Pages

Saturday, March 07, 2009

1977-திரை விமர்சனம்

07-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எத்தனை நாளாச்சு இது மாதிரி ஒரு சினிமா பார்த்து..?

அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு..

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் அண்ணன் சரத்குமார், எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தினைப் போல் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தினை உருவாக்க நினைத்திருக்கிறார். முயற்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கடற்கரையோரத்தில் வசிக்கும் மீனவக் குடும்பங்களுக்கு காவலனாக இருக்கும் ராசையா என்ற முதியவருக்கு, வெற்றிவேல் என்ற பொறுப்பான பையன். விஞ்ஞானியாகி ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கும் அளவுக்கு புத்திசாலி.

திடீரென்று ஒரு நாள் பேப்பரில் வந்த ஒரு செய்தியைப் பார்த்துவிட்டு ராசையா எங்கோ கிளம்ப முற்பட்டு, அந்த இடத்திலேயே மரணித்துப் போகிறார். கொள்ளி வைக்க வந்த மகன் வெற்றிவேலிடம் அந்த பேப்பர் சிக்குகிறது. ஆராய்கிறான். அப்பாவின் பீரோவைக் குடாய்ந்தால் மலேஷிய சம்பந்தப்பட்ட செய்திகள் கிடைக்கின்றன.

மலேஷியா பறக்கிறான். அங்கே போன பின்புதான் தெரிகிறது அவனது அப்பா மலேஷியாவில் ஒரு தேடப்படும் தூக்குத் தண்டனைக் குற்றவாளி என்று.. தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து தப்பித்து ஓடியதால், அவரது தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்ச் சினிமாவின் 1001-வது முறையாக கதாநாயகனும், கதாநாயகியும் மோதிக் கொண்டும், உருண்டு, புரண்டும், முத்தம் கொடுத்தும் ஒரு சந்திப்பு ஏற்பட.. அது காதலாகிறது.

பொறுப்பாக டூயட்டெல்லாம் பாடிக் கொண்டே தனது அப்பாவின் கதையைத் தேடுகிறான் மகன். அப்போது அந்த வழக்கை விசாரித்த அரசு வக்கீலின் மகளிடம் வழக்கு பற்றி விசாரிக்க வருகிறார். முதலில் கோபப்படும் அந்த பெண் வக்கீல் பின்பு ஹீரோவை தமிழ்ச் சினிமாவின் பார்முலாப்படி ஒரு தலையாய் காதலிக்க.. ஒரு டூயட்டுக்கு வழி கிடைக்கிறது..

இப்போது இந்த மூவரும் சேர்ந்து துப்புத் துலங்க முயல.. அது தானாகவே எல்லாம் நடக்கும் என்பதைப் போல் அவனது அம்மா அவன் கண்ணில் படுகிறாள். அவள் மீதிக் கதையைச் சொல்லி முடிக்கிறாள். முழுசும் புரிந்த பின்பு பின்னணியில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து தன் குடும்ப எதிரிகள் மீது பாய்கிறான் மகன். எப்படி அவர்கள் ‘கதை'யை முடிக்கிறான் என்பதுதான் கதை.

முதலில் இப்படியொரு கதையில் நடிக்க ஒப்புக் கொண்டு, பின்பு தயாரிக்கவும் செய்திருக்கும் அண்ணன் சரத்குமாரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.. யாரும் செய்ய முன் வந்திருக்காத சாதனை விஷயம் இது.

‘திரிசூலம்' படத்தின் கதையில் ரெண்டு வரியை எடுத்துக் கொண்டு, அப்படியே ‘உலகம் சுற்றும் வாலிபன்' டைப்பில் படமாக்கியிருக்கிறார்கள். அதாவது உருப்படியாக இருந்ததா..?

‘நான் கடவுள்' படத்தில் ஷாட் பை ஷாட்டாக அதில் இருக்கும் குறியிடூ என்ன? சொல்லப்பட்டிருக்கும் விஷயம் என்ன..? எப்படிச் சொல்லியிருக்கிறார்? என்று மேய்கிற அளவுக்கு தமிழ்ச் சினிமா ரசிகர்களின் அறிவுத்திறன் மேம்பட்டிருக்கும் சூழலில் இப்படியொரு 1977-ம் ஆண்டு காலத்திய கதையை அப்படியே அந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் திரைக்கதையையும், வசனத்தையும் வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் இந்த இயக்குநரின் தைரியத்தை எப்படி பாராட்டாமல் இருப்பது..?

“நீ சாதிப்பன்னு எனக்குத் தெரியும் தம்பி..” என்று அப்பன் சரத், மகன் சரத்திடம் சொன்னபோதே எனக்குப் புரிந்துவிட்டது நமக்கு சோதனைதான்னு.. நிசமாவே அதுதான்..

அடுத்தடுத்த காட்சிகள் வரிசையாக எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ அப்படியேதான் இருந்தது. திரைக்கதைக்காக கொஞ்சமும் மெனக்கடவில்லை போலும்..

அப்பா சரத்தின் அமைதியான வசனத்தைக் கேட்டவுடன் ரவுடிகள் மன்னிப்பு கேட்டு சரண்டராவதில் தொடங்கும் அபத்தம், கடைசிவரையிலும் நம்மை ரவுண்டு கட்டி அடிக்கிறது. தப்பித் தவறி எந்தக் காட்சியிலும் லாஜிக் பார்க்கவே கூடாது. பார்த்தீர்களானால் முழுசுக்கும் விளக்கம் கேட்டு முடிக்கவே ஒரு வருஷமாயிரும்.


ஏர்போர்ட்டில் அறிமுகமாகும் விவேக் துண்டு, துண்டு காட்சிகளில் நடித்து ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார். வெறும் 4 நாட்கள் கால்ஷீட்டில் அவரது போர்ஷனை முடித்து அனுப்பியிருப்பார்களோ என்று நினைக்கிறேன்.. 4-வது ரீலில் வந்து 7-வது ரீலில் விடை பெறுபவர் பின்பு மீண்டும் 13-வது ரீலில்தான் தலையைக் காட்டுகிறார். பெண்களின் உள்ளாடையை வைத்து செய்திருக்கும் காமெடி உவ்வே.. இதுக்கு ‘சின்ன கலைவாணர்' என்ற பெயர் விவேக்கிற்கு கண்டிப்பாக தேவையா..? கொடுமை.. மலேஷிய சின்னப் பெண்ணிடம் அவர் நடத்தும் காமெடி நாடகம் ஏற்கெனவே பல திரைப்படங்களில் பார்த்துதான் என்பதால் புன்னகைக்க மட்டுமே செய்தது..


பர்ஸானா டிவி ரிப்போர்ட்டர். ஏர்போர்ட்டில் சரத்தின் மீது மோதி, உருண்டு, புரண்டு உதட்டில் முத்தம் கொடுத்த பின்பு வழக்கமாக காதலித்து பாட்டு பாடி, கொடுத்த துணிகளை முகம் சுழிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டு வஞ்சகமில்லாமல் ஆடித் தீர்த்திருக்கிறார். கொஞ்சுண்டு நடிப்பிலும் காட்டியிருக்கலாம். வசனத்தை கடித்து, மென்று, துப்புவது தெளிவாகத் தெரிகிறது.. இன்னும் நான்கைந்து வாய்ப்புகள் கிடைத்தால் தேறலாம். கிடைக்குமா..?



அடுத்து நமது தங்கத் தலைவி நமீதா. அம்மணியை பார்த்தவுடனேயே தியேட்டரில் கரகோஷம் காதைப் பிளந்தது. சரத்தே நமீதாவை நம்பித்தான் வியாபாரம் செய்திருக்கிறார் போலும்.. அம்மணி 70 MM திரையையே ஆக்கிரமிக்கும் காட்சியைப் பார்க்க பயமாகத்தான் இருக்கிறது. அறிமுகக் காட்சியில் கடலில் குளிக்கிறார். பின்னர் கரைக்கு வருகிறார். ஷோ காட்டுகிறார். பின்பு மீண்டும் கடலுக்குள் இறங்குகிறார். பாதி பாடலுடன் காட்சி முடிகிறது. மீதி எங்கே? அடுத்தப் படத்தில் வருமா..?


