Pages

Wednesday, March 11, 2009

இட்லி, வடை, பொங்கல், சட்னி சாம்பார் -11-03-2009

11-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அபிஅப்பா கொண்டு வந்த மாயவரம் சரக்கை வாங்குவதற்காகவும், குசும்பனின் கல்யாணத்திற்கு மொய் வைக்கவும்தான் மெரீனா பீச்சிற்கு நான் கடைசியாக சென்றது.. இன்றைக்கு மீண்டும் ஒரு பயணம்.. ச்சும்மா.. தனியாத்தான்..

வழக்கம்போல நடுரோட்டில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் தொடங்கி, கார்ப்பரேஷனுக்கு தண்ணி காட்டிவிட்டு அவர்களது ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு கடைக்காரர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

கடற்கரை மணலில் ஆங்காங்கே காதலர்கள் தரிசனம் ஜெகஜோதியாக இருந்தது. காதலி மடியில் காதலன் மல்லாந்து படுத்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இருவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு இடத்தில் யாருடைய கை எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் தொட்டுப் புடிச்சு விளையாட்டை ஓவராக விளையாடிக் கொண்டிருந்தார்கள் தெய்வீகக் காதலர்கள் இருவர்.

இன்னும் ஓரிடத்தில் இப்போதுதான் புதிதாக திருமணமானவர்கள்போல் தெரிந்தது. ஆனாலும் சோன்பப்டி வாங்கித் தராத கோபமோ என்னவோ, பொண்ணு ஓரமா ஒதுங்கி அமர்ந்திருக்க.. பையன் பிரணாப் முகர்ஜி மாதிரி அவளிடம் எதுக்கோ கெஞ்சிக் கொண்டிருந்தான்.

இன்னொரு இடத்தில் நடுத்தர வயதில் சொட்டைத் தலையுடன் இருந்த ஆள், தான் அழைத்து வந்திருந்த பெண்மணியின் உதட்டில் தன் உதட்டை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். வர, வர வாலிபப் பசங்களைவிட இந்த நடுத்தர வயசுக்கார ஆளுக அலம்பல்தாங்க தாங்க முடியல..

என்னை மாதிரியே இந்த மாதிரி ஓசி சீன்களை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டமே கடற்கரை மணலில் கால் கடுக்க அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக நடந்து கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது..

முன்பு 2 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த சோன்பப்டி இப்போது 5 ரூபாய்க்கு குறைந்து இல்லையாம். சுக்குமல்லி காபி 3 ரூபாய். சுண்டல் 1 ரூபாய்க்கு கேட்டால் அந்தம்மா முறைக்கிறார். குறைந்தது 2 ரூபாயாம். அப்படியும் அந்தம்மா கொடுத்த சுண்டலை எண்ணிவிடலாம் போல் கொஞ்சமாகத்தான் இருந்தது.. கூட்டம் அதிகமாக இருந்தால்தான் விலையை ஏத்திச் சொல்வார்களாம்.. வெள்ளரிக்கா ஒன்று 5 ரூபாய்தான் இன்றைக்கு மட்டும்தானாம்..

இன்று என்னமோ கூட்டம் அதிகமில்லை. ஆங்காங்கேதான் சிலர் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்ததால் கடலை வியாபாரிகளுக்கும் விற்பனை சரியில்லை போலும்.. மும்முரமாக ஏதோவொரு தேடுதல் வேட்டையில் இருந்த காதலர்களிடம் சென்று 'வாங்கிக்கம்மா..' 'வாங்கிக்கம்மா..' என்று ஒரு சின்னப் பையன் ரகளை செய்து கொண்டிருந்தான். இப்ப அதுவா முக்கியம்..? இவனும் பெரியவனானப்புறம் புரிஞ்சுக்குவான்..

குதிரை மீது ஒரு ஆண் காவலரும், இன்னொரு குதிரை மீது ஒரு பெண் காவலரும் அமர்ந்து கொண்டு தங்களுக்குள் சீரியஸாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை 'நம்மையெல்லாம் கோர்ட்டுக்குள்ள அடிக்கிறதுக்கு கூப்பிடாம விட்டுட்டாங்களே' என்றிருக்கலாம்.. ஜட்டியோடு ஒரு 45 வயதிருக்கக்கூடிய ஆள், வேண்டுமென்றே கடலில் குளிப்பதும், பின்பு தரையில் நீட்டமாக படுத்து கரையில் இருக்கும் பெண்களை பார்ப்பதுமாக சலம்பல் பண்ணிக் கொண்டிருந்தார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த குதிரையில் இருந்த பெண் காவலர் வேகமாக குதிரையை அந்தாள் பக்கமாக ஓட்ட.. குதிரையைப் பார்த்ததும் தலைதெறிக்க ஓடி கடலுக்குள் விழுந்தார் அந்தாளு.. ஆனாலும் குதிரைல இருந்த போலீஸ்கார அக்கா, விடாமல் கரையிலேயே நிற்க.. மரியாதையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கடல் அலையிலேயே ஓடிச் சென்று கரையேறி தப்பிச் சென்றார் அந்த சலம்பல் பார்ட்டி. கரையில் இருந்தவர்களுக்கு சிரிப்போ சிரிப்பு..

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் கடலை பார்க்காமலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டு போய்விட, பிறந்து 2 மாதக் கைக்குழந்தையைக் கூட தூக்கிக் கொண்டு வந்து கடலைக் காட்டுகிறார்கள் சிலர். தத்தித்தத்தி நடந்த ஒரு குழந்தையின் கரங்களைப் பிடித்து வந்து கடல் அலையில் நனைய வைத்து சந்தோஷப்படுத்தினார்கள் பெற்றோர்கள். பார்ப்பதற்கு ரசனையாக இருந்தது.

இன்னொரு புறம் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் நிம்மதியாக கடற்கரைக் காற்றை சுவாசிக்க அம்மா, அப்பாவை அழைத்து வந்து அமர்த்தி சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.. நண்பர்கள் குழாமுடன் எதற்குச் சிரிக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு சிரித்தபடியே கடல் அலையில் காலை நனைத்துக் கொண்டிருந்தது இளைய பட்டாளம் ஒன்று..

இந்தக் கடல்தான் எத்தனை கொடுத்து வைத்தது..? எத்தனை, எத்தனை மக்களை பார்த்திருக்கிறது..? எத்தனை காதலர்களைக் கண்டிருக்கிறது? எத்தனை சந்தோஷங்களை பார்த்திருக்கிறது..? எத்தனை சாவுகளைத் தந்திருக்கிறது..? ஆனாலும் இன்றும் அதே போல், முன்பு பார்த்ததுபோலவே அமைதியாகவே இருக்கிறது.. ஆச்சரியம்தான்..

எல்லாம் சரி வெண்ணை.. நீ எதுக்குடா அங்க போனன்னு கேக்குறீங்களா..? பதிவை அனுபவிக்கணுமாம்.. ஆராயக்கூடாதாம்.. நம்ம வலையுலக நக்கல் மாமன்னன் மாநக்கல் சிபியார் சொல்லியிருக்காரு.. அனுபவிங்க.. போதும்..

--------------------------------------------

"யாவரும் நலம்' திரைப்படம் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்" என்று பதிவிலும், போனிலும் சொல்லி உசுப்பிவிட்டார் நமது 'பரிசல்காரன்'..

அதுதான் போய் பார்த்திருவோமே என்று சொல்லி தியேட்டருக்கு படையெடுத்தால் டிக்கெட்டே கிடைக்கவில்லை. கிடைக்கவில்லையென்றால், கவுண்ட்டரில் கிடைக்கவில்லை. ஆனால் கவுண்ட்டருக்கு கீழே பிளாக்கில் டிக்கெட் அமோகமாக விற்பனையாகிறது..


40 ரூபாய் டிக்கெட் 80 ரூபாய்.. 55 ரூபாய் டிக்கெட் 110 ரூபாய், 60 ரூபாய் டிக்கெட் 120 ரூபாய்.. அலட்சியமாகக் கூவிக் கூவி அழைத்துக் கொடுக்கிறார்கள். தியேட்டர் வாசலிலேயே ஜீப்பில் அமர்ந்தபடி லேடி போலீஸிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கும் ஆண் போலீஸ் ஒருத்தர், தியேட்டருக்குள் வந்து பொறுப்பாக மாமூலை வாங்கிக் கொண்டு போனார்.

இந்த 80 ரூபாய் இருந்தால் 2 நாள் சாப்பாட்டுச் செலவை ஓட்டிவிடலாம்.. இங்கே செலவழித்துவிட்டால் 2 நாள் சாப்பிடாம இருக்க முடியுமா என்றெல்லாம் நம் மனதுக்குள் பட்டிமன்றம் போட வேண்டியிருந்தது.

