Pages

Saturday, April 11, 2009

கார்த்திக்-அனிதா - திரை விமர்சனம்..!

11-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்பதாலும் அழைத்துச் சென்ற முருகன் விரும்பியதாலும்தான் இந்தப் படம் பார்க்க வேண்டியிருந்தது.

ஒரு காலனி. இரண்டு எதிரெதிர் வீடுகள். பல ஆண்டுகளாக மாமன், மச்சானாக பழகிய இரண்டு குடும்பங்கள்.. இதில் ஹீரோ கார்த்திக்குக்கு அம்மா இல்லை. அப்பாதான் எல்லாம். அவர் அரசு ஊழியர். பையனுக்காக தானே சமைத்துவைத்து ஊட்டிவிடாத குறையாக சாப்பிட வைத்து அன்பைப் பொழிகிறார். ஹீரோயினான அனிதா வீட்டில் அப்பா, அம்மா, ஒரு தங்கை இருக்கிறார்கள். இதுதான் ஹீரோ, ஹீரோயின் குடும்பங்களின் பின்னணி.



கார்த்திக்கும், அனிதாவும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். எலியும், பூனையும் மாதிரி.. அவ்வப்போது ஆள் மாற்றி ஆள் ஒருவர் காலை ஒருவர் வாரி விடுகிறார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஈகோ பிரச்சினையும் இருவருக்குள்ளும் தலைவிரித்தாடுகிறது.

வழக்கம்போல கார்த்திக்கின் நண்பர்கள் கூட்டம் 4 பேர். ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு ஏற்றி விடுகிறார்கள்.. மாட்டி விடுகிறார்கள்.. அவ்வளவுதான்..



அனிதாவின் மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் வேலையினால் கார்த்திக் கல்லூரியில் இருந்து ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் ஆகிறான். கார்த்திக்கும் பதிலுக்கு அனிதாவை இதெல்லாம் ஒரு பிகரா என்று அவளை சைட் அடிக்க வந்த வீராதிவீர இளைஞர்களிடம் மாட்டிவிடுகிறான்.

இந்தச் சூழலில் அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. இப்போதுதான் அனிதாவுக்குள்ளே இருந்த வெள்ளையுடை தேவதை வெளிப்படுகிறாள். தான் கார்த்திக் மீது காதல் கொண்டிருப்பதாக அவளுக்குத் தெரிகிறது.

கார்த்திக் லவ் அனிதா என்று எழுதப்பட்ட பத்து ரூபாய் நோட்டு ஒன்று கூடுதல் கதாபாத்திரமாக நடித்து படத்தினை முடித்துவைக்கப் படாதபாடு படுகிறது. நிச்சயத்தார்த்தம் முடிந்த பின்பு இந்த ரூபாய் நோட்டு கார்த்திக்கின் கைக்கு கிடைக்க அப்போதுதான் அனிதா தன்னை இதுவரையிலும் விரும்பியதை நினைத்து வருத்தப்படுகிறான் கார்த்திக். அவளிடம் நேரிலும், மறைமுகமாகவும் மன்னிப்பு கேட்கிறான்.

ஒரு நாள் கார்த்திக்கின் தந்தை அந்த பத்து ரூபாய் நோட்டை பார்த்துவிடுகிறார். அவர் முன்பே சொல்லியிருந்ததுபோல் மறுநாள் காலையில் அந்த பத்து ரூபாய் நோட்டைக் கையில் வைத்தபடியே பி.பி. ஏறி, அதனால் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போய்கிடக்கிறார். கார்த்திக்கு அனிதாவின் குடும்பம் ஆறுதல் சொல்கிறது.


