Pages

Sunday, March 22, 2009

தீயான திரைப்படம் அருந்ததி..!

22-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அசத்தியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. வெற்றி பெறக்கூடிய திரைப்படம்தான்..

தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும். நடக்க முடியாத கதையை நடந்த கதைபோல் காட்டி அசர வைத்திருக்கிறார் இயக்குநர்.

அம்புலிமாமா, ரத்னபாலா கதைதான்.. ஆனால் எடுத்தவிதம்தான் நம்முடைய தொழில் நுட்ப அறிவை பறை சாற்றுகிறது.

அருந்ததி.. கந்தர்வக்கோட்டை என்னும் குட்டி சமஸ்தானக் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு. அந்த சமஸ்தானத்தில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் அரசாண்ட அருந்ததியே, இப்போது பேத்தியாக பிறந்திருக்கிறாள். அவதார நோக்கம் அப்போது முடிக்காத கதையை இப்போது முடிப்பதற்காக..!

சொந்த அக்கா கணவனான பசுபதியை அவன் செய்த அட்டூழியங்களுக்காக தண்டிக்கிறாள் அருந்ததி. ஊரைவிட்டே துரத்தியடிக்கிறாள். நார், நாராக பிய்த்து எடுக்கப்பட்ட நிலையில் காட்டிற்குள் வீசப்படும் பசுபதி அங்கே நர மாமிசம் சாப்பிடும் அகோரிகளின் கண்களில் படுகிறான். அவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் கொடுத்து, ஊன் கொடுத்து, ஊட்டச் சத்துக் கொடுத்து, மந்திர, தந்திரம் கற்றுக் கொடுத்து கை தேர்ந்த வில்லனாக உருவாக்கி அனுப்புகிறார்கள்.

ஏழாண்டு காலத்திற்குப் பின் தனது மாமனாரின் அரண்மனைக்குள் நுழையும் பசுபதி அன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அருந்ததியின் திருமணத்தில் கொலை விளையாட்டு நடத்துகிறான். மாமனாரை படுகொலை செய்கிறான். அருந்ததியை தான் இப்போதே அடைய வேண்டும் என்கிறான். அவன் விருப்பப்படியே நடந்து கொள்ளும் அருந்ததி தந்திரமாக அவனைத் தாக்கி படுக்க வைக்கிறாள். அந்த நிலையிலேயே அவனைச் சுற்றிலும் கல்சுவர் எழுப்பி உயிரோடு சமாதியாக்கிவிடுகிறாள்.

அத்தோடு அந்த அரண்மனையை அனைவரும் தலை முழுகிவிட்டு போய்விட.. இப்போது பேத்தி அருந்ததி அந்த ஊருக்கு வரும்போதுதான் கதை துவங்குகிறது. அவளை பசுபதியே வரவழைக்கிறான். அவள் வந்த பின்பு அவளையும், அவள் குடும்பத்தையும் அழிப்பேன் என்று சபதமெடுத்த பசுபதி செய்து முடித்தானா? இல்லையா..? என்பதைத்தான் வழக்கமான வில்லன்-ஹீரோயின் கதை போல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

திரைப்படத்துறையில் கிடைக்கும் அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் இதில் பயன்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

முதல் பாராட்டு படத்தின் கலை இயக்குநருக்கு.. படத்தின் ரிச்னெஸ் காட்சிக்கு காட்சி இழையாடுகிறது.. அவ்வளவு அழகான செட் அந்த அரண்மனை.. பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்தது அனுஷ்கா.. அம்மணி தன்னுடைய கேரியர் முழுவதிலும் நடிக்க வேண்டியதை இந்த ஒரு படத்திலேயே முடித்துவிட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம்.. நான் ஜெமினி டிவியில் பார்த்த பல பாடல் காட்சிகளில் கடற்கரையோரமாக தாவணியை கழட்டிவீசிவிட்டு காத்து வாங்கிக் கொண்டிருந்தார். 4 நிமிட பாடல் காட்சியில் மூன்றாவது நிமிடத்தில் கிடைத்த பத்து செகண்ட் குளோஸப்பில்தான் அது அனுஷ்கா என்பதே தெரிந்தது.

இடுப்பு சுழிக்கிக் கொள்ளுமளவுக்கு ஆட்டம் ஆடியிருந்த அம்மணியா இப்படி..? ஆச்சரியமாக இருக்கிறது. இயக்குநர்கள் மிகச் சரியானவராக அமைந்தால் திறமை நிச்சயம் வெளிப்படும் என்பார்கள். இதில் கோடிராமகிருஷ்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.. இந்த அம்மணி விஜய்யுடனும், அஜீத்திடனும் நடிக்கப் போகிறாராம்.. பாவம்.. நமது தமிழ் ரசிகர்கள்..!