குடும்பத்தோடு வந்த தாமிரா போன்ற ஒரு அப்பாவி ரங்கமணி பிளாக் டிக்கெட்டின் விலையைக் கேட்டு அரண்டு போய், “பக்கத்துல பூங்காவுக்கு போயிட்டு, அப்படியே வீட்டுக்குப் போகலாம்” என்று தனது தங்கமணியிடம் அனத்திக் கொண்டிருந்தார். தங்கமணியோ, 'படம் பார்த்தே ஆகணும்..' என்று கண்ணாலேயே மிரட்ட.. வேறு வழியில்லாமல் வெறுப்போடு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தார்.. பாவம்.. அப்பிராணி ரங்கமணி..

அப்போது சர்ரென்று காரில் வந்து இறங்கிய ஒரு பணக்காரக் கூட்டம், 10 டிக்கெட்டுக்களையும் 1200 ரூபாய் கொடுத்து அப்படியே வாங்கிக் கொண்டு போனது..

நாதாரிக.. இவனுகளாலதான்யா நாடே கெடுது.. பணத்தை வைச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம அலையறானுக.. அவனவன் ஆபீஸ்ல 3 மாசமா சம்பளம் வாங்க முடியாம, சேர்த்து வைச்ச காசுல படம் பார்க்க வந்தா.. இந்த நாயுக செய்யற வேலையப் பாருங்க.. மொதல்ல திருடனுகளை சுடுறதைவிட இந்த மாதிரி திருட்டுக்கு வழி சொல்றவனுகளைத்தான் சுடணும்.. கோபம் கோபமா வருது..

----------------------------

எந்த ஆபீஸர் ஐடியா கொடுத்தாருன்னு தெரியல.. மொதல்ல அந்தாளை கொண்டு வந்து அசோக் நகர் ரோட்டுல வண்டியோட்டச் சொல்லணும்..

ஏதோ டிராபிக் ஜாம் ஆகுது அப்படி, இப்படின்னு சொல்லி ஏகப்பட்ட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸை போட்டு நம்ம பொதுஜனங்களை இம்சை பண்ணுது போக்குவரத்துக் காவல் துறை.

ஜாபர்கான்பேட்டை சிக்னல்ல இருந்து நேரா அசோக் பில்லர் வர்றப்ப இருந்த எல்லா வழியையும் அடைச்சிட்டு ஒரே நேர் வழியா ஆக்கிட்டாங்க.. இதுனால உதயம் தியேட்டர் பின்னாடி போய் அப்படியே வலது பக்கம் திரும்பி கே.கே. நகர் போக இடது பக்கம் திரும்புறவங்களுக்கு ஜாதகம் நல்லாயிருந்தா மட்டும்தான் உசிரோட வீடு போய்ச் சேர முடியும்.. அப்படியொரு குழப்பம்..

கிண்டில இருந்து நேரா வர்ற அத்தனை லாரிகளும், பஸ்களும், கார்களும் அசுர வேகத்துல வருதுக.. இதுல இந்த இடத்துல இடது பக்கம் திரும்ப சிக்னல் இல்லாததால நின்னு, பார்த்து, மெதுவா, சூதானமா திரும்ப வேண்டியிருக்கு.. இல்லைன்னா அன்னைக்கே சங்குதான்..

போதாக்குறைக்கு காசி தியேட்டரை அடுத்த சிக்னல்ல நேரா போறவங்களுக்கு இருந்த வழியையும் அடைச்சு அதையும் உதயம் தியேட்டரை சுத்தி மூக்கைச் சுத்தி வாயைத் தொடுற கதையா திருப்பி விட்டிருக்காங்க.. இதையெல்லாம் யாரும் யோசிச்சே பார்க்க மாட்டாங்களா..?

இன்னிக்கு சாயந்திரம் குடும்பக் கட்டுப்பாட்டை மிஞ்சுன ரேஞ்சுல 4 பிள்ளைகளோட டூவீலர்ல வந்த குடும்பம் ஒண்ணு ரோட்டை கிராஸ் பண்ண.. பின்னாடியே ஒரு லாரிக்காரன் செம ஸ்பீட்ல வந்து சடன் பிரேக் போட.. அந்தப் பதட்டத்துல டூவீலர் சரிஞ்சு குடும்பமே கீழே விழுந்து அத்தனை பேருக்கும் செம அடி.. யாரைக் குத்தம் சொல்றது..? லாரிக்காரனை கேட்டா நம்மாளு மேலதான் தப்புன்றான்.. நம்மாளை கேட்டா 'அவன்தான் ஓவர் ஸ்பீட்ல வந்தான்.. நான் எப்படித்தான் லெப்ட்ல திரும்புறது?'ங்குறான்.. எப்படியும் குடும்பத்துக்கே வைத்தியம் பார்க்கிறதுக்கு, அந்தாளுக்கு ஒரு மாச சம்பளம் சரியாப் போயிரும்னு நினைக்கிறேன்.. பாவம்தான்..

மெட்ராஸ்ல போக்குவரத்து போலீஸுக்கா பஞ்சம்..? அப்படியே பஞ்சமா இருந்தா அதுதான் 'வேலை வேணும்'.. 'வேலை வேணும்'னு எத்தனை பேர் கியூவுல நிக்குறாங்க.. சேர்த்துக்க வேண்டியதுதான..? நிறைய போலீஸ்காரங்களை பயன்படுத்தி புதிய வழிகளை உருவாக்கலாமே.. சிக்னல் போடுறதே போலீஸ்காரங்க வேலையைக் குறைக்கத்தான்னா.. அப்புறம் எதுக்கு போலீஸ்காரங்க..?

நம்மாளுக போலீஸ் நின்னாலே அடங்க மாட்டாங்க.. இதுல சிக்னலை மட்டும் போட்டுவிட்டுட்டு ஒரு ஓரமா போய் நின்னுக்குறது.. இல்லாட்டி கண்ல படாம பெட்டிக் கடை ஓரமா நின்னு தம் அடிக்க வேண்டியது.. அவனவன் வண்டியை இஷ்டத்துக்குத் திருப்பி வெட்டிட்டு போறான்.. எவன் கேக்குறான்..? இதுல ஏதோ 'சிவிக் சென்ஸாம்ல..' 'சிவிக் சென்ஸ்..' அப்படின்னு புரொபஸர் ஒருத்தர் வைகையாத்து பக்கம் இருந்து கத்தோ, கத்துன்னு கத்திக்கிட்டிருக்காரு.. யாருக்குக் கேக்குது..?

--------------------------------

எப்பவாவதுதான் சன் மியூஸிக் சேனல்ல பாட்டு கேக்குறது.. என்ன பாட்டு போடுறானுக மொதல்ல..? ஒரு எழவாவது காதுல விழுகணுமே.. அப்படியே விழுந்தாலும் மனசுல அப்படியே பசக்குன்னு ஒட்டிக்க வேணாம்.. அப்படியே நாக்குல பட்ட சர்க்கரை மாதிரி காணாப் போயிருது..


அப்படித்தான் ஒரு பாட்டு பாடிக்கிட்டிருந்துச்சு.. லேசா திரும்பிப் பார்த்தா.. திடீர்ன்னு ஒரு 50 வயசு அம்மா ஒண்ணு ஜாக்கெட், பாவாடையோட அந்தம்மாவைவிட ரொம்ப, ரொம்ப சின்னப் பையன்கூட ஆடிக்கிட்டிருந்துச்சு.. திக்குன்னுச்சு.. நல்லா பார்த்தா.. அடியாத்தீ.. இது நம்ம ரீனா அம்மாவாச்சேன்னு சொல்லுது நம்ம மெமரி..

அந்தக் காலத்துல மலையாளத்துல அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியா பட்டையைக் கிளப்புனவங்க.. தமிழ்லகூட 'திரிசூலத்துல' சங்கர் சிவாஜிக்கு ஜோடியா நடிச்சவங்கன்னு நினைக்கிறேன்.. இப்ப சீரியல்ல சோடாபுட்டி கண்ணாடி போட்டு மருமகளையெல்லாம் அழுக வைச்சுட்டிருக்காங்க.. இந்தம்மாவா இப்படின்னு ஒரு நிமிஷம் ஆடித்தான் போனேன்..

கூடவே நம்ம தல அஜீத்தும், பிசினும் ஆடுனதை பார்த்து இது 'வரலாறு' படம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.. ஏதோ வயசுல சின்னவங்க ஆடுனாகூட ஒத்துக்கலாம், வயசு அப்படின்னு.. இந்தம்மா இந்த வயசுல இப்படி ஆடுனா எப்படி? என்ன உலகமடா இது..? மலையாளத்துல போர்த்தி, போர்த்தி நடிச்சே நான் பார்த்திருக்கேனே.. அதான் படு பயங்கர ஷாக்கு..

