Pages

Friday, March 27, 2009

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-26-03-2009

26-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சக்கைப் போடு போடும் குத்தாட்ட சிடிக்கள்..!

தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் நண்பரொருவர் என்னைப் பார்க்க வந்தார். கையோடு ஒரு சிடியை கொண்டு வந்திருந்தார். பேச்சுலர் வீடுதானே என்பதால் "இதை கண்டிப்பா இப்பவே போட்டுப் பார்க்கணும்..." என்றார். அவருடைய அன்புத் தொல்லையால் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

ஒரு மேடை. மேடையில் நடைபெறுவது நடன நிகழ்ச்சி என்பது புரிந்தது. சினிமாவில் வருவதைப் போல சிக்கனமான உடையில் வந்த ஒரு யுவதியும், ஆடவனும் ஆடத் தொடங்கினார்கள். பாடல் 'அந்த நிலாவைத்தான கைல புடிச்சேன்.. என் ராசாத்திக்காக' என்று ஒலிக்கத் துவங்கியது.. ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ பிட்டு படத்தில் வருவதைப் போல் அவர்களுடைய செய்கைகளும், நடன அசைவுகளும் வர.. திக்கென்றானது. பிட்டு சினிமாவில் என்றால் சரி.. ஆபாசப் படத்தில் என்றால் சரி.. இப்படி பொதுமேடையில் என்றால் எப்படி..?


நண்பர் விளக்கமாகச் சொன்னார். இப்போதெல்லாம் கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் விழாக்களில் இப்படி ஆடும் நடனக் குழுக்கள்தான் ஏற்பாடு செய்யப்பட்டுகின்றனவாம். 5 பெண்கள் 5 ஆண்கள் என்று வருவார்களாம். மொத்த ஆட்டமும் இப்படியான கெட்ட ஆட்டமாகத்தான் இருக்குமாம்.. நிகழ்ச்சி முடிந்த பின்பு தேவையெனில் அந்த ஊர்க்கார பெரிய மனுஷங்களுக்காக தனியிடத்தில் ஆதாம், ஏவாள் தோற்றத்திலும் ஒரு நடனம் ஆடிக் காட்டப்படுமாம்.. இதற்கு தனியாக பில்லாம்..

அந்தப் பெண்கள் ஆடியதைப் பார்த்தால் ஏதோ அவர்களைக் கட்டாயப்படுத்தி ஆட வைப்பதுபோலவோ, வேறு வழியில்லாமல் அவர்கள் ஆடுவது போலவே என் கண்ணுக்குத் தெரியவில்லை. மிக, மிக ஈடுபாட்டோடு ரொமான்ஸை பிழிந்து காட்டுகிறார்கள் அந்த யுவதிகள். மேடையில் பாடலுக்கு பாடல் காமரசம் சொட்டுகிறது.. கோவில் திருவிழாக்களிலேயே இப்படி ஏற்பாடு செய்யப்பட்டால் எவனுக்கு பக்தி உண்மையாக வரும்..?


சிடி முழுவதையும் பார்த்தேன். தொடர்ச்சியாக வில்லங்கமான பாடல்கள்தான்.. விரசமான அசைவுகள்.. ஆட்டங்கள்.. அதிலும் கடைசி மூன்று பாடல்களுக்கு மேடையிலேயே மழை பெய்வதைப் போல செட்டப் செய்து தண்ணீரில் நனைந்தபடியே தங்களது தேகத்தின் தாகத்தைக் காட்டுகிறார்கள். சினிமா செத்தது போங்க..

கிராமப்புறங்கள் ஏதோ இந்த விஷயத்தில் பின்தங்கியிருக்கிறது என்கிறார்கள். அது சுத்தப் பொய் என்றே சொல்லலாம்... பர்மாபஜாரில் இந்தக் குத்தாட்டங்கள் அடங்கிய டிவிடிக்கள் அமோக விற்பனையாம். தமிழ் பிட்டு படங்களையே ஓரங்கட்டிவிட்டதாம்..

அசத்தலா சினிமா பாணியில எடிட்டிங் வேலையும், நகாசு வேலையும் செஞ்சு ரிலீஸ் பண்ணியிருக்குற இந்த வீடியோ கம்பெனியின் பெயர் 'சரவணா வீடியோ கேவரேஜாம்..' ஹி.. ஹி.. ஹி...!

--------------------------------------------------------------

வலையுலகத்திற்கு ஒரு புதிய வரவு..!

வலையுலகில் திரைப்படத் துறையைப் பற்றி பல்வேறு பதிவர்கள் தங்களுடைய கண்ணோட்டங்களைப் பகிர்ந்து வரும் வேளையில் திரைப்பட பத்திரிகையாளரும், விமர்சகரும், ஆய்வாளரும், எழுத்தாளருமான திரு.ஜெ.பிஸ்மியும் நமது வலைத்தளத்தில் ஒரு உறுப்பினராக இணைந்துள்ளார்.

திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளில் பல வருட அனுபவம் பெற்றவரான இவருடைய பார்வை நிச்சயம் நமக்கு புதிதாக இருக்கும். பல்வேறு தகவல்களையும், திரைத்துறை சம்பந்தமான செய்திகளையும் தொகுத்து வழங்கும் இவரது தளம் இது. www.jbismiblog.blogspot.com

இன்னமும் இவர் எந்தத் திரட்டியிலும் இணையாததால் பதிவர்கள் பலரின் பார்வைக்குப் படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு சின்ன அறிமுகம்.

----------------------------------------------

கில்லாடி எம்.எல்.ஏ.!

அரசியல் அரங்கில் ஒரு திடீர் அதிரடி சினிமாக் கதை நடந்தேறியுள்ளது. வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சி.ஞானசேகரன் 'விடுதலைச் சிறுத்தைகளை காங்கிரஸ் கூட்டணிக்குள் சேர்க்கக் கூடாது' என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார். கலைஞர் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இவருக்குப் பதிலளித்திருக்கும் கலைஞர் 'ஞானசேகரன் அ.தி.மு.க. முன்னாள் மந்திரி ஒருவருக்கு சம்பந்தி ஆகப் போவதால் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு மறைமுகமாகப் போராடுகிறார்..' என்று சாடியிருக்கிறார். என்னடா இது புதுமையாக உள்ளதே என்று விசாரித்தால்.. கொஞ்சம் சினிமாக் கதையும் நிரம்பியிருக்கிறது.

ஞானசேகரனின் மகன் நவீன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். உடன் படிக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தம்பித்துரையின் மகளை அவர் காதலிக்கிறாராம். இந்தக் காதலுக்கு ஞானசேகரன் தரப்பில் நோ அப்ஜெக்ஷன். ஆனால் தம்பித்துரை தரப்பில்தான் மறுப்பு பலமாக எழுந்துள்ளதாம்.

பையனின் காதலை வாழ வைக்க வேண்டி வீட்டுக்குள் இருக்கும் விஷயத்தை லேசாக லீக் செய்துவிட்டு, இப்போது தனக்கு முழு சம்மதம் என்றும் விரைவில் கல்யாணம் நடக்கும் என்றும் ஞானசேகரனே சொல்லிவிட்டார். கூடவே தம்பித்துரையிடம் மகனின் காதல் விஷயமாகப் பேசியதையே நிச்சயத்தார்த்தமே நடந்தேறிவிட்டதாகவும் போகிற போக்கில் சொல்லி பற்ற வைத்துவிட்டார் கில்லாடி எம்.எல்.ஏ. இதைச் சற்றும் எதிர்பார்க்காத தம்பித்துரை ஆடிப் போயிருக்கிறார். இப்படி கிடுக்குப்பிடி போட்டால் ஊரார் பேச்சுக்காகவாவது தனது மகனின் காதலுக்கு சம்பந்தி ஒத்துக் கொள்வார் என்பது ஞானசேகரனின் ஐடியாவாம்.. சூப்பரா இல்ல..?

ஏற்கெனவே தர்மபுரி தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த தம்பித்துரை, இப்போது பா.ம.க. வரவால் தொகுதியும் கிடைக்காமல்போய், பின்னாலேயே இப்படியொரு சோகமும் சேர்ந்துவிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுடனான சம்பந்தி திருமணத்துக்கு அம்மாவை அழைக்க முடியுமா? என்ன..? பாவமான அப்பா..

ஏதோ காதலர்கள் ஒண்ணு சேர்ந்தா நல்லதுதான்.. வாழ்த்துவோம்..

--------------------------------------------------

எனதருமை கீபோர்டுக்கு ஒரு இரங்கற்பா..!


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக என்னுடன் ஓருடலாக இருந்து வந்த எனதருமை கீபோர்டு 4 நாட்களுக்கு முன் உயிரைவிட்டுவிட்டது. மானிட்டருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதைப் போல் இதற்கும் செலுத்த வேண்டியது எனது கடமைதான் என்றாலும், நாள் தள்ளிப் போய்விட்டதால் இங்கே 'கருமாதி'யை மட்டும் செய்து கொள்கிறேன். அதன் ஆத்மா சாந்தியாகட்டும்.

உலகப் பொருளாதாரத்தின் ஏற்றம் காரணமாக, எனது அலுவலகத்தில் சம்பளம் கொடுத்து 3 மாதங்களாகிவிட்டாலும் கையில் இருந்த கடைசி கையிருப்பையும் காலி செய்ய வேண்டிய கட்டாயம். கீபோர்டு இல்லையேல் எனது கையை இல்லாதது போல் தோன்றுகிறது. என்ன செய்ய..?

புத்தம்புது டிவிஎஸ் கோல்டு கீ போர்டை ரிச்சி தெருவில் வாங்கினேன். விலை 1400 என்று சொல்லி, ரேட்டை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து 1100-க்கு வாங்கினேன். விலை உயர்ந்தது என்றாலும் தட்டச்சிற்கு மிகச் சிறந்த கீபோர்டு இதுதான். சும்மா கீல கையை வைச்சா பஞ்சா பறக்குதுல்ல..