வழக்கறிஞர் வேடம் அவருக்கு.. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே அதற்கான காஸ்ட்யூமில் இருந்தார். கோர்ட் வாசல் மிதிப்பதுபோல் ஒரு காட்சிகூட இல்லாதது கொடுமை.. நமீதா எப்படி வாதாடுவாங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சேன். இயக்குநரு ஏமாத்திட்டாரு..


தப்பித் தவறிகூட நடிப்பைக் காட்ட மாட்டேன் என்று சொல்லி அதைத் தவிர மற்ற அனைத்தையும் பஞ்சமில்லாமல் காட்டுகிறார். ஒரு காட்சியில் சேலையணிந்து வந்து பயமுறுத்துகிறார். பாடல் காட்சிகளில் வாங்கின காசுக்கு வஞ்சகம் செய்யவில்லை. துணிமணிகள் அளவாகத்தான் இருந்தது. நடனத்தின்போது அவர் படும் கஷ்டத்தை பார்த்து எனக்கு நெஞ்சு வலி வருகிறது.. முதலில் நமீதாவை நடமாடச் சொல்லும் இயக்குநர்களை நாடு கடத்த வேண்டும்.. ஸோ நமீதாவின் திரைப்பட சாதனையில் ஒரு படம் கூடுதல்.. அவ்வளவுதான்..

ஜெயசுதாதான் அம்மாவாம்.. ஜெயசுதாவின் புகைப்படத்தைக் காட்டியவுடனேயே கதை புரிந்துவிட்டது.. அதுக்கு எதுக்கு இம்புட்டு பில்டப்பு..?


இயக்குநர் திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கெடவில்லை.. கதாபாத்திரங்களை ஆங்காங்கே, அப்படியே நேருக்கு நேராக, சைடாக என்று அறிமுகப்படுத்திவிட்டார். “நீங்க யாரு?” என்று மகன் கேட்க, “நான் யாரா..? நான் உன் அம்மாடா?” என்று ஜெயசுதா சொல்கின்ற காட்சியில் தியேட்டரில் நக்கல் சிரிப்பு எழுந்தது.

சரத் படம் என்றாலே முதலில் சண்டைக் காட்சிகள் தீவிரமாய் இருக்கும். இதிலும் இருக்கிறது. ஆனால் காமெடியாய் இருந்து தொலைக்கிறது.. நல்ல வேளை.. ஸ்பீட் ஆக்ஷனில் காட்டுவதால் சரத்தின் கஷ்டம் நமக்குத் தெரியவில்லை.. பத்து, இருபது பேரின் துப்பாக்கிக் குண்டு மழையில் சிங்கிள்மேனாக தப்பித்து ஓடுவதில் கில்லாடியாக இருக்கிறார் சரத்.. இதுக்குத்தான் முதலிலேயே சொன்னேன் லாஜிக் பார்க்கவே கூடாதுன்னு..

அப்பா சரத்தின் மேக்கப்பும், நடிப்பும் மிக, மிக செயற்கை.. ஓல்டு மேக்கப்பிலேயே இளமை தெரிகிறது. ஏற்கெனவே சரத் இதே போல் நடித்துவிட்டதால் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை..

காலததிற்கேற்றாற்போல் இருக்கின்ற அனைத்துவித தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சூண்டு டெக்னாலஜியைக் காட்டினால் சரத்தின் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து நிறையவே காட்டியிருக்கிறார்கள். ராதாரவியின் அலுவலகத்திற்குள் இருக்கும் கம்ப்யூட்டர் செட்டப் அவரது ரசிகர்களுக்காக.. ஆனால் அதையாவது புரிகிறாற்போல் சொல்லியிருக்கலாம். எல்லாவற்றையும் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து சொல்ல.. நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் ஆகிவிட்டது..

பாடல் காட்சிகள் முற்பகுதியில் அடுத்தடுத்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வந்து தொலைக்க.. தியேட்டரில் இருந்து எழுந்து வெளியே ஓடுபவர்களை பார்க்க தமாஷாக இருந்தது. முதல் பாடல் காட்சியிலேயே சரத் எம்.ஜி.ஆர். பாணியில் ஆடத் தொடங்கியபோதே படம் எதற்கு? யாருக்காக? என்பதும் புரிந்தது. பர்ஸானா கனவு கண்டாலே ஐயையோ பாட்டா என்று நினைக்க வைத்தது தொடர்ச்சியான அவரது பாடல் காட்சிகள். படத்தில் இடம் பெறும் டூயட் காட்சிகளையும் அதன் முன், பின் இருக்கும் காட்சிகளையும் பார்த்தால் எடிட்டிருக்கு சுத்தமாக வேலையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். ஏதோ தெலுங்கு படம் பார்த்தது போல் இருந்தது..

வித்யாசாகரின் இசை என்றார்கள். பாடல் வரிகளே மனதில் நிற்கவில்லை. பின்பு இசை எப்படி நிற்கும்..? இசை என்றதும் பின்னணி இசை நினைவுக்கு வருகிறது.. 1977-ல் மதுரை வெள்ளைக்கண்ணு தியேட்டரில் நான் பார்த்த தேவர் பிலிம்ஸின் ராம்லஷ்மண் படத்தில் கேட்டதுதான் இந்தப் படத்தின் பின்னணி இசை.. அவ்வளவு ஓல்டு.. ஏன் சாமி இந்த கொலை வெறி..?

ஒருவரை அடித்து வீழ்த்திவிட்டு கேமிரா கோணம் மாறும்போது இரண்டு பேர் தரையில் விழுந்து அழுது கொண்டிருக்கிறார்கள்.. மலேஷியா கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு படகிலேயே வந்து சேர்ந்த காட்சி, படத்தில் மொத்தம் 200 பேரை கொலை செய்திருக்கும் திரைக்கதை, எல்லாம் முடிந்து கடைசியில் தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி வந்து நிற்கும் மலேசிய போலீஸ்.. வாக்கிடாக்கியிலேயே கொஞ்சமும் உணர்ச்சியில்லாமல் ஏர்போர்ட்ல குண்டு வைச்சுட்டாங்களாம் என்று போலீஸ் சொல்வது.. இப்படி எக்கச்சக்க லாஜிக்காக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காட்சிகளை வைத்து ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3 வருடத் தயாரிப்பு. 16 கோடி செலவு என்கிறார்கள். இந்தப் பணத்தில் நேரடியாகவே 16 சீரியல்களைத் தயாரித்திருக்கலாம். ஒரு சீரியலுக்கு 16 கோடி ரூபாய் என்பது டூ மச்..

80 comments:

  1. என்னங்க இது.. நான் இப்போதான் யாவரும் நலம் விமர்சனம் போட்டேன். மொத வரி இதேதான் எழுதியிருக்கேன்!

    இருங்க படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
  2. மொத்தத்துல காசைக் கரியாக்கிட்டு வராதீங்கடே-ங்கறீங்க. ரைட்டு!

    யாவரும் நலம் எக்ஸலெண்ட் ஹாரர் படம்க. நிச்சயமா மிஸ் பண்ணிடாம பாருங்க. சூப்பர்பா ஸ்க்ரீன் ப்ளே பண்ணியிருக்காரு. காமெடி, பாட்டு அதிகமில்ல, ஃபைட் இல்ல. கட்டிப்போட்டுடறாரு!

    ReplyDelete
  3. //பரிசல்காரன் said...
    என்னங்க இது.. நான் இப்போதான் யாவரும் நலம் விமர்சனம் போட்டேன். மொத வரி இதேதான் எழுதியிருக்கேன்!
    இருங்க படிச்சுட்டு வரேன்.//

    அது எப்படி நான் விமர்சனம் எழுதப் போறேன்னு உங்களுக்குத் தெரிஞ்சது..? ஏதோ ஒண்ணுன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  4. //பரிசல்காரன் said...
    மொத்தத்துல காசைக் கரியாக்கிட்டு வராதீங்கடே-ங்கறீங்க. ரைட்டு!//

    அப்படிச் சொல்லலை பரிசலு..

    நானும் சினிமாலதான் இருக்கேன்.. அப்படி பார்க்கக் கூடாத படம்னுல்லாம் எதையும் சொல்ல மாட்டேன்..

    ஒரு தடவை பார்க்கலாம்.. ஆனா கதை இப்படித்தான் இருக்குன்னு சொல்லிர்றேன்.. அவ்ளோதான்.. நமக்கும் மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல ஸார்..

