Pages

Monday, March 16, 2009

குமுதம் - இதழ் உருமாற்றத்தின் பின்னணியில் அடியேன்..!

16-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து 'குமுதம்' பத்திரிகையுடன் நெருங்கிய நட்பு உண்டு. எனது சிறு வயதில் சாண்டில்யன் கதை வராத குமுதம் இதழே கிடையாது என்றிருந்தது. சாண்டில்யனுக்காகவே 'குமுதத்தை' நான் அதிகம் நேசித்திருந்தேன். 'யவனராணி'யும், 'கடல்புறா'வும்தான் 'குமுதத்தில்' நான் அதிகம் வாசித்தவைகள்.. குமுதத்தின் 'அரசு பதில்'களை எனது தந்தை மிக ஆர்வத்துடன் படிப்பார். அதில் இருக்கும் மெல்லிய குத்தூசி பதில்களை எனக்கும், எனது சகோதரிகளுக்கும் படித்துக் காண்பிப்பார்.

அவ்வப்போது வெளி வந்த சுஜாதாவின் சிறுகதைகளும், சினிமா சம்பந்தமான செய்திகளும்தான், 'குமுதத்தை' பிற்காலத்தில் என்னிலிருந்து பிரிக்க முடியாததாக மாற்றியது.

ஒரு முறை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஒன்றை ஏலம் விட்டு அதையும் ஒருவர் வாங்கியதை செய்தியாக வெளியிட்டுவிட்டு, இனி என்னென்ன ஏலமாக வரப் போகிறது என்று சொல்லி ஒரு காமெடியாக கார்ட்டூன் ஒன்றை போட்டிருந்தார்கள். அரசியல்வாதிகளின் உருவப்பட்ட வேட்டி, கவர்ச்சி நடிகைகளின் உள்ளாடை, பழனி பஞ்சாமிர்த டப்பா என்று சிலவற்றை வைத்து காமெடி திருவிழாவே செய்திருந்தார்கள்.

'குமுதத்தின்' சினிமா பாணி செய்திகள் பெரும்பாலும் வம்பிழுப்பதாகவே அமைந்திருக்கும். ஏதோ ஒரு சமயத்தில் நடிகைகள் வடிவுக்கரசிக்கும், சரிதாவுக்கும் இடையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சின்ன பிரச்சினை. 'குமுதம்' நிருபர் அதை விசாரிப்பதாகப் போய் பிரச்சினையை நிஜமாகவே பெரிதாக்கிவிட்டு, அதையும் செய்தியாக வெளியிட்டுவிட்டார்கள். பின்பு அடுத்த வாரம் இருவரையும் பேட்டி கண்டு ஒன்றாக நிற்பதைப் போல் புகைப்படமெடுத்து, இருவரும் ராசியாகிவிட்டதாகவும் எழுதியிருந்தார்கள். இப்படி பரபரப்பு செய்திகளையே ஆயுதமாகப் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்தி வருகிறது 'குமுதம்'.

இன்றைக்கும் பல பத்திரிகைகள் நம் கண் முன்னே வைக்கப்பட்டாலும் அதில் 'குமுதம்' இருந்தால், 'குமுத'த்தைத்தான் பலரும் முதலில் கையில் எடுப்பார்கள். இது அனிச்சை செயல் மாதிரிதான்.. செய்தித்தாள்களில் 'தினத்தந்தி'யைப் போல.. டிவிக்களில் 'சன் டிவி'யைப் போல.. நமக்கு முதன்முதலில் எது பிடித்தமானதாக ஆனதோ.. அதையே கடைசிவரையிலும் நாம் பின்பற்றுகிறோம்.

காலம் மாற மாற, காட்சிகளும் மாறும் என்பதைப் போல மூன்றாண்டுகளுக்கு முன்னால் 'விகடன்' தனது உள்ளடக்கத்தையும், வடிவமைப்பையும் முற்றிலும் புத்தம், புதிதாக மாற்றிக் கொண்டு பளபளாவென்று வெளி வரத் துவங்கிய நேரம். 'குமுதமோ' அப்படியே வழமைபோலத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் 'குமுதத்தில்' எனக்கு நெருக்கமான அண்ணன் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசும்போதெல்லாம் "என்னதான் பண்றீங்க நீங்க..? 'விகடன்' கலக்குது பாருங்க..” என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன்.

திடீரென்று அந்த அண்ணன் ஒரு நாள் எனக்கு போன் செய்து, “நீ என்னமோ வாராவாரம் போன்ல திட்டிக்கிட்டே இருந்தியே.. 'குமுதத்துல அது சரியில்ல!. இது சரியில்லன்னு..!' அதையெல்லாம் சொல்றதுக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. எங்க ஆபீஸுக்கு நாளைக்கு மதியம் 1 மணிக்கு வா.. மீட்டிங் இருக்கு.. ஜவஹர் ஸார் வர்றாரு.. நீ அவர்கிட்ட நேர்லயே கொட்டித் தீர்த்திரு..” என்று அன்போடு அழைத்தார்.

'விகடன்' தன்னை உருமாற்றிக் கொண்டதால், கொஞ்சம் லேட்டாக கண்ணு முழித்த 'குமுதமும்' ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்பில் இருந்தது. அந்த நேரத்தில்தான் 'குமுதம்' பத்திரிகையில் அடுத்து என்ன விதத்தில், என்ன மாதிரியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் 'குமுதம்' வாசகர்களிடம் கருத்துக் கேட்கும் படலம்தான் அன்றைக்கு நடந்தது.

'குமுதம்' பத்திரிகையில் பணியாற்றிய நிருபர்கள் அனைவரிடமும், தலைக்கு 2 பேரை அழைத்து வர வேண்டும் என்று டார்கெட் சொல்லியிருந்தார்களாம். அந்தக் கோட்டாவில்தான் நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

மதியம் 2 மணிக்கு 'குமுதம்' அலுவலகம் சென்றேன். 2வது மாடியில் இருந்த ஒரு மீட்டிங் ஹாலில் கூடியிருந்தோம். என்னையும் சேர்த்து 12 பேர் வந்திருந்தார்கள். வந்தவர்களில் சிலர் வெளியூர்களிலிருந்தும் வந்திருந்தார்கள். குமுதத்தின் நீண்ட நாள் வாசகர்கள் என்பதை அவர்களது பேச்சிலேயே அறிய முடிந்தது.

ஆசிரியர் ராவ், ப்ரியா கல்யாணராமன், மணிகண்டன், கிருஷ்ணா டாவின்ஸி என்ற அப்போதைய ஆசிரியர் குழுமத்துடன் உள்ளே நுழைந்தார் ஜவஹர் பழனியப்பன்.

முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது ஆசிரியர் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார் ஜவஹர். பின்பு, "குமுதம் இதழை மேலும் புதிய வடிவமைப்பில், புதிய உள்ளடக்கத்தில் மாத்தலாம்னு ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கு. நீங்கள்லாம் நீண்ட நாள் 'குமுதம்' வாசகர்கள் என்பதால் உங்ககிட்ட கேட்டாத்தான் நல்லாயிருக்கும்கிறது எங்களோட அபிப்ராயம், ஏன்னா எங்களுக்கு வாசகர்கள்தான் முக்கியம்.. அவங்களுக்கு எது பிடிக்குமோ, என்ன வேணுமோ அதைத்தான் கொடுக்கணும்னு நாங்க நினைச்சு செயல்பட்டுக்கிட்டிருக்கோம்.. எடிட்டர் ஸார் அதைத்தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திட்டுப் போயிருக்காரு.. இப்ப 'குமுதத்துல' என்னென்ன புதிதாக மாற்றம் செய்யலாம்.. எப்படி மாத்தலாம்னு கொஞ்சம் உங்களோட கருத்தைச் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்..." என்று சென்டிமெண்ட்டலாக அட்டாக் செய்தார் ஜவஹர்.

பின்பு வரிசையாக ஒவ்வொருவரையும் அழைத்து 'அவருடைய பெயர், ஊர், வயது, எத்தனை வருஷமா குமுதம் படிக்கிறீங்க..? வீட்ல எத்தனை பேர் இருக்காங்க.. குடும்பம் மொத்தமும் குமுதம் படிப்பாங்களா?' என்ற விவரங்களையெல்லாம் கேட்டு அதனைக் குறித்துக் கொண்டார்கள் உதவி ஆசிரியர்கள். பேசியவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஜவஹரே குறித்துக் கொண்டே வந்தார். அவ்வப்போது இடைமறித்து கேள்விகள் கேட்டதோடு, அது பற்றிய தனது கருத்தை அங்கேயே ஆசிரியர் ராவிடம் தெரிவித்தபடியே இருந்தார்.

எனக்கு முன்பாக 6 பேர் பேசினார்கள். "கதைகள், கவிதைகளை இப்போதெல்லாம் அதிகமாக யாரும் ரசிக்கலை.. அந்த வாரம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் பத்தியும் கொஞ்சம் எதிர்பார்க்குறாங்க.. நீங்க கதையையும், கவிதையையும் கட் பண்ணிட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க" என்றார் ஒருவர். இன்னொருவர், "புத்தகத்தை சீக்கிரமா கிராமப்புறங்களில் கிடைக்குறாப்புல பண்ணுங்க.. ஒருவேளை 'விகடன்' முதல் நாளே ரிலீஸ் ஆயிட்டா, நம்ம செய்தி லேட்டாயிரும்.. அப்புறம் படிக்கிறவன் மனசுல 'எப்பவுமே குமுதம் லேட்டு'ன்னு பதிய ஆரம்பிச்சிரும்.." என்றார்.

என் முறையும் வந்தது.. நான் பேசியதில் என்னுடைய நினைவில் இருப்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

"குமுதம்' என்றவுடனேயே முதலில் நினைவுக்கு வருவது அதனுடைய குறும்பு. மிக சின்னத்தனமான விஷயங்களைக்கூட கிண்டலாக வெளியிட்டு அதற்கு பப்ளிஸிட்டி தந்து செய்தியாக்கும், குமுதத்தின் வழக்கமான குறும்புகள் இப்போதெல்லாம் தென்படுவதில்லை.

உதாரணமாக ஒரு முறை அட்டையைத் திறந்தவுடன் முதல் பக்கத்தில் ஒரு பிட்டு நியூஸாக, 'ஆசியக் கண்டமே போற்றிப் புகழும் அசோக்பில்லர் தொடையழகி ரம்பா, சென்ற வாரம் இரண்டு நாய்க்குட்டிகளை வாங்கியிருக்கிறார்..' அப்படீன்னு போட்டிருந்துச்சு. 'நாட்டுக்கு ரொம்ப அவசியமான நியூஸா இது?' என்று எனக்கும் சிரிப்பு வந்தது. இது மாதிரியான செய்திகள் வாசகர்களுக்குத் தேவையில்லாததுதான் என்றாலும், எழுதிய விதத்தில் அதுவும் ஒரு செய்தியாகிவிட்டது. இது மாதிரி புத்தகத்தோட பிணைப்பு ஏற்படுத்துற மாதிரி எதுவும் இப்பல்லாம், 'குமுதத்துல' எந்தப் பக்கத்துலேயும் வர்றதில்ல.." என்றேன்.

ஜவஹர் வாய் விட்டுச் சிரித்தார். பின்பு உடனேயே மணிகண்டன் பக்கம் திரும்பி "இதை நோட் பண்ணிக்குங்க.." என்றார். தொடர்ந்தேன் நான்..

