Pages

Saturday, March 21, 2009

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-21-03-2009

21-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பரந்த முதுகு.. யார்..?

இந்த பரந்த முதுகுக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்தவுடன் சொல்லுங்களேன்..


உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது எனில் நீங்கள் உடனடியாக கோடம்பாக்கத்திற்குள் எந்த ரூபத்திலும் பிரவேசிக்கலாம்.. தெரியாதவர்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டு கடைசிக்கு வரவும்.



கிழக்குப் பதிப்பக புத்தகங்களுக்குத் தடை


நேற்று முன்தினப் பத்திரிகைகளில் ஒரு குட்டிச் செய்தி ஒன்று வந்திருந்தது. வலையுலகத்தினர் கவனித்தார்களா என்று தெரியவில்லை. தி.நகரில் ஒரு கல்யாண மண்டபத்தில் கிழக்குப் பதிப்பகம் அமைத்திருந்த புத்தக கண்காட்சியில் பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகங்களை வைக்கக்கூடாது என்று சொல்லி பறிமுதலோ அல்லது வைக்கவிடாமல் தடுத்தோ மறுபடியும் ஒரு முட்டாள்தனத்தை செய்திருக்கிறது நமது சென்னை மாநகரக் காவல்துறை.

செய்தித்தாள்களில்கூட கிழக்குப் பதிப்பகத்தின் பெயர் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். பதிப்பகம் தெரிந்தால் போன் செய்து என்ன புத்தகம் என்று விசாரித்து வாங்கி விடுவார்களே என்பதால்தானாம்..

பத்ரி ஸாரும், இட்லிவடையும், அஞ்சாநெஞ்சன் பா.ராகவனும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏதாவது கூக்குரலோ, கலகக் குரலோ, ஆட்சேபணைக் குரலோ எழுப்பினால் சமர்த்துப் பிள்ளையாக வெளியில் இருந்து ஆதரவுத் தரலாம் என்று பார்க்கிறேன்.. இப்படி நம்ம விஜயகாந்த் மாதிரி கமுக்கமா இருந்தா நாம என்ன செய்யறது..?


தமிழால் வாழ்வு..!

உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, எனது அலுவலகத்தையும் தாக்கிவிட்டது. குற்றாலத்தில் இடி இடித்து குளித்தலையில் மழை பேய்ந்த கதைதான்.. 400 பேர் வேலை பார்த்த அலுவலகத்தில் இப்போது வெறும் 60 பேர்தான் உள்ளோம்.

சென்ற வாரம் ஒரு ஊழியர் தனக்குத் திருமணம் என்று சொல்லி வாய்கொள்ளாச் சிரிப்புடனும், கொஞ்சம் வெட்கத்துடனும் கல்யாணப் பத்திரிகையை கொடுத்தார். மறுநாளே அவரை அழைத்து இன்று மாலைக்குள் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறும்படி சொல்லிவிட்டார்கள்.

பார்க்க பாவமாக இருந்தது.. வாங்குகின்ற சம்பளமே எட்டாயிரம்தான்.. இதனை நம்பித்தான் திருமணமே செய்கிறார். என்ன செய்வது..? விதியோ, மதியோ கஷ்டமெல்லாம் தொடர்வது கஷ்டப்படுகிறவர்களைத்தான்..

எனது வேலைப் பிரிவிலும் ஆட்குறைப்பு ஜெகஜோதியாக நடந்தேறி இப்போது 5 பேர் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் 4 பேர் ஓகே.. தேவையானவர்கள்தான். தேவையில்லாத நான் ஒருவன் எதற்கு..? யோசித்தேன்.. யோசித்தேன்.. விடை கிடைக்கவில்லை. பொறுக்க மாட்டாமல் வாய்விட்டு கேட்டேவிட்டேன்.. பதில் வந்தது.. “தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரே ஆள் நீங்கதான்.. எப்படி விடுறது..?”

வாழ்க தமிழன்னை..


ரஹ்மானின் பாராட்டு விழா என்னாச்சு..?


வாராது வந்த மாமணி போல் முதல் முறையிலேயே 2 ஆஸ்கார் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்ச் சினிமாவுலகம் இன்னமும் முறைப்படியான பாராட்டுவிழா நடத்தவில்லை.

இசையமைப்பாளர்கள் சங்கத்தினர் மட்டுமே தங்களது பிள்ளைக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். மற்றபடி அரசுத் தரப்புக்கு இப்போதைக்கு இதில் ஆர்வமில்லையாம்.. விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற அமைச்சர் பரிதிக்கு ரஹ்மான் தரப்பில் இருந்து சரியான வரவேற்பும், மரியாதையும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதோடு கூடவே தேர்தல் வேலைகள் நடப்பதாலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

கலைஞரை அழைக்காமலோ, அல்லது அவரை விட்டுவிட்டோ எப்படி நிகழ்ச்சியை நடத்துவது என்று திரையுலகத் தலைகளுக்குக் குழப்பம். அவருக்கோ உடல் நிலை சரியில்லை என்பதாலும், விழா என்றால் 4 மணி நேரமாவது அவரை அமர வைத்திருக்க வேண்டுமே என்பதாலும் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். எப்படியும் கலைஞர் டிவிக்குத்தான் ஒளிபரப்பு உரிமை தரப்பட வேண்டி வரும். கலைஞர் இல்லாமல் எப்படி என்று யோசிக்கிறார்களாம் கலைஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள்.. ரஹ்மானும் கலைஞரை வீடு தேடிப் போய் இன்னமும் பார்க்கவில்லை என்பதும் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறதாம்.. பாவம் ரஹ்மான்.. அவருக்கு இந்த அரசியலெல்லாம் தெரியுமா என்ன..?

ரஹ்மானோ பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் அழைத்த பாராட்டு விழா அழைப்புகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, தினமும் ஒவ்வொரு ஊருக்கு நேர்த்திக் கடன் என்று சொல்லித் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

"உச்ச நடிகர்களும், பிரபலங்களும் ரஹ்மானின் வீடு தேடிப் போய் வாழ்த்தியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு போனிலேயே பாதிப் பேர் வாழ்த்துச் சொல்லி அவரை அவமானப்படுத்திவிட்டார்கள்.. இந்நேரம் கமலஹாசனுக்கு இந்த விருது கிடைத்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா..?" என்று இசைக் கலைஞர் ஒருவர் வடபழனியில் ‘சுதி' ஏறிய நிலையில் சங்கத்து வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் கேக்குறதுக்கு யாருக்கு இங்க நேரமிருக்கு..?


செல்போன் வாங்கும்போது எச்சரிக்கை..!