    //யாவரும் நலம் எக்ஸலெண்ட் ஹாரர் படம்க. நிச்சயமா மிஸ் பண்ணிடாம பாருங்க. சூப்பர்பா ஸ்க்ரீன் ப்ளே பண்ணியிருக்காரு. காமெடி, பாட்டு அதிகமில்ல, ஃபைட் இல்ல. கட்டிப் போட்டுடறாரு!//

    நேத்திக்கு கேபிளாரும் இதைத்தான் சொன்னாரு.. திங்கட்கிழமைதான் பார்க்கோணும்.. பார்த்தர்றேன்..

    வருகைக்கு நன்றி பரிசலு..!

    ReplyDelete
  5. /அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு../


    நீங்க அதிகம் படம் பார்ப்பது இல்லையோ....இப்போது வருகிற படங்களில் பெரும்பாலும் நீங்க சொல்லுகிற மாதிரி தானே இருக்கு...:)

    ReplyDelete
  6. /நமீதா எப்படி வாதாடுவாங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சேன்./

    ஆரம்பமே...டேய் மச்சின்னு இருக்கும்.....:)

    ReplyDelete
  7. /கிட்டத்தட்ட 3 வருடத் தயாரிப்பு. 16 கோடி செலவு என்கிறார்கள். இந்தப் பணத்தில் நேரடியாகவே 16 சீரியல்களைத் தயாரித்திருக்கலாம். ஒரு சீரியலுக்கு 16 கோடி ரூபாய் என்பது டூ மச்../


    ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  8. நமீதாவுக்காகவாவது படம் பார்க்க முடியாதா? என்னய்யா இது தமிழ் ரசிகனுக்கு வந்த சோதனை.. :((

    ReplyDelete
  9. எச்சரிக்கை!

    அடுத்தடுத்த பதிவுகளில் நமீதாவைத் தாக்கி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்!
    தமிழ்மணத்துலே உங்களுக்கு கட்டம் கட்டிடுவோம்!

    ReplyDelete
  10. தம்பி!
    உன்மைத் தமிழா! நீ எதையும் தாங்கும் இதயம் கொண்டிருக்கிறாய்!

    இல்லையெனில் தேடிப் போய் இத்தகு திரைக்காவியத்தைக் கண்டு வந்திருப்பாயா?

    ReplyDelete
  11. இந்த மொக்கை படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  12. ஒரு சீரியல் எடுத்து 3 வருஷம் தினமும் சனத்தை கொடுமை படுத்துவதைவிட இது பரவாயில்லை என்று சந்தோஷப்படுங்கள்

    ReplyDelete
  13. ஒரே வரியில
    குப்பைன்னு முடிச்சிருக்கலாம்.

    உங்களுக்கு விரலு தேஞ்சு ரெண்டு இஞ்சுக்கு ஆகப்போகுது பாருங்க!

    ReplyDelete
  14. //இந்த மொக்கை படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அதான் எங்க அண்ணாத்தெயோட ஸ்பெஷாலிட்டி!

    "ஏய்" படத்துல ஒத்த ரூவா ஸ்டாம்பை வெச்சிகிட்டு மணிக்கணக்கா பேசுற மானேஜர் சீனா மாதிரி எங்க ஆளு!

    ReplyDelete
  15. இப்படி ஒரு அறுவை படத்துக்கு இவ்வளவு நீளமா விமர்ச்சனம்.
    படத்தை விட, உங்க விமர்சனத்தை தாங்கமுடியல!

    மோசமான படத்தை, மீண்டும் மீண்டும் மனசுல ஓட விடுவது பெரிய சித்திரவதை.

    தொடர்ச்சியாக இப்படியே எழுதினீங்கன்னா, உங்க எதிர்கால மனநிலை கொஞ்சம் சிரமம் தான்.

    ReplyDelete
  16. ஏவ்வ்வ்வ்....இவ்வளவு நீள விமர்சனமா ஒரு டப்பா படத்துக்கு....ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லியிருக்கலாமே...

    உங்கள் பதிவுகள் பிரமாதம். இது தான் எனது முதல் வருகை.

    ReplyDelete
  17. அஞ்சாதே படத்திற்கு விமர்சனம் எழுதியவர் 1977 படத்திற்கும் விமர்சனம் எழுத நேர்ந்த காலக்கொடுமையை என்னன்னு சொல்ல...

    ReplyDelete
  18. HAVE LIST 393 FILMS UNDER PROIDUCTION...PLS POST IT ..I DONT KNOW IT WILL MAKE IT INTO THEATRE OR NOT ???