-----------------------------------------

சாயந்தர பத்திரிகைல முக்கியமான விஷயம் ஏதாவது இருக்கான்னு வலைவீசி தேடினேன்.. ஒரு சூப்பர் போட்டோதான் கிடைச்சது.. எவ்வளவுதான் பிரச்சினைகள்.. சோதனைகள் என்றாலும், எல்லாக் காயங்களையும் காலம்தான் ஆத்தும்னு சொல்வாங்க..

அது மாதிரி.. கலைஞரோட உடல்நலக் குறைவிலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு போல..

இத்தனை வருஷமா கோபாலபுரம் வீட்டுப் பக்கமே வந்திருக்காத ராஜாத்தியம்மா, இன்னிக்கு கோபாலபுரம் வீட்டுக்குள்ளயே நிக்குற போட்டோவை பார்த்தப்ப, மனசு திருப்தியாயிருச்சு..

ரெண்டு அம்மாவும் இப்பவாச்சும் ஏதாவது பேசிக்கிட்டாங்களான்னு தெரியலை..

எப்படியிருந்தாலும் இந்த மட்டுக்கும் கலைஞருக்கு இது சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்னு நினைக்கிறேன்..

அவர் விரைவில் நல்ல உடல் நலம் பெற்று சபைக்கு வந்து நமக்கெல்லாம் ஏதாவது எழுத்து வேலை கொடுத்து பதிவுலகத்தை வாழ வைக்க வேண்டுமாய் என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..

-----------------------------------------

கடைசியா ரொம்ப முக்கியமான விஷயம்..

ஆபீஸ்ல சிக்கன நடவடிக்கைன்னு அவுங்க எனக்கு கொடுத்திருந்த போனை பிடுங்கி மூலைல போட்டுட்டாங்க.. அதுனால இனிமே என்னைத் தொடர்பு கொண்டு கடிக்கணும்னா 98409-98725 இந்த நம்பருக்கு வாங்க.. கடி வாங்க காத்திருக்கேன்..


இனிமேல் அப்பப்போ இது மாதிரி இட்லி, பொங்கல், வடைல சந்திக்கலாம்..

நன்றி

வணக்கம்..

89 comments:

  1. //பதிவை அனுபவிக்கணுமாம்.. ஆராயக்கூடாதாம்.. நம்ம வலையுலக நக்கல் மாமன்னன் மாநக்கல் சிபியார் சொல்லியிருக்காரு.. அனுபவிங்க.. போதும்..
    //

    ithu ennoada blog caption... ippa oru maasathuku munnadi thaan caption maathinen...

    aana dialog copied from PKS...

    //குடும்பத்தோடு வந்த தாமிரா போன்ற ஒரு அப்பாவி தங்கமணி பிளாக் டிக்கெட்டின் விலையைக் கேட்டு அரண்டு போய் “பக்கத்துல பூங்காவுக்கு போயிட்டு, அப்படியே வீட்டுக்குப் போகலாம்” என்று தனது ரங்கமணியிடம் அனத்திக் கொண்டிருந்தார். ரங்கமணியோ 'படம் பார்த்தே ஆகணும்..' என்று கண்ணாலேயே மிரட்ட.. வேறு வழியில்லாமல் வெறுப்போடு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தார்.. பாவம்.. அப்பிராணி தங்கமணி..//

    Thangamani, rangamani maathi poaturukeenga...

    Thangamanina wife
    Rangamanina Husband.

    ReplyDelete
  2. பதிவு ஒரு ஏக்கப் பெருமூச்சு தெரியுதுங்ண்ணா.. :)

    ReplyDelete
  3. ஜூப்பர் ஜூப்பர்! ஆரம்பிச்சாச்சா! வாழ்க!

    ReplyDelete
  4. //////அவர் விரைவில் நல்ல உடல் நலம் பெற்று சபைக்கு வந்து நமக்கெல்லாம் ஏதாவது எழுத்து வேலை கொடுத்து பதிவுலகத்தை வாழ வைக்க வேண்டுமாய் என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..////

    பஞ்சாமிர்தம் என்று தலைப்பை வைத்து எழுதும்போது மட்டும் ஆண்டியைக் கூப்பிட்டால் போதும். இட்லி வடைக்கெல்லாம் அவர் வருவாரா? தெரியவில்லை!!!:-))))

    ReplyDelete
  5. ரொம்ப பெரிய இட்லி,பெரிய வடை, குண்டான் சாம்பார்,அண்டா சட்னி. பீச்சாங்கரை வரைக்கும்தான் படிச்சேன்.மிச்சத்த பார்சல் பண்ணி படிக்கிறேன்

    ReplyDelete
  6. ////பதிவை அனுபவிக்கணுமாம்.. ஆராயக்கூடாதாம்.. நம்ம வலையுலக நக்கல் மாமன்னன் மாநக்கல் சிபியார் சொல்லியிருக்காரு.. அனுபவிங்க.. போதும்..
    //

    ithu ennoada blog caption... ippa oru maasathuku munnadi thaan caption maathinen...//

    ஆமாம்! இது எப்பவோ வெட்டி சொன்னது! நான் எங்கே சொன்னேன்?

    ReplyDelete
  7. //ரொம்ப பெரிய இட்லி,பெரிய வடை, குண்டான் சாம்பார்,அண்டா சட்னி. பீச்சாங்கரை வரைக்கும்தான் படிச்சேன்.மிச்சத்த பார்சல் பண்ணி படிக்கிறேன்//

    இவரோட பதிவெல்லாம் கல்யாண வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சாப்பாட்டை அதே அளவுல ஒவ்வொருத்தரையும் உக்கார வெச்சி போடுறார்!

    ReplyDelete
  8. ///வெட்டிப்பயல் said...

    //பதிவை அனுபவிக்கணுமாம்.. ஆராயக்கூடாதாம்.. நம்ம வலையுலக நக்கல் மாமன்னன் மாநக்கல் சிபியார் சொல்லியிருக்காரு.. அனுபவிங்க.. போதும்..//

    ithu ennoada blog caption... ippa oru maasathuku munnadi thaan caption maathinen... aana dialog copied from PKS...///

    ஐயையோ.. உங்க எழுத்தைத்தான் மாநக்கல் தன்னோடது மாதிரின்னு சொல்லி எங்க எல்லாரையும் ஏமாத்திட்டு வர்றாரா..? வெட்டணும் அந்தாளை..!

    //குடும்பத்தோடு வந்த தாமிரா போன்ற ஒரு அப்பாவி தங்கமணி பிளாக் டிக்கெட்டின் விலையைக் கேட்டு அரண்டு போய் “பக்கத்துல பூங்காவுக்கு போயிட்டு, அப்படியே வீட்டுக்குப் போகலாம்” என்று தனது ரங்கமணியிடம் அனத்திக் கொண்டிருந்தார். ரங்கமணியோ 'படம் பார்த்தே ஆகணும்..' என்று கண்ணாலேயே மிரட்ட.. வேறு வழியில்லாமல் வெறுப்போடு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தார்.. பாவம்.. அப்பிராணி தங்கமணி..//

    Thangamani, rangamani maathi poaturukeenga... Thangamanina wife
    Rangamanina Husband.///

    ச்சே.. ஒரு மேட்டரையாவது தப்பில்லாம எழுதலாம்னு நினைச்சா முடியுதா..?

    வெட்டி ஸார் தப்புதான்.. மாத்திடறேன்.. நன்றி.. நன்றி..

    ReplyDelete
  9. //புருனோ Bruno said...

    :) :) :)//

    அடாடா.. நம்ம டாக்டருக்குத்தான் எம்புட்டு வேலை இருக்கு.. இதுக்கு நடுவுல நம்ம பதிவுக்கு வந்து ஆஜர் வேற கொடுக்குறாரு.. பதிவு பதிவா போய் இசைஞானியைப் பத்திச் சொல்றதுக்கு நேரமில்லையாம். அதான் நமக்கு மட்டும் சின்னதா ஒரு ஸ்மைலி போட்டுத் தப்பிச்சிடறாரு.. நன்றிங்கோ டாக்டரு..!

    ReplyDelete
  10. //தமிழ் பிரியன் said...
    பதிவு ஒரு ஏக்கப் பெருமூச்சு தெரியுதுங்ண்ணா..:)//

    தெரியுதுங்களா..? புரிஞ்சா சரிதான் தமிழ் ஸார்..!

    ReplyDelete
  11. //அபி அப்பா said...
    ஜூப்பர் ஜூப்பர்! ஆரம்பிச்சாச்சா! வாழ்க!//

    ஆரம்பிச்சாச்சு.. ஆரம்பிச்சாச்சு.. தேங்க்ஸு.. தேங்க்ஸூ..

    ReplyDelete
  12. ///SP.VR. SUBBIAH said...