நண்பன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்போது எனது செல்போன் தொலைந்துவிட்டது.. தேடித் தேடி வாங்கி வைத்திருந்த பலருடைய எண்களும் போய்விட்டன. தொலைந்த பின்புதான் ஏதாவது நோட்டில் எழுதி வைத்திருக்கலாமே என்ற யோசனையே வந்தது. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்..

புதிய செல்போன் வாங்கும் அளவுக்கு நமக்கு பொருளாதார வசதி இல்லாததால் பழைய செகண்ட் ஹேண்ட் போன் ஒன்று வாங்கினேன். தொலைந்தது நோகியோ.. புதியது சாம்சங்.. தேவையான பலரையும் சகல விதங்களிலும் தொடர்பு கொண்டு அவர்களது எண்களை வாங்கி புது செல்போனில் பதிவு செய்தேன். இதற்கே 15 நாட்கள் ஆகிவிட்டது. ஓரளவுக்கு தொடர்பானவர்களின் எண்கள் கிடைத்து கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தேன்.

சமீபத்தில் கோவில், கோவிலாக ஊர் சுற்றும்போது எடுத்த கோவில் புகைப்படங்களை புளூடூத் மூலமாக கணினியில் சேமிக்க முயற்சித்தேன். அப்போது ஏதோ ஒரு பாஸ்வேர்டை கேட்டது. வழக்கம்போல 0000 என்று முயற்சித்தேன். பாஸ்வேர்டு தவறு என்று வந்தது.

வாங்கிய கடையில் கேட்டேன். "ஒரிஜினல் முதலாளியிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்கள். செல்போன் சர்வீஸ் கடையில் விசாரித்தேன். "சிஸ்டத்தை பார்மட் செய்துவிட்டால் பழையபடி பாஸ்வேர்டு 0000 என்று வந்துவிடும்" என்றார்கள். திடீர் சந்தோஷத்தில் நானும் "செய்யுங்கள்" என்றேன்.. ஊழியரும் கச்சிதமாக செல்போனை சுத்தமாகத் துடைத்து எடுத்துக் கையில் கொடுத்தார்.

வாங்கிய வேகத்தில் போன் செய்ய நினைத்து contacts-ற்குள் போனால் சுத்தமாக காலியாக இருக்கிறது. சிம்கார்டில் குறைவான இடங்கள்தானே உள்ளது. சிஸ்டத்தில் அதிகம் உள்ளதே என்று நினைத்து நேற்றுத்தான் சிம்கார்டில் இருந்து அனைத்து தொடர்பு எண்களையும் சிஸ்டத்திற்கு மாற்றியிருந்தேன். ஆர்வக் கோளாறில் அந்த நேரத்தில் இதனைச் சுத்தமாக மறந்து தொலைத்துவிட்டேன்.. இப்போது எனது குடும்பத்தினரின் எண்ணே எனக்குத் தெரியவில்லை..

இதுதான் சனி பகவானின் 'அடித்துத் துவைப்பது' என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். சரியாகத்தான் இருக்கிறது..


ஷகிலா படத்தில் நமது சக வலைப்பதிவர்!


டிவி ரிமோட்டை அழுத்திக் கொண்டே வந்ததில் கே டிவியில் சத்யராஜும், கவுண்டமணியும் ஏதோ நக்கல் செய்து கொண்டிருந்தார்கள். அவசரம், அவசரமாக மிஷினை எடுத்துக் காதில் வைத்துவிட்டு படம் பார்க்க உட்கார்ந்தேன்.

படம் 'சுயேட்சை எம்.எல்.ஏ.' இல்லாத அட்டூழியங்களையெல்லாம் செய்துவிட்டு சமத்துப் பையனாக அமர்ந்திருக்கும் சத்யராஜை, போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்ய வருகிறார். அந்த அதிகாரியை குளோஸப்பில் பார்த்தபோது "எங்கிட்டோ பார்த்த மாதிரியிருக்குதே.." என்று எனக்கு சந்தேகம் வந்தது. சத்யராஜ் அமைதியாக அவருடன் எழுந்து வெளியே வருகிறார்.

அடுத்தக் காட்சியில் கோர்ட்டில் கூண்டில் ஏறி மைமிங்கில் தான் எடுத்த நடவடிக்கைகளைச் சொல்கிறார் அந்த 'சோடாபுட்டி' அதிகாரி. இப்போது ஆள் யாரென்று நன்கு தெரிந்தது.

நீதிபதியிடம் தான் வைத்திருந்த பணத்தினை டிரக் ஒன்றில் போட்டு கொண்டு வந்து காட்டுகிறார் சத்யராஜ். கோர்ட்டுக்கு வெளியே நீதிபதியை அழைத்து வந்து அதனைக் காட்டி விளக்கமளிக்கிறார் அந்த அதிகாரி.

எதுக்கு இம்புட்டு பெரிய சஸ்பென்ஸ்ங்குறீங்களா..? இப்படியெல்லாம் செஞ்சாத்தான நாலு பேரு படிக்கிறீங்க.. அந்த அதிகாரி.. அட நம்மாளுதாங்க.. நம்ம கேபிள் சங்கரு.. இது மாதிரி சின்னச் சின்ன கேரக்டர்ல நிறைய படத்துல நடிச்சிருக்காராம் துரை.. இப்பத் தெரிஞ்சுக்குங்க..

கோர்ட்டு சீன்ல மந்த்ராவின் முக குளோஸப் காட்சிகள் மட்டுமே தெரிகின்றன. வேறு ஒன்றையும் காணவில்லையே என்று யோசித்து இயக்குநரிடம் கேட்டபோது, "ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி ஷூட்டிங்னு ரொம்பக் கஷ்டத்துல எடுத்த படம் இது.. கடைசி ஷெட்யூல் எடுத்தப்ப மந்த்ராவுக்கு கல்யாணமாகி, உண்டாகி, குண்டாகி வந்து நின்னாங்க.. என்னத்த செய்யறது? அதான் உக்கார வைச்சு 'அப்படி உக்காரும்மா..' 'இப்படி உக்காரும்மா..' 'இந்தப் பக்கம் திரும்பும்மா' என்று சொல்லி அஞ்சு ஷாட் எடுத்து முடிச்சேன்.." என்கிறார். இவர் கஷ்டம் இவருக்கு..

சரி.. அதுக்கெதுக்கு தலைப்புல ஷகிலாங்குறீங்களா..?

இந்தப் படத்துல நம்ம ஷகிலாவும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்காங்க.. அப்ப ஷகிலா நடிச்சிருக்குற படத்துல நம்ம கேபிள் சங்கரும் நடிச்சிருக்காருல்ல.. அப்ப தலைப்பு சரிதானே..


பரந்த முதுகுக்கான விடை

அந்த பரந்த முதுகைக் காண உடனேயே ஸ்குராலை உருட்டி கீழே வந்தவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள்..