"முன்னாடி 'அரசு பதில்'கள்ல ஒரு கேள்வியிலாவது ஏதாவது ஒரு விஷயத்தையோ, அல்லது புத்தகத்தையோ, இல்லாட்டி கிசுகிசுவையோ ஜாடைமாடையா எழுதி, அது என்னன்னு யோசிக்க வைப்பீங்க..! இப்ப அது மாதிரி ஒண்ணுமே வர்றதில்ல.. இப்பல்லாம் அரசு பதில்கள் ஏதோ ஒப்பேத்துற மாதிரிதான் இருக்கு.." என்றேன்..

மேலும் தொடர்ந்து, "சினிமா பக்கங்கள்ல ஒரே பேட்டியாத்தான் இருக்கு. துணுக்குச் செய்திகளே காணோம்.. ஒரு பேட்டியே 3 பக்கம்னு போகுது.. இதுக்குப் பதிலா 3 பக்கத்துல 3 பேரோட பேட்டியை வாங்கிப் போடலாமே.." என்றேன்..

"குமுதம்' உள்ள இருக்குற பேப்பரெல்லாம் இன்னும் கொஞ்சம் நல்ல பளபளா பேப்பரா இருந்தா நல்லாயிருக்கும்.. கொஞ்சம் சாணி பேப்பர் மாதிரி தெரியுது..” என்றேன்.. உடனேயே குறுக்கிட்ட ஜவஹர், “இல்ல.. அதையெல்லாம்தான் மாத்தப் போறோம்.." என்றார்.

"கிண்டல் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. அதையும் எத்தனை வருஷத்துக்குத்தான் இலை, மறைவு காயா பண்ணுவீங்க.. இப்பல்லாம் நாங்க டைரக்ட்டா சொல்றதைத்தான் விரும்புறோம்.. இது மாதிரி பிரபலங்களை கிண்டல் பண்றதை நேர்லயே, அவங்ககிட்ட சொல்லி அந்த பதிலை வாங்கி எழுதினா இன்னும் நல்லாயிருக்கும்.." என்றேன்.. குறித்துக் கொண்டார் ஜவஹர்..

"முன்னாடியெல்லாம் அஞ்சாங்கிளாஸ் படிச்சவங்களுக்குக்கூட 'குமுதத்தை' படிக்கிறது ரொம்ப ஈஸியா இருக்கும். ஆனா இப்பல்லாம் 'குமுதத்துல' வர்ற எழுத்துக்கள் கொஞ்சம் கடினமா இருக்கு. சில கட்டுரைகள்ல 'இந்தியா டுடே' ஸ்டைல் எழுத்தை புகுத்துறீங்க.. எனக்கு ஒண்ணுமில்ல.. எனக்குப் புரியுது.. ஆனா பல கிராமப்புற வாசகர்களுக்கு நிச்சயம் இது புரியாது. இத்தனை நாளா படிச்சவங்களுக்கு திடீர்ன்னு புரியலைன்னா, அவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம்.. எழுத்து ஸ்டைலை கொஞ்சம் எளிமையாக்குங்க.." என்றேன்..

"உதாரணம் சொல்ல முடியுமா?" என்றார் ஜவஹர்.

"இப்ப ஒரு 3 வாரமா ஜெயமோகன் ஒரு கட்டுரைத் தொடரை(பி்ன்னர் பொழுதே தூரம்) 4 பக்கத்துக்கு எழுதிக்கிட்டிருக்காரு.. அந்தக் கட்டுரைல என்ன எழுதுறாரு.. என்ன சொல்ல வர்றாருன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்றேன்.. "ஏன்.. நல்லாயில்லையா..?" என்றார் ஜவஹர்.. "அவர் எழுதறது புரிஞ்சது.. படிக்க முடியுதுன்னு இங்க இருக்கறவங்க யாரையாவது சொல்லச் சொல்லுங்க.. பார்க்கலாம்..!" என்றேன். பேச வந்திருந்த மற்றவர்களும் கோரஸாக எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள். "அப்படியா..?" என்று ஆச்சரியப்பட்ட ஜவஹர் ஆசிரியர் ராவிடம் "குறிச்சுக்குங்க ஸார்.. பின்னாடி பேசுவோம்.." என்றார். உடனேயே ராவ், "அவர் பெரிய இலக்கிய ரைட்டர்.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்காரு.. போகப் போக உங்களுக்குப் பழகிரும்.." என்றார். "அப்ப குமுதம் என்ன இலக்கியப் பத்திரிகையா..? எங்களுக்கு குமுதத்துல இலக்கியம் வேண்டாமே..?" என்றேன்.. ராவ் அமைதியானார்.

ஜவஹர் "ஓகே ஸார்.. வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க..?" என்றார்.

"இப்ப 'குமுதம் ரிப்போர்ட்டர்'ல பா.ராகவன் 'மாயவலை' கட்டுரை எழுதறாரு.. 'குமுதம் ரிப்போர்ட்டரை' வாங்கினவுடனேயே மொதல்ல படிக்கிறது அதைத்தான். அதுக்கப்புறம்தான் மத்தது.. அது மாதிரி குமுதத்துலேயும் ஏதாவது ஒரு அரசியல் தொடர் கட்டுரை.. 'கண்டிப்பா படிச்சே தீரணும்' அப்படீங்கற மாதிரி ஒண்ண எழுதச் சொல்லுங்க.. நிச்சயம் கிளிக்காகும்.." என்றேன்.

"குமுதத்தின் விலையையும் அப்பப்போ ஏத்திக்கிட்டே போறீங்க..?" என்றதும் மற்றவர்களும் அதே கருத்தை சொல்லத் துவங்க.. ஜவஹர் இடைமறித்தார்.. "இல்ல.. இல்ல.. மற்ற பத்திரிகைகள் உயர்த்துறாங்களேன்றதுக்காக நாங்க விலையை ஏத்தலை.. எங்க கழுத்துக்கு கத்தி வர்றவரைக்கும் தாங்கிக்கிட்டு, அதுக்கப்புறம்தான் வேற வழியில்லாமத்தான் விலையை உயர்த்த வேண்டியதா இருக்கு.. வருஷா வருஷம் எல்லாச் செலவும் ஏறிக்கிட்டே போறதுனால இது தவிர்க்க முடியாதது.." என்று உறுதியுடன் அனைவரி்ன் கருத்தையும் ஏற்க மறுத்தார்.

எனக்குப் பின்னு்ம் சிலர் பேசினார்கள். அனைவரின் கருத்தையும் கேட்டு, குறித்துக் கொண்ட ஜவஹர் கடைசியாக, "குமுதம் நிச்சயம் அதன் வாசகர்களுக்காகவே நடத்தப்படும்.. எங்களுக்காக நடத்தப்படாது.. அதில் நாங்கள் என்றும் உறுதியுடன் இருக்கிறோம்.. இப்ப நீங்க சொன்ன அனைத்துக் கருத்துக்களையும் நாங்கள் பரிசீலித்து எங்களது ஆசிரியர் குழுவினருடன் கலந்தாலோசித்துவிட்டு நிச்சயம் மாற்றம் செய்வோம்.." என்று உறுதியளித்து அனைவரிடமும் கை குலுக்கி விடைகொடுத்தார்.

அவர் சொன்னது போலவே அடுத்த வார அரசு பதில்களில், "கலைஞர்..?" என்கிற கேள்விக்கு "நூ.வா..!" என்று மட்டும் பதில் போட்டிருந்தார்கள். இதற்கான பதில் முதலில் எனக்கும் புரியவில்லை. கடைசியாக மீண்டும் அந்த 'குமுதம்' அண்ணனுக்கே போன் செய்து கேட்டபோதுதான் தெரிந்தது.. கலைஞரே இதனை பெரியவர் பால்யூ மூலமாக விசாரித்துத் தெரிந்து கொண்டதாகவும் அந்த அண்ணன் சொன்னார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த இரண்டாவது வாரத்தில், ஜெயமோகனின் 'பின்னர் பொழுதே தூரம்' தொடர் கட்டுரை நிறுத்தப்பட்டது.

[இங்கே ஒரு விஷயம்.. 'குமுதத்தில்' வந்த ஜெயமோகனின் அந்த கட்டுரைத் தொடர்தான் எனக்குப் பிடிபடவில்லை. புரியவில்லை. ஆகவே பிடிக்கவில்லை. ஆனால் ஜெயமோகன் இப்போது தனது வலைத்தளத்தில் எழுதுவதில் பலவற்றை மீண்டும், மீண்டும் படிக்கிறேன். அருமையாக உள்ளது. வெறும் வரட்டு எதிர்ப்புக்காகவோ, தனி மனித விரோதத்துக்காகவோ நான் அதனைச் சொல்லவில்லை என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்]

அடுத்த வாரத்தில் இருந்து குமுதத்திலேயே அரசியல் கட்டுரைகள் தொடங்கின. முதல் கட்டுரைத் தொடர் காஷ்மீர் பிரச்சினை பற்றியது என்று நினைக்கிறேன்.. சரியாக ஞாபகமில்லை..

"இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி" என்று சொல்லி வந்தவர்கள் கைகளில் ஒரு கவரைத் திணித்தார்கள். கவரில் 300 ரூபாய் இருந்தது. அப்போது அடியேன் வெட்டி ஆபீஸராக வேலை தேடிக் கொண்டிருந்ததால், இந்தப் பணம் அந்த நேரத்தில் எனக்கு மிக, மிக பயனுள்ளதாக இருந்தது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்..

என்றைக்கும், எதனை மறந்தாலும் நன்றியை மட்டும் மறக்கக் கூடாதே..!

அதனால்தான் இந்தப் பதிவு..!

101 comments:

  1. //"இப்ப 'குமுதம் ரிப்போர்ட்டர்'ல பா.ராகவன் 'மாயவலை' கட்டுரை எழுதறாரு.. 'குமுதம் ரிப்போர்ட்டரை' வாங்கினவுடனேயே மொதல்ல படிக்கிறது அதைத்தான். அதுக்கப்புறம்தான் மத்தது.. அது மாதிரி குமுதத்துலேயும் ஏதாவது ஒரு அரசியல் தொடர் கட்டுரை.. 'கண்டிப்பா படிச்சே தீரணும்' அப்படீங்கற மாதிரி ஒண்ண எழுதச் சொல்லுங்க.. நிச்சயம் கிளிக்காகும்.." என்றேன்.//

    உண்மைத்தமிழன்,
    நீங்கள் 'குமுதம்' வந்து சென்ற நாளில் பா. ராகவன் ரிப்போர்ட்டர் இதழில் எந்த தொடரையும் எழுத ஆரம்பிக்கவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் நினைவை சரிபாருங்கள் நண்பா.

    ReplyDelete
  2. ஜெய மோகனுக்கு.. ஆப்பு வச்சது நீங்கதானா? :-)

    ReplyDelete
  3. 25.3.2008, 29.3.2008 & 30.3.2008
    ஆகிய தேதிகளில் குமுதம் பற்றி அடியவன் எழுதிய கட்டுரைகளை மீண்டும் வாசிக்க வேண்டுகிறேன் தமிழரே!
    சுட்டிகள் கீழே உள்ளன!
    http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6936.html
    http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1369.html
    http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8336.html

    ReplyDelete
  4. அப்படியா.... வாமா மின்னல்.