கார்த்திக்-அனிதா இருவருமே தங்களுக்குள் இருக்கும் காதல் உணர்வை மூடிமறைக்க முயற்சி செய்து முடியாமல் தவிக்கிறார்கள். கார்த்திக்கிற்கு அனிதாவின் கணவனாக வரப் போகிறவனே பெங்களூரில் ஒரு வேலை தேடித் தருகிறான். கார்த்திக் பெங்களூர் கிளம்பிச் செல்லும் வேளையில் மறுபடியும் அந்த ரூபாய் நோட்டு வெளிப்படுகிறது. இந்த முறை அனிதாவின் அப்பாவின் கண்களில் பட்டுத் தொலைக்கிறது.

கடைசியாக கார்த்திக் பெங்களூருக்கு ஜூட் விட்டானா இல்லாட்டி அனிதாவுடன் ஜூட் விட்டானா என்பதுதான் கிளைமாக்ஸ்..


அப்பாடா.. இப்படி கொஞ்ச பேரோட தியேட்டர்ல உக்காந்து படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. எப்பப் பார்த்தாலும் கசகசன்னு கூட்டத்தை அடைச்சுக்கிட்டு.. மூலைக்கு மூலை விசில் சப்தமும், குசுகுசுன்னு பேச்சும் இல்லாம நிம்மதியா வரிசைக்கு ஒருத்தர்ன்னு உக்காந்திருந்தோம். தியேட்டர்ல மொத்தமே 20 பேர்தான். இந்த 20-ல் ஒரு மகளிர்கூட இல்லை என்பது இன்னும் விசேஷம். படத்தின் தலைவிதி இதிலேயே தெரிந்திருக்குமே..

ரத்தன் என்கிற புதுமுகம் கார்த்திக்காக நடித்திருக்கிறார். ஹீரோயின் மஞ்சு கேரள வரவு. ஹீரோயினைக் காட்டிலும் ஹீரோ பரவாயில்லை நடிப்பில்தான். ஹீரோயின் சிரித்துப் பேசும்போது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கிளைமாக்ஸில் அவர் அழுவதைப் பார்த்து எனக்கும் அழுகை, அழுகையாக வந்தது.. ஏன் இப்படி நடிப்பு வராதவர்களைப் போட்டு இம்சை பண்றாங்கன்னு தெரியல.. முகம் அழகா இருந்தா மட்டும் பத்தாது.. நடிப்பும் வேணும் என்பது நமக்குத் தெரியுது.. இயக்குநருக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன்..


கோட்டா சீனிவாசராவ் கார்த்திக்கின் தந்தை கேரக்டருக்கு.. எப்பவும்போல நடிப்பை நிறைவை செய்துவிட்டு போய்விட்டார். அனிதாவின் அப்பாவாக ராஜன் பி.தேவ். கத்திக் கூப்பாடு போடாத அமைதியான கேரக்டர் என்பதால் இவருக்கும் பெரிதாக ஸ்கோப் ஒன்றுமில்லை..

உயிரோடு இருப்பவர்களிடம் புகைப்படத்தில் இருப்பது போல் வைத்துக் கொள்கிறோம் என்றாலும் இப்போதெல்லாம் கல்லா கட்டியாக வேண்டும். இறந்து போனவர்கள் என்றால் கேட்கவே வேண்டாமே.. அதுதான் ரொம்ப நாள் கழித்து ஸ்ரீவித்யா இதில் புகைப்படத்தில் மட்டுமே காட்சிளிக்கிறார் கார்ததிக்கின் அம்மாவாக..

நகைச்சுவை என்று பார்த்தால் கார்த்திக் அரை லூஸான அடடே மனோகரை தன்னுடைய அப்பா என்று சொல்லி கல்லூரிக்கு அழைத்து வந்து பிரின்ஸிபாலிடம் பேச வைக்கும்போது லேசான நகைச்சுவை மிளிர்கிறது.. கூடவே சிங்கமுத்துவின் கதையோடு ஒட்டாத இரண்டு காமெடி காட்சிகளும் இனி ஒரு மாதத்திற்கு சேனல்களில் சக்கைப் போடுபோடும் என நினைக்கிறேன்..