முறையாக ஒவ்வொன்றாகப் படித்துமுடித்து கடைசியாக வந்து பார்க்கும் தங்கங்களுக்கு எனது நன்றிகள்..

அந்த முதுகுக்குச் சொந்தக்காரர் இவர்தான்..


'என்னங்கடா இது.. உண்மைத்தமிழன் பதிவுல இப்படியொரு கொடுமையா..?' அப்படீன்னு நீங்க முணுமுணுக்குறது எனக்கு நல்லாக் கேக்குது..

ஆனா நான் ஏன் இதை செஞ்சேன்னா.. சில பேரு இப்பல்லாம் சும்மாவே 'நான் யூத்து.. நான் யூத்து.. நான் யூத்துதாங்க..!'ன்னு காய்ச்சல் வந்த மாதிரி பினாத்திக்கிட்டிருக்காங்க..

இதுல அக்மார்க் இன்னமும் கல்யாணமாகாத, கன்னி கழியாத எலிஜிபில் பேச்சுலரான என்னைப் பார்த்து 'வயசானவன்'னு நாலு பேர் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எங்க பரம்பரை சீதனமா தலையில வெள்ளி முடி தரிக்க ஆரம்பிச்சிருச்சு.. இது தப்பா..? இது ஜீன் கோளாறு..

சில பார்ட்டிக நேர்ல பேசும்போது இப்படி என்னைப் பத்திப் பத்த வைக்க ஆரம்பிச்சு, அப்புறம் போன்ல கிசுகிசுப்பா பேசத் துவங்கி, எஸ்.எம்.எஸ் அனுப்பி, கடைசியா 'கேபிள்'லேயே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களாம் 'நான் வயசானவன்'னு..

அவுங்களுக்கெல்லாம் நான் இளைஞன்னு காட்ட வேணாம்.. அதுக்காகத்தான் இப்படி போட்டோ..

கடைசியாவும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!

71 comments:

  1. சத்யராஜ் கூட யூத்துதான்..நல்லா டை அடிச்சு உங்க பைக்ல ஜிஎன் செட்டி ரோடுல வீலிங்க் பண்ணுங்க..ஆமாம்.. அந்த உட்டாலக்கடி தமிழன் என்னவானார்?

    ReplyDelete
  2. சத்யராஜ் கூட யூத்துதான்..நல்லா டை அடிச்சு உங்க பைக்ல ஜிஎன் செட்டி ரோடுல வீலிங்க் பண்ணுங்க..ஆமாம்.. அந்த உட்டாலக்கடி தமிழன் என்னவானார்?

    ReplyDelete
  3. ////நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!////

    முருகா, உன் பக்தனுக்கு ஏனிந்த சோதனை?
    எங்கே இருக்கிறாய்? பெட்ரோல் பிரச்சினைதான் உனக்கு இல்லையே!
    சீக்கிரம் மயில்மீது ஏறி வா!

    ReplyDelete
  4. நான் +2 ஸ்டூடண்ட்....

    ReplyDelete
  5. //தண்டோரா said...
    சத்யராஜ் கூட யூத்துதான்.. நல்லா டை அடிச்சு உங்க பைக்ல ஜிஎன் செட்டி ரோடுல வீலிங்க் பண்ணுங்க....

    பண்ணுனா யூத ஆயிருவேனா..? ம்.. உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்கீங்க.. முயற்சி பண்றேன் ஸார்..

    //ஆமாம்.. அந்த உட்டாலக்கடி தமிழன் என்னவானார்?//

    ஆள் யாருன்னு தெரிஞ்சவுடனே அடங்கிட்டாரு போலிருக்கு..!

    ReplyDelete
  6. முருகா..

    இவங்களுக்கு நல்லப் புத்தியைக் கொடு..!

    ReplyDelete
  7. SP.VR. SUBBIAH said...
    //நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!//

    முருகா, உன் பக்தனுக்கு ஏனிந்த சோதனை? எங்கே இருக்கிறாய்? பெட்ரோல் பிரச்சினைதான் உனக்கு இல்லையே! சீக்கிரம் மயில் மீது ஏறி வா!///

    ஆமாமாம்.. சீக்கிரம் மயிலேறி வா முருகா..

    நீ வந்து ஏதாவது ஒரு 'மயிலை' எனக்குக் காட்டு..!

    என்ன கொடுமை சரவணா இது..!

    ReplyDelete
  8. //சத்தியராஜ் said...
    நான் +2 ஸ்டூடண்ட்....//

    நான் பத்தாம் கிளாஸ் ஸ்டூடண்டு..

    ReplyDelete
  9. //ஹாலிவுட் பாலா said...
    முருகா.. இவங்களுக்கு நல்லப் புத்தியைக் கொடு..!//

    நல்ல புத்தி யாருக்கு சாமி..!

    ReplyDelete
  10. //இதுதான் சனி பகவானின் 'அடித்துத் துவைப்பது' என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். //

    ஹாஹாஹாஹா.........

    ReplyDelete
  11. .// எப்படியும் கலைஞர் டிவிக்குத்தான் ஒளிபரப்பு உரிமை தரப்பட வேண்டி வரும்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. தல்

    அந்த முதுப் படக்கு அப்புறம் நேரா ஸ்குரல் பண்ணி கடைசிப்படத்துக்கு தான் வந்து பார்த்து தரிசனம் கண்டேன். இடையில் என்னவெல்லாமோ எழுதியிருக்கீங்க போல.

    ReplyDelete
  13. செந்தழல் ரவி said...
    superrrrrrrrrrrrrrrrrrrr
    இதனோடு இன்னும் உங்களால் முடிந்தவரை 'ஆர்' போட்டுக் கொள்ளுங்கள் சரவணன்.உண்மையிலேயே நல்ல black humour.