    ReplyDelete
  5. 300 ரூபாயா...

    சொக்காஆஆஆஆஆஆஆஆஆ.......

    ReplyDelete
  6. இதெல்லாம் முன்னாலேயே பண்ணியிருந்தா, குமுதம் என்னைப் போன்ற வாசகர்களை இழந்திருக்காது ;)

    ReplyDelete
  7. பரிசல்காரன் said..

    // 300 ரூபாயா...

    சொக்காஆஆஆஆஆஆஆஆ....... //

    பரிசல்,

    எங்க வந்து என்ன சொல்லிட்டிருக்கீங்க? இங்க நீங்க சொல்ல வேண்டியது.

    முருகாஆஆஆஆஆஆஆஆ......

    ReplyDelete
  8. அண்ணே நல்ல வேளை பேச சொல்லி சொல்லிப்புட்டாங்க, எழுதிக்கொடுங்க என்று சொல்லி நீங்களும் எழுதிக்கொடுத்து இருந்தா????பாவம் ஜவஹர்:)))


    நீங்க எழுதிக்கொடுத்து இருப்பதை படிச்சு முடிக்கங்காட்டியும் 4 குமுதம் வந்து இருக்கும்!!!


    இருந்தாலும் ஜெ.மோ இவ்வளோ காண்டா?

    ReplyDelete
  9. சென்னையில் ஒரு ஜோதி உருவாகிறது என்ற விளம்பரம் வர ஆரம்பித்த அந்த வார குமுதத்தில் 136 பக்கத்தில் 42 பக்கம் விளம்பரம்!

    என்ன கொடுமை இதுன்னு வெறுத்துப்போச்சு!!!

    ReplyDelete
  10. குமுதம் இதழ் உருமாற்றத்தின் பின்னணியில் இலங்கை தமிழர் புகழ் எங்கள் உண்மைத் தமிழனா1? மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. ஜனரஞ்சக பத்திரிக்கை தன் கடமையை விட்டு பிறழாமல் இருக்க உதவியிருக்கிறீர்கள்.

    தினத்தந்தி, குமுதம் போன்ற சஞ்சிகைகள்தான் படிக்கும் ஆர்வத்தை விதைக்கின்றன.

    ReplyDelete
  12. புரட்சித் தமிழன்..வீரத் தமிழன்...எழுச்சித் தமிழன்...மறத் தமிழன்....அண்ணன் உ...............ண்...........மைத் தமி................................................................................................................................................ழன்
    வா.........................................................................ழ்..............................க.................................வே........................

    ReplyDelete
  13. புரட்சித் தமிழன்..வீரத் தமிழன்...எழுச்சித் தமிழன்...மறத் தமிழன்....அண்ணன் உ...............ண்...........மைத் தமி................................................................................................................................................ழன்
    வா.........................................................................ழ்..............................க.................................வே........................

    ReplyDelete
  14. குமுதம் வாங்கிப் படிக்காமல் விட்டுப் பல வருடம். இணையத்தில் படித்தேன். அதுவும் இப்போ கட்டணம்; ஏனைய கட்டண சஞ்சிகையுடன் ஒப்பிட்டால் மிக அதிகம். (3 திரைப்படமும் பார்க்கலாமாம்- இந்த பப்படங்கள் பார்க்க நேரம்) அதனால் அந்த எண்ணம் இல்லை. ஆ.வி அளவு இருந்தால் யோசிக்கலாம்.
    இதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
    மற்றும்படி உங்கள் ஆலோசனையைச் செவிமடுத்து; நடவடிக்கை எடுத்ததன் மூலம் ;வாசகரைக் குமுதம்
    மதிப்பது புரிந்தது.

    ReplyDelete
  15. //"நூ.வா..!//

    நூறாண்டு வாழ்க !!

    ReplyDelete
  16. //அண்ணே நல்ல வேளை பேச சொல்லி சொல்லிப்புட்டாங்க, எழுதிக்கொடுங்க என்று சொல்லி நீங்களும் எழுதிக்கொடுத்து இருந்தா????பாவம் ஜவஹர்:)))//

    :) :) :)


    //நீங்க எழுதிக்கொடுத்து இருப்பதை படிச்சு முடிக்கங்காட்டியும் 4 குமுதம் வந்து இருக்கும்!!!//

    :)


    அண்ணனை பற்றி பதிவர் ஒருவர் கூறியது “அவர் ஒரு மார்க் கேள்விக்கு கூட 1 பக்கம் எழுதுவார்”

    ReplyDelete
  17. விகடனுக்கு ஆயுட் கால சந்தாவே நூறு அல்லது இருநூறு என்று நினைக்கிறேன்; எப்போ அவர்கள் ஆரம்பித்தார்களோ அந்த நாளே கட்டி விட்டேன்; ஆனால் குமுதம்......
    மன்னிக்கவும்; எனது கணிப்பில் எப்போதுமே விகடன் தனி தான்......
    குமுதம் இவ்வளவு சந்தா கேட்பதெல்லாம் too much.
    இதையும் குமுதம் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

    ReplyDelete
  18. இங்கதான் வந்தேன் வாழ்த்துச் சொல்ல.அதுக்குள்ள சிபி இங்க வந்துட்டுப் போங்கன்னு சொன்னதால அங்கே போயிட்டு இங்கே வாரேன்.

    ReplyDelete
  19. சூப்பருங்க... நீங்க எதிர்ப்பார்த்த அந்த ரம்பா டைப் நியூஸ் இப்ப வருதா?

    ReplyDelete
  20. முதல்ல உங்கள கூப்பிட்டாரு பாருங்க அந்த நிருபர். அவரு பேரு, விலாசம் சொல்லுங்க. நிறைய பேச வேண்டி இருக்கு.

    ReplyDelete
  21. மாற்றங்களினால் குமுதம் முன்பை விட சிறப்பாக இருப்பதாகத் தெரியவில்லை.. (முன்பு என்பது கடல்புறா காலமெல்லாம் இல்லிங்க.. அது எங்க அம்மாவோட காலம்)ஆனந்த விகடனே எனக்கு பிடிக்கின்றது.

    ReplyDelete
  22. //இங்கதான் வந்தேன் வாழ்த்துச் சொல்ல.அதுக்குள்ள சிபி இங்க வந்துட்டுப் போங்கன்னு சொன்னதால அங்கே போயிட்டு இங்கே வாரேன்.//

    :)

    ReplyDelete
  23. //மணிகண்டன் said...

    முதல்ல உங்கள கூப்பிட்டாரு பாருங்க அந்த நிருபர். அவரு பேரு, விலாசம் சொல்லுங்க. நிறைய பேச வேண்டி இருக்கு.//

    அவரைத்தான் நானும் தேடிகிட்டிருக்கேன்!

    ReplyDelete
  24. ////நீங்க எழுதிக்கொடுத்து இருப்பதை படிச்சு முடிக்கங்காட்டியும் 4 குமுதம் வந்து இருக்கும்!!!//

    :)


    அண்ணனை பற்றி பதிவர் ஒருவர் கூறியது “அவர் ஒரு மார்க் கேள்விக்கு கூட 1 பக்கம் எழுதுவார்”//

    :)

    ReplyDelete
  25. பரவாயில்லையே சரவணன்!நீங்களும் எவ்வளவு பெரிய இலக்கியத் தொண்டுகள் செய்கிறீர்கள்.

    ReplyDelete
  26. நல்ல பதிவு!

    //"கலைஞர்..?" என்கிற கேள்விக்கு "நூ.வா..!" //

    எனக்கும் புரியவில்லை!!!

    ReplyDelete
  27. ///பைத்தியக்காரன் said...

    //"இப்ப 'குமுதம் ரிப்போர்ட்டர்'ல பா.ராகவன் 'மாயவலை' கட்டுரை எழுதறாரு.. 'குமுதம் ரிப்போர்ட்டரை' வாங்கினவுடனேயே மொதல்ல படிக்கிறது அதைத்தான். அதுக்கப்புறம்தான் மத்தது.. அது மாதிரி குமுதத்துலேயும் ஏதாவது ஒரு அரசியல் தொடர் கட்டுரை.. 'கண்டிப்பா படிச்சே தீரணும்' அப்படீங்கற மாதிரி ஒண்ண எழுதச் சொல்லுங்க.. நிச்சயம் கிளிக்காகும்.." என்றேன்.//

    உண்மைத்தமிழன், நீங்கள் 'குமுதம்' வந்து சென்ற நாளில் பா. ராகவன் ரிப்போர்ட்டர் இதழில் எந்த தொடரையும் எழுத ஆரம்பிக்கவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் நினைவை சரி பாருங்கள் நண்பா.///

    அண்ணே.. பைத்தியம்ண்ணே.. நீங்கதானா..? எத்தனை நாளாச்சு வீட்டுக்குள்ள வந்து..?!

    இல்லை.. பா.ராகவனின் பெயரை அங்கே உச்சரித்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஏனெனில் அப்போதே எனக்கு ஒருவித மயக்கத்தை தந்திருந்தது அவருடைய எழுத்து நடை. அது மறக்க முடியாதது..

    ReplyDelete
  28. //ஹாலிவுட் பாலா said...

    ஜெயமோகனுக்கு.. ஆப்பு வச்சது நீங்கதானா? :-)//

    ஹாலிவுட்ஜி..

    அந்த ஒரு கட்டுரைத் தொடர் மட்டுமே புரியவில்லை. அதனால்தான் சொன்னேன்..!

    ReplyDelete
  29. //SP.VR. SUBBIAH said...

    25.3.2008, 29.3.2008 & 30.3.2008
    ஆகிய தேதிகளில் குமுதம் பற்றி அடியவன் எழுதிய கட்டுரைகளை மீண்டும் வாசிக்க வேண்டுகிறேன் தமிழரே!
    சுட்டிகள் கீழே உள்ளன!
    http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6936.html
    http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1369.html
    http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8336.html//

    வாசித்தேன்..

    உங்களை மாதிரி முடியுமா வாத்தியாரே..!

    நீங்கள் ஒரு புதையல் வாத்தியாரே.. தோண்டத் தோண்டத் தங்கம் என்பார்களே அது நீங்கதான்..!

    ReplyDelete
  30. //நையாண்டி நைனா said...

    அப்படியா.... வாமா மின்னல்.//

    மை காட்.. என் நிலைமை அந்த அளவுக்குப் போயிருச்சா..? நைனா உனக்கே இது நல்லா கீதா..?

    ReplyDelete
  31. //பரிசல்காரன் said...

    300 ரூபாயா...

    சொக்காஆஆஆஆஆஆஆஆஆ.......//

    நானும் அக்காலத்தில் இப்படித்தான் வாயைப் பொளந்தேன் பரிசலு..!

    அஞ்சு நாள் சாப்பாட்டு செலவுக்கு ஆச்சு..

    ReplyDelete
  32. //வெயிலான் said...
    இதெல்லாம் முன்னாலேயே பண்ணியிருந்தா, குமுதம் என்னைப் போன்ற வாசகர்களை இழந்திருக்காது ;)//

    ஏன் சாமி.. இப்பல்லாம் படிக்கிறதில்லையா..? இப்பவும் நல்லாத்தான் இருக்கு.!

    ReplyDelete
  33. ///வெயிலான் said...

