Pages

Tuesday, March 17, 2009

தமிழ் ஸ்டூடியோ.காம் வழங்கிய விருதும், சில குறும்படங்களும்..!

17-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'வலைப்பதிவுகள் எழுதுவதால் என்ன புண்ணியம்..? பைசா, காசுக்கு பிரயோசனமில்லையே..?' என்ற புலம்பல் என் மனதிலும் நீண்ட நாட்களாக ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.

என்னிடம் கேட்பவர்களுக்கு நான் சொன்ன சமாதானம், 'எனது எழுத்து நிற்காமல் ஓடுகிறதே.. எழுத்து மேலும், மேலும் வருகிறதே.. வளர்கிறதே..!' என்பதுதான். இதைத் தாண்டி என்ன பயன் என்ற கேள்விக்கு விடை கொடுக்க சில சமயங்களில் எனது நாவு முன் வந்தும், அடக்க உணர்வில் அடங்கிப் போகிறேன்.. ஆனாலும் பல சமயங்களில் மனதில் ஏற்படும் வெறுப்புணர்வு அடங்கிப் போகுமளவுக்கு, பின்னூட்டங்களில் ஆறுதல்களும், பாராட்டுக்களும் வந்து குவிகின்றன.

இப்போது அதனையும் தாண்டி சில அங்கீகாரங்கள் கிடைக்கின்றபோது இன்னும் நிறைய எழுத வேண்டும்.. எழுதியே ஆக வேண்டும் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

முதல் நிகழ்ச்சியாக இந்த மாதத் துவக்கத்தில் 'முருகப் பெருமான்' நேரில் வந்து 'நலம்' விசாரித்தான். அசந்து போனேன், இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குமா என்று..!? இந்தச் சம்பவம் பற்றி பகிரங்கமாக இப்போது எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை. பின்பு வாய்ப்புக் கிடைத்தால், வந்த 'முருகன்' அனுமதித்தால் சொல்கிறேன்..

இரண்டாவது நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று நடந்தது. 'தமிழ்ஸ்டூடியோ.காம்' என்கிற இணைய தளத்தினர் நடத்திய குறும்பட வட்ட மாதாந்திர நிகழ்ச்சியில், 'இந்த மாதத்திய சிறந்த பதிவர்' என்று சொல்லி விருது கொடுத்து, பணப் பரிசும் அளித்தார்கள். 400 ரூபாய் பரிசுத் தொகை. எல்லாம் முருகன் செயல்..!


மாதா மாதம் ஒரு பதிவரை தேர்வு செய்து அவருக்கு விருது கொடுக்கவிருப்பதாக அந்த இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு.அருண் தெரிவித்தார். சென்ற மாதம் தோழர் வினவு சிறந்த பதிவர் விருதினை வாங்கியிருந்தார். இந்த மாதம் நான்..

நிகழ்ச்சிக்கு பதிவர்கள் லிவிங்ஸ்மைல் வித்யா, தண்டோரா, வண்ணத்துப்பூச்சியார் வந்திருந்தார்கள். மேலும் பல குறும்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஆர்வலர்கள், ரசிகர்கள் என்று திரண்டிருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னை எழும்பூர் மியூஸியத்தின் எதிரில் அமைந்திருக்கும் இஸாக் அரங்கில் நடைபெற்றது.



பரிசினைப் பெற்றுக் கொண்டு வலைத்தளம் ஆரம்பித்தல், அதனைப் பயன்படுத்துதல், படித்துப் பயன் பெறுதல் பற்றி சில நிமிடங்கள் மட்டுமே நான் பேசினேன்.. வந்திருந்தோரையும் வலைத்தளம் ஆரம்பித்து எழுத வரும்படியும் அழைத்தேன்.


அந்த நிகழ்வுக்கு முன்னும், பின்னும் ஆவணப் படங்களும், சில குறும்படங்களும், திரையிடப்பட்டன.

நான் சென்ற மதியப் பொழுதில் கானா தேசத்தில் கை, கால் இழந்த உடல் ஊனமுற்றோர்களுக்காக ஒரு சுய தொழில் வழங்கும் திட்டத்தைத் துவக்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வரும் இம்மானுவேல் என்கிற இளைஞன் பற்றிய ஆவணப் படம் திரையிடப்பட்டது.

இம்மானுவேல் என்ற அந்த இளைஞர் தனது வலது காலை இழந்தவர். செயற்கைக் கால் பொருத்தியிருப்பவர். இந்த நிலைமையிலேயே சைக்கிளிங் போட்டியில் கானா தேசத்தில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். உலக அளவில் நடைபெறும் சைக்கிளிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகைகளையும் வைத்து தன்னுடைய ஊரில் உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு மையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ஊனமுற்றோருக்கு சுயதொழில் செய்யும் வாய்ப்பு, படிப்பு, தொழிலுக்கான உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியிருக்கிறார் இந்த இம்மானுவேல்.

அந்த இளைஞர் எங்கெல்லாம் சென்றாரோ, செல்கிறாரோ அங்கெல்லாம் கேமிராவுடன் சென்று அவருடைய வாழ்க்கைப் பயணத்தை படமாக்கியிருக்கிறார்கள். இம்மானுவேல் அமெரிக்கா சென்று போட்டியில் ஜெயிப்பது.. ஹாலிவுட் நடிகர் ராபின்ஸ் வில்லியம்ஸிடம் பரிசு வாங்குவது. நியூயார்க்கில் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளரை சந்திப்பது என்று அவருடைய வாழ்க்கையோட்டமும் பதிவாகியிருக்கிறது.

வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பும் அவரை கானா தேசத்து மன்னர் தனது அரண்மனைக்கு அழைத்து பாராட்டுகிறார். அவருடன் இம்மானுவேல் நிறுவனத்தின் உதவிகளால் சிறு தொழில்களைக் கற்று அதன் மூலம் தொழில் செய்து வரும் உடல் ஊனமுற்றவர்களையும் பாராட்டி பரிசளிக்கிறார். இவர்களால் கானா தேசத்துக்கே பெருமை என்கிறார் மன்னர்.

தொடர்ந்து இம்மானுவேலின் திருமணம், முதல் குழந்தை பிறப்பு வரையிலும் ஆவணப் படமாக்குதல் தொடர்ந்திருக்கிறது.

இது போன்ற விழிப்புணர்வுமிக்கப் படங்கள் உலகம் முழுவதிலும் உடல் ஊனமுற்றவர்கள் மத்தியில் திரையிடப்பட வேண்டும்.. மிக, மிக சிரத்தையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப் படம்..

குறும்படங்கள்

மாலை நேர குறும்படத் திரையிடலின்போது மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன. முதல் படம் கண்டு கேட்டு..!

ராஜ் டிவியில் தற்போது பணியாற்றி வரும் டென்சிங் என்பவர் இக்குறும்படத்தினை இயக்கியிருக்கிறார்.


ரேடியோவில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒருவன் மீது ஒரு வாசகிக்குக் காதல். எத்தனை நாட்கள் காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது. நேரில் சந்தித்து காதலைச் சொல்லிவிடலாம் என்று நினைத்து அவனைச் சந்திக்க ரேடியா அலுவலகத்துக்கு நேரில் செல்கிறாள். அங்கே அவள் அந்த காதலனான ரேடியோ ஜாக்கியைச் சந்திக்கக் காத்திருக்கும் தருணத்தில், அவள் காதில் மாட்டியிருந்த காது கேட்கும் கருவியின் பேட்டரி செயலிழக்கிறது. அந்தத் தவிப்பில் அவள் இருக்கும்போது கண் பார்வையற்றவனான அந்த ரேடியோ ஜாக்கி வெளியே வருகிறான்.

பேட்டரி வாங்க வெளியே வரும் அந்தப் பெண், கடைகள் ஏதும் பக்கத்தில் இல்லாததால் என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே மீண்டும் உள்ளே வருகிறாள். அங்கே கண் பார்வையற்ற ஜாக்கியும் யாரும் இல்லாமல் குழம்பிப் போய் அமர்ந்திருக்கிறான்.

தான் சந்திக்க வந்த ஜாக்கி நிச்சயம் இவனாக இருக்க முடியாது என்பது அவளுடைய எண்ணம். தன்னைச் சந்திக்க வந்தவளாக இருந்திருந்தால் இந்நேரம் தன்னிடம் பேசியிருப்பாளே என்ற ஆதங்கத்தில் அந்த ஜாக்கியும் இருக்க.. நிமிடங்கள் கரைகின்றன. இருவருமே ஏதோ ஒரு ஏமாற்றத்தில் அவரவர் வந்த வழியே பிரிந்து செல்ல..

தொடர்ந்து திரை இருட்டாக.. ஆண் குரல் ஒலிக்கிறது. “என்ன எப்பப் பார்த்தாலும் ரேடியோவே கேட்டுக்கிட்டிருக்க..?” என்று.. “இதனாலதான நான் உங்களை கல்யாணமே பண்ணினேன்..” என்கிறது பெண்ணின் குரல். இருவரும் எப்படியோ திருமணம் செய்துவிட்டதாகக் காட்ட குறும்படம் நிறைவடைகிறது.

அவர்கள் பிரிந்து செல்லும்போதே படத்தை முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து..! ஆனாலும் எடுத்த விதமும், புதுமையான சிந்தனையும் பாராட்டுக்குரியது..!

படம் முடிந்த பின்பு கேள்விகளுக்குப் பதில் சொன்ன இயக்குநர் டென்சிங் "ராமன் தேடிய சீதை' படத்திற்கு முன்பாகவே தான் இதனைச் சிந்தித்து கதை உருவாக்கம் செய்து வைத்திருந்ததாகவும், அதற்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..” என்றார். இந்த குறும்படத்தினை ராஜ் டிவியே தயாரித்திருக்கிறது.

இரண்டாவது குறும்படம் "சுயநலம்!"

நாம் அனைவரும் பார்க்கவே பயப்படும், அருவருப்பாக நினைக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் விளிம்பு நிலை மாந்தர் ஒருவரின் கதையை அப்பட்டமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாட்சா.


தெருவில் கழிப்பிட சாக்கடைகள் அடைத்துக் கொண்டுவிட்டன. பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து முறையிடுகிறார்கள். சாக்கடையை சுத்தம் செய்யும் முனுசாமி அன்றைக்கு உடல் நலமில்லாமல் வீட்டில் இருக்கிறான். சாக்கடைத் தண்ணீரில் அவன் உடல் வளர்ந்து வந்ததால், வலிப்பு நோய் வந்து ஆபத்தில் இருக்கிறான் அவன். இனிமேல் குளிர்ந்த தண்ணீர் அவன் உடல் மேல் படக்கூடாது என்றிருக்கிறார் டாக்டர்.

மாநகராட்சி அதிகாரியோ முனுசாமியை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். அவனுடைய மனைவியின் எச்சரிக்கையையும் மீறி அங்கே வருகிறான் முனுசாமி. மாநகராட்சி அதிகாரி பொதுமக்களின் குறையை அவனிடத்தில் சொல்லி "ஜாக்கிரதையா ஏதாவது செஞ்சு முடிச்சிரு..” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பொதுமக்களுடன் அவர்கள் வசிக்கும் தெருவுக்கு வரும் முனுசாமி சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்கிறான். பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடைக்கப்பட்ட சாக்கடைக்கு வழி கிடைக்க, தேங்கி நின்ற தண்ணீர் தேக்கமில்லாமல் ஓடுகிறது..