    ReplyDelete
  14. நான் முதலிலேயே நயன்தாராவின் முதுகு என்று கண்டுபிடித்துவிட்டேன்.
    இதற்கு ஏதாவது பரிசு உண்டா?
    கேரள.காம் என்பதில் இருந்து இது ஒரு மலையாள நடிகை என்பது புரிந்தது.
    பரந்த முதுகு மட்டும்தானே? 'மிகபபரந்த' முதுகு இல்லையே! அந்த விதத்தில் இது ஷகிலாவின் முதுகு இல்லை என்பதும் தெரிந்து விட்டது.
    அதனால் மிகச் சுலபமாகக் கண்டுபிடித்து விட்டேன்.
    இப்போதும் நயன்தாராதான் தமிழ் நடிகைகளில் முதல் நடிகையாமே.
    இத்தனைக்கும் அவரின் குசேலன்,சத்தியம்,ஏகன்,வில்லு எல்லாமே தோல்விதானே.
    ஆனாலும் அவருக்கு தமிழ்நாடு இளையவர்களின் --உங்கள் பாணியில் 'யூத்து' -ஆதரவு பெருவாரியாக இருப்பதால் படங்கள் தோல்வி என்றாலும் அவருக்கு மார்க்கெட் போகவில்லை.
    பெண்ணியவாதி என்ற முறையில் உடலை மட்டும் காட்டி பணம் சம்பாதிப்பதில் எனக்கு சில கேள்விகள் இருந்தாலும் ,எனக்கு நயந்தாராவைப் பிடிக்கும்.
    இரண்டு காரணங்கள் ,
    1.சிம்புவுடன் வந்த பிரச்சினையில் பல கஷ்டங்கள் வந்து தமிழ் நாட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்து ,பிறகு அதில் இருந்து சுதாரித்துக் கொண்டு எழுந்து ,இப்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள அந்த மன உறுதி.
    2.ஈழத்தமிழர் நிதிக்கு எந்த விளம்பரமும் ,பந்தாவும் இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அந்த மனிதாபிமான உணர்வு.
    சில தமிழ் நடிகர்கள் காட்டாத இந்த உணர்வை ஒரு மலையாளப் பெண்ணான நயன்தாரா காட்டியது குறிப்பிடத்தக்கது.
    --வானதி.

    ReplyDelete
  15. பக்தா நீ என்றுமே யூத்துதான்.

    சூப்பர்.

    நல்ல வேளை முதுகோடு போச்சு..

    ReplyDelete
  16. //செந்தழல் ரவி said...
    superrrrrrrrrrrrrrrrrrrr//

    ரொம்ப நன்றிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறிறி...!

    ReplyDelete
  17. ///அத்திரி said...

    //இதுதான் சனி பகவானின் 'அடித்துத் துவைப்பது' என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். //

    ஹாஹாஹாஹா.........////

    சந்தோஷமா ராசா..! நல்லாயிரு..!

    ReplyDelete
  18. ///அத்திரி said...

    // எப்படியும் கலைஞர் டிவிக்குத்தான் ஒளிபரப்பு உரிமை தரப்பட வேண்டி வரும்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    இதுக்கெதுக்கு உங்களுக்கு கோவம்..? உண்மையைத்தான் சாமி சொல்றேன்..!

    ReplyDelete
  19. ///கானா பிரபா said...
    தல் அந்த முதுப் படக்கு அப்புறம் நேரா ஸ்குரல் பண்ணி கடைசிப்படத்துக்கு தான் வந்து பார்த்து தரிசனம் கண்டேன். இடையில் என்னவெல்லாமோ எழுதியிருக்கீங்க போல.///

    அதான.. ஒரு பய புள்ளையாவது நம்ம பேரை காப்பாத்த விட மாட்டான்னு நினைச்சேன்.. அது கடந்த கடந்த பையனாத்தான் இருக்கணுமே..? கொடுமை..!

    ஆமாமாம்.. என்னவெல்லாமோ.. இங்கிலீஷ்.. ஹிந்தில எழுதியிரு்ககேன்.. புரியாம இருந்திருக்குமே..!

    ReplyDelete
  20. ///ஷண்முகப்ரியன் said...
    செந்தழல் ரவி said...
    superrrrrrrrrrrrrrrrrrrr
    இதனோடு இன்னும் உங்களால் முடிந்தவரை 'ஆர்' போட்டுக் கொள்ளுங்கள் சரவணன். உண்மையிலேயே நல்ல black humour.///

    நன்றிங்கோ ஸார்..!

    ReplyDelete
  21. ///vanathy said...
    நான் முதலிலேயே நயன்தாராவின் முதுகு என்று கண்டுபிடித்துவிட்டேன்.
    இதற்கு ஏதாவது பரிசு உண்டா?///

    ஐயோ வானதி மேடம்.. எனக்கு வெக்கமா இருக்கு..! அதுனால இந்தக் கேள்வியை பாஸ் பண்ணிடறேன்..!

    //கேரள.காம் என்பதில் இருந்து இது ஒரு மலையாள நடிகை என்பது புரிந்தது. பரந்த முதுகு மட்டும்தானே? 'மிகப பரந்த' முதுகு இல்லையே! அந்த விதத்தில் இது ஷகிலாவின் முதுகு இல்லை என்பதும் தெரிந்து விட்டது.
    அதனால் மிகச் சுலபமாகக் கண்டு பிடித்துவிட்டேன்.//

    ஐயோ... இப்படிகூட யோசிக்க முடியுமா? அதுவும் தங்களைப் போன்றவர்களால்..

    நாங்கள்லாம் துண்டை எடுத்துப் போத்திக்க வேண்டியதுதான்..

    //].இப்போதும் நயன்தாராதான் தமிழ் நடிகைகளில் முதல் நடிகையாமே.
    இத்தனைக்கும் அவரின் குசேலன், சத்தியம், ஏகன், வில்லு எல்லாமே தோல்விதானே. ஆனாலும் அவருக்கு தமிழ்நாடு இளையவர்களின் -- உங்கள் பாணியில் 'யூத்து' -ஆதரவு பெருவாரியாக இருப்பதால் படங்கள் தோல்வி என்றாலும் அவருக்கு மார்க்கெட் போகவில்லை.//

    உண்மைதான்.. அவருடைய நடன அசைவில் இருக்கும் நளினம் உடலைக் காட்டும் கவர்ச்சியை மிக அதிக ஈர்ப்பினைத் தருவதாக நான் நினைக்கிறேன்..

    உதாரணமாக அவருடனான அனைத்து காதல் பாடல் காட்சிகளிலும் அவருடைய முகம் காட்டும் எக்ஸ்பிரஸ்ஸனை பாருங்கள்.. புரியும்..

    //பெண்ணியவாதி என்ற முறையில் உடலை மட்டும் காட்டி பணம் சம்பாதிப்பதில் எனக்கு சில கேள்விகள் இருந்தாலும் ,எனக்கு நயந்தாராவைப் பிடிக்கும்.//

    எனக்கும்தான்..!

    //இரண்டு காரணங்கள் ,
    1.சிம்புவுடன் வந்த பிரச்சினையில் பல கஷ்டங்கள் வந்து தமிழ் நாட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்து, பிறகு அதில் இருந்து சுதாரித்துக் கொண்டு எழுந்து, இப்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள அந்த மன உறுதி.//

    கரெக்ட்தாங்க.. வேறொரு பொண்ணா இருந்தா பீல்டைவிட்டே போயிருக்கும்..!