ஜாக் ஆனந்த் என்பவர் இசையாம். டைட்டிலில் பார்த்தேன்.. இருந்த மூன்று பாடல் காட்சிகளிலும் 20 பேரில் 15 பேர் எழுந்து வெளியே ஓடினார்கள்.. பாடல் காட்சிகளில் காட்சிப்படுத்துதல் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் உட்கார வைப்பதற்கு அதுவே பத்தாதே..



என்னதான் புதுப் புது இசையமைப்பாளர்கள் ரவுண்டடித்தாலும் பழைய பாடல்களுக்கு இருக்கும் மவுசே தனிதான் என்பதை இந்தப் படத்தின் இயக்குநர் உணர்ந்துதான் இருக்கிறார். அதனால்தான் சிட்டுக்குருவி படத்தின் என் கண்மணி படப் பாடலைப் பொருத்தமாக இதில் இணைத்திருக்கிறார். வேறு வழியில்லை அவருக்கு.


படத்தின் இயக்குநர் ஸ்ரீஹரி சுந்தர்.சி.யின் சீடராம். படத்தில் அது மிஸ்ஸானதால் குருவுக்கும் பெருமையில்லை.. சிஷ்யனுக்கும் பெருமையில்லை..

குத்துப் பாட்டில்லை.. இரட்டை அர்த்த வசனம் இல்லை.. நெளிய வைக்கும் காட்சிகள் இல்லை என்று எவ்வளவுதான் விளம்பரப்படுத்தினாலும் படத்தில் சரக்கில்லை என்றால் தேறுவது கஷ்டம்தான் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம். தாராளமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்..

மொத்தத்தில், ஒரு மதிய நேர டிவி சீரியல் திரைக்கதையில் உருவான தில்லான சினிமா..!

33 comments:

  1. படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  2. //மொத்தத்தில், ஒரு மதிய நேர டிவி சீரியல் திரைக்கதையில் உருவான தில்லான சினிமா..!//

    தியேட்டரிலும் இந்த சீரியல் கொடுமையா......... திருச்செந்தூர் முருகா என்ன காப்பாத்து.......

    விமர்சனம் நச்

    ReplyDelete
  3. //மொத்தத்தில், ஒரு மதிய நேர டிவி சீரியல் திரைக்கதையில் உருவான தில்லான சினிமா..!
    //

    அப்போ ஓசி vcd ல் பார்க்கலாம்

    ReplyDelete
  4. anna..Hope you remember me..this is raj..I am also started writing blogs..and i added you in the good blog of my list.Please have a look at that...

    http://aveenga.blogspot.com/

    ReplyDelete
  5. //அத்திரி said...

    படிச்சிட்டு வாரேன்//

    என்னவொரு உற்சாகம் கமெண்ட்டு போட..

    அத்திரி தம்பி வாழ்க..

    ReplyDelete
  6. ///அத்திரி said...

    //மொத்தத்தில், ஒரு மதிய நேர டிவி சீரியல் திரைக்கதையில் உருவான தில்லான சினிமா..!//

    தியேட்டரிலும் இந்த சீரியல் கொடுமையா......... திருச்செந்தூர் முருகா என்ன காப்பாத்து.......

    விமர்சனம் நச்///

    எந்த முருகனும் காப்பாத்த மாட்டான்.. போகணும்னு உங்க தலைவிதின்னா தம்பீபீபீபீ நீ போய்த்தான் ஆகணும்..!

    ReplyDelete
  7. ///ஆ.ஞானசேகரன் said...

    //மொத்தத்தில், ஒரு மதிய நேர டிவி சீரியல் திரைக்கதையில் உருவான தில்லான சினிமா..!//

    அப்போ ஓசி vcd ல் பார்க்கலாம்///

    விசிடில பார்க்குறதே ஒரு மேட்டரு.. அதுலயே ஓசியா..? ஞானசேகரன் ஸார் நச்சு கமெண்ட்டு..!

    ReplyDelete
  8. //ராஜா said...
    anna.. Hope you remember me..this is raj.. I am also started writing blogs.. and i added you in the good blog of my list. Please have a look at that...
    http://aveenga.blogspot.com//

    வருக.. வருக..