பதிவர்கள் புதிதாக கீபோர்டு வாங்குவதாக இருந்தால் செலவு அதிகமானாலும் பரவாயில்லை.. தயவு செய்து இதனை வாங்கிப் பாவியுங்கள்.. ஒரு நாளைக்கு நாலு பதிவுகூட நீங்க போட முடியும்..

-----------------------------------------------

நியூட்டன் விதியின் 'விதி!'




'நியூட்டனின் மூன்றாம் விதி' என்கிற திரைப்படம் தயாரித்து அனைத்துப் பின் இயக்க வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகியும் படம் திரைக்கு இன்னமும் வந்தபாடில்லை. காரணம் விசாரித்தால் கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதற்கு முன்னால் 'மச்சக்காரன்' என்றொரு திரைப்படத்தைத் தயாரித்தார். 'திருட்டுப் பயலே' படத்தின் வெற்றியால் ஜீவனின் மார்க்கெட் சற்று உயர்ந்திருந்தால், அந்தத் திரைப்படத்தை அகோரமான விலைக்கு விற்றுவிட்டார்கள். விநியோகஸ்தர்களும் சபலப்பட்டு அதனை வாங்கிவிட்டார்கள். ஆனால் படம் திருட்டு விசிடியில் மட்டுமே அமோகமாக ஓடியிருக்கிறது. வாங்கியத் தொகையில் பாதிகூட தேறவில்லையாம்.

'ஏதாவது பார்த்து பண்ணுங்க' என்று சொல்லி விநியோகஸ்தர்கள் உரிமையுடன் கேட்க தயாரிப்பாளர் 'அதான்.. முடிஞ்சு போச்சே.. பிஸினஸ்னா பிஸினஸ்தான்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். 'மவனே எங்களுக்கும் நேரம் வரும்டி' என்று காத்திருந்த விநியோகஸ்தர்கள், இப்போது இந்தப் படத்தின் ரிலீஸின்போது தங்கள் வித்தையைக் காட்டிவிட்டார்கள்.

"மச்சக்காரன்' படத்தின் நஷ்டத்திற்காக ஒரு குறிப்பிட்டத் தொகையை அளித்தாலோ அல்லது குறைத்துக் கொண்டாலோதான் இந்தப் படத்தை வாங்குவோம்.." என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தங்களுக்குள்ளேயே சிண்டிகேட் அமைத்து குரலெழுப்பிவிட்டார்களாம்..

ஏற்கெனவே தனது அடுத்தடுத்தப் படங்கள் காலைவாரிவிட்டதால் ஏதோ ஒருவித காவியம் ரேஞ்சுக்கு(புகைப்படத்தை மீண்டும் பார்க்கவும்) படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லும் படத்தின் கதாநாயகன் சூர்யாதான் பாவம்.. தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். படத்தை அடிமாட்டு ரேட்டுக்கு கேட்டால் தயாரிப்பாளர் எப்படி தருவார்..?

------------------------------------------------

என் சோகக் கதை..!

வலையில் வந்து மாட்டியும் தப்பிச் சென்றுள்ள சைக்கோ மறுபடியும் தனது வேலையை எனது 'போலிகள் ஜாக்கிரதை' பதிவில் காட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் செலவழித்து பாதி பின்னூட்டங்களை அழித்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பாகிவிட்டது. அப்படியே இருந்து தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்..! வேறு என்ன செய்வது..?!

இதுவரையில் கமெண்ட்டு மாடுரேஷனை தூக்கிவிட்டிருந்தேன். இப்போது வலைப்பதிவர்களுக்காக அதனை மறுபடியும் செட் செய்ய வேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை எனக்கு. காலை 9.30 மணிக்கு மேல் பதிவர்கள் இடும் பின்னூட்டங்களை வேலை முடிந்து, இரவு வீடு திரும்பித்தான் ரிலீஸ் செய்ய வேண்டி வரும்.. பதிவர்கள் பொறுத்தருளுக..

நன்றி

வணக்கம்..!

53 comments:

  1. //திடீரென்று ஏதோ பிட்டு படத்தில் வருவதைப் போல் அவர்களுடைய செய்கைகளும், நடன அசைவுகளும் வர.. திக்கென்றானது//

    முருகன் உங்களை சோதனை பண்றார்.
    வேலை கையில பிடிச்சிகிட்டு கம்முனு உட்காந்துகோங்க!

    ReplyDelete
  2. //தேவையெனில் அந்த ஊர்க்கார பெரிய மனுஷங்களுக்காக தனியிடத்தில் ஆதாம், ஏவாள் தோற்றத்திலும் ஒரு நடனம் ஆடிக் காட்டப்படுமாம்.//

    அதென்ன பெரிய மனுசங்களுக்கு மட்டும்!
    முதலாளித்துவம் ஒழிக!

