Pages

Thursday, March 05, 2009

இதை என்னன்னு சொல்றது..!?

05-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற மாதத்தில் விஜய் டிவியில் 'இயேசு வருகிறார்' பாணியில் 'விரைவில் நமீதா தோன்றுகிறார்' என்று விளம்பரங்களை போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சியின் அடுத்த அவதாரமாக 'பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்' நிகழ்ச்சியாம்.. நடன நிகழ்ச்சி என்று சொல்லாமலேயே தெரிந்தது.



நான் பார்த்த அன்றைக்கு கேர்ள்ஸ் பிரிவில் இருந்து ஒரு சின்னப் பொண்ணு.. மிஞ்சிப் போனா வயசு 4 இல்லாட்டி 5 இருக்கும்.. ஒரு டான்ஸ் ஆடுச்சு பாருங்க.. அரண்டு போயிட்டேன்.. 'சோளி கீ பிச்சே' பாட்டு..!

அந்தப் பாட்டோட துவக்கத்துல நீனாகுப்தா திரையில் காட்டிய அதே மூவ்மெண்ட்ஸ்ஸை அந்தச் சின்னப் பொண்ணும் தன்னால முடிஞ்ச அளவுக்கு ஆடிக் காட்டுது. அப்படி ஒரு கைதட்டல். பாட்டு முழுவதிலும் அந்தச் சின்னப் பொண்ணு அப்படியொரு ஆர்வத்தோடு ஆடுது.. அது கூட இருக்குறவங்க, பாக்குறவங்க, விசிலடித்து உற்சாகப்படுத்துறாங்க. நம்ம கனம் நீதியரசரும், நீதியரசியும் இதை 'ஆஹா.. ஓஹோன்னு' பேசி "பெரியவங்களாலேயே இப்படி ஆட முடியாது"ன்னுட்டாங்க..!


டான்ஸ் முவ்மெண்ட்ஸ் எந்த லட்சணத்துல இருந்ததுன்னு படம் பார்த்த நமக்குத் தெரியும்.. இதை ஏதோ இளம் வயதுப் பெண்கள் ஆடியிருந்தால்கூட, அதனை சினிமா ஆர்வம்னு சொல்லிக்கலாம். ஆனா 4 வயசுப் பொண்ணு ஆடுறதை என்னன்னு பேசுறது..? பாட்டு செலக்ட் பண்றவங்க கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டாங்களா..! அந்தப் பாட்டோட அர்த்தம் என்னன்னு அந்தப் பொண்ணுக்குத் தெரியுமா..? ஒரு சின்னக் குழந்தை அபிநயம் பிடிக்கக் கூடிய பாட்டா அது..? தப்பித் தவறி இந்தப் பொண்ணு பெரியவளானப்புறம் இதை பார்க்க நேர்ந்தா என்ன நினைப்பா அவளோட அம்மா, அப்பாவை..!

இதையெல்லாம் எப்படி கலை, ஆர்வம், நடிப்பு, நடனம்னு சேர்க்குறாங்கன்னு தெரியலை..?

ரஷ்யால சின்ன வயசுலேயே ஜிம்னாஸ்டிக்குன்னு சொல்லி சின்னப்புள்ளைகளுக்கு டிரெயினிங் கொடுக்குறதை அதே நாள்ல டிஸ்கவரி சேனல்ல பார்த்தேன்.

உடலை வில்லாய் வளைத்து, சுழன்று, அந்தரத்தில் மிதந்து, ஒடிந்து, ஒடித்து குதித்தோடி தரையில் உள்ளங்கால் ஊன்றி நின்று கைகளை உயர்த்தி பார்க்கும் பார்வையில் இருந்தது உடல்கட்டு நேர்த்தி. கொஞ்சமும் தாமதிக்காமல் கை தட்டத் தோன்றுகிறது, அது ஒரு வித்தையென்று..!

இது..!?

68 comments:

  1. ஆதங்கம் புரியுது தமிழா?

    ReplyDelete
  2. //ஆதங்கம் புரியுது தமிழா?//

    அக்காங்க்!