    பரிசல்காரன் said..

    // 300 ரூபாயா...

    சொக்காஆஆஆஆஆஆஆஆ.......//

    பரிசல்,

    எங்க வந்து என்ன சொல்லிட்டிருக்கீங்க? இங்க நீங்க சொல்ல வேண்டியது.

    முருகாஆஆஆஆஆஆஆஆ......///

    ஆஹா.. வெயிலான் நம்மை முற்றிலும் புரிந்து வைத்துள்ளார்..

    வாழ்க வெயிலான் தம்பீ..

    ReplyDelete
  34. //குசும்பன் said...

    அண்ணே நல்ல வேளை பேச சொல்லி சொல்லிப்புட்டாங்க, எழுதிக்கொடுங்க என்று சொல்லி நீங்களும் எழுதிக் கொடுத்து இருந்தா???? பாவம் ஜவஹர்:))) நீங்க எழுதிக் கொடுத்து இருப்பதை படிச்சு முடிக்கங்காட்டியும் 4 குமுதம் வந்து இருக்கும்!!!//

    நினைச்சேன்.. என்னடா குசும்பனோட குசும்பை காணோமேன்னு..!

    நிச்சயம் எழுதிக் கேட்டிருந்தா ஒரு பத்து பக்கத்துக்காச்சும் அடிச்சுத் தள்ளியிருப்பேன்..!

    //இருந்தாலும் ஜெ.மோ இவ்வளோ காண்டா?//

    காண்டெல்லாம் இல்ல கண்ணு.. அந்த ஒரு கட்டுரைத் தொடர் மட்டும் பிடிக்கல.. அது குமுதம் ஸ்டைல்ல இல்ல.. அதுனாலதான் சொன்னேன்..!

    ReplyDelete
  35. //குசும்பன் said...
    சென்னையில் ஒரு ஜோதி உருவாகிறது என்ற விளம்பரம் வர ஆரம்பித்த அந்த வார குமுதத்தில் 136 பக்கத்தில் 42 பக்கம் விளம்பரம்! என்ன கொடுமை இதுன்னு வெறுத்துப்போச்சு!!!//

    எல்லாருமே இப்படித்தான்.. திடீர்ன்னு வாரம் 2 புத்தகம்னு சொன்னாங்க.. பார்த்தியா..?

    அது எப்படி தெரியுமா? முழு புத்தகத்தோட பக்கங்களையே ரெண்டா பிரிச்சு 2 புத்தகமா போட்டாங்க. இது எப்படி இருக்கு..?!

    ReplyDelete
  36. //Anonymous said...
    குமுதம் இதழ் உருமாற்றத்தின் பின்னணியில் இலங்கை தமிழர் புகழ் எங்கள் உண்மைத் தமிழனா1? மிகவும் மகிழ்ச்சி.//

    நன்றி அனானி..!

    ReplyDelete
  37. //அறிவிலி said...
    ஜனரஞ்சக பத்திரிக்கை தன் கடமையை விட்டு பிறழாமல் இருக்க உதவியிருக்கிறீர்கள். தினத்தந்தி, குமுதம் போன்ற சஞ்சிகைகள்தான் படிக்கும் ஆர்வத்தை விதைக்கின்றன.//

    உண்மை அறிவிலி ஸார்..

    மொதல்ல நமக்குள்ள அந்த படிக்கிற ஆர்வம் எப்படி வந்துச்சுன்னா நாம பின்னோக்கி போய் பார்த்தோம்னா ஒண்ணு விகடனா இருக்கும்.. இல்லாட்டி குமுதமா இருக்கும்.. இதுதான் உண்மை..!

    ReplyDelete
  38. //தண்டோரா said...
    புரட்சித் தமிழன்.. வீரத் தமிழன்... எழுச்சித் தமிழன்... மறத் தமிழன்.... அண்ணன் உ...............ண்...........மைத் தமி................................................................................................................................................ழன்
    வா.........................................................................//

    தண்டோரா அண்ணன்.. போதும்ண்ணே.. விடுங்கண்ணேன்.. உங்க வாழ்த்தே மிக வித்தியாசமா இருக்கு.. நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  39. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    குமுதம் வாங்கிப் படிக்காமல் விட்டுப் பல வருடம். இணையத்தில் படித்தேன். அதுவும் இப்போ கட்டணம்; ஏனைய கட்டண சஞ்சிகையுடன் ஒப்பிட்டால் மிக அதிகம். (3 திரைப்படமும் பார்க்கலாமாம்- இந்தப் படங்கள் பார்க்க நேரம்) அதனால் அந்த எண்ணம் இல்லை. ஆ.வி அளவு இருந்தால் யோசிக்கலாம். இதையும் குறிப்பிட்டிருக்கலாம். மற்றும்படி உங்கள் ஆலோசனையைச் செவிமடுத்து; நடவடிக்கை எடுத்ததன் மூலம்; வாசகரைக் குமுதம்
    மதிப்பது புரிந்தது.//

    இணையக் கட்டணம் அதிகம்தான்.. நான் இணையத்தில் அதனைப் படிப்பதில்லை என்பதால் நேரடி பாதிப்பில்லாமலேயே இருந்துவிட்டேன்.. கட்டணம் அதிகமெனில் கஷ்டம்தான்.. படிக்காமல் இருந்து விடுவது உத்தமம்.. நான் அந்த ஒரு சம்பவத்தை மட்டுமே குறிப்பி்ட்டுச் சொல்ல வந்ததால்தான் இதனையெல்லாம் குறிப்பிடவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்..

    வருகைக்கு நன்றி யோகன் ஸார்..!

    ReplyDelete
  40. ///புருனோ Bruno said...

    //"நூ.வா..!//

    நூறாண்டு வாழ்க !!///

    கரெக்ட் டாக்டரே..

    ReplyDelete
  41. ///புருனோ Bruno said...

    //அண்ணே நல்ல வேளை பேச சொல்லி சொல்லிப்புட்டாங்க, எழுதிக்கொடுங்க என்று சொல்லி நீங்களும் எழுதிக்கொடுத்து இருந்தா???? பாவம் ஜவஹர்:)))//

    :) :) :)///

    என்ன ஒத்து ஊதுறீங்களா..?

    //நீங்க எழுதிக் கொடுத்து இருப்பதை படிச்சு முடிக்கங்காட்டியும் 4 குமுதம் வந்து இருக்கும்!!!//

    :)///

    ம்.. டாக்டரே ஒண்ணும் சரியில்ல.. சப்போர்ட்டுக்கு வருவீங்கன்னு பார்த்தா நீங்களும் சின்னப் புள்ளைக மாதிரி கோஷ்டில சேர்ந்துட்டீங்க..!

    //அண்ணனை பற்றி பதிவர் ஒருவர் கூறியது “அவர் ஒரு மார்க் கேள்விக்கு கூட 1 பக்கம் எழுதுவார்”///

    யார் அந்த துரோகி..? டாக்டரே ரகசியமா சொல்லுங்க.. உங்க பேரை கண்டிப்பா வெளில சொல்ல மாட்டேன்..! பிராமிஸ்..!

    ReplyDelete
  42. //Sathananthan said...

    விகடனுக்கு ஆயுட் கால சந்தாவே நூறு அல்லது இருநூறு என்று நினைக்கிறேன்; எப்போ அவர்கள் ஆரம்பித்தார்களோ அந்த நாளே கட்டிவிட்டேன்; ஆனால் குமுதம்......
    மன்னிக்கவும்; எனது கணிப்பில் எப்போதுமே விகடன் தனிதான்......
    குமுதம் இவ்வளவு சந்தா கேட்பதெல்லாம் too much. இதையும் குமுதம் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள்.//

    கொண்டு போயெல்லாம் முடியாதுங்க ஸார்.. அவங்க பிஸினஸ்ன்னு முடிவு பண்ணிட்டாங்க.. நமக்கு வேணும்னா அங்க போகலாம்.. இல்லாட்டி விட்டிரலாம்..

    அப்பவே விலைய ஏத்திக்கிட்டே போறீங்களேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஜவஹர் ஸார் பட்டென்று இடைமறித்து பொரிந்து தள்ளிவிட்டார். இதிலிருந்தே தெரிந்தது அவர்களுடைய பிஸினஸ் எங்கே இருக்கிறது என்று..! வேறு வழியில்லை.. நமக்கு விகடன்தான் சீப் அண்ட் பெஸ்ட் என்றால் அதையே நாட வேண்டியதுதான்..!

    ReplyDelete
  43. //ராஜ நடராஜன் said...
    இங்கதான் வந்தேன் வாழ்த்துச் சொல்ல. அதுக்குள்ள சிபி இங்க வந்துட்டுப் போங்கன்னு சொன்னதால அங்கே போயிட்டு இங்கே வாரேன்.//

    ஓ.. இந்த வேலையெல்லாம் செய்றாரா மாநக்கலாரு.. நல்லாயிருக்கட்டும்..

    ReplyDelete
  44. //சரவணகுமரன் said...
    சூப்பருங்க... நீங்க எதிர்பார்த்த அந்த ரம்பா டைப் நியூஸ் இப்ப வருதா?//

    ஏதோ அப்பப்ப வருது ஸார்..!

    ReplyDelete
  45. //மணிகண்டன் said...
    முதல்ல உங்கள கூப்பிட்டாரு பாருங்க அந்த நிருபர். அவரு பேரு, விலாசம் சொல்லுங்க. நிறைய பேச வேண்டி இருக்கு.//

    ஐயையோ..

    அந்த அண்ணன் ரொம்ப நல்லவருங்க.. என்னை மாதிரியில்ல.. விட்ருங்க..

    ReplyDelete
  46. //தமிழ் பிரியன் said...
    மாற்றங்களினால் குமுதம் முன்பை விட சிறப்பாக இருப்பதாகத் தெரியவில்லை.. (முன்பு என்பது கடல்புறா காலமெல்லாம் இல்லிங்க.. அது எங்க அம்மாவோட காலம்)ஆனந்த விகடனே எனக்கு பிடிக்கின்றது.//

    குமுதம் என்றில்லை அனைத்துப் பத்திரிகைகளுமே டல்லடிக்கின்றன.. காரணம் சினிமா, சினிமா என்று போவதால் திகட்டிவிடுகின்றன..! இப்போது விகடனும் அந்தத் திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறது..!

    ReplyDelete
  47. ///நாமக்கல் சிபி said...

    //இங்கதான் வந்தேன் வாழ்த்துச் சொல்ல.அதுக்குள்ள சிபி இங்க வந்துட்டுப் போங்கன்னு சொன்னதால அங்கே போயிட்டு இங்கே வாரேன்.//

    :)///

    ம். வந்துட்டியா..? செய்றதையெல்லாம் செஞ்சுப்போட்டு நல்ல புள்ளையாட்டம் வந்து வாழ்த்துற.. ம்.. மறக்க மாட்டேனாக்கும்..!

    ReplyDelete
  48. ///நாமக்கல் சிபி said...

    //மணிகண்டன் said...
    முதல்ல உங்கள கூப்பிட்டாரு பாருங்க அந்த நிருபர். அவரு பேரு, விலாசம் சொல்லுங்க. நிறைய பேச வேண்டி இருக்கு.//

    அவரைத்தான் நானும் தேடிகிட்டிருக்கேன்!///

    யார்கிட்ட சொன்னாலும் சரி.. உன்கிட்ட மட்டும் சொல்லவே மாட்டேன்..!