நமது இயக்குநர்கள் இவர் போன்ற இளமை ததும்பும் நடிகையரிடம் வைக்கத் தயங்கும் குளோஸப் காட்சிகள்தான் இந்தப் படத்தில் அதிகம். கோபத்தின் மூச்சுக் காற்றில் அனுஷ்காவின் மூக்குத்தி நகர்வதைக்கூட துல்லியமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். முதல் பாடல் காட்சியின் இறுதியில் அனுஷ்காவின் பின்புறமிருந்து இடுப்புப் பக்கத்திற்கு கேமிரா உயர்ந்து வந்து நிற்பது என்ன ஒரு ஷாட்..?!

மேக்கப்பே இல்லாமல் காட்சியளிக்கும் பேத்தி அருந்ததியின் நடிப்பைவிட இறுதியில் பாட்டி அருந்ததியே வெறி பிடிக்க வைக்கிறார். இதற்கு மிகப் பெரும் உதவிகரம் ஒளிப்பதிவாளர்.. அரண்மனைக் காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதுமே மிக அழகாக இருக்கின்றன..

கிராபிக்ஸ் காட்சிகளும், மேக்கப்பும், இசையும்தான் படம் திகில் படம் என்பதை அவ்வப்போது காண்பித்துக் கொண்டேயிருக்கின்றன. வில்லனின் மோப்பம் பிடிக்கும் காட்சியை இரண்டு இடங்களில் பெண் கதாபாத்திரங்கள் மூலமாகச் செய்யும்போது அதிர்கிறது பின்னணி இசை.. அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் டெக்னிக்கல் கொடி கட்டிப் பறந்திருக்கிறது.. ஆக்ஷன் படங்களில் டைம்லேப் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பார்கள். இதில் கச்சிதமாகவே உள்ளது.

பேயோட்டுபவராக வரும் சாயாஜி ஷிண்டேவுக்கு மிகப் பொருத்தமான வேடம்தான்.. பொதுவாகவே தெலுங்குக்காரர்களுக்கு வில்லன்கள் என்றாலே கர்ஜனை குரல்தான் முக்கியம் என்பார்கள். சாயாஜி அறிமுகக் காட்சியில் இருக்கும் ஸ்பீட் பதைபதைக்க வைக்கிறது..

படத்தொகுப்பாளரின் கட்டிங் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய வரம்.. காட்சிகள் அடுத்தடுத்து அபரிமிதமான இசையமைப்புடனும், ஒளிப்பதிவுடனும் வந்திருக்க.. வில்லன் முகம் மறைத்து பின் வந்து பின் மறைத்து நிமிடத்தில் மாறுகின்றபோதெல்லாம் ஒரு நொடிகூட ஜெர்க் இல்லை.. நச்சென்று இருக்கிறது..

மனோரமாதான் பாட்டி அருந்ததியின் கதையை நமக்குச் சொல்பவர். மனுஷிக்கு எப்பவுமே கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு நிற்கும். இந்தப் படத்தில் அதற்குத்தான் வேலை அதிகம்.

அடு்த்தது என்ன..? அடுத்தது என்ன..? என்று மிக ஆர்வத்துடன் நகத்தைக் கடிக்க வைத்துவி்ட்டார்கள். லாஜிக் பார்க்கவே முடியாத திரைப்படம் என்றாலும், திரைக்கதை அசுர வேகத்தில் செல்வதால் எதையும் யோசிக்கவே முடியவில்லை..

கல்சுவருக்குள் படுத்துக் கொண்டே அருந்ததியின் தாத்தாவை வழுக்கி விழுக வைக்கவும், அருந்ததியிடம் அவனது வருங்காலக் கணவன் குரலில் பேசவும் முடியும் வில்லன் பசுபதியால் அந்தச் சுவரை உடைக்க முடியவில்லை என்கிற லாஜிக் இப்போதுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்கும் ஒரு சாஸ்திர சம்பிரதாயக் காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். சுவர் முழுவதும் மந்திரங்களை தட்டில் எழுதி பொருத்தி வைத்திருக்கிறார்கள். அவனால் தொட முடியாது என்று..! கோடிராமகிருஷ்ணா என்ன கொக்கா..? அம்மன் படம் பார்க்க வந்தவர்களை, தியேட்டரிலேயே அம்மனை வரவழைத்து ஆட வைத்தவராச்சே..

பாடல்களில் முதல் பாடல்தான் ஏதோ புரிந்தது.. தமிழுக்கேற்றாற்போல் வாலி எழுதியிருக்கிறார். பசுபதியின் மிரட்டலின்போது பாட்டி அருந்ததி போடும் பாடல் 'காதல் ஓவியம்' படத்தின் 'சங்கீத ஜாதிமுல்லை..' பாடலின் சாயலை ஒத்திருந்தது.. பின்னணி இசை அமர்க்களம்.. அவ்வப்போது பசுபதியும், அருந்ததியும் அவரவர் குரல்களில் பேயாட்டம் ஆடும்போது ஒத்து ஊதுவதை நன்றாகச் செய்துள்ளது இசை.