    //2.ஈழத்தமிழர் நிதிக்கு எந்த விளம்பரமும், பந்தாவும் இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அந்த மனிதாபிமான உணர்வு. சில தமிழ் நடிகர்கள் காட்டாத இந்த உணர்வை ஒரு மலையாளப் பெண்ணான நயன்தாரா காட்டியது குறிப்பிடத்தக்கது.
    --வானதி.///

    இங்கே தமிழ் என்பது காசு சம்பாதிக்க மட்டுமே..!

    நயன்தாராவின் செயல் பல பேரை வெட்கப்பட வைத்திருக்கும்..

    இவ்வளவு விஷயங்களையும் தெரி்ந்து வைத்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..

    நன்றி வானதி..

    ReplyDelete
  22. //வண்ணத்துபூச்சியார் said...

    பக்தா நீ என்றுமே யூத்துதான்.
    சூப்பர்.
    நல்ல வேளை முதுகோடு போச்சு..///

    தப்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன் பூச்சியாரே..

    அது சரி டிவிடி கேட்டனே.. எப்ப தருவீங்க..!

    ReplyDelete
  23. என்னாங்கப்பா இது..?!

    இதுவரைக்கும் 350 பேர் பார்த்திருக்கீங்க.. ஒருத்தருக்குக் கூடவா தமிழ்மணம் கருவிப்பட்டியில ஓட்டுப் போட மனசு வரலை..

    கொடுமை..! கொடுமை..! கொடுமை..!

    வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

    ReplyDelete
  24. //தேடித் தேடி வாங்கி வைத்திருந்த பலருடைய எண்களும் போய்விட்டன. தொலைந்த பின்புதான் ஏதாவது நோட்டில் எழுதி வைத்திருக்கலாமே என்ற யோசனையே வந்தது.//

    என்னா ஆளுன்னே நீங்க இந்த சந்தோசமான விசயத்தை முதலிலேயே சொல்வது இல்லையா?

    என் நம்பரும் காணமல் போய்விட்டது தானே?

    எல்லையில்லா ஆனந்தத்துடன்
    குசும்பன்

    ReplyDelete
  25. //நேற்றுத்தான் சிம்கார்டில் இருந்து அனைத்து தொடர்பு எண்களையும் சிஸ்டத்திற்கு மாற்றியிருந்தேன். //

    கடவுள் இருக்கிறார்ன்னே!!!:)))

    மக்களே இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு:) கஜினி சூர்யா போல் எல்லார் நம்பரையும் மறந்து போன நிலையில் இருக்கிறார்!

    ReplyDelete
  26. //எங்க பரம்பரை சீதனமா தலையில வெள்ளி முடி தரிக்க ஆரம்பிச்சிருச்சு.. இது தப்பா..? இது ஜீன் கோளாறு.. //
    இதத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கேன். ஒருத்தரும் நம்புற மாதிரி தெரியில.

    யாராவது நம்பிட்டாங்கன்னா நமக்கும் சொல்லுங்கண்ணா. நாமளும் ஒரு படம் போட்டு பதிவு போட்டிருவோம்ல.

    ReplyDelete
  27. பாக்கியராஜ்

    அய்யா உங்ககிட்ட இன்னும் இது மாதிரி நிறைய எதிர் பார்க்கிறேன்.. அதாவது இது மாதிரி போட்டோகளை ....அப்பத்தான் உங்கள YOUTH அப்படின்னு ஒத்துக்குவோம் ....

    ReplyDelete
  28. //முறையாக ஒவ்வொன்றாகப் படித்துமுடித்து கடைசியாக வந்து பார்க்கும் தங்கங்களுக்கு எனது நன்றிகள்..//

    Welcome

    ReplyDelete
  29. நான் வரிசையாக படித்துக் கொண்டு வந்து தான் கடைசியில் பார்த்தேன்.. அப்புறம் யூத்தாம்ல... நம்பிட்டோம்.. ;-)

    ReplyDelete
  30. நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!///



    ரிப்பிட்டேய்...........

    ReplyDelete
  31. ///குசும்பன் said...

    //தேடித் தேடி வாங்கி வைத்திருந்த பலருடைய எண்களும் போய்விட்டன. தொலைந்த பின்புதான் ஏதாவது நோட்டில் எழுதி வைத்திருக்கலாமே என்ற யோசனையே வந்தது.//

    என்னா ஆளுன்னே நீங்க இந்த சந்தோசமான விசயத்தை முதலிலேயே சொல்வது இல்லையா?
    என் நம்பரும் காணமல் போய்விட்டதுதானே?
    எல்லையில்லா ஆனந்தத்துடன்
    குசும்பன்///

    அடுத்தவன் துக்கம் ஒருத்தனுக்கு சந்தோஷமா..!

    பாவி.. பாவி.. பாவி..!

    300 நம்பரையும் எப்படி தேடிப் பிடிச்சு வாங்கி டைப் பண்றதுன்னு வெறுப்புல இருக்கேன்.. இதுல காமெடி பண்றியா நீயி..?!

    ReplyDelete
  32. ///குசும்பன் said...
    //நேற்றுத்தான் சிம்கார்டில் இருந்து அனைத்து தொடர்பு எண்களையும் சிஸ்டத்திற்கு மாற்றியிருந்தேன். //
    கடவுள் இருக்கிறார்ன்னே!!!:)))
    மக்களே இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு:) கஜினி சூர்யா போல் எல்லார் நம்பரையும் மறந்து போன நிலையில் இருக்கிறார்!///

    அதுனால என்னென்ன செய்யலாம்னு தூண்டி விடுற..? கரீக்ட்டா..?

    சரி.. சரி.. அசின் மாதிரி யாரையாவது அனுப்பி வை.. பிக்கப் பண்ணலாமான்னு பாக்குறேன்..!

    ReplyDelete
  33. ///சுல்தான் said...

    //எங்க பரம்பரை சீதனமா தலையில வெள்ளி முடி தரிக்க ஆரம்பிச்சிருச்சு.. இது தப்பா..? இது ஜீன் கோளாறு.. //

    இதத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கேன். ஒருத்தரும் நம்புற மாதிரி தெரியில.
    யாராவது நம்பிட்டாங்கன்னா நமக்கும் சொல்லுங்கண்ணா. நாமளும் ஒரு படம் போட்டு பதிவு போட்டிருவோம்ல.///

    சுல்தான் பாய்..

    இதெல்லாம் அவங்களுக்கு வந்திருச்சுன்னா எல்லாருமே நம்பிருவாங்க..

    அதுவரைக்கும் நாம காத்திருக்க வேண்டியதுதான்..!

    ReplyDelete
  34. //T.V.Radhakrishnan said...
    nallampathivu//

    நன்றி ஸார்..!