    ReplyDelete
  49. ///நாமக்கல் சிபி said...
    //நீங்க எழுதிக்கொடுத்து இருப்பதை படிச்சு முடிக்கங்காட்டியும் 4 குமுதம் வந்து இருக்கும்!!!//
    :)
    அண்ணனை பற்றி பதிவர் ஒருவர் கூறியது “அவர் ஒரு மார்க் கேள்விக்கு கூட 1 பக்கம் எழுதுவார்”//
    :)///

    ம்.. சந்தோஷமா..? திருப்தியா..? இப்படி பேசிப் பேசியே நாலு பேரை உசுப்பிவிட்டுட்ட..!

    ReplyDelete
  50. //ஷண்முகப்ரியன் said...
    பரவாயில்லையே சரவணன்! நீங்களும் எவ்வளவு பெரிய இலக்கியத் தொண்டுகள் செய்கிறீர்கள்.//

    ஸார்.. குமுதம் இலக்கியப் பத்திரிகை இல்லைன்னு சண்டை போட்டுட்டு வந்திருக்கேன்.. நீங்க பாட்டுக்கு இலக்கிய தொண்டுன்னு சொல்லி உசுப்பேத்துறீங்க..!

    ReplyDelete
  51. ///Joe said...

    நல்ல பதிவு!

    //"கலைஞர்..?" என்கிற கேள்விக்கு "நூ.வா..!" //

    எனக்கும் புரியவில்லை!!!///

    நூறாண்டு வாழ்க..!

    ReplyDelete
  52. ஆஹா கண்ணுகளா..!

    இதுவரைக்கும் எனது எந்தப் பதிவிற்கும் இந்தளவிற்கு ஆதரவுக் கரம் நீட்டப்பட்டதில்லை.. இதுதான் முதல் முறை..

    41 பேர் கருவிப் பட்டையை கிளிக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்..

    கோடானு கோடி நன்றிகள்..!

    ReplyDelete
  53. //அடியேன்...//

    ரிக்வெஸ்ட் பண்ணி கேக்குறாரு! வாங்கப்பா எல்லாரும் அடிக்கலாம் இவரை!

    ReplyDelete
  54. //41 பேர் கருவிப் பட்டையை கிளிக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்.. //

    காரணம்! வாசகர்கள் சொன்னதை மதிச்சி குமுதம் தன்னை மாத்திகிச்சி என்பதால்!

    ReplyDelete
  55. மாப்பூ வச்சுட்டாண்டா ஆப்பூ:-)))))

    இப்படிக்கு
    ஜெமோ

    ReplyDelete
  56. ஆனாலும் ஜெமோ விஷயத்தில் நீங்க செய்தது சரி இல்லை. கொஞ்சம் வேற மாதிரி சொல்லியிருக்கலாம். "ஜெமோ ஜனரஞ்சகமாகவும் எழுதுவார். அவரை குமுதத்தில் அந்த மாதிரி எழுதச் சொல்லுங்கள்" என்று சொல்லியிருக்கலாம். உருப்படியான விஷயங்களை அபூர்வமாகச் செய்ய முன்வரும் பத்திரிகைகளையும் இப்படி கெடுத்து விடுங்கள்.

    "இந்த கதை/கவிதை எல்லாத்தையும் வெட்டி விடுங்கள்" என்று சொன்ன புண்ணியவானின் பெயர்/விலாசம் தர முடியுமா? ஒரு மார்க்கமாத் தான் கிளம்பி இருக்கீங்க. இதுக்கு முன்னூறு ரூபாய் சன்மானம் வேற :)

    குமுதத்தின் குறும்பு/அரசு பதில்கள் பற்றி நீங்க சொன்னதெல்லாம் சரிதான்.

    அனுஜன்யா

    ReplyDelete
  57. வீட்டில் எப்பவும் வாங்குவார்கள்.. ஒரு முறை போனபோது புக் இல்லை, ஏன் என்று கேட்டதற்கு என் அண்ணன் சொன்ன பதில் இது

    "ஏதோ ஒரு சீன் கத வருதுடா.. வீட்டுல குழந்தைகள் (சொந்தகார பசங்க எல்லாம் 5th to 9th std) வரும்.. எடுத்து படுச்சா மனசு கெடும் அதான்!!"

    நான் சின்ன பையனாக இருக்கும் போது "ஒரு நடிகையின் கதை வந்தது" .. அப்பவும் இந்த புறக்கணிப்பு படலம் நடந்தது..

    அது எப்படி இலக்கிய பத்திரிகை இல்லையோ அதே மாதிரி ஒரு மஞ்ச பத்திரிகையும் இல்லை.. இப்படி தரம் தாழ்ந்து போக வேண்டாம்!!

    ReplyDelete
  58. அண்ணே.. உங்க அக்கப் போருக்கு ஒரு அளவே இல்லையா? இதைக் கூடவா ஒருலட்சத்துபதிமூனாயிரத்துஎழுநூத்துபதிஎட்டு வரிகள்ல எழுதனுமா? :((

    அதை விடுங்க.. இந்த சமாச்சாரம் நடந்தது எந்த நூற்றாண்டில்.. ;)

    ReplyDelete
  59. //ஹாலிவுட் பாலா said...

    ஜெய மோகனுக்கு.. ஆப்பு வச்சது நீங்கதானா? :-)//

    அதானே.. போனமா வந்தமான்னு இல்லாம என்ன இது சின்னப் புள்ளத் தனமா? பாவமா இல்லை அவரு? அவரும் சாரு மாதிரி வங்கிக் கணக்கு சொல்லி காசு கேக்கனும்னு ஆசை படறிங்களா? :))

    ReplyDelete
  60. இதை படித்தீர்களா..??

    குமுதம் பற்றி: வினவு.காம்.

    " பத்து ரூபாயில் பலான அனுபவம்"

    http://vinavu.wordpress.com/2009/03/17/kumudam/

    ReplyDelete
  61. "உண்மைத்தமிழன் குமுதத்தின் நெடுங்கால வாசகர்!"

    சொல்லும் பொழுதே நாராசமா காதில்
    விழுதே!

    ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு வாசகர் என தெகிரியமா சொல்ல முடியுதுன்னா! தமிழக நிலை பரிதாபம் தான்.

    இத்தனை பின்னூட்டம் வேற! இன்னும் மூணு வருசம் தான், இந்த பூமி பிளந்து, உங்களை யெல்லாம் அள்ளிக்கிட்டு தான் போகப்போகுது!

    ReplyDelete
  62. 300 ரூபாயா...

    சொக்காஆஆஆஆஆஆஆஆஆ......//

    ரிப்பிட்டேய்....

    ReplyDelete
  63. இப்போ குமுதம் படிக்கிறா மாதிரி இருக்குதா?

    ReplyDelete
  64. //உண்மைத்தமிழன் வாத்தியார்:
    Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா. முழு ஆண்டு பரிட்சை எழுதி முடிக்க நேரம் பத்தலனு, கோடை விடுமுறை முழுக்க உக்கார்ந்து நாலாயிரம் பக்கத்துக்கு விடை எழுதிட்டு வந்தான். அதை மியூசியம்ல வைக்க சொல்லி கொடுத்துட்டோம். இப்பவே இப்படி எழுதறான்னா இவன் படிச்சி முடிக்கும் போது இந்தியால ஒரு மரம் கூட மிஞ்சாதுனு அப்ப இருந்த வனத்துறை அமைச்சர் சொன்னாரு.//

    ippadi naan ezhuthina intha pathivula vanthu neengale comment poaturukeenga.. so Doctor kitta sonna aalu naan illai :)

    ReplyDelete
  65. ///நாமக்கல் சிபி said...

    //அடியேன்...//

    ரிக்வெஸ்ட் பண்ணி கேக்குறாரு! வாங்கப்பா எல்லாரும் அடிக்கலாம் இவரை!///

    ஆமா முருகா.. அது ஒண்ணுதான் பாக்கி.. வாங்க.. அதையும் முடிச்சுட்டு சந்தோஷமா போங்க..

    ReplyDelete
  66. ///துறவி said...

    //41 பேர் கருவிப் பட்டையை கிளிக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்.. //

    காரணம்! வாசகர்கள் சொன்னதை மதிச்சி குமுதம் தன்னை மாத்திகிச்சி என்பதால்!///

    துறவியாரே..

    அது எப்படி ஒரு நிமிடத்தில் உங்களால் பெயர் மாற்றிக் கொள்ள முடிகிறது..? ஆச்சரியம்தான்..!

    ReplyDelete
  67. ///அபி அப்பா said...

    மாப்பூ வச்சுட்டாண்டா ஆப்பூ:-)))))

    இப்படிக்கு
    ஜெமோ///

    ஆஹா துபாய்ல உக்காந்துக்கிட்டு போட்டுக் கொடுக்கிறீ்ங்களே அபிப்பா..! இது நியாயமா..?

    ReplyDelete
  68. ///அனுஜன்யா said...
    ஆனாலும் ஜெமோ விஷயத்தில் நீங்க செய்தது சரி இல்லை. கொஞ்சம் வேற மாதிரி சொல்லியிருக்கலாம். "ஜெமோ ஜனரஞ்சகமாகவும் எழுதுவார். அவரை குமுதத்தில் அந்த மாதிரி எழுதச் சொல்லுங்கள்" என்று சொல்லியிருக்கலாம். உருப்படியான விஷயங்களை அபூர்வமாகச் செய்ய முன்வரும் பத்திரிகைகளையும் இப்படி கெடுத்து விடுங்கள்.///

    கவிஞர் ஸார்.. ஜெ.மோ.கட்டுரையை நிறுத்தும்படி நான் கேட்கவில்லை. அவர்களாகத்தான் நிறுத்தியிருக்கிறார்கள். நான் சொன்னது அவர் எழுதுவது புரியவில்லை என்று மட்டும்தான்..!

    //"இந்த கதை/கவிதை எல்லாத்தையும் வெட்டி விடுங்கள்" என்று சொன்ன புண்ணியவானின் பெயர்/விலாசம் தர முடியுமா? ஒரு மார்க்கமாத் தான் கிளம்பி இருக்கீங்க. இதுக்கு முன்னூறு ரூபாய் சன்மானம் வேற :)//

    கவிஞருக்கு கோபம் வருவதில் ஆச்சரியமில்லை.. ஆனால் எல்லாரும் ஒரே மாதிரியிருப்பதில்லையே கவிஞரே.. இதுக்கெல்லாம் கோபிக்கலாமா..?

    //குமுதத்தின் குறும்பு/அரசு பதில்கள் பற்றி நீங்க சொன்னதெல்லாம் சரிதான்.
    அனுஜன்யா///

    அப்பாடா.. இது ஒண்ணையாச்சும் ஒத்துக்கிட்டீங்களே.. அது போதும்..

    பை தி பை.. இதுதான் உங்களுடைய முதல் வருகைன்னு நினைக்கிறேன்..

    நன்றி. நன்றி.. நன்றி...

    ReplyDelete
  69. ///Bhuvanesh said...