    ReplyDelete
  3. //கோவில் திருவிழாக்களிலேயே இப்படி ஏற்பாடு செய்யப்பட்டால் எவனுக்கு பக்தி உண்மையாக வரும்..? //

    அண்ணே ஒரு உண்மைய சொல்லட்டா
    பிராத்தல் அதிகமாக நடக்குமிடம்
    பழனி
    திருத்தணி
    கோவையில் மருதமலை!

    ReplyDelete
  4. //கிராமப்புறங்கள் ஏதோ இந்த விஷயத்தில் பின்தங்கியிருக்கிறது என்கிறார்கள்.//

    முட்டாப்பயலுக எல்லாத்துகும் ஆரம்பமே கிராமம் தான்னு சொல்லுங்கண்ணே!

    ReplyDelete
  5. இந்த வீடியோ கம்பெனியின் பெயர் 'சரவணா வீடியோ கேவரேஜாம்..//

    முருகனுக்கு வருமானம் குறைஞ்சிருச்சு போல

    ReplyDelete
  6. கீபோர்டு இல்லையேல் எனது கையை இல்லாதது போல் தோன்றுகிறது. என்ன செய்ய..?//

    அப்போ அது கீபோர்டு இல்லை
    ”கைபோர்டு”

    ReplyDelete
  7. //காலை 9.30 மணிக்கு மேல் பதிவர்கள் இடும் பின்னூட்டங்களை வேலை முடிந்து, இரவு வீடு திரும்பித்தான் ரிலீஸ் செய்ய வேண்டி வரும்.. பதிவர்கள் பொறுத்தருளுக..//

    வந்தா சரி!
    எப்ப வந்தா என்ன?

    ReplyDelete
  8. குத்தாட்டம் பற்றி வெகுநாட்களுக்கு முன்னே, நக்கீரனோ - குமுதம் ரிப்போர்ட்டரோ - வாசித்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  9. நல்லா இருக்காண்ணே டான்ஸ், எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க பாப்போம்

    ReplyDelete
  10. உயிருடன் இருப்பதைத் தவிர.. தொடர்புக்கு : 98409-98725
    //


    அத்தான் இதுதான் உங்க போன் நம்பரா.?

    :)

    ReplyDelete
  11. //சிறந்த கீபோர்டு இதுதான். சும்மா கீல கையை வைச்சா பஞ்சா பறக்குதுல்ல.. //

    ஐய்யோ... முருகா...! எங்களை காப்பாத்து! :) :) :) :)

    ReplyDelete
  12. புது கீபோர்டெல்லாம் வாங்கிருக்கீங்க! ட்ரீட் வங்க!

    ReplyDelete
  13. இந்தக் கிராமத்துக் கலாச்சாரம் வந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன,சரவணன்.நீஙக்ள் வீடியோவில்தான் கிராமத்தைப் பார்ப்பீர்கள் போலிருக்கிறது.

    ReplyDelete
  14. //புத்தம்புது டிவிஎஸ் கோல்டு கீ போர்டை ரிச்சி தெருவில் வாங்கினேன். விலை 1400 என்று சொல்லி, ரேட்டை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து 1100-க்கு வாங்கினேன். விலை உயர்ந்தது என்றாலும் தட்டச்சிற்கு மிகச் சிறந்த கீபோர்டு இதுதான். சும்மா கீல கையை வைச்சா பஞ்சா பறக்குதுல்ல.. //

    நானும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். சென்ற ஜூலை மாதம் வாங்கினேன். ரூபாய் 1150. இப்பொழுது விலை குறைந்து விட்டதா அல்லது உங்கள் அளவிற்கு பேரம் பேசும் திறன் இல்லையா என்று தெரியவில்லை

    //பதிவர்கள் புதிதாக கீபோர்டு வாங்குவதாக இருந்தால் செலவு அதிகமானாலும் பரவாயில்லை.. தயவு செய்து இதனை வாங்கிப் பாவியுங்கள்.. ஒரு நாளைக்கு நாலு பதிவுகூட நீங்க போட முடியும்..//

    அதை விட முக்கியம். இதற்கு ஆயுள் அதிகம்.

    ReplyDelete
  15. அண்ணே.. அந்த டிவிடியை எடுத்து வச்சிருங்க.. எதை எதையோ பேசறீங்க.. இத எனக்கு சொல்ல மாட்டேங்க்கிறீங்களே.. சரி நான் நைட் வந்து வாங்கிக்கிறேன்.

    ReplyDelete
  16. ///வால்பையன் said...

    //கிராமப்புறங்கள் ஏதோ இந்த விஷயத்தில் பின்தங்கியிருக்கிறது என்கிறார்கள்.//

    முட்டாப்பயலுக.. எல்லாத்துகும் ஆரம்பமே கிராமம்தான்னு சொல்லுங்கண்ணே!///

    இல்ல வாலு.. நகரத்துல ஆரம்பிச்சு இப்ப கிராமத்துல வேலையைக் காட்டுது..

