Pages

Saturday, March 28, 2009

ப்ளாஷ் நியூஸ்-ஜெயலலிதா-ராமதாஸ் சந்திப்பு-தொகுதி உடன்பாடு முடிவானது

28-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டதைப் போல மருத்துவர் ஐயா, தனது அன்புச் சகோதரியை இன்று காலை 10.40 மணிக்கு போயஸ் தோட்டத்து இல்லத்தில் சந்தித்துவிட்டார்.

மருத்துவருடன், பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி, அம்பத்தூர் நகரசபைத் தலைவர் சேகர் ஆகியோரும் உடன் வந்தனர். இவர்களை அ.தி.மு.க. சார்பில் தம்பித்துரை, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

வாசலில் வந்து நின்று சகோதரி தனது மூத்த சகோதரரை வரவேற்ற பாங்கு தொலைக்காட்சியில் பார்த்தபோது புல்லரிக்க வைத்தது. அண்ணன் கொடுத்த பூங்கொத்தை வாங்கிக் கொண்ட அன்புச் சகோதரி, அண்ணனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று அமர வைத்து பேசினார். அப்போது இரு கட்சிகளுக்கிடையிலான தேர்தல் உடன்பாடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். உள்ளே போன 15 நிமிடத்தில் பேச்சுவார்த்தை முடிந்து பாசமலர் அண்ணன் கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அருமைத் தங்கை ஓகே செய்துவிட்டாராம்.

வெளியில் வந்த பாசமலர்களான அண்ணனும், தங்கையும் பத்திரிகையாளர்களை ஒன்றாகவே சந்தித்தார்கள். அப்போது தங்கை பேசுகையில், "அ.தி.மு.க.வும், பா.ம.கவும் கூட்டணி அமைத்து நடைபெற உள்ள 2009 பாராளுமன்றப் பொதுத் தேர்தலை சந்திக்க உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், அண்ணன், டாக்டர் அண்ணன் அவர்களுக்கும் எனக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 2010-ம் ஆண்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் பா.ம.க.வுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.." என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாசமலர் அண்ணன் அவர்கள், "அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அன்புச் சகோதரி அவர்களோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணி. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் சாதாரண வெற்றியல்ல, மகத்தான வெற்றியை இந்தக் கூட்டணிதான் பெறப் போகிறது.. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததற்கு பெரும் பெரும் மகிழ்ச்சிய அடைகிறேன்..” என்று உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார்.

பின்பு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அன்புத் தங்கை பதிலளித்தார்.

கேள்வி - உங்கள் கூட்டணியில் மற்றக் கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன?

அன்புத்தங்கையின் பதில் - கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் உடன்படிக்கை ஏற்படும்.

கேள்வி - 3-வது அணியில் பா.ம.க. இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே..

அன்புத்தங்கையின் பதில் - அ.தி.மு.க. அணியில் இருப்பதாக அவரே சொல்லியுள்ளார்.

கேள்வி - ராமதாஸ் உங்கள் கூட்டணியில் இணைந்ததால் அரசியலில் எத்தகைய மாற்றம் ஏற்படும்..?

அன்புத்தங்கையின் பதில் - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் அண்ணனை சந்தித்துள்ளேன். இது மகிழ்ச்சியான தருணம். இந்தியா முழுவதும் உள்ள அரசியல் வல்லுநர்கள் இந்தக் கூட்டணியைத் தோற்கடிக்க முடியாத கூட்டணி என்று கூறியுள்ளனர்.

கேள்வி - வெற்றி பெறுவோம் என்று நீங்கள் எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்..?

அன்புத்தங்கையின் பதில் - தேர்தல் முடிந்த பின்பு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..

இந்தக் கடைசிக் கேள்விக்குப் பிறகும் மேலும் தொடர்ந்து பேட்டியளிக்க அன்புத்தங்கை, அம்மா, தங்கத் தலைவி, தங்கமங்கை, தன்மானத் தலைவி, புரட்சித்தலைவிக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..? இத்தோடு பேட்டி முடிந்தது என்று சொல்லிவிட்டார்.

பின்பு பாசமலர்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்று ஒரு சிறு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். 5 நிமிடங்கள் கழித்து மருத்துவர் ஐயாவும், அவருடன் வந்தவர்களும் வந்த வேலை முடிந்தது என்று கிளம்பியிருக்கிறார்கள். மருத்துவர் ஐயாதான் அடுத்து மறுபடியும் தனது அன்புச் சகோதரியை அடுத்து சட்டமன்றத் தேர்தலின்போதுதான் பார்க்க முடியுமோ என்கிற கலக்கத்தில் சென்றிருப்பதாக உளவுத்துரைத் தகவல்..