பசுபதியின் அம்மாவாக நடித்திருக்கும் சுபாஷினியின் அழகான கண்களில் கருவிழிகள் மட்டும் நட்ட நடுவில் உருள்வது பார்க்க பயங்கரமாக உள்ளது. சரியானப் பொருத்தம்.

மாயாஜாலம், மேஜிக், மந்திரம், தந்திரம் என்ற அலப்பறையோடு நிமிடத்துக்கொருமுறை விளம்பரப்படுத்திவிட்டதால் படத்தின் ஓப்பனிங் அபாரம் என்கிறார்கள். படத்தின் நிலை தெரியாமல் பலரும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் படத்திற்கு 'ஏ' சர்பிடிகேட் கொடுத்துத் தொலைத்துவிட்டதால் டிக்கெட் கவுண்ட்டரிலேயே குழந்தைகளுடன் வந்தவர்களை திருப்பியனுப்பிவிட்டார்கள். ஆனால் தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் வாங்கி வந்தவர்களை அனுப்ப முடியவில்லை.

அப்படி என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு, பாதிப் படத்திலேயே, படத்தின் வேகத்தில் பயந்து போய் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ தாஜா செய்தும் ஸ்கிரீன் பக்கம் முகத்தைக் காட்டவே மறுத்துவிட்டது. இது போன்ற திரைப்படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரவேகூடாது.

கதையின் அடிப்படையே பெண் மோகம் என்பதால் அதனை நிரூபிப்பதற்காக இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரியவர்களையே நெளியத்தான் வைக்கின்றன. ஆனால் படத்தின் உயிரோட்டமான இடங்கள் இவைகள் என்பதால் மறுக்க முடியவில்லை..

இத்திரைப்படம் தெலுங்கில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.. ஜெயிக்காமல் போனால்தான் ஆச்சரியமாக இருந்திருக்கும்..

திரைப்படங்களையே வித்தை காட்டுதல் என்றுதான் சிலர் சொல்வார்கள். அதற்கு மிகச் சிறப்பான உதாரணமாக இத்திரைப்படத்தைச் சொல்லலாம்.

வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!

படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com

48 comments:

  1. மிக அருமையான விமர்சனம்!
    நான் தெலுங்கில் முன்பே படம் பார்த்துவிட்டதால் இன்னும் தமிழில் பார்க்கவில்லை. தமிழில் வசனம் எப்படி இருக்கிறதென்று பார்கவேண்டும்!

    ReplyDelete
  2. படம் கலக்கல். நான் தமிழ்ல்ல பாக்கல. தெலுங்குல பாத்தேன். இங்க நெதர்லாந்துல தமிழ் இந்திப் படங்கதான் வரும். அதுவும் எதிர்பார்ப்புள்ள படங்கதான். தெலுங்குப் படங்கள்ளாம் ஆன்லைன்லதான்.

    ஆனா நல்ல பிரிண்டு இல்லை. தமிழ்லயும் படத்தப் பாக்கனும். ஆன்லைனைத் தவிர வேற வழியே இல்லைங்குறதால...ஆன்லைனாண்டவருக்கேச் சரணம்.

    ReplyDelete
  3. ....// நான் ஜெமினி டிவியில் பார்த்த பல பாடல் காட்சிகளில் கடற்கரையோரமாக தாவணியை கழட்டிவீசிவிட்டு காத்து வாங்கிக் கொண்டிருந்தார்....//

    ...//முதல் பாடல் காட்சியின் இறுதியில் அனுஷ்காவின் பின்புறமிருந்து இடுப்புப் பக்கத்திற்கு கேமிரா உயர்ந்து வந்து நிற்பது என்ன ஒரு ஷாட்..?!...//



    இந்த இரண்டு வரிகளையும் நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலே படம் 100 நாள் பிச்சிகிட்டு ஓ...டுமே!

    அதெல்லாம் சரி.மனசுலே இம்புட்டு ஆசைகளை வச்சிகிட்டு இன்னும் பேச்சிலர்னு சொல்லிக்கிறீங்களே.
    நாயகன் பட ஸ்டைலில் ஒரு கேள்வி கேக்குறேன்.
    நீங்க பேச்சிலரா?அன் மேரீடா?

    ReplyDelete
  4. உருகி உருகி எழுதியிருக்கிறீரே ஊனா தானா! நீர் எழுதியிருந்தால் சரியாகத்தான் இருக்கும்! படத்தைப் பார்க்கிறேன். நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  5. "உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும்."
    நானும் கழற்றி வைத்துவிட்டு பார்க்கத் தயாராகிறேன்.