    ReplyDelete
  35. //Anonymous said...
    பாக்கியராஜ்
    அய்யா உங்ககிட்ட இன்னும் இது மாதிரி நிறைய எதிர் பார்க்கிறேன்.. அதாவது இது மாதிரி போட்டோகளை. அப்பத்தான் உங்கள YOUTH அப்படின்னு ஒத்துக்குவோம்//

    ஐயையோ.. இப்படி ஒரு பிரச்சினை இருக்கா..

    ஒருக்கா சொன்னா பத்தாதா சாமிகளா..? வாராவாராம் சொல்ல ஆரம்பிச்சா அப்புறம் வலையுலக மகளிர்கள் என்னைக் கும்மிருவாங்கப்பா..!

    ReplyDelete
  36. ///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

    //முறையாக ஒவ்வொன்றாகப் படித்து முடித்து கடைசியாக வந்து பார்க்கும் தங்கங்களுக்கு எனது நன்றிகள்..//

    Welcome///

    நன்றி பாஸ்கர்ஜி.. நீங்களும் கடைசியாத்தானே வந்து பார்த்தீங்க..!

    ReplyDelete
  37. ///தமிழ் பிரியன் said...
    நான் வரிசையாக படித்துக் கொண்டு வந்துதான் கடைசியில் பார்த்தேன்.. அப்புறம் யூத்தாம்ல... நம்பிட்டோம்.. ;-)///

    குட்.. வெரிகுட்.. நல்ல பையன்.. இப்படித்தான் சொன்ன பேச்சு கேக்கணும்.. அப்பத்தான் நல்லாயிருக்க முடியும்..!

    யூத்தாம்ல இல்ல.. யூத்துதான்.. நம்பணும்..

    ReplyDelete
  38. ///jackiesekar said...

    நான் யூத்து..! நான் யூத்துதான்..! நான் சத்தியமா யூத்துதாங்க..!!!///

    ரிப்பிட்டேய்...........///

    அப்பாடா.. எனக்கொரு தார்மீக சப்போர்ட்டு கொடுக்க ஆள் இருக்கு.. ஜாக்கி நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  39. அண்ணே.. மொதல்ல முதுகப் பாக்க சொல்லும் போதே உங்க வயசு தெரிஞ்சி போச்சி.. பின்னாடி வந்து நானும் யூத்து தான்ன்னு சொன்னா எவன் அம்புவான்? :))

    அந்த போன்புக் மேட்டர் படா குஜாலா கீது அண்ணாச்சி.. :))

    ReplyDelete
  40. தமிழ்மணத்தில குத்தியாச்சுங்கோ ... இசையிலுமா அரசியல்!

    ReplyDelete
  41. //Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

    அண்ணே.. மொதல்ல முதுகப் பாக்க சொல்லும் போதே உங்க வயசு தெரிஞ்சி போச்சி.. பின்னாடி வந்து நானும் யூத்துதான்ன்னு சொன்னா எவன் அம்புவான்? :))//

    அப்படியும் நம்ப மாட்டியா கண்ணு..

    //அந்த போன்புக் மேட்டர் படா குஜாலா கீது அண்ணாச்சி.. :))//

    குஜாலா இருக்கா..? அடப்பாவி நானே வயித்தெரிச்சல்ல இருக்கேன்.. இந்த பாழாப்போன மறதி அந்த நேரத்துலதான் வரணுமான்னு.. உனக்கு சந்தோஷமா இருக்கு..!

    நல்லாயிரு.. வேறென்ன சொல்றது..?

    ReplyDelete
  42. //எட்வின் said...
    தமிழ்மணத்தில குத்தியாச்சுங்கோ ... இசையிலுமா அரசியல்!//

    மிக்க நன்றி எட்வின் ஸார்..

    நம்ம தமிழ்நாட்டுல சுடுகாட்டுலகூட அரசியல் இருக்கு எட்வின்.. நம்மளை பிடிச்ச சனியன் இதுதான்..!

    ReplyDelete
  43. சுவாரஸ்யமான பதிவு. ஆனால் நயன்தாரா முதுகு,ஷகீலா புகைப்படம் போன்ற அப்பட்டமான குமுதம் ஸ்டைல் உங்கள் பதிவில் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்ய, ஹிட்ஸ், பின்தொடர்பவர்கள் போன்ற நிர்ப்பந்தங்கள் போலும் :). நிறைய சினிமா செய்திகள்.

    கலக்குங்க.

    அனுஜன்யா

    ReplyDelete
  44. ///அனுஜன்யா said...
    சுவாரஸ்யமான பதிவு. ஆனால் நயன்தாரா முதுகு, ஷகீலா புகைப்படம் போன்ற அப்பட்டமான குமுதம் ஸ்டைல் உங்கள் பதிவில் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்ய, ஹிட்ஸ், பின்தொடர்பவர்கள் போன்ற நிர்ப்பந்தங்கள் போலும் :). நிறைய சினிமா செய்திகள்.
    கலக்குங்க.///

    நான் எதுக்கு அதை செஞ்சேன்னு பதிவிலேயே எழுதியிருக்கேன் ஸார்..

    என்ன பண்றது ஸார்..? காலம் மாறும் போது நாமளும் மாறித்தான ஆகணும்..?!

    ஹிட்ஸ், பின் தொடர்பவர்களைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே வேணாம் ஸார்..

    அப்படிப் பார்த்தா என்னோட இஸ்ரேல் நாட்டுத் திரைப்படத்தி்ன் விமர்சனத்திற்கு வந்த பின்னூட்டத்தையும் பாருங்கள்..!

    மக்கள்ஸ்க்கு எது பிடிக்குதோ அதுக்குத்தான் வருவாங்க..!

    அருந்ததிக்கு வந்த கூட்டம் இஸ்ரேல் திரைப்படத்துக்கும் வந்திருக்கலாமே.. இரண்டுமே சினிமாதானே.. ஏன் வரலைன்னு யோசிச்சா புரியுது நிலைமை..!?

    வருகைக்கு மிக்க நன்றி கவிஞரே..

    ReplyDelete
  45. உண்மை(யூ)த்தமிழன்,

    ரொம்ம்ம்ம்ப நாளைக்குப் பொறவு உங்க பதிவை முழுசா படிச்சிட்டோம்ல ..

    ReplyDelete
  46. //தருமி said...
    உண்மை(யூ)த்தமிழன், ரொம்ம்ம்ம்ப நாளைக்குப் பொறவு உங்க பதிவை முழுசா படிச்சிட்டோம்ல..//

    ஆஹா.. பேராசிரியரே..

    தங்களுடைய திருக்கரங்களால் யூத் என்று என்னை செப்பிவிட்டீர்கள்..

    தங்களது அருளாசிகளுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

    அப்ப இது மாதிரி 4 பக்கத்துக்குக் கொஞ்சமா எழுதினாத்தான் முழுசையும் படிப்பேன்னு சொல்றீங்க..! சரி.. மனசுல வைச்சுக்குறேன்..!