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மருத்துவர் ஐயா தோட்டத்தில் இருந்தபோது உற்சாக மிகுதியில் தொண்டர்கள் விசிலடித்து, கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்துள்ளனர். மேலும் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு தொண்டர்களே ஸ்வீட் கொடுத்து உபசரித்துள்ளனர்.

காலையில் சந்திப்பு முடிந்த பின்பு மதியம் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம்(தனி), தர்மபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளி்ல் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடவே பா.ம.கட்சி வட்டாரத்தில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பெயர்களையும் லேசுபாசாகத் தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி ஸ்ரீபெரும்புதூர்-ஏ.கே.மூர்த்தி, தர்மபுரி - டாக்டர் செந்தில், கள்ளக்குறிச்சி - தன்ராஜ், திருவண்ணாமலை-காடுவெட்டி குரு, அரக்கோணம்-வேலு, சிதம்பரம்-இன்ஜீனியர் கண்ணபிரான், புதுச்சேரி-தற்போதைய எம்.பி.யான ராமதாஸ் என்று சொல்கிறார்கள்.

2010-ல் கிடைக்கப் போகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி சந்தேகமேயில்லாமல் டாக்டரின் இளவலுக்குத்தான்..

இடம் மாறிவிட்டதால் மத்திய அமைச்சர்களாக கொலுவீற்றிருந்த இளவல் மருத்துவத் துறை அமைச்சர் அன்புமணியும், ரயில்வே துறை துணை அமைச்சர் வேலுவும் இன்று மாலை டெல்லி சென்று பிரதமரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்துவிட்டனர். அப்பாடா.. விட்டதடா தொல்லை என்று மன்மோகன்சிங் இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவார் என்று நினைக்கிறேன். இவர் மட்டுமல்ல தன்மானத் தலைவரும்தான்..!

29 comments:

  1. அய்யா தாங்கள் ஏன் நகைச்சுவை என லேபிள் போடலை இந்த பதிவுக்கு! வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது!

    ReplyDelete
  2. //Sampath said...

    me the first ..//

    இதுக்கும்மா..?

    என்ன கொடுமை சம்பத் இது..?!

    ReplyDelete
  3. //அபி அப்பா said...
    அய்யா தாங்கள் ஏன் நகைச்சுவை என லேபிள் போடலை இந்த பதிவுக்கு! வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது!//

    அறிவாலயக் கூட்டணி லிஸ்ட் வெளியாகும்போது கண்டிப்பா நகைச்சுவைன்னு லேபிள் போடுவோம்..!

    ReplyDelete
  4. //அறிவாலயக் கூட்டணி லிஸ்ட் வெளியாகும்போது கண்டிப்பா நகைச்சுவைன்னு லேபிள் போடுவோம்..!//

    அப்படிபோடுங்க! அரிவாளெ! :)

    ReplyDelete
  5. ///நல்லதந்தி said...

    //அறிவாலயக் கூட்டணி லிஸ்ட் வெளியாகும்போது கண்டிப்பா நகைச்சுவைன்னு லேபிள் போடுவோம்..!//

    அப்படி போடுங்க! அரிவாளெ!:)///

    பின்ன.. அவங்களுக்கே அவ்வளவு இருக்கும்போது, நமக்கு எம்புட்டு இருக்கும்..?!!!!!

    ReplyDelete
  6. நகைச்சுவை லேபிளை விடுங்க> அதென்ன பதிவர் வட்டம், பதிவர் சதுரம்னு லேபிள்?

    ஜெவும் ராமண்ணாவும் பதிவர்களா.. இல்ல பதிவர்கள்ல அரசியல் விளையாடறதால அப்படியா?

    ReplyDelete
  7. அரசியல் விபச்சாரம் என்பதென்றால் இதுதான்..

    ReplyDelete
  8. அறிவாலயக் கூட்டணி லிஸ்ட் வெளியாகும் போது 'ஏப்ரல் 1 - முட்டாள்கள் தினம்' அப்படீன்னு லேபிள் போடுங்க. ரொம்ப பொருத்தமா இருக்கும்.

    ReplyDelete
  9. //பரிசல்காரன் said...

    நகைச்சுவை லேபிளை விடுங்க> அதென்ன பதிவர் வட்டம், பதிவர் சதுரம்னு லேபிள்?

    ஜெவும் ராமண்ணாவும் பதிவர்களா.. இல்ல பதிவர்கள்ல அரசியல் விளையாடறதால அப்படியா?//

    நீங்க சொன்ன 'அப்படியா'தான் பரிசலு..!

    ReplyDelete
  10. //வாசகன் said...

