Pages

Tuesday, February 24, 2009

என்னைப் பின் தொடரும் பதிவர்கள்..!

24.02.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வலைத்தளங்களின் தொழில் நுட்ப வசதிகள் ஒவ்வொரு மாதமும் மேம்பட்டுக் கொண்டே போகின்றன. அந்த வகையில் வந்த 'பின்தொடர்பவர்கள் பட்டியல்' பல பதிவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமது தளத்தின் மூலமாகவே நாம் அதிகம் பார்க்க விரும்பும் பதிவுகளை அலைச்சல் இல்லாமல் நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் அந்தத் தளத்தின் பெருமையையும், மேன்மையையும் சொல்லாமல் சொல்கிறது.

அந்த வகையில் எனது பதிவு ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும் புதிய நபர் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அதன் எண்ணிக்கை கூட, கூட இத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்பதால்.. இன்னமும் அதிக கவனமாக, ஈர்ப்புத் தன்மையுடன் எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கிறது.

அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யார், யாரென்று பார்க்கலாம் என்று கிளிக் செய்து பார்த்தபோது திடீரென்று ஒரு யோசனை எழுந்தது.. 'அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே ஒரு பதிவில் இட்டு அறிமுகப்படுத்தினால் என்ன?' என்று என் சிந்தனை சிறகடித்து பறந்தது. அந்த சிந்தனையை சிதறடிக்காமல் இங்கே செய்து முடித்திருக்கிறேன்..

இன்றைய தேதி வரையிலும் மொத்தம் 56 பதிவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் இங்கே..

1. இளவஞ்சி

http://konguvaasal.blogspot.com
http://ilavanji.blogspot.com
http://tamilcomic.blogspot.com

நவீன புனைவு எழுத்தாளர். ஆனா இப்பத்தான் 'எழுத மாட்டேன் போ'ன்னு சொல்லி அடம் புடிக்கிறார். 'கொங்குவாசல்' பதிவில் இவர் எழுதியிருக்கும் 'கொங்கு வட்டார வழக்கு மொழி' நமக்கு மிகப் பெரும் உதவி..

2. மோகன்தாஸ்

http://blog.mohandoss.com
http://baavaa.mohandoss.com

வலையுலகின் தலைசிறந்த பெண்ணியவாதி.. பின்நவீனத்திற்கும், முன் நவீனத்திற்கும் ஒரு பெரும் பாலமாக இருக்கும் பெங்களூரு மைனரு.. இவருடைய பின்னவீனத்துவ கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள், புரியும்..!

3. அதிஷா

http://www.athishaonline.comhttp://athisha123.blogspot.com

"ஏண்ணா இப்படி எழுதுறீங்க?"ன்னு அவனவன் போன்ல பேசி, திட்டி ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பயபுள்ளை முதல்முதல்லா என்னை பார்த்தப்பவே சிகரெட்டால சூடு வைச்சு கோபத்தைத் தீர்த்துக்கிட்டான்ல..

4. அருப்புக்கோட்டை பாஸ்கர்

http://aruvaibaskar.blogspot.com

ஒரு காலத்துல துக்ளக் அட்டைப் படங்களையும், கருத்துப் படங்களையும் ஸ்கேன் செய்து போடுவதில் நான்தான் முதல் ஆளாக இருந்தேன். பின்பு என்னிடமிருந்து அந்தப் பெருமையைத் தட்டிப் பறித்த புண்ணியவான் இவர்தான்.. நான்தான் இவரோ என்று நினைத்து எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்களும், அன்பு மடல்களும் போலிக் கூட்டத்திடமிருந்து வந்து குவிந்தது.

5. தென்றல்

http://nanayam2007.blogspot.com
http://thendral2007.blogspot.com

முக்கியமான எனது எல்லாப் பதிவிலேயும் இவர் ஆஜராயிருப்பாரு..

6. அருண்குமார்

http://thamizthoughts.blogspot.com

பெங்களூரு தம்பி.. ஒரு விதத்துல போலியையும், அவனது அல்லக்கைகளையும் காலி செய்து, இன்னிக்கு வலையுலகம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதுக்கு ரொம்பவே உதவியிருக்கிறவரு.. ஆனா ரொம்ப அடக்கமானவரு.. யார்கிட்டேயும் சிக்காதவரு..

7. வரதராஜ்-துபாய்

http://musikvrdrj.blogspot.com

புத்தம் புதிய திரைப்படங்களை ஆன்லைனில் இறக்குமதி செய்யும் லின்க்குகளை தனது தளத்தில் கொடுத்து வைத்திருக்கிறார்.. ஆளை விடாதீங்க.. பிடிங்க..

8. சுரேஷ்கண்ணன்

http://pitchaipathiram.blogspot.com

'நான் பார்க்கணும்.. பேசணும்'னு விடாம துரத்திக்கிட்டிருக்கேன்.. போன் நம்பரைக் கூட கொடுக்காம டபாய்ச்சுக்கிட்டிருக்காரு அண்ணன்..

9. கூடுதுறை

http://paakeypa.blogspot.com

நான் எப்பல்லாம் சோகக்கதை, ஆன்மீகக் கதையெல்லாம் எழுதறனோ, அந்த நேரத்துல 'டான்'னு வந்து நின்னு கண்ணீரைத் துடைச்சுவிடுவாரு.. அவ்ளோ பாசமானவரு..

10. கொங்கு ராசா

http://raasaa.blogspot.com

இவரைப் பத்தி முன்னாடி தப்பா எழுதிட்டேங்க.. இப்ப திருத்திக்கிறேன்..

இவர் ஒரு மூத்தப் பதிவருங்கோ.. 2004-ல இருந்து எழுதிட்டு வர்றாருங்க.. இவரைப் பார்த்துதான் பல பேரு வலைக்குள்ளாற பூந்திருக்காங்க.. கொங்கு வழக்குப் பேச்சு இவர் பதிவுல விளையாடுதுங்கோ.. போய்ப் பாருங்கோ..

முன்னாடி தப்பா எழுதினதுக்கு மன்னிச்சுக்குங்க..

11. விசு என்கிற பொ.விசுவநாதன்

http://vichumsc.blogspot.com

அண்ணே.. பின்னாடி மட்டும்தான் வருவாரு போலிருக்கு..

12. தமிழ்மகன்

http://tamilmagan.blogspot.com

சினிமாவுலகில் இருந்தும், சந்திக்க முடியாத சூழலால் தொலைபேசியில் மட்டுமே பேசிக் கொள்ளும் நல்லதொரு நண்பர்.

13. வெயிலான்

http://veyilaan.wordpress.com

யாருய்யா இந்தாளு..? கோயம்புத்தூர் பக்கம் போற, வர்ற ஆளுக எல்லாரும் "வெயிலானை பார்த்தேன்.. நல்லா பேசினாரு.. சூப்பரா கவனிச்சாரு.. போக்குவரத்துச் செலவுக்கான பணத்தைக்கூட கைல திணிச்சு அனுப்பினாரு"ங்குறாங்க.. என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..! வைச்சுக்குறேன் ஒரு நாளு..!

14. விஜயராகவன் சீனிவாசமூர்த்தி

http://sujaarun.blogspot.com

இவரும் புதுமுகம்தான்.. பதிவை படிக்க மட்டுமே செய்வார் போலிருக்கிறது.. பரவாயில்லை.. படிக்கிறாரே அதுவே பெரிய விஷயமாச்சே..

15. அக்னிபார்வை

http://agnipaarvai.blogspot.com

ஒரு பத்து நிமிட தாமதத்தால் டிசம்பர் மாத உலகத் திரைப்பட விழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது இந்த நண்பரை.. அடுத்த வருட திரைப்பட விழாவில்தான் சந்திக்க முடியும்போல் உள்ளது.