    வீட்டில் எப்பவும் வாங்குவார்கள்.. ஒரு முறை போனபோது புக் இல்லை, ஏன் என்று கேட்டதற்கு என் அண்ணன் சொன்ன பதில் இது

    "ஏதோ ஒரு சீன் கத வருதுடா.. வீட்டுல குழந்தைகள் (சொந்தகார பசங்க எல்லாம் 5th to 9th std) வரும்.. எடுத்து படுச்சா மனசு கெடும் அதான்!!"

    நான் சின்ன பையனாக இருக்கும் போது "ஒரு நடிகையின் கதை வந்தது" அப்பவும் இந்த புறக்கணிப்பு படலம் நடந்தது..

    அது எப்படி இலக்கிய பத்திரிகை இல்லையோ அதே மாதிரி ஒரு மஞ்ச பத்திரிகையும் இல்லை.. இப்படி தரம் தாழ்ந்து போக வேண்டாம்!!///

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே.. இப்போதுகூட ஒரு நடிகனின் கதை என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். விமர்சனங்கள் நிறைய வர ஆரம்பித்ததால் அந்த ஹீரோவுக்கு ஷூட்டிங் என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள். இந்த மட்டுக்கும் சந்தோஷம்தான்..

    இருப்பதில் எந்தக் கொள்ளி கொஞ்சமா எரியுதுன்னு பார்த்து அதைத்தான் நாம தாண்டனும். வேற வழியில்ல..

    ReplyDelete
  70. ///Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
    அண்ணே.. உங்க அக்கப் போருக்கு ஒரு அளவே இல்லையா? இதைக் கூடவா ஒரு லட்சத்து பதிமூனாயிரத்து எழுநூத்துபதி எட்டு வரிகள்ல எழுதனுமா?:((//

    சஞ்சய் கண்ணா.. உனது புது டிஸைன் பேனர் நல்லாயிருக்கு.. அதென்ன பேரே இல்ல.. இப்படியும் செய்யலாமா..?

    சரி.. சரி.. அதை எப்படி கரீக்ட்டா எத்தனை வரின்னு பொழைப்பில்லாம எண்ணியிருக்குற..? ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை அதிகமா இல்லையோ..!

    //அதை விடுங்க.. இந்த சமாச்சாரம் நடந்தது எந்த நூற்றாண்டில்.. ;)///

    மூணு, மூணரை, மூணே முக்கால் வருஷத்துக்கு முன்னால.. கரெக்ட்டா தேதியும், மாசமும், வருஷமும் தெரியல.. குத்துமதிப்பாத்தான் சொல்றேன்..!

    ReplyDelete
  71. ///Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    //ஹாலிவுட் பாலா said...

    ஜெய மோகனுக்கு.. ஆப்பு வச்சது நீங்கதானா? :-)//

    அதானே.. போனமா வந்தமான்னு இல்லாம என்ன இது சின்னப் புள்ளத்தனமா? பாவமா இல்லை அவரு? அவரும் சாரு மாதிரி வங்கிக் கணக்கு சொல்லி காசு கேக்கனும்னு ஆசைபடறிங்களா? :))///

    ச்சே.. நான் ஒண்ணும் அந்தளவுக்கு கல் நெஞ்சக்காரன் இல்ல.. நல்லாயில்ல.. புரியலைன்னு மட்டும்தான் சொன்னோம்.. மத்தபடி தொடரை நிறுத்தினதுக்கு நானே முழு காரணமில்லை..

    ஜெ.மோ. சாரு மாதிரியெல்லாம் போக வேண்டியதில்லை.. பார்ட்டி தம் உள்ள பார்ட்டிதான்..

    ReplyDelete
  72. ///வண்ணத்துபூச்சியார் said...

    இதை படித்தீர்களா..??

    குமுதம் பற்றி: வினவு.காம்.

    " பத்து ரூபாயில் பலான அனுபவம்"

    http://vinavu.wordpress.com/2009/03/17/kumudam////

    படித்தேன்.. நன்றி பூச்சியாரே..

    பிரிச்சு மேய்ஞ்சிருக்காங்க அண்ணன்மாருக..

    பாராட்ட வேண்டிய விஷயம்..!

    ReplyDelete
  73. ///நொந்தகுமாரன் said...

    "உண்மைத்தமிழன் குமுதத்தின் நெடுங்கால வாசகர்!"

    சொல்லும் பொழுதே நாராசமா காதில்
    விழுதே!

    ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு வாசகர் என தெகிரியமா சொல்ல முடியுதுன்னா! தமிழக நிலை பரிதாபம்தான்.

    இத்தனை பின்னூட்டம் வேற! இன்னும் மூணு வருசம்தான், இந்த பூமி பிளந்து, உங்களையெல்லாம் அள்ளிக்கிட்டுதான் போகப் போகுது!///

    அந்த நல்ல நாளுக்காகத்தான் நானும் முருகனே வேண்டிக்கிட்டிருக்கேன்..

    உங்களது சாபம் பலிக்கட்டும்..!

    ReplyDelete
  74. ///jackiesekar said...

    300 ரூபாயா...

    சொக்காஆஆஆஆஆஆஆஆஆ......//

    ரிப்பிட்டேய்....///

    சொக்கா இல்ல.. முருகா..!

    ReplyDelete
  75. ///வால்பையன் said...
    இப்போ குமுதம் படிக்கிறா மாதிரி இருக்குதா?///

    ஏதோ ஒரு 10 பக்கம் படிக்கிற மாதிரி நியூஸ் வருது.. அவ்வளவுதான்..!

    ReplyDelete
  76. ///வெட்டிப்பயல் said...

    //உண்மைத்தமிழன் வாத்தியார்:
    Choose the Best Answerக்கு நாப்பது பக்கத்துக்கு விடை எழுதி என்னை திக்கு முக்காட வெச்சிட்டான்பா. முழு ஆண்டு பரிட்சை எழுதி முடிக்க நேரம் பத்தலனு, கோடை விடுமுறை முழுக்க உக்கார்ந்து நாலாயிரம் பக்கத்துக்கு விடை எழுதிட்டு வந்தான். அதை மியூசியம்ல வைக்க சொல்லி கொடுத்துட்டோம். இப்பவே இப்படி எழுதறான்னா இவன் படிச்சி முடிக்கும் போது இந்தியால ஒரு மரம் கூட மிஞ்சாதுனு அப்ப இருந்த வனத்துறை அமைச்சர் சொன்னாரு.//

    ippadi naan ezhuthina intha pathivula vanthu neengale comment poaturukeenga.. so Doctor kitta sonna aalu naan illai :)///

    புரியலையே வெட்டி ஸார்..!

    ReplyDelete
  77. //பை தி பை.. இதுதான் உங்களுடைய முதல் வருகைன்னு நினைக்கிறேன்.. //

    பைத்தியக்காரன், நா இப்ப உங்க கட்சிதான். இவருக்கு இத்தனை ஞாபக மறதியா ?

    அண்ணே, உங்க புத்தகக் கண்காட்சி பதிவ (ஒரு குறுநாவல் சைசு) மாங்கு மாங்குன்னு படிச்சு பின்னூட்டம் போட்டேன். அதுக்கு முன்னால 'இட்லி வடைக்குக் கண்டனம்' பதிவுலேயும் பின்னூட்டம் போட்டேன். ஒரு ஐ.டி.கார்டு கொடுங்கண்ணே. இல்லாட்டி ஒவ்வொரு முறையும் முதல் வருகைன்னு சொல்லிடுவீங்க :)

    எது எப்படி இருந்தாலும், உங்கள மாதிரி sporting பதிவரைப் பார்த்ததில்லை. பழம் பெரும் பதிவர்களிலிருந்து, நேற்று முளைத்த மழலைகள் வரை எவ்வளவு கலாய்த்தாலும் நிதானம் இழக்காமல் இருப்பது உண்மையிலேயே great.

    இப்பவாவது என்ன ஞாபகம் வெச்சுக்கோங்க :)

    அனுஜன்யா

    ReplyDelete
  78. ///அனுஜன்யா said...

    //பை தி பை.. இதுதான் உங்களுடைய முதல் வருகைன்னு நினைக்கிறேன்..//

    பைத்தியக்காரன், நா இப்ப உங்க கட்சிதான். இவருக்கு இத்தனை ஞாபக மறதியா? அண்ணே, உங்க புத்தகக் கண்காட்சி பதிவ (ஒரு குறுநாவல் சைசு) மாங்கு மாங்குன்னு படிச்சு பின்னூட்டம் போட்டேன். அதுக்கு முன்னால 'இட்லி வடைக்குக் கண்டனம்' பதிவுலேயும் பின்னூட்டம் போட்டேன். ஒரு ஐ.டி.கார்டு கொடுங்கண்ணே. இல்லாட்டி ஒவ்வொரு முறையும் முதல் வருகைன்னு சொல்லிடுவீங்க:)//

    ஐயையோ.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும் கவிஞரே..!

    அடிக்கடி என் பதிவுல வராத பெயரா இருக்கா..? அதுதான் ஞாபகமில்லாம போயிருச்சு..

    //எது எப்படி இருந்தாலும், உங்கள மாதிரி sporting பதிவரைப் பார்த்ததில்லை. பழம் பெரும் பதிவர்களிலிருந்து, நேற்று முளைத்த மழலைகள்வரை எவ்வளவு கலாய்த்தாலும் நிதானம் இழக்காமல் இருப்பது உண்மையிலேயே great.//

    ஹி.. ஹி.. நன்றி.. நன்றி.. எல்லாம் நம்ம பிள்ளைகதான்.. நம்ம அண்ணன், தம்பிகதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.. வேறென்ன செய்றது..?

    //இப்பவாவது என்ன ஞாபகம் வெச்சுக்கோங்க:) அனுஜன்யா//

    கண்டிப்பா.. இப்ப மனசுல பசக்குன்னு பதிஞ்சிருச்சுங்க கவிஞரே..! ஞாபகத்துல வைச்சுக்குறேன்..!

    வருகைக்கு நன்றிங்கோ..!

    ReplyDelete
  79. //எது எப்படி இருந்தாலும், உங்கள மாதிரி sporting பதிவரைப் பார்த்ததில்லை. பழம் பெரும் பதிவர்களிலிருந்து, நேற்று முளைத்த மழலைகள் வரை எவ்வளவு கலாய்த்தாலும் நிதானம் இழக்காமல் இருப்பது உண்மையிலேயே great.//

    இந்த விஷயத்துல இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு! எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு!

    ReplyDelete
  80. ///வேலன் said...
    //எது எப்படி இருந்தாலும், உங்கள மாதிரி sporting பதிவரைப் பார்த்ததில்லை. பழம் பெரும் பதிவர்களிலிருந்து, நேற்று முளைத்த மழலைகள் வரை எவ்வளவு கலாய்த்தாலும் நிதானம் இழக்காமல் இருப்பது உண்மையிலேயே great.//

    இந்த விஷயத்துல இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பநல்லவரு! எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாரு!///

    இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆளாளுக்கு கும்முறீங்களேப்பா.. இது உங்களுக்கே நியாயமா..?!

    ReplyDelete
  81. ''அரசு பதில்கள்'' பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் பொருத்தம் ---
    படிக்க தெளிவில்லாததை துணிந்து கூறியதை மெச்சுகின்றேன் ---
    அரசு அண்ணாமலை காலத்தில் அறுபதினாயிரம் ரூபா ஒரு
    கிழமை வெளியீடுக்கு தேவை இருந்ததாம் --- ஒரு கிழமை
    விளம்பரங்களுக்கு அட்வான்ஸ் ஆக அறுபதினாலாயிரம் வசூலாகும்
    என்று படித்த ஞாபகம் --- சரியா அண்ணே ?
    ++++++++++++++++++++++++++++++++++++++++
    இதை சற்று பாருங்கள் ... பிரயோசனம் இல்லாது போனால் அழித்து விடுங்கள் ... நன்றி
    ++++++++++++++++++++++++++

    நண்பர்களே இது ஒரு புதிய இழை.
    திருக்குறளை எளிமையாய் மனனம் செய்வதற்கான புதிய முறை.

    திருக்குறளை மிக எளிமையாய் மனனம் செய்ய ஒரு வழியை அறிமுகப்படுத்துகிறேன்.
    எந்த ஒன்றையும் நினைவில் வைக்க - இரண்டு வகையான பதிவு முறைகள்தான் உண்டு.
    1. நேரடியான ஆப்பு பதிவு முறை.
    2. ஒன்றை இன்னொன்றோடு இணைத்து நினைவில் வைக்கும் - இணைப்பு பதிவு முறை.

    இதில் நாம் தேர்வு செய்வது இணைப்பு பதிவு முறையையே.

    ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களின் முதல் வார்த்தைகளை எடுத்து ஒரு
    கவிதை மாதிரி தொகுத்திருக்கிறேன். பெரும்பாலும் அதில் பொருளையும்
    கொண்டுவர முயன்றிருக்கிறேன்.

    நீங்களும் முயற்சி செய்யுங்கள். இது நான் முயன்ற ஒருவழி. இணைப்பு
    முறைக்கு நிறைய வழிகள் உள்ளன.
    நான் தந்திருப்பதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு குறளையும்
    நினைவுபடுத்தும். நன்கு மனதில் பதியும் வரைதான் இணைப்பு தேவைப்படும்.
    பதிந்த பின் மனம் அதை தூக்கிப்போட்டுவிடும். அதாவது நடக்க கற்ற பின் நாம்
    நடை வண்டியை மறக்கிற மாதிரி.

    கடவுள் வாழ்த்து

    அகரம்
    கற்று
    மலர் தூவி
    வேண்ட
    இருள் நீங்கும்..!

    ஐந்தவித்து
    தனக்குவமை இல்லாத
    அறவாழி
    எண் குணத்தான்
    பிறவிக் கடல் நீந்தவைப்பான்..!

    சொல்லி சொல்லிப் பாருங்கள்..மனனமாகிவிடும். உங்களைவிட..உங்கள்
    பிள்ளைகளுக்கு எளிதில் மனனமாகும்.
    நாளை அடுத்த அதிகாரத்தில் சந்திப்போம்.
    ------------------------------------------------------------------------
    என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
    தமிழ்'அழகி'யுடன்
    வெங்கட்.தாயுமானவன்
    ---------------------------------------------------------------------
    என் தமிழோடு கைகுலுக்க
    www.kvthaayumaanavan.blogspot.com

    ReplyDelete
  82. ///benzaloy said...
    ''அரசு பதில்கள்'' பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் பொருத்தம் ---
    படிக்க தெளிவில்லாததை துணிந்து கூறியதை மெச்சுகின்றேன் ---
    அரசு அண்ணாமலை காலத்தில் அறுபதினாயிரம் ரூபா ஒரு
    கிழமை வெளியீடுக்கு தேவை இருந்ததாம் --- ஒரு கிழமை
    விளம்பரங்களுக்கு அட்வான்ஸ் ஆக அறுபதினாலாயிரம் வசூலாகும்
    என்று படித்த ஞாபகம் --- சரியா அண்ணே ?///

    சரிதான்.. இப்பவும் காசு அள்ளுது குமுதம்..

    ஆனால் அதற்கேற்றாற் போலத் தரமான செய்திகளைத்தான் தரக் காணோம்..!

    ஊழியர்களுக்குத் தரப்படும் சம்பளமும் குறைவுதான்.. அவர்கள் நினைத்தால் இன்னும் நிறையவே தரலாம்..

    ReplyDelete
  83. பென்ஸ் ஸார்..

    திருக்குறளை மனனம் செய்ய நீங்கள் சொல்லியிருக்கும் வழி எனக்குப் புதியது..

    செய்து பார்த்தேன்.. மிக எளிதாகத்தான் உள்ளது.

    தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  84. //Anonymous said...
    உங்களைக் கேள்வி கேட்டுருக்காரே நாஞ்சில் பிரதாபன், அதுக்கு பதில் சொல்லலையா?
    http://ushnavayu.blogspot.com/2009/03/blog-post_18.html//

    பதில் சொல்லிவிட்டேன் அனானி..!

    ReplyDelete
  85. [[[ இப்பவும் காசு அள்ளுது குமுதம்..
    ஆனால் அதற்கேற்றாற் போலத் தரமான செய்திகளைத்தான்
    தரக் காணோம்..!]]]

    இந்த வியாதி குமுதம் சஞ்சிகைக்கு மாத்திரமல்ல Reader's Digest கும் உள்ளது --- Digest ல் ஒரு கான்செர் உம் உள்ளது --- பரிசுகள் என்று ஏமாத்துவது ---

    பலர் DIGEST பற்றி வேறு போரும்ஸ் (Forums) களில் எழுதி உள்ளனர்

    மேலும் சொந்த அனுபவமும் உண்டு.

    ReplyDelete
  86. குமுதம் மாத்திரமில்லை சார்

    Reader's Digest உம் அப்படி தான்

    READER'S DIGEST ஒரு படி மேலே
    போய் பரிசுகள் இந்தா கிடைக்குது ---
    நாளை கிடைக்குது --- இதை கவனமாக அதில் ஓட்டு --- இந்த மூன்றில் ஒண்டை இப்போதே தெரிவு செய் ---

    என்று எதோ அடுத்த மாதமே மோட்சம் கிடைக்கும் என்றவாறு ஏமாற்றுவார்கள் ---ஏமாற்றுகின்றார்கள் ---

    1950, 1960 களில் இருந்து READER'S DIGEST படித்த பழசுகளுக்கு அந்த அபிமான சஞ்சிகை [ Reader;s Digest ] எது சொன்னாலும் நம்புவார்கள் !

    இவ்வாறு பலர் தமது வயது சென்ற தகப்பனாரோ உறவினரோ ஏமாறியதாக வேறு சோசியல்
    போறம்ஸ் (Forums) களில் எழுதியதை கண்டுள்ளேன் ---

    மற்றும் பட்டு நொந்த சொந்த அனுபவமும் உண்டு ---

    நானும் அந்த பழசுகளில் ஒன்று தானே !!!

    ReplyDelete
  87. [[[ பென்ஸ் ஸார்..
    திருக்குறளை மனனம் செய்ய நீங்கள் சொல்லியிருக்கும் வழி எனக்குப் புதியது..
    செய்து பார்த்தேன்.. மிக எளிதாகத்தான் உள்ளது.
    தகவலுக்கு நன்றிகள் ]]]
    அடிச்சான் ப்ரைஸ் எண்டானாம் !

    அண்ணே அது என்னுடையது இல்லையே !!

    அழகி என்ற தளத்தில் வேறு ஒருவர் உருவாக்கிதந்துள்ளார் அய்யா ---

    எனக்கு இதெல்லாம் வராது சாமி !!!.

    ReplyDelete
  88. உண்மை தமிழன் --- ஒரு சிறு விளக்கம் ---

    நீங்கள் ஏன் Google AdSense பக்கம் சென்று விளம்பரங்கள் போட யோசிக்கவில்லை ?

    ReplyDelete
  89. ///இப்பவும் காசு அள்ளுது குமுதம்..
    ஆனால் அதற்கேற்றாற் போலத் தரமான செய்திகளைத்தான்
    தரக் காணோம்..!]]]

    இந்த வியாதி குமுதம் சஞ்சிகைக்கு மாத்திரமல்ல Reader's Digest கும் உள்ளது --- Digest ல் ஒரு கான்செர் உம் உள்ளது --- பரிசுகள் என்று ஏமாத்துவது --- பலர் DIGEST பற்றி வேறு போரும்ஸ்(Forums)களில் எழுதி உள்ளனர். மேலும் சொந்த அனுபவமும் உண்டு.///

    எனக்கும் அந்த அனுபவம் உண்டு பென்ஸ் ஸார்..!

    ReplyDelete
  90. ///benzaloy said...

    குமுதம் மாத்திரமில்லை சார்//

    என்னது ஸாரா..? ஐயா தாங்கள் எனனை சரவணன் என்றுதான் அழைக்க வேண்டும். இது எனது உத்தரவு..!

    //Reader's Digestஉம் அப்படிதான்
    READER'S DIGEST ஒரு படி மேலே
    போய் பரிசுகள் இந்தா கிடைக்குது ---
    நாளை கிடைக்குது --- இதை கவனமாக அதில் ஓட்டு --- இந்த மூன்றில் ஒண்டை இப்போதே தெரிவு செய் --- என்று எதோ அடுத்த மாதமே மோட்சம் கிடைக்கும் என்றவாறு ஏமாற்றுவார்கள் ---ஏமாற்றுகின்றார்கள் ---
    1950, 1960 களில் இருந்து READER'S DIGEST படித்த பழசுகளுக்கு அந்த அபிமான சஞ்சிகை [Readers Digest] எது சொன்னாலும் நம்புவார்கள் !
    இவ்வாறு பலர் தமது வயது சென்ற தகப்பனாரோ உறவினரோ ஏமாறியதாக வேறு சோசியல்
    போறம்ஸ்(Forums)களில் எழுதியதை கண்டுள்ளேன் --- மற்றும் பட்டு நொந்த சொந்த அனுபவமும் உண்டு --- நானும் அந்த பழசுகளில் ஒன்றுதானே !!!///

    நானும்தான் பென்ஸ் ஸார்..!

    ஏதோ ஒரு கடிதம் வன்து ஸ்வீப்டேக்கர்ஸ் கான்டெஸ்ட் என்று ஆரம்பித்தது. மாசத்துக்கு 2 முறை அதனை ஒட்டு.. இதனை ஒட்டு என்று பல முறை கிட்டத்தட்ட 1 வருடம் அந்தப் போ்ட்டி இழுத்து கடைசியில் பெப்பே காட்டிவிட்டார்கள்.

    அன்றிலிருந்து அந்தப் பக்கமே நான் செல்வதில்லை..! பணம் கட்டி ஏமாந்ததுதான் மிச்சம்..!

    ReplyDelete
  91. ///benzaloy said...

    [[[பென்ஸ் ஸார்..
    திருக்குறளை மனனம் செய்ய நீங்கள் சொல்லியிருக்கும் வழி எனக்குப் புதியது.. செய்து பார்த்தேன்.. மிக எளிதாகத்தான் உள்ளது. தகவலுக்கு நன்றிகள்]]]

    அடிச்சான் ப்ரைஸ் எண்டானாம் !
    அண்ணே அது என்னுடையது இல்லையே !!///

    இந்த அண்ணே வேண்டாமே ஸார்.. சரவணன் என்றே கூப்பிடலாமே..!


    //அழகி என்ற தளத்தில் வேறு ஒருவர் உருவாக்கி தந்துள்ளார் அய்யா --- எனக்கு இதெல்லாம் வராது சாமி !!!.///

    மன்னிக்கணும்.. இப்ப நீங்க சொன்ன பின்புதான் மீண்டும் ஒரு முறை அங்கு சென்று படித்து செக் செய்தேன்..