    //அவர் விரைவில் நல்ல உடல் நலம் பெற்று சபைக்கு வந்து நமக்கெல்லாம் ஏதாவது எழுத்து வேலை கொடுத்து பதிவுலகத்தை வாழ வைக்க வேண்டுமாய் என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..//

    பஞ்சாமிர்தம் என்று தலைப்பை வைத்து எழுதும்போது மட்டும் ஆண்டியைக் கூப்பிட்டால் போதும். இட்லி வடைக்கெல்லாம் அவர் வருவாரா? தெரியவில்லை!!!:-))))///

    வந்தாகணும் வாத்தியாரே.. இட்லி, வடைக்கெல்லாம் வர மாட்டேன்னு சொன்னாருன்னா அப்புறம் நாங்க பஞ்சாமிர்தத்தை கண்ணாலகூட பார்க்க மாட்டோமாக்கும்..!

    ReplyDelete
  13. //குடுகுடுப்பை said...
    ரொம்ப பெரிய இட்லி,பெரிய வடை, குண்டான் சாம்பார்,அண்டா சட்னி. பீச்சாங்கரை வரைக்கும்தான் படிச்சேன்.மிச்சத்த பார்சல் பண்ணி படிக்கிறேன்.//

    அடப் போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் பெரிசு, பெரிசுன்னுட்டு.. இதைவிடச் சின்னதா எழுதணும்னா தலைப்பை மட்டும்தான் எழுதி வைக்கோணும்..!

    ReplyDelete
  14. //Doctor Brudaa said...
    Ilayaraaja vaazhka.//

    ஆஹா.. நம்ம டாக்டருக்கு ஒரு ரசிகர் வந்துட்டாருய்யா..

    டாக்டரோட கமெண்ட் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் நம்ம அண்ணாத்தேயும் போயி இப்படி போட்டு வைக்குறாரு..

    இதுனால என்ன கிடைக்கப் போகுது அனானி..!

    ReplyDelete
  15. //T.V.Radhakrishnan said...
    :-))))//

    வருகைக்கு நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  16. //Thooya said...
    :)//

    அட இது யாரு? நம்ம தங்கச்சி தூயாவா..? நல்லா இருக்கியா கண்ணு..!? ஏதோ நாங்களும் இங்கனதான் இருக்கோம்.. கண்டுக்கிட்டா சந்தோஷம்தான்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  17. ///நாமக்கல் சிபி said...

    //பதிவை அனுபவிக்கணுமாம்.. ஆராயக்கூடாதாம்.. நம்ம வலையுலக நக்கல் மாமன்னன் மாநக்கல் சிபியார் சொல்லியிருக்காரு.. அனுபவிங்க.. போதும்../
    ithu ennoada blog caption... ippa oru maasathuku munnadi thaan caption maathinen...//

    ஆமாம்! இது எப்பவோ வெட்டி சொன்னது! நான் எங்கே சொன்னேன்?///

    அடப்பாவி மவனே.. ஒவ்வொரு பதிவிலேயும் உன்னோட கேப்ஷன் மாதிரி மாத்தி, மாத்தி அட்வைஸ் செஞ்சப்ப ஒரு வார்த்தை வெட்டி ஸாருக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லிருந்தா என்ன குறைஞ்சு போச்சு..? இப்ப நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் பாரு..! பயங்கரமான ஆளுதான்பா நீயி..!

    ReplyDelete
  18. ///நாமக்கல் சிபி said...

    //ரொம்ப பெரிய இட்லி,பெரிய வடை, குண்டான் சாம்பார்,அண்டா சட்னி. பீச்சாங்கரை வரைக்கும்தான் படிச்சேன்.மிச்சத்த பார்சல் பண்ணி படிக்கிறேன்//

    இவரோட பதிவெல்லாம் கல்யாண வீட்டுக்கு அனுப்ப வேண்டிய சாப்பாட்டை அதே அளவுல ஒவ்வொருத்தரையும் உக்கார வெச்சி போடுறார்!///

    அடப் போங்கப்பா.. உங்களோட ஒரு தொல்லை.. எப்பப் பார்த்தாலும் படிக்கிறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுக்கிட்டு..!?

    பதிவைப் படிக்கணும்.. அழுகக் கூடாது.. தெரிஞ்சுக்கோ..

    ReplyDelete
  19. கண்ணுகளா..

    இத்தனை பேர் வந்தீங்களே.. ஒரு பத்து பேராச்சும் தமிழ்மணம் கருவிப் பட்டைல நல்லாயிருக்குன்னு ஒரு குத்து குத்துனீங்கன்னா உங்களை மாதிரியே இன்னும் ஒரு 40 பேராவது படிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்ல..

    குத்துறதுக்கு அப்படியென்னப்பா சோம்பேறித்தனம்..? ஒரேயொரு கிளிக்தான..?!

    செய்யுங்க சாமி.. செய்யுங்க..!

    ReplyDelete
  20. கண்ணுகளா..

    இத்தனை பேர் வந்தீங்களே.. ஒரு பத்து பேராச்சும் தமிழ்மணம் கருவிப் பட்டைல நல்லாயிருக்குன்னு ஒரு குத்து குத்துனீங்கன்னா உங்களை மாதிரியே இன்னும் ஒரு 40 பேராவது படிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்ல..

    குத்துறதுக்கு அப்படியென்னப்பா சோம்பேறித்தனம்..? ஒரேயொரு கிளிக்தான..?!

    செய்யுங்க சாமி.. செய்யுங்க..!

    குத்திட்டேன் தூதுவரே.

    ReplyDelete
  21. //கடற்கரை மணலில் ஆங்காங்கே காதலர்கள் தரிசனம் ஜெகஜோதியாக இருந்தது. காதலி மடியில் காதலன் மல்லாந்து படுத்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இருவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்.//

    ))))))))))))))))..

    ReplyDelete
  22. //குடும்பத்தோடு வந்த தாமிரா போன்ற ஒரு அப்பாவி தங்கமணி பிளாக் டிக்கெட்டின் விலையைக் கேட்டு அரண்டு போய்//

    எங்க சங்கத்து தலைவரை வம்புல இழுக்காதிங்க...

    ReplyDelete
  23. //இட்லி, வடை, பொங்கல், சட்னி சாம்பார் //

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு............

    ReplyDelete
  24. //அடப்பாவி மவனே.. ஒவ்வொரு பதிவிலேயும் உன்னோட கேப்ஷன் மாதிரி மாத்தி, மாத்தி அட்வைஸ் செஞ்சப்ப ஒரு வார்த்தை வெட்டி ஸாருக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லிருந்தா என்ன குறைஞ்சு போச்சு..? இப்ப நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் பாரு..! பயங்கரமான ஆளுதான்பா நீயி..!//

    என் பதிவு தலைப்புலயே இருக்கும். அதை கவனிக்காம இங்க வந்து எங்க தளயைத் தப்பா பேசறீங்களே ;)

    ReplyDelete
  25. //குடுகுடுப்பை said...
    ரொம்ப பெரிய இட்லி,பெரிய வடை, குண்டான் சாம்பார்,அண்டா சட்னி. பீச்சாங்கரை வரைக்கும்தான் படிச்சேன்.மிச்சத்த பார்சல் பண்ணி படிக்கிறேன்.//

    அடப் போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் பெரிசு, பெரிசுன்னுட்டு.. இதைவிடச் சின்னதா எழுதணும்னா தலைப்பை மட்டும்தான் எழுதி வைக்கோணும்..!//

    ரெண்டுமே சூப்பர் கமன்ட்.:) :) :)

    ReplyDelete
  26. // குசும்பனின் கல்யாணத்திற்கு மொய் வைக்கவும்தான் //

    அண்ணே எனக்கு தெரியாம எப்ப எனக்கு கல்யாணம் நடந்துச்சு? அதுக்கு நீங்க யாரிடம் மொய் வெச்சீங்க? நல்லா உங்களை யாரோ ஏமாத்தியிருக்காங்க!

    ReplyDelete
  27. //இன்னொரு இடத்தில் யாருடைய கை எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் தொட்டுப் புடிச்சு விளையாட்டை ஓவராக விளையாடிக் கொண்டிருந்தார்கள் தெய்வீகக் காதலர்கள் இருவர்.//

    அண்ணே சின்னஞ்சிறுசுக அப்படிதான் இருக்கும் நாம ஏன் அதை பார்க்கனும் என்றேன், தெய்வீககாதலில் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் தொட்டு விளையாடமாட்டாங்க, சில்மிசம் செய்யமாட்டாங்க என்று யார் சொன்னது?

    அப்ப ஜன நெருக்கடி கம்மி அப்படியே தோட்டம் தொரவு பக்கம் சில்மிசம் செஞ்சாலும் யாருக்கும் தெரியாது, இப்ப அங்கயும் லைட் ஹவுஸ் கட்டி வெச்சு மேலே இருந்து பார்க்குறீங்க, காதலர்களுக்கு எல்லாம் வீட்டில் ரூம் போட்டு கொடுத்து காதல் செய்யுங்க என்றா அப்பா அம்மா சொல்றாங்க!!!