    ReplyDelete
  47. உண்மை(யூ)த்தமிழன்,

    //தங்களுடைய திருக்கரங்களால் யூத் என்று என்னை செப்பிவிட்டீர்கள்..//

    செப்பவில்லை; டைப்பினோம்!

    ReplyDelete
  48. ///தருமி said...

    உண்மை(யூ)த்தமிழன்,

    //தங்களுடைய திருக்கரங்களால் யூத் என்று என்னை செப்பிவிட்டீர்கள்..//

    செப்பவில்லை; டைப்பினோம்!///

    ஓ.. அர்த்தம் தவறோ.. செப்பி என்பதற்குப் பதிலாக டைப்பி என்று இருந்திருக்க வேண்டும்..!

    பேராசிரியர் அல்லவா..! அதுதான் உடனுக்குடன் திருத்துகிறீர்கள்.. நன்றி ஐயா..

    அப்படியே கொஞ்சம் தமிழ்மணம் கருவிப் பட்டையில நல்லாயிருக்குன்னு ஓட்டைக் குத்துறது..!?

    ReplyDelete
  49. அடடா,

    பிட்டு பிட்டா படிக்கறதுல என்ன சொகம்! மத்த பதிவுகளை முழுசா படிச்சாலும் அப்படியே ஜீட்டு விட்டுக்கறதுல ஒரு ஜாலிதான். இந்தமுறை இப்படி எழுதறதை மனசுல வைச்சுக்கறேன்னு சொன்னதை நீங்க மறக்காம இருக்கறதுக்காக நானும் ஒரு ஊக்க பின்னூட்டம்..

    (நயந்தாராவை கண்டுபிடிக்க முடியாத ஏக்கம் என்னை வாட்டினாலும் ) வாழ்க நீர் எம்மான்! வளர்க உம்ம பிட்டு பதிவுகள் :)

    ReplyDelete
  50. //தமிழ்மணம் கருவிப் பட்டையில நல்லாயிருக்குன்னு ஓட்டைக் குத்துறது..!?//

    நாமல்லாம் குத்துறதே இல்லை.

    அதெல்லாம், தூக்குத்தண்டனை கொடுக்கிறது மாதிரிதான். only for rarest of rarest cases!

    ReplyDelete
  51. ///இளவஞ்சி said...

    அடடா, பிட்டு பிட்டா படிக்கறதுல என்ன சொகம்! மத்த பதிவுகளை முழுசா படிச்சாலும் அப்படியே ஜீட்டு விட்டுக்கறதுல ஒரு ஜாலிதான். இந்தமுறை இப்படி எழுதறதை மனசுல வைச்சுக்கறேன்னு சொன்னதை நீங்க மறக்காம இருக்கறதுக்காக நானும் ஒரு ஊக்க பின்னூட்டம்..
    (நயந்தாராவை கண்டுபிடிக்க முடியாத ஏக்கம் என்னை வாட்டினாலும் ) வாழ்க நீர் எம்மான்! வளர்க உம்ம பிட்டு பதிவுகள் :)///

    ஆஹா என்னவொரு ஒத்துமை இளவஞ்சி..

    இப்பத்தான் உம்ம பதிவைப் படிச்சு கலங்கிப் போய் பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்..

    அதுக்குள்ள என் வூட்டுக்குள்ள நீங்க..!

    நன்றி.. நன்றி.. நன்றி..!

    ReplyDelete
  52. ///தருமி said...

    //தமிழ்மணம் கருவிப் பட்டையில நல்லாயிருக்குன்னு ஓட்டைக் குத்துறது..!?//

    நாமல்லாம் குத்துறதே இல்லை. அதெல்லாம், தூக்குத்தண்டனை கொடுக்கிறது மாதிரிதான். only for rarest of rarest cases!///

    ஐயோ அப்போ வேண்டாம் பேராசிரியரே..

    இந்த சின்ன வயசுல நான் தூக்குல தொங்க விரும்பலை..

    பின்னால பார்த்துக்கலாம்..!

    வெளிப்படையான கருத்துக்கு நன்றிங்கோ..!

    ReplyDelete
  53. அந்த படத்து மேல Cursor வைத்தாலே Status Bar ல பெயர் வருது தமிழரே..

    ReplyDelete
  54. //லோகு said...
    அந்த படத்து மேல Cursor வைத்தாலே Status Bar ல பெயர் வருது தமிழரே..//

    ஆஹா.. தப்புப் பண்ணிட்டனே.. இதுவரைக்கும் ஆயிரம் பேர் இதைப் படிச்சிருக்காங்க.. யாருக்கும் தெரியல.. லோகு அண்ணன் கண்டுபிடிச்சிருக்கார்.. வாழ்க அண்ணன்..

    அடுத்த முறை நான் தப்பிச்சுக்குறேன்..

    மிக்க நன்றி லோகு..!

    ReplyDelete
  55. [[ இரண்டு காரணங்கள் ,
    1.சிம்புவுடன் வந்த பிரச்சினையில் பல கஷ்டங்கள் வந்து தமிழ் நாட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்து ,பிறகு அதில் இருந்து சுதாரித்துக் கொண்டு எழுந்து ,இப்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள அந்த மன உறுதி.
    2.ஈழத்தமிழர் நிதிக்கு எந்த விளம்பரமும் ,பந்தாவும் இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அந்த மனிதாபிமான உணர்வு.
    சில தமிழ் நடிகர்கள் காட்டாத இந்த உணர்வை ஒரு மலையாளப் பெண்ணான நயன்தாரா காட்டியது குறிப்பிடத்தக்கது.
    --வானதி.]]]

    Full marks !

    ReplyDelete
  56. உண்மையில்யே யூத்துதானா? இங்க பல பதிவர்கள் நடுத்தர வயதை யூத்துன்னு நினைச்சு சொல்லிக்கிட்டு திரியுறாங்க!

    ReplyDelete
  57. //benzaloy said...

    [[இரண்டு காரணங்கள் ,
    1.சிம்புவுடன் வந்த பிரச்சினையில் பல கஷ்டங்கள் வந்து தமிழ் நாட்டுப் பக்கமே தலைகாட்டாமல் இருந்து, பிறகு அதில் இருந்து சுதாரித்துக் கொண்டு எழுந்து, இப்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள அந்த மன உறுதி.
    2.ஈழத்தமிழர் நிதிக்கு எந்த விளம்பரமும், பந்தாவும் இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அந்த மனிதாபிமான உணர்வு. சில தமிழ் நடிகர்கள் காட்டாத இந்த உணர்வை ஒரு மலையாளப் பெண்ணான நயன்தாரா காட்டியது குறிப்பிடத்தக்கது.
    --வானதி.]]]

