Pages

Saturday, February 28, 2009

தமிழ்மணத்திற்கும், சக வலைப்பதிவர்களுக்கும் நன்றி..! நன்றி..! நன்றி..!


28-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

தமிழ்மணம் நடத்திய போட்டியில் எனது பதிவுகளை வெற்றி பெற வைத்த வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்..

எனது எழுத்தினையும் படிக்கக் கூடிய ஒன்றுதான் என்ற ரீதியில் நீங்கள் அங்கீகரித்திருப்பது, நான் சோர்வடையாமல் இருந்து மேலும், மேலும் எழுதுவதற்கு என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது.

அதிலும் ஒரு பொருத்தமாக நமது எழுத்துலக ஆசான் சுஜாதா அவர்களின் அஞ்சலிப் பதிவு வெற்றி பெற்ற செய்தி, அந்த ஆசான் மறைந்த தினத்தன்றே வெளியானது எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்பது ஒரு அளவீடுதானே ஒழிய, அதுவே முத்திரையல்ல.. இந்த அளவீடுகள் பதிவுக்கு பதிவு, தலைப்புக்குத் தலைப்பு மாறுபடும் தன்மை கொண்டது. பதிவர்கள் பலரும் பலவித குடும்பச் சூழல்களுக்கு மத்தியில் எழுத வருவதே மிகப் பெரிய விஷயம். அந்த வகையில் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுமே தத்தமது வெளிப்பாடுகளை அவரவர்க்கு ஏற்றவகையில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தனை பேருமே வலையுலகின் எழுத்தாளர்கள்தான்.. சிறந்தவர்கள்தான்.. சந்தேகமில்லை..

நேரமும், சந்தர்ப்பமும் அனைவருக்கும் ஒரேவகையில் வாய்க்குமானால் இன்னும் சிறப்பாக பதிவர்களால் எழுத முடியும்.. அது அவர்களுக்கு கிட்டும் என்று நம்புகிறேன்..

ஆரோக்கியமான முறையிலும், நேர்மையான முறையிலும் போட்டியினை நடத்திய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

தொலைபேசியிலும், நேரிலும், பின்னூட்டத்திலும் வாழ்த்துச் சொன்ன அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..!

வலையுலகம் செழித்து வளரவும், பதிவர்கள் அவர்தம் குடும்பத்தினரும், வாசகர்களும் அவர்தம் குடும்பத்தினரும் நீடூழி வாழ வேண்டி என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..

நன்றி

வணக்கம்.

50 comments:

  1. அப்பாடா ..இதுக்கும் ஒரு 25 பக்கம் எழுதிருப்பீங்களோன்னு பயந்து வந்தேன் .

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. இவ்வளவு குட்டியா பதிவு போட்டதுக்கே.. இன்னொரு அவார்ட் கொடுக்கலாமே..? LOL..!!!

    கலக்கிட்டீங்களே... காப்பியை..!!!

    வாழ்த்துகள்.... நண்பரே..! அடுத்த வருடமும் வெற்றி பெற..!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார்

    //அப்பாடா ..இதுக்கும் ஒரு 25 பக்கம் எழுதிருப்பீங்களோன்னு பயந்து வந்தேன் .//

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  4. வெடிஞ்சதும், மப்பு தெளிஞ்சு வந்து பாத்தாப் பதிவு சிறுசா இருக்கு...நான் போட்ட பின்னூட்டத்தையும் காணோம்?!

    வாழ்த்துகள் தமிழா!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்..இன்று உங்களை சந்திக்க வேண்டுமென்று இருந்தேன்.இயலவில்லை..

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்..இன்று உங்களை சந்திக்க வேண்டுமென்று இருந்தேன்.இயலவில்லை..

    ReplyDelete
  7. கெட்டித்தனமான வெற்றி தான் உண்மை அண்ணா --- மனம் சோராது இரவில் துயிலாது எழுதியதற்கு பிரதிபலன் தகுதியானது தான் --- ஒரு விஷயம் --- அது என்ன தமிழ் மணம் வெப்சைட் தொடர்ந்து Under Construction என்று பலவற்றை போடுறார்களே ?

