்கள், சிங்களர்கள் என்று இனம் பிரிக்காமல் மனித உயிர்கள் என்று பாருங்கள்.
    ஒரு கண்ணத்தில் அடித்தால் இன்னொன்னையும் காட்டுன்னு சொல்ல.. அடி வாங்கிட்டு திருப்பி அடிக்கும் போது அவர்களுக்கு வலிக்க வேண்டுமே ஒழிய நமக்கல்ல.. மறுபடி மறுபடியும் அடிச்சுகிட்டே இருக்கறதுனால ஒன்னும் ஆகப்போறது இல்ல.

    ReplyDelete
  23. இந்திய அரசியல் சாராயத்திற்கு இலங்கை பிரச்சனை ஊறுகாய்.
    'எவ்வளவு ஆயிரம் பேர் செத்தால் என்ன அதை வைத்து நாலு சீட்டு ஜெயிச்சு அஞ்சு வருஷம் ஆண்டு நாட்ட ஆட்டை போட்டா போதும்.'
    - இதுதான் இன்றைய இந்திய அரசியல்வாதிகள் பலரின் நிலைப்பாடு

    ReplyDelete
  24. //V.RAMACHANDRAN said...

    Dear Truetamilan
    It is very good article M.K is selfist.
    He Never do any thing
    for Tamil Elam and Tamil Nadu also.
    Thanks
    V.Ramachandran//

    அவருடைய சுயநலமே தமிழ்நாட்டின் இன்றைய லஞ்ச லாவண்ய, குடி போதையில் திளைக்கும் நிலைமைக்குக் காரணம்..

    ReplyDelete
  25. ///Arun Kumar said...

    http://dbsjeyaraj.com/dbsj/archives/343

    please read this. this article puts light on more on safe zone and plight of innocent peoples. your article is targeting only on srilankan government at the same side tigers are also equally responsible.//

    புலிகளுக்கும் இதில் தார்மீகக் கடமை உண்டு. அதுதான் அவர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொள்கிறார்களே.. பிறகென்ன..?

    நமக்கு வேண்டியது புலிகள் அல்ல.. தனி ஈழம்..

    ReplyDelete
  26. ///Naresh Kumar said...

    அழுத்தமான பதிவு உண்மைத்தமிழன். எக்காரணம் கொண்டும், ஈழத் தமிழர் பிரச்சனை முடிவு செய்ய்ம் காரணியாக மாறிவிடக்கூடாது என்பதில் கலைஞர் உறுதியோடு இருக்கிறார். இதற்காக எந்த நிலைக்கும் தரம் தாழ தயாராக இருக்கிறார்!!!
    நரேஷ்///

    அதுதான் அவரது சாணக்கியத்தனம் என்னும் சாக்கடைத்தனம்..

    இதை வைத்துத்தான் இத்தனை நாட்கள் தமிழ்நாட்டில் குப்பை கொட்டியிருக்கிறார் இவர்..

    ReplyDelete
  27. கொடும்பாவி ஸார்..

    நான் சொன்னது ஒரு நாட்டையே தனது இனத்தவரை அண்டி நிற்கச் செய்யும் சாமர்த்திய அறிவு நமக்கில்லை என்றுதான்..!

    ReplyDelete
  28. ///வாழவந்தான் said...

    இந்திய அரசியல் சாராயத்திற்கு இலங்கை பிரச்சனை ஊறுகாய்.
    'எவ்வளவு ஆயிரம் பேர் செத்தால் என்ன அதை வைத்து நாலு சீட்டு ஜெயிச்சு அஞ்சு வருஷம் ஆண்டு நாட்ட ஆட்டை போட்டா போதும்.'
    - இதுதான் இன்றைய இந்திய அரசியல்வாதிகள் பலரின் நிலைப்பாடு///

    வாழவந்தான் உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை..!