    LIST FOLLOW..
    ANTHONY YAAR
    AIYAN
    ADADA ENNA AZHAGU
    ANANDHA DHANDHAVAM
    ADHE NERAM ADHE IDAM
    ANDORU NAAL
    ARUVADAI
    ANGADHI THERU
    AYIRATHIL ORUVAN
    ACCHAMUNDU ACCHAMUNDU
    AIYYAN
    ADHIVASHIYUM ADISIYA PESIYUM
    ALANGUDI
    ALAGAR MALAI
    ANDAAL ALAGAR
    ANAL KATRU
    ARIYADHA VAYASU
    AALI
    ADHISIYA ULAGAM
    AGARAATHI
    AGAM ARIYA AVAL
    AARAVADHU VANAM
    ALAIYODU VILAYADHU
    AARBATTAM
    ANIL
    AGAMPURAM
    ANBULLA DROHI
    AASAI PARAVAI
    AARUMUGHAM
    ADHISIYA MANALMADHA
    ATTA NAYAGAN
    ARTHANARI
    AARAMBAM
    AMOGA VETRI
    AARU MANAME
    ANANDHAM AYIRAM
    AVAL PEYAR TAMILARASI
    ARJUNAN KHADALI
    ASHOGA VANAM
    ANANDHAM ARAMBHAM
    ADI NARAYANA
    A PIRIVU MANAVARGAL
    AARAVAARAM
    AGAYA JANNAL
    AARANYAKANDAM
    AADUKALAM
    AANPAVAM
    AADHAVAN
    AGILAME ARUMUGA
    ADHAGALAM
    ASAL
    BALAM
    BOKKISHAM
    BRAMMA DEVA
    BHAVANI
    BHUDHAN
    BAYAM ARIYAN
    BAANA
    CHENNAIYIL ORU MALIKKALAM
    CHERA NATTU SOLAIYILE
    CHINNA MALAR
    CHINNA THERU
    CHIRAISALAI MUTHUPANDI
    CHIRUTTHAI
    CA POO THIRI
    CHAIDAPET
    CINEMAKKU POROM
    CHITHIRAME NILLADI
    CHITHIRA POO
    DHAIRIAM
    DRONA
    DESINGU RAJA
    DROGI
    DAYAVU SEIDHU YARAVADHU ENNAI KATHALINGA
    ENGA RAASI NALLA RASSI
    EESHA
    EERAM
    ENNAI EPPADI MAYAKKINAI
    ENGAL THAI SAKTHEESWARI
    EN KATHAL DEVADHAI
    EN PEYAR KUMARASAMY
    EN PEYAR KADHAL
    ENNULLE
    EERAAA
    ENDHIRAN
    ENGA VEETU PILLAI
    EN OVIYA
    ECCHARIKKAI
    GURU EN AALU
    GOA
    ILAMPUYAL
    INDHIRA VIZA
    INDHAM PADAI
    INDHAM PIRAI
    IDI
    IMAYAMALAI
    IDHYATHIL NEE
    INIDHU INIDHU
    IDAM VALAM
    IDHU MALAI NERATHU MAYKKAM
    INDIAN
    IMPULAN
    IRUMBUKOTTAI MURATTU SINGAM
    JHON
    JEHAN MOHINI
    JHOTHI
    JAGGUBHAI
    KANGALUM KAVI PADUTHEY
    KARTHEEGAI
    KARISAL MANN
    KULIR 100 DEGEREE
    KARUVARAI POOKKAL
    KUNGUMA POOVUM KONJU PURAVUM
    KARTHIK ANITHA
    KRISHNALEELAI
    KANDASAMY
    KAVASAM
    KADHAL MOZHI
    KHADALAN KHADALI
    KATHAL POLLATHADHU
    KATHAL EDHUVARAI 2020
    KATHAL MEIPADA
    KATHAL 2 KALYANAM
    KADHALAR KATHAI
    KADHAL PARVAI
    KADHAL KANAVU
    KADALUKKU MARANAMILLAI
    KATHAL OSAI
    KATHALE VASAMAKI
    KATHALAGI
    KANNADI ITHAYAM
    KANNABIRAN
    KATTUPAIYA
    KANIMUGATHAI KATTINAAL
    KOMBU DEVAN
    KETTAVAN
    KALIYUGA GANAPATHI
    KURUKKU PUTHI
    KUTHIRAI
    KILLADI
    KANAGAVEL KAKKA
    KARUPPANANIN KHADHALI
    KARUVELAKKADU
    KANDHA
    KANNE KANIMOZIYE
    KARUVARAI
    KANDHAN KUMARAN
    KADARKARAI
    KOTTARAM TALUKKA TIRUNELVELI JILLA
    KANAVU PATTARAI
    KUDUMI
    KARAGAM
    KATHAI
    KUYIL
    KADAA
    KITTURAAJ
    KAILA KASSU VAYILA DOSA
    KUTTY
    KULASAMY
    KATHIRVEL
    KAVERITHALAIVAN
    KANDHEIN KHADALAI
    KALYANAM
    LAVANYA EN KHADALI
    LURDU MARRY
    LEELAI
    MITTAI
    MOONDRAM POURNAMI
    MANJAL VEIYIL
    MADHAVI
    MEIPORUL
    MADHAN
    MINSARAM
    MAYILU
    MATTUTHAVANI
    MUDHALVAR MAGHATMA
    MAILA
    MUTHIRAI
    MASCOWIN KAVIRI
    MARMAYOGI
    MARU AVATHARAM
    MODHI VILAYADU
    MANNIL INTHA KATHAL
    MULUNILAVU
    MARAINDIRUNDU PARKUM MARMAM ENNA
    MUTHAL KATHAL
    MURATTU KAALAI
    MUNNAR
    MAGANE EN MARUMAGANE
    MAMALLAN
    MALAYIAN
    MALAIKALLAN
    MEDHAI
    MARIYADHAI
    MAA
    MALAI MALAI
    MUGAMMOODI
    MALAIYUR MAMBATIYAN
    MAANAVAR DHINAM
    MARUPADIYUM ORU KHADAL
    MAKKAL THILAGAM
    MAYANDI KUDUMBATHAR
    MOONDRAM PIRAVI
    MAZAI VARAPPOGUTHU
    MADHARSIPATANAM
    MOONDRU NATKAL
    MASILAMANI
    MADURAI SAMBHAVAM
    MATHIYA CHENNAI
    MEENDUM MEENDUM
    MAHARAJA
    MATHIYOSI
    MUNTHINAM PARTHENE
    MAYA POOKAL
    MAGILCHI
    NEWTONIN MOONDRAM VIDHI
    NESI
    NANDHA LALA
    NAAN AVAL ADHU
    NENJIL THUNIVIRUNDAL
    NAALAI NAMADE
    NESIKIREN
    NINAIVIL NINDRAVAL
    NAAN
    NALVARAVU
    NINAITHALE INIKKUM
    NOOTRUKKU NOORU
    NEE SOLLUVENU NINAICHEN
    NETRU MUDHAL INDRU VARAI
    NADODIGAL
    NETRUPOL INDRU ILLAI
    NEEYE
    NOORAVADHU NAAL
    NAAL NATCHATHIRAM
    NAIKUTTY
    NAALUM THERINGA RENDU PER
    NAAKU MOOKU
    NATPUKOTTAI
    NAANAYAM
    NUGAM
    NAMNADU
    OLIYUM OLIYUM
    ORU NADIGAIYIN SARITHIRAM
    ORU KOODAI MUTHAM
    ORU THALAI KADHAL
    ODUM MEGANGALE
    ODI POLAMA
    OTTHAKAI MUTHURAKKU
    OOLAICUVADI
    OTHAIKKU OTHA
    POLLACHI MAPPILLE
    PULANVISARANAI
    PATTALAM
    POOVA THALAIYA
    POOMALAIYE THOL SERAVA
    PERAANMAI
    PAYANAGAL MUDIVATHILLAI
    POOCHANDI
    PRABA ENDRA KARAN
    PARRKA PARRKA
    PATTHAVADHU PADICHITTU SUMMA IRUKKOM
    PANDI NAATU SEEMAILE
    PARAMAPATHAM
    PAAL
    PUDHIYA VAARPPUGAL
    PESUVADHU KILIYA
    POOKADA RAVI
    PONNAR SHANKAR
    PHUDIYA PAYANAM
    PALLIKONDAPURAM
    PARKALAM PALAGALAM
    POODA POODI
    PAALAI
    POKKIRI RAJA
    PUDIR
    PUGAIPADAM
    PETTAI MUDAL KOTTAI VARAI
    PAISA
    PAIYA
    PASANGA
    POLICE POLICE
    PINGU MANASU
    PRABAKARAN
    PIRAVI UNAKKAGATHAAN
    PUDIYA SATTAM
    PANDI DESAM
    RASIKKUM SEEMANE
    RAGAVAN BE
    RANJIT
    RAJATHI RAJA
    RAGASIYA SINAGITHANE
    RAKOZHI
    RETTAI SUZI
    RAMAN NALLA PILLAI
    RENIGUNDA
    RAILU
    SATHURANGAM
    SOLLI ADIPPEN
    SINDHANAI SEI
    SARVAM
    SOLLATHADHU
    SADHAM
    SULTHAN THE WARRIOR
    SANKARA
    SEETRAM
    SIVAMAIYAM
    SACHU STILL SWEET16
    SINGAM
    SARITHIRAM
    SONNADHU NEE THAANA
    SIDHARTHA
    SOLLA SOLLA INIKKUM
    SAMI PULLA
    SURULIMALAI
    SOORIYAN SATTAKALLOORI
    SURANGANI
    SIVAPPU NILA
    SARAVEDI
    SIVAPPU ROJAKKAL
    SIRITHAL RASIPPEN
    SOWKAR PETTAI
    SANGAMITRA
    SOLLI THERIVATHILLAI
    SANGARANKOVIL
    SEMPULI
    SINHAI MAYAKUTHADI
    SAGUNI
    THALAIKEEZH
    THUNICHAL
    THANTHIRAN
    THAI KAVIYAM
    THAVANI POTTA DEEPAVALI
    TAMILZ DESAM
    THINDIVANAM
    THIRUMATHI TAMIL
    THOZAR ZEEVA
    THULLUM ILA NENJE
    THOTTU SELLUM THENDRLE
    THAMILAGAM
    THIRUNNA
    THOTTU PAAR
    THILLU MULLU
    THAMBIVUDAIYAN
    THIRUVAACHAGAM
    THALAIVAN IRUKKINDRAN
    THIRU MANASU
    TAMIL THALAPATHI
    THORANAI
    THIRUMANAM ENGIRA NIKKAH
    THAMBIKKU INDHA OORU
    THEERADHA VELAYTTU PILLAI
    UCCHAKATTAM
    UTHIRAM
    UNNAI KAN THEDUTHE
    ULAGAM SUTRUM VALIBAN
    UPPU MOOTAI
    VEDIGUNDU MURUGESAN
    VANNATHUPOOCHI
    VANNAKALANGIAM
    VAIDEGI
    VETRI NICHYAM
    VISARANAI
    VAALI VATHAM
    VITHAGAN
    VALMIGI
    VANAKKAMMA
    VIDIYUM VARAI KATHIRU
    VELU NAYAKKAR
    VAADA
    VETAIKKAARAN
    VETTU
    VAAMANAN
    VIRUTHAGIRI
    VILAYADU RAJA VILAYADU
    VANAM PARTHA SEEMAILE
    VETTAI PULI
    VAIGAI
    VAZHAKKU EN 18/7
    VILIGAL
    VARUTHAPADATHA VALIBAR SANGAM
    VALAVANDHAN
    VINNAI THANDI VARUVAYA
    VATTI
    VASU
    VATTAPARAI
    VITTHAI
    YOGI
    YAAR NEE
    YAARUKKU THERIUM
    YAGAVAN
    YADHUMAGI
    YEN INTHA MOUNAM
    16

    ReplyDelete
  19. // தமிழ்ச் சினிமாவின் 1001-வது முறையாக கதாநாயகனும், கதாநாயகியும் மோதிக் கொண்டும்//

    இவ்வளவு கம்மியாவா படம் பார்த்து இருக்கீங்க? சரியா சொல்லனும்னா 10001.