16. வான்முகிலன்

http://vaanmuhilan.blogspot.com

இப்போதுதான் படித்தேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..

17. சினிமா ரசிகன்

http://kollywoodkondattam.blogspot.com

முன்பெல்லாம் எனது சினிமாப் பதிவுகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவார். இப்போது வருவதேயில்லை..

18. மடல்காரன்

http://kbmadal.blogspot.com

நீண்ட நாளாகவே பதிவுலகில் உள்ளார். ஆனால் அவ்வப்போதுதான் தலையைக் காட்டுவார்..

19. வலையில் உலாவும் வாசவன்

http://valaivesumvasavan.blogspot.com

இவரை இப்போதுதான் தரிசிக்கிறேன்.. இவருடைய தளத்தின் முகப்பில் இருக்கும் குழந்தை புகைப்படம் கொள்ளை அழகு..

20. மேத்யூ

http://enbathamil.blogspot.com

தளம் விரியவே இல்லை.. என்ன பிரச்சினை..?

21. நித்யகுமாரன்

http://nithyakumaaran.blogspot.com

உள்ள நுழையும்போது ‘டவுசர் பாண்டி’யா வந்தான்யா.. இப்ப ‘பருத்தி வீரனா’ மாறிட்டான்.. ஆனா ‘சொக்கத் தங்கம்..!’

22. செந்தழல் ரவி

இம்சை.. பெங்களூரு தப்பிச்சு ஹாலந்து மாட்டிக்கிச்சு.. அந்த நாட்டுக்காரங்க எப்படி சமாளிக்கிறாங்களோ தெரியலையே..?

23. மெட்ராஸ்காரன்

http://meeramunna.blogspot.com

நானும் இவருக்குப் புதுசுதான்..

24. அதிரைபோஸ்ட்

http://fromtamil.blogspot.com

பலவித அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.. அவ்வப்போது படித்ததுண்டு..

25. சத்யா

http://msathia.blogspot.com

நானும் இப்போதுதான் படித்தேன்.. ஜெயாக்கா கதை மனதை என்னமோ செய்கிறது..

26. பரக்கத் அலி

http://barakathalinews.blogspot.com

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் வலையுலகில் பரப்பி வரும் பரக்கத்அலி எனது நண்பர்.. கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் நண்பராகிவிடுவார்.. அவர்கிட்ட எதுக்கும் போன் நம்பர் வாங்கி வைச்சுக்குங்க.. ஆபத்துக்கு உதவும்..

27. சண்முகா இலங்கேஸ்வரன்

http://shanmugha.blogspot.com
http://itvav.blogspot.com

இந்தத் தளத்தைப் பார்த்தவுடன் ஆச்சரியமு்ம், அதிர்ச்சியும் அடைந்தேன். இலங்கை, வவுனியாவில் கணினி பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறாராம் இந்த இனிய நண்பர் சண்முகா இலங்கேஸ்வரன்.

நான் இதுவரையிலும் இந்தப் பெயரையும், வவுனியாவில் இருந்து பதிவேற்றி வரும் இவரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை.. என்னையும் தொடர்ந்து வந்திருக்கிறார்.. இவ்வளவு நாட்கள் கவனிக்காமல் இருந்தது குறித்து எனக்கே வெட்கமாக உள்ளது.. தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.

இவருடைய இந்தத் தளத்தில் பலதரப்பட்ட விஷயங்களையும் சுவாரசியமாக அனாயசமாக எழுதியிருக்கிறார் இந்த கணினி ஆசிரியர்.

28. கண்ணாநேசன்

http://kannanesan.blogspot.com

இவரும் புதுமுகம்தான்.. கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார்.

29. வேத்தியன்

http://jsprasu.blogspot.com

ஈழத் தமிழர் என்பது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது.. நானும் இப்போதுதான் படிக்கிறேன்..

30. Shan Nalliya

http://worldtamiltravellersforum.blogspot.com

நான் பார்த்தவர்களிலேயே இவர்தான் அதிகம் பேரைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதேபோல் அதிகமான சொந்தத் தளங்களை வைத்திருப்பவரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

உள்ளே சென்று பாருங்கள்..

31. திரட்டி.காம்

http://thiratti1.blogspot.com

திடீரென்று திரட்டியாக உருவெடுத்து நம்மையும் சேர்த்துக் கொண்டு, அதில் தம்மையும் இணைத்துக் கொண்டு பவனி வருகிறார் வெங்கடேஷ்.

32. குடுகுடுப்பை

http://kudukuduppai.blogspot.com

மொக்கைக்கும், சீரியஸுக்கும் மாறி, மாறி பின்னூட்டமிடுவதில் வல்லவர்.. பின்னூட்டங்கள் ஒன்று, இரண்டெல்லாம் போடுவதில்லை. இவருக்கு பிரெஸ்டீஜ் குறைந்துவிடுமாம்.. குறைந்தது 5 அல்லது 10தானாம்..

33. ஷண்முகப்பிரியன்

http://shanmughapriyan.blogspot.com

உதவி இயக்குநரு, கதாசிரியரு, திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளோர் அப்படி, இப்படீன்னு சினிமாக்காரங்களும் இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்த வலையுலகத்துல திடீர்ன்னு நம்ம இயக்குநர் ஷண்முகப்பிரியன் ஸாரும் வந்து களத்துல குதிச்சிருக்காரு..

கிட்டத்தட்ட 30 வருட கால திரையுலக அனுபவஸ்தர். இதுவரையில் 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ் பெற்ற, நம்மால் மறக்க முடியாத "ஒருவர் வாழும் ஆலயம்" திரைப்படத்தின் இயக்குநரே நமக்கு வலையுலக நண்பராக வந்திருப்பதில் நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன். மேலும் 'பாட்டுக்கு நான் அடிமை' ("பிழிஞ்சு காயப் போட்டுட்டேன்" என்ற டயலாக் எத்தனை, எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்பட்டது.) 'மதுரை வீரன் எங்க சாமி', 'உதவும் கரங்கள்' என்று 4 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

திரையுலகில் கதாசிரியர்களுக்கு தனித்துவம் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் நம்ம ஷண்முகப்பிரியன் அவர்களின் கதைகளும் பல நல்ல திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன..

'உறவாடும் நெஞ்சம்', 'உங்களில் ஒருத்தி', 'உறங்காத நினைவுகள்', 'ஆணிவேர்', 'ஈட்டி', 'ஆயிரம் முத்தங்கள்', 'அன்று முதல் இன்றுவரை', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'வெற்றி விழா', 'தழுவாத கைகள்', 'பிரம்மா', 'மகுடம்', 'ஆத்மா', 'ஒன்ஸ்மோர்' என்று 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவருடைய கதையில்தான் உருவாகியுள்ளன.

மேலும் 'நினைவே ஒரு சங்கீதம்', 'மெல்லத் திறந்தது கதவு', 'ஆஞ்சநேயா' போன்ற திரைப்படங்களின் கதையை இணைந்து உருவாக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமன்றி கன்னடத்தில் 'உஷா சுயம்வரம்', 'அதறு பதறு' என்று சில படங்கள் இவருடைய கதையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அவருடைய தளத்தைப் பார்த்து, படித்து முதலில் பயந்துதான் போனேன். அவருடைய முதல் சில பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.. புரியும்.. பின்நவீனத்துக்கே சவால் விடுவதைப் போல் 'புரியவே மாட்டேன்' என்று அடம் பிடித்தது. பின்பு இப்போதுதான் ஏதோ கொஞ்சம் எனக்கும் புரிவதைப் போல் இறங்கி வந்து எழுதுகிறார்.