    வலையுலகத்தில் இணையும் தம்பி ராஜாவை அன்போடு வரவேற்கிறேன்..

    முதலில் வலையுலகில் நிறைய படியுங்கள்.. பின்னூட்டம் இடுங்கள்.. பின்பு கொஞ்சமாக எழுதத் துவங்குங்கள். பின்பு தீவிரமாக எழுதலாம்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. //
    அழைத்துச் சென்ற முருகன் விரும்பியதாலும்தான் இந்தப் படம் பார்க்க வேண்டியிருந்தது.
    //

    அண்ணே, அழைத்து சென்ற முருகன் கிட்ட நீங்க ஏதோ கடன் வாங்கிட்டு திருப்பி தரலைன்னு நினைக்கிறேன்...சீக்கிரமா கடனை அடைச்சிர்றது ஒங்களுக்கு நல்லது...கொலைவெறில இருக்க மாதிரி தெரியுது....

    ReplyDelete
  10. //
    அப்பாடா.. இப்படி கொஞ்ச பேரோட தியேட்டர்ல உக்காந்து படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. எப்பப் பார்த்தாலும் கசகசன்னு கூட்டத்தை அடைச்சுக்கிட்டு.. மூலைக்கு மூலை விசில் சப்தமும், குசுகுசுன்னு பேச்சும் இல்லாம நிம்மதியா வரிசைக்கு ஒருத்தர்ன்னு உக்காந்திருந்தோம். தியேட்டர்ல மொத்தமே 20 பேர்தான்.
    //

    ஒங்களுக்குன்னு ஒரு ஷோவையே ஒதுக்கிட்டாங்களா??
    அப்ப நீங்க பெரிய வி.ஐ.பின்னு நினைக்கிறேன்...இந்த மாதிரி ஸ்பெசல் ஷோவுக்கு என்னையெல்லாம் யாரு கூப்பிடறா??

    ReplyDelete
  11. //
    உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //ராஜா said...
    anna.. Hope you remember me..this is raj.. I am also started writing blogs.. and i added you in the good blog of my list. Please have a look at that...
    http://aveenga.blogspot.com//

    வருக.. வருக..

    வலையுலகத்தில் இணையும் தம்பி ராஜாவை அன்போடு வரவேற்கிறேன்..

    முதலில் வலையுலகில் நிறைய படியுங்கள்.. பின்னூட்டம் இடுங்கள்.. பின்பு கொஞ்சமாக எழுதத் துவங்குங்கள். பின்பு தீவிரமாக எழுதலாம்..

    வாழ்க வளமுடன்

    //

    வலைக்கு வரும் அண்ணன் ராசாவை நானும் அன்புடன் வரவேற்கிறேன்....ஆனால்,

    கொஞ்சமா படியுங்கள்...பின்னூட்டம் (எனக்கு) நிறைய இடுங்கள்..கொஞ்சமாக எழுத துவங்குங்கள்...பின்பு அதையும் குறைத்துக் கொள்ளுங்கள் :0))

    உண்மைத் தமிழன் அண்ணனை பார்த்து கெட்டுப் போக வேண்டாம் :0))

    ReplyDelete
  12. pottu thalicheetingale thaiva? puthu director. Netru Romba bayanthu poi irundharu. unga vimarsanathai parkkahmal irukka kadavathu.


    -R.s.Anthanan
    www.adikkadi.blogspot.com

    ReplyDelete
  13. நான் தான் உங்க blog க்கு 125 வது follower ;) !
    எதாவது gift உண்டா ;?

    ReplyDelete
  14. எப்படி சரவணன்,இப்படி எந்தப் படமாக இருந்தாலும் அதன் முழு விபரங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறீர்கள்?கொட்டகைக்கு லாங் சைஸ் நோட்டோடும் பேனா,பென்சிலோடும் தான் போவீர்களா?உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது!
    இல்லாவிட்டால்,எதையுமே மறக்க முடியாத வியாதியை முருகன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறான் என நினைக்கிறேன்!