    டென்சன் ஆயிடுவேன் சாக்கிரதை!!!

    ReplyDelete
  28. //பெண்மணியின் உதட்டில் தன் உதட்டை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். //

    உதட்டு குளிரில் வெடிச்சு போச்சாம், அதுக்கும் பித்தவெடிப்பு மருந்து தடவுறார்...அடிங்க...அதான் கிஸ் அடிக்கிறாங்கன்னு தெரியுதுல்ல அப்புறம் என்னா அங்கன பார்வை!!!

    வர வர சரி இல்லை ஆமா சொல்லிப்புட்டேன்!

    ReplyDelete
  29. //குதிரை மீது ஒரு ஆண் காவலரும், இன்னொரு குதிரை மீது ஒரு பெண் காவலரும் அமர்ந்து கொண்டு தங்களுக்குள் சீரியஸாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.//

    அவுங்க கிட்ட போய் இருக்குற பொருளாதார நெருக்கடியில் ஏன் இரண்டு குதிரையில் வருகிறீர்கள், ஒட்டுக்கா இருவரும் ஒரே குதிரையில் வரவேண்டியதுதானே என்று சொல்லுங்கன்னே!!!

    இட்லி வடை பொங்கல் சட்னி சாம்பார் இன்றோடு கடைசி ஆகும்:)))

    ReplyDelete
  30. அண்ணே உங்க பார்வை விசாலமானதுதான் அதுக்காக இம்புட்டு விசாலாமனா பார்வை கூடாதுன்னே!!!!

    ரொம்ப பார்த்து இருக்கீங்க போல படிக்க படிக்க அனுமார் வால் மாதிரி வந்துக்கிட்டு இருக்கு... இதை இரண்டு மூன்று பாகமாக போடுங்கன்னே:(((

    ReplyDelete
  31. அன்புத்தலைவருக்கு...

    வணக்கம். கரம் மசாலா பதிவுகளாகவே இந்த சைவ பதிவுகள் அமையவேண்டும் என்பது என் அவா.

    அவாவை நிறைவேற்றுவீரா...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  32. //இந்த நாயுக செய்யற வேலையப் பாருங்க.. மொதல்ல திருடனுகளை சுடுறதைவிட இந்த மாதிரி திருட்டுக்கு வழி சொல்றவனுகளைத்தான் சுடணும்.. கோபம் கோபமா வருது..//

    இது கோபம் இல்லை இயலாமை! நம்மால் முடியாததை மற்றவர்கள் செய்யும் பொழுது வரும் கோவம் கோவம் அல்ல, அது இயலாமையின் வெளிப்பாடு! நாமும் அதுபோல் ஆகனும் என்று நினைங்க, அதைவிட்டு சுடனும், வாட்டனும் என்று சொல்லிக்கிட்டு.

    ReplyDelete
  33. //ரெண்டு அம்மாவும் இப்பவாச்சும் ஏதாவது பேசிக்கிட்டாங்களான்னு தெரியலை.. //

    என்னது கலைஞருக்கு ரெண்டு பொண்ணாட்டியா?

    ReplyDelete
  34. //இனிமேல் அப்பப்போ இது மாதிரி இட்லி, பொங்கல், வடைல சந்திக்கலாம்..//

    அன்னே இந்த ”அப்பப்போ”வுக்கு இடையில் அட்லீஸ்ட் உங்க பதிவு நீளத்துக்காவது கேப் விடுங்கன்னே!!!

    இல்லேன்னா முழுசும் படிச்சு முடிங்காட்டியும் அடுத்த பதிவு வந்துவிடும்!:))

    ReplyDelete
  35. //கண்ணுகளா..

    இத்தனை பேர் வந்தீங்களே.. ஒரு பத்து பேராச்சும் தமிழ்மணம் கருவிப் பட்டைல நல்லாயிருக்குன்னு ஒரு குத்து குத்துனீங்கன்னா உங்களை மாதிரியே இன்னும் ஒரு 40 பேராவது படிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்ல..

    குத்துறதுக்கு அப்படியென்னப்பா சோம்பேறித்தனம்..? ஒரேயொரு கிளிக்தான..?!//

    சாரி அண்ணாத்தே எங்களுக்கு அவ்வளோ கல் நெஞ்சம் கிடையாது!!!

    ReplyDelete
  36. உங்க கடற்கரை அனுபவம் நல்லாருக்கு!
    நான் ஒரு தடவை இந்த கடல்ல செத்து போயிருப்பேன் அதனால கடல்ல இறங்குறதில்லை!

    ReplyDelete
  37. அன்பு உண்மை தமிழா தங்களுக்கு என் முதல் வணக்கம், தங்களின் வலைப்பதிவை காண நேர்ந்தது, எல்லாம் மிகவும் அருமை, எல்லோரும் கடற்கரைக்கு காற்று வாங்க போவார்கள், அனால் நீங்கள் உங்கள் வலைபதிவிற்காக, உங்கள் கண் வலையால் அத்தனைபேரையும் அரித்து கொண்டுவந்துவிடீர்கள். அருமை நண்பா
    அன்புடன்
    ஜீவா

    ReplyDelete
  38. நல்லாத்தான் இருக்கு :))

    ReplyDelete
  39. காலை சாப்பாடே மூணு வேளைக்கும் போதுமானதாய் இருக்கு

    ReplyDelete
  40. //முரளிகண்ணன் said...
    காலை சாப்பாடே மூணு வேளைக்கும் போதுமானதாய் இருக்கு//

    :-))))

    ReplyDelete
  41. // அதுதான் 'வேலை வேணும்'.. 'வேலை வேணும்'னு எத்தனை பேர் கியூவுல நிக்குறாங்க.. சேர்த்துக்க வேண்டியதுதான..? //

    அனைத்து திறமையும் கொண்ட இளைய சமுதாயத்துக்கு அவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய வேலைய கொடுத்தால் அவர்களும் பயனடைவார்கள் மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள். குற்றங்களும் குறைந்து போகும். நம் சமுதாயமும் முன்னேறும். யாராவது இதை பத்தி யோசிக்கிறார்களா? நான் சொல்லும் கருத்து சரியென்றால் அதை பற்றி உங்கள் நடையில் எழுதுங்களேன். இப்பொழுது நிறைய பேர் வலைப்பதிவுகளை படிக்கிறார்கள். நல்ல அதிகாரிகள் இதை படித்து செயல் படுத்தினால் நம் வருங்கால சமுதாயமாவது நன்றாக இருக்குமே.

    ReplyDelete
  42. உண்மைத்தமிழன் = 40+வயதான நடிகைகளின் உண்மையான ரசிகன் :)

    ReplyDelete
  43. ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு !

    ReplyDelete
  44. //குடுகுடுப்பை said...

    கண்ணுகளா..

    இத்தனை பேர் வந்தீங்களே.. ஒரு பத்து பேராச்சும் தமிழ்மணம் கருவிப் பட்டைல நல்லாயிருக்குன்னு ஒரு குத்து குத்துனீங்கன்னா உங்களை மாதிரியே இன்னும் ஒரு 40 பேராவது படிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்ல..

    குத்துறதுக்கு அப்படியென்னப்பா சோம்பேறித்தனம்..? ஒரேயொரு கிளிக்தான..?!

    செய்யுங்க சாமி.. செய்யுங்க..!

    குத்திட்டேன் தூதுவரே.//

    நன்றிங்கோ குடுகுடுப்பை ஸார்..

    என்ன பாசம்.. என்ன பாசம்..?!

    ReplyDelete
  45. ///அத்திரி said...

    //கடற்கரை மணலில் ஆங்காங்கே காதலர்கள் தரிசனம் ஜெகஜோதியாக இருந்தது. காதலி மடியில் காதலன் மல்லாந்து படுத்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இருவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்.//

    ))))))))))))))))..///

    என்ன ஸ்மைலி..? உண்மையைத்தான சொல்றேன் தம்பீ..

    ReplyDelete
  46. ///அத்திரி said...

    //குடும்பத்தோடு வந்த தாமிரா போன்ற ஒரு அப்பாவி தங்கமணி பிளாக் டிக்கெட்டின் விலையைக் கேட்டு அரண்டு போய்//

    எங்க சங்கத்து தலைவரை வம்புல இழுக்காதிங்க...///

    ஓ.. சங்கத்துத் தலைவர் ஆயி்ட்டாரா அண்ணேன்.. சரிதான்.. நானும் ஒரு கும்பிடு போட்டுக்குறேன்..

    ReplyDelete
  47. ///அத்திரி said...

    //இட்லி, வடை, பொங்கல், சட்னி சாம்பார் //

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு............///

    நன்றி அத்திரி தம்பீ..