நேரிலும் சந்தித்தேன். மனிதர் அற்புதமாகப் பேசுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்கிறார். இவருடன் பேசும்போது நமது கவலைகள்கூட கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டு நாமும் உற்சாகமாகிவிடுவோம். இப்போதும் இளைஞர்களுக்கு சமமாக பேசுவதிலும், எழுதுவதிலும் மிக விருப்பமுடையவராக இருக்கிறார் இந்த 60 வயது இளைஞர்.. பழகிப் பாருங்கள் தெரியும்..

34. ஊர்சுற்றி

http://oorsutri.blogspot.com

அன்றாட நிகழ்வுகளின் மீது சாமான்யனுக்கு எழும் கோபங்களை மிக ரத்தினச் சுருக்கமாக சில கட்டுரைகளாக ஆக்கம் செய்திருக்கிறார்.

35. மருள்நீக்கி

http://marulneekki.blogspot.com

சென்ற டிசம்பர் மாதம்தான் எழுதத் துவங்கியிருக்கிறார். ஈழத் தமிழர் என்று நினைக்கிறேன்.. அமெரிக்காவில் இருப்பதுபோல் தெரிகிறது.. மூங்கையன் மொழி என்று பதிவிற்குத் தலைப்பு வைத்துள்ளார். அது என்ன மொழி என்று தெரியவில்லை. அதோடு கூடவே எழுதியிருக்கும் "அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையன் பேசலுற்றான்.. என்ன யான் மொழியலுற்றேன்" என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. புரியவில்லை.. .

36. மகா

http://tamil1234.blogspot.com

இலங்கை மக்கள்பால் அனுதாபத்தோடு பல கவிதைகளையும், வன்னி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை புகைப்படங்களோடு சொல்லியிருக்கிறார்.

37. சங்கர்

http://www.blogger.com/profile/13602192161584088050

இவர் வலைத்தளம் இல்லாமல் ஜிமெயில் மூலம் இணைப்பு கொடுத்துள்ளார்.

38. விஸ்வநாதன்

http://kundappaviswanath.blogspot.com

ஞாநியின் பாரதிக்கு ஒரு பொட்டு வைத்து மேலும் அழகுபடுத்தி வைத்திருக்கிறார். ஞாநிக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.. தெரிந்தால் கோர்ட்டு, கேஸ்.. உறுதி!

39. மாயாவி

http://kundappaviswanath.blogspot.com

இவருடைய தளமும் துவக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

40. ரகு முத்துக்குமார்

http://rithumohitha.blogspot.com

இன்னொரு பாசக்கார அப்பா. 'ரித்துவின் அப்பா' என்ற பெயரில் எழுதுகிறார்.

41. பிரான்சிஸ் சைமன்

http://bryanisaac.blogspot.com

அதிகம் கவிதைகள்தான் உள்ளன. அனைத்துமே சோகத்தைப் பிழிந்தெடுக்கி்ன்றன.

42. பிரபு

http://www.blogger.com/profile/03660633360455517585

இந்த பிளாக்கர் லின்க் மட்டுமே கிடைக்கிறது..

43. IRAPEKE

http://irapeke.blogspot.com

எப்போதும் வாழ்க்கை அழகானதுதான் என்கிறார் இவர்.

44. பொற்கோ

http://porkovaanan.blogspot.com

இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் போல் தெரிகிறது..

45. தண்டோரா

http://vilambarakkaaran.blogspot.com

இந்த மாசந்தான் ஆரம்பிச்சிருக்காரு.. போகப் போகப் பிக்கப் ஆவாருன்றது அவரோட எழுத்துல தெரியுது.. முதல் பதிவே ஆள் எப்படின்னு காட்டுது..

46. பாட்டாளி

http://paattaalinpakkangal.blogspot.com

இதிலேயும் ஒன்றும் இல்லை.. துவக்க விழாவோடு நிறுத்தி வைத்திருக்கிறார்.

47. ஹாலிவுட் பாலா

http://hollywoodbala.blogspot.com

ஹாலிவுட் திரைப்படங்களை அலசி, ஆராய்ந்து, சாறு பிழிந்து, சக்கையெடுக்கும் புத்தம் புதிய ஹாலிவுட் பதிவர்.

48. சர்வேசன்

http://surveysan.blogspot.com

சொல்லணுமா..?

49. வால் பையன்

http://valpaiyan.blogspot.com

கெட்ட வாலாச்சே.. தெரியுமே உங்களுக்கு.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க..

50. மலர்

http://globetrotter360.blogspot.com

புதுசு கண்ணா புதுசு.. "திரட்டின்னா என்னங்கண்ணா?"ன்னு கேட்டு என்னை அலற வைச்சிருச்சு குழந்தை..

51. சுபாஷினி

http://baluthemagician.blogspot.com
http://entamilulagam.blogspot.com
http://iniyasamaiyal.blogspot.com

ஒண்ணுல்ல.. மூணு வைச்சிருக்காகளாம் அக்கா..

52. அத்திரி

http://rajkanss.blogspot.com

வஞ்சகமில்லாம வந்து பின்னூட்டத்தை வாரி வழங்கும் புதுசு..

53. தேனியார்

http://palapponamanasu.blogspot.com

கோபக்காரர்.. சந்தேகம் இருந்தா ரஜினியை பத்தி ஏதாவது சொல்லிப் பாருங்க..

54. அப்பாவி தமிழன்

http://mycamerafotos.blogspot.com
http://tamilwares.blogspot.com
http://technotamil.blogspot.com

இவரும் மூணு தளம் வைச்சுக்கிட்டு பயமுறுத்துறார்.. தமிழ் சாப்ட்வேர் பத்தினது எனக்கு ரொம்ப உதவுச்சு.. மிக்க நன்றிங்கோ..

55. ஜாக்கிசேகர்

http://jackiesekar.blogspot.com

ங்கொய்யால. நீயே இப்பத்தான் 55-வது ஆளா சேர்றியா..? உனக்கெல்லாம் வேப்பிலை அடிக்கணும்யா.. மக்களே.. நம்ம ஜாக்கி, வாழ்க்கையில் மிகவும் அடிமட்ட நிலைமையில் இருந்து உயர்ந்திருக்கும் உழைப்பின் சிகரம்.. பழகுவதற்கு இனியவர்.. வெளிப்படையாகப் பேசுபவர். ‘சிறந்த தங்கமணி’ என்கிற பட்டத்தை தாராளமாக இவருக்கு வழங்கலாம்.

56. தமிழ்நேசன்

http://tamilarnesan.blogspot.com

இவரும் புதியவர். இயற்பெயர் சிவாபிரகாசம். “சராசரி தமிழனின் சமூகம் மீதான பார்வைகளை பிரதிபலிக்கிறேன்” என்கிறார் இவர். வாழ்த்துகிறேன்..

நேற்று 60 பதிவர்கள் இருந்தார்கள். கடைசியாக நான் எழுதிய இந்தப் பதிவில் வந்த "நீயும் எல்.டி.டி.ஆளா?” என்ற அனானி ஒருவரின் கேள்விக்கு "இல்லை" என்று நான் பதிலளித்த 1 மணி நேரத்தில், 4 பதிவர்கள் தங்களது பார்வையை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கும் எனது நன்றி.

பதிவர்களே..

என்னையும் ஒரு ஆளாக மதித்து "நாங்கள் இத்தனை பேர் உன்னைப் பின் தொடர்கிறோம்..” என்று சொல்லியிருப்பது எனக்கு நிச்சயம் பெருமையளிக்கும் விஷயம்தான்..

நீங்களும் உங்களைப் பின் தொடர்பவர்களை இதே போல் லிஸ்ட் எடுத்து அவர்களது பெயர்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், வலையுலகத்தில் பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவது பலருக்கும் மிக, மிக சுலபமான வழியாக அமையும்.

