Pages

Tuesday, March 31, 2009

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா...!

31-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் திரைப்படங்கள் மட்டும் பங்கு பெறும் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா தற்பொழுது இந்தியாவில் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 5-ம் தேதி ஆரம்பித்து, டெல்லி, மும்பை, புனே, கோழிக்கோடு, சென்னை, ஜாம்ஷெட்பூர் என்ற பல பிரதேச நகரங்களில் வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வரையிலும் இத்திரைப்படத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த வரிசையில் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரையிலும் சென்னையில் இத்திரைப்பட விழா நடைபெறும்.

சென்னை அண்ணா சாலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் இத்திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. கடைசி நாளைத் தவிர மற்ற நாட்களில் மாலை 6.15 மணிக்கு முதல் திரைப்படமும், இரவு 8.15 மணிக்கு மற்றொரு திரைப்படமும் திரையிடப்படும்.

இத்திரைப்படவிழா சென்னை ICAF அமைப்போடு இணைந்து நடத்தப்படுகிறது.

இத்திரைப்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல்

03-04-2009 – 6.15 மணிக்கு Czech Dream (Czech Republic)

8-15 மணிக்கு The Black Pimpernel (Sweden)

04-04-2009 – 6.15 மணிக்கு Could This be love (France)

8-15 மணிக்கு Do not think about it (Italy)

05-04-2009 – 6.15 மணிக்கு Teah (Slovenia)

8-15 மணிக்கு Happy Family (Netherlands)

06-04-2009 – 6.15 மணிக்கு Relatives (Hungary)

8-15 மணிக்கு Seven Billiards Tables (Spain)


07-04-2009 – 6.15 மணிக்கு Arabian Nights (Luxembourg)

8-15 மணிக்கு Beauty of the Bastard (Finland)
08-04-2009 – 6.15 மணிக்கு Return of the Storks (Slovakia)
8-15 மணிக்கு The Front Line (Ireland)

09-04-2009 – 6.15 மணிக்கு Hania (Poland)

8-15 மணிக்கு Sophie Scholl – The Last Days (Germany)
10-04-2009 – 6.15 மணிக்கு Totally Married (Greece)

8-15 மணிக்கு A Perfect Match (Belgium)
11-04-2009 – 6.15 மணிக்கு Welcome Home (Austria)

8-15 மணிக்கு Fighter (Denmark)

12-ம் தேதி நிறைவு விழாவன்று Trial (Portugal) திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

ஆர்வமுள்ள உலக சினிமாவின் ரசிகர்களை அன்போடு வரவேற்கிறேன்..

18 comments:

  1. இனி நீங்க அடிச்சி, அடிச்சி, டயர்டாகி ரெஸ்டு எடுக்கும்போதும் டைப்பு அடிக்க வேண்டி வரும் என்று நினைக்கிறன்.
    அதுக்காக நீங்க எங்களுக்கு இந்த படங்களை அறிமுகப்படுத்தும் கலைச்சேவையை நிறுத்திவிடாதீர்கள்.

    ReplyDelete
  2. அண்ணா, படம் பேர் எல்லாம் நல்லா தான் இருக்கு.. தமிழ் படமே புரியாத என்ன மாதிரி தற்குறிகளுக்கு எல்லாம் இந்த படங்கள் புரியுமா ?

    ReplyDelete
  3. ஐரோப்பிய படங்களா..??? :-) :-) ம்ம்ம்..ம்ம்ம்.. சரவணா.... உன் பக்தனுக்கு கருணை காட்டிட்டப்பா...!!!

    சரவணா.. என்ஜாய்..!!:) :) :)

    ReplyDelete
  4. முடிந்த அளவு வர முயற்சிக்கிறேன்!

    டிக்கெட் விபரங்கள்?

    ReplyDelete
  5. அழகாக பதிவு இட்டு இருக்கிறீர்கள் .எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடுகிறீர்கள் .

    ReplyDelete
  6. http://biskothupayal.blogspot.com/
    பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
    பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.

    உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. //நையாண்டி நைனா said...
    இனி நீங்க அடிச்சி, அடிச்சி, டயர்டாகி ரெஸ்டு எடுக்கும்போதும் டைப்பு அடிக்க வேண்டி வரும் என்று நினைக்கிறன்.
    அதுக்காக நீங்க எங்களுக்கு இந்த படங்களை அறிமுகப்படுத்தும் கலைச்சேவையை நிறுத்திவிடாதீர்கள்.//

    ஆஹா.. நைனாஜி.. முதல் பின்னூட்டமே இப்படி ஊக்கப்படுத்துற மாதிரி போட்டிருக்கீங்க..

    கவலைப்படாதீங்க.. எப்பாடுபட்டாவது என் கை ஒடிஞ்சாக்கூட பரவாயில்லை..

    எல்லா படத்துக்கும் 15 பக்கத்துக்கு கதை எழுதித் தள்ளிர்றேன்.. நன்றி நைனாஜி..

    ReplyDelete
  8. //Bhuvanesh said...
    அண்ணா, படம் பேர் எல்லாம் நல்லா தான் இருக்கு.. தமிழ் படமே புரியாத என்ன மாதிரி தற்குறிகளுக்கு எல்லாம் இந்த படங்கள் புரியுமா ?//

    தம்பி புவனேஷ்..

    நீயே தற்குறின்னா நாெனல்லாம் என்னன்னு சொல்லிக்கிறது..

    கலைக்கு மொழி கிடையாது ராசா.. தாராளமா வந்து பாரு.. நல்லா புரியும்..

    ReplyDelete
  9. //ஹாலிவுட் பாலா said...
    ஐரோப்பிய படங்களா..??? :-) :-) ம்ம்ம்..ம்ம்ம்.. சரவணா.... உன் பக்தனுக்கு கருணை காட்டிட்டப்பா...!!!

    சரவணா.. என்ஜாய்..!!:) :) :)//

    படம் பார்த்தாத்தான் தெரியும்.. இது கருணையா? அல்லது தண்டனையான்னு..!

    ReplyDelete
  10. //வால்பையன் said...
    முடிந்த அளவு வர முயற்சிக்கிறேன்!

    டிக்கெட் விபரங்கள்?/
    /

    ICAF மெம்பர்னா இலவசம்தான்.. மத்தவங்கன்னா அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும்தானாம்..!

    ReplyDelete
  11. //வண்ணத்துபூச்சியார் said...
    நன்றி.//

    நன்றிக்கொரு நன்றிங்கண்ணா..!

    ReplyDelete
  12. //malar said...
    அழகாக பதிவு இட்டு இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடுகிறீர்கள்//

    நன்றி மலர்..

    இது மிக, மிக ஆர்வமான விஷயம். அதனால்தான்..

    என்ன ரொம்ப நாளா காணலையே..!

    ReplyDelete
  13. //biskothupayal said...
    http://biskothupayal.blogspot.com/
    பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
    பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.

    உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

    ஆசி வழங்கும் அளவுக்கு நான் வயதானவனோ, பெரியவனோ இல்லை..

    ஆனால் ஆதரவை கண்ணுமண்ணு தெரியாமல் வழங்குகிறேன்..

    நிறைய எழுதுங்கள்..

    வாழ்க வளமுடன்..!

    ReplyDelete
  14. //ICAF மெம்பர்னா இலவசம்தான்.. மத்தவங்கன்னா அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும்தானாம்..!//

    அண்ணே 'வா'னு சொல்லறீங்க.. இந்த கண்டிஷன் எல்லாம் சொல்லறீங்க.. நாங்க எப்படி வரது ?

    ReplyDelete
  15. ///Bhuvanesh said...
    //ICAF மெம்பர்னா இலவசம்தான்.. மத்தவங்கன்னா அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும்தானாம்..!//

    அண்ணே 'வா'னு சொல்லறீங்க.. இந்த கண்டிஷன் எல்லாம் சொல்லறீங்க.. நாங்க எப்படி வரது?///

    500 ரூபா கொடுத்து ICAF-ல மெம்பர் ஆயிருங்க.. எல்லாத்தையும் பார்த்திரலாம்..

    எப்ப வர்றீங்க..?!

    ReplyDelete
  16. //500 ரூபா கொடுத்து ICAF-ல மெம்பர் ஆயிருங்க.. எல்லாத்தையும் பார்த்திரலாம்..
    எப்ப வர்றீங்க..?!//

    ஹலோ.. நீங்க பேசறது சரியா கேட்க மாட்டீங்குது..

    ReplyDelete