    Full marks !//

    பென்ஸ் ஸார்..

    எப்படிப்பட்ட அமைதியான, நச் என்ற பின்னூட்டம் பார்த்தீர்களா..?

    ஒரு பெண்ணாக இருந்தும் ஒருவிதத்தில் என்னைக் கண்டிக்க வாய்ப்பிருந்தும் அதனைச் செய்யாமல் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார் பாருங்கள்..

    அந்த உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கிறேன்..

    தாங்களும் பாராட்டியதற்கு நன்றிகள்..!

    ReplyDelete
  58. //pappu said...
    உண்மையில்யே யூத்துதானா? இங்க பல பதிவர்கள் நடுத்தர வயதை யூத்துன்னு நினைச்சு சொல்லிக்கிட்டு திரியுறாங்க!//

    அது நடுத்தர வயசுல இருக்கிறவங்களுக்குத்தான் பாப்பு.. என்றும் பதினெட்டான எனக்கில்ல..!

    ReplyDelete
  59. 'பத்ரி ஸாரும், இட்லிவடையும், அஞ்சாநெஞ்சன் பா.ராகவனும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை'
    If they oppose such 'informal' and 'unofficial' bans , police will say that there is no such ban officially. So it has to be tackled
    differently.
    'அது நடுத்தர வயசுல இருக்கிறவங்களுக்குத்தான் பாப்பு.. என்றும் பதினெட்டான எனக்கில்ல..!'
    If so you are underaged forever for getting married :).

    ReplyDelete
  60. ///Anonymous said...

    'பத்ரி ஸாரும், இட்லிவடையும், அஞ்சாநெஞ்சன் பா.ராகவனும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை'

    If they oppose such 'informal' and 'unofficial' bans, police will say that there is no such ban officially. So it has to be tackled
    differently.///

    பின்பு, போலீஸ் நேரில் வந்து சொன்னது பொய்யாகிவிடுமே..! பத்திரிகைகளில் வந்த செய்தி டுபாக்கூராகிவிடுமே..!

    போலீஸ் இதனை மறுக்க மாட்டார்கள். நிச்சயம் நாம் உரிமைக்குரல் எடுக்கலாம்.. நாம் குரலை உயர்த்தினால் அவர்களுக்குத்தான் சங்கடங்கள் வரும்..!

    //'அது நடுத்தர வயசுல இருக்கிறவங்களுக்குத்தான் பாப்பு.. என்றும் பதினெட்டான எனக்கில்ல..!'

    If so you are underaged forever for getting married :).///

    யாராவது கேட்டாங்கன்னா அப்ப மட்டும் பெர்த் சர்டிபிகேட்டை எடுத்துக் காட்டி வாயடைச்சிரலாம்..!!!

    ReplyDelete
  61. முதல்படத்தில் நயந்தாராவின் முதுகு தெரியவில்லை!
    தண்டனையாக முழுதாக காட்டவும்!
    (அதே மாதிரி)

    ReplyDelete
  62. //“தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரே ஆள் நீங்கதான்.. எப்படி விடுறது..?”

    வாழ்க தமிழன்னை..//

    இப்போ புரியுதா
    நான் ஏன் ப்ளாக் ஆரம்பிச்சேன்னு!

    (சோப்பு ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  63. //இதுதான் சனி பகவானின் 'அடித்துத் துவைப்பது' என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். சரியாகத்தான் இருக்கிறது..//

    தவறு உங்கள் மேல்
    எதற்கெடுத்தாலும் இப்படி காரணம சொல்லாதீர்கள்!
    நீங்கள் பார்மெட் செய்த இடத்திலேயே எல்லாவற்றையும் பேக்-அப்பும் எடுத்திருக்கலாம்.

    கவனிக்காமல் விட்டது உங்கள் தவறு.
    சனி கிரகத்துக்கு இது வேலையில்லை!

    ReplyDelete
  64. //ஷகிலா நடிச்சிருக்குற படத்துல நம்ம கேபிள் சங்கரும் நடிச்சிருக்காருல்ல//

    இதுக்காக அவருகிட்ட ட்ரீட் கேட்டா கொடுப்பாரா?

    ReplyDelete
  65. //வால்பையன் said...
    முதல்படத்தில் நயந்தாராவின் முதுகு தெரியவில்லை! தண்டனையாக முழுதாக காட்டவும்! (அதே மாதிரி)//

    முருகா.. முருகா..

    இந்த வால்பையனுக்கு நல்ல புத்தியைக் கொடு..

    ReplyDelete
  66. ///வால்பையன் said...
    //“தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரே ஆள் நீங்கதான்.. எப்படி விடுறது..?”
    வாழ்க தமிழன்னை..//

    இப்போ புரியுதா நான் ஏன் ப்ளாக் ஆரம்பிச்சேன்னு! (சோப்பு ஸ்டைலில் படிக்கவும்)///

    நல்லாப் புரியுது..?

    அது என்ன சோப்பு ஸ்டைல்..?!

    ReplyDelete
  67. ///வால்பையன் said...
    //இதுதான் சனி பகவானின் 'அடித்துத் துவைப்பது' என்று நமது சுப்பையா வாத்தியார் சொல்கிறார். சரியாகத்தான் இருக்கிறது..//

    தவறு உங்கள் மேல்.
    எதற்கெடுத்தாலும் இப்படி காரணம சொல்லாதீர்கள்! நீங்கள் பார்மெட் செய்த இடத்திலேயே எல்லாவற்றையும் பேக்-அப்பும் எடுத்திருக்கலாம்.
    கவனிக்காமல் விட்டது உங்கள் தவறு.
    சனி கிரகத்துக்கு இது வேலையில்லை!///

    வாலு..

    அந்த இடத்துல, அந்த நேரத்துல, மிகச் சரியா அந்த நொடில, எனக்கு அந்த விஷயம் மறந்து போச்சு.. இந்த மறதி ஏன் அந்த நேரத்துல அந்த இடத்துல வந்து தொலையணும்..?!

    இதுக்குத்தான் நான் அதைச் சொன்னேன்.. புரிஞ்சுக்குங்க..

    ReplyDelete
  68. ///வால்பையன் said...
    //ஷகிலா நடிச்சிருக்குற படத்துல நம்ம கேபிள் சங்கரும் நடிச்சிருக்காருல்ல//

    இதுக்காக அவருகிட்ட ட்ரீட் கேட்டா கொடுப்பாரா?///

    கேளுங்க.. கொடுக்கலைன்னா படத்தை பிட், பிட்டா ஒளிபரப்புவோம்னு சொல்லுங்க.. பயந்திருவாரு..!

    ReplyDelete