ஏதோ எனக்குச் சொல்லத் தோன்றியது.. சொல்கிறேன்..

நன்றி

வணக்கம்.

119 comments:

  1. துரோணருக்கு ஏகலைவனின் நன்றி.. பதிவை படித்து கருத்தை சொல்லுங்கள்... நன்றீ..

    ReplyDelete
  2. துரோணருக்கு ஏகலைவனின் நன்றி.. பதிவை படித்து கருத்தை சொல்லுங்கள்... நன்றீ..

    ReplyDelete
  3. //ஹாலிவுட் திரைப்படங்களை அலசி, ஆராய்ந்து, சாறு பிழிந்து, சக்கையெடுக்கும் புத்தம் புதிய ஹாலிவுட் பதிவர்.//

    ஆனாலும் நீங்க என்னை ரொம்ப புகழுறீங்க..!!!!!!

    ReplyDelete
  4. இது ஒரு சேமிப்புங்க.. சில சமயம் சேர்ந்தவங்க ..வேண்டாம்ன்னு ஓடிபோறதும் பாத்திருக்கேன்.. யாரு போனான்னு செக் செய்துக்க வசதியா நல்ல ஐடியா இது.. :) (பட் உங்களுக்கு அந்த அனுபவம் வரும்ன்னு சொல்லவரலை)

    ReplyDelete
  5. //49. வால் பையன்

    http://valpaiyan.blogspot.com

    கெட்ட வாலாச்சே.. தெரியுமே உங்களுக்கு.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.//

    என் பதிவு பக்கம் போய் பாருங்க, இதையே தான் நானும் பண்ணி வச்சிறுக்கேன்.

    ReplyDelete
  6. ரொம்ம்ம்ம்ப அவசியம்

    ReplyDelete
  7. //">10. கொங்கு ராசா

    http://raasaa.blogspot.com

    இவரும் புதியவருதான்.. //

    What???

    Kongu Raasa puthu bloggeraa?

    avaroadathu ellam padichi thaan naan bloge aarambichen (in 2006)...

    ReplyDelete
  8. "என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..! வைச்சுக்குறேன் ஒரு நாளு."

    சீ அசிங்கமா பேசறீங்க. அவரா நீங்க?

    ReplyDelete
  9. கமெண்ட் மாடரேஷன் இல்லையா?

    ReplyDelete
  10. இப்பெல்ல்லாம் நான் பின்னூட்டம் போடறதே இல்லீங்க. வேலை பின்னி பெடல எடுக்குது. அதான் ரீடர் தாண்டி வர்றதில்லை.

    ReplyDelete
  11. Dear UnmaiThamizan...

    what...???? KonguRaasaa - a new blogger.....????

    no...no.... i came into tamil blogosphere (in 2K6) after seeing his blogposts....

    plz correct this sentence :: "இவரும் புதியவருதான்.. "...

    ReplyDelete
  12. அண்ணத்தே..நல்ல தொகுப்பு...எனக்கு..

    ReplyDelete
  13. உங்களை பின் தொடர்பவர்களுக்கு இது பற்றிய http://kelvi.net/?p=1173 விளக்கம் கொடுக்கலாமே
    அவர்களையும் போட்டியில் இணைக்கலாமே

    ReplyDelete
  14. என்னைய மாதிரி உங்கள அன்-அபீஷியலா தொடர்ற ஆளுங்களும் இருக்குண்ணே :)

    ReplyDelete
  15. இது வருத்தப்படாத வாலிபர் சங்க ஆட்களா..

    ReplyDelete
  16. அண்ணாத்தே,பிலாக்ல பின் தொடரலாட்டியும் , நாங்களும் பேஜ் டவுன் பண்ணி படிச்சுட்டுத்தான் இருக்கோம்

    ReplyDelete
  17. இந்த நேரத்துல தூங்காம என்ன பண்ணின்டு இருக்கேள்

    ReplyDelete
  18. என்ன...கர்னாநிதி ஆட்சில முட்டை பேச்சு...

    ReplyDelete
  19. நீங்க யாரை எல்லாம் பின் தொடரீங்க

    ReplyDelete
  20. நான் கூட உங்க பிலாக் படிக்கிறேன்

    ReplyDelete
  21. யூ ஆர் ரியலி எ குட் ரைட்டர் சார்

    ReplyDelete
  22. இங்கே கும்மி அடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை...அண்ணாத்தே கவுன்டர் வச்சு இருக்காரு.. அட சின்னக்கவுன்டர் இல்லைப்பா... ஸ்டாடிக்கவுன்டர்

    ReplyDelete
  23. நான் 300 அடிச்சு இருக்கேன்..

    ReplyDelete
  24. ராத்திரி நேரத்து பூஜையில் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் என்ன?

    ReplyDelete
  25. நேத்து ராத்திரி ஹம்மா!!!
    இந்தப்படம் இடம் பெற்ற பாடல் என்ன?

    ReplyDelete
  26. // எம்.எம்.அப்துல்லா said...

    என்னைய மாதிரி உங்கள அன்-அபீஷியலா தொடர்ற ஆளுங்களும் இருக்குண்ணே :)//

    ஆமா நானுந்தேன்!

    ReplyDelete
  27. டேய் கங்குலி உன்னைத் தான் பத்திவிட்டாச்சுல்ல பிறகென்ன

    ReplyDelete
  28. கொமென்ட் போடும் எல்லாம் அனானிகளுக்கும் ஒரு ஓ

    ReplyDelete
  29. மீரு சென்னை புஜ்ஜிகாடு சூசுனாரா சார்?!!!

    ReplyDelete
  30. //ஒசாருதீன் said...

    டேய் கங்குலி உன்னைத் தான் பத்திவிட்டாச்சுல்ல பிறகென்ன//

    என்னமோ இவரு மட்டும் அணியில இருக்குற மாதிரி!

    ReplyDelete
  31. //மீரு சென்னை புஜ்ஜிகாடு சூசுனாரா சார்?!!!//

    அப்படின்னா இன்னாமே! சொல்லிக்கீறே?

    ReplyDelete
  32. //பகலகலா பல்லவன் said...

    நேத்து ராத்திரி ஹம்மா!!!
    இந்தப்படம் இடம் பெற்ற பாடல் என்ன?//

    இந்த பாட்டுலே என்ன படம்>?

    ReplyDelete
  33. பாவங்க 56 பேர்!

    (இவங்களெல்லாம் தற்கொலைப் படையா? அல்லது வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களா?)

    ReplyDelete
  34. //எம்.எம்.அப்துல்லா said...
    என்னைய மாதிரி உங்கள அன்-அபீஷியலா தொடர்ற ஆளுங்களும் இருக்குண்ணே :)
    //

    இருக்குண்ணே!

    ReplyDelete
  35. //தண்டோரா said...
    துரோணருக்கு ஏகலைவனின் நன்றி.. பதிவை படித்து கருத்தை சொல்லுங்கள்... நன்றீ..//

    தண்டோரா ஸார்..

    இந்த அளவுக்கெல்லாம் புகழ்ச்சிக்குட்பட எனக்குத் தகுதியில்லை..

    ஆளை விடுங்கப்பா..

    ReplyDelete
  36. ///ஹாலிவுட் பாலா said...

    //ஹாலிவுட் திரைப்படங்களை அலசி, ஆராய்ந்து, சாறு பிழிந்து, சக்கையெடுக்கும் புத்தம் புதிய ஹாலிவுட் பதிவர்.//

    ஆனாலும் நீங்க என்னை ரொம்ப புகழுறீங்க..!!!!!!///

    ஒத்துக் கொண்டதற்கு நன்றி பாலா அவர்களே..

    உண்மையைத்தானே சொன்னேன்.. ஹானிபால் சீரியஸ்களின் விமர்சனம் என்னவாம்..?