    அதனை எழுதியவருக்கும் அழகி நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  92. //benzaloy said...

    உண்மை தமிழன் --- ஒரு சிறு விளக்கம் ---

    நீங்கள் ஏன் Google AdSense பக்கம் சென்று விளம்பரங்கள் போட யோசிக்கவில்லை?//

    அதையெல்லாம் பயன்படுத்தி நாளாச்சு ஸார்..

    ஆட்சென்ஸ் விளம்பரங்கள் ஆங்கில வலைத்தளங்களுக்குத்தான் தருவார்களாம்.. அப்படியே தமிழில் தருவதாக இருந்தாலும் பணம் வாங்கியதாக இதுவரையில் ஒருவர்கூட எழுதவில்லை. நானும் ஆட்சென்ஸ் விளம்பரத்தை எனது தளத்தில் வைத்திருந்தேன். சுமார் 1 வருட காலம் வைத்திருந்து வீணாகப் போன பின்புதான் தூக்கினேன்..

    ReplyDelete
  93. [[[ நீங்கள் ஏன் Google AdSense பக்கம் சென்று விளம்பரங்கள் போட யோசிக்கவில்லை?//
    அதையெல்லாம் பயன்படுத்தி நாளாச்சு ஸார்..
    ஆட்சென்ஸ் விளம்பரங்கள் ஆங்கில வலைத்தளங்களுக்குத்தான் தருவார்களாம்.. அப்படியே தமிழில் தருவதாக இருந்தாலும் பணம் வாங்கியதாக இதுவரையில் ஒருவர்கூட எழுதவில்லை. நானும் ஆட்சென்ஸ் விளம்பரத்தை எனது தளத்தில் வைத்திருந்தேன். சுமார் 1 வருட காலம் வைத்திருந்து வீணாகப் போன பின்புதான் தூக்கினேன் ]]]

    அட்சென்ஸ் விளம்பரங்களை பற்றி நல்லதாக எழுதியதை
    நான் இன்றும் வாசித்தது கிடையாது ---

    அதை சரியான திமிர் (Arrogance) பிடித்தது மற்றும் ஒரு சிறு
    பிழை நடந்தற்கு பல நூறு டாலர்களை தர மறுத்த தென்று
    துகத்துடனும் எரிச்சலுடனும் பலர் எழுதி உள்ளனர் ---

    துட்டரை கண்டால் தூர விலகு என்றாராம் ''நல்வழியில்'' !

    ReplyDelete
  94. [[[ இந்த வியாதி குமுதம் சஞ்சிகைக்கு மாத்திரமல்ல Reader's Digest கும் உள்ளது --- Digest ல் ஒரு கான்செர் உம் உள்ளது --- பரிசுகள் என்று ஏமாத்துவது --- பலர் DIGEST பற்றி வேறு போரும்ஸ்(Forums)களில் எழுதி உள்ளனர். மேலும் சொந்த அனுபவமும் உண்டு.///
    எனக்கும் அந்த அனுபவம் உண்டு பென்ஸ் ஸார்..! ]]]

    அஹ்ஹா இதில் தான் அய்யா நம்ம ஒற்றுமை வளருது ---
    இங்கு தான் பிள்ளையார் அப்பன் வழி காட்டுறார் ---
    இந்த READER'S DIGEST பற்றி கொஞ்சம் அலசுவோமா சார் ---
    தமிழில் தொடங்கி பலரது ஆர்வம் இருக்குமாயின் ---
    சும்மா அப்பிடி ஒரு விசிட் அடிச்சு Digest கு லிங்க் கொடுத்து
    அவமானப்படுத்தி விடுவோம் ---
    மிஞ்சினால் என்னிடம் Registered Post ல் அனுப்பிய கடிதத்துக்கு
    இன்றும் பதில் தராத குற்றத்தை நிரூபிக்க Australia Post ரசிது
    உள்ளது ---
    உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ் ? !

    ReplyDelete
  95. //benzaloy said...

    [[[ நீங்கள் ஏன் Google AdSense பக்கம் சென்று விளம்பரங்கள் போட யோசிக்கவில்லை?//
    அதையெல்லாம் பயன்படுத்தி நாளாச்சு ஸார்..
    ஆட்சென்ஸ் விளம்பரங்கள் ஆங்கில வலைத்தளங்களுக்குத்தான் தருவார்களாம்.. அப்படியே தமிழில் தருவதாக இருந்தாலும் பணம் வாங்கியதாக இதுவரையில் ஒருவர்கூட எழுதவில்லை. நானும் ஆட்சென்ஸ் விளம்பரத்தை எனது தளத்தில் வைத்திருந்தேன். சுமார் 1 வருட காலம் வைத்திருந்து வீணாகப் போன பின்புதான் தூக்கினேன் ]]]

    அட்சென்ஸ் விளம்பரங்களை பற்றி நல்லதாக எழுதியதை
    நான் இன்றும் வாசித்தது கிடையாது ---

    அதை சரியான திமிர் (Arrogance) பிடித்தது மற்றும் ஒரு சிறு
    பிழை நடந்தற்கு பல நூறு டாலர்களை தர மறுத்த தென்று
    துகத்துடனும் எரிச்சலுடனும் பலர் எழுதி உள்ளனர் ---

    துட்டரை கண்டால் தூர விலகு என்றாராம் ''நல்வழியில்'' !//

    அந்த எண்ணத்தில்தான் அந்தப் பக்கமே போவதில்லை..!

    தமிழிலாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறோம்.

    ரொம்ப வேண்டாம்.. இணையதள மாதாந்திர கட்டணமான ஐநூறு ரூபாய் கிடைத்தால்கூட போதும் என்று தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைக்க மாட்டேங்குது..!

    ReplyDelete
  96. //benzaloy said...
    [[[இந்த வியாதி குமுதம் சஞ்சிகைக்கு மாத்திரமல்ல Reader's Digestகும் உள்ளது --- Digest ல் ஒரு கான்செர் உம் உள்ளது --- பரிசுகள் என்று ஏமாத்துவது --- பலர் DIGEST பற்றி வேறு போரும்ஸ்(Forums)களில் எழுதி உள்ளனர். மேலும் சொந்த அனுபவமும் உண்டு.///
    எனக்கும் அந்த அனுபவம் உண்டு பென்ஸ் ஸார்..! ]]]//

    அஹ்ஹா இதில்தான் அய்யா நம்ம ஒற்றுமை வளருது ---
    இங்குதான் பிள்ளையார் அப்பன் வழி காட்டுறார் ---
    இந்த READER'S DIGEST பற்றி கொஞ்சம் அலசுவோமா சார் ---
    தமிழில் தொடங்கி பலரது ஆர்வம் இருக்குமாயின் ---
    சும்மா அப்பிடி ஒரு விசிட் அடிச்சு Digest கு லிங்க் கொடுத்து
    அவமானப்படுத்தி விடுவோம் ---
    மிஞ்சினால் என்னிடம் Registered Post ல் அனுப்பிய கடிதத்துக்கு
    இன்றும் பதில் தராத குற்றத்தை நிரூபிக்க Australia Post ரசிது
    உள்ளது --- உங்களது அபிப்பிராயம் ப்ளீஸ்?///

    அவர்கள் கண்டம் விட்டு கண்டம் வந்தும் வேலையைக் காட்டியிருக்கிறார்களோ..!

    உங்களுடைய அனுபவங்களை நீங்கள் ஒரு பதிவாக எழுதுங்கள்.. அதிலேயே அனைவரும் தெரிந்து கொள்வார்கள்..

    என் பதிவை தொடர்ந்து நான் எழுதுகிறேன்..

    தொடர்ந்து பதிவர்கள் ஏமாந்திருந்தால் பலரும் வெளி வருவார்கள்..

    எச்சரிக்கை செய்ய வேண்டியது நமது கடமைதான்..! செய்வோம்..!

    ReplyDelete
  97. [[[ உங்களுடைய அனுபவங்களை நீங்கள் ஒரு பதிவாக எழுதுங்கள்.. அதிலேயே அனைவரும் தெரிந்து கொள்வார்கள்..

    என் பதிவை தொடர்ந்து நான் எழுதுகிறேன்..

    தொடர்ந்து பதிவர்கள் ஏமாந்திருந்தால் பலரும் வெளி வருவார்கள்..

    எச்சரிக்கை செய்ய வேண்டியது நமது கடமைதான்..! செய்வோம்..! ]]]

    அருமை --- விரைவில் தொடங்குவேன் ---
    பழைய papers கொஞ்சம் படிக்கணும் ---
    சப்போர்ட் கு மிகவும் நன்றி

    ReplyDelete
  98. //benzaloy said...
    [[[உங்களுடைய அனுபவங்களை நீங்கள் ஒரு பதிவாக எழுதுங்கள்.. அதிலேயே அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.. என் பதிவை தொடர்ந்து நான் எழுதுகிறேன்..
    தொடர்ந்து பதிவர்கள் ஏமாந்திருந்தால் பலரும் வெளி வருவார்கள்..
    எச்சரிக்கை செய்ய வேண்டியது நமது கடமைதான்..! செய்வோம்..! ]]]

    அருமை --- விரைவில் தொடங்குவேன் ---
    பழைய papers கொஞ்சம் படிக்கணும் --- சப்போர்ட்கு மிகவும் நன்றி//

    தொடங்குங்க சாமி..! காத்திருக்கிறோம்..!

    ReplyDelete
  99. நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் மிகப் பயனுள்ளதாக இருந்ததால்த்தான் குமுதம் சில மாற்றங்களை சந்தித்திருக்கிறது. குமுதத்தில் மாற்றம் பெறாமல் நிலைகொண்டிருக்கும் ஒருபக்கக் கதைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா தங்களின் அபிப்பிராயம் சொல்ல முடியுமா? காரணம் எனது 16 ஒருபக்க கதைகள் குமுததில் வெளிவந்துள்ளன.

    ReplyDelete
  100. [[[ குமுதத்தில் மாற்றம் பெறாமல் நிலைகொண்டிருக்கும் ஒருபக்க கதைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா தங்களின் அபிப்பிராயம் சொல்ல முடியுமா? ]]]
    அரசு அண்ணாமலை அவர்களது திறமை அல்லது அவரது கால் தூசு தன்னும் இன்றில்லையே.

    நான் தற்போது குமுதம் வாசிப்பதில்லை.

    O.Henry ஆரம்பித்த ஓரு பக்க கதை
    ஸ்ரைலை அரசு ஸார் திறம்பட நலைநாட்டினார். ஆசையோடு வாசித்து அனுபவித்தேன்.

    அன்று நீலா, பாக்கியம் ராமசாமி, மறைமுகமாக அரசு ஸாரும் தந்தவைகள் இரு தசாப்தங்கள் பின்னரும் மனதில் நினைவுகளாக உசலாடுகின்றன.

    சீதாப் பாட்டி, அப்புசாமி, அரை பிளேடு
    ஆகியோரை ஞாபகமா ஸார்.

    சிறு கதை எழுதுவது கஷ்டமான கலை.
    அவற்றை திகட்டாது வாசிப்பது சுலபமான மன நிலை, எமது.
    நன்றி அய்யா.

    ReplyDelete