    ReplyDelete
  48. ///வெட்டிப்பயல் said...

    //அடப்பாவி மவனே.. ஒவ்வொரு பதிவிலேயும் உன்னோட கேப்ஷன் மாதிரி மாத்தி, மாத்தி அட்வைஸ் செஞ்சப்ப ஒரு வார்த்தை வெட்டி ஸாருக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லிருந்தா என்ன குறைஞ்சு போச்சு..? இப்ப நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன் பாரு..! பயங்கரமான ஆளுதான்பா நீயி..!//

    என் பதிவு தலைப்புலயே இருக்கும். அதை கவனிக்காம இங்க வந்து எங்க தளயைத் தப்பா பேசறீங்களே ;)///

    தலைப்புல ஒண்ணுமில்லையே..!

    இங்கேயும் "தள"யா..?

    யோவ் நாமக்கல்லு.. உன் அலம்பலுக்கு அளவே இல்லையாய்யா..?!

    ReplyDelete
  49. ///ஷண்முகப்ரியன் said...

    //குடுகுடுப்பை said...
    ரொம்ப பெரிய இட்லி,பெரிய வடை, குண்டான் சாம்பார்,அண்டா சட்னி. பீச்சாங்கரை வரைக்கும்தான் படிச்சேன்.மிச்சத்த பார்சல் பண்ணி படிக்கிறேன்.//

    அடப் போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் பெரிசு, பெரிசுன்னுட்டு.. இதைவிடச் சின்னதா எழுதணும்னா தலைப்பை மட்டும்தான் எழுதி வைக்கோணும்..!//

    ரெண்டுமே சூப்பர் கமன்ட்.:) :) :)///

    ஸார், கம்யூனிஸ்ட்களுக்கு உங்களை மாதிரிதான் ஒரு நல்ல தலைவரு வேணுமாம்.. தேடிக்கிட்டிருக்காங்க.. கிளம்புறீங்களா..?!

    ReplyDelete
  50. ///குசும்பன் said...

    // குசும்பனின் கல்யாணத்திற்கு மொய் வைக்கவும்தான் //

    அண்ணே எனக்கு தெரியாம எப்ப எனக்கு கல்யாணம் நடந்துச்சு? அதுக்கு நீங்க யாரிடம் மொய் வெச்சீங்க? நல்லா உங்களை யாரோ ஏமாத்தியிருக்காங்க!///

    ஆமா ராசா.. யாரோ சரவணன்னு ஒருத்தன் சும்மா வெடக்கோழி சைஸுக்கு வந்து நின்னுட்டு எனக்குக் கல்யாணம்னு பத்திரிகை கொடுத்தான்.. வாங்கிப் பார்த்திட்டு அங்கயே பரிசை கொடுத்திட்டேன்.. கல்யாணப் போட்டால சும்மா அய்யனார் மாதிரி ஜம்முன்னு உக்காந்திருந்தான் பாரு..

    போட்டோவை வேண்ணா காட்டுறேன்.. நீ எதுக்கும் உன் பாஸ்போர்ட்ல இருக்குற போட்டோவை எடுத்து ரெடியா வைச்சிரு.. யாருன்னு கண்டுபிடிச்சிருவோம்..!

    ReplyDelete
  51. ///குசும்பன் said...

    //இன்னொரு இடத்தில் யாருடைய கை எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் தொட்டுப் புடிச்சு விளையாட்டை ஓவராக விளையாடிக் கொண்டிருந்தார்கள் தெய்வீகக் காதலர்கள் இருவர்.//

    அண்ணே சின்னஞ்சிறுசுக அப்படிதான் இருக்கும் நாம ஏன் அதை பார்க்கனும் என்றேன், தெய்வீககாதலில் மட்டும் ஒருத்தரை ஒருத்தர் தொட்டு விளையாடமாட்டாங்க, சில்மிசம் செய்யமாட்டாங்க என்று யார் சொன்னது?

    அப்ப ஜன நெருக்கடி கம்மி அப்படியே தோட்டம் தொரவு பக்கம் சில்மிசம் செஞ்சாலும் யாருக்கும் தெரியாது, இப்ப அங்கயும் லைட் ஹவுஸ் கட்டி வெச்சு மேலே இருந்து பார்க்குறீங்க, காதலர்களுக்கு எல்லாம் வீட்டில் ரூம் போட்டு கொடுத்து காதல் செய்யுங்க என்றா அப்பா அம்மா சொல்றாங்க!!!

    டென்சன் ஆயிடுவேன் சாக்கிரதை!!!///

    உனக்கேன் ராசா இம்புட்டு டென்ஷனாகுது..

    பொதுவுல வைச்சுத் தடவாதீங்க.. வூட்டுக்குள்ள வைச்சு என்ன வேண்ணாலும் பண்ணிக்குங்கன்னுதான சொல்றேன்..

    ReplyDelete
  52. ///குசும்பன் said...

    //பெண்மணியின் உதட்டில் தன் உதட்டை வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். //

    உதட்டு குளிரில் வெடிச்சு போச்சாம், அதுக்கும் பித்தவெடிப்பு மருந்து தடவுறார்... அடிங்க... அதான் கிஸ் அடிக்கிறாங்கன்னு தெரியுதுல்ல அப்புறம் என்னா அங்கன பார்வை!!!
    வர வர சரி இல்லை ஆமா சொல்லிப்புட்டேன்!///

    ஆமா கண்ணு..

    என் கண்ணு கொஞ்ச நாளாவே சரியில்லாமத்தான் இருக்கு.. நான் எந்தப் பக்கம் பார்த்தாலும் இப்படி வில்லங்கமான மேட்டர்தான் கண்ணுல படுது.. ஏதாவது வியாதி தொத்திருமோ..?!

    ReplyDelete
  53. ///குசும்பன் said...

    //குதிரை மீது ஒரு ஆண் காவலரும், இன்னொரு குதிரை மீது ஒரு பெண் காவலரும் அமர்ந்து கொண்டு தங்களுக்குள் சீரியஸாக எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள்.//

    அவுங்ககிட்ட போய் இருக்குற பொருளாதார நெருக்கடியில் ஏன் இரண்டு குதிரையில் வருகிறீர்கள், ஒட்டுக்கா இருவரும் ஒரே குதிரையில் வரவேண்டியதுதானே என்று சொல்லுங்கன்னே!!! இட்லி வடை பொங்கல் சட்னி சாம்பார் இன்றோடு கடைசி ஆகும்:)))///

    ஐயோ.. என்ன பாசம்.. என்ன பாசம்..? கண்ணுல தண்ணி வருது ராசா..!

    ReplyDelete
  54. ///குசும்பன் said...

    அண்ணே உங்க பார்வை விசாலமானதுதான் அதுக்காக இம்புட்டு விசாலாமனா பார்வை கூடாதுன்னே!!!!

    ரொம்ப பார்த்து இருக்கீங்க போல படிக்க படிக்க அனுமார் வால் மாதிரி வந்துக்கிட்டு இருக்கு... இதை இரண்டு மூன்று பாகமாக போடுங்கன்னே:(((///

    அட போங்கப்பா.. எத்தனை குறைச்சு எழுதினாலும் பெரிசு, பெரிசுன்னு சொல்லிக்கிட்டு..?

    இதை மூணு பாகமா போட்டா நான் மட்டும் படிச்சுக்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  55. //நித்யகுமாரன் said...

    அன்புத்தலைவருக்கு...

    வணக்கம். கரம் மசாலா பதிவுகளாகவே இந்த சைவ பதிவுகள் அமையவேண்டும் என்பது என் அவா.

    அவாவை நிறைவேற்றுவீரா...

    அன்பு நித்யன்//

    ஐயையோ.. மொதல்ல இந்த தலைவரேன்றதை நிறுத்தேன் தம்பி..

    நமக்கு அண்ணனே போதும்டா கண்ணா..

    ReplyDelete
  56. ///குசும்பன் said...

    //இந்த நாயுக செய்யற வேலையப் பாருங்க.. மொதல்ல திருடனுகளை சுடுறதைவிட இந்த மாதிரி திருட்டுக்கு வழி சொல்றவனுகளைத்தான் சுடணும்.. கோபம் கோபமா வருது..//

    இது கோபம் இல்லை இயலாமை! நம்மால் முடியாததை மற்றவர்கள் செய்யும் பொழுது வரும் கோவம் கோவம் அல்ல, அது இயலாமையின் வெளிப்பாடு! நாமும் அது போல் ஆகனும் என்று நினைங்க, அதைவிட்டு சுடனும், வாட்டனும் என்று சொல்லிக்கிட்டு.///

    இயலாமைதான்.. அவுங்க உசரத்துக்கு வளரணும்னா இன்னும் நான் எத்தனை நாள் உழைக்கணும்.. எத்தனை வருஷம் காத்திருக்கணும்.. அதுவரைக்கும் இந்த சினிமா எனக்காக காத்திருக்குமா..?! அட போப்பா வயித்தெரிச்சலை கிளப்பாம..