    இப்போதுதான் ஏண்டா ஆங்கிலத்தை கற்காமல் போனோம் என்று மிக, மிக வருத்தப்படுகிறேன்..

    ReplyDelete
  37. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இது ஒரு சேமிப்புங்க.. சில சமயம் சேர்ந்தவங்க.. வேண்டாம்ன்னு ஓடிபோறதும் பாத்திருக்கேன்.. யாரு போனான்னு செக் செய்துக்க வசதியா நல்ல ஐடியா இது.. :) (பட் உங்களுக்கு அந்த அனுபவம் வரும்ன்னு சொல்லவரலை)//

    முத்தக்கா..

    எப்பவாச்சும் ஒருவாட்டிதான் வர்றீங்க.. நன்றி..

    இப்பக்கூட 4 பேர் போனாங்கன்னு சொன்னனே.. அதுல 2 பேர் யாருன்னு தெரியும்.. அதுனாலதான் எதனால வாபஸ் வாங்குனாங்கன்னு வெளிப்படையா சொன்னேன்..

    ReplyDelete
  38. ///வால்பையன் said...
    //49. வால் பையன்
    http://valpaiyan.blogspot.com
    கெட்ட வாலாச்சே.. தெரியுமே உங்களுக்கு.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.//
    என் பதிவு பக்கம் போய் பாருங்க, இதையேதான் நானும் பண்ணி வச்சிறுக்கேன்.///

    அதைத்தான் வாலுஜி நானும் சொல்லிருக்கேன்..

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  39. //தமிழாகரன் said...
    ரொம்ம்ம்ம்ப அவசியம்.//

    பின்ன.. அறிமுகம் வேண்டாமா..?

    உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே..?

    ReplyDelete
  40. ///வெட்டிப்பயல் said...
    //">10. கொங்கு ராசா
    http://raasaa.blogspot.com
    இவரும் புதியவருதான்.. //

    What???
    Kongu Raasa puthu bloggeraa?
    avaroadathu ellam padichi thaan naan bloge aarambichen (in 2006)...///

    திருத்திட்டேன் சாமி.. திருத்திட்டேன்.. ஏதோ தெரியாம நடந்து போச்சு.. மன்னிச்சு விட்ருங்கப்பா..

    ReplyDelete
  41. //Anonymous said...

    "என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..! வைச்சுக்குறேன் ஒரு நாளு."

    சீ அசிங்கமா பேசறீங்க. அவரா நீங்க?//

    இதுல என்ன அசிங்கம் வெட்டி ஸார்..? ச்சீ.. எதை எடுத்தாலும் தப்பாவே பார்க்குறீங்களே.. அவரா நீங்க..?

    ReplyDelete
  42. //Anonymous said...
    கமெண்ட் மாடரேஷன் இல்லையா?//

    உங்க வசதிக்காகத்தான் தற்காலிகமா நீக்கம் செய்துள்ளேன்..

    சந்தோஷமா..?

    ReplyDelete
  43. //குடுகுடுப்பை said...
    இப்பெல்ல்லாம் நான் பின்னூட்டம் போடறதே இல்லீங்க. வேலை பின்னி பெடல எடுக்குது. அதான் ரீடர் தாண்டி வர்றதில்லை.//

    இப்ப போட்டுட்டீங்களே..

    ReplyDelete
  44. ///இரா. வசந்த குமார். said...
    Dear UnmaiThamizan...
    what...???? KonguRaasaa - a new blogger.....????
    no...no.... i came into tamil blogosphere (in 2K6) after seeing his blogposts....
    plz correct this sentence :: "இவரும் புதியவருதான்..///

    மாத்திட்டேன் வசந்த்..

    நன்றி..

    ReplyDelete
  45. //தண்செய்ஊரான் said...
    அண்ணத்தே.. நல்ல தொகுப்பு... எனக்கு..//

    இது என்ன பேரே வித்தியாசமா இருக்கு.. யாருன்னு கண்டுபிடிக்க முடியலையே..?

    ReplyDelete
  46. //HS said...
    உங்களை பின் தொடர்பவர்களுக்கு இது பற்றிய http://kelvi.net/?p=1173 விளக்கம் கொடுக்கலாமே.
    அவர்களையும் போட்டியில் இணைக்கலாமே.//

    செஞ்சுட்டாப் போச்சு..

    கண்ணுகளா இந்த லின்க்கை பிடிச்சு உள்ளாற போய் சிறந்த வலைப்பூக்கள் போட்டில கலந்துக்குங்கப்பா..

    டெய்லி உங்க தளத்துக்குள்ள எத்தனை பேர் வர்றாங்க.. போறாங்க அப்படீன்ற அடிப்படையிலதான் முடிவு இருக்குமாம்..

    சீக்கிரமா முந்துங்க..

    ReplyDelete
  47. அண்ணாத்தே என்னையும் ஒரு ஆளா மதிச்சதுக்கு உங்களுத்தான் நான் நன்றி சொல்லணும் ;-)) ஒரு ஐநூறு ஆயிரம் பேரு பின்தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. //எம்.எம்.அப்துல்லா said...
    என்னைய மாதிரி உங்கள அன்-அபீஷியலா தொடர்ற ஆளுங்களும் இருக்குண்ணே:)//

    அப்துல்லாஜி..

    இதெல்லாம் நல்லாயில்ல.. ஒரு சின்ன கிளிக்தான்..

    அப்துல்லாவும் இருக்காரான்னுட்டு ஒரு 300 பேர் ஓடியாற மாட்டாங்களா..? சப்தமில்லாம நீங்க மட்டும் படிக்கணும்னு நினைக்குறீங்களே.. என்ன கல்மனசு உங்களுக்கு..?

    ReplyDelete
  49. //கீழை ராஸா said...
    இது வருத்தப்படாத வாலிபர் சங்க ஆட்களா..?//

    அவுக இல்லீங்களே ஸார்..

    அவுங்க வந்திருந்தாங்கன்னா இது அப்படியே இரு மடங்காயிருக்கும்..

    ReplyDelete
  50. //பேஜ்டவுன் பெரியநாயகி said...
    அண்ணாத்தே,பிலாக்ல பின் தொடரலாட்டியும் , நாங்களும் பேஜ் டவுன் பண்ணி படிச்சுட்டுத்தான் இருக்கோம்.//

    பேஜ்டவுன் பெரியநாயகி அவர்களே..

    பேஜ்டவுன் பண்ணி படிங்க.. வேண்டாம்னு சொல்லலை.. அப்படியே அதுல ஒரு சின்ன கிளிக் பண்றதுல என்ன கெட்டுப் போச்சுன்றேன்.. எனக்கும் கொஞ்சம் பெருமையா இருக்கும்ல..

    ReplyDelete
  51. //முட்டை வீச்சு முத்தண்ணா said...
    இந்த நேரத்துல தூங்காம என்ன பண்ணின்டு இருக்கேள்.//

    யாராவது பேசுறதுக்கு வர மாட்டாளான்னு பார்த்திண்டிருக்கேன்..

    ReplyDelete
  52. //கப்ரமனியகாமி said...
    என்ன...கர்னாநிதி ஆட்சில முட்டை பேச்சு...//

    இதுவே செயலலிதா ஆட்சியா இருந்திருந்தா ஆசீட்தான் பேசிருக்கும் சுப்ரமனியகாமி..

    ReplyDelete
  53. //டவுட் டனபால் said...
    நீங்க யாரை எல்லாம் பின் தொடரீங்க.//

    அது கிடக்கு ஒரு நூறு பேரையாச்சும் இருக்கும்..

    ReplyDelete
  54. //நங்கை நமீதா said...
    நான் கூட உங்க பிலாக் படிக்கிறேன்//

    ஐயோ கண்ணுல தண்ணீ வருதே..