    ReplyDelete
  20. என்னை காப்பாற்றிய நண்பருக்கு மிகவும் நன்றி.அப்பாடா,.நூறு ருபாய் மிச்சம் ஆனது

    ReplyDelete
  21. /ஒரே வரியில
    குப்பைன்னு முடிச்சிருக்கலாம்.

    உங்களுக்கு விரலு தேஞ்சு ரெண்டு இஞ்சுக்கு ஆகப்போகுது பாருங்க!//

    அட நீங்க வேற!

    இவரு டேட்டா எண்ட்ரிக்கு ஆளு போட்டுட்டு டிக்டேட் பண்ணுறாருங்க!

    ReplyDelete
  22. // Rajeswari said...

    என்னை காப்பாற்றிய நண்பருக்கு மிகவும் நன்றி.அப்பாடா,.நூறு ருபாய் மிச்சம் ஆனது//

    என்ன! நூறு ரூவாய்க்கு விஷம் வாங்குவீங்களா எப்பவுமே?

    ReplyDelete
  23. //நொந்தகுமாரன் said...

    இப்படி ஒரு அறுவை படத்துக்கு இவ்வளவு நீளமா விமர்ச்சனம்.
    படத்தை விட, உங்க விமர்சனத்தை தாங்கமுடியல!

    மோசமான படத்தை, மீண்டும் மீண்டும் மனசுல ஓட விடுவது பெரிய சித்திரவதை.

    தொடர்ச்சியாக இப்படியே எழுதினீங்கன்னா, உங்க எதிர்கால மனநிலை கொஞ்சம் சிரமம் தான்.//

    இப்பத்தான் நிஜமாலுமே நொந்தகுமாரன் என்ற பெயர்க்காரணம் தெரிகிறது!

    ReplyDelete
  24. //நிஜமா நல்லவன் said...

    :)//

    நி.நல்லவன்ஜி.. முதல் வருகையோ..? சிம்பாலிக்கா ஆரம்பிக்கிறீங்க..!

    ReplyDelete
  25. ///நிஜமா நல்லவன் said...

    /அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு../

    நீங்க அதிகம் படம் பார்ப்பது இல்லையோ. இப்போது வருகிற படங்களில் பெரும்பாலும் நீங்க சொல்லுகிற மாதிரிதானே இருக்கு:)///

    அது சமத்துவ தலைவரின் படத்திலுமா..? எவ்வளவு அனுபவசாலி அவர்.. அவரும் ஏமாறலாமா..?

    ReplyDelete
  26. //நிஜமா நல்லவன் said...

    /நமீதா எப்படி வாதாடுவாங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சேன்./

    ஆரம்பமே... டேய் மச்சின்னு இருக்கும்.....:)//

    ஆஹா.. சூப்பரா எடுத்துக் குடுக்குறீங்க ஸார்..!

    ReplyDelete
  27. //புருனோ Bruno said...

    :) :)//

    நன்னி.. நன்னி..

    ReplyDelete
  28. //நிஜமா நல்லவன் said...

    /கிட்டத்தட்ட 3 வருடத் தயாரிப்பு. 16 கோடி செலவு என்கிறார்கள். இந்தப் பணத்தில் நேரடியாகவே 16 சீரியல்களைத் தயாரித்திருக்கலாம். ஒரு சீரியலுக்கு 16 கோடி ரூபாய் என்பது டூ மச்../


    ஹா...ஹா...ஹா...//

    உண்மையைத்தான் சொல்றேன் நல்லவன் ஸார்.. வேஸ்ட்தான..!

    ReplyDelete
  29. //தமிழ் பிரியன் said...
    நமீதாவுக்காகவாவது படம் பார்க்க முடியாதா? என்னய்யா இது தமிழ் ரசிகனுக்கு வந்த சோதனை..:((//

    பார்க்கலாம்.. தாரளமா பார்க்கலாம்.. நமீதாவைப் பார்க்கணும்னா தாராளமா போங்க..!

    ReplyDelete
  30. //நமீதா ரசிகர் மன்றம் said...

    எச்சரிக்கை!

    அடுத்தடுத்த பதிவுகளில் நமீதாவைத் தாக்கி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்!
    தமிழ்மணத்துலே உங்களுக்கு கட்டம் கட்டிடுவோம்!//

    ஓ.. தமிழ்மணம் நமீதாவோட கம்பெனியா..? தெரியாம போச்சே..! எப்பல இருந்து..?!

    ReplyDelete
  31. //அண்ணா said...

    தம்பி!
    உன்மைத் தமிழா! நீ எதையும் தாங்கும் இதயம் கொண்டிருக்கிறாய்!

    இல்லையெனில் தேடிப் போய் இத்தகு திரைக்காவியத்தைக் கண்டு வந்திருப்பாயா?//

    உண்மைதான் அண்ணா..

    உனது இரவல் இதயம், என்னிடம்.. என்னிடம் மட்டுமே இருப்பதால்தான் இது போன்ற கொடுமைகளையெல்லாம் என்னால் தாங்கிக் கொள்ள முடிகிறது..

    வாழ்க அண்ணா நீ..! என்றென்றும் வாழ்க..!

    ReplyDelete
  32. //அத்திரி said...
    இந்த மொக்கை படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    மொக்கை படமா..? அப்படீன்னா..!?

    ReplyDelete
  33. //அருண்மொழிவர்மன் said...
    ஒரு சீரியல் எடுத்து 3 வருஷம் தினமும் சனத்தை கொடுமை படுத்துவதைவிட இது பரவாயில்லை என்று சந்தோஷப்படுங்கள்.//

    அப்படீங்கிறீங்க..! சரி. ஓகே.. இப்படியும் ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ளலாம்.. நன்றி அருண்மொழி ஸார்..!

    ReplyDelete
  34. //வால்பையன் said...
    ஒரே வரியில குப்பைன்னு முடிச்சிருக்கலாம். உங்களுக்கு விரலு தேஞ்சு ரெண்டு இஞ்சுக்கு ஆகப்போகுது பாருங்க!//

    அப்படிச் சொல்ல முடியாது வாலு..!

    ஒரு தடவை பார்க்கலாம்.. அம்புட்டுத்தான்..!

    ReplyDelete
  35. ///நாமக்கல் சிபி said...

    //இந்த மொக்கை படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அதான் எங்க அண்ணாத்தெயோட ஸ்பெஷாலிட்டி! "ஏய்" படத்துல ஒத்த ரூவா ஸ்டாம்பை வெச்சிகிட்டு மணிக்கணக்கா பேசுற மானேஜர் சீனா மாதிரி எங்க ஆளு!///

    இப்படியும் ஒரு பாராட்டா..! முருகா நீ ரொம்ப, ரொம்ப நல்லவன்யா..

    ReplyDelete
  36. //நொந்தகுமாரன் said...
    இப்படி ஒரு அறுவை படத்துக்கு இவ்வளவு நீளமா விமர்ச்சனம்.
    படத்தை விட, உங்க விமர்சனத்தை தாங்கமுடியல! மோசமான படத்தை, மீண்டும் மீண்டும் மனசுல ஓட விடுவது பெரிய சித்திரவதை.
    தொடர்ச்சியாக இப்படியே எழுதினீங்கன்னா, உங்க எதிர்கால மனநிலை கொஞ்சம் சிரமம்தான்.//

    அறிவுரைக்கு மிக்க நன்றி நொந்தகுமாரன் ஸார்..

    ReplyDelete
  37. //Shankar said...
    ஏவ்வ்வ்வ்.... இவ்வளவு நீள விமர்சனமா ஒரு டப்பா படத்துக்கு.... ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லியிருக்கலாமே...//

    எப்படி குப்பையாகும் என்று யாராவது கேட்டால்..?

    ஒரு முறை பார்க்கலாம்.. தப்பில்லை..

    //உங்கள் பதிவுகள் பிரமாதம். இதுதான் எனது முதல் வருகை.//

    மிக்க நன்றி சங்கர் ஸார்.. அடிக்கடி வாங்க..!

    ReplyDelete
  38. //KVR said...
    அஞ்சாதே படத்திற்கு விமர்சனம் எழுதியவர் 1977 படத்திற்கும் விமர்சனம் எழுத நேர்ந்த காலக்கொடுமையை என்னன்னு சொல்ல...//

    என்ன செய்றது..? காலத்தின் கட்டாயம்.. அனுபவித்துதான் தீர வேண்டும்..!