    ReplyDelete
  15. கார்த்திக்‍‍‍ அனிதா கடை காலி

    ReplyDelete
  16. //அப்பாடா.. இப்படி கொஞ்ச பேரோட தியேட்டர்ல உக்காந்து படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. எப்பப் பார்த்தாலும் கசகசன்னு கூட்டத்தை அடைச்சுக்கிட்டு.. மூலைக்கு மூலை விசில் சப்தமும், குசுகுசுன்னு பேச்சும் இல்லாம நிம்மதியா வரிசைக்கு ஒருத்தர்ன்னு உக்காந்திருந்தோம். தியேட்டர்ல மொத்தமே 20 பேர்தான். இந்த 20-ல் ஒரு மகளிர்கூட இல்லை என்பது இன்னும் விசேஷம்.//

    நீங்கள் கொடுத்து வைத்தவர் அப்படி பாக்கறதுல எப்பொழுதும் ஒரு த்ரில் இருக்கும்.

    ReplyDelete
  17. அப்பாடி நாங்க பொழைச்சோம், இந்த சினிமால்லாம் இங்கே வராது....

    ஆமாம், திரு T.M.கிருஷ்ணாவும் , பாம்பே ஜெயஸ்ரீயும் நடிதிள்ள ஒரு கர்நாடக இசை பற்றிய படம் பார்த்தீர்களா ? மார்கழி.... அப்படின்னு பேர்.

    ReplyDelete
  18. படத்த பாத்துட்டு எப்படி தைரியமா விமர்சனம்
    எழுதுற துணிச்சல் வந்தது உங்களுக்கு

    ReplyDelete
  19. ///அது சரி said...

    //அழைத்துச் சென்ற முருகன் விரும்பியதாலும்தான் இந்தப் படம் பார்க்க வேண்டியிருந்தது.//

    அண்ணே, அழைத்து சென்ற முருகன்கிட்ட நீங்க ஏதோ கடன் வாங்கிட்டு திருப்பி தரலைன்னு நினைக்கிறேன்... சீக்கிரமா கடனை அடைச்சிர்றது ஒங்களுக்கு நல்லது... கொலைவெறில இருக்க மாதிரி தெரியுது....///

    தம்பி அது சரி..

    கரீக்ட்டா கண்டுபிடிச்சிட்டப்பா மேட்டரை..

    நான் கடன் கேட்கத்தான் போனேன். அந்த முருகன்தான் கூட வந்தா தருவேன்னு சொல்லி கூட்டிக்கின்னுப் போயி.. பரவாயில்லை.. நான் கேட்டதுல பாதியாவது கொடுத்து ஒரு பத்து நாளைக்கு பொழைப்பாக் காப்பாத்துச்சு.. என்ன பண்றது நம்ம நிலைமை..?

    ReplyDelete
  20. ///அது சரி said...

    //அப்பாடா.. இப்படி கொஞ்ச பேரோட தியேட்டர்ல உக்காந்து படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. எப்பப் பார்த்தாலும் கசகசன்னு கூட்டத்தை அடைச்சுக்கிட்டு.. மூலைக்கு மூலை விசில் சப்தமும், குசுகுசுன்னு பேச்சும் இல்லாம நிம்மதியா வரிசைக்கு ஒருத்தர்ன்னு உக்காந்திருந்தோம். தியேட்டர்ல மொத்தமே 20 பேர்தான்.//

    ஒங்களுக்குன்னு ஒரு ஷோவையே ஒதுக்கிட்டாங்களா?? அப்ப நீங்க பெரிய வி.ஐ.பின்னு நினைக்கிறேன்... இந்த மாதிரி ஸ்பெசல் ஷோவுக்கு என்னையெல்லாம் யாரு கூப்பிடறா??///

    தம்பி கூப்பிடாத வரைக்கும் சந்தோஷம்னு நினைச்சுக்க..