    இதைவிட என்ன பெரிய பெருமை எனக்கு வேணும்..?

    ReplyDelete
  55. //டேனி பாயல் said...
    யூ ஆர் ரியலி எ குட் ரைட்டர் சார்.//

    அப்போ அடுத்தப் படத்தை நானும், நீங்களும் சேர்ந்து செய்யலாமா..?

    ReplyDelete
  56. //பெரிய கவுன்டர் said...
    இங்கே கும்மி அடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை...அண்ணாத்தே கவுன்டர் வச்சு இருக்காரு.. அட சின்னக்கவுன்டர் இல்லைப்பா... ஸ்டாடிக்கவுன்டர்.//

    எந்தக் கவுன்ட்டர் வைச்சா என்னப்பா..? கும்மியைத் தடுக்க முடியுமா என்ன..? ஜமாயுங்க கண்ணுகளா..?

    ReplyDelete
  57. //முகமது யூனூஸ் said...
    நான் 300 அடிச்சு இருக்கேன்..//

    பாராட்டுக்கள்.. இதையே தினமும் தொடருங்கள்..

    ReplyDelete
  58. //பேசும் காது said...
    ராத்திரி நேரத்து பூஜையில் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் என்ன?//

    இதென்ன ஸில்லி கொஸ்டீன்..?

    ஊமை விழிகள்..

    கார்த்திக்கும், சசிகலாவும் பீச்ல ஆடுவாங்களே.. நடுவுல ஒரு இடத்துல கிழவியொண்ணு கோபமா பார்க்குமே.. அப்ப ஒரு மியூஸிக் போடுவாங்க பாரு.. கொடூரமா இருக்கும்..

    ReplyDelete
  59. //பகலகலா பல்லவன் said...
    நேத்து ராத்திரி ஹம்மா!!!
    இந்தப் படம் இடம் பெற்ற பாடல் என்ன?//

    ஹி..ஹி.. சகலகலாவல்லவன்..

    சிலுக்குக்காவே 5 வாட்டி பார்த்தேன்..

    இந்தப் பாட்டுல கமல் உருகியிருப்பாரு பார்த்தீங்களா..? ம்.. கொடுத்து வைச்சவரு..

    ReplyDelete
  60. ///சவுரவ் கங்குலி said...

    // எம்.எம்.அப்துல்லா said...

    என்னைய மாதிரி உங்கள அன்-அபீஷியலா தொடர்ற ஆளுங்களும் இருக்குண்ணே :)//

    ஆமா நானுந்தேன்!///

    ஓ மை காட்.. கங்குலி ஸாரும் என் பின்னாடி வர்றாரு..

    ஸார்.. ஸார்.. நான் கொஞ்சம் நிம்மதியா ஏதோ பொழைப்பை ஓட்டிக்கிட்டிருக்கேன்.. என்கிட்ட வந்து ஏன் ஸார்..?

    ReplyDelete
  61. //ஒசாருதீன் said...
    டேய் கங்குலி உன்னைத்தான் பத்திவிட்டாச்சுல்ல பிறகென்ன.//

    டேய் ஒசாருதீன்.. உன்னையும் பத்தி விட்டாச்சுல.. அப்புறமென்ன..?

    நீயெல்லாம் என்னைப் பத்தி பேச வந்துட்டியா..?

    போ.. போ..

    ReplyDelete
  62. //சாம்பார் ஜெமினி said...
    கொமென்ட் போடும் எல்லாம் அனானிகளுக்கும் ஒரு ஓ//

    நோ.. ஜெமினி ஸார்.. ஓ போடுறதை நான்தான் சொல்லணும்..

    ஏன்னா நான்தான் இந்த வீட்டு ஓனர்..

    ReplyDelete
  63. //ஆந்திரவாலா said...
    மீரு சென்னை புஜ்ஜிகாடு சூசுனாரா சார்?!!!//

    ஆரு புஜ்ஜரவாலாண்டி கெசுபட்டி லேது..

    ReplyDelete
  64. ///ரவி சாஸ்திரி said...
    //ஒசாருதீன் said...
    டேய் கங்குலி உன்னைத் தான் பத்திவிட்டாச்சுல்ல பிறகென்ன//
    என்னமோ இவரு மட்டும் அணியில இருக்குற மாதிரி!///

    ஓ ரவிசங்கர் சாஸ்திரி.. நீங்களா..? உங்களையும்தான ஓட, ஓட விரட்டியடிச்சாங்க.. மறந்துட்டீங்களா..?

    ReplyDelete
  65. ///மதராஸ்வாலா said...

    //மீரு சென்னை புஜ்ஜிகாடு சூசுனாரா சார்?!!!//

    அப்படின்னா இன்னாமே! சொல்லிக்கீறே?///

    மெட்ராஸ்ல வெயில் ஜாஸ்தியான்னு கேக்குறாரும்மே..

    ReplyDelete
  66. ///அந்த நாள் ஞாபகம் said...
    //பகலகலா பல்லவன் said...
    நேத்து ராத்திரி ஹம்மா!!!
    இந்தப் படம் இடம் பெற்ற பாடல் என்ன?//
    இந்த பாட்டுலே என்ன படம்>?///

    ஓ.. மாத்தி யோசிக்கிறதுன்னா இதுதானா..?

    ReplyDelete
  67. //வருத்தப்படுபவன் said...
    பாவங்க 56 பேர்!
    (இவங்களெல்லாம் தற்கொலைப் படையா? அல்லது வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களா?)//

    56 பேர் யாரு..? எங்க இருக்காங்க.. தற்கொலைப்படையா இருந்தா இங்க எதுக்கு வர்றாங்க.. நிச்சயமா வாழ்க்கையில விரக்தி அடைஞ்சங்கவளாத்தான் இருக்கணும்ன்றேன்..

    ReplyDelete
  68. கண்ணுகளா..

    57-வது நபராக மருத்துவர் புருனோ அவர்கள் இணைந்திருக்கிறார்.

    இட ஒதுக்கீடா, மக்கள் நலப் பிரச்சினைகளா, சமூகப் பிரச்சினைகளா.. எதுவாக இருந்தாலம் அதனை அறிவுப்பூர்வமாக அலசி, ஆராயும் ஒரு சிந்தனாவாதி..

    படிக்கத் தவறாதீர்கள்.. இவருடைய தள முகவரி் http://www.payanangal.in

    ReplyDelete
  69. கண்ணுகளா..

    58-வது நபராக இணைந்திருப்பவர் நம்ம வெட்டிப் பயல் பாலாஜியண்ணேன்..

    அண்ணே.. பெயர்ல மட்டும்தான் வெட்டியா இருக்காரு.. ஆனா நிஜத்துல பல குழு பிளாக்ல முன்னணி வீரரா இருக்காரு.. வித்தியாசம், வித்தியாசமா சீரியஸ் பதிவை லைட்டா போட்டுத் தள்ளுறாரு.. சந்தேகம்னா இப்பவே போய் பாருங்க.. நான் கடவுளுக்கு எப்படி விமர்சனம் எழுதியிருக்காருன்னு..?

    அண்ணே வ.வா.சங்கத்துல முக்கியப் புள்ளின்றதுனால அண்ணனின் கடைக்கண் பார்வை நம்ம மேல பட்டதை பெருமையா சொல்லிக்கலாம்..

    நன்றிங்கண்ணே..

    அண்ணனோட முகவரி http://www.vettipayal.com.