    ReplyDelete
  39. ///ஹாலிவுட் பாலா said...
    // தமிழ்ச் சினிமாவின் 1001-வது முறையாக கதாநாயகனும், கதாநாயகியும் மோதிக் கொண்டும்//

    இவ்வளவு கம்மியாவா படம் பார்த்து இருக்கீங்க? சரியா சொல்லனும்னா 10001///

    இவ்ளோ அதிகமாவா படம் பார்த்திருக்கீங்க.. கண்ணு என்னாகுறது..? பார்த்து.. உடம்பை பார்த்துக்குங்க பாலா..!

    ReplyDelete
  40. //Rajeswari said...

    என்னை காப்பாற்றிய நண்பருக்கு மிகவும் நன்றி. அப்பாடா, நூறு ருபாய் மிச்சம் ஆனது.//

    அப்ப இதுல இருந்து ஒரு ஐம்பது ரூபாயை என் கணக்குல போட்டிரு..

    ReplyDelete
  41. //HAVE LIST 393 FILMS UNDER PROIDUCTION...PLS POST IT ..I DONT KNOW IT WILL MAKE IT INTO THEATRE OR NOT ???//

    தயவுசெஞ்சி இந்த பின்னூட்டத்தை மட்டும் இன்னொருதபா காப்பி பண்ணி போட்டு பதில் சொல்லாதீங்க!

    மறுபடி அதே மாதிரி டைப் அடிச்சி வேணா பதில் சொல்லிங்க!

    ReplyDelete
  42. //அப்ப இதுல இருந்து ஒரு ஐம்பது ரூபாயை என் கணக்குல போட்டிரு..//

    இன்னொரு 100 ரூவா போட்டு 150 ரூவாயா உண்மைத் தமிழன் சார்பா என் அக்கவுண்ட்ல போடவும்!

    ReplyDelete
  43. //என்ன செய்றது..? காலத்தின் கட்டாயம்.. அனுபவித்துதான் தீர வேண்டும்..!//

    இதைப் படிக்கறவங்களைத்தானே சொல்றீங்க?

    ReplyDelete
  44. தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட்டை அனுப்பியிருக்கும் அனானி அவர்களே..!

    எப்படி இதை நீட்டிட்டேன் பார்த்தியா முருகா..!

    உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி.. பின்னாளில் இது நிச்சயம் எனக்கு உதவும்.. நன்றியோ நன்றி..!

    ReplyDelete
  45. //நாமக்கல் சிபி said...

    /ஒரே வரியில
    குப்பைன்னு முடிச்சிருக்கலாம்.

    உங்களுக்கு விரலு தேஞ்சு ரெண்டு இஞ்சுக்கு ஆகப்போகுது பாருங்க!//

    அட நீங்க வேற!

    இவரு டேட்டா எண்ட்ரிக்கு ஆளு போட்டுட்டு டிக்டேட் பண்ணுறாருங்க!//

    ஆமடா சாமி.. அது ஒண்ணுதான் என் கெட்ட கேட்டுக்கு குறைச்சலு..!

    டைப் பண்ண ஆளு வைச்சு அடிக்குற அளவுக்கா இருக்கேன் நானு..?

    நக்கலுக்கு ஒரு அளவு இல்லையா முருகா..!

    ReplyDelete
  46. ///நாமக்கல் சிபி said...
    // Rajeswari said...
    என்னை காப்பாற்றிய நண்பருக்கு மிகவும் நன்றி.அப்பாடா,.நூறு ருபாய் மிச்சம் ஆனது//
    என்ன! நூறு ரூவாய்க்கு விஷம் வாங்குவீங்களா எப்பவுமே?///

    30 ரூபாய்க்கே கடைல கிடைக்குதே.. எதுக்கு நூறு ரூபாய்..?!

    ReplyDelete
  47. ///நாமக்கல் சிபி said...
    //HAVE LIST 393 FILMS UNDER PROIDUCTION...PLS POST IT ..I DONT KNOW IT WILL MAKE IT INTO THEATRE OR NOT ???//

    தயவுசெஞ்சி இந்த பின்னூட்டத்தை மட்டும் இன்னொரு தபா காப்பி பண்ணி போட்டு பதில் சொல்லாதீங்க!
    மறுபடி அதே மாதிரி டைப் அடிச்சி வேணா பதில் சொல்லிங்க!///

    ஏன் கண்ணு இவ்ளோ கொலை வெறி..?! சத்தியமா அப்படியெல்லாம் செய்யலையாக்கும்..

    சிம்பிளாத்தான் போட்டிருக்கேன்..

    திருப்பி அத்தனையையும் நான் டைப் பண்ணணும்னா..! விடிஞ்சிரும்..!

    ReplyDelete
  48. ///நாமக்கல் சிபி said...
    //அப்ப இதுல இருந்து ஒரு ஐம்பது ரூபாயை என் கணக்குல போட்டிரு..//
    இன்னொரு 100 ரூவா போட்டு 150 ரூவாயா உண்மைத் தமிழன் சார்பா என் அக்கவுண்ட்ல போடவும்!///

    எதுக்கு அடுத்தப் படத்துக்கு அட்வான்ஸா..?!

    ReplyDelete
  49. ///நாமக்கல் சிபி said...

    //என்ன செய்றது..? காலத்தின் கட்டாயம்.. அனுபவித்துதான் தீர வேண்டும்..!//

    இதைப் படிக்கறவங்களைத்தானே சொல்றீங்க?///

    ஆமா.. அதுலேயும் உன் நொச்சு இருக்கே.. அதுக்கும் சேர்த்துதான் சொல்றேன்..

    முருகா.. முருகா.. முருகா.

    ReplyDelete
  50. ///நாமக்கல் சிபி said...
    //நொந்தகுமாரன் said...
    இப்படி ஒரு அறுவை படத்துக்கு இவ்வளவு நீளமா விமர்ச்சனம்.
    படத்தை விட, உங்க விமர்சனத்தை தாங்கமுடியல! மோசமான படத்தை, மீண்டும் மீண்டும் மனசுல ஓட விடுவது பெரிய சித்திரவதை.
    தொடர்ச்சியாக இப்படியே எழுதினீங்கன்னா, உங்க எதிர்கால மனநிலை கொஞ்சம் சிரமம் தான்.//

    இப்பத்தான் நிஜமாலுமே நொந்தகுமாரன் என்ற பெயர்க்காரணம் தெரிகிறது!///

    அவரே நொந்து போய்தான் எழுதியிருக்காரு.. தெரியுதுல்ல.. அப்புறம் எதுக்கு வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற..!

    ReplyDelete
  51. நண்பரே.. காலையிலேயே உங்க விமர்சனம் வெளியானதப் பார்த்தேன்.. ஆனா நான் விமர்சனம் எழுத இருந்ததால படிக்கல.. படத்த பார்த்து மண்ட காஞ்சு வந்தேன்.. உங்களுக்கும் அந்த கொடுமை நடந்து இருக்குறதால.. அப்பாடா.. துணைக்கு ஒருத்தர் வந்தாரேன்னு சந்தோசம்..

    ReplyDelete
  52. /
    நாமக்கல் சிபி said...

    //இந்த மொக்கை படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அதான் எங்க அண்ணாத்தெயோட ஸ்பெஷாலிட்டி!

    "ஏய்" படத்துல ஒத்த ரூவா ஸ்டாம்பை வெச்சிகிட்டு மணிக்கணக்கா பேசுற மானேஜர் சீனா மாதிரி எங்க ஆளு!
    /
    :)))

    ReplyDelete
  53. //கார்த்திகைப் பாண்டியன் said...
    நண்பரே.. காலையிலேயே உங்க விமர்சனம் வெளியானதப் பார்த்தேன்.. ஆனா நான் விமர்சனம் எழுத இருந்ததால படிக்கல.. படத்த பார்த்து மண்ட காஞ்சு வந்தேன்.. உங்களுக்கும் அந்த கொடுமை நடந்து இருக்குறதால.. அப்பாடா.. துணைக்கு ஒருத்தர் வந்தாரேன்னு சந்தோசம்..//

    இதுல போயா சந்தோஷப்படுறது..? என்ன செய்றது? நமக்கு நேரம் சரியில்லை.. அவ்ளோதான்..

    சரத்குமாரின் படம் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னுட்டுத்தான் அங்க போய் மாட்டிக்கிட்டேன்.. சரி விடுங்க..