    ReplyDelete
  6. //நீங்க பேச்சிலரா?அன் மேரீடா?//


    ரீபீட்டு

    ReplyDelete
  7. //வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!//

    இது ஒரு வெள்ளி விழா படம்ன்னு சொல்லுங்க...

    ReplyDelete
  8. //ஷங்கர் Shankar said...

    me the first//

    வாங்க.. வாங்க.. முதல் ஆள் நீங்கதான்..

    இந்தச் சந்தோஷம் கடைசிவரைக்கும் இருக்கணும்..!

    ReplyDelete
  9. //ஷங்கர் Shankar said...
    மிக அருமையான விமர்சனம்!
    நான் தெலுங்கில் முன்பே படம் பார்த்துவிட்டதால் இன்னும் தமிழில் பார்க்கவில்லை. தமிழில் வசனம் எப்படி இருக்கிறதென்று பார்கவேண்டும்!//

    தமிழ் வசனம்தானே..!

    பின்னியிருக்காங்க.. எத்தனை வருஷ அனுபவம் இருக்கு..?

    "அடியே அருந்ததி.. உனக்காகத்தான்டி இத்தனை நாளும் மூச்சு விட்டுக்கிட்டிருக்கேன்.. இனி உன் மூச்சை எடுக்கிறதுதான்டி என்னோட லட்சியம்.."

    எப்படி இருக்கு டயலாக்கு..?! பிய்க்குதுல்ல..!

    ReplyDelete
  10. //G.Ragavan said...
    படம் கலக்கல். நான் தமிழ்ல்ல பாக்கல. தெலுங்குல பாத்தேன். இங்க நெதர்லாந்துல தமிழ் இந்திப் படங்கதான் வரும். அதுவும் எதிர்பார்ப்புள்ள படங்கதான். தெலுங்குப் படங்கள்ளாம் ஆன்லைன்லதான். ஆனா நல்ல பிரிண்டு இல்லை. தமிழ்லயும் படத்தப் பாக்கனும். ஆன்லைனைத் தவிர வேற வழியே இல்லைங்குறதால ஆன்லைனாண்டவருக்கேச் சரணம்.//

    பாருங்க.. பாருங்க..

    தெலுங்கு படம் இங்க 5 நாள் மட்டும் ஓடுச்சு.. அதுக்குள்ள போய்ப் பாருங்கன்னு நிறைய பேர் சொன்னாங்க.. நான்தான் தமிழ்ல வரப் போகுன்னு சொன்னவுடனேயே தமிழ்லேயே பார்த்துக்கிடலாமேன்னு காத்திருந்தேன்..

    என்ன இருந்தாலும் தமிழ்ல பார்க்குறது மாதிரி வருமா..? வருகைக்கு நன்றி ராகவன்ஜி..

    ReplyDelete
  11. ///மாண்புமிகு பொதுஜனம் said...

    // நான் ஜெமினி டிவியில் பார்த்த பல பாடல் காட்சிகளில் கடற்கரையோரமாக தாவணியை கழட்டிவீசிவிட்டு காத்து வாங்கிக் கொண்டிருந்தார்....//

    //முதல் பாடல் காட்சியின் இறுதியில் அனுஷ்காவின் பின்புறமிருந்து இடுப்புப் பக்கத்திற்கு கேமிரா உயர்ந்து வந்து நிற்பது என்ன ஒரு ஷாட்..?!...//

    இந்த இரண்டு வரிகளையும் நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலே படம் 100 நாள் பிச்சிகிட்டு ஓ...டுமே!///

    ஹி.. ஹி.. அப்படிங்குறீங்க..!

    //அதெல்லாம் சரி. மனசுலே இம்புட்டு ஆசைகளை வச்சிகிட்டு இன்னும் பேச்சிலர்னு சொல்லிக்கிறீங்களே. நாயகன் பட ஸ்டைலில் ஒரு கேள்வி கேக்குறேன்.
    நீங்க பேச்சிலரா? அன் மேரீடா?//

    மிஸ்டர் பொதுஜனம்.. நீர் அப்பாவியா அடப்பாவியான்னு எனக்குத் தெரியாது..

    ஆனா நான் அக்மார்க் பேச்சிலர்ன்னு இதுக்கு முந்தின இட்லி-வடை பதிவிலேயே எழுதியிருக்கேன்.. படிக்கலையா..?!

    ReplyDelete
  12. //SP.VR. SUBBIAH said...
    உருகி உருகி எழுதியிருக்கிறீரே ஊனா தானா! நீர் எழுதியிருந்தால் சரியாகத்தான் இருக்கும்! படத்தைப் பார்க்கிறேன். நன்றி உரித்தாகுக!//

    பாருங்க வாத்தியாரே.. பாருங்க.!

    ReplyDelete
  13. //டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

    "உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும்."

    நானும் கழற்றி வைத்துவிட்டு பார்க்கத் தயாராகிறேன்.//

    பாருங்க.. பாருங்க.. அப்பத்தான் படம் பிடிக்கும்..