    இதே மாதிரி எந்திரன் படத்தைத் தனியாக உக்காந்து பார்க்க முடியுமா..? முடியாதுல்ல..

    ReplyDelete
  21. ///அது சரி said...
    //வலைக்கு வரும் அண்ணன் ராசாவை நானும் அன்புடன் வரவேற்கிறேன்.... ஆனால்,
    கொஞ்சமா படியுங்கள்... பின்னூட்டம் (எனக்கு) நிறைய இடுங்கள்.. கொஞ்சமாக எழுத துவங்குங்கள்... பின்பு அதையும் குறைத்துக் கொள்ளுங்கள் :0))

    உண்மைத் தமிழன் அண்ணனை பார்த்து கெட்டுப் போக வேண்டாம் :0))///

    தம்பி அது சரி..

    ரொம்ப, ரொம்ப சரியாத்தான் சொல்லியிருக்க.. தப்பில்ல..

    நல்லாயிரு..

    ReplyDelete
  22. ///anthanan said...

    pottu thalicheetingale thaiva? puthu director. Netru Romba bayanthu poi irundharu. unga vimarsanathai parkkahmal irukka kadavathu.
    -R.s.Anthanan
    www.adikkadi.blogspot.com///

    இது ரொம்ப, ரொம்பக் குறைவான அளவு விமர்சனம் ஸார்..

    இந்தக் கதையில் பல திரைப்படங்கள் ஏற்கெனவே வந்துவிட்டன. புதிதாக இதில் என்ன இருக்கிறது..? இதைப் பற்றி பெரிதாகப் பேச..?

    ReplyDelete
  23. ///சுட்டி குரங்கு said...
    நான்தான் உங்க blog க்கு 125 வது follower;)! எதாவது gift உண்டா ;?//

    நேர்ல வாங்க.. முடிஞ்சதைத் தர்றேன்..

    வருகைக்கும், இணைப்பிற்கும் மிக்க நன்றி சுட்டி குரங்கு..!

    ReplyDelete
  24. ///ஷண்முகப்ரியன் said...
    எப்படி சரவணன், இப்படி எந்தப் படமாக இருந்தாலும் அதன் முழு விபரங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறீர்கள்? கொட்டகைக்கு லாங் சைஸ் நோட்டோடும் பேனா, பென்சிலோடும்தான் போவீர்களா? உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது! இல்லாவிட்டால், எதையுமே மறக்க முடியாத வியாதியை முருகன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறான் என நினைக்கிறேன்!///

    ஸார் சும்மா இருங்க ஸார்..

    நீங்களே ஏத்தி விட்ருவீங்க போலிருக்கு..

    நானே படத்தோட கதையில கால்வாசியைத்தான் இங்க சொல்லியிருக்கேன். நீங்கதான் முழுசா சொல்லாதீங்க.. சொல்லாதீங்கன்னு கதறுறீங்களே.. அதுனாலதான்..

    மறதிதான் எனக்கிருக்கும் ஒரே சொத்து.. நீங்க என்னடான்னா ஏதோ ஞாபகத் திறமை, அது, இதுன்னு பேசுறீங்க..?!!!!!!!!!!!!

    ReplyDelete
  25. //KaveriGanesh said...

    கார்த்திக்‍‍‍ அனிதா கடை காலி.//

    இது மட்டுமல்ல.. கூடவே வெளியான ஆனந்த தாண்டவன், நாளை நமதே போன்ற படங்களும் காலிதான்..!

    ReplyDelete
  26. ///vinoth gowtham said...

    //அப்பாடா.. இப்படி கொஞ்ச பேரோட தியேட்டர்ல உக்காந்து படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.. எப்பப் பார்த்தாலும் கசகசன்னு கூட்டத்தை அடைச்சுக்கிட்டு.. மூலைக்கு மூலை விசில் சப்தமும், குசுகுசுன்னு பேச்சும் இல்லாம நிம்மதியா வரிசைக்கு ஒருத்தர்ன்னு உக்காந்திருந்தோம். தியேட்டர்ல மொத்தமே 20 பேர்தான். இந்த 20-ல் ஒரு மகளிர்கூட இல்லை என்பது இன்னும் விசேஷம்.//

    நீங்கள் கொடுத்து வைத்தவர் அப்படி பாக்கறதுல எப்பொழுதும் ஒரு த்ரில் இருக்கும்.///

    வினோத்.. கொஞ்சம் ஜாலியாத்தான் இருந்தது..