    ReplyDelete
  54. //மங்களூர் சிவா said...
    /நாமக்கல் சிபி said...
    இந்த மொக்கை படத்துக்கும் இவ்ளோ பெரிய விமர்சனமா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    அதான் எங்க அண்ணாத்தெயோட ஸ்பெஷாலிட்டி! "ஏய்" படத்துல ஒத்த ரூவா ஸ்டாம்பை வெச்சிகிட்டு மணிக்கணக்கா பேசுற மானேஜர் சீனா மாதிரி எங்க ஆளு!/
    :)))//

    மங்களூர் தம்பி..

    சவுக்கியம்தானா..?

    ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க..! அப்பவும் ஒரு ஸ்மைலிதானா..?

    நல்லாயிருங்கப்பூ..!

    ReplyDelete
  55. எப்பவும்போல அதே அரைச்ச மசாலானு சொல்றீங்க..!!

    நான்கூட இவர் அரசியல் சார்ந்து படம் இருக்கும்னு நினைச்சேன்.

    ReplyDelete
  56. //newspaanai said...

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.//

    ஏற்கெனவே இணைத்திருக்கிறேன்.. சரி பார்க்கவும்..!

    ReplyDelete
  57. //கணினி தேசம் said...
    எப்பவும்போல அதே அரைச்ச மசாலானு சொல்றீங்க..!! நான்கூட இவர் அரசியல் சார்ந்து படம் இருக்கும்னு நினைச்சேன்.//

    நானும் அப்படின்னு நினைச்சுதான் போனேன்.. ஏறுக்கு மாறா ஆயிப் போச்சு..!

    ReplyDelete
  58. அதென்ன பேருக்கு பின்னாடி, கைதி நம்பர் மாதிரி?

    எனக்கென்னெ சந்தேகம்னா? உங்களை ஒரு தனிமைச் சிறையில் தள்ளி, இப்படி அறுவை படங்களாப் போட்டு, பார்க்க வைச்சு, நீளமா விமர்சனம் எழுதுனா தான்யா சோறுன்னு மிரட்டி, நீங்களும் எழுதுறத மாதிரி இருக்கு!

    எனக்கென்னவோ, அந்த கட்டிப்போட்டு, எழுத வைக்கிற ஆளு நாமக்கல் சிபி தானான்னு ஒரு டவுட்டு. உங்க பதிவில், அவர்தான் நிறைய பதில் சொல்றாரு!

    ReplyDelete
  59. //ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க..! அப்பவும் ஒரு ஸ்மைலிதானா..?
    //


    இதுக்குப்பேர்தான் சொ.செ.சூ வைச்சிக்கிறது!

    அவரையும் பெருசா ஒரு பின்னூட்டம் போடச் சொல்லவா?

    ReplyDelete
  60. //சரத்குமாரின் படம் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னுட்டுத்தான் அங்க போய் மாட்டிக்கிட்டேன்.. சரி விடுங்க..//

    சரி விடுங்க சேம் பிளட்னு சொல்றாருங்க!

    ReplyDelete
  61. //எனக்கென்னவோ, அந்த கட்டிப்போட்டு, எழுத வைக்கிற ஆளு நாமக்கல் சிபி தானான்னு ஒரு டவுட்டு. உங்க பதிவில், அவர்தான் நிறைய பதில் சொல்றாரு!//

    ச்சேச்சே! நான் இன்னும் கொஞ்சம் டெரரா யோசிப்பேன்!
    உ.தமிழனை கட்டிப்போட்டு அவரோட பதிவுகளையே திரும்ப திரும்ப வாசிக்க வைக்கிறதுதான் இன்னும் டெரரா இருக்கும்!

    ReplyDelete
  62. //அதென்ன பேருக்கு பின்னாடி, கைதி நம்பர் மாதிரி?//

    புரொஃபைல் நம்பராம்! அண்ணாத்த பேர்ல போலிகள் யாராச்சும் பின்னூட்டம் போடுறதை ஈஸியா ஐடிண்டிஃபை செய்ய தன் பேரோடு புரொஃபைல் நம்பரையும் சேர்த்து போட்டிருக்கார்!

    (ஐயோ! என் ஃபோட்டோ ஏன் வரமாட்டேங்குது)

    ReplyDelete
  63. //நொந்தகுமாரன் said...
    அதென்ன பேருக்கு பின்னாடி, கைதி நம்பர் மாதிரி?//

    அதுவொரு பெரிய சோகக் கதை நொந்தகுமாரன் ஸார்.. கூடிய சீக்கிரம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க..!

    //எனக்கென்னெ சந்தேகம்னா..? உங்களை ஒரு தனிமைச் சிறையில் தள்ளி, இப்படி அறுவை படங்களாப் போட்டு, பார்க்க வைச்சு, நீளமா விமர்சனம் எழுதுனாதான்யா சோறுன்னு மிரட்டி, நீங்களும் எழுதுறத மாதிரி இருக்கு!//

    ஐயையோ.. இன்னும் அப்படியொரு சூழ்நிலை வரலே ஸார்.. நீங்க வேற பயமுறுத்தாதீங்க.. அப்படியொரு நிலைமை வந்தா நான் தூக்குப் போட்டுத் தொங்க வேண்டியதுதான்..!

    //எனக்கென்னவோ, அந்த கட்டிப் போட்டு, எழுத வைக்கிற ஆளு நாமக்கல் சிபிதானான்னு ஒரு டவுட்டு. உங்க பதிவில், அவர்தான் நிறைய பதில் சொல்றாரு!//

    சிபிக்கு ஆபீஸ்ல வேலையே இல்ல ஸார்.. சும்மா உக்காந்து பெஞ்சு துடைக்குற வேலை.. அதுதான் மானாவாரியா எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டுத் தாக்குறாப்புல.. அவ்வளவுதான்..

    எனக்கும், அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.. இது முருகன் மேல சத்தியம்.. சொன்னா நம்புங்க ஸார்..!

    ReplyDelete
  64. ///நாமக்கல் சிபி said...
    //ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க..! அப்பவும் ஒரு ஸ்மைலிதானா..?//

    இதுக்குப் பேர்தான் சொ.செ.சூ வைச்சிக்கிறது! அவரையும் பெருசா ஒரு பின்னூட்டம் போடச் சொல்லவா?//

    போட்டாத்தான் என்ன தப்புங்குறேன்..?!

    ReplyDelete
  65. ///நாமக்கல் சிபி said...

    //சரத்குமாரின் படம் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னுட்டுத்தான் அங்க போய் மாட்டிக்கிட்டேன்.. சரி விடுங்க..//

    சரி விடுங்க சேம் பிளட்னு சொல்றாருங்க!///

    ஓஹோ.. ஏன் இது எங்களுக்குத் தெரியாதாக்கும்..!

    ReplyDelete
  66. ///நாமக்கல் சிபி said...

    //எனக்கென்னவோ, அந்த கட்டிப்போட்டு, எழுத வைக்கிற ஆளு நாமக்கல் சிபி தானான்னு ஒரு டவுட்டு. உங்க பதிவில், அவர்தான் நிறைய பதில் சொல்றாரு!//

    ச்சேச்சே! நான் இன்னும் கொஞ்சம் டெரரா யோசிப்பேன்! உ.தமிழனை கட்டிப்போட்டு அவரோட பதிவுகளையே திரும்ப திரும்ப வாசிக்க வைக்கிறதுதான் இன்னும் டெரரா இருக்கும்!///

    அடப்பாவி முருகா..! உனக்கு சிஸ்டர் கவிதாதான் லாயக்கு..

    அன்பா சொன்னா அடங்க மாட்டியா நீயி..?!

    ReplyDelete
  67. ///உண்மைத்தமிழன்(15270788164745573644) said...

    //அதென்ன பேருக்கு பின்னாடி, கைதி நம்பர் மாதிரி?//

    புரொஃபைல் நம்பராம்! அண்ணாத்த பேர்ல போலிகள் யாராச்சும் பின்னூட்டம் போடுறதை ஈஸியா ஐடிண்டிஃபை செய்ய தன் பேரோடு புரொஃபைல் நம்பரையும் சேர்த்து போட்டிருக்கார்!

    (ஐயோ! என் ஃபோட்டோ ஏன் வரமாட்டேங்குது)///

    எவன் போடுவான்..?

    என்னிக்காச்சும் உருப்படியா, நாலு பேரு படிச்சு, பாராட்டுற மாதிரி பதிவு போட்டிருக்கியா நீயி..!?