    ReplyDelete
  29. மனம் மிகவும் வேதனையில் இருக்கிறது.இன்று கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் வன்னியில் மூன்று மணி நேரத்தில் கொல்லப்பட்டதாக அறிந்தேன்.அத்துடன் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் தமிழர்களை கேடயமாகப் பாவித்து அவர்களை வெடிகுண்டு புதைத்த மண்ணுக்கூடாக நடக்கவிட்டதால் பலர் மிகவும் கோரமாகக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
    இந்த விஷயங்கள் எல்லாம் இந்திய மக்களிடமிருந்து மறைக்கபடுகின்றன.
    குறிப்பாக இந்தியாவின் ஜனரஞ்சக ஊடகங்கள் இந்த செய்திகளை புறக்கணிப்பதால் உண்மை நிலைமை பல இந்திய மக்களுக்கு தெரியாமலே இருக்கிறது.
    இந்த நேரத்தில் தமிழக அரசும் ,ஆளும் வர்க்கமும் சும்மா புலிப் பூச்சாண்டி காட்டி ஈழவிவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள்
    மேலும் உங்கள் இடுகையில் சில சிறு தவறுகள்.
    தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதம் செய்தவர் வேழவேந்தன் இல்லை ,அவர் பெயர் ஈழவேந்தன்
    ஈழத்தில் கனி வளங்கள் இல்லை என்பதும் தவறு ,புல்மோட்டை என்ற இடத்தில் அபரிமிதமான கனிமம் -titanium ore உள்ளது.அதில் பல உலக நாடுகளுக்கு ஒரு கண்.
    மன்னார் குடாவில் பெட்ரோல் உள்ளதாக கண்டு பிடித்துள்ளார்கள்.
    உலகின் மிகச் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை உள்ளது தமிழரின் தாயகத்தில்தான்.
    யூதர்களுக்கு தமிழர்கள் அறிவில் சளைத்தவர்கள் அல்ல ,ஆனால் இன்றைய உலக ஒழுங்கில் தமிழர் தமது வலிமையைக் காட்டக் கூடிய சந்தர்பங்கள் குறைவு
    அவர்களுக்கு என்று நாடும் உலக அரங்கில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பமும் இருந்தால் நிலைமை வேறாக இருக்கக் கூடும்
    லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன் 'வன்னியில் ஒரு சிறிய உலகப் போரே நடக்கிறது' என்று கூறியிருந்தார். அது உண்மைதான்.
    ஒன்றரைக்கோடி சனத்தொகையுள்ள சிங்கள இனம் எட்டு கோடி சனத்தொகை உள்ள தமிழினத்தை இந்தப் பாடு படுத்துகிறது என்றால் அவர்களுக்கு என்று நாடு என்ற உலகால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரக் கட்டமைப்பு இருப்பது முக்கிய காரணம்.
    -வானதி

    ReplyDelete
  30. Idhai patri ezhuthi namadhu aadangathai kotalamae thavira, veru edhum seiya iyaladha nilaiku thala pattuvitom.. Kalam satchiya ka nirka nadagam nadakindrathu, koodiya seekiram thirai vilukum...


    Apuram, unga vaathiyar padathuku vimarsanam eluthuveenga nu partha... ezhutha matengrengalae ???

    ReplyDelete
  31. //இதை வைத்துத்தான் இத்தனை நாட்கள் தமிழ்நாட்டில் குப்பை கொட்டியிருக்கிறார் இவர்..//

    தமிழ் நாட்டை குப்பை மேடு ஆக்கியிருக்கிறார்!!

    ஈழம் உருவாகவேண்டும்.. அதற்க்கு முன் அங்கு வாழும் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!!

    ReplyDelete
  32. கட்டுரைக்கு மிக்க நன்றி உண்மைத்தமிழன் அவர்களே! உங்களைப் போன்று பலர் மனங்களை தொடும் வல்லமை உள்ளவர்கள் இந்து போன்ற உண்மைகளை அழுத்தமாக சொல்ல வேண்டியது மிக அவசியம். எப்படி வேண்டுமானாலும் பல்ட்டி அடித்து, நீலிக் கண்ணீர் வடித்து, தன் முகத்தை தினமும் மாற்றி - நம் மக்களை ஏமாற்றும் மு.க குழுவும் தமிழர் விரோத காங்கிரசும் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வில்லை என்றால், ஜனநாயகம் - சாராயத்திற்கும், சினிமா மோகத்திற்கும், தொலைகாட்சி விளம்பரங்களுக்கும் அடிமைப்பட்டு, மீள முடியாத சிறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டது என்பதே பொருள்...

    வானதியின் எழுத்துக்களை படிக்கும்போது, அங்கு நடப்பதாக ஒரு காட்சி மனக்கண் முன் விரிந்தது - நெஞ்சை உலுக்கியது..

    ReplyDelete
  33. மிக ஆழமான மற்றும் அழகான பதிவு. உங்களின் இது போண்ற பணி தொடரவேண்டும் திரு.உண்மைத்தமிழன். ஈழ மக்களின் பிரச்சனையில் அனைத்து மக்களின் உள்ளங்களின் கேள்விகளையும் அரசியல்வாதிகளின் முகத்திரைகளையும் நன்கு எடுத்துரைத்துள்ளீர்கள்.. இந்திய மற்றும் தமிழக மக்கள் இம்முறை தேர்தலில் நல்ல பாடம் புகுத்துவார்கள் என்பது என் எண்னம்.. இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. நாம தான் ரெம்ப “ நல்லவர்கள்” ஆச்சே.. என்ன செய்தாலும் மறப்போம் மண்ணிப்போம்..!! வாழ்க ”தமிழ்” ஜனநாயகம் ..!!