    அதெப்படி வெற்றி மகிழ்ச்சியில் சிறிதாக பதிவு ? நித்திரை தூக்கம் வந்திருக்காதே ? அப்போ வெளியில் பார்ட்டி வைத்தீர்களோ ?

    மனமார பாராட்டுகின்றேன் --- உங்களை போன்ற நடுத்தர சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் தான் மக்களது மனதை பக்குவப்படுத்தி சிந்திக்க வைத்து போலி அரசியல் வாதிகளிடம் இருந்து சமுதாயத்தை காப்பாற்ற முடியும் !

    ReplyDelete
  8. பாராட்டுடன் புதிய திருப்பம் தேவைதானே ! --- பழசு போய் புதுசு வரோண்டாம் ? ---

    அரசியல்வாதிகள் வெற்றி பெற்றதும் அரசாங்கம் அமைத்து சமூக நன்மைக்காக சட்டங்கள் இயற்றுகின்றனர் --- அனேகமாக சகல துறைகளையும் நடைமுறை படுத்த நிர்வாக அமைப்புகள் உள்ளன --- டாக்டர் எஞ்சிநிர் சினிமாகாரர் எழுத்தாளர்கள் ஆகியோர் --- இச் சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிகளுக்கு எதுவுமே இல்லை --- கையை உயர்த்தி ஓட்டு போட தெரிஞ்சால் தெரு நாயும் வந்திடும் நிலைமையை மாத்தி --- சில விதி முறைகளை வைத்து --- நிர்வாக அமைப்பையும் உருவாக்கி --- அரசியலில் இறங்க பொருத்தமான தகுதிகளை வரையறுத்து --- சாப்பிகளை களைந்து நல்லோரை தேர்ந்தெடுக்க வழி கோல முயற்சிக்கலாமே !

    என்ன நைனா யோசிகிறே --- பேனாவின் பலம் கொடும் வாளுக்கு மேலானது என்னுறாங்கள் --- படித்த இளம் சமுதாயத்திடம் பொறுப்பை கொடுக்க முன்னர் அதை
    தொடங்கி ஒடபண்ணனும் --- இல்லாடிகி போயஸ் அம்மா கருணாநிதி ராமதாஸ் வைகோ எல்லாம் குழப்பிடுவானுக.

    ReplyDelete
  9. நீங்கள் கடைசியாக எழிதிய பிரார்த்தனை வரிகள் ஏனோ என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது .எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் தந்து உலகத்தில் அமைதி நிலவ இறவனை வேண்டுகிறேன் ............நன்றி

    ReplyDelete
  10. நல்ல வேளை உங்களுக்கு விருது கிடைத்து விட்டது...இல்லைன்னா
    யாருக்குய்யா வேணும்...!? போங்கய்யா நீங்களும் உங்க 'தமிழ்மணமும்'!!! ன்னு அடுத்த பதிவு போட்டிருப்பீங்க...அப்பாட தப்பித்தோம்...

    ( வாழ்த்துக்கள் நண்பரே )

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சார் !
    உங்களுக்கு இது எத்தனையாவது விருது?

    ReplyDelete
  12. Congrats Sir..You are very much deserved for this award...Also did you get the award from "Rajini rasigar Mandram" for putting super jalra to rajini in your last essay..I will pray to Emperuman "Murugappann" to get the award for you...

    ReplyDelete
  13. தலைவரே.. என்னுட்ய முத்தம் சிறுகதை டாப் டென்னில் எட்டாவதாகவும், என்னுடய் குறும்படம் ஏழாவதாகவும் வந்திருக்கிறது.. அது சரி பார்ட்டி எப்ப>>?

    ReplyDelete
  14. அண்ணே வாழ்த்துக்கள் --- அப்புறம் பதிவு ரொம்பச் சின்னதா இருக்கு

    ReplyDelete
  15. //Cable Sankar said...
    தலைவரே.. என்னுட்ய முத்தம் சிறுகதை டாப் டென்னில் எட்டாவதாகவும், என்னுடய் குறும்படம் ஏழாவதாகவும் வந்திருக்கிறது.. அது சரி பார்ட்டி எப்ப>>?//

    ரிப்பீட்டேய்.........