    ReplyDelete
  70. சரவணன்,நன்றி.நன்றி.என்னைப் பற்றி அதிகமாக எழுதிய நீங்கள் என் வயதையும் அதிகமாக்கி விட்டீர்கள்!அதனால் என்ன?ஐம்பது வயதுக்குப் பிறகு எல்லா வயதும் ஒன்றுதான்.மனதும்,உடலும் இணைந்து வேலை பார்க்கும் வயது எதுவோ அதுதான் உண்மையான வயது.ANYWAY,YOU HAVE PATIENTLY DONE AN ENORMOUS JOB OF FURNISHING ALL THESE DETAILS OF THE BLOGGER FRIENDS.THANK YOU.

    ReplyDelete
  71. //52. அத்திரிவஞ்சகமில்லாம வந்து பின்னூட்டத்தை வாரி வழங்கும் புதுசு..//


    என்னை ரொம்ப புகழாதிங்க அண்ணே ........ கூச்சமாயிருக்கு

    ReplyDelete
  72. // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //பேசும் காது said...
    ராத்திரி நேரத்து பூஜையில் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் என்ன?//

    இதென்ன ஸில்லி கொஸ்டீன்..?

    ஊமை விழிகள்..

    கார்த்திக்கும், சசிகலாவும் பீச்ல ஆடுவாங்களே.. நடுவுல ஒரு இடத்துல கிழவியொண்ணு கோபமா பார்க்குமே.. அப்ப ஒரு மியூஸிக் போடுவாங்க பாரு.. கொடூரமா இருக்கும்..//

    தப்பு...

    அது டிஸ்கோ சாந்தி பாட்டு... படத்தோட ஸ்டார்டிங்கே இதுல தான் ஆரம்பிக்கும்...

    கார்த்திக், சசிகலா பாட்டு ”மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா”

    ReplyDelete
  73. //Sathia said...
    அண்ணாத்தே என்னையும் ஒரு ஆளா மதிச்சதுக்கு உங்களுத்தான் நான் நன்றி சொல்லணும்;-))//

    இங்க யாரும், யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை தம்பீ.. எல்லாரும் ஒண்ணுதான்.. நீயும் ஒரு வலைப்பதிவர்.. நானும் அதுபோலத்தான்.. டேக் இட் ஈஸி..

    //ஒரு ஐநூறு ஆயிரம் பேரு பின்தொடர வாழ்த்துக்கள்.//

    உன் ஆசீர்வாதம் தம்பீ..

    நல்லாயிரு..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  74. //ஷண்முகப்ரியன் said...
    சரவணன், நன்றி. நன்றி.என்னைப் பற்றி அதிகமாக எழுதிய நீங்கள் என் வயதையும் அதிகமாக்கி விட்டீர்கள்! அதனால் என்ன? ஐம்பது வயதுக்குப் பிறகு எல்லா வயதும் ஒன்றுதான். மனதும், உடலும் இணைந்து வேலை பார்க்கும் வயது எதுவோ அதுதான் உண்மையான வயது. ANYWAY, YOU HAVE PATIENTLY DONE AN ENORMOUS JOB OF FURNISHING ALL THESE DETAILS OF THE BLOGGER FRIENDS.THANK YOU.//

    மிக்க நன்றி ஸார்.

    வயசைப் பத்தி எழுதும்போதே நினைச்சேன் தப்பாயிருக்குமோன்னு..

    சரி.. பரவாயில்லை.. நம்ம ஸார்தான.. கூட்டிக் குறைச்சு சொன்னா ஒண்ணும் தப்பில்லைன்னு முருகன் சொன்னான்.. செஞ்சுட்டேன்..

    ReplyDelete
  75. ///அத்திரி said...
    //52. அத்திரிவஞ்சகமில்லாம வந்து பின்னூட்டத்தை வாரி வழங்கும் புதுசு..//
    என்னை ரொம்ப புகழாதிங்க அண்ணே கூச்சமாயிருக்கு///

    ரொம்ப அடக்கமா இருக்காதீங்கப்பா.. எனக்குக் கூச்சமா இருக்கு..

    ReplyDelete
  76. ///வெட்டிப்பயல் said...
    // உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
    //பேசும் காது said...
    ராத்திரி நேரத்து பூஜையில் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற படம் என்ன?//
    இதென்ன ஸில்லி கொஸ்டீன்..?
    ஊமை விழிகள்..
    கார்த்திக்கும், சசிகலாவும் பீச்ல ஆடுவாங்களே.. நடுவுல ஒரு இடத்துல கிழவியொண்ணு கோபமா பார்க்குமே.. அப்ப ஒரு மியூஸிக் போடுவாங்க பாரு.. கொடூரமா இருக்கும்..//
    தப்பு... அது டிஸ்கோ சாந்தி பாட்டு... படத்தோட ஸ்டார்டிங்கே இதுலதான் ஆரம்பிக்கும்... கார்த்திக், சசிகலா பாட்டு ”மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா”///

    ஆமாம்.. மை காட் எப்படி தப்பு பண்ணேன்..?

    வெட்டிப் பயல் ஸார்.. ஸாரி.. மன்னிச்சுக்குங்க..

    அதுல சசிகலா சிங்கிள் பீஸ் டிரெஸ்ல பீச்ல ஓடி வர்ற ஷாட் மட்டும் மறக்கவே மாட்டேங்குதா.. அதுதான் ஊமைவிழிகள்ன்னு சொன்னாலே அந்தப் பாட்டுதான்னு முருகன் முடிவு பண்ணிட்டான்னு..

    தகவலுக்கு நன்றிங்கோ..

    ReplyDelete
  77. நண்பர் உ.த.
    என்னை மாதிரி கொஞ்சம் விவரம் இல்லாத,தெரியாத ஆளுங்களும் உங்க பதிவுகளைப்(பெரும்பாலும்!) படிக்கிறாங்க.நாட்டுல என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு டான் டான்னு சொல்றதுல முன்னணியில இருக்கிங்கல்ல...

    ReplyDelete
  78. தலிவா எழுதறதுக்கு மேட்டர் எ இல்லைனா கூட இப்டி புச்சு புச்சா எழுதறியே , எனக்கும் கொஞ்சம் கத்து கொடு தலிவா ..........யாருக்கும் தோன்றாத ஜோசனை , மிக அருமையான பதிவு இவ்ளோ பேரையும் ரொம்ப நிதானமா பாத்துப் பாத்து எழுதி இருக்கீங்க ..........கலக்குங்க

    ReplyDelete
  79. என் பெயரை போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  80. // யாருய்யா இந்தாளு..? //

    என்ன முருகா இப்படிக் கேட்டுட்டீங்க?
    திண்டுக்கல்லுக்கும், விருதுநகருக்கும் என்ன தொலவட்டு இருக்கப் போவுது.

    பொழப்புக்காக, நான் திருப்பூர்ல இருக்கேன். நீங்க சென்னைல இருக்கீங்க.

    வலைப்பதிவர் பட்டறையில உங்களைப் பார்த்திருக்கேன்.

    // கோயம்புத்தூர் பக்கம் போற, வர்ற ஆளுக எல்லாரும் "வெயிலானை பார்த்தேன்.. நல்லா பேசினாரு.. சூப்பரா கவனிச்சாரு.. போக்குவரத்துச் செலவுக்கான பணத்தைக்கூட கைல திணிச்சு அனுப்பினாரு"ங்குறாங்க.. என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..! //

    அந்த மட்டுக்கும் இம்புட்டாவது நம்மளப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. சந்தோசம்!

    நிச்சயமா திருப்பூர், கோவைப்பக்கம் வாங்க!

    'கவனிச்சிருவோம்'

    ReplyDelete
  81. இது நல்ல முயற்சி!!!
    புதுமையான செயல்கள் தொடரட்டும்!!