    படம் பார்க்கும்போது நம்ம அறிவையும், அவுக அறிவையும் ஒப்பிட்டு குழப்பிக்கக் கூடாது. அதுக்காகத்தான் சொன்னேன்..

    நன்றி டாக்டர்..

    ReplyDelete
  14. ///SUREஷ் said...

    //நீங்க பேச்சிலரா?அன் மேரீடா?//


    ரீபீட்டு///

    ஐயையோ வர வர ரொம்ப ஆபத்தால்ல போயிட்டிருக்கு நம்ம நிலைமை..

    சுரேஷ் தம்பி நான் பேச்சுலர்தாம்பா கண்ணு.. சொன்னா கேளுங்கப்பா..!

    ReplyDelete
  15. ///கீழை ராஸா said...

    //வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!//

    இது ஒரு வெள்ளி விழா படம்ன்னு சொல்லுங்க...///

    ஓ.. இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா.. இதுக்கு..?

    கீழை ராஸா சிறந்த அவதானிப்பு.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  16. இன்றுதான் படம் பார்க்கப் போகிறேன்.என் எதிர்பார்ப்பை மிக அதிகம் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.உங்கள் விமர்சனம் பலிக்கக் கடவதாகுக.

    ReplyDelete
  17. //கதையின் அடிப்படையே பெண் மோகம் என்பதால் அதனை நிரூபிப்பதற்காக இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரியவர்களையே நெளியத்தான் வைக்கின்றன.//

    வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!//

    இவ்வளவு அழகா எடுத்து சொல்லியும் மிஸ் பண்ணுவோமா ? இன்னைக்கு கண்டிப்பா பாத்துட வேண்டியது தான்!!

    ReplyDelete
  18. //நீங்க பேச்சிலரா? அன் மேரீடா?////

    ரெண்டுக்கும் என்ன வித்யாசம்?

    //ஆனா நான் அக்மார்க் பேச்சிலர்ன்னு இதுக்கு முந்தின இட்லி-வடை பதிவிலேயே எழுதியிருக்கேன்.. படிக்கலையா..?!//

    அதை நாங்க இட்லி, வடை, அல்வானு நம்பறோம்!!

    ReplyDelete
  19. //ஷண்முகப்ரியன் said...
    இன்றுதான் படம் பார்க்கப் போகிறேன். என் எதிர்பார்ப்பை மிக அதிகம் தூண்டி விட்டிருக்கிறீர்கள். உங்கள் விமர்சனம் பலிக்கக் கடவதாகுக.//

    நிச்சயம் பலிக்கும் இயக்குநரே..!

    ReplyDelete
  20. ///Bhuvanesh said...

    //கதையின் அடிப்படையே பெண் மோகம் என்பதால் அதனை நிரூபிப்பதற்காக இருக்கும் ஒரு சில காட்சிகள் பெரியவர்களையே நெளியத்தான் வைக்கின்றன.//

    வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!//

    இவ்வளவு அழகா எடுத்து சொல்லியும் மிஸ் பண்ணுவோமா? இன்னைக்கு கண்டிப்பா பாத்துட வேண்டியதுதான்!!///

    அப்ப புவனேஷ் வயசுக்கு வந்தவர்தானா..? சந்தோஷம்..!

    ReplyDelete
  21. ///Bhuvanesh said...

    //நீங்க பேச்சிலரா? அன்மேரீடா?//

    ரெண்டுக்கும் என்ன வித்யாசம்?///

    அதானே.. எனக்கே தோணாத கேள்வி.. புவனேஷ் நன்றிங்கோ..

    //ஆனா நான் அக்மார்க் பேச்சிலர்ன்னு இதுக்கு முந்தின இட்லி-வடை பதிவிலேயே எழுதியிருக்கேன்.. படிக்கலையா..?!//

    அதை நாங்க இட்லி, வடை, அல்வானு நம்பறோம்!!///

    அடப்பாவிகளா..! இப்படி எழுதினாலும் நம்ப மாட்டீங்களா..? பின்ன எப்படித்தான் எழுதுறதாம்..!

    ReplyDelete
  22. படம் கலக்கலா இருக்கு. சில சமயம் பயமாவும் இருந்தது.

    கடைசியா கொஞ்சம் சொதப்பல் மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் தெளிவா யோசிச்சி எடுத்திருக்கலாம்.

    என்ன இருந்தாலும் அட்டகாசமான படம்.

    ReplyDelete
  23. ///வெட்டிப்பயல் said...

    படம் கலக்கலா இருக்கு. சில சமயம் பயமாவும் இருந்தது. கடைசியா கொஞ்சம் சொதப்பல் மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் தெளிவா யோசிச்சி எடுத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அட்டகாசமான படம்.///

    கிளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்தான்.. எனக்கும் இப்படித்தான் தோன்றியது..