    ReplyDelete
  34. வானதி

    இலங்கையிலும், இந்தியாவிலும் பத்திரிகை செய்திகள் ஒரு அளவுக்குத்தான் நம்பும்படியாக உள்ளது..

    அரசுத் தரப்பின் செல்வாக்கு அந்த அளவுக்கு உள்ளது.. அதோடு கூடவே பணம் சம்பாதிப்பது என்கிற ஒன்றைத் தவிர வேறு எதையுமே இங்கேயிருக்கும் பத்திரிகை முதலாளிகள் கொள்கையாக வைத்திருக்கவில்லை. எனவே அவர்களிடத்தில் பாசத்தையோ, நேசத்தையோ, அன்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது..

    மன்னாரில் எண்ணெய் வளம் பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். திரிகோணமலை துறைமுகம் பற்றியும் அறிவேன். டைட்டானியம் கனம வளத் தாது எனக்குப் புதிய செய்தி. இதில் சீனா மட்டுமே திரிகோணமலை துறைமுகத்தின் மீது ஆர்வம் காட்டுவதைப் போல் தெரிகிறது.

    இதிலிருந்து தெரிவதென்றால் வல்லரசு நாடுகளுக்கு இதன் தேவை இப்போதைக்கு இல்லை என்பதுதான்.

    பெயர் மாற்றத்திற்கு மன்னிக்கவும். இனி கவனமாக இருக்கிறேன்..

    வருகைக்கு நன்றி வானதி..

    ReplyDelete
  35. ///Prabhu said...
    Idhai patri ezhuthi namadhu aadangathai kotalamae thavira, veru edhum seiya iyaladha nilaiku thala pattuvitom.. Kalam satchiya ka nirka nadagam nadakindrathu, koodiya seekiram thirai vilukum...
    Apuram, unga vaathiyar padathuku vimarsanam eluthuveenganu partha... ezhutha matengrengalae???///

    பிரபு.. அதான் படம் பார்க்கக்கூட நேரமில்லாமல் இருக்கிறது.. அதனால்தான்..

    ReplyDelete
  36. ///Bhuvanesh said...

    //இதை வைத்துத்தான் இத்தனை நாட்கள் தமிழ்நாட்டில் குப்பை கொட்டியிருக்கிறார் இவர்..//

    தமிழ்நாட்டை குப்பை மேடு ஆக்கியிருக்கிறார்!!///

    - )))))))))))))

    ///ஈழம் உருவாகவேண்டும்.. அதற்கு முன் அங்கு வாழும் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!!///

    நம் அனைவரின் ஆசையும், கோரிக்கையும் இதுதான் தம்பி..

    ReplyDelete
  37. ///தமிழர் நேசன் said...
    கட்டுரைக்கு மிக்க நன்றி உண்மைத்தமிழன் அவர்களே! உங்களைப் போன்று பலர் மனங்களை தொடும் வல்லமை உள்ளவர்கள் இந்து போன்ற உண்மைகளை அழுத்தமாக சொல்ல வேண்டியது மிக அவசியம். எப்படி வேண்டுமானாலும் பல்ட்டி அடித்து, நீலிக் கண்ணீர் வடித்து, தன் முகத்தை தினமும் மாற்றி - நம் மக்களை ஏமாற்றும் மு.க.குழுவும் தமிழர் விரோத காங்கிரசும் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வவில்லை என்றால், ஜனநாயகம் - சாராயத்திற்கும், சினிமா மோகத்திற்கும், தொலைகாட்சி விளம்பரங்களுக்கும் அடிமைப்பட்டு, மீள முடியாத சிறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டது என்பதே பொருள்...//

    நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை இதுதான்..

    ReplyDelete
  38. ///Rithu`s Dad said...
    ஈழ மக்களின் பிரச்சனையில் அனைத்து மக்களின் உள்ளங்களின் கேள்விகளையும் அரசியல்வாதிகளின் முகத்திரைகளையும் நன்கு எடுத்துரைத்துள்ளீர்கள்.. இந்திய மற்றும் தமிழக மக்கள் இம்முறை தேர்தலில் நல்ல பாடம் புகுத்துவார்கள் என்பது என் எண்னம்.. இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. நாமதான் ரெம்ப “ நல்லவர்கள் ஆச்சே.. என்ன செய்தாலும் மறப்போம் மண்ணிப்போம்..!! வாழ்க ”தமிழ்” ஜனநாயகம் ..!!///

    தேர்தல் முடிவில்தான் தமிழகத்தில் ஈழத்து ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியும்..

    ReplyDelete
  39. ஜோக்கர் பற்றி பா.ராவின் பதிவை பார்தீர்களா..??

    நாளை பந்த் பற்றி பதிவேதும் இல்லையா..??

    ReplyDelete
  40. தயவு செஇது நம் தாயக மக்களுக்காக இங்கே வாக்களிக்கவும்


    link here

    ReplyDelete