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் உண்மைத்தமிழரே!!!

    //இவ்வளவு குட்டியா பதிவு போட்டதுக்கே.. இன்னொரு அவார்ட் கொடுக்கலாமே..? //

    ரிப்பீட்டே!!! :-)

    ReplyDelete
  17. வாழ்த்துகள் உண்மைத்தமிழன்....

    ReplyDelete
  18. //ஜோ / Joe said...

    அப்பாடா ..இதுக்கும் ஒரு 25 பக்கம் எழுதிருப்பீங்களோன்னு பயந்து வந்தேன் .

    வாழ்த்துகள்!//

    இப்படி சொல்லலைன்னா தூக்கம் வராதே உங்களுக்கு..!

    நல்லாயிருங்க ஜோ..

    வருகைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  19. //தமிழ் பிரியன் said...

    வாழ்த்துக்கள்!//

    நன்றி தமிழ்ப்பிரியன் ஸார்..

    ReplyDelete
  20. //ஹாலிவுட் பாலா said...
    இவ்வளவு குட்டியா பதிவு போட்டதுக்கே.. இன்னொரு அவார்ட் கொடுக்கலாமே..? LOL..!!!//

    என்ன லொள்ளா..! பாலா நீங்களும் கெட்டுப் போயிட்டீங்களே இப்படி..!

    //கலக்கிட்டீங்களே... காப்பியை..!!!//

    குடிச்சுப் பாருங்க தெரியும்..!

    //வாழ்த்துகள்.... நண்பரே..! அடுத்த வருடமும் வெற்றி பெற..!!!//

    எல்லாம் உங்க ஆசீர்வாதம்..!

    ReplyDelete
  21. ///புருனோ Bruno said...
    வாழ்த்துக்கள் சார்
    //அப்பாடா ..இதுக்கும் ஒரு 25 பக்கம் எழுதிருப்பீங்களோன்னு பயந்து வந்தேன்.//
    ஹி ஹி ஹி///

    நானும் உங்களை வாழ்த்துறேன்..

    நீங்கள் மூன்று பிரிவுகளில் போட்டியிட்டு மூன்றிலுமே வெற்றி பெற்றது சாதனை..

    இன்னும் பல பல விருதுகளை அள்ளுவீர்கள் டாக்டர்..!

    ReplyDelete
  22. //T.V.Radhakrishnan said...
    வாழ்த்துகள்!//

    நன்றி ராதா ஸார்.. விரைவில் நாம் சந்திக்க வேண்டும்.. ஆவலாக காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  23. //பழமைபேசி said...
    வெடிஞ்சதும், மப்பு தெளிஞ்சு வந்து பாத்தாப் பதிவு சிறுசா இருக்கு... நான் போட்ட பின்னூட்டத்தையும் காணோம்?!
    வாழ்த்துகள் தமிழா!!//

    ஓ.. உங்களுக்கெல்லாம் விடிஞ்சாத்தான் மப்பு போகுமா..?

    மப்புல கமெண்ட்டை டைப் பண்ணியிருப்பீங்க.. ஆனா அதே மப்புலேயே வேறொரு ஆளுக்கு கொண்டு போய் போட்டிருப்பீங்க.. அதான் இங்க இல்ல.. தேடிப் பாருங்க.. யாருக்குப் போட்டீங்கன்னு..

    ஆனாலும் மப்புல இருந்தும் என்னை மறக்காம பின்னூட்டம் போட நினைச்சதுக்கு நன்றிங்கோ..

    ReplyDelete
  24. //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

    வாழ்த்துக்கள் சார்!//

    நன்றி பாஸ்கர்ஜி..

    ReplyDelete
  25. //தண்டோரா said...
    வாழ்த்துக்கள்..இன்று உங்களை சந்திக்க வேண்டுமென்று இருந்தேன். இயலவில்லை..//

    பரவாயில்லை.. இந்த வாரம் சந்தித்துவிடுவோம் தண்டோரா ஸார்..

    வருகைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  26. //benzaloy said...
    கெட்டித்தனமான வெற்றிதான் உண்மை அண்ணா --- மனம் சோராது இரவில் துயிலாது எழுதியதற்கு பிரதிபலன் தகுதியானதுதான்.//

    நன்றி பென்ஸ் ஸார்.. அதென்ன "அண்ணா".. நான் என்றென்றைக்கும் தங்களது தம்பிதான்..

    //ஒரு விஷயம் --- அது என்ன தமிழ் மணம் வெப்சைட் தொடர்ந்து Under Construction என்று பலவற்றை போடுறார்களே?//

    நேற்றைக்கு சர்வர் பிரச்சனையாக இருந்திருக்கும்.

    //அதெப்படி வெற்றி மகிழ்ச்சியில் சிறிதாக பதிவு? நித்திரை தூக்கம் வந்திருக்காதே? அப்போ வெளியில் பார்ட்டி வைத்தீர்களோ?//

    பார்ட்டியா.. நான் இருக்குற நிலைமைல பார்ட்டியா வைக்க முடியும்..?

    பெரிசா எழுதலாம்னுதான் நினைச்சேன். ஊருக்கு கிளம்பிட்டிருந்ததால சின்னதா போட வேண்டிய கட்டாயம்..!

    //மனமார பாராட்டுகின்றேன் --- உங்களை போன்ற நடுத்தர சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள்தான் மக்களது மனதை பக்குவப்படுத்தி சிந்திக்க வைத்து போலி அரசியல்வாதிகளிடம் இருந்து சமுதாயத்தை காப்பாற்ற முடியும்//

    நன்றி பென்ஸ் ஸார்..

    ReplyDelete
  27. //benzaloy said...
    பாராட்டுடன் புதிய திருப்பம் தேவைதானே ! --- பழசு போய் புதுசு வரோண்டாம் ? ---
    அரசியல்வாதிகள் வெற்றி பெற்றதும் அரசாங்கம் அமைத்து சமூக நன்மைக்காக சட்டங்கள் இயற்றுகின்றனர் --- அனேகமாக சகல துறைகளையும் நடைமுறைபடுத்த நிர்வாக அமைப்புகள் உள்ளன --- டாக்டர் எஞ்சிநிர் சினிமாகாரர் எழுத்தாளர்கள் ஆகியோர் --- இச்சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிகளுக்கு எதுவுமே இல்லை --- கையை உயர்த்தி ஓட்டு போட தெரிஞ்சால் தெரு நாயும் வந்திடும் நிலைமையை மாத்தி --- சில விதி முறைகளை வைத்து --- நிர்வாக அமைப்பையும் உருவாக்கி --- அரசியலில் இறங்க பொருத்தமான தகுதிகளை வரையறுத்து --- சாப்பிகளை களைந்து நல்லோரை தேர்ந்தெடுக்க வழி கோல முயற்சிக்கலாமே!//

    செய்யலாம்.. அதுக்கு நாம அரசியல்வாதியா மாறி ஜெயித்தால்தான் உண்டு..

    //என்ன நைனா யோசிகிறே --- பேனாவின் பலம் கொடும் வாளுக்கு மேலானது என்னுறாங்கள் --- படித்த இளம் சமுதாயத்திடம் பொறுப்பை கொடுக்க முன்னர் அதை
    தொடங்கி ஒட பண்ணனும் --- இல்லாடிகி போயஸ் அம்மா கருணாநிதி ராமதாஸ் வைகோ எல்லாம் குழப்பிடுவானுக.//

    எல்லாம் சரிதான் ஸார்.. இங்க தமிழ்நாட்டுல, இந்தியால மக்கள் புதிய கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறைவாக உள்ளது..

    மக்கள் சிந்திக்க மறுக்கிறார்கள். இருக்கிற இடத்தில் இருந்தே கிடைப்பதை வைத்து வாழ வேண்டும் என்கிற சிறுமதியுடையவர்களாக இருக்கிறார்கள்.

    நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். இதுதான் பிரச்சினைகளுக்குக் காரணம்..

    ReplyDelete
  28. //வேத்தியன் said...
    வாழ்த்துகள்...//

    நன்றி வேத்தியன் ஸார்..

    ReplyDelete
  29. //malar said...
    நீங்கள் கடைசியாக எழிதிய பிரார்த்தனை வரிகள் ஏனோ என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் தந்து உலகத்தில் அமைதி நிலவ இறவனை வேண்டுகிறேன். நன்றி//

    நன்றி மலர்..

    இறைவனிடம் இறைஞ்சுவதைத் தவிர நம்மால் முடிந்தது இன்றைய நிலையில் எதுவுமில்லை..

    ReplyDelete
  30. //கீழை ராஸா said...
    நல்ல வேளை உங்களுக்கு விருது கிடைத்து விட்டது. இல்லைன்னா
    யாருக்குய்யா வேணும்...!? போங்கய்யா நீங்களும் உங்க 'தமிழ்மணமும்'!!!ன்னு அடுத்த பதிவு போட்டிருப்பீங்க. அப்பாட தப்பித்தோம்.
    வாழ்த்துக்கள் நண்பரே//

    ராசா..

    அடுத்தப் பதிவு ஒண்ணுக்கு ஐடியா கொடுத்திருக்கீங்க.. நல்லது.. எழுதிரலாம்..

    ReplyDelete
  31. //லேகா பக்க்ஷே said...
    வாழ்த்துக்கள் சார்! உங்களுக்கு இது எத்தனையாவது விருது?//

    வாங்க மேடம்.. வந்தனம்..

    தமிழ்மணத்திடம் இருந்து பெறுவது இதுவே முதல் முறை..

    நன்றிங்கோ..

    ReplyDelete
  32. //ஷண்முகப்ரியன் said...
    வாழ்த்துகள்...//

    அப்பாடா.. வாழ்த்து வந்திருச்சுடா சாமி..!

    வந்ததுக்கு கும்பிட்டுக்குறேன் ஸார்..!

    ReplyDelete
  33. //Raja said...
    Congrats Sir..You are very much deserved for this award... Also did you get the award from "Rajini rasigar Mandram" for putting super jalra to rajini in your last essay.. I will pray to Emperuman "Murugappann" to get the award for you...//

    நன்றி ராஜா.. ரஜினிக்கு ஜால்ரா என்று அவார்டு கிடைத்தால்கூட சந்தோஷம்தான்..

    யார், யாருக்கோ ஜால்ராவாக இருப்பதற்கு ரஜினிக்கு இருந்துவிடலாம்.. தவறில்லை.. புண்ணியமாச்சும் கிடைக்கும்..

    ReplyDelete
  34. //Cable Sankar said...
    தலைவரே.. என்னுட்ய முத்தம் சிறுகதை டாப் டென்னில் எட்டாவதாகவும், என்னுடய் குறும்படம் ஏழாவதாகவும் வந்திருக்கிறது..//

    ஆஹா.. அப்படியா.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

    //அது சரி பார்ட்டி எப்ப>>?//

    அப்டீன்னா..!

    ReplyDelete
  35. ///அத்திரி said...

    //Cable Sankar said...
    தலைவரே.. என்னுட்ய முத்தம் சிறுகதை டாப் டென்னில் எட்டாவதாகவும், என்னுடய் குறும்படம் ஏழாவதாகவும் வந்திருக்கிறது.. அது சரி பார்ட்டி எப்ப>>?//

    ரிப்பீட்டேய்///

    கேபிளாருக்கு சொன்ன பதிலை நானும் இங்கே ரிப்பீட்டு செய்து கொள்கிறேன்..

    ReplyDelete
  36. ///மதுரையம்பதி said...

    வாழ்த்துக்கள் உண்மைத்தமிழரே!!!

    //இவ்வளவு குட்டியா பதிவு போட்டதுக்கே.. இன்னொரு அவார்ட் கொடுக்கலாமே..? //

    ரிப்பீட்டே!!! :-)///

    தம்பீ நீயுமா..