    ReplyDelete
  82. //அறிவன்#11802717200764379909 said...
    நண்பர் உ.த. என்னை மாதிரி கொஞ்சம் விவரம் இல்லாத,தெரியாத ஆளுங்களும் உங்க பதிவுகளைப் (பெரும்பாலும்!) படிக்கிறாங்க. நாட்டுல என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு டான் டான்னு சொல்றதுல முன்னணியில இருக்கிங்கல்ல//

    அறிவன் ஸார்..

    இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா..? நீங்களா விவரமில்லாத ஆளு.. முருகனுக்கே அடுக்காது ஸார் இது..!

    ReplyDelete
  83. //அப்பாவி தமிழன் said...
    தலிவா எழுதறதுக்கு மேட்டர் எ இல்லைனாகூட இப்டி புச்சு புச்சா எழுதறியே, எனக்கும் கொஞ்சம் கத்து கொடு தலிவா. யாருக்கும் தோன்றாத ஜோசனை, மிக அருமையான பதிவு இவ்ளோ பேரையும் ரொம்ப நிதானமா பாத்துப் பாத்து எழுதி இருக்கீங்க.. கலக்குங்க//

    அப்பாவித் தமிழா..

    வைச்சுட்டியே உள்குத்து..

    "எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னாகூட.."

    நல்லாயிருப்பூ..

    இதுவும் ஒரு மேட்டர்தான் கண்ணா..

    ReplyDelete
  84. //Cable Sankar said...
    என் பெயரை போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.//

    லிஸ்ட்ல பெயர் இருந்திருந்தா கண்டிப்பா எழுதியிருப்பேன்..

    பின் தொடர்பவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் என்று சொல்லித்தான் பதிவே எழுதியுள்ளேன்..

    இதுல வன்மையாகக் கண்டிக்கிறாராம்..

    மொதல்ல நான்தான் கண்டிக்கணும் "ஏன் லிஸ்ட்ல உம்ம பேர் இல்ல..?"

    ReplyDelete
  85. ///வெயிலான் said...
    // யாருய்யா இந்தாளு..? //
    என்ன முருகா இப்படிக் கேட்டுட்டீங்க?
    திண்டுக்கல்லுக்கும், விருதுநகருக்கும் என்ன தொலவட்டு இருக்கப் போவுது.
    பொழப்புக்காக, நான் திருப்பூர்ல இருக்கேன். நீங்க சென்னைல இருக்கீங்க. வலைப்பதிவர் பட்டறையில உங்களைப் பார்த்திருக்கேன்.///

    பார்த்திருக்கீங்களா..? அப்ப பேசியிருக்கலாமே..?

    /கோயம்புத்தூர் பக்கம் போற, வர்ற ஆளுக எல்லாரும் "வெயிலானை பார்த்தேன்.. நல்லா பேசினாரு.. சூப்பரா கவனிச்சாரு.. போக்குவரத்துச் செலவுக்கான பணத்தைக்கூட கைல திணிச்சு அனுப்பினாரு"ங்குறாங்க.. என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..!/
    அந்த மட்டுக்கும் இம்புட்டாவது நம்மளப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. சந்தோசம்!
    நிச்சயமா திருப்பூர், கோவைப் பக்கம் வாங்க! 'கவனிச்சிருவோம்'//

    குறி போட்டுச் சொல்லிருக்கிறதை பார்த்தா உடம்புக்கு ஏதாவது ஆகுமோன்னு பயமால்ல இருக்கு..

    இருந்தாலும், ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம்னு பாக்குறேன்..

    வர்றேன்.. கூடிய சீக்கிரம் வர்றேன்..

    ReplyDelete
  86. //thevanmayam said...
    இது நல்ல முயற்சி!!! புதுமையான செயல்கள் தொடரட்டும்!!//

    நன்றி தேவன்மயம்..

    ReplyDelete
  87. கண்ணுகளா..

    59-வது ஆளா ராம்குமார் அப்படீன்னு ஒரு பதிவர் இணைஞ்சிருக்காரு..

    அவரோட லின்க் இது http://yanaikutti.blogspot.com

    ஆனா இதுல ஒண்ணுமே இல்லை.. சும்மாதான் விட்டு வைச்சிருக்காரு.. கமெண்ட் மட்டும் போடுவாரு போலிருக்கு..

    ReplyDelete
  88. தெரிஞ்சவங்ளே கண்டும் கண்டக்காம போற இந்த காலத்துல ச்சும்மா பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிவிட்டு ச்சும்மா இல்லாமல் அவர்களை பற்றியும் அவர்களின் வலைப்பதிவைப் பற்றியும் எழுதி நெகிழ வச்சிட்டீங்கண்ணா.. நீங்க உண்மையிலேயே 'உண்மைத் தமிழன்' தான்.

    ReplyDelete
  89. சூப்பர் பதிவுண்ணா
    இந்த பதிவை புக்மார்க்கில் வைத்து தினமும் ஒரு சுட்டி என்று படிக்க வேண்டும்

    இருந்தாலும் இதை போல பதிவு போட அசாத்திய உழைப்பு பொறுமை வேண்டும்.

    ReplyDelete
  90. ////அப்பாவித் தமிழா..

    வைச்சுட்டியே உள்குத்து../// ண்ணா என்ன இப்டி சொல்லிட்டிங்க ,அது சும்மா ஒரு காமெடிக்கு சொன்னது ண்ணா ,,,,என்னையும் ஒரு பதிவரா மதிச்சு எழுதி இருக்கீங்க உங்க கிட்ட போய் உள்குத்து வைப்பேனா

    ReplyDelete
  91. //மடல்காரன்_MadalKaran said...
    தெரிஞ்சவங்ளே கண்டும் கண்டக்காம போற இந்த காலத்துல ச்சும்மா பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை மட்டும் எண்ணிவிட்டு ச்சும்மா இல்லாமல் அவர்களை பற்றியும் அவர்களின் வலைப்பதிவைப் பற்றியும் எழுதி நெகிழ வச்சிட்டீங்கண்ணா.. நீங்க உண்மையிலேயே 'உண்மைத் தமிழன்'தான்.//

    நன்றி மடல்காரன் ஸார்..

    முன்ன மாதிரியில்லாம இனிமேவாச்சும் நிறைய எழுதுங்க..

    அடிக்கடி வாங்க..

    ReplyDelete
  92. //Arun Kumar said...
    சூப்பர் பதிவுண்ணா இந்த பதிவை புக்மார்க்கில் வைத்து தினமும் ஒரு சுட்டி என்று படிக்க வேண்டும்.//

    படிடா தங்கம்..

    அதுக்கு முதல்ல நீயும் இது மாதிரி உன்னைப் பின் தொடர்பவர்கள் லிஸ்ட்டை ரிலீஸ் பண்ணிரு செல்லம்..

    ReplyDelete
  93. //அப்பாவி தமிழன் said...
    /அப்பாவித் தமிழா..
    வைச்சுட்டியே உள்குத்து../

    ண்ணா என்ன இப்டி சொல்லிட்டிங்க, அது சும்மா ஒரு காமெடிக்கு சொன்னதுண்ணா, என்னையும் ஒரு பதிவரா மதிச்சு எழுதி இருக்கீங்க உங்ககிட்ட போய் உள்குத்து வைப்பேனா.///

    சரி நம்புறேன்..

    அப்பாவி தமிழன்னு பேர் வைச்சிருக்க.. நம்பாம எப்படி இருக்க முடியும்..

    நல்லாயிரு தம்பீ..

    ReplyDelete
  94. அன்பு பதிவர்களே..

    61-வது பின் தொடரும் நண்பராக திரு.அ.மு.செய்யது அவர்கள் லினக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது நன்றி..

    அவருடைய முகவரி இது http://amsyed.blogspot.com.

    கவிதை எழுதுவது எப்படி என்பதை சொல்லித் தருகிறாராம்..

    கூடவே பாலஸ்தீனம் