Pages

Saturday, March 28, 2009

ப்ளாஷ் நியூஸ்-தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு அறிவிப்பு

28-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான இடப்பங்கீடு இன்றைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸின் நவக்கிரகங்களான மாநிலத் தலைவர் தங்கபாலு, பொருளாளர் டி.சுதர்சனம், மத்திய அமைச்சர்கள் வாசன், இளங்கோவன், சிதம்பரம் அடங்கிய குழு காலையில் சத்தியமூர்த்தி பவனில் தீவிர ஆலோசனை செய்துள்ளது.

இதன் பின் தொகுதிகளை இறுதி செய்ய சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தும் இந்தப் பேச்சில் கலந்து கொண்டிருக்கிறார்.

பின்பு மாலையில் இந்தக் குழு கலைஞரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் முடிவில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் முடிவாகியுள்ளது.

அதன் பின் அறிவாலயத்தில் கலைஞர், குலாம்நபி ஆசாத், சிதம்பரம், திருமாவளவன் ஆகியோரை வைத்துக் கொண்டு கலைஞர் தொகுதி உடன்பாடு பற்றியத் தகவல்களை வெளியிட்டார்.

தி.மு.க. 21 இடங்களில் போட்டியிடப் போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி இல்லாததால் அதனை ஈடுகட்டும் பொருட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இடமாம். மொத்தமும் முடிந்துவிட்டது.

எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலைஞர் தெரிவித்துள்ளார். மேலும் மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கலைஞர் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களைத் தற்போதைக்குக் கேட்டு வருகிறது. அதில் ஒன்று நிச்சயமாக கிடைக்கும் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். அந்த ஒரு தொகுதியையும் தி.மு.க. தனது தொகுதியிலிருந்தே விட்டுக் கொடுக்குமாம்..

14 comments:

  1. ப்ளாஷ் நியூஸூக்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  2. //தமிழ் பிரியன் said...

    ப்ளாஷ் நியூஸூக்கு நன்றி அண்ணே!//

    நான்தான் உனக்கு நன்றி சொல்லணும் தம்பி..!

    ReplyDelete
  3. காதர்மொய்தீனுக்கு கொடுத்தது வேஸ்ட், மனித நேய கட்சிக்கு கொடுத்து இருக்கலாம்!

    ReplyDelete
  4. தல
    காங்கிரஸ் கட்சிக்கு பதினாறு
    வெற்றி பெற போவதில்லை சொல்லும் நாளைய வரலாறு.

    ReplyDelete
  5. 98-ல் நடந்தது போல் நடக்குமா? இதைப்பற்றியும் ஒரு முன்னறிவிப்பை உண்மைத்தமிழன் அலசலாம். எதிர்பார்ப்புடன்....

    ReplyDelete
  6. டிவி, கம்ப்யூட்டர் எல்லாத்தையும் பகக்த்துல பக்கத்துல போட்டுட்டு எப்படா நியூஸ் போடுவானுங்க, அப்டேட் பண்ணலாம்னு உட்கார்ந்திருப்பீங்களோ!

    ReplyDelete
  7. ///அபி அப்பா said...

    காதர்மொய்தீனுக்கு கொடுத்தது வேஸ்ட், மனித நேய கட்சிக்கு கொடுத்து இருக்கலாம்!///
    கரெக்ட்.. இதைத் தான் நேத்து மொக்கை மெயில் குழுமத்திலும் குறிப்பிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  8. //அபி அப்பா said...

    காதர்மொய்தீனுக்கு கொடுத்தது வேஸ்ட், மனித நேய கட்சிக்கு கொடுத்து இருக்கலாம்!//

    காதர் மொய்தீன் நீண்ட வருடங்களாக கூட்டணியில் இருப்பவர். விட முடியுமா..? அவர்களும் ஒரு கூட்டத்தைக் கைவசம் வைத்திருக்கிறார்கள்.

    மனித நேயக் கட்சி புதியக் கட்சி. கூட்டத்தைக் கூட்டிக் காண்பித்துவிட்டார்கள்.

    என்னமோ தெரியல.. தமிழ்நாட்டுல யார் புதுசா கட்சி ஆரம்பிச்சாலும் கூட்டம் கூடுது.. எங்கிட்டிருந்துதான் வர்றாங்களோ தெரியலை..

    ReplyDelete
  9. //♠புதுவை சிவா♠ said...
    தல காங்கிரஸ் கட்சிக்கு பதினாறு
    வெற்றி பெற போவதில்லை சொல்லும் நாளைய வரலாறு.//

    நிச்சயம் பதினாறிலும் ஜெயிக்க முடியாது.. 5 அல்லது 6 தேறலாம்..!

    ReplyDelete
  10. //ஊர் சுற்றி said...
    98-ல் நடந்தது போல் நடக்குமா? இதைப் பற்றியும் ஒரு முன்னறிவிப்பை உண்மைத்தமிழன் அலசலாம். எதிர்பார்ப்புடன்....//

    அலசிருவோம்..

    ReplyDelete
  11. //pappu said...
    டிவி, கம்ப்யூட்டர் எல்லாத்தையும் பகக்த்துல பக்கத்துல போட்டுட்டு எப்படா நியூஸ் போடுவானுங்க, அப்டேட் பண்ணலாம்னு உட்கார்ந்திருப்பீங்களோ!//

    அப்படித்தான் உட்கார்ந்திருந்தேன்.. எப்படி கண்டுபிடிச்சீங்க பாப்பு..!

    ReplyDelete
  12. ///தமிழ் பிரியன் said...

    //அபி அப்பா said...

    காதர்மொய்தீனுக்கு கொடுத்தது வேஸ்ட், மனித நேய கட்சிக்கு கொடுத்து இருக்கலாம்!///

    கரெக்ட்.. இதைத்தான் நேத்து மொக்கை மெயில் குழுமத்திலும் குறிப்பிட்டு இருந்தேன்.///

    வேஸ்ட்டெல்லாம் ஆகாது.. வேண்ணா பார்த்துக்கிட்டேயிருங்க..!

    ReplyDelete
  13. எல்லாம் சரி உண்மைத் தமிழன்,

    ஆனால் அறிவிப்பு வந்ததிலிருந்து என் மண்டையை குடையும் ஒரே விஷயம், காங்கிரசிற்கு 16 தொகுதிகள் ஒதுக்கியிருக்கிறார்களே, வேட்பாளரை நிறுத்தவேணும் காங்கிரசில் 16 பேர் இருக்கணுமே, இருக்காங்களா????

    ReplyDelete
  14. //Naresh Kumar said...

    எல்லாம் சரி உண்மைத் தமிழன், ஆனால் அறிவிப்பு வந்ததிலிருந்து என் மண்டையை குடையும் ஒரே விஷயம், காங்கிரசிற்கு 16 தொகுதிகள் ஒதுக்கியிருக்கிறார்களே, வேட்பாளரை நிறுத்தவேணும் காங்கிரசில் 16 பேர் இருக்கணுமே, இருக்காங்களா????//

    ஓட்டுப் போடவும் கொஞ்சம் ஆள் இருக்காங்க நரேஷ்..

    16 தொகுதிகள் என்பது 16 குட்டித் தலைவர்களுக்காகத்தான்.. கிடைத்துவிட்டது..

    இனி நாடு சட்னிதான்..!

    ReplyDelete