    அரசியல் விபச்சாரம் என்பதென்றால் இதுதான்..//

    இதைத்தான் வருஷக்கணக்கா செஞ்சுட்டிருக்காங்களே..!

    ReplyDelete
  11. //மாயவரத்தான்.... said...
    அறிவாலயக் கூட்டணி லிஸ்ட் வெளியாகும் போது 'ஏப்ரல் 1 - முட்டாள்கள் தினம்' அப்படீன்னு லேபிள் போடுங்க. ரொம்ப பொருத்தமா இருக்கும்.//

    அநேகமாக, நிஜமாவே ஏப்ரல்-1 அன்றைக்குத்தான் அந்தக் கூட்டணி செய்திகள் வெளியாகும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள்.

    என்ன பொருத்தம் பாருங்கள்..!

    ReplyDelete
  12. hello sir
    i am new to blogger.
    plz add my link
    sankarkumarpakkam.blogspot

    ReplyDelete
  13. ஐ சின்ன்னப்பதிவு

    :)

    ReplyDelete
  14. அபி அப்பா said...

    அய்யா தாங்கள் ஏன் நகைச்சுவை என லேபிள் போடலை இந்த பதிவுக்கு! வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது!
    //


    இந்த உடன்பிறப்பு(கள்) தொல்லை தாங்கலைடா சாமி :)

    ReplyDelete
  15. sankarfilms said...
    hello sir i am new to blogger.
    plz add my link sankarkumarpakkam.blogspot//

    வாங்க ஷங்கர்..

    தங்களது வரவு நல்வரவாகட்டும்..!

    நிறைய எழுதுங்கள்.. படைப்புகளைத் தாருங்கள்.. படிக்க காத்திருக்கிறோம்..!

    ReplyDelete
  16. //மின்னுது மின்னல் said...

    ஐ சின்ன்னப்பதிவு

    :)//

    இப்ப மறுபடியும் படிங்க.. கொஞ்சம் பெரிசாயிருச்சு..

    ReplyDelete
  17. ///மின்னுது மின்னல் said...

    அபி அப்பா said...
    அய்யா தாங்கள் ஏன் நகைச்சுவை என லேபிள் போடலை இந்த பதிவுக்கு! வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது!//

    இந்த உடன்பிறப்பு(கள்) தொல்லை தாங்கலைடா சாமி :)///

    உண்மைதான் மின்னலு.. ஊருக்குள்ளாற இருக்குற உடன்பிறப்புகள் அடங்கியிருக்குதுக.. இந்த வெளிநாட்டுல இருக்குறதுக துள்ளிக்கிட்டுத் திரியுதுக..!

    ReplyDelete
  18. அண்ணனும் அன்புதங்கையும் சந்திப்பில் பாசமலர் படம் தோற்றுவிட்டது

    ReplyDelete
  19. //அத்திரி said...

    அண்ணனும் அன்புதங்கையும் சந்திப்பில் பாசமலர் படம் தோற்றுவிட்டது.//

    அத்திரி தம்பி..

    கரீக்ட்டா சொல்லிருக்கீங்க..

    இன்னும் கைவீசம்மா கைவீசு பாட்டுதான் பாடலை..!

    ReplyDelete
  20. எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!

    ReplyDelete
  21. எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!

    ReplyDelete
  22. எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!

    ReplyDelete
  23. ''இனி மீண்டும் ஜெ வுடன் கூட்டணி வைப்பது என்பது, மகன் தன் தாயையே புணர்வதற்கு சமம்'' யாரோ சொன்னது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

    ReplyDelete
  24. என்னய வச்சுதான் கும்மி ஓடுதா? நடத்துங்க!

    ReplyDelete
  25. //Aruna said...
    எப்போதுமே பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி!//

    இந்த முறை அது நடக்காது என்று நினைக்கிறேன் அருணா..

    ReplyDelete
  26. //நந்தவனத்தான் said...
    ''இனி மீண்டும் ஜெ வுடன் கூட்டணி வைப்பது என்பது, மகன் தன் தாயையே புணர்வதற்கு சமம்'' யாரோ சொன்னது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.//

    ச்சூ.. சத்தமா சொல்லாதீங்க.. யாருக்காச்சும் தெரிஞ்சு போய் டிவில அதையே ரீப்ளே போட்டு மானத்தை வாங்கிரப் போறாங்க..!

    ReplyDelete
  27. //அபி அப்பா said...
    என்னய வச்சுதான் கும்மி ஓடுதா? நடத்துங்க!//

    அப்புறம்.. நீங்கதாண்ணே எங்களோட உண்மையான உடன்பிறப்பு..!

    ReplyDelete