    ReplyDelete
  3. அது வித்தை.. இது சொத்தை.. வேற என்ன சொல்ல (நான் குழந்தைய சொல்லவில்லை)
    அன்புடன், கி.பாலு

    ReplyDelete
  4. நண்பா உடம்பு சரி இல்லையா?
    ;-))))))))))))
    பதிவு சின்னதா இருக்கு

    ReplyDelete
  5. கொடுமை!!!!
    அத்தனை பேரையும் கட்டிவெச்சு ஒதைக்கணும் :(((((

    ReplyDelete
  6. //பழமைபேசி said...
    ஆதங்கம் புரியுது தமிழா?//

    பழமை ஸார்.. நம்ம வூட்டுப் பொண்ணுன்னா இப்படி ஆட விடுவோமா..?!

    அந்த ஆதங்கம்தான்..

    ReplyDelete
  7. ///நாமக்கல் சிபி said...
    //ஆதங்கம் புரியுது தமிழா?//
    அக்காங்க்!//

    ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல..

    உன்னையெல்லாம்..!?

    ReplyDelete
  8. //மடல்காரன்_MadalKaran said...
    அது வித்தை.. இது சொத்தை.. வேற என்ன சொல்ல (நான் குழந்தைய சொல்லவில்லை)
    அன்புடன், கி.பாலு//

    புரிந்து கொண்டேன் பாலு ஸார்..

    நமது நவநாகரீக கோமான்களுக்கு எப்போது புரியப் போகிறதோ தெரியவில்லை..?!

    ReplyDelete
  9. //♠புதுவை சிவா♠ said...
    நண்பா உடம்பு சரி இல்லையா? ;-))))))))))))
    பதிவு சின்னதா இருக்கு.//

    இப்படி எழுதினாத்தான் இப்படி அக்கறையா விசாரிக்கிறீங்க..?!

    நல்லாயிருங்க..

    உடம்பு நல்லாத்தான் இருக்கு சிவா.. ஏதோ இன்னிக்கு ஒரு விஷயத்தைப் பத்தி மட்டும் கொஞ்சமா எழுதுவோம்னு தோணுச்சு..

    அதான் மூணு பதிவையும் தொடர்ந்து போட்டுட்டேன்..

    வருகைக்கு நன்றி சிவா.

    ReplyDelete
  10. //Kamal said...
    கொடுமை!!!! அத்தனை பேரையும் கட்டி வெச்சு ஒதைக்கணும் :(((((//

    நினைச்சா எனக்கும் இப்படித்தான் கோபம் வந்தது.. வருது..

    ReplyDelete
  11. இப்படியெல்லாம் கேள்வி கேட்டா உங்களுக்கு (உண்மை)தமிழனா(?) இருக்க தகுதியில்லனு அர்த்தம்.... இதெல்லாம் தமிழனோட கலாச்சாரமுங்க... கலாச்சாரம்..

    தலைவி நமீதா படத்தை போட்டதால் உங்களை மன்னித்து விடுகிறேன்

    ReplyDelete
  12. என்ன செய்ய தமிழக கலாச்சாரம் அப்படி!
    எந்த ஆங்கில சேனலிலும் இம்மாதிரி டுபாக்கூர் புரோகிராம் இல்லை.

    ReplyDelete
  13. தங்கத் தலைவி நமீதா வாழ்க!

    ReplyDelete
  14. //ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல..
    //

    நமீதா படத்தைப் போட்டு பதிவை ஒப்பேத்திய ஆருயிர் அண்ணன் கலாசாரக் காவலன் உண்மைத் தமிழன் அவர்களுக்கு,

    ஏது இவரே இவ்வளவு சிறியதாக பதிவு போட்டிருக்கிறாரே என்றெண்ணித்தான் நானும் என் பின்னூட்டத்தின் அளவைக் குறைத்துக் கொண்டேன் என்பதை அறிந்துகொள்வது மிகவும் எளிது என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை என்பதை நானறிவேன் என்று உங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று என்று எனக்குத் தெரிந்திருக்கிறதா இல்லையா என்று இப்பதிவுலகினர் குழ்ப்பிக் கொள்வார்கள் என்பதால் என் பின்னூட்டத்தின் அளவை இதற்கு மேலும் நீட்டிக்காமல் நிறுத்திக் கொள்கிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  15. //ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல..
    //

    இதெல்லாம் வியாக்கியானமா பேசுங்க
    தீபா வெங்கட் நம்பர் மட்டும் பிடிச்சித் தராதீங்க

    :-x

    ReplyDelete
  16. //தப்பித் தவறி இந்தப் பொண்ணு பெரியவளானப்புறம் இதை பார்க்க நேர்ந்தா என்ன நினைப்பா அவளோட அம்மா, அப்பாவை..!//
    பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
  17. //நான் ஆதவன் said...
    இப்படியெல்லாம் கேள்வி கேட்டா உங்களுக்கு (உண்மை)தமிழனா(?) இருக்க தகுதியில்லனு அர்த்தம்.... இதெல்லாம் தமிழனோட கலாச்சாரமுங்க... கலாச்சாரம்..//

    அப்படியா..? இதுவரையிலும் தெரியாது.. இப்போது தாங்கள் சொன்னதிலிருந்துதான் தெரிகிறது இது நமது கலாச்சாரம் என்று..! நன்றி அறிந்து கொண்டேன்..

    அப்படியே ஒரு சிறிய சந்தேகம்.. இந்த "கலாச்சாரம்" என்றால் என்ன..?

    //தலைவி நமீதா படத்தை போட்டதால் உங்களை மன்னித்து விடுகிறேன்.//

    தலைவி நமீதாவா..?

    நாடு போற போக்கே சரியில்லையே.. எங்க போய் முடியப் போகுதோ..?! முருகா நீதான் காப்பாத்தணும்..

    ReplyDelete
  18. //வால்பையன் said...
    என்ன செய்ய தமிழக கலாச்சாரம் அப்படி! எந்த ஆங்கில சேனலிலும் இம்மாதிரி டுபாக்கூர் புரோகிராம் இல்லை.//

    ஸ்டாரில் இருக்கு வாலு..

    அதைப் பார்த்துதான் இங்க காப்பியடிக்கிறாங்க..

    பெரியவங்க ஆடுன ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சியும் ஸ்டார் ஆங்கில சேனலிலும், ஹிந்தி சேனலிலும் ஏற்கெனவே வந்து கொண்டிருந்த கான்செப்ட்தான்..

    ReplyDelete
  19. //நாமக்கல் சிபி said...
    தங்கத் தலைவி நமீதா வாழ்க!//

    முருகன் கண்ணைக் குத்தப் போறான்..!!

    ReplyDelete
  20. ///நாமக்கல் சிபி said...
    //ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல..//

    நமீதா படத்தைப் போட்டு பதிவை ஒப்பேத்திய ஆருயிர் அண்ணன் கலாசாரக் காவலன் உண்மைத் தமிழன் அவர்களுக்கு,
    ஏது இவரே இவ்வளவு சிறியதாக பதிவு போட்டிருக்கிறாரே என்றெண்ணித்தான் நானும் என் பின்னூட்டத்தின் அளவைக் குறைத்துக் கொண்டேன் என்பதை அறிந்துகொள்வது மிகவும் எளிது என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை என்பதை நானறிவேன் என்று உங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று என்று எனக்குத் தெரிந்திருக்கிறதா இல்லையா என்று இப்பதிவுலகினர் குழ்ப்பிக் கொள்வார்கள் என்பதால் என் பின்னூட்டத்தின் அளவை இதற்கு மேலும் நீட்டிக்காமல் நிறுத்திக் கொள்கிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!//

    ஐயையோ.. முருகா..

    தெரியாம கேட்டுப்புட்டேன் சாமி..

    விட்டிரு.. இனிமே இப்படியெல்லாம் எழுத மாட்டேன்..

    உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...

    அப்பாடா.. இந்த ஒரு பாராவை படிச்சு முடிக்கிறதுக்குள்ள நாக்கு வெளில வந்திருச்சு..

    போதும்டா தங்கம்..

    ReplyDelete
  21. ///நாமக்கல் சிபி said...
    //ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல..//

    இதெல்லாம் வியாக்கியானமா பேசுங்க.
    தீபா வெங்கட் நம்பர் மட்டும் பிடிச்சித் தராதீங்க:-x///

    என்ன புழல் ஜெயில்ல உள்ள வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்னு இப்படி அடம் புடிக்கிறியே முருகா..

    உனக்கே இது நியாயமா..?

    ReplyDelete
  22. ///சொல்லரசன் said...
    //தப்பித் தவறி இந்தப் பொண்ணு பெரியவளானப்புறம் இதை பார்க்க நேர்ந்தா என்ன நினைப்பா அவளோட அம்மா, அப்பாவை..!//
    பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.///

    நிச்சயமா சிந்திக்க வேண்டும் சொல்லரசன்..

    அங்க இருந்த ஒருத்தருக்குக் கூடவா அது தப்புன்னு தெரியலை.

    என்ன உலகமடா சாமி இது..?!

    ReplyDelete
  23. /////நாமக்கல் சிபி said...
    //ஆதங்கம் புரியுது தமிழா?//
    அக்காங்க்!//

    ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல//

    ஆஹ்

    ReplyDelete
  24. //இந்த ஒரு பாராவை படிச்சு முடிக்கிறதுக்குள்ள நாக்கு வெளில வந்திருச்சு.. //

    அப்போ உங்க பதிவையெல்லாம் படிக்கிறவங்க நிலைமை?

    ReplyDelete
  25. //என்ன புழல் ஜெயில்ல உள்ள வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்னு இப்படி அடம் புடிக்கிறியே முருகா..//

    உண்மைத் தமிழன்!

    யூ ஆர் அண்டர் அரெஸ்ட்!

    உங்களைக் கைது பண்ண மூணு கம்பெனி துணை ராணுவப் படையோட செபட் மலாமும் கொண்டு வந்திருக்கேன்!

    ReplyDelete
  26. உண்மைத்தமிழன்,

    ஆதங்கம் புரியுது.
    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை தயாரித்தவர்கள் தான் இதற்கும் தயாரிபலர்கலம் உண்மையா?. அந்த தொடரில் வருமானம் வரவில்லை எனவும் ஒரு இனைய தளாத்தில் படித்தேன்.

    நன்றி

    ReplyDelete
  27. முதலில் எங்கள் தங்கத்தலைவி நமிதாவை நக்கலடிப்பதை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..

    அண்ணே.. ஸ்டார்..ஜீ டிவியெல்லாம் ஹிந்திசேனல்ண்ணே.. ஆனாலும் நீங்க இப்படி தமிழ் ஆர்வலராய் இருக்க கூடாது..

    நம்ம ஆளுங்களையும் சொல்லனும்னே.. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு செல்ப் எடுக்கல.. ப்ரைஸ் கொடுத்து முடிக்கறதுக்குள்ளே. தயாரிப்பாளர் மூச்சு நின்னு போனதா கேள்வி.. வேற வழியில்ல்

    ReplyDelete
  28. //தப்பித் தவறி இந்தப் பொண்ணு பெரியவளானப்புறம் இதை பார்க்க நேர்ந்தா என்ன நினைப்பா அவளோட அம்மா, அப்பாவை..!//

    நமிதாவோட அம்மா,அப்பாவை பார்த்து நமிதா எப்ப அப்படி நினைக்கும்...???

    ReplyDelete
  29. pathivu ok but
    //'இயேசு வருகிறார்' //
    ithu nallalai.....:(

    ReplyDelete
  30. இப்பவே தொழிலுக்கு பழக்குறாங்க...

    ReplyDelete
  31. /////உடலை வில்லாய் வளைத்து, சுழன்று, அந்தரத்தில் மிதந்து, ஒடிந்து, ஒடித்து குதித்தோடி தரையில் உள்ளங்கால் ஊன்றி நின்று கைகளை உயர்த்தி பார்க்கும் பார்வையில் இருந்தது உடல்கட்டு நேர்த்தி. கொஞ்சமும் தாமதிக்காமல் கை தட்டத் தோன்றுகிறது, அது ஒரு வித்தையென்று..!

    இது..!? /////

    கலி முற்றுகிறது! வேறென்ன?

    ReplyDelete
  32. It is very unfortunate. In fact, I hate to watch kids cracking insane jokes in Asatha Povathu Yaaru. I also think that the parents are the real culprits. -krishnamoorthy

    ReplyDelete
  33. //////Blogger ♠புதுவை சிவா♠ said...
    நண்பா உடம்பு சரி இல்லையா?
    ;-))))))))))))
    பதிவு சின்னதா இருக்கு////

    இதையெல்லாம் அதிகமாக எழுதினால்தான் உடம்புக்கு ஆகாது!

    ReplyDelete
  34. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நாமக்கல் சிபி said...
    தங்கத் தலைவி நமீதா வாழ்க!//
    முருகன் கண்ணைக் குத்தப் போறான்..!!/////

    சிபியாருக்கு மனக்கண் இருக்கிறதே?

    ReplyDelete
  35. ///ILA said...
    //நாமக்கல் சிபி said...
    ஆதங்கம் புரியுது தமிழா?
    அக்காங்க்!//
    ஒரு வரி எழுதறதுக்குக் கூடவா உடம்பு முடியல//
    ஆஹ்///

    சாமி.. இதுக்கு மாநக்கல் பார்ட்டியே பரவாயில்லையே..!

    ReplyDelete
  36. ///அஸ்கு புஸ்கு said...

    //இந்த ஒரு பாராவை படிச்சு முடிக்கிறதுக்குள்ள நாக்கு வெளில வந்திருச்சு.. //

    அப்போ உங்க பதிவையெல்லாம் படிக்கிறவங்க நிலைமை?///

    அஸ்கு புஸ்கு.. இதுவரைக்கும் யாரும் என் பதிவைப் படிச்சு புரியலைன்னு என்கிட்ட சொன்னதில்லை தெர்யுமா..?!

    ReplyDelete
  37. ///வால்டர் வெற்றிவேல் said...
    //என்ன புழல் ஜெயில்ல உள்ள வைச்சுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்னு இப்படி அடம் புடிக்கிறியே முருகா..//

    உண்மைத் தமிழன்! யூ ஆர் அண்டர் அரெஸ்ட்! உங்களைக் கைது பண்ண மூணு கம்பெனி துணை ராணுவப் படையோட செபட் மலாமும் கொண்டு வந்திருக்கேன்!///

    செபட் மலாமா..?! அப்படீன்னா..?

    ReplyDelete
  38. //Anonymous said...
    உண்மைத்தமிழன், ஆதங்கம் புரியுது.
    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை தயாரித்தவர்கள்தான் இதற்கும் தயாரிபலர்கலம் உண்மையா?. அந்த தொடரில் வருமானம் வரவில்லை எனவும் ஒரு இனைய தளாத்தில் படித்தேன்.
    நன்றி//

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி நஷ்டம்தான்.. அளவுக்கதிகமான செலவு செய்துவிட்டு வருமானத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்தானே..!

    ReplyDelete
  39. //Cable Sankar said...
    முதலில் எங்கள் தங்கத் தலைவி நமிதாவை நக்கலடிப்பதை நிறுத்துங்கள்.. இல்லாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..//

    அட நம்ம கேபிளாரு.. இவர் எப்படி நமீதா கட்சில சேர்ந்தாருன்னு தெரியலையே..!

    //அண்ணே ஸ்டார்.. ஜீ டிவியெல்லாம் ஹிந்தி சேனல்ண்ணே.. ஆனாலும் நீங்க இப்படி தமிழ் ஆர்வலராய் இருக்க கூடாது..//

    ஆமாண்ணே.. ஸ்டா, ஜீ டிவியெல்லாம் ஹிந்தி சேனல்ன்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுதுண்ணேன்..

    //நம்ம ஆளுங்களையும் சொல்லனும்னே.. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு செல்ப் எடுக்கல.. ப்ரைஸ் கொடுத்து முடிக்கறதுக்குள்ளே. தயாரிப்பாளர் மூச்சு நின்னு போனதா கேள்வி.. வேற வழியில்ல்//

    அதுக்காக இப்படியா..!? ஒரு அளவு வேண்டாமா..?

    ReplyDelete
  40. ///கீழை ராஸா said...

    //தப்பித் தவறி இந்தப் பொண்ணு பெரியவளானப்புறம் இதை பார்க்க நேர்ந்தா என்ன நினைப்பா அவளோட அம்மா, அப்பாவை..!//

    நமிதாவோட அம்மா,அப்பாவை பார்த்து நமிதா எப்ப அப்படி நினைக்கும்...???//

    அதான.. ஒரு வேளை நமீதா சின்ன வயசுல அப்படித்தான் ஆடியிருக்குமோ..?!

    ReplyDelete
  41. ///Dr.Sintok said...

    pathivu ok but
    //'இயேசு வருகிறார்' //
    ithu nallalai.....:(///

    சும்மா ஒரு ஒப்புமைக்காகத்தான்..

    ReplyDelete
  42. //pukalini said...
    இப்பவே தொழிலுக்கு பழக்குறாங்க...//

    அதான் தப்புன்றேன் புகழினி..!

    இது பெற்றவர்களின் பணம் மற்றும் விளம்பர ஆசையினால் விளைவது..!

    ReplyDelete
  43. ////SP.VR. SUBBIAH said...
    //உடலை வில்லாய் வளைத்து, சுழன்று, அந்தரத்தில் மிதந்து, ஒடிந்து, ஒடித்து குதித்தோடி தரையில் உள்ளங்கால் ஊன்றி நின்று கைகளை உயர்த்தி பார்க்கும் பார்வையில் இருந்தது உடல்கட்டு நேர்த்தி. கொஞ்சமும் தாமதிக்காமல் கை தட்டத் தோன்றுகிறது, அது ஒரு வித்தையென்று..!
    இது..!?//
    கலி முற்றுகிறது! வேறென்ன?///

    முற்றலின் முடிவுதான் என்ன வாத்தியாரே..!

    ReplyDelete
  44. //Anonymous said...
    It is very unfortunate. In fact, I hate to watch kids cracking insane jokes in Asatha Povathu Yaaru. I also think that the parents are the real culprits. -krishnamoorthy//

    வயதுக்கு மீறிய பேச்சுக்களால் எழும் அபாயங்களை அந்தப் பெற்றோரே பி்ன்னாளில் சந்திக்க நேரிடலாம்.. அப்போதுதான் தெரியும் இதன் பலன் என்னவென்று..!?

    ReplyDelete
  45. ///SP.VR. SUBBIAH said...

    //////Blogger ♠புதுவை சிவா♠ said...
    நண்பா உடம்பு சரி இல்லையா?
    ;-))))))))))))
    பதிவு சின்னதா இருக்கு////

    இதையெல்லாம் அதிகமாக எழுதினால்தான் உடம்புக்கு ஆகாது!///

    நன்றி வாத்தியாரே..!

    இதை எப்படி 10 பக்கத்துக்கு விவரிச்சு எழுதறது? மனசு கஷ்டமா இருந்துச்சு.. அதுதான் சுருக்கிட்டேன்..

    ReplyDelete
  46. Get Life!! Brother...
    U might be a pshycic!!
    U and the below video doesnt make any difference!!!
    If U dare, Publish it..
    Am a tamizhlan toooo....
    http://www.youtube.com/watch?v=l7yg-bdlmko

    ReplyDelete
  47. //செபட் மலாமா..?! அப்படீன்னா..?//

    புண் "படை" சொறி சிரங்கு ஆகியவற்றுக்கு போடப்படும் மருந்து!

    ReplyDelete
  48. //அஸ்கு புஸ்கு.. இதுவரைக்கும் யாரும் என் பதிவைப் படிச்சு புரியலைன்னு என்கிட்ட சொன்னதில்லை தெர்யுமா..?!//

    முழுசாப் படிக்க முடிஞ்சாத்தானே புரிஞ்சிதா இல்லையான்னு முடிவு பண்ண!

    அதுக்கு முன்னாடியே நாக்கு வெளிய தள்ளிடுதே!

    ReplyDelete
  49. //பழமைபேசி said...
    ஆதங்கம் புரியுது தமிழா//


    ரிப்பீட்டேய்............

    ReplyDelete
  50. // ♠புதுவை சிவா♠ said...
    நண்பா உடம்பு சரி இல்லையா?
    ;-))))))))))))
    பதிவு சின்னதா இருக்கு//

    ஹாஹாஹாஹாஹாஹா.............

    ReplyDelete
  51. தலைவரே...

    நீங்களும் உருப்படியா நல்ல பதிவெல்லாம் எழுதுனாலும் இந்த மாதிரி நமீதா பதிவு எழுதுனாதான், சூடான இடுகையில வருது...

    கலிகாலம் கலிகாலம்

    முருகன்தான் காப்பாத்தணும்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  52. நீங்க என்ன கலாச்சாரக் காவலரா,எங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்றது எங்க தனி மனித உரிமை.இத கலாச்சாரம் கத்திரிக்காய்னு சொல்லி கண்டிக்கறத நான் வன்மையா கண்டிக்கிறேன்...
    நாங்க இத எதுத்து கட்டுடைப்பு கலகம் பண்ணுவோம்..புண்நவீனத்துவம் வால்க..

    ReplyDelete
  53. அப்படியே இந்த பாய்ஸ் வெர்ஸஸ் கர்ல்ஸ் நிகழ்ச்சிக்கு கலக்கலா வந்த தலைவி நமீதா,உங்க மாதிரி கலாச்சாரக்காவல்காரங்களுக்கு பயந்து 10 மீட்டர் துணிய தூண்ல..அடச்சே,மேலே போட்டுகுட்டு பயந்து(!)குட்டு உக்காந்துருக்கறதயும் பாக்க அழுவாச்சி அழுவாச்சியா வருது..உங்க கலாச்சார அழும்புக்கெல்லாம் ஒரு அளவு கிடையாதா..

    ReplyDelete
  54. //வால்டர் வெற்றி வேல் said...
    //செபட் மலாமா..?! அப்படீன்னா..?//
    புண் "படை" சொறி சிரங்கு ஆகியவற்றுக்கு போடப்படும் மருந்து!//

    அது யாருக்கு வேணும்..? இருக்கிறவங்களுக்குக் கொடுப்பா வெற்றிவேலு..!

    ReplyDelete
  55. ///அஸ்கு புஸ்கு said...

    //அஸ்கு புஸ்கு.. இதுவரைக்கும் யாரும் என் பதிவைப் படிச்சு புரியலைன்னு என்கிட்ட சொன்னதில்லை தெர்யுமா..?!//

    முழுசாப் படிக்க முடிஞ்சாத்தானே புரிஞ்சிதா இல்லையான்னு முடிவு பண்ண! அதுக்கு முன்னாடியே நாக்கு வெளிய தள்ளிடுதே!///

    நாக்கு வெளில தள்ளினா ரொம்ப ஆபத்தாக்கும்.. சொம்புத் தண்ணியை முழுசா குடி.. சரியாயிரும்..

    ReplyDelete
  56. //அத்திரி said...

    //பழமைபேசி said...
    ஆதங்கம் புரியுது தமிழா//


    ரிப்பீட்டேய்............//

    மொதல்ல இந்த வார்த்தையை தடை செய்யணும்ப்பா.. அல்லாரும் ரொம்ப சோம்பேறியாயிட்டாங்க..!

    ReplyDelete
  57. ///அத்திரி said...

    // ♠புதுவை சிவா♠ said...
    நண்பா உடம்பு சரி இல்லையா?
    ;-))))))))))))
    பதிவு சின்னதா இருக்கு//

    ஹாஹாஹாஹாஹாஹா///

    என்ன சிரிப்பு..? என்ன சிரிப்புங்குறேன்.. அடுத்தவன் கஷ்டத்தைப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா வருதா..? நல்லாயிருங்கப்பூ..

    ReplyDelete
  58. //நித்யகுமாரன் said...

    தலைவரே...

    நீங்களும் உருப்படியா நல்ல பதிவெல்லாம் எழுதுனாலும் இந்த மாதிரி நமீதா பதிவு எழுதுனாதான், சூடான இடுகையில வருது...

    கலிகாலம் கலிகாலம்

    முருகன்தான் காப்பாத்தணும்.

    அன்பு நித்யன்//

    சூடான இடுகைல வந்துச்சா..? எப்போ.. ஆச்சரியமா இருக்கு..!

    இதுக்கும் நமீதாதான் காரணமா..? அப்போ வாழ்க நமீதா..!

    ReplyDelete
  59. //அத்திரி said...

    50 ஓகேவா//

    ரொம்ப நல்லவருங்கோ நீங்க..! நன்றி.. இதை 50 தடவை நீங்களே ரிப்பீட்டா வாசிச்சிருங்க..!

    ReplyDelete
  60. //அறிவன்#11802717200764379909 said...
    நீங்க என்ன கலாச்சாரக் காவலரா, எங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்றது எங்க தனி மனித உரிமை. இத கலாச்சாரம் கத்திரிக்காய்னு சொல்லி கண்டிக்கறத நான் வன்மையா கண்டிக்கிறேன்... நாங்க இத எதுத்து கட்டுடைப்பு கலகம் ண்ணுவோம்.. புண்நவீனத்துவம் வால்க..//

    உங்க புண்நவீனத்துவம் புண்ணானது.. போங்க.. போய்த் தொலைங்க..

    ReplyDelete
  61. //அறிவன்#11802717200764379909 said...
    அப்படியே இந்த பாய்ஸ் வெர்ஸஸ் கர்ல்ஸ் நிகழ்ச்சிக்கு கலக்கலா வந்த தலைவி நமீதா, உங்க மாதிரி கலாச்சாரக் காவல்காரங்களுக்கு பயந்து 10 மீட்டர் துணிய தூண்ல.. அடச்சே, மேலே போட்டுகுட்டு பயந்து(!)குட்டு உக்காந்துருக்கறதயும் பாக்க அழுவாச்சி அழுவாச்சியா வருது.. உங்க கலாச்சார அழும்புக்கெல்லாம் ஒரு அளவு கிடையாதா..//

    கிடையாது.. அது சரி..

    அறிவன் ஸாருக்கும் நமீதாவுக்கும் என்ன தொடர்பு..? சீன தேசத்து ரசிகர் மன்றத் தலைவர் தாங்கள்தானா..?

    ReplyDelete
  62. //அது யாருக்கு வேணும்..? இருக்கிறவங்களுக்குக் கொடுப்பா வெற்றிவேலு..!//

    மூணு கம்பெனி துணை ராணுவப் 'படை'யோட வந்திருக்கேன்னு சொன்னேனே! அதுக்குத்தான் செபட் மலாமும் கூடவே கொண்டு வந்தேன்!

    ReplyDelete
  63. ///வால்டர் வெற்றிவேல் said...
    //அது யாருக்கு வேணும்..? இருக்கிறவங்களுக்குக் கொடுப்பா வெற்றிவேலு..!//
    மூணு கம்பெனி துணை ராணுவப் 'படை'யோட வந்திருக்கேன்னு சொன்னேனே! அதுக்குத்தான் செபட் மலாமும் கூடவே கொண்டு வந்தேன்!///

    ஒண்ணும் புரியல..!

    ReplyDelete
  64. //ஒண்ணும் புரியல..!//

    எங்ககிட்டே நல்ல நல்ல டியூப் லைட் இருக்கு!

    ReplyDelete
  65. அதெல்லாம் கிடக்கட்டும்!

    தீபா வெங்கட் நம்பர் எங்கே?

    ReplyDelete
  66. ///வே.க.ப said...

    //ஒண்ணும் புரியல..!//

    எங்ககிட்டே நல்ல நல்ல டியூப் லைட் இருக்கு!///

    என்கிட்ட இருக்குறதே நல்லாத்தான் இருக்கு. அதுனால நான் வேற யார்கிட்டேயும் வாங்குறதில்லையாக்கும்.

    ReplyDelete
  67. //நாமக்கல் சிபி said...
    அதெல்லாம் கிடக்கட்டும்! தீபா வெங்கட் நம்பர் எங்கே?//

    அம்மணி 3 மாசத்துக்கு ஒரு நம்பர் மாத்துதாம்.. உன்னை மாதிரி நல்லவங்க தொல்லை தாங்காம..

    புதுசு கிடைக்கல சாமி.. தேடிக்கிட்டிருக்கேன்.. கிடைச்சவுடனே சொல்றேன்..!

    ReplyDelete