கடமை முடிந்த திருப்தியோடு குழியில் இருந்து வெளியே வரும் முனுசாமி, தான் குளிப்பதற்காக கொஞ்சம் சுடுதண்ணீர் கேட்கிறான். இவ்வளவு நேரம் வருவானா..? மாட்டானா..? என்றெல்லாம் வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் இப்போது கதவடைக்கிறார்கள். சுடு தண்ணீர் தர மறுக்கிறார்கள். "சரி பரவாயில்லை.. நல்ல தண்ணியாவது குடுங்க.. குளிக்கணும்..” என்கிறான் முனுசாமி. அதற்கும் “முடியாது” என்கிறார்கள். "பைப்பாண்ட போய் நீயே அடிச்சுக் குளிச்சுக்க..” என்கிறார்கள்.

முனுசாமி சோர்வுடன் திரும்ப அவனுக்குள் இருந்த நோய் கண நேரத்தில் அவனைத் தாக்குகிறது. வலிப்பு வந்து கீழே விழுந்து துடியாய் துடிக்கிறான். நிமிடத்தில் இறந்தும் போகிறான். கூட்டம் இப்போதுதான் கூடி மோவாய்கட்டையில் கை வைத்து "என்னாங்கடி இது..?” என்கிறது..

மாநகராட்சி அதிகாரி ஓடி வந்து பார்க்கிறார். பதைபதைக்கிறார். “சொல்லித்தான அனுப்புனேன்.. அவன் கேக்குறதை கொடுங்கன்னு சொன்னனே.. இப்ப பார்த்தீங்களா.. ஒரு உசிரே போச்சு.. கொஞ்சம் சுடு தண்ணி கொடுக்குறதுல என்ன குறைஞ்சு போச்சு..? உங்களுக்காகத்தானே வந்தான்..” என்று ஆத்திரப்படுகிறார். அவனுடைய மனைவி கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து கதறுகிறாள். "போகாத.. போகாதன்னு சொன்னனே என் கணவா.. இப்படி போயிட்டியே..!” என்று அழுகிறாள்.

கூடியிருந்த கூட்டம் தங்களுக்குள்ளேயே யார் மீது குற்றம் சுமத்திக் கொள்வது என்று ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்காக உழைக்க வந்த ஒரு மனிதனை அவர்களுடைய கொடூரத்தாலேயே கொன்றுவிட்டார்கள். பொதுமக்களின் சுயநலத்தினால் ஒரு பொதுநலத் தொண்டன் பலியாகிவிட்டான் என்கிற கருத்தோடு படம் நிறைவடைந்தது.

இந்தக் குறும்படம் மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயா டிவி நடத்திய குறும்படப் போட்டிக்காக எடுக்கப்பட்டதாம். ஜெயா டிவியிலும் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது படத்தினை பார்த்த கமல்ஹாசன் பட யூனிட்டாரை பெரிதும் பாராட்டியுள்ளார்.

மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள் திரைப்படத்தை. இதில் முனுசாமியாக நடித்தவர் நிஜமாகவே இந்த வேலையை செய்பவர்தானாம்.. இயக்குநர் ஒரு முறை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது இதே நபர் இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாராம். "அந்த நேரத்தில் அந்த இடத்தில் தோன்றியதுதான் இந்தக் கதைக்கரு" என்றார் இயக்குநர் பாட்சா.

இந்தக் குறும்படத்தால் இன்னொரு பெரிய உதவியும் அந்த நபருக்குக் கிடைத்துள்ளது. முனுசாமியாக நடித்தவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனராம். இவர் சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையை விரும்பிச் செய்வதால், அவர் மனைவி அவருடன் சண்டையிட்டுவிட்டு குழந்தைகளுடன் தனியே சென்றுவிட்டாராம். இவர் மட்டு்ம்தான் நாள் முழுவதும் 'தண்ணி'யிலேயே மிதந்து வந்திருக்கிறார்.

ஜெயா டிவியில் இந்தக் குறும்படம் ஒளிபரப்பான பின்பு இதனைப் பார்த்த அவரது பிள்ளைகள் அப்பாவை விரும்பி பார்க்க வர.. இப்போது குடும்பமே ஒன்று சேர்ந்துவிட்டதாம். இதனை இயக்குநர் சொன்னபோது எனக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. ஒரு குறும்படம் எத்தகைய செயலைச் செய்திருக்கிறது பாருங்கள்..!

படத்தில் பங்கு கொண்ட அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.. அருமையான முயற்சி..!

மூன்றாவது குறும்படம் - 'கழுவேற்றம்!'


ராஜா என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் எழுத்தாளர் தமயந்தியின் சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.

இளைய மகன் வீட்டில் தங்கியிருக்கும் தாய் அங்கே மருமகளின் நொச்சு தாங்க முடியாமல் தவிக்கிறாள். மனைவி கணவனிடம் அவனுடைய அம்மாவை எங்கேயாவது கொண்டு போய்விட்டுவிட்டு வரும்படி சொல்கிறாள். இல்லாவிட்டால் தான் தனது அம்மா வீட்டுக்குப் போய்விடுவேன் என்று மிரட்டுகிறாள்.

இளைய மகன் சென்னையிலிருந்து மதுரையில் இருக்கும் தனது அண்ணனின் வீட்டிற்கு அம்மாவை அழைத்து வருகிறான். அங்கே அண்ணனின் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருப்பதாகத் தெரிகிறது.

பக்கத்து வீட்டுப் பையன் உதவியால் அண்ணனுக்கு போன் செய்து பேசுகிறான் தம்பி.. “இங்க எதுக்கு 'அதை' கூட்டிட்டு வந்த..? நான் வைச்சுக்க முடியாது..? எங்கிட்டாச்சும் கொண்டு போ..?” என்று எரிந்து விழுகிறான் அண்ணன்.. ஆசையாகப் பேசும் அம்மாவிடமும் இதையே சொல்லி பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்கிறான் மூத்தப் பிள்ளை. தொடர்ந்து இவர்கள் முயல, போன் சுவிட்ச் ஆஃப்.

இப்போது இளைய மகனும், அம்மாவும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கிறார்கள். இரவாகிவிட்டது. பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்கிறது. அம்மா "பசிக்குதுப்பா" என்கிறாள் மகனிடம். "நான் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுச் செல்லும் இளைய மகன், அம்மாவை அப்படியே 'அம்போ' என்று விட்டுவிட்டு, பஸ் ஏறி சென்னை நோக்கி போகிறான்.

இங்கே அம்மா காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. நேரங்கள் கடக்க.. அவளுக்கு புரிந்துவிட்டது.. எழுந்து வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்தபடியே நடக்கத் துவங்குகிறாள் என்பதோடு இந்தக் குறுங்காவியம் நிறைவடைந்தது.

இந்தப் படத்தில் அந்த அம்மா பல்வேறு கோணங்களில் அமர்ந்திருப்பதோடு படத்தினை நிறைவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ஆனாலும் பரவாயில்லை.. நிறைவாகவே செய்திருக்கிறார் இயக்குநர் ராஜா. பாராட்டுக்கள்..

ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்தில் சொல்லும் நீதியைவிட, வெறும் ஐந்தே நிமிடத்தில் நறுக்கென்று சொல்லி முடித்த இந்த குறும்படத்திற்கு பலமே இதனுடைய உயிரோட்டமான கதைதான்..! .

இது போன்ற குறும்படங்களை மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று 'குறும்பட வட்டம்' என்கிற பெயரில் கூட்டம் நடத்தி திரையிட்டு வருகிறது 'தமிழ்ஸ்டூடியோ.காம்'.

மாதம் 50 ரூபாய் கட்டணம் என்கிற சிறு தொகை அன்பளிப்புடன் இந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் இதன் இயக்குநர்கள். கூடவே இலக்கியக் கூட்டம் என்கிற தலைப்பிலும் மாதாமாதம் யாராவது ஒரு இலக்கிய ஆர்வலரை பேச வைக்கிறார்கள்.

இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக 'ஈ', 'அஞ்சாதே', 'வெண்ணிலா கபடிக்குழு', 'சிவா மனசுல சக்தி', 'நந்தலாலா' போன்ற படங்களில் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜீனியராகப் பணியாற்றிய திரு.உதயகுமார் என்பவருடன் நேர்காணல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


திரு.உதயகுமார் திரைப்படங்களில் சவுண்ட் மிக்ஸிங் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மிகச் சிறப்பாக பதிலளித்தார்.

"வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தில் ஸ்பாட் ரெக்கார்டிங்தானாம்.. நல்ல முறையில் வந்திருக்கிறது..” என்றார். "அஞ்சாதே' திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் தனக்குக் கொடுத்த சுதந்திரத்தினால்தான் சிறப்பான முறையில் செய்ய முடிந்தது..” என்றார். "வரவிருக்கும் 'நந்தலாலா' திரைப்படத்தில்கூட கிளைமாக்ஸ் காட்சியான கடைசி 45 நிமிடங்களில், பின்னணி இசையே இல்லாமல் படத்தில் பல உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் நடப்பதுபோல் திரைப்படம் அமைந்திருக்கிறது" என்றார். 'நந்தலாலா' பற்றி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு தமிழ்ச் சினிமா உலகில் பரவியிருக்கிறது. பார்ப்போம்.

நானும் எனது 'புனிதப்போர்' குறும்படத்தினை இது மாதிரியான ஒரு நிகழ்வில் திரையிடப் போகிறேன். அது சமயம் நமது வலைப்பதிவர்கள் அனைவரும் அலைகடலாய் திரண்டு வந்து அந்த நிகழ்ச்சியை சிறப்பித்துத் தரும்படி மிகத் தாழ்மையாய், உரிமையாய், அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

நன்றி

வணக்கம்.!

51 comments:

  1. //நானும் எனது 'புனிதப்போர்' குறும்படத்தினை இது மாதிரியான ஒரு நிகழ்வில் திரையிடப் போகிறேன்.//

    நோஓஓஓஓஓஓஓ ப்ளீஸ் நோ...

    ReplyDelete
  2. ///செந்தழல் ரவி said...

    //நானும் எனது 'புனிதப்போர்' குறும்படத்தினை இது மாதிரியான ஒரு நிகழ்வில் திரையிடப் போகிறேன்.//

    நோ ஓஓஓஓஓஓஓ ப்ளீஸ் நோ...///

    என்னது "நோ"வா..!

    எங்க இருந்தாலும் நீதான் முதல் ஆளா ஓடி வரணும்.. நீயே "நோ"ன்னு சொன்னா எப்படி ராசா..?!

    ReplyDelete
  3. எனது மனம் கனிந்த வாழ்த்துக்களை கேபிள் சங்கர் பதிவிலேயே உங்களுக்குச் சொல்லி இருந்தேன்.இப்போது நேரடியாக உங்கள் பதிவிலும் வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறேன்.வாழ்த்துகள் சரவணன்.

    ReplyDelete
  4. பூச்சி கிட்ட... சொல்லி விட்டேனே.. என் வாழ்த்தை....! சொன்னாரா?! :-)

    வாழ்த்துகள்.!!!

    ReplyDelete
  5. //ஷண்முகப்ரியன் said...

    எனது மனம் கனிந்த வாழ்த்துக்களை கேபிள் சங்கர் பதிவிலேயே உங்களுக்குச் சொல்லி இருந்தேன். இப்போது நேரடியாக உங்கள் பதிவிலும் வாழ்த்துவதில் அகம் மகிழ்கிறேன். வாழ்த்துகள் சரவணன்.//

    நன்றிங்க ஐயா..

    தங்களைப் போன்றவர்களின் ஆசியும், அன்பும், பரிவும்தான் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு டானிக்..!

    ReplyDelete
  6. ///ஹாலிவுட் பாலா said...

    பூச்சிகிட்ட... சொல்லி விட்டேனே.. என் வாழ்த்தை....! சொன்னாரா?! :-)

    வாழ்த்துகள்.!!!///

    அவர் எங்க சொன்னாரு..? இப்ப நீங்க சொல்றதுதான் தெரியுது..!

    ReplyDelete
  7. சொல் அற.சும்மா இரு.

    முருகப் பெருமான்.

    ReplyDelete
  8. //முருகப் பெருமான் said...

    சொல் அற.சும்மா இரு. முருகப் பெருமான்.//

    அப்படீன்னா என்ன பெருமானே..?

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //முருகப் பெருமான் said...

    சொல் அற.சும்மா இரு. முருகப் பெருமான்.//

    அப்படீன்னா என்ன பெருமானே..?

    யாராவது கேட்டா ஒண்ணுஞ் சொல்லாதீங்க.அடிச்சுக் கேட்டா அப்பவுஞ் சொல்லாதீங்க.

    ReplyDelete
  11. //தமிழ் பிரியன் said...

    வாழ்த்துக்கள்!//

    நன்றி பிரியன் ஸார்..

    ReplyDelete
  12. ///முருகப் பெருமான் said...

    உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
    //முருகப் பெருமான் said...
    சொல் அற.சும்மா இரு. முருகப் பெருமான்.//
    அப்படீன்னா என்ன பெருமானே..?
    யாராவது கேட்டா ஒண்ணுஞ் சொல்லாதீங்க. அடிச்சுக் கேட்டா அப்பவுஞ் சொல்லாதீங்க.///

    முருகா.. தாங்கள்தானா..? இப்பத்தான் மரமண்டைக்கு புரிஞ்சது.

    அப்ப கவனிச்சுக்கிட்டேதான் இருக்கீங்களா..? பெருமானே எல்லாம் என் பாக்கியம்தான்..!

    வாயைத் தொறக்க மாட்டேனாக்கும்..!

    எல்லாப் பதிவுக்கும் தவறாம தமிழ்மணத்தோட வாக்கை மட்டு்ம் போட்டிருங்க..!

    உம்மை நினைக்காத நாளில்லை முருகா..!

    ReplyDelete
  13. நல்ல முயற்சி!
    இந்த குறும்படங்கள் எங்கே காணக்கிடைக்கும்.

    ReplyDelete
  14. அண்ணே, நீங்க திரையிடும் போது தகவல் சொல்லுங்க வந்து விழாவை சிறப்பித்து வைக்கிறேன்!!

    ReplyDelete
  15. ஏற்கனவே பல முறை வாழ்த்திவிட்டேன். மீண்டும் என் சார்பிலும் ஹாலிவுட் பாலா சார்பிலும் வாழ்த்துகள்.

    பாலா.. அவரு எப்பவுமே இப்படித்தான். நீங்க கண்டுகாதிங்க..
    இதெல்லாம் சகஜமப்பா...

    அது சரி.. ""புனிதபோர்" பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே..??

    எப்போது...???

    ReplyDelete
  16. //வால்பையன் said...
    நல்ல முயற்சி! இந்த குறும்படங்கள் எங்கே காணக் கிடைக்கும்.//

    இப்போதைக்கு தயாரிப்பாளர்களிடம் மட்டுமே கிடைக்கும் வாலு..!

    குறும்படங்களை எங்கே விற்பனை செய்வது சொல்லுங்கள்..!

    ReplyDelete
  17. //Bhuvanesh said...
    அண்ணே, நீங்க திரையிடும் போது தகவல் சொல்லுங்க வந்து விழாவை சிறப்பித்து வைக்கிறேன்!!//

    ஆஹா.. தம்பீன்னா நீதான் தம்பி..! கண்டிப்பா சொல்றேன் ராசா..!

    ReplyDelete
  18. //Bhuvanesh said...
    அண்ணே, நீங்க திரையிடும் போது தகவல் சொல்லுங்க வந்து விழாவை சிறப்பித்து வைக்கிறேன்!!//

    ஆஹா.. தம்பீன்னா நீதான் தம்பி..! கண்டிப்பா சொல்றேன் ராசா..!

    ReplyDelete
  19. //வண்ணத்துபூச்சியார் said...
    ஏற்கனவே பல முறை வாழ்த்திவிட்டேன். மீண்டும் என் சார்பிலும் ஹாலிவுட் பாலா சார்பிலும் வாழ்த்துகள். பாலா.. அவரு எப்பவுமே இப்படித்தான். நீங்க கண்டுகாதிங்க.. இதெல்லாம் சகஜமப்பா...//

    ஓ.. சால்ஜாப்பா.. ஜமாயுங்க பூச்சியாரே..

    //அது சரி.. ""புனிதபோர்" பற்றி ஒண்ணும் சொல்லவில்லையே..??//

    மை காட் இதுவரைக்கும் நான் சொல்லலையா உங்ககிட்ட..! ஸாரி ஸார்.. மறந்திருப்பேன். இல்லாட்டி அதுக்கான வாய்ப்பில்லாம போயிருக்கும்.. அடுத்து நேர்ல பார்க்கும்போது டிவிடி தர்றேன்.. பார்த்துட்டுச் சொல்லுங்க..!

    எப்போது...???//

    ReplyDelete
  20. அப்பு... நீங்க நடத்துங்க நடத்துங்க...
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.


    நான் மும்பையிலே இருந்து வருகிறேன். எனக்கு ரெண்டு கிங்க்பிசர் மேட்டர் கொடுத்தா கண்டிப்பா வந்து பார்ப்பேன்.
    ௧. கிங்க்பிசர் விமானத்திலே வந்து போறதுக்கு ஒரு டிக்கட்.
    ௨. வந்த பிறகு ஒரு கிங்க்பிசர் ஸ்ட்ராங் பியர் ஒன்னு. அவ்ளோதான் அண்ணே.


    "மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு" என்று சொல்லக்கூடாது.

    ReplyDelete
  21. ---- கோசம் கூட ரெடி பண்ணிட்டேன், இது வெறும் ட்ரைலர் தான், மேற்கண்ட எனது வேண்டுகோளை மட்டும் நிறைவேற்றிவிட்டால், மெயின் பிக்சர் அப்புறமா காட்டப்படும்-----

    ஏழைகளை விமானத்தில் ஏற்றும் எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க....

    ரசிகர்களின் கலைத் தாகத்தை அடக்கும் முரட்டுக்காளை எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க.....

    குறும்படத்தையும், சினிமாஸ் கோப்பில் எடுக்க களமிறங்கிய எங்கள் தங்கம், பதிவுலக சிங்கம் எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க.....

    ReplyDelete
  22. kurumbadangal thamizhstudio.com il virpanaikku ulladhu. please see thamizhstudio.com

    www.thamizhstudio.com

    ReplyDelete
  23. நானும் உங்க விலாவைச் சிறப்பிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    குறும்படம் பற்றிய பதிவு அருமை!

    ஆனா நீங்க குறும்படம்(!?) எடுத்தேன்னு சொல்றீங்க பாருங்க! அதான். கொஞ்சம் நெருடுது!

    ReplyDelete
  24. உங்க குறும்ப்டம் ஒரு 30 மணிநேரம் ஓடுமா? எத்தனை டிவிடிக்கள்?

    ReplyDelete
  25. /*உங்க குறும்ப்டம் ஒரு 30 மணிநேரம் ஓடுமா? எத்தனை டிவிடிக்கள்?*/

    அண்ணே அவரு ஒரு ஸ்டாம்ப் சைசு ஸ்டில் படம் எடுத்திருக்கிறதா சொன்னா தான் நமகெல்லாம் அது குறும்படம்.

    ReplyDelete
  26. அண்ணே... அண்ணே.... அண்ணே மன்னிச்சுகோங்க. முந்திய பின்னூட்டத்தை படிச்சி காண்டாகி, என்னை "கவனிக்காமே" விட்டுறாதீய.

    நான் ரெடி பண்ணி வச்சிருக்கிற கோசமும், காலி பண்ணி வச்சிருக்கிற என் வயிறும் வேஸ்டா போய்ரும்ணே......

    ReplyDelete
  27. யாருப்பா அது அண்ணனை காண்டாக்குகிறது.... பிச்சு போடுவேன் பிச்சி....

    ReplyDelete
  28. //நையாண்டி நைனா said...
    அப்பு... நீங்க நடத்துங்க நடத்துங்க...
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    நான் மும்பையிலே இருந்து வருகிறேன். எனக்கு ரெண்டு கிங்க்பிசர் மேட்டர் கொடுத்தா கண்டிப்பா வந்து பார்ப்பேன்.
    ௧. கிங்க்பிசர் விமானத்திலே வந்து போறதுக்கு ஒரு டிக்கட்.
    ௨. வந்த பிறகு ஒரு கிங்க்பிசர் ஸ்ட்ராங் பியர் ஒன்னு. அவ்ளோதான் அண்ணே.
    "மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பு" என்று சொல்லக்கூடாது.//

    நைனா..

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

    நீங்க மும்பைல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி என் அக்கவுண்ட்டுல ஒரு 25000 டெபாஸிட் பண்ணிருங்க.. நீங்க சொன்னதையெல்லாம் நான் செஞ்சர்றேன்.. ஓகேவா..

    ReplyDelete
  29. //நையாண்டி நைனா said...
    ---- கோசம் கூட ரெடி பண்ணிட்டேன், இது வெறும் ட்ரைலர் தான், மேற்கண்ட எனது வேண்டுகோளை மட்டும் நிறைவேற்றிவிட்டால், மெயின் பிக்சர் அப்புறமா காட்டப்படும்-----

    ஏழைகளை விமானத்தில் ஏற்றும் எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க....

    ரசிகர்களின் கலைத் தாகத்தை அடக்கும் முரட்டுக்காளை எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க.....

    குறும்படத்தையும், சினிமாஸ்கோப்பில் எடுக்க களமிறங்கிய எங்கள் தங்கம், பதிவுலக சிங்கம் எங்கள் அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க.....//

    ஆஹா.. பிச்சுட்டீங்க நைனா..

    என்னுடைய கொள்கை பரப்புச் செயலாளர் என்னிக்கு இருந்தாலும் நீங்கதான். உடனேயே மறக்காம எனக்கு donation-ஐ அனுப்பி வைக்கவும்..

    ReplyDelete
  30. //ஆதவன் said...
    kurumbadangal thamizhstudio.com il virpanaikku ulladhu. please see thamizhstudio.com

    www.thamizhstudio.com//

    அப்படியா.. நல்ல விடயம்.. நான்தான் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. ஆதவன் உதவிக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  31. //நாமக்கல் சிபி said...
    நானும் உங்க விலாவைச் சிறப்பிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    குறும்படம் பற்றிய பதிவு அருமை!

    ஆனா நீங்க குறும்படம்(!?) எடுத்தேன்னு சொல்றீங்க பாருங்க! அதான். கொஞ்சம் நெருடுது!//

    ஆரம்பிச்சிட்டியா உன் கொழுப்பை..! நான் எடுத்தது குறும்படம்தான்.. குறும்படம்தான்..

    எந்தக் கோவில்ல வேண்ணாலும் வந்து துண்டைப் போட்டுத் தாண்டி சத்தியம் பண்ணிச் சொல்றேன்..!

    ReplyDelete
  32. //நாமக்கல் சிபி said...
    உங்க குறும்ப்டம் ஒரு 30 மணிநேரம் ஓடுமா? எத்தனை டிவிடிக்கள்?//

    என்ன நக்கலா..? வெறும் 13 நிமிஷம்தான் முருகா.. உனக்குத் தெரியாதா..?

    ReplyDelete
  33. //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    வாழ்த்துக்கள்!!!//

    நன்றி பாஸ்கர் ஸார்..!

    ReplyDelete
  34. //நையாண்டி நைனா said...
    /*உங்க குறும்ப்டம் ஒரு 30 மணிநேரம் ஓடுமா? எத்தனை டிவிடிக்கள்?*/

    அண்ணே அவரு ஒரு ஸ்டாம்ப் சைசு ஸ்டில் படம் எடுத்திருக்கிறதா சொன்னாதான் நமகெல்லாம் அது குறும்படம்.//

    நையாண்டி நைனா பேரைக் காப்பாத்தறதுக்கு என்னைய நக்கல் பண்றீங்க.. சரி.. பண்ணுங்க.. பண்ணுங்க..

    உங்களுக்கே நியாயமா இருந்தா செய்யுங்க சாமி..!

    ReplyDelete
  35. //நையாண்டி நைனா said...
    அண்ணே... அண்ணே.... அண்ணே மன்னிச்சுகோங்க. முந்திய பின்னூட்டத்தை படிச்சி காண்டாகி, என்னை "கவனிக்காமே" விட்டுறாதீய.

    நான் ரெடி பண்ணி வச்சிருக்கிற கோசமும், காலி பண்ணி வச்சிருக்கிற என் வயிறும் வேஸ்டா போய்ரும்ணே......//

    எழுதுறதையெல்லாம் எழுதிட்டு மன்னிச்சுக்கோங்கன்னு ஒரு கோஷம் வேற.. அரசியல்வாதிகள்லாம் உங்ககிட்ட பிச்சையெடுக்கணும்பா..!

    ReplyDelete
  36. //நையாண்டி நைனா said...
    யாருப்பா அது அண்ணனை காண்டாக்குகிறது.... பிச்சு போடுவேன் பிச்சி....//

    நையாண்டி நைனான்ற ஒரு ஆளுதான் காண்டாக்குறார்..

    பிச்சிருங்க.. மீதியை நான் பாத்துக்குறேன்..!

    ReplyDelete
  37. நீங்கள் விருது வாங்கும் விழாவிற்கு எங்களை அழைத்திருந்தால் வந்திருப்போமே

    ReplyDelete
  38. //நானும் எனது 'புனிதப்போர்' குறும்படத்தினை இது மாதிரியான ஒரு நிகழ்வில் திரையிடப் போகிறேன். //

    அண்ணே... நீங்க, குறும்படமா..... நீங்க மெகா சீரியல் எடுப்பவர் என்று நினைத்தேனே :) :)

    ReplyDelete
  39. //அது சமயம் நமது வலைப்பதிவர்கள் அனைவரும் அலைகடலாய் திரண்டு வந்து அந்த நிகழ்ச்சியை சிறப்பித்துத் தரும்படி மிகத் தாழ்மையாய், உரிமையாய், அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..//

    கண்டிப்பாக வருகிறோம்

    ReplyDelete
  40. அண்ணே,
    ஒரு நிகழ்ச்சியை தத்ரூபமாக உங்களால் எங்கள் கண் முன் நிறுத்த முடிகிறது.
    மறத்தமிழன் முத்துகுமார் இறுதி ஊர்வலம் ஒரு எடுத்துகாட்டு.
    பின்னூடத்தில் செந்தழல்ரவியின் பின்னூட்டம் -'நோஓஓஓஒ' நச்.மிகவும் ரசிக்கும் படியாய் இறுந்தது.

    எனக்கு தெறிந்த வரை நீங்கள் நெடும் படம் எடுக்கலாம். கோச்சுகாதீங்க !ஒரு முழு நீள திரைப்படம் எடுக்களாம் என்று சொல்லவந்தேன்.

    ReplyDelete
  41. //புருனோ Bruno said...
    நீங்கள் விருது வாங்கும் விழாவிற்கு எங்களை அழைத்திருந்தால் வந்திருப்போமே..//

    சொல்லியிருக்கலாம்தான்.. ஆனால் ஏனோ ஒரு தயக்கம் வந்து என்னை ஆட்கொணடுவிட்டது டாக்டரே.. அதுதான் அமைதியாகிவிட்டேன்..

    ReplyDelete
  42. ///புருனோ Bruno said...

    //நானும் எனது 'புனிதப்போர்' குறும்படத்தினை இது மாதிரியான ஒரு நிகழ்வில் திரையிடப் போகிறேன். //

    அண்ணே... நீங்க, குறும்படமா..... நீங்க மெகா சீரியல் எடுப்பவர் என்று நினைத்தேனே :) :)///

    அண்ணனா..? மை காட்.. ஸார்.. இதென்ன புது பழக்கம்..? அண்ணன்னுட்டு.. நான் உங்களுக்குத் தம்பிதாண்ணேன்.. இன்னும் கல்யாணம்கூட பண்ணலை.. என்னைப் போயி..!

    மெகா சீரியல்.. நானு.. ஒரிஜினல்லா ஒரு சான்ஸ்கூட கிடைக்கமாட்டேங்குது. நீங்க கிண்டல் பண்றீங்க..!

    ReplyDelete
  43. ///புருனோ Bruno said...

    //அது சமயம் நமது வலைப்பதிவர்கள் அனைவரும் அலைகடலாய் திரண்டு வந்து அந்த நிகழ்ச்சியை சிறப்பித்துத் தரும்படி மிகத் தாழ்மையாய், உரிமையாய், அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..//

    கண்டிப்பாக வருகிறோம்.///

    அப்பாடா இரண்டாவதா ஒருத்தர் கை தட்ட கிடைச்சுட்டார்..

    நன்றி டாக்டர் ஸார்..!

    ReplyDelete
  44. //Marathamizhan said...
    அண்ணே, ஒரு நிகழ்ச்சியை தத்ரூபமாக உங்களால் எங்கள் கண் முன் நிறுத்த முடிகிறது.
    மறத்தமிழன் முத்துகுமார் இறுதி ஊர்வலம் ஒரு எடுத்துகாட்டு.
    பின்னூடத்தில் செந்தழல்ரவியின் பின்னூட்டம் -'நோஓஓஓஒ' நச். மிகவும் ரசிக்கும்படியாய் இறுந்தது.
    எனக்கு தெறிந்த வரை நீங்கள் நெடும் படம் எடுக்கலாம். கோச்சுகாதீங்க! ஒரு முழு நீள திரைப்படம் எடுக்களாம் என்று சொல்ல வந்தேன்.//

    நன்றி மறத்தமிழன் ஸார்..

    உங்க புண்ணியத்துல அப்படியொரு வாய்ப்பு வரணும்.. கிடைக்கணும்..

    ReplyDelete
  45. //என்ன நக்கலா..? வெறும் 13 நிமிஷம்தான் முருகா.. உனக்குத் தெரியாதா..?//

    கதை,
    திரைக்கதை,
    வசனம்,
    இயக்கம்

    உங்கள் உண்மைத்தமிழன்

    இப்படி வர டைட்டில் ஃப்ரேம் மட்டுமே 13 நிமிஷமா?

    அடக் கடவுளே!

    ReplyDelete
  46. /என்ன நக்கலா..? வெறும் 13 நிமிஷம்தான் முருகா.. உனக்குத் தெரியாதா..?//

    என்னமோ எனக்கு மட்டும் சிடியை கொரியல் அனுப்பி வெச்சிப் பாருன்னு சொன்ன மாதிரில்ல கேக்குறீங்க!

    எத்தினி தபா கேட்டேன் சிடி கொடுங்கன்னு!

    அட ஏபிடி பார்சல் சர்வீஸஸ்ல போட்டாவது அனுப்பலாம்ல!
    நாங்க ரிவியூ பண்ண வசதியா இருக்கும்!

    ReplyDelete
  47. //கதை,
    திரைக்கதை,
    வசனம்,
    இயக்கம்

    உங்கள் உண்மைத்தமிழன்//

    ம்ஹூம்! இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகளமாக்கிடுறாங்களே!

    முருகா! நீ திருந்தவே மாட்டியா?

    (ஐயய்யோ! இதுலயும் என் ஃபோட்டோ வர மாட்டேங்குதே! என்ன சதி செஞ்சி வெச்சே முருகா?)

    ReplyDelete
  48. ///நாமக்கல் சிபி said...

    //என்ன நக்கலா..? வெறும் 13 நிமிஷம்தான் முருகா.. உனக்குத் தெரியாதா..?//

    கதை,
    திரைக்கதை,
    வசனம்,
    இயக்கம்

    உங்கள் உண்மைத்தமிழன்

    இப்படி வர டைட்டில் ஃப்ரேம் மட்டுமே 13 நிமிஷமா?

    அடக் கடவுளே!///

    இல்லை.. எழுத்து-இயக்கம் என்று சுருக்கமாகத்தான் இருக்கும்..!

    ReplyDelete
  49. ///நாமக்கல் சிபி said...

    /என்ன நக்கலா..? வெறும் 13 நிமிஷம்தான் முருகா.. உனக்குத் தெரியாதா..?//

    என்னமோ எனக்கு மட்டும் சிடியை கொரியல் அனுப்பி வெச்சிப் பாருன்னு சொன்ன மாதிரில்ல கேக்குறீங்க!

    எத்தினி தபா கேட்டேன் சிடி கொடுங்கன்னு!

    அட ஏபிடி பார்சல் சர்வீஸஸ்ல போட்டாவது அனுப்பலாம்ல! நாங்க ரிவியூ பண்ண வசதியா இருக்கும்!//

    முருகா.. என்னோட லேபிள்கள் பக்கத்துல புனிதப்போர் அப்படீன்னு ஒண்ணு இருக்கு.. அதை கிளிக் பண்ணுப் போய்ப் பாருங்க..

    ஒரு பதிவுல யூடியூப்ல போட்டு வைச்சிருக்கேன்.. பார்த்துட்டு அப்புறமா பேசுங்க..!

    ReplyDelete
  50. ///உண்மைத்தமிழன்(15270788164745573644) said...

    //கதை,
    திரைக்கதை,
    வசனம்,
    இயக்கம்

    உங்கள் உண்மைத்தமிழன்//

    ம்ஹூம்! இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகளமாக்கிடுறாங்களே!

    முருகா! நீ திருந்தவே மாட்டியா?

    (ஐயய்யோ! இதுலயும் என் ஃபோட்டோ வர மாட்டேங்குதே! என்ன சதி செஞ்சி வெச்சே முருகா?)///

    ஹா.. ஹா.. ஹா..

    பயமுறுத்துறியா..

    மவனே அவ்தார் எங்க..? மறைஞ்சு போச்சே.. லீடிங்ல இல்லியே.. கண்டுபிடிச்சிட்டனே.. உன்னோட சதி வேலைதான்னு.!

    ReplyDelete