    நகரத்துல இதை நடத்த முடியாது.. ஏன்னா உடனுக்குடன் 'கவனிப்பு' இருக்கும். கிராமம்னா அப்படி இல்லீல்ல.. அவங்களுக்குள்ளேயே வைச்சுக்குவாங்க.. அதான் சக்கைப் போடு போடுது இந்த பிஸினஸ்..!

    ReplyDelete
  17. ///வால்பையன் said...
    இந்த வீடியோ கம்பெனியின் பெயர் 'சரவணா வீடியோ கேவரேஜாம்..//

    முருகனுக்கு வருமானம் குறைஞ்சிருச்சு போல.///

    பாருங்க.. இவுங்களால வீணா என் பேர் கெடுது.. கொடுமை..

    ReplyDelete
  18. ///வால்பையன் said...

    கீபோர்டு இல்லையேல் எனது கையை இல்லாதது போல் தோன்றுகிறது. என்ன செய்ய..?//

    அப்போ அது கீபோர்டு இல்லை.
    ”கை போர்டு”///

    நல்ல பேராத்தான் இருக்கு வாலு.. அப்படிகூட கூப்பிடலாம்..! கைக்கும், அதுக்குந்தான் எம்புட்டு பிரண்ட்ஷிப்பு..!

    ReplyDelete
  19. ///வால்பையன் said...

    //காலை 9.30 மணிக்கு மேல் பதிவர்கள் இடும் பின்னூட்டங்களை வேலை முடிந்து, இரவு வீடு திரும்பித்தான் ரிலீஸ் செய்ய வேண்டி வரும்.. பதிவர்கள் பொறுத்தருளுக..//

    வந்தா சரி! எப்ப வந்தா என்ன?///

    உடனுக்குடன் பி்ன்னூட்டங்கள் வந்து திரட்டிகளில் ரவுண்டு வந்தால்தான் நிறைய பதிவர்களால் படிக்க முடியும்.. கெடுக்குறானே பாவி..!

    உடனுக்குடன், சூட்டோடு சூடாக பின்னூட்டங்களை வாரி வழங்கியமைக்கு.. நன்றிகள் வாலு..

    ReplyDelete
  20. ///gulf-tamilan said...
    thanks for talking :)))///

    நான்தான் ஸார் தேங்க்ஸ் சொல்லணும்..

    உங்களுடன் பேசியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..

    இந்த வாரத்தில் நிச்சயம் நேரில் சந்திப்போம்..

    ReplyDelete
  21. அவருடைய அன்புத் தொல்லையால் பார்க்க வேண்டியதாகிவிட்டது.///

    நெஞ்சுல கை வச்சி சொல்லு அவருதான் அன்புத்தொல்லை குடு்த்தாருன்னு, சரி சீடி எடுத்து வை வீட்டுக்கு வரேன்

    ReplyDelete
  22. //நாள் தள்ளிப் போய்விட்டதால் //

    ஹி ஹி ஸ்வீட் கொடுத்து நல்ல சேதியை சொல்லுங்க அண்ணாச்சி!

    ReplyDelete
  23. //ஒரு நாளைக்கு நாலு பதிவுகூட நீங்க போட முடியும்//

    உங்களை போலா? அப்படி என்றால் அதுதான் எங்களுக்கு ஒரு மாதத்துக்கு பதிவு!

    ReplyDelete
  24. //ஊர் சுற்றி said...
    குத்தாட்டம் பற்றி வெகுநாட்களுக்கு முன்னே, நக்கீரனோ - குமுதம் ரிப்போர்ட்டரோ - வாசித்ததாக ஞாபகம்.//

    எனக்கும் இப்போதுதான் லேசுபாசாக ஞாபகம் வருகிறது ஸார்..

    நக்கீரன் என்று நினைக்கிறேன்..!

    தகவலுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  25. //குடுகுடுப்பை said...

    நல்லா இருக்காண்ணே டான்ஸ், எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க பாப்போம்//

    எதுக்கு டான்ஸ் ஆடுறதுக்கா..? ஐயா சாமி நான் அந்த மாதிரி டான்ஸ் குரூப்பெல்லாம் நடத்தீங்க ஐயா..

    ReplyDelete
  26. ///நமிதா...! said...

    உயிருடன் இருப்பதைத் தவிர.. தொடர்புக்கு : 98409-98725//

    அத்தான் இதுதான் உங்க போன் நம்பரா.?:)///

    அத்தானா..? என்ன பொத்தான் வேண்டிக்கிடக்கு.. தமிழை விட்டுட்டு மலையாளத்துக்கு போறியாம்ல..

    போ.. போ.. நீ என்னதான் ஆடுனாலும் மலபார் கரையோரம் எங்க சங்கத் தலைவி ஷகிலாவை அசைச்சுக்கவும் முடியாது.. அடிச்சுக்கவும் முடியாதாக்கும்..!