    ReplyDelete
  68. ////newspaanai said...

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.//

    ஏற்கெனவே இணைத்திருக்கிறேன்.. சரி பார்க்கவும்//

    கரெக்டா இணைக்கலைன்னா மாதச் சந்தா வராது! அப்புறம் முருகா கந்தான்னெல்லாம் கதறப் பிடாது!

    ReplyDelete
  69. ///நாமக்கல் சிபி said...

    //எனக்கென்னவோ, அந்த கட்டிப்போட்டு, எழுத வைக்கிற ஆளு நாமக்கல் சிபி தானான்னு ஒரு டவுட்டு. உங்க பதிவில், அவர்தான் நிறைய பதில் சொல்றாரு!//

    ச்சேச்சே! நான் இன்னும் கொஞ்சம் டெரரா யோசிப்பேன்! உ.தமிழனை கட்டிப்போட்டு அவரோட பதிவுகளையே திரும்ப திரும்ப வாசிக்க வைக்கிறதுதான் இன்னும் டெரரா இருக்கும்!///

    அடப்பாவி முருகா..! உனக்கு சிஸ்டர் கவிதாதான் லாயக்கு..

    அன்பா சொன்னா அடங்க மாட்டியா நீயி..?!//

    ஓஹோ! உங்களைக் கட்டிப்போட்டு அவங்க பதிவுகளை படிக்க வெச்சாத்தான் டெரரா இருக்கும்னு சொல்றீங்களா?

    என்னதான் தண்டிச்சாலும் மனசுக்குள்ளே உங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு! அதனாலதான் அவங்க பதிவை வாசிக்க செய்ய மாட்டேன்!

    ReplyDelete
  70. //
    என்னிக்காச்சும் உருப்படியா, நாலு பேரு படிச்சு, பாராட்டுற மாதிரி பதிவு போட்டிருக்கியா நீயி..!?//

    உங்களைக் கலாய்ச்சி பதிவாவே போடணும்னு எதிர்பார்க்குறீங்க!

    ரைட்டேய்!

    ReplyDelete
  71. //ஓஹோ! உங்களைக் கட்டிப்போட்டு அவங்க பதிவுகளை படிக்க வெச்சாத்தான் டெரரா இருக்கும்னு சொல்றீங்களா?//

    சிபி..அடங்கவே மாட்டீங்களா நீங்க? இன்னொரு கன்னமும் பழம்'ஆனாத்தான் அடங்குவேன் சொன்னா , ஒன்னும் இல்ல தங்கமணி ஒரு ஃபோன் போதும்.. :)

    ReplyDelete
  72. //உங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு! அதனாலதான் அவங்க பதிவை வாசிக்க செய்ய மாட்டேன்!//

    ம்ம்...ரொம்ப நல்லலலலலலவர் நீங்க....

    ReplyDelete
  73. //அடப்பாவி முருகா..! உனக்கு சிஸ்டர் கவிதாதான் லாயக்கு..//

    ம்ம்..இப்ப இது இங்க தேவையா? நான் பாட்டும்க்கு சிவனேன்னு எங்கையோ இருக்கேன்.. எதுக்கு...நமக்கு இந்த எக்ஸாம்புல் எல்லாம்.. ம்ம் !!! ?????

    //அன்பா சொன்னா அடங்க மாட்டியா நீயி..?!//

    அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுவது இல்லை ..!! :) இது தெரியாத உங்களுக்கு...

    ReplyDelete
  74. ///Newspaaani Admin said...
    //newspaanai said...
    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.//
    ஏற்கெனவே இணைத்திருக்கிறேன்.. சரி பார்க்கவும்//

    கரெக்டா இணைக்கலைன்னா மாதச் சந்தா வராது! அப்புறம் முருகா கந்தான்னெல்லாம் கதறப் பிடாது!///

    இதுவும் நீதானா..? முருகா.. இவன்கிட்டேயிருந்து என்னை காப்பாத்த மாட்டியா..!

    ReplyDelete
  75. ///நாமக்கல் சிபி said...
    //நாமக்கல் சிபி said...
    எனக்கென்னவோ, அந்த கட்டிப்போட்டு, எழுத வைக்கிற ஆளு நாமக்கல் சிபி தானான்னு ஒரு டவுட்டு. உங்க பதிவில், அவர்தான் நிறைய பதில் சொல்றாரு!//

    ச்சேச்சே! நான் இன்னும் கொஞ்சம் டெரரா யோசிப்பேன்! உ.தமிழனை கட்டிப்போட்டு அவரோட பதிவுகளையே திரும்ப திரும்ப வாசிக்க வைக்கிறதுதான் இன்னும் டெரரா இருக்கும்!/

    அடப்பாவி முருகா..! உனக்கு சிஸ்டர் கவிதாதான் லாயக்கு.. அன்பா சொன்னா அடங்க மாட்டியா நீயி..?!//

    ஓஹோ! உங்களைக் கட்டிப்போட்டு அவங்க பதிவுகளை படிக்க வெச்சாத்தான் டெரரா இருக்கும்னு சொல்றீங்களா? என்னதான் தண்டிச்சாலும் மனசுக்குள்ளே உங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு! அதனாலதான் அவங்க பதிவை வாசிக்க செய்ய மாட்டேன்!///

    ம்ஹும்.. இப்படியே போனா நிறைய பேர் இங்க இருந்து ஓடுறதுக்கு நீதான் காரணமா இருக்கப் போற..?!

    ReplyDelete
  76. ///நாமக்கல் சிபி said...
    //என்னிக்காச்சும் உருப்படியா, நாலு பேரு படிச்சு, பாராட்டுற மாதிரி பதிவு போட்டிருக்கியா நீயி..!?//

    உங்களைக் கலாய்ச்சி பதிவாவே போடணும்னு எதிர்பார்க்குறீங்க!
    ரைட்டேய்!///

    அதான் ஏற்கெனவே போட்டு மிச்சம், மீதியிருந்ததையும் காலி பண்ணிட்டியே.. இன்னும் என்ன பாக்கியிருக்கு..?

    ReplyDelete
  77. ///கவிதா | Kavitha said...

    //ஓஹோ! உங்களைக் கட்டிப்போட்டு அவங்க பதிவுகளை படிக்க வெச்சாத்தான் டெரரா இருக்கும்னு சொல்றீங்களா?//

    சிபி.. அடங்கவே மாட்டீங்களா நீங்க? இன்னொரு கன்னமும் பழம்'ஆனாத்தான் அடங்குவேன் சொன்னா, ஒன்னும் இல்ல தங்கமணி ஒரு ஃபோன் போதும்..:)///

    சொல்லிக்கிட்டே இருக்காதீங்கம்மா.. எதையாவது சட்டுப்புட்டுன்னு செஞ்சு வைங்க.. அதுதான் சரிப்படும்..!

    ReplyDelete
  78. ///கவிதா | Kavitha said...

    //உங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு! அதனாலதான் அவங்க பதிவை வாசிக்க செய்ய மாட்டேன்!//

    ம்ம்...ரொம்ப நல்லலலலலலவர் நீங்க....///

    இப்படிச் சொல்லித்தாம்மா எல்லாரும் கெடுத்து வைச்சிருக்கீங்க இந்தாளை.. நாலு சாத்து சாத்துறதை விட்டுப்புட்டு..!

    ReplyDelete
  79. ///கவிதா | Kavitha said...

    //அடப்பாவி முருகா..! உனக்கு சிஸ்டர் கவிதாதான் லாயக்கு..//

    ம்ம்.. இப்ப இது இங்க தேவையா? நான் பாட்டும்க்கு சிவனேன்னு எங்கையோ இருக்கேன்.. எதுக்கு... நமக்கு இந்த எக்ஸாம்புல் எல்லாம்.. ம்ம் !!! ?????

    //அன்பா சொன்னா அடங்க மாட்டியா நீயி..?!//

    அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுவது இல்லை ..!! :) இது தெரியாத உங்களுக்கு...///

    ஆஹா.. இதுவரைக்கும் இந்தக் கோணத்துல நான் யோசிக்கவே இல்லையே.. இப்ப யோசிக்க ஆரம்பிக்கிறேன்..

    ஆளை நான் காட்டுறேன்.. பைனான்ஸை கொஞ்சம் நீங்க பார்த்துக்குறீங்களா சிஸ்டர்..?!

    ReplyDelete