    வருகைக்கு நன்றி ராசா..

    ReplyDelete
  37. //அத்திரி said...
    அண்ணே வாழ்த்துக்கள் --- அப்புறம் பதிவு ரொம்பச் சின்னதா இருக்கு//

    என்னங்கப்பா இது..!

    பெரிசா எழுதினா பெரிசாயிருக்குன்றீங்க..! சி்னனதா எழுதினா சிறுசா இருக்குன்னு புகார் சொல்றீங்க..!

    நான் என்னதான் செய்யறது..?

    ReplyDelete
  38. //வெண்பூ said...
    வாழ்த்துகள் உண்மைத்தமிழன்//

    தம்பீ வெண்பூ..

    வருகைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  39. கண்ணுகளா..

    இது கொஞ்சமும் சரியில்லை.. சொல்லிப்புட்டேன்..

    என் மேல ஏன் அவ்வளவு காண்டு..?

    ஏதோ எனக்குத் தெரிஞ்சதை எழுதிட்டு வரேன்.. பின்னூட்டத்திலும் விமர்சனங்களை ஜனநாயக முறையில் அனுமதித்தே வருகிறேன்..

    அப்படியிருந்தும், அப்படியிருந்தும்..

    எல்லா பதிவிலேயும் மைனஸ் குத்தா குத்துனீங்கன்னா எப்படி..?

    இதுல பாருங்க.. இதுவரைக்கும் நான் எந்தப் பதிவிலேயும் பார்க்காதது -2 என்று மைனஸ் குறியீடே விழுந்திருக்கு..

    அப்படி வெறித்தனமா குத்திருக்கீங்க..!

    நல்லாயிருங்க..

    என் அப்பன் முருகன் இருக்கான்.. பார்த்துக்கிட்டிருக்கான்.. பார்த்துக்குவான்..

    வேறென்ன சொல்றது நானு..!

    ReplyDelete
  40. தலைவருக்கு...

    வாழ்த்துக்கள். 100 அடி உயர கட்அவுட்டுகள் ஐம்பதுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறேன். payment சரியாகக் கொடுத்துவிடவும்.

    மிக்க அன்புடன்
    நித்யன்

    ReplyDelete
  41. வாழ்த்துகள் அண்ணே!!

    //நேரமும், சந்தர்ப்பமும் அனைவருக்கும் ஒரேவகையில் வாய்க்குமானால் இன்னும் சிறப்பாக பதிவர்களால் எழுத முடியும்.. அது அவர்களுக்கு கிட்டும் என்று நம்புகிறேன்..//


    உங்களுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்!!

    ReplyDelete
  42. //நித்யகுமாரன் said...

    தலைவருக்கு...

    வாழ்த்துக்கள். 100 அடி உயர கட்அவுட்டுகள் ஐம்பதுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறேன். payment சரியாகக் கொடுத்துவிடவும்.

    மிக்க அன்புடன்
    நித்யன்//

    மொதல்ல கட்அவுட்டை கண்ல காட்டு.. அப்புறமா சிங்கிள் பேமண்ட்டா தர்றதா இல்லாட்டி 60 வருஷ தவணையா தர்றதா நான் முடிவு பண்றேன் கண்ணா..!

    ReplyDelete
  43. //Bhuvanesh said...

    வாழ்த்துகள் அண்ணே!!

    //நேரமும், சந்தர்ப்பமும் அனைவருக்கும் ஒரேவகையில் வாய்க்குமானால் இன்னும் சிறப்பாக பதிவர்களால் எழுத முடியும்.. அது அவர்களுக்கு கிட்டும் என்று நம்புகிறேன்..//


    உங்களுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்!!//

    கிடைக்கும்.. கிடைக்கணும்..

    நன்றி புவனேஷ்..

    ReplyDelete
  44. //வால்பையன் said...
    வாழ்த்துக்கள்!//

    நன்றி வாலு..!

    நீங்க ஏன் இந்தப் போட்டில கலந்துக்கல.. எங்களுக்காகவா.. நன்றியோ நன்றி..!

    ReplyDelete