    ReplyDelete
  27. ///ஹாலிவுட் பாலா said...

    //சிறந்த கீபோர்டு இதுதான். சும்மா கீல கையை வைச்சா பஞ்சா பறக்குதுல்ல.. //

    ஐய்யோ... முருகா...! எங்களை காப்பாத்து! :) :) :) :)///

    அவன்தான என்னையும் காப்பாத்தணும்.. ஒரே நேரத்துல ரெண்டு எதிரிகளை எப்படி அவன் காப்பாத்துவான்..?

    ஒண்ணு நானு..? இல்லாட்டி நீங்க..?

    ReplyDelete
  28. //pappu said...
    புது கீபோர்டெல்லாம் வாங்கிருக்கீங்க! ட்ரீட் வங்க!//

    அதுக்கு மொதல்ல நேர்ல வரணும் பாப்பு..

    ReplyDelete
  29. //ஷண்முகப்ரியன் said...
    இந்தக் கிராமத்துக் கலாச்சாரம் வந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன சரவணன். நீஙக்ள் வீடியோவில்தான் கிராமத்தைப் பார்ப்பீர்கள் போலிருக்கிறது.//

    இல்ல ஸார்..

    கரகாட்டத்தில்கூட கலையுணர்வோடு ஆடுபவர்கள் இருக்கிறார்கள். சிற்சில இடங்களில்தான் கரகாட்டம் வேறு மாதிரியாக இருக்கும்.

    ஆனால் இது அதையெல்லாம் தாண்டிவிட்டது.

    ReplyDelete
  30. ///புருனோ Bruno said...

    //புத்தம்புது டிவிஎஸ் கோல்டு கீ போர்டை ரிச்சி தெருவில் வாங்கினேன். விலை 1400 என்று சொல்லி, ரேட்டை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து 1100-க்கு வாங்கினேன். விலை உயர்ந்தது என்றாலும் தட்டச்சிற்கு மிகச் சிறந்த கீபோர்டு இதுதான். சும்மா கீல கையை வைச்சா பஞ்சா பறக்குதுல்ல.. //

    நானும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறேன். சென்ற ஜூலை மாதம் வாங்கினேன். ரூபாய் 1150. இப்பொழுது விலை குறைந்து விட்டதா அல்லது உங்கள் அளவிற்கு பேரம் பேசும் திறன் இல்லையா என்று தெரியவில்லை.///

    கிட்டத்தட்ட 13 கடைகள் ஏறி இறங்கி விசாரித்துதான் வாங்கினேன் டாக்டர்..

    ஆனா பாருங்க.. எல்லா கடையிலேயும் இதே ரேட்டுதான் சொன்னாங்க.. பேரம் பேசி குறைத்து வாங்கினாலும், பில்லுல 1400 ரூபான்னுதான் போட்டுக் கொடுத்தாங்க.. இதை என்னன்னு சொல்றது..?

    //பதிவர்கள் புதிதாக கீபோர்டு வாங்குவதாக இருந்தால் செலவு அதிகமானாலும் பரவாயில்லை.. தயவு செய்து இதனை வாங்கிப் பாவியுங்கள்.. ஒரு நாளைக்கு நாலு பதிவுகூட நீங்க போட முடியும்..//

    அதைவிட முக்கியம். இதற்கு ஆயுள் அதிகம்.///

    உண்மைதான் டாக்டர்.. நான் முன்பு பயன்படுத்தியதே 5 வருடங்கள் தாக்குப் பிடித்தது மிக அதிகம். அவ்வளவு இம்சை பண்ணியிருக்கேன். வாய் இருந்தால்கூட அழுதிருக்கும்.. பாவம்.. போய்ச் சேர்ந்திருச்சு..

    ReplyDelete
  31. //Cable Sankar said...
    அண்ணே.. அந்த டிவிடியை எடுத்து வச்சிருங்க.. எதை எதையோ பேசறீங்க.. இத எனக்கு சொல்ல மாட்டேங்க்கிறீங்களே.. சரி நான் நைட் வந்து வாங்கிக்கிறேன்.//

    நினைச்சேன்யா.. நீ கண்டிப்பா இதைக் கேப்பேன்னு..!

    ReplyDelete
  32. //jackiesekar said...
    அவருடைய அன்புத் தொல்லையால் பார்க்க வேண்டியதாகிவிட்டது.///

    நெஞ்சுல கை வச்சி சொல்லு அவருதான் அன்புத்தொல்லை குடு்த்தாருன்னு, சரி சீடி எடுத்து வை வீட்டுக்கு வரேன்.///

    அடப்பாவி ஜாக்கி.

    வயித்து வலில சுருண்டு படுத்திருக்கேன்யான்னு சொன்னா வீட்டுக்கு வந்து பார்க்கத் தோணலை.. இப்ப சிடி கேக்குதோ..?

    ReplyDelete
  33. ///குசும்பன் said...

    //நாள் தள்ளிப் போய்விட்டதால் //

    ஹி ஹி ஸ்வீட் கொடுத்து நல்ல சேதியை சொல்லுங்க அண்ணாச்சி!///

    மவனே.. உன்னையெல்லாம்..! எல்லாம் என் நேரம்.. என் நேரம்.. என்னத்த சொல்றது..?

    ReplyDelete
  34. ///குசும்பன் said...

    //ஒரு நாளைக்கு நாலு பதிவுகூட நீங்க போட முடியும்//

    உங்களை போலா? அப்படி என்றால் அதுதான் எங்களுக்கு ஒரு மாதத்துக்கு பதிவு!///

    இந்தக் குசும்பெல்லாம் வேண்டாம் கண்ணு..

    என்னையவே தூக்கிச் சாப்பிடுற மாதிரியான பதிவெல்லாம் தமிழ்மணத்துல வருது..

    நல்லா கண்ணை உத்துப் பாரு..!

    ReplyDelete
  35. //பல்வேறு தகவல்களையும், திரைத்துறை சம்பந்தமான செய்திகளையும் தொகுத்து வழங்கும் இவரது தளம் இது. www.jbismiblog.blogspot.com //


    அந்தணனோட பதிவ படிச்சீங்களா தல, டி ராஜேந்தரை பற்றி அவர் எழுதியுள்ளது எல்லாமே கலக்கல். படிக்க http://adikkadi.blogspot.com/

    ReplyDelete
  36. "எனது அலுவலகத்தில் சம்பளம் கொடுத்து 3 மாதங்களாகிவிட்டாலும் கையில் இருந்த கடைசி கையிருப்பையும் காலி செய்ய வேண்டிய கட்டாயம்."

    வருமையின் நிறம் சிகப்புதான் - என்று
    பதிவின் முடிவில்
    படிப்போரின்நெஞ்சில்
    உந்தன் சொல்லின் வலி...... நண்பா
    என்னில் கண்ணில் வந்தது நீர் துளி...

    ReplyDelete
  37. ///Bleachingpowder said...

    //பல்வேறு தகவல்களையும், திரைத்துறை சம்பந்தமான செய்திகளையும் தொகுத்து வழங்கும் இவரது தளம் இது. www.jbismiblog.blogspot.com //

    அந்தணனோட பதிவ படிச்சீங்களா தல, டி ராஜேந்தரை பற்றி அவர் எழுதியுள்ளது எல்லாமே கலக்கல். படிக்க http://adikkadi.blogspot.com///

    2 நாட்களுக்கு முன்பே படித்துவிட்டேன்.. இந்தப் பதிவை எழுதும்போது முகவரியைத் தேடினேன்.கிடைக்கவில்லை. சரி. அடுத்த வாரம் எழுதிக் கொள்ளலாம் என்று இருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்..

    மிக்க நன்றி ஸார்.!

    ReplyDelete
  38. ///♠புதுவை சிவா♠ said...
    "எனது அலுவலகத்தில் சம்பளம் கொடுத்து 3 மாதங்களாகிவிட்டாலும் கையில் இருந்த கடைசி கையிருப்பையும் காலி செய்ய வேண்டிய கட்டாயம்."

    வருமையின் நிறம் சிகப்புதான் - என்று பதிவின் முடிவில்
    படிப்போரின் நெஞ்சில்
    உந்தன் சொல்லின் வலி...... நண்பா
    என்னில் கண்ணில் வந்தது நீர் துளி...///

    நன்றி நண்பா.

    உற்ற நேரத்தில் தோள் கொடுப்பதுதான் நட்பின் இலக்கணும்..

    உங்களது ஆதரவான, ஆறுதலான வார்த்தைகளில் இதம் கண்டடைகிறேன்..

    மிக்க நன்றி.!

    ReplyDelete
  39. இந்த அருவெறுக்கத் தக்க நிகழ்வு இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது!
    உண்மைத் தமிழன் சார் இந்தப் பதிவைப் பாருங்கள்!

    http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_21.html

    ReplyDelete
  40. ///ஜோதிபாரதி said...
    இந்த அருவெறுக்கத் தக்க நிகழ்வு இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது!

    உண்மைத் தமிழன் சார் இந்தப் பதிவைப் பாருங்கள்!

    http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_21.html///

    பார்த்தேன் ஜோதி ஸார்..

    படிப்பறிவில்லாத மக்களிடம் மூளைச் சலவை செய்யும் செயல்தான் இவர்கள் செய்வது.

    இதைப் பார்த்துவிட்டு பதின்ம வயது இளைஞர்களும், இளைஞிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து செய்யும் செயல்கள் அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல.. அந்தச் சமூகத்திற்கே ஒரு இழுக்காகப் போய்விடுகிறது..

    தடுக்க வேண்டிய நமது சட்டப்புலிகள் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அவர்களும் வேடிக்கைதான் பார்க்கிறார்களாம்..

    கொடுமை..

    ReplyDelete
  41. //சிடி முழுவதையும் பார்த்தேன்//

    தெரியுமே!

    ReplyDelete
  42. அதை நானும் பாக்கனுமே......

    ReplyDelete
  43. ///நாமக்கல் சிபி said...

    //சிடி முழுவதையும் பார்த்தேன்//

    தெரியுமே!///

    என்ன தெரியுமே..? முதல் இரண்டு பாடல்களைப் பார்த்தவுடனேயே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துவிட்டேன். அதனால் கடைசிவரையிலும் தொடர்ந்து பார்த்தேன். இதிலென்ன தவறு.?!

    அப்பனே.. உன் உள்ளடி வேலையையெல்லாம் என் பக்தனிடம் வைத்துக் கொள்ளாதே.. வேறு எந்தக் குமரனிடமாவது வைத்துக் கொள்..

    இப்படிக்கு
    பழனி மலை கோவணான்டி..!

    ReplyDelete
  44. //அத்திரி said...

    அதை நானும் பாக்கனுமே......//

    ஆசையைப் பாரு..

    அப்படியே குமட்டுல குத்தினேன்னா எட்டுப் பல்லும் தெறிச்சிருமாக்கும்..

    இதெல்லாம் சின்னப் புள்ளைக பார்க்கக் கூடாது..

    ReplyDelete
  45. ஏம்ப்பா..

    இம்புட்டு பேரு வந்து படிச்சீங்களே.. ஒரு பத்து பேராவது அந்தக் கருவிப் பட்டையில பிடிச்சிருக்குன்னு குத்தக் கூடாதா.. அது பாட்டுக்கு 2-லேயே நின்னு மானத்தை வாங்குது..!

    ஒவ்வொரு தடவையும் சொல்லணுமா..? என்ன பிள்ளைகளப்பா நீங்க..?!

    ReplyDelete
  46. இப்டி நாலு பக்கம் பதிவ போடுங்க வெலங்கிடும்..
    எங்களமாதிரி கிராமத்துல இருக்கரவுகளுக்கு இருக்குற இந்த ஒரு திருவிழா கொண்டாட்டத்துக்கும் இரும்புல ஆப்பு செஞ்சு வேச்சுடுவிங்க போல..

    ReplyDelete
  47. ///வால்பையன் said...

    //திடீரென்று ஏதோ பிட்டு படத்தில் வருவதைப் போல் அவர்களுடைய செய்கைகளும், நடன அசைவுகளும் வர.. திக்கென்றானது//

    முருகன் உங்களை சோதனை பண்றார். வேலை கையில பிடிச்சிகிட்டு கம்முனு உட்காந்துகோங்க!///

    அப்படித்தான் உக்காந்திருந்தேனாக்கும்..!

    ReplyDelete
  48. ///வால்பையன் said...

    //தேவையெனில் அந்த ஊர்க்கார பெரிய மனுஷங்களுக்காக தனியிடத்தில் ஆதாம், ஏவாள் தோற்றத்திலும் ஒரு நடனம் ஆடிக் காட்டப்படுமாம்.//

    அதென்ன பெரிய மனுசங்களுக்கு மட்டும்! முதலாளித்துவம் ஒழிக!///

    சில்லரை எங்கே இறக்கப்படுதோ அங்கதான் எல்லாத் தொழிலும் இறக்குமதி செய்யப்படும்.

    இதுதான் முதலாளித்துவத்தின் தத்துவம்..!

    ReplyDelete
  49. ///வால்பையன் said...

    //கோவில் திருவிழாக்களிலேயே இப்படி ஏற்பாடு செய்யப்பட்டால் எவனுக்கு பக்தி உண்மையாக வரும்..?//

    அண்ணே ஒரு உண்மைய சொல்லட்டா.. பிராத்தல் அதிகமாக நடக்குமிடம் பழனி, திருத்தணி
    கோவையில் மருதமலை!///

    நானும் கேள்விப்பட்டேன்..

    ஏன் இப்படி? பக்தித் தளங்கள் இதற்கும் பக்தித் தளங்களான மர்மம் என்ன..? யோசிக்க வேண்டிய விஷயம்..!

    ReplyDelete
  50. //சுரேஷ் குமார் said...
    இப்டி நாலு பக்கம் பதிவ போடுங்க வெலங்கிடும்..
    எங்களமாதிரி கிராமத்துல இருக்கரவுகளுக்கு இருக்குற இந்த ஒரு திருவிழா கொண்டாட்டத்துக்கும் இரும்புல ஆப்பு செஞ்சு வேச்சுடுவிங்க போல//

    தம்பி சுரேஷ்குமார் இதுவா கோவில் திருவிழா..?

    கேக்குறதுக்கே நல்லாயில்லையே.. பாக்குறதுக்கு நல்லாவா இருக்கும்..!

    இதெல்லாம் ரொம்பத் தப்பு.. சொன்னாக் கேக்கணும்..!

    ReplyDelete