    ReplyDelete
  57. ///குசும்பன் said...

    //ரெண்டு அம்மாவும் இப்பவாச்சும் ஏதாவது பேசிக்கிட்டாங்களான்னு தெரியலை.. //

    என்னது கலைஞருக்கு ரெண்டு பொண்ணாட்டியா?///

    இது கூடத் தெரியாதா இத்தனை நாளா..? என்ன தமிழன் நீயி..?!

    ReplyDelete
  58. ///குசும்பன் said...

    //இனிமேல் அப்பப்போ இது மாதிரி இட்லி, பொங்கல், வடைல சந்திக்கலாம்..//

    அன்னே இந்த ”அப்பப்போ”வுக்கு இடையில் அட்லீஸ்ட் உங்க பதிவு நீளத்துக்காவது கேப் விடுங்கன்னே!!!

    இல்லேன்னா முழுசும் படிச்சு முடிங்காட்டியும் அடுத்த பதிவு வந்துவிடும்!:))///

    இனிமே வாரத்துக்கு ஒண்ணு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. என்ன சொல்ற..? சரியா? தப்பா..?

    ReplyDelete
  59. ///குசும்பன் said...

    //கண்ணுகளா..
    இத்தனை பேர் வந்தீங்களே.. ஒரு பத்து பேராச்சும் தமிழ்மணம் கருவிப் பட்டைல நல்லாயிருக்குன்னு ஒரு குத்து குத்துனீங்கன்னா உங்களை மாதிரியே இன்னும் ஒரு 40 பேராவது படிக்கிறதுக்கு சான்ஸ் கிடைக்கும்ல..
    குத்துறதுக்கு அப்படியென்னப்பா சோம்பேறித்தனம்..? ஒரேயொரு கிளிக்தான..?!//

    சாரி அண்ணாத்தே எங்களுக்கு அவ்வளோ கல் நெஞ்சம் கிடையாது!!!///

    ஓ.. இப்ப எல்லாரும் நல்லவங்களா இருக்கீங்களாக்கும்..!?

    ReplyDelete
  60. //வால்பையன் said...
    உங்க கடற்கரை அனுபவம் நல்லாருக்கு! நான் ஒரு தடவை இந்த கடல்ல செத்து போயிருப்பேன் அதனால கடல்ல இறங்குறதில்லை!//

    அப்ப சமுத்திரத்தையே ஜெயித்தவருன்னு சொல்லுங்க..!

    ReplyDelete
  61. //ஜீவா said...

    அன்பு உண்மை தமிழா தங்களுக்கு என் முதல் வணக்கம், தங்களின் வலைப்பதிவை காண நேர்ந்தது, எல்லாம் மிகவும் அருமை, எல்லோரும் கடற்கரைக்கு காற்று வாங்க போவார்கள், அனால் நீங்கள் உங்கள் வலைபதிவிற்காக, உங்கள் கண் வலையால் அத்தனை பேரையும் அரித்து கொண்டுவந்துவிடீர்கள். அருமை நண்பா
    அன்புடன்
    ஜீவா//

    அருமை ஜீவா அவர்களே..

    தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்..

    தங்களின் கருத்திற்கு எனது நன்றிகள்..

    தங்களுடைய தளத்தினையும் பார்த்தேன்.. படித்தேன்.. ரசித்தேன்.. தயவு செய்து திரட்டிகளில் இணைந்து தங்களது படைப்புகளை வலைப்பதிவர்கள் முன்னால் வையுங்கள்.. இன்னும் அதிகம் பேரால் தாங்கள் படிக்கப்படுவீர்கள்..

    ReplyDelete
  62. //பட்டாம்பூச்சி said...

    நல்லாத்தான் இருக்கு :))//

    நன்றி பட்டாம்பூச்சி அவர்களே..!

    ReplyDelete
  63. //முரளிகண்ணன் said...
    காலை சாப்பாடே மூணு வேளைக்கும் போதுமானதாய் இருக்கு.//

    முரளி அப்படியா இருக்கு.. நான் ஒரு வேளைக்குன்னு நினைச்சுத்தான் படைச்சிருக்கேன்..

    ReplyDelete
  64. ///கிரி said...

    //முரளிகண்ணன் said...
    காலை சாப்பாடே மூணு வேளைக்கும் போதுமானதாய் இருக்கு//

    :-))))///

    ஆஹா.. கிரியாரே.. தாங்களுமா..?! கொஞ்சமாத்தான் இருக்கு ஸார்..

    ReplyDelete
  65. ///அனைவரின் நலன் விரும்பி said...

    //அதுதான் 'வேலை வேணும்'.. 'வேலை வேணும்'னு எத்தனை பேர் கியூவுல நிக்குறாங்க.. சேர்த்துக்க வேண்டியதுதான..? //

    அனைத்து திறமையும் கொண்ட இளைய சமுதாயத்துக்கு அவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய வேலைய கொடுத்தால் அவர்களும் பயனடைவார்கள் மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள். குற்றங்களும் குறைந்து போகும். நம் சமுதாயமும் முன்னேறும். யாராவது இதை பத்தி யோசிக்கிறார்களா? நான் சொல்லும் கருத்து சரியென்றால் அதை பற்றி உங்கள் நடையில் எழுதுங்களேன். இப்பொழுது நிறைய பேர் வலைப்பதிவுகளை படிக்கிறார்கள். நல்ல அதிகாரிகள் இதை படித்து செயல்படுத்தினால் நம் வருங்கால சமுதாயமாவது நன்றாக இருக்குமே.///

    நிச்சயம் எழுதலாம்.. நான் சொல்வதுகூட சாத்தியமானதுதான்..

    அதிகமான காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு எட்டு மணி நேர வேலை என்று ஷிப்ட் டைமில் நியமிக்கப்பட்டால் இரவு நேரத்தில்கூட விபத்துகள் அதிகம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்..! எல்லாம் அரசின் கையில்தான் உள்ளது..

    ReplyDelete
  66. //Anonymous said...
    உண்மைத்தமிழன் = 40+வயதான நடிகைகளின் உண்மையான ரசிகன் :)//

    என் வயது அதுதான்.. அந்த வயதுக்குரிய பக்குவம் இருக்குமே.. அதில் ஒன்றும் தவறில்லையே அனானி..

    ReplyDelete
  67. //பரிசல்காரன் said...
    சுவை!//

    நன்றி பரிசலு..!

    ReplyDelete
  68. //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

    ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு!//

    பாஸ்கி.. எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்.. துக்ளக் கார்ட்டூன் படத்தையும் காணோம்.. ரொம்ப ஆணியோ..?

    ReplyDelete
  69. கண்ணுகளா..

    இது உங்களுக்கே நியாயமா..?

    சாயந்தரம் 5 மணிவரைக்கும் இந்தப் பதிவு 8/9 என்ற தேர்வில் இருந்தது.

    தமிழ்மணத்தில் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டவைகள் லிஸ்ட்டிலும் கடைசிக்கு முந்தியாக நின்று கொண்டிருந்தது.

    திடீரென்று என் கண் முன்பாகவே 5 நிமிடத்தில் யாரோ சில கண்ணின்மணிகள் 5 பேர் மைனஸ் குத்தை குத்தி தூக்கிட்டாங்க..

    இதுல மைனஸ் குத்து குத்துற அளவுக்கு அப்படி என்னங்கப்பா மேட்டர் இருக்கு..?

    இருந்தா சொல்லிருங்கப்பா.. அடுத்த வாட்டில இருந்து அதை எழுதாம விட்டுர்றேன்..

    இப்படி நோகடிக்காதீங்கப்பா..!

    ReplyDelete
  70. //இதுல மைனஸ் குத்து குத்துற அளவுக்கு அப்படி என்னங்கப்பா மேட்டர் இருக்கு..? //

    சிறுசா எழுதித் தொலைன்னு எத்தனை முறை இப்படிச் சொன்னாலும் கேக்க மாட்டேன்னு அடம்பிடிசா என்னதான் பண்ணுறது?

    ReplyDelete
  71. ///சின்னக்கோணூசி said...

    //இதுல மைனஸ் குத்து குத்துற அளவுக்கு அப்படி என்னங்கப்பா மேட்டர் இருக்கு..? //

    சிறுசா எழுதித் தொலைன்னு எத்தனை முறை இப்படிச் சொன்னாலும் கேக்க மாட்டேன்னு அடம்பிடிசா என்னதான் பண்ணுறது?///

    சிறுசா எழுதலைன்றதுக்காக மைனஸ் குத்தா..? நல்லா சொல்றீங்கப்பா காரணத்தை..!