    ஆனாலும் எடுத்தவரைக்கும் பிரில்லியண்ட்தான் வெட்டி ஸார்.

    ReplyDelete
  24. [[[ அவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் கொடுத்து, ஊன் கொடுத்து, ஊட்டச் சத்துக் கொடுத்து, மந்திர, தந்திரம் கற்றுக் கொடுத்து கை தேர்ந்த வில்லனாக உருவாக்கி அனுப்புகிறார்கள்.]]]

    ஆஹா மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும் வசன நடை --- படம் பார்த்து - வீடு சேர்ந்து -
    அர்த்த ராத்திரியில் - நித்திரை தூக்கத்தில் - இப்படியும் எழுத வருமா ?


    [[[ அப்படி என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு, பாதிப் படத்திலேயே, படத்தின் வேகத்தில் பயந்து போய் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ தாஜா செய்தும் ஸ்கிரீன் பக்கம் முகத்தைக் காட்டவே மறுத்துவிட்டது ]]]

    இதனையும் ரசித்துள்ளாரே ---

    [[[ திரைப்படங்களையே வித்தை காட்டுதல் என்றுதான் சிலர் சொல்வார்கள் ]]]

    '' சினிமாக்கு போன சித்தாளு '' ஜெயகாந்தன் எழுதிய அருமையான கதையில் கடைசி வசனம்
    மனதில் உதித்தது ---

    ''அதாண்டி சொல்லுறது - சினிமாங்கிறது லைட்டை ஆப் பண்ணிடு இருடில காட்டுற மஜிக்கின்னு ''

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. நல்ல படம் போலத்தான் இருக்குது..

    ஆனா குழந்தைகள் பாக்க கூடாதுன்னு சொல்லிட்டிங்களே.. நான் எப்படி பாக்கறது...

    ReplyDelete
  27. //ஆனால் படத்திற்கு 'ஏ' சர்பிடிகேட் கொடுத்துத் தொலைத்துவிட்டதால் டிக்கெட் கவுண்ட்டரிலேயே குழந்தைகளுடன் வந்தவர்களை திருப்பியனுப்பிவிட்டார்கள். //

    சென்னையில் இதெல்லாம் நடக்குதா சார்? நெஜமாவா? நானெல்லாம் இப்படிக் கேள்விப்பட்டதே இல்ல!

    பதிவு..

    பனிரெண்டே ஸ்க்ரோலில் பதிவு முடிந்தது ஆச்சர்யம்!!

    ReplyDelete
  28. Blogger மாண்புமிகு பொதுஜனம் said
    [[[ அதெல்லாம் சரி.மனசுலே இம்புட்டு ஆசைகளை வச்சிகிட்டு இன்னும் பேச்சிலர்னு சொல்லிக்கிறீங்களே.
    நாயகன் பட ஸ்டைலில் ஒரு கேள்வி கேக்குறேன்.
    நீங்க பேச்சிலரா?அன் மேரீடா? ]]]

    [[[ மிஸ்டர் பொதுஜனம்.. நீர் அப்பாவியா அடப்பாவியான்னு எனக்குத் தெரியாது..
    ஆனா நான் அக்மார்க் பேச்சிலர்ன்னு இதுக்கு முந்தின இட்லி-வடை பதிவிலேயே எழுதியிருக்கேன்.. படிக்கலையா..?! ]]]

    இதென்ன கேள்வி பொதுஜனம் சார்?

    பெண்ணழகை வர்ணிபதையும் மானசீகமாக அனுபவிப்தையும் --- ஒரு பெண் Sexologist
    இவ்வாறு எமக்கு தந்துள்ளார் ---

    '' Sex என்பது எமது காதுகளுக்கு இடையில் ஏற்ட்படுவதே அன்றி எமது கால்களுக்கு இடையில் உணர்வது அல்ல ''

    ReplyDelete
  29. ///benzaloy said...
    [[[அவர்கள் அவனைக் காப்பாற்றி உயிர் கொடுத்து, ஊன் கொடுத்து, ஊட்டச் சத்துக் கொடுத்து, மந்திர, தந்திரம் கற்றுக் கொடுத்து கை தேர்ந்த வில்லனாக உருவாக்கி அனுப்புகிறார்கள்.]]]

    ஆஹா மீண்டும் மீண்டும் வாசிக்க தோன்றும் வசன நடை --- படம் பார்த்து - வீடு சேர்ந்து -
    அர்த்த ராத்திரியில் - நித்திரை தூக்கத்தில் - இப்படியும் எழுத வருமா?//

    வந்திருச்சே பென்ஸ் ஸார்..! இப்பல்லாம் கீபோர்டுல கை வைச்சாத்தான் எழுத்தே வருது..!

    //[[அப்படி என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு வாண்டு, பாதிப் படத்திலேயே, படத்தின் வேகத்தில் பயந்து போய் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. அம்மாவும், அப்பாவும் எவ்வளவோ தாஜா செய்தும் ஸ்கிரீன் பக்கம் முகத்தைக் காட்டவே மறுத்துவிட்டது ]]]
    இதனையும் ரசித்துள்ளாரே ---///

    பின்ன..? அப்பனும், ஆத்தாவும் புள்ளைய பிடிச்சு இழுக்குறப்பேல்லாம் புள்ளை விட்ட எத்து என் மேலதான.. பார்க்கம எப்படி இருக்குறது..?!

    ///[[[திரைப்படங்களையே வித்தை காட்டுதல் என்றுதான் சிலர் சொல்வார்கள்]]]
    ''சினிமாக்கு போன சித்தாளு'' ஜெயகாந்தன் எழுதிய அருமையான கதையில் கடைசி வசனம்
    மனதில் உதித்தது ---
    ''அதாண்டி சொல்லுறது - சினிமாங்கிறது லைட்டை ஆப் பண்ணிடு இருடில காட்டுற மஜிக்கின்னு''///

    ஆஹா பென்ஸ் ஸார்.. அந்தப் படத்தையெல்லாம் பார்த்திருக்கீங்களா..? பெரிய ஆளுதான் ஸார் நீங்க..! கமுக்கமா இருக்கீங்க.. ஓகே.. இப்படிப்பட்ட ஒருத்தர் நம்ம நட்பு வட்டத்துல இருககாரேன்னு நானும் சந்தோஷப்பட்டுக்குறேன்..

    ReplyDelete
  30. ஆதிமூலகிருஷ்ணன் ஸார்..

    உலக அதிசயமா என் வீட்டுக்குள்ள வந்திட்டு பட்டுன்னு திரும்பிப் போனீங்கன்னா எப்படி..?

    வாங்க.. வாங்க.. தாமிரா எங்கன்னு நான் யார்கி்ட்டேயும் கேட்க மாட்டேன்..!

    ReplyDelete
  31. ///லோகு said...
    நல்ல படம் போலத்தான் இருக்குது.. ஆனா குழந்தைகள் பாக்க கூடாதுன்னு சொல்லிட்டிங்களே.. நான் எப்படி பாக்கறது...///

    ஓ.. அம்புட்டு பச்சைப் புள்ளையா நீங்க..!

    ReplyDelete
  32. ///பரிசல்காரன் said...

    //ஆனால் படத்திற்கு 'ஏ' சர்பிடிகேட் கொடுத்துத் தொலைத்துவிட்டதால் டிக்கெட் கவுண்ட்டரிலேயே குழந்தைகளுடன் வந்தவர்களை திருப்பியனுப்பிவிட்டார்கள். //

    சென்னையில் இதெல்லாம் நடக்குதா சார்? நெஜமாவா? நானெல்லாம் இப்படிக் கேள்விப்பட்டதே இல்ல!///

    சில திரையரங்குகளில் நடக்கிறது. சிலவற்றில் இல்லை.. எல்லாமே சும்மா கண்துடைப்புதான்..

    //பதிவு.. பனிரெண்டே ஸ்க்ரோலில் பதிவு முடிந்தது ஆச்சர்யம்!!//

    அதான பார்த்தேன்.. என்னடா மவராசன் உள்ள வந்துட்டு சும்மா போறாரேன்னு.. முடியுமா உங்களால..?

    சரி.. சரி.. வாரத்துக்கு ஒண்ணு இது மாதிரி சின்ன சின்னதா எழுதலாம்னு நினைக்கிறேன்.. சந்தோஷம்தானே..!

    ReplyDelete
  33. ///benzaloy said...
    Blogger மாண்புமிகு பொதுஜனம் said
    [[[அதெல்லாம் சரி.மனசுலே இம்புட்டு ஆசைகளை வச்சிகிட்டு இன்னும் பேச்சிலர்னு சொல்லிக்கிறீங்களே. நாயகன் பட ஸ்டைலில் ஒரு கேள்வி கேக்குறேன்.
    நீங்க பேச்சிலரா?அன் மேரீடா?]]]

    [[[மிஸ்டர் பொதுஜனம்.. நீர் அப்பாவியா அடப்பாவியான்னு எனக்குத் தெரியாது.. ஆனா நான் அக்மார்க் பேச்சிலர்ன்னு இதுக்கு முந்தின இட்லி-வடை பதிவிலேயே எழுதியிருக்கேன்.. படிக்கலையா..?!]]]

    இதென்ன கேள்வி பொதுஜனம் சார்?
    பெண்ணழகை வர்ணிபதையும் மானசீகமாக அனுபவிப்தையும் --- ஒரு பெண் Sexologist
    இவ்வாறு எமக்கு தந்துள்ளார் ---
    ''Sex என்பது எமது காதுகளுக்கு இடையில் ஏற்ட்படுவதே அன்றி எமது கால்களுக்கு இடையில் உணர்வது அல்ல''///

    ஆஹா.. நல்ல தத்துவமா இருக்கே..!

    இதுவும் நல்ல விஷயம்தான்.. யோசித்தா இது சரின்னுதான் படுது..!

    நன்றி பென்ஸ் ஸார்..! அனுபவஸ்தர் நீங்க.. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.. கேட்டுக்குறேன்.. நம்புறேன்..!

    ReplyDelete
  34. //
    சரி.. சரி.. வாரத்துக்கு ஒண்ணு இது மாதிரி சின்ன சின்னதா எழுதலாம்னு நினைக்கிறேன்.. சந்தோஷம்தானே..!//

    Intha maathiri - chinnathaavaa?


    ******* (mayakkam pottutten!)

    ReplyDelete
  35. நீங்க சொல்றதப் பார்த்தா படத்த பாக்கலாம் போலயே. டப்பிங் தானே என கண்டுக்காம விட்டுட்டேன். பாத்துருவோம். உங்க விமர்சனமே படம் பார்த்தமாதிரி இருந்தது.

    ReplyDelete
  36. //தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும்.//

    இல்லாததை எப்படி கழட்டுவது?:(((

    ReplyDelete
  37. //வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!//

    வயதுக்கு வந்தவர்களா அல்லது 18 வயதிற்கு மேற்பட்டவர்கலா

    இரண்டும் ஒன்றல்ல தலைவரே

    ReplyDelete
  38. ///பரிசல்காரன் said...
    //சரி.. சரி.. வாரத்துக்கு ஒண்ணு இது மாதிரி சின்ன சின்னதா எழுதலாம்னு நினைக்கிறேன்.. சந்தோஷம்தானே..!//

    Intha maathiri - chinnathaavaa?
    ******* (mayakkam pottutten!)///

    ஹா.. ஹா.. பரிசலு.. இங்க நானும் மயக்கம் போட்டுட்டேன்..

    பரிசல்காரர் தொடர்ந்து எனக்குப் பின்னூட்டம் போடுறாரேன்னுட்டு..!

    ReplyDelete
  39. //pappu said...
    நீங்க சொல்றதப் பார்த்தா படத்த பாக்கலாம் போலயே. டப்பிங்தானே என கண்டுக்காம விட்டுட்டேன். பாத்துருவோம். உங்க விமர்சனமே படம் பார்த்த மாதிரி இருந்தது.//

    நல்லது பாப்பு.. படம் பார்த்திட்டு வாங்க..!

    ReplyDelete
  40. ///குசும்பன் said...

    //தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும்.//

    இல்லாததை எப்படி கழட்டுவது?:(((///

    டேய்.. சிரிச்ச சிரிப்புல வீடே அதிருது..!

    ReplyDelete
  41. ///புருனோ Bruno said...
    //வயதுக்கு வந்தவர்கள் மட்டும் சென்று பார்க்கலாம்..!//

    வயதுக்கு வந்தவர்களா அல்லது 18 வயதிற்கு மேற்பட்டவர்கலா..
    இரண்டும் ஒன்றல்ல தலைவரே///

    ஐயையோ..

    இங்கனக்குள்ள டாக்டர் ஒருத்தரும் இருக்காருன்றது தெரியாம போயிருச்சே..

    அப்ப மேஜரானவங்க அப்படீன்னா என்ன அர்த்தம் டாக்டரு..?

    இரு பாலரிலும் 18 வயசுக்கு மேற்பட்டவர்கள்தானே..

    நான் அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்..

    அது சரி.. அந்த "தலைவரே" எதுக்கு? சரவணன்னு கூப்பிட்டாலே போதுமே..!

    ReplyDelete
  42. //அது சரி.. அந்த "தலைவரே" எதுக்கு? சரவணன்னு கூப்பிட்டாலே போதுமே..!//

    சரி நண்பரே

    ReplyDelete
  43. ///புருனோ Bruno said...

    //அது சரி.. அந்த "தலைவரே" எதுக்கு? சரவணன்னு கூப்பிட்டாலே போதுமே..!//

    சரி நண்பரே///

    அப்படியும் விட மாட்டீங்க..! சரி போங்க.. நண்பராக உங்களை சுவீகாரம் எடுத்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  44. ///ஸ்ரீமதி said...

    :))))///

    நன்றி ஸ்ரீமதி..

    ReplyDelete
  45. பட விமரிசனம் படத்தை அப்படியே சீன் விடாமல் விளக்கமாகச் சொல்கிறது .என் மனதுக்கு பட்டது...இந்த படத்தில் ஏன் மனோரமா?தெலுங்கில் நடிகை இல்லையா..யார் வேண்டுமென்றாலும் ஏற்கக்கூடிய ஒரு பாத்திரத்தை மனோரமா ஏன் ஏந்தினார்.

    ReplyDelete