Pages

Wednesday, March 18, 2009

உயர்நீதிமன்ற மோதல் விவகாரம்-தாமதமான நீதி..!

18-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னை உயர்நீதிமன்ற சரித்திரத்தில் பொதுமக்கள் தாங்களே வழக்கறிஞர்களாக வாதாட வேண்டிய முதல் சூழலை ஏற்படுத்தி, அனைத்துத் தரப்பினரையும் எப்போது இந்தப் பிரச்சினை முடிந்து தொலையும் என்று ஏக்கப்பட வைத்த உயர்நீதிமன்றக் கலவர வழக்கில் ஒரு இடைக்கால உத்தரவினை நீதியரசர்கள் இன்று பிறப்பித்துள்ளனர்.

இத்தனை நாட்களாக பலரையும் தூங்கவிடாமல் வைத்திருந்த மில்லியன் டாலர் கேள்வியான உயர்நீதிமன்றத்திற்குள் தடியடி நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார் என்ற கேள்விக்கு இன்றைக்குத்தான் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.


தனது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டி மூத்த நீதியரசர் முகோபாத்யா இன்று சேம்பருக்கு வந்ததால் தடியடி வழக்கை விசாரிக்கும் நீதியரசர் தனபால், நீதியரசர் சந்துரு அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று கூடியுள்ளது.

காலையில் இருந்து இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியிருக்கிறார்கள். காவல்துறை கோர்ட்டு வளாகத்திற்குள் வந்ததினால்தான் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் எல்லாமே என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.. இந்த வாதத்தின்போதுதான் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் திரு.விசுவநாதன்தான் தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரி என்று அரசு வழக்கறிஞர்கள் மூலம் சொல்லியுள்ளது மாநில அரசு.

வழக்கினை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தீர்ப்பாக விசுவநாதனையும், கூடுதலாக 'களப்பணியில்' ஈடுபட்ட இணை ஆணையர் ராமசுப்பிரமணியத்தையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்றைய தடியடியில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தினை விலக்கிக் கொண்டு உடனடியாக மக்கள் சேவைக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவினை ஏற்று உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் உத்தரவு அரசுத் தரப்பில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த அரசு நீதித்துறையை மதித்துச் செயல்படும் என்று வழக்கமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் முதல்வர்.

இதற்காகத்தானே வழக்கறிஞர்கள் இத்தனை நாட்களாய் நாயாய் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு..? எத்தனை எத்தனை சிரமங்கள் மக்களுக்கு..? ஏன் இதனை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் செய்வார்களா..? அன்றைக்கு கண் முன்னே நடந்ததை பார்த்த பின்பும் அதனைச் செய்யாமல், தவறு செய்தவர்களை இத்தனை நாட்கள் தாங்கிப் பிடித்தது இந்த அரசுக்குத் தவறாக தெரியவில்லையா..?

வழக்கறிஞர்களோ, "இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது.. எங்களையே தாக்கிவிட்டோமே என்கிற மிதப்பில், பொதுமக்களை மேலு்ம் வதைப்பார்கள் போலீஸார்.." என்கின்றனர். இந்தக் கூற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. இது பற்றி நான் முன்பு எழுதிய பதிவிலேயே 'போலீஸார் இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்..' என்று குறிப்பிட்டிருக்கிறேன்..!

இந்த இடைக்கால உத்தரவைக் கேட்டு நீதிமன்றத்திற்கு எதிரே பட்டாசு கொளுத்தி மகிழ்ந்துள்ளனர் வழக்கறிஞர்கள். "இதுக்குத்தான்.. இதுக்காகத்தான் நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம்.." என்கிறார்கள்.

நாளைய தினம் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் முடிவில்தான் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது விலக்கிக் கொள்வதா என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை.. என்னுடைய அவாவும்கூட..!

ஏற்கெனவே நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தப் போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்கள்தான்.. கடந்த 3 நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்களே நீதியரசர்கள் முன் ஆஜராகி தாங்களே வாதாடியிருக்கிறார்கள். சிறிய வழக்குகளிலும், ஜாமீன் வழக்குகளிலும் மட்டுமே நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மற்றவைகளை ஒத்திதான் வைத்துள்ளனர்.

ஏனெனில், அவர்களுக்குத் தெரியும்.. வழக்கறிஞர்களின் வாதமில்லாமல் மேற்கொண்டு வழக்குகளை நடத்துவது எவ்வளவு ஆபத்து என்று..! கூடவே தினமும் போராட்டம், பேரணி என்று தமிழ்நாடு கதறிக் கொண்டிருக்கிறது.

வழக்கறிஞர்கள் முதல் கட்டத் தீர்வாகக் கேட்டது "தடியடிக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்" என்றுதான்..!



இதனை ஈகோ பிரச்சினையாக எடுத்துக் கொண்ட அரசு, இன்றைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுத்து தான் முழித்துக் கொண்டிருப்பதாக ஷோ காட்டுகிறது..

வழக்கின் இறுதியான உத்தரவில் அரசின் மெத்தனப் போக்கும், காவல்துறை அதிகாரிகளின் திறமையின்மையும்தான் இதற்குக் காரணம் என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால், என்ன செய்வார்கள்..? ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வார்களா..? அல்லது தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும் கை காட்டுவார்களா..?

இந்த வழக்கில் வேறொரு விஷயத்தையும் நான் மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. அது தடியடியில் ஈடுபட்ட அனைத்துக் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எப்படி காவல்துறை மேலிடம் செயல்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை..

வீடியோ டேப்புகள், புகைப்படங்கள் ஆகியவை மறுக்க முடியாத ஆதாரங்களாக இருக்கின்றன. அவைகளை வைத்து தடியால் அடித்து வீரம் காட்டிய இரும்புத் தொப்பியணிந்த அதிரடிப் படை காவலர்களைத் தேடி சஸ்பெண்ட் செய்து.. பின்பு விசாரணை செய்து.. கடைசியில் அவர்களை டிஸ்மிஸ் செய்வார்களா..? அல்லது கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லி பைலை குளோஸ் செய்வார்களா..?

பார்க்கத்தானே போகிறோம்..!

78 comments:

  1. நல்ல அரசியல் பதிவு. ஏன் பதிவு சிறியதாக உள்ளது ? மேலுக்கு ஏதும் சுகமில்லையா ?

    முருகா...உண்மைத்தமிழணை நல்லா வாழவைப்பா...

    ReplyDelete
  2. //நல்ல அரசியல் பதிவு. ஏன் பதிவு சிறியதாக உள்ளது ? மேலுக்கு ஏதும் சுகமில்லையா ?

    முருகா...உண்மைத்தமிழணை நல்லா வாழவைப்பா...//
    ம்ஹூம்! செந்தழல் முந்திகிட்டார்!

    அவசர அவசரமா அதையேதான் சொல்ல வந்தேன்!

    மேலுக்கு சொகமில்லையான்னு!

    ReplyDelete
  3. அடங்க மாட்டீங்களாப்பா நீங்க?

    அப்புறம் பழையபடி தீர்ப்பின் மொத்த பக்கங்களையும் (5000) கூட இவரோட திரைக்கதை (7000 பக்கம்) சேர்த்து 50 சீட்டர் ஆள் போட்டு அடிச்சி ஒரே பதிவா போடுவார்!

    ReplyDelete
  4. :)


    இத்தனை நாளாக வேலைக்கு வராத வக்கில்களுக்கு என்ன தண்டனை என்பதையும்
    ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    :)

    ReplyDelete
  5. //இத்தனை நாளாக வேலைக்கு வராத வக்கில்களுக்கு என்ன தண்டனை என்பதையும்
    ஆவலுடன் எதிர்பார்கிறேன்//

    இவரோட பதிவுகளை 10 முறை இம்போசிசன் எழுதினா போதும்!

    ReplyDelete
  6. உண்மைதமிழன் அண்ணாச்சி போனபதிவில் நீங்க கலாய்ச்சதிலையே பேதியாயி இப்பதான் கொஞ்சம் சின்னதா போடுயிருக்காரு இன்னும் கலாய்ச்சா இன்னும் சின்ன பதிவா வரும் ஆகையால் கலாய் கலாய் கலாக்கலாய் கலாய்ங்க தள :)

    ReplyDelete
  7. //இவரோட பதிவுகளை 10 முறை இம்போசிசன் எழுதினா போதும்!//

    இந்த கொடுமைக்கி நாங்க போலீஸ் காரங்ககிட்டேயே அடி வாங்கிக்கிவோம்!

    ReplyDelete
  8. முரூரூரூரூகா!!!

    குமரா, பழநி மலை முருகா, ஆறுபடை ஷண்முகா, வேலவா, ஆறுமுகா உன் கருணையோ கருணை! இந்தக் கிழவியின் கேள்விக்கிணங்கி நீ உன் மனதை மாற்றிக் கொண்டு சக வலைப் பதிவர்களின் நலன் கருதி உனது பதிவுகளின் அடி'களின் நீளத்தை சுருக்கிக் கொண்டாயே, நீர் வாழ்க வாழ்கவே!

    ReplyDelete
  9. அவ்வைப் பிராட்டியே!

    அப்படியே ஒன்று, இரண்டு என்ற வரிசையில் இவரது பதிவுகள் ஒவ்வொன்றாய் வாசி!

    முதல் பதிவின் முடிவிற்குள்ளாகவே நீ எம்மை வந்தடைவாய்!

    ReplyDelete
  10. கேள்வி 1 கல்விழந்ததும் தடி வந்தா? தடி வந்தபின் கல் விழந்த‌தா?
    கேள்வி 2 எங்களை போல் உள்ளவர்கள் முட்டை அபிசேகம் செய்தால் கைது
    செய்வார்களா அல்லது விட்டுவிடுவார்களா?
    கேள்வி 3 தொழிலாளர்கள் வேளை நிறுத்தம் சட்டம் விரோதம் என்பவர்கள் இவர்கள் வேளைநிறுத்ததிற்கு என்ன சொல்வார்கள்?

    ReplyDelete
  11. முத்தமிழ் முதல்வா.

    என்னை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி பாடு ?

    ஒன்றானவன், முருகன் இரண்டானவன்...
    வக்கீல் மூன்றானவன்...

    ReplyDelete
  12. எதற்காக நீதிபதிகளை நீதியரசர் என்று விளிக்க வேண்டும்? இந்த வார்த்தைப் பிரயோகம் சமீபமாக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் மருத்துவ அரசர், பல்கலைக்கழக அரசர், காவலரசர் என்று எழுதும் காலம் வரும்.

    ReplyDelete
  13. //செந்தழல் ரவி said...
    நல்ல அரசியல் பதிவு. ஏன் பதிவு சிறியதாக உள்ளது ? மேலுக்கு ஏதும் சுகமில்லையா? முருகா... உண்மைத்தமிழணை நல்லா வாழ வைப்பா...//

    அட போங்கப்பா...!

    பெரிசா எழுதினா பெரிசா இருக்குன்றது..

    சின்னதா இருந்தா சிறுசா இருக்குன்றது..

    சரியான சின்னப்புள்ளைத்தனமா இருக்குது நீங்க பண்ற கூத்து..!

    ReplyDelete
  14. ///நாமக்கல் சிபி said...

    //நல்ல அரசியல் பதிவு. ஏன் பதிவு சிறியதாக உள்ளது ? மேலுக்கு ஏதும் சுகமில்லையா ?

    முருகா...உண்மைத்தமிழணை நல்லா வாழவைப்பா...//
    ம்ஹூம்! செந்தழல் முந்திகிட்டார்!

    அவசர அவசரமா அதையேதான் சொல்ல வந்தேன்!

    மேலுக்கு சொகமில்லையான்னு!///

    சொகமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. மனசுதான் நல்லாயில்ல..

    ReplyDelete
  15. //பழனி மலை முருகன் said...

    அடங்க மாட்டீங்களாப்பா நீங்க?

    அப்புறம் பழையபடி தீர்ப்பின் மொத்த பக்கங்களையும் (5000) கூட இவரோட திரைக்கதை (7000 பக்கம்) சேர்த்து 50 சீட்டர் ஆள் போட்டு அடிச்சி ஒரே பதிவா போடுவார்!//

    பழனி மலை முருகா..

    உன் பேரை கெடுக்கிறதுக்குன்னே ஒரு அவதாரம் ஒண்ணு இங்கனக்குள்ள இருக்கு.. அதை எதுனாச்சும் செஞ்சு.. அதான் மயிலு, வேலு, பாம்புன்னு எப்படியாச்சும் மாத்தி உன் கூடவே வைச்சுக்க.. தொல்லைத் தாங்கலை..!

    ReplyDelete
  16. மின்னுது மின்னல் said...

    :)


    இத்தனை நாளாக வேலைக்கு வராத வக்கில்களுக்கு என்ன தண்டனை என்பதையும்
    ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    :)///

    மின்னுது மின்னலு..

    இதற்கு சட்டத்தில் இடமில்லை என்று நினைக்கிறேன்.. வேலை நிறுத்தம் சட்டப்பூர்வமானதுதான்..!

    ReplyDelete
  17. ///வெடிகுண்டு முருகேசன் said...

    //இத்தனை நாளாக வேலைக்கு வராத வக்கில்களுக்கு என்ன தண்டனை என்பதையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்//

    இவரோட பதிவுகளை 10 முறை இம்போசிசன் எழுதினா போதும்!///

    மவனே.. முருகேசா.. பார்த்துக்கிட்டே இரு.. கடைசியா நீதான் எழுதப் போற..!

    ஏதோ நான்தான் பெரிசா எழுதியிருக்கேன்னு.. எழுதுறேன்னு ஒப்பாரி வைக்குறியே.. ஆசீப் அண்ணாச்சி இப்ப என்ன எழுதியிருக்காருன்னு போய்ப் பாரு.. அப்புறமா வந்து புலம்பு..!

    ReplyDelete
  18. //மின்னுது மின்னல் said...
    உண்மைதமிழன் அண்ணாச்சி போன பதிவில் நீங்க கலாய்ச்சதிலையே பேதியாயி இப்பதான் கொஞ்சம் சின்னதா போடுயிருக்காரு இன்னும் கலாய்ச்சா இன்னும் சின்ன பதிவா வரும் ஆகையால் கலாய் கலாய் கலாக்கலாய் கலாய்ங்க தள :)//

    அடப்பாவி மின்னலு..

    ஏதோ மேட்டருக்கேத்தாப்புல கொஞ்சமா எழுதினா ஏதோ என் தன்மானத்தையே உரசிப் பாக்குறியே..!

    விடமாட்டேன்.. அடுத்தப் பதிவைப் பாரு..!

    ReplyDelete
  19. ///வக்கீல் வரதாச்சாரி said...

    //இவரோட பதிவுகளை 10 முறை இம்போசிசன் எழுதினா போதும்!//

    இந்த கொடுமைக்கி நாங்க போலீஸ்காரங்ககிட்டேயே அடி வாங்கிக்கிவோம்!///

    நேர்ல பார்த்தேன்னு வை.. நானே அடி பின்னிருவேன்..!

    ReplyDelete
  20. //அவ்வை said...

    முரூரூரூரூகா!!! குமரா, பழநி மலை முருகா, ஆறுபடை ஷண்முகா, வேலவா, ஆறுமுகா உன் கருணையோ கருணை!

    இந்தக் கிழவியின் கேள்விக்கிணங்கி நீ உன் மனதை மாற்றிக் கொண்டு சக வலைப்பதிவர்களின் நலன் கருதி உனது பதிவுகளின் அடி'களின் நீளத்தை சுருக்கிக் கொண்டாயே, நீர் வாழ்க வாழ்கவே!//

    மேட்டர் அப்படிப்பட்டதுங்கண்ணா.. அதுதான் கொஞ்சம் சுருக்கமா..!

    ReplyDelete
  21. //பழனி மலை முருகன் said...

    அவ்வைப் பிராட்டியே! அப்படியே ஒன்று, இரண்டு என்ற வரிசையில் இவரது பதிவுகள் ஒவ்வொன்றாய் வாசி! முதல் பதிவின் முடிவிற்குள்ளாகவே நீ எம்மை வந்தடைவாய்!//

    செம நக்கலு.. சிரிப்புல வீடே அதிர்ந்திருச்சு..!

    ReplyDelete
  22. //வெட்டிப்பயல் said...

    comments ellam kalakal :)//

    அதான பார்த்தேன்.. எங்கடா ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்.. வந்துட்டீங்க.. வெல்கம்..!

    ReplyDelete
  23. //Anonymous said...

    கேள்வி 1 கல்விழந்ததும் தடி வந்தா? தடி வந்தபின் கல் விழந்த‌தா?
    கேள்வி 2 எங்களை போல் உள்ளவர்கள் முட்டை அபிசேகம் செய்தால் கைது செய்வார்களா அல்லது விட்டுவிடுவார்களா?
    கேள்வி 3 தொழிலாளர்கள் வேளை நிறுத்தம் சட்டம் விரோதம் என்பவர்கள் இவர்கள் வேளைநிறுத்ததிற்கு என்ன சொல்வார்கள்?//

    தடி வந்த பின்புதான் கல் விழுந்தது..

    நிச்சயம் கைது செய்வார்கள்..

    சில சமயங்களில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் அனைவராலும் ஆதரிக்கப்படும். ஏன் அரசால்கூட ஆதரிக்கப்படும்.. அந்த வகையில் இதுவும் ஒன்று..!

    ReplyDelete
  24. //மருதமலையப்பன் said...

    முத்தமிழ் முதல்வா. என்னை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி பாடு ?

    ஒன்றானவன், முருகன் இரண்டானவன்... வக்கீல் மூன்றானவன்...//

    இருக்கலாம்.. முருகனிடமே சென்று வாதாட வேண்டுமெனில் கொஞ்சம் வக்கீல்களின் தயவும் இருந்தால் நல்லதுதான்..!

    பாயிண்ட், பாயிண்ட்டா எடுத்து விடலாம்..!

    ReplyDelete
  25. //Anonymous said...

    எதற்காக நீதிபதிகளை நீதியரசர் என்று விளிக்க வேண்டும்? இந்த வார்த்தைப் பிரயோகம் சமீபமாக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் மருத்துவ அரசர், பல்கலைக்கழக அரசர், காவலரசர் என்று எழுதும் காலம் வரும்.//

    பத்திரிகைகள் பயன்படுத்துகிறார்கள்.. இது வழக்குச் சொல் என்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் நானும் சொன்னேன்..

    ReplyDelete
  26. //எதற்காக நீதிபதிகளை நீதியரசர் என்று விளிக்க வேண்டும்? இந்த வார்த்தைப் பிரயோகம் சமீபமாக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் மருத்துவ அரசர், பல்கலைக்கழக அரசர், காவலரசர் என்று எழுதும் காலம் வரும்.//

    ஆமாம்!

    ReplyDelete
  27. /நேர்ல பார்த்தேன்னு வை.. நானே அடி பின்னிருவேன்..!//

    எங்களை அடி பினிடுவேன் என்று சொன்ன உண்மைத்தமிழன் சென்னை உய்ர்நீதி மன்ற வளாகத்தை 17 முறை வலம் வந்து பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

    ReplyDelete
  28. //ஏன் அரசால்கூட ஆதரிக்கப்படும்.. //

    என்ன கேலிக் கூத்து இது?

    அரசு அது போன்ற வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதற்கு பதிலா அவங்க கோரிக்கையை பரிசீலிச்சி உடனடியா நிறைவேற்றலாமே? வெறுமனே ஆதரிச்சி என்ன பயன்?

    ReplyDelete
  29. //சொகமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. மனசுதான் நல்லாயில்ல..//

    பதிவை இதுக்கு மேல பெரிசாக்க முடியலைன்னா?

    கூல்! இப்படியெல்லாம் கவலைப்பட்டா உடம்பு என்னத்துக்காகுறது!

    அப்படியே வீட்டை விட்டு வெளிய வாங்க! வெளி உலகத்தை பாருங்க! எவ்வளவோ மேட்டர் இருக்கு!

    எதிர் வீட்டுக் கோலம் கூட உங்க 20 பக்க பதிவா மாறலாம்! (அதுக்காக கோலம் போட்டுகிட்டிருக்கும்போதே போயி நின்னு பார்க்காதீங்க! முறைவாசல் முனியம்மாகிட்டே மொத்துதான் கிடைக்கும்)

    ReplyDelete
  30. ///நாமக்கல் சிபி said...

    //ஏன் அரசால்கூட ஆதரிக்கப்படும்..//

    என்ன கேலிக் கூத்து இது? அரசு அது போன்ற வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதற்கு பதிலா அவங்க கோரிக்கையை பரிசீலிச்சி உடனடியா நிறைவேற்றலாமே? வெறுமனே ஆதரிச்சி என்ன பயன்?//

    அதைத்தான் நானும் சொல்றேன்..

    அவங்க கேட்ட மாதிரி முன்னாடியே அந்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணியிருக்கலாமே..!? ஏன் இம்புட்டு லேட்டு..? அதுனாலதான போராட்டம் தொடர்ந்துச்சு..!

    ReplyDelete
  31. ///மருத்துவரரசர் மகாதேவன் எம்.பி.பி.எஸ் said...

    //சொகமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. மனசுதான் நல்லாயில்ல..//

    பதிவை இதுக்கு மேல பெரிசாக்க முடியலைன்னா? கூல்! இப்படியெல்லாம் கவலைப்பட்டா உடம்பு என்னத்துக்காகுறது!

    அப்படியே வீட்டை விட்டு வெளிய வாங்க! வெளி உலகத்தை பாருங்க! எவ்வளவோ மேட்டர் இருக்கு! எதிர் வீட்டுக் கோலம்கூட உங்க 20 பக்க பதிவா மாறலாம்! (அதுக்காக கோலம் போட்டுகிட்டிருக்கும்போதே போயி நின்னு பார்க்காதீங்க! முறைவாசல் முனியம்மாகிட்டே மொத்துதான் கிடைக்கும்)///

    உதை வாங்குறதுக்கு நிறைய ஐடியா கொடுக்குறீங்கப்பா..!

    இதுக்கெல்லாம் நான் மயங்கிர மாட்டேனாக்கும்..

    மனசு வேற மேட்டர்ல வருத்தமா இருக்கு.. பதிவு போட மேட்டர் கிடைக்கலியேன்ற மேட்டர்ல இல்ல..!

    ReplyDelete
  32. //மனசு வேற மேட்டர்ல வருத்தமா இருக்கு//

    :(

    ஐயய்யோ என்ன ஆச்சு! இத்தன கமெண்ட்ஸ் படிச்சுமா வருத்தமா இருக்கு?

    ReplyDelete
  33. As usual rowdy lawyers were not yet punished. yesterday they have attacked traffic ramasamy also.

    hight court doesnt have any guts to punish lawyers who were really goes very offensive.

    ReplyDelete
  34. ///வலைப்பதிவரசர் said...

    //எதற்காக நீதிபதிகளை நீதியரசர் என்று விளிக்க வேண்டும்? இந்த வார்த்தைப் பிரயோகம் சமீபமாக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் மருத்துவ அரசர், பல்கலைக்கழக அரசர், காவலரசர் என்று எழுதும் காலம் வரும்.//

    ஆமாம்!//

    பின்னுற முருகா.. உனக்கு நல்ல ஐடியா கிரியேட்டிவிட்டு மைண்ட் இருக்கு.. நீ பேசாம பொட்டி தட்டுற வேலையை விட்டுட்டு லெட்டர்பேடு, பென்சிலை கைல எடுத்துக்க.. எங்கயோ போயிருவ..!

    ReplyDelete
  35. ///வக்கீல் வரதாச்சாரி said...

    /நேர்ல பார்த்தேன்னு வை.. நானே அடி பின்னிருவேன்..!//

    எங்களை அடி பினிடுவேன் என்று சொன்ன உண்மைத்தமிழன் சென்னை உய்ர்நீதி மன்ற வளாகத்தை 17 முறை வலம் வந்து பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!///

    ஆஹாஹாஹாஹாஹாஹாஹாஹா.. இந்த முருகன், அந்த முருகனைத் தவிர வேற யாருக்கும் பணிய மாட்டான்..!

    ReplyDelete
  36. ///நாமக்கல் சிபி said...
    //மனசு வேற மேட்டர்ல வருத்தமா இருக்கு//
    :(

    ஐயய்யோ என்ன ஆச்சு! இத்தன கமெண்ட்ஸ் படிச்சுமா வருத்தமா இருக்கு?///

    என்ன பண்றது? மனசை ஆத்துறதுக்கு ஒரு வழியும் தெரியல..!

    ReplyDelete
  37. //Anonymous said...

    As usual rowdy lawyers were not yet punished. yesterday they have attacked traffic ramasamy also.

    hight court doesnt have any guts to punish lawyers who were really goes very offensive.//

    தவறு செய்த வழக்கறிஞர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கத்தான் போகிறது.. பொறுத்திருந்து பாருங்கள்..!

    ReplyDelete
  38. //மனசை ஆத்துறதுக்கு ஒரு வழியும் தெரியல..!//

    ஊரு பூரா தெருவுக்குத் தெரு எத்தனை பிராஞ்ச் வெச்சிருக்கோம்!

    ReplyDelete
  39. //மனசை ஆத்துறதுக்கு ஒரு வழியும் தெரியல..!//

    காதல் பட்ட பாவத்தால்
    காயம் பட்ட இதயங்களே!
    கண்ணீரை மருந்தாக்குங்களே!
    கண்ணீரை மருந்தாக்குங்களே!
    கண்ணீரை மருந்தாக்குங்களே!

    ReplyDelete
  40. //அதான் மயிலு, வேலு, பாம்புன்னு எப்படியாச்சும் மாத்தி உன் கூடவே வைச்சுக்க..//

    வேலு எங்க என்கிட்டே இருக்கு!

    அதான் வேலை குடு வேலை குடு ன்னு நச்சரிச்சி வாங்கிட்டியே!

    ReplyDelete
  41. //பொட்டி தட்டுற வேலையை விட்டுட்டு லெட்டர்பேடு, பென்சிலை கைல எடுத்துக்க.. எங்கயோ போயிருவ..!//

    அட்ரஸ் ப்ளீஸ்!

    ReplyDelete
  42. எதுவும் நடக்காது.. எலக்சன் வந்த நாங்க இத மறந்துருவோம்..

    ReplyDelete
  43. நான் அப்புறம் என்ன சொல்றது? எல்லாத்தையும் நேத்து ராத்திரியே நீங்கள் எல்லாரும் சொல்லிடீங்க.

    ஹான்.... அண்ணே உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  44. அண்ணன் உண்மைத்தமிழன் பதிவு ஹாக் செய்யப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறேன். அண்ணனால் இவ்ளோ சின்ன பதிவு போடவே முடியாது.

    ReplyDelete
  45. /அண்ணன் உண்மைத்தமிழன் பதிவு ஹாக் செய்யப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறேன். அண்ணனால் இவ்ளோ சின்ன பதிவு போடவே முடியாது//

    ஓ! அதைத்தான் மனசு கஷ்டமா இருக்குன்னு சொல்றாரொ!

    ReplyDelete
  46. தமிழகத்தை பொறுத்தவரை நமக்கு எல்லா பிரச்சனைகளுமே குளத்தில் போட்ட கல் தான், அலைகள் அடங்கும் வரை குதித்து கொண்டிருப்போம், அலைகள் தீர்ந்து விட்டால் அடுத்த கல்!
    முதல் கல்லை பற்றி யாருக்கு என்ன கவலை.

    வரிசையாக சொல்லிகொண்டே போகலாம்.

    காவீரி!
    ஒஹேனக்கல்!
    கச்சத்தீவு!
    ஸ்பெக்ட்ரம் ஊழல்!

    இதே போல் நாலு மடங்கு போன ஆட்சியிலும்!

    சாக்கடையில் வாழும் பன்றியாகிவிட்டோம்!
    போடுவதை தின்று விட்டு கடைசியில் ஓட்டு போட சொல்லும் இஅடத்தில் போட்டு போக வேண்டியது தான்

    ReplyDelete
  47. ///டாஸ்மாக் said...
    //மனசை ஆத்துறதுக்கு ஒரு வழியும் தெரியல..!//
    ஊரு பூரா தெருவுக்குத் தெரு எத்தனை பிராஞ்ச் வெச்சிருக்கோம்!///

    மனச ஆத்தறதுக்கு வழியைச் சொல்லுங்கடான்னா.. பால் ஊத்தறதுக்கு வழியைக் காட்டுறீங்களேப்பா..!

    ReplyDelete
  48. ///விஜய டீ,.ஆர் said...
    //மனசை ஆத்துறதுக்கு ஒரு வழியும் தெரியல..!//

    காதல் பட்ட பாவத்தால்
    காயம் பட்ட இதயங்களே!
    கண்ணீரை மருந்தாக்குங்களே!
    கண்ணீரை மருந்தாக்குங்களே!
    கண்ணீரை மருந்தாக்குங்களே!///

    யோவ் டீ.ஆரே..

    காதல் பண்றதுக்கே ஆள் கிடைக்காமத்தான்யா மனசு கஷ்டமா இருக்கு.. இதுக்கு இன்னா சொல்ற..?!

    ReplyDelete
  49. ///பழனிமலை முருகன் said...
    //அதான் மயிலு, வேலு, பாம்புன்னு எப்படியாச்சும் மாத்தி உன் கூடவே வைச்சுக்க..//

    வேலு எங்க என்கிட்டே இருக்கு! அதான் வேலை குடு வேலை குடுன்னு நச்சரிச்சி வாங்கிட்டியே!///

    வேலை இல்லை.. வேல்..!

    மயிலு, பாம்புன்னு கூட வைச்சிருக்கியே.. கூட ஒரு கவுதாரி வேணும்னு தோணுதா முருகா உனக்கு..?! நான் ரெடி.. நீ ரெடியா..?!

    ReplyDelete
  50. ///வழி கேட்பவன் said...
    //பொட்டி தட்டுற வேலையை விட்டுட்டு லெட்டர்பேடு, பென்சிலை கைல எடுத்துக்க.. எங்கயோ போயிருவ..!//

    அட்ரஸ் ப்ளீஸ்!///

    தே.மு.தி.க., அ.இ.ச.ம.க., காங்கிரஸ், பா.ம.க. வி.சி., கொ.மு.மு., ம.ம.க., அ.இ.ஜ.க., சமாஜ்வாதிக் கட்சி..

    இப்படி நிறைய கட்சி ஆபீஸுக்கு போய் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஐடியா கொடு.. முருகா.. சில்லறையாவது தேறும்..!

    ReplyDelete
  51. //லோகநாதன் said...
    எதுவும் நடக்காது.. எலக்சன் வந்த நாங்க இத மறந்துருவோம்..//

    நீங்க மறந்தாலும் வழக்கறிஞர்கள் இதனை மறக்க மாட்டார்கள் லோகு ஸார்..!

    ReplyDelete
  52. //நையாண்டி நைனா said...
    நான் அப்புறம் என்ன சொல்றது? எல்லாத்தையும் நேத்து ராத்திரியே நீங்கள் எல்லாரும் சொல்லிடீங்க.
    ஹான்.... அண்ணே உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கு.//

    குடும்பஸ்தர்கள் நாங்களே ராத்திரில கண் முழிச்சு பதிவுலகத்தை வாழ வைச்சுக்கிட்டிருக்கோம்.. உங்களுக்கென்ன தூக்கம் வேண்டிக் கிடக்கு..?

    ராத்திரியே வந்திருக்கலாம்ல..?!

    ReplyDelete
  53. //ஹாக்கர் ஹரி said...
    அண்ணன் உண்மைத்தமிழன் பதிவு ஹாக் செய்யப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறேன். அண்ணனால் இவ்ளோ சின்ன பதிவு போடவே முடியாது.//

    ஹா.. ஹா..

    ஹாக்கர் ஹரி.. என் பதிவு ஹாக் ஆனா அதுக்குக் காரணம் நீயாத்தான் இருக்கணும்..

    எதுக்கும் உம் மேல ஒரு கண்ண வைச்சுக்குறேன்..!

    ReplyDelete
  54. ///நாமக்கல் சிபி said...
    /அண்ணன் உண்மைத்தமிழன் பதிவு ஹாக் செய்யப்பட்டுவிட்டது என்று எண்ணுகிறேன். அண்ணனால் இவ்ளோ சின்ன பதிவு போடவே முடியாது//

    ஓ! அதைத்தான் மனசு கஷ்டமா இருக்குன்னு சொல்றாரொ!///

    அதெப்படிய்யா அனானி பேரை இப்படி வித்தியாசமால்லாம் உடனக்குடன் தின்க் பண்ணி எழுதுற..? கில்லாடிய்யா நீயி..!

    ReplyDelete
  55. ///வால்பையன் said...
    தமிழகத்தை பொறுத்தவரை நமக்கு எல்லா பிரச்சனைகளுமே குளத்தில் போட்ட கல்தான். அலைகள் அடங்கும் வரை குதித்து கொண்டிருப்போம். அலைகள் தீர்ந்து விட்டால் அடுத்த கல்!
    முதல் கல்லை பற்றி யாருக்கு என்ன கவலை. வரிசையாக சொல்லிகொண்டே போகலாம்.
    காவீரி!
    ஒஹேனக்கல்!
    கச்சத்தீவு!
    ஸ்பெக்ட்ரம் ஊழல்!
    இதே போல் நாலு மடங்கு போன ஆட்சியிலும்!
    சாக்கடையில் வாழும் பன்றியாகிவிட்டோம்!
    போடுவதை தின்று விட்டு கடைசியில் ஓட்டு போட சொல்லும் இடத்தில் போட்டு போக வேண்டியதுதான்.///

    வாலு நச்சுன்னு சொல்லிருக்கீங்க..

    தேர்தல் அன்னிக்கும் ஓட்டுப் போடாம ஊர் சுத்துறவங்களையும், கடமைக்கேன்னு ஓட்டுப் போடறவங்களையும் நாம என்னன்னு சொல்றது..?

    கொஞ்சமாச்சும் சமூகப் பொறுப்பு வேண்டாமா..? நாமளும் எவ்வளவுதான் கரடியா கத்தினாலும் அவனவன் அவனவன் கழுத்துக்குக் கத்தி வந்த பின்னாடிதான் ஒரு விஷயத்தைப் பத்தியே யோசிக்கிறாய்ங்க..!

    என்னமோ போங்க..!

    ReplyDelete
  56. /*யோவ் டீ.ஆரே..

    காதல் பண்றதுக்கே ஆள் கிடைக்காமத்தான்யா மனசு கஷ்டமா இருக்கு.. இதுக்கு இன்னா சொல்ற..?!*/

    மணத்திற்கு நீ நிதமும் குளி.
    கொடுமைக்கு நீ தோண்டு குழி

    உன் பதிவை பார்த்தா பலருக்கு கிலி.
    சமூகத்தை உன் பேனாவால் கிழி.

    "பெரிய" புராணம் எழுதுவது ஒழி.
    காதல் புராணம் தரும் உனக்கு ஒளி.

    மனசுக்குள் இருக்குது வலி.
    இதுவே உன்மனம் ஆற வழி.

    ஹே டண்டனக்கா
    டனக்கு நக்கா

    ReplyDelete
  57. கண்கொட்டாம படிச்சிகிட்டு வந்தா திடீர்ன்னு பதிவு முடிந்து விட்டதே:)ன்னு மத்தவங்க மாதிரி கலாய்ப்பேன்னு நினைக்காதீங்க.பதிவின் சாரத்தைப் பொறுத்து நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருங்க.அதே சமயத்தில் அப்பப்ப சின்ன பதிவும் இடுங்க.சிலர் காசு கொடுத்து வலைக்காப்பியகத்துக்கும் பதிவுக்கும் வர்றாங்க.

    இந்தப் பதவி நீக்கம் காலம் கடந்து கிடைத்த நீதி என்ற போதிலும் வரவேற்கத்தக்கது.நமது வாழ்க்கைமுறையின் மன அழுத்தங்களின் பிரதிபலிப்பே அரசின் இரு முக்கிய தூண்களும் உரசிக்கொண்டது.

    ReplyDelete
  58. நல்ல பதிவு. நன்றி
    இந்த பின்னூட்டம் போடுபவர்கள் பதிவைப்பற்றி எதுவும் பேசாமல் சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறார்களே? விமர்சனங்கள் பதிவின் உள்ளடக்கத் பற்றியிருந்தால்தானே படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் பயனளிக்கும்.
    இங்கே ஒருவர் வக்கீல்கள் வேலைக்கு போகாமல் இருந்ததற்கு என்ன தன்டனை என கேட்டிருந்தார். ஐயா மின்னல் வக்கீல்கள் அரசு ஊழியர் அல்ல. அவர்களுக்கு எந்த சன்மானமும், சலுகைகளும் இல்லை. அவர்கள் வேலைக்கு போகாமால் இருந்த்தால் அவர்களுக்குத்தான் பொருளாதார இழப்பு. நீங்கள் வேலைக்கு போகாமல் இருந்தால் உங்களை எப்படி கைது செய்ய முடியாதோ அதே போல அவர்களையும் கைது செய்ய முடியாது. சிலர் சு.சாமி மேல் முட்டையடித்த்தை பற்றி பேசுகிறார்கள் நமது அரசின் பாரபட்சம் பாரீர்... முட்டை அடித்த சாமிக்காக பெஞ்ச் விசாரனை, மன்டை உடைந்த நீதிப்திக்காக ஒரு கேசு கூட பதியவில்லை...

    ReplyDelete
  59. முடியலையப்பா சாமி!பின்னூட்டங்கள் மூச்சு வாங்க வைக்குது.நான் வாரேன்

    ReplyDelete
  60. //கண்கொட்டாம படிச்சிகிட்டு வந்தா திடீர்ன்னு பதிவு முடிந்து விட்டதே:)ன்னு மத்தவங்க மாதிரி கலாய்ப்பேன்னு நினைக்காதீங்க.பதிவின் சாரத்தைப் பொறுத்து நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருங்க//

    முருகா அவர் சொல்றார் இவர் சொல்றார்னு பதிவின் நீளத்தை திரும்பவும் அதிகமாக்காதே முருகா.. இப்படியே இருக்கட்டும் அப்பத்தான் நான் அடிக்கடி வந்து படிப்பேன்..

    ஆனால் முருகா பதிவின் நீளத்தை குறைத்து பின்னூட்டத்தை பின்னி பெடல் எடுக்கிறியே முருகா இது உனக்கே நியாமா?

    சோ முருகா.. அந்த அதர் ஆப்ஷன் எல்லாத்தையும் எங்கள் நலன் கருதி எடுத்துடு.. சிபி என்ற இம்சை இல்லாமல் இருக்கும்..

    சரி முருகா மேல சொன்னதை உண்மை தமிழனிடம் நீயே சொல்லிவிடு முருகா...!!

    ReplyDelete
  61. I second Vetti...

    அப்போ பதிவு.. சும்மா போங்க அண்ணாச்சி... காமெடி பண்ணிக்கிட்டு ;)

    ReplyDelete
  62. //ஹாக்கர் ஹரி said...
    /*யோவ் டீ.ஆரே..

    காதல் பண்றதுக்கே ஆள் கிடைக்காமத்தான்யா மனசு கஷ்டமா இருக்கு.. இதுக்கு இன்னா சொல்ற..?!*/

    மணத்திற்கு நீ நிதமும் குளி.
    கொடுமைக்கு நீ தோண்டு குழி
    உன் பதிவை பார்த்தா பலருக்கு கிலி.
    சமூகத்தை உன் பேனாவால் கிழி.
    "பெரிய" புராணம் எழுதுவது ஒழி.
    காதல் புராணம் தரும் உனக்கு ஒளி.
    மனசுக்குள் இருக்குது வலி.
    இதுவே உன் மனம் ஆற வழி.
    ஹே டண்டனக்கா
    டனக்கு நக்கா//

    சந்தோஷம் டீ.ஆரே.. கவிதையெல்லாம் நல்லாவே வருது உனக்கு.. அதான்யா உன் இடத்தை யாராலேயும் அசைக்க முடியல..

    ReplyDelete
  63. //ராஜ நடராஜன் said...
    கண்கொட்டாம படிச்சிகிட்டு வந்தா திடீர்ன்னு பதிவு முடிந்து விட்டதே:)ன்னு மத்தவங்க மாதிரி கலாய்ப்பேன்னு நினைக்காதீங்க. பதிவின் சாரத்தைப் பொறுத்து நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருங்க. அதே சமயத்தில் அப்பப்ப சின்ன பதிவும் இடுங்க. சிலர் காசு கொடுத்து வலைக்காப்பியகத்துக்கும் பதிவுக்கும் வர்றாங்க.//

    நன்றி நடராஜன் ஸார்..

    விஷயத்துக்குத் தகுந்தாற்போலத்தான் பதிவின் நீளம் கூடும், குறையும். அனைத்துப் பதிவுகளிலும் இது இருக்காது..

    //இந்தப் பதவி நீக்கம் காலம் கடந்து கிடைத்த நீதி என்ற போதிலும் வரவேற்கத்தக்கது. நமது வாழ்க்கை முறையின் மன அழுத்தங்களின் பிரதிபலிப்பே அரசின் இரு முக்கிய தூண்களும் உரசிக் கொண்டது.//

    உண்மைதான் ஸார்.. இருவருமே தங்களில் யார் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சம்பவத்தை பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள். ஆனாலும் இந்த சஸ்பெண்ட் உத்தரவு வரவேற்கத்தக்கதுதான்..

    ReplyDelete
  64. //மாணவன் said...
    நல்ல பதிவு. நன்றி இந்த பின்னூட்டம் போடுபவர்கள் பதிவைப ்பற்றி எதுவும் பேசாமல் சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறார்களே? விமர்சனங்கள் பதிவின் உள்ளடக்கத் பற்றியிருந்தால்தானே படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் பயனளிக்கும். இங்கே ஒருவர் வக்கீல்கள் வேலைக்கு போகாமல் இருந்ததற்கு என்ன தன்டனை என கேட்டிருந்தார். ஐயா மின்னல் வக்கீல்கள் அரசு ஊழியர் அல்ல. அவர்களுக்கு எந்த சன்மானமும், சலுகைகளும் இல்லை. அவர்கள் வேலைக்கு போகாமால் இருந்த்தால் அவர்களுக்குத்தான் பொருளாதார இழப்பு. நீங்கள் வேலைக்கு போகாமல் இருந்தால் உங்களை எப்படி கைது செய்ய முடியாதோ அதே போல அவர்களையும் கைது செய்ய முடியாது. சிலர் சு.சாமி மேல் முட்டையடித்த்தை பற்றி பேசுகிறார்கள் நமது அரசின் பாரபட்சம் பாரீர்... முட்டை அடித்த சாமிக்காக பெஞ்ச் விசாரனை, மன்டை உடைந்த நீதிப்திக்காக ஒரு கேசு கூட பதியவில்லை...//

    இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில் நீதிபதி தாக்கப்பட்டதற்கான நீதி நிச்சயம் கிடைக்கும்..

    ReplyDelete
  65. //ராஜ நடராஜன் said...
    முடியலையப்பா சாமி! பின்னூட்டங்கள் மூச்சு வாங்க வைக்குது. நான் வாரேன்.//

    நாளைக்கும் வாங்க ஸார்.. கொஞ்சம்தான ஸார் இருக்கு.. இதுக்கே மூச்சு வாங்குதுங்குறீங்க..?

    ReplyDelete
  66. ///கவிதா | Kavitha said...
    //கண்கொட்டாம படிச்சிகிட்டு வந்தா திடீர்ன்னு பதிவு முடிந்து விட்டதே:)ன்னு மத்தவங்க மாதிரி கலாய்ப்பேன்னு நினைக்காதீங்க. பதிவின் சாரத்தைப் பொறுத்து நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருங்க//

    முருகா அவர் சொல்றார் இவர் சொல்றார்னு பதிவின் நீளத்தை திரும்பவும் அதிகமாக்காதே முருகா.. இப்படியே இருக்கட்டும் அப்பத்தான் நான் அடிக்கடி வந்து படிப்பேன்.. ///

    தாயி.. மேட்டருக்கு ஏத்தாப்புலதாம்மா நீளம் கூடும், குறையும்.. நீயும் சின்னப் புள்ளைக மாதிரி பேசினா எப்படி? உன் வீட்லேயும் சில சமயம் எம்மாம் பெரிசா பதிவு இருந்தது தெரியுமா..? யோசிச்சுப் பாரு..

    //ஆனால் முருகா பதிவின் நீளத்தை குறைத்து பின்னூட்டத்தை பின்னி பெடல் எடுக்கிறியே முருகா இது உனக்கே நியாமா?//

    அது யார் செய்யற வேலைன்னு உனக்கே நல்லாத் தெரியுமே..? என்ன செய்யறது 'கெரகம்' விட மாட்டேங்குது..

    //சோ முருகா.. அந்த அதர் ஆப்ஷன் எல்லாத்தையும் எங்கள் நலன் கருதி எடுத்துடு.. சிபி என்ற இம்சை இல்லாமல் இருக்கும்.. சரி முருகா மேல சொன்னதை உண்மை தமிழனிடம் நீயே சொல்லிவிடு முருகா...!!//

    எடுத்திரலாம்.. ஆனா சில சமயம் நேரிடையா பெயர் சொல்லி பின்னூட்டம் போட முடியாதவங்களுக்கு சிக்கலாயிருமே.. அதுதான் யோசிக்கிறேன்..

    அந்தப் பயலை.. ஏதாவது பண்ணணும்மா.. பண்றேன்.. எலெக்ஷன் டைம் ஆரம்பிச்சிருச்சுல்ல.. பிரச்சாரம் துவங்கட்டும்.. எங்கிட்டாச்சும் யாரையாவது புடிச்சு வூட்டு அட்ரஸை கொடுத்து 'லேசா தட்டி' வைக்கச் சொல்லிடலாம்.. துட்டு மட்டும் நீ கொடுத்திரு தெய்வமே..

    ReplyDelete
  67. //நாகை சிவா said...
    I second Vetti...
    அப்போ பதிவு.. சும்மா போங்க அண்ணாச்சி... காமெடி பண்ணிக்கிட்டு ;)//

    இல்லை சிவா.. வழக்கறிஞர்கள் இந்த முறை விடமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.. கதை காமெடியாக முடியாது..

    ReplyDelete
  68. //அந்தப் பயலை.. ஏதாவது பண்ணணும்மா.. பண்றேன்.. எலெக்ஷன் டைம் ஆரம்பிச்சிருச்சுல்ல.. பிரச்சாரம் துவங்கட்டும்.. எங்கிட்டாச்சும் யாரையாவது புடிச்சு வூட்டு அட்ரஸை கொடுத்து 'லேசா தட்டி' வைக்கச் சொல்லிடலாம்.. துட்டு மட்டும் நீ கொடுத்திரு தெய்வமே..

    //

    முருகா... எதுக்கு முருகா..சிபிக்காக நீ இவ்வளவு யோசிக்கிற... ஜூஜூபி மேட்டரு.. அவங்க தங்கமணி எப்படி முருகா நீ மறக்கலாம்..அவங்க கிட்ட ஒரே ஒரு வார்த்த.. சொன்னா மேட்டர் ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர் முருகா... :)

    ReplyDelete
  69. என்னப்பா இது...

    பதிவை விட பின்னூட்டமெல்லாமே சூப்பர்.

    யாருப்பா அது வெடிகுண்டு முருகேசன். Danger Party போல இருக்கே.. கலக்கல்.

    ReplyDelete
  70. ///கவிதா | Kavitha said...

    //அந்தப் பயலை.. ஏதாவது பண்ணணும்மா.. பண்றேன்.. எலெக்ஷன் டைம் ஆரம்பிச்சிருச்சுல்ல.. பிரச்சாரம் துவங்கட்டும்.. எங்கிட்டாச்சும் யாரையாவது புடிச்சு வூட்டு அட்ரஸை கொடுத்து 'லேசா தட்டி' வைக்கச் சொல்லிடலாம்.. துட்டு மட்டும் நீ கொடுத்திரு தெய்வமே..//

    முருகா... எதுக்கு முருகா..சிபிக்காக நீ இவ்வளவு யோசிக்கிற... ஜூஜூபி மேட்டரு.. அவங்க தங்கமணி எப்படி முருகா நீ மறக்கலாம்..அவங்க கிட்ட ஒரே ஒரு வார்த்த.. சொன்னா மேட்டர் ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர் முருகா... :)///

    அதை மொதல்ல செய்யு தாயி.. புண்ணியமாப் போகும்..!

    ReplyDelete
  71. //வண்ணத்துபூச்சியார் said...
    என்னப்பா இது... பதிவை விட பின்னூட்டமெல்லாமே சூப்பர்.
    யாருப்பா அது வெடிகுண்டு முருகேசன். Danger Party போல இருக்கே.. கலக்கல்.//

    சில சமயம் இப்படியும் நடக்கும் பூச்சியாரே.. எல்லாம் ஒன்மேன் ஆர்மி.. ஒரு அடங்காதவன் ஆடுற ஆட்டம்தான்..!

    ReplyDelete
  72. குறைந்தபட்சம் நடக்க தெரிந்த உலக அறிவுள்ளவர்களை..நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.....
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26345
    இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??
    வைகோ போன்றோரை முன்னிருத்தலாம் நாம்..........

    ReplyDelete
  73. //நீதியரசர் என்று விளிக்க வேண்டும்? இந்த வார்த்தைப் பிரயோகம் சமீபமாக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.//

    அப்படியே எல்லாம் பேசப்புடாது..

    குஷ்பு, ரம்பா, சிம்பு, சங்கீதா எல்லாம் ஜட்ஜ் ஆகிடாங்கில்ல, அதான் நீதிபதி எல்லாம் நீதியரசர் ஆகிடாங்க.. இதுக்கு போய்.. சின்ன பிள்ளையாட்டாம் பீல் பண்ணிக்கிட்டு..


    // இப்படியே போனால் மருத்துவ அரசர், //


    நம்ம டாக்டருக்கு அடுத்த பட்டம் தயார்.. பதிவுலகமும் இதவெச்சு ஒரு ரெண்டு வாரம் சூடு பிடிக்கும்..

    ReplyDelete
  74. //S.Arockia Romulus said...
    குறைந்தபட்சம் நடக்க தெரிந்த உலக அறிவுள்ளவர்களை..நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.....
    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26345
    இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?? வைகோ போன்றோரை முன்னிருத்தலாம் நாம்..........//

    முன்னிறுத்தலாம்தான்.. ஆனால் மக்கள் வாக்களிக்க வேண்டுமே..!

    கட்சி சாராத இளைஞர்களிடத்தில் மட்டுமே வைகோவுக்கு செல்வாக்கும், ஆதரவும், அனுதாபமும் உண்டு..

    மற்றபடி கட்சிக் கண்ணோட்டத்தில் பார்த்தீர்களானால் அவரது கட்சிக்கு இருக்கும் செல்வாக்கு மிக, மிகக் குறைவு..!

    ReplyDelete
  75. ///Bhuvanesh said...
    //நீதியரசர் என்று விளிக்க வேண்டும்? இந்த வார்த்தைப் பிரயோகம் சமீபமாக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.//
    அப்படியே எல்லாம் பேசப்புடாது..
    குஷ்பு, ரம்பா, சிம்பு, சங்கீதா எல்லாம் ஜட்ஜ் ஆகிடாங்கில்ல, அதான் நீதிபதி எல்லாம் நீதியரசர் ஆகிடாங்க.. இதுக்கு போய்.. சின்ன பிள்ளையாட்டாம் பீல் பண்ணிக்கிட்டு..///

    ஓ.. நச் பதிலு புவனேஷ்.. அசத்திட்டீங்க..!

    // இப்படியே போனால் மருத்துவ அரசர், //
    நம்ம டாக்டருக்கு அடுத்த பட்டம் தயார்.. பதிவுலகமும் இத வெச்சு ஒரு ரெண்டு வாரம் சூடு பிடிக்கும்..///

    கொடுத்திரலாம்.. என்ன காசா, பணமா..?

    ReplyDelete
  76. [[[ மாணவன் said...
    நல்ல பதிவு. நன்றி
    இந்த பின்னூட்டம் போடுபவர்கள் பதிவைப்பற்றி எதுவும் பேசாமல் சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறார்களே? விமர்சனங்கள் பதிவின் உள்ளடக்கத் பற்றியிருந்தால்தானே படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் பயனளிக்கும்.
    இங்கே ஒருவர் வக்கீல்கள் வேலைக்கு போகாமல் இருந்ததற்கு என்ன தன்டனை என கேட்டிருந்தார் ]]]

    வாஸ்தவம் --- பலரது எண்ணங்கள் ''நீண்டதையும்''
    ''சின்னதையும்'' மட்டுமே வட்டமிடும் ---

    இதுகளையும் படிக்க வேண்டியுள்ளதே !.

    ReplyDelete
  77. ///benzaloy said...

    [[[மாணவன் said...
    நல்ல பதிவு. நன்றி இந்த பின்னூட்டம் போடுபவர்கள் பதிவைப்பற்றி எதுவும் பேசாமல் சம்பந்தமே இல்லாமல் எழுதுகிறார்களே? விமர்சனங்கள் பதிவின் உள்ளடக்கத் பற்றியிருந்தால்தானே படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் பயனளிக்கும்.
    இங்கே ஒருவர் வக்கீல்கள் வேலைக்கு போகாமல் இருந்ததற்கு என்ன தன்டனை என கேட்டிருந்தார்]]]

    வாஸ்தவம் --- பலரது எண்ணங்கள் ''நீண்டதையும்'' ''சின்னதையும்'' மட்டுமே வட்டமிடும் ---
    இதுகளையும் படிக்க வேண்டியுள்ளதே!.///

    என்ன பண்றது படிச்சுத் தொலையத்தானே வேண்டும்..!

    ReplyDelete