    ReplyDelete
  72. //
    சிறுசா எழுதலைன்றதுக்காக மைனஸ் குத்தா..? நல்லா சொல்றீங்கப்பா காரணத்தை..!//

    படிக்கிறா மாதிரி (எந்த எழவை) எழுதினாலும் பாஸிடிவ் குத்து!

    நெனச்ச மாதிரி(காவியத்தையே) எழுதிக் "குவித்தாலும்" நெகடிவ் குத்துதான் வரும்!

    ReplyDelete
  73. //படிக்கிறா மாதிரி (எந்த எழவை) எழுதினாலும் பாஸிடிவ் குத்து!

    நெனச்ச மாதிரி(காவியத்தையே) எழுதிக் "குவித்தாலும்" நெகடிவ் குத்துதான் வரும்!//

    இனிமே கேப்பியா கேப்பியா கேப்பியா?

    ReplyDelete
  74. Dear Mr.Saravanan,
    As per the lot of coplaints we received we regret to advice you that your per post size has been reduced 5oo characters, and if any chance you try to exceed the beyond the limit your blog will be deleted without any further notification. A formal mail will be sent to you on this regards, please read carefully the content on the mail and guideline.

    Thanking you,
    For Google Blogger Support
    Google Andavar

    ReplyDelete
  75. அருமையான கலக்கல் பதிவு - மெரினா கடற்கரையில் போய் ரெண்டு மணி நேரம் நின்ன்னு சுத்துப்புறத்தை அலசி ஆராஞ்சு அனுபவிச்சு ( தனியாத்தான போனாராம்)...... ஒரு நீண்ட பதிவு போட்டுட்டாரு.

    இவ்ளோ விசய்யத்த - ஒண்ணு விடாம - கண்ணுலே பட்டதெ எல்லாம் - விலாவாரியா எழுதுனது நல்லாத்தான் இருக்கு

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  76. //அடப் போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் பெரிசு, பெரிசுன்னுட்டு.. இதைவிடச் சின்னதா எழுதணும்னா தலைப்பை மட்டும்தான் எழுதி வைக்கோணும்..!//

    ஓ! தலைப்பையே பதிவு அளவுக்கு பெரிசா எழுதுவேன்னு சொல்றீங்களா

    ReplyDelete
  77. ///பெரிய குண்டூசி said...

    //சிறுசா எழுதலைன்றதுக்காக மைனஸ் குத்தா..? நல்லா சொல்றீங்கப்பா காரணத்தை..!//

    படிக்கிறா மாதிரி (எந்த எழவை) எழுதினாலும் பாஸிடிவ் குத்து!
    நெனச்ச மாதிரி(காவியத்தையே) எழுதிக் "குவித்தாலும்" நெகடிவ் குத்துதான் வரும்!///

    என்னதான் சொல்ல வர்ற முருகா..?

    நினைச்ச மாதிரி எழுதினா அது படிக்கிற மாதிரி வராதா..?

    அல்லது

    படிக்கிற மாதிரி எழுதினா அது நினைச்ச மாதிரி வராதா..?

    நினைச்ச மாதிரி எழுதினா நெகட்டிவ் குத்துதானா..?

    அல்லாட்டி

    படிக்கிற மாதிரி எழுதினா பாஸிட்டிவ் குத்துதானா..?

    ReplyDelete
  78. ///ஊக்கு said...

    //படிக்கிறா மாதிரி (எந்த எழவை) எழுதினாலும் பாஸிடிவ் குத்து!

    நெனச்ச மாதிரி(காவியத்தையே) எழுதிக் "குவித்தாலும்" நெகடிவ் குத்துதான் வரும்!//

    இனிமே கேப்பியா கேப்பியா கேப்பியா?///

    கேக்க மாட்டேன் முருகா.. கேக்க மாட்டேன்..

    முட்டாப் பயலுககிட்ட பேசி என்ன நடக்கப் போகுது..?

    முருகன் விட்ட வழின்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..!

    ReplyDelete
  79. //Google Blogger Support said...
    Dear Mr.Saravanan, As per the lot of coplaints we received we regret to advice you that your per post size has been reduced 5oo characters, and if any chance you try to exceed the beyond the limit your blog will be deleted without any further notification. A formal mail will be sent to you on this regards, please read carefully the content on the mail and guideline.
    Thanking you,
    For Google Blogger Support
    Google Andavar//

    கூகிள் ஆண்டவரே..

    நான் மட்டுமே பெரிதாக எழதவில்லை. தமிழ்மணத்தை நன்கு கண்ணை உற்றுப் பார்.. என்னைவிட நிறைய பேர் பக்கம், பக்கமா எழுதிக் குவித்திருப்பதை பார்..

    ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக என்னை மட்டுமே குறி வைத்து உனது துதிபாடிகள் கணைகளைத் தொடுத்து வருவதை நீ அறிய வேண்டும்..

    இது முழுக்க முழுக்க பொறாமையினால் விளைந்தது.. இது துளிகூட உண்மையில்லாதது.

    எனது எழுத்து நன்றாக இல்லை.. பிடிக்கவில்லை. ரொம்ப மட்டம்.. இது போல் எந்த நொள்ளை காரணத்தை வேண்டுமானாலும் சொல். ஏற்றுக் கொள்கிறேன்..

    ஆனால் இது போன்று பெரிசா இருக்கு.. அனுமார் வால் மாதிரியிருக்கு.. என்றெல்லாம் முட்டாள்தனமான காரணத்தைச் சொல்லி எனது பதிவை நீக்கி பதிவுலகத்தைவிட்டு என்னை நீக்கும்படியான வேலையையெல்லாம் வைத்துக் கொள்ளாதே..

    உலக நீதிமன்றம் வரையிலும் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்று நீதி கேட்பேன்..

    நீதிமன்றக் கூண்டில் உன்னை நிறுத்தி நார், நாராகக் கிழித்துவிடுவேன்..

    ஜாக்கிரதை..

    ReplyDelete
  80. //cheena (சீனா) said...

    அருமையான கலக்கல் பதிவு - மெரினா கடற்கரையில் போய் ரெண்டு மணி நேரம் நின்ன்னு சுத்துப்புறத்தை அலசி ஆராஞ்சு அனுபவிச்சு (தனியாத்தான போனாராம்)...... ஒரு நீண்ட பதிவு போட்டுட்டாரு.
    இவ்ளோ விசய்யத்த - ஒண்ணு விடாம - கண்ணுலே பட்டதெ எல்லாம் - விலாவாரியா எழுதுனது நல்லாத்தான் இருக்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

    நன்றி சீனா ஸார்..

    நிஜமாவே தனியாத்தான் ஸார் போனேன்..

    இன்னும் எழுத வேண்டியது நிறைய இருந்துச்சு.. பக்கம் போதாமல் பாதியிலேயே நிறுத்த வேண்டியதாப் போச்சு.. இப்ப வருத்தமா இருக்கு..!

    ReplyDelete
  81. ///அமெரிக்கா said...

    //அடப் போங்கப்பா.. எப்பப் பார்த்தாலும் பெரிசு, பெரிசுன்னுட்டு.. இதைவிடச் சின்னதா எழுதணும்னா தலைப்பை மட்டும்தான் எழுதி வைக்கோணும்..!//

    ஓ! தலைப்பையே பதிவு அளவுக்கு பெரிசா எழுதுவேன்னு சொல்றீங்களா?///

    அமெரிக்கா.. அடங்க மாட்டியா நீயி..

    அவ்வளவு நீட்டத்துக்கு தலைப்பு வைச்சு எழுதினா பிளாக்கரே ஏத்துக்காது.. தெரியுமா உனக்கு..?!

    ReplyDelete
  82. //ச்சும்மா.. தனியாத்தான்..//

    சொன்னால் தான் தெரியுமா என்ன? :))

    ReplyDelete
  83. அண்ணே பந்திக்கு பிந்தி வந்ததால, என்ன சொல்லறதுன்னு தெரியல!!

    ReplyDelete
  84. ///SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
    //ச்சும்மா.. தனியாத்தான்..//
    சொன்னால்தான் தெரியுமா என்ன?:))///

    தம்பீ.. வருகைக்கும், ஆழ்ந்த, செறிவான, நெகிழ்வான கருத்துக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்..

    உனது பெயருக்கு நடுவில் இருக்கும் பட்டாம்பூச்சி டிஸைன் ரொம்ப நல்லாருக்கு..

    ReplyDelete
  85. //Bhuvanesh said...
    அண்ணே பந்திக்கு பிந்தி வந்ததால, என்ன சொல்லறதுன்னு தெரியல!!//

    பந்தில ஒண்ணும் இல்லைன்னா, வாழ்த்துச் சொல்லாம திரும்பிப் போயிருவீங்களா தம்பீ..!

    ReplyDelete