    நீங்களும் போய்ப் பாருங்க.. ஒரு வாரம் தாங்குறதே அதிகம்.. அதுனாலதான் சொல்றேன்..

    ReplyDelete
  27. //அது ஒரு கனாக் காலம் said...

    அப்பாடி நாங்க பொழைச்சோம், இந்த சினிமால்லாம் இங்கே வராது....//

    எந்த ஊர்ல இருக்கீங்க சாமி..?

    //ஆமாம், திரு T.M.கிருஷ்ணாவும், பாம்பே ஜெயஸ்ரீயும் நடிதிள்ள ஒரு கர்நாடக இசை பற்றிய படம் பார்த்தீர்களா ? மார்கழி.... அப்படின்னு பேர்.//

    இல்லையே.. கேள்விப்பட்டதே இல்லை.. தேடிப் பிடித்துப் பார்த்துவிடுகிறேன்..

    ReplyDelete
  28. //தீப்பெட்டி said...
    படத்த பாத்துட்டு எப்படி தைரியமா விமர்சனம் எழுதுற துணிச்சல் வந்தது உங்களுக்கு?//

    பின்ன.. நான் மட்டும் மனசுக்குள்ள போட்டு குமைஞ்சுக்கி்டடே இருக்கச் சொல்றீங்களா..?

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..!

    ReplyDelete
  29. //ஆமாம், திரு T.M.கிருஷ்ணாவும், பாம்பே ஜெயஸ்ரீயும் நடிதிள்ள ஒரு கர்நாடக இசை பற்றிய படம் பார்த்தீர்களா ? மார்கழி.... அப்படின்னு பேர்.//

    அந்தப் படத்தின் பெயர் ‘மார்கழி ராகம்’.

    ReplyDelete
  30. ///நிலாக்காலம் said...

    //ஆமாம், திரு T.M.கிருஷ்ணாவும், பாம்பே ஜெயஸ்ரீயும் நடிதிள்ள ஒரு கர்நாடக இசை பற்றிய படம் பார்த்தீர்களா ? மார்கழி.... அப்படின்னு பேர்.//

    அந்தப் படத்தின் பெயர் ‘மார்கழி ராகம்’.///

    தகவலுக்கு நன்றி நிலாக்காலம்..

    தேடிப் பிடித்துப் பார்க்கிறேன்.. கொஞ்சம் டைம் கொடுங்கள்..

    ReplyDelete
  31. நல்ல வேளை!

    உங்களுக்கு கொஞ்சம் இமேஜஸ் கிடைச்சது!

    ReplyDelete
  32. //நாமக்கல் சிபி said...

    நல்ல வேளை!

    உங்களுக்கு கொஞ்சம் இமேஜஸ் கிடைச்சது!//

    அது மட்டுமாச்சும் கிடைச்சுச்சேன்னு சந்தோஷப்பட்டுக்குறேன்..!

    ReplyDelete
  33. எனது தந்தை தனது நண்பர்களுடன் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றார். டிக்கெட் எடுத்ததும் தியேட்டர்காரன் சார் எங்களிடம் 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்றார். தயவுசெய்து உள்ளே உட்காருங்கள், நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம். படம் எப்படி இருக்கும் என்று என் அப்பாவும் அவருடைய நண்பர்களும் உணரவில்லை. படம் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து உன் அம்மா இன்று நன்றாக சமைக்கவில்லை அதற்கு தண்டனையாக இந்த படத்தை பார்க்க வைப்பேன் என்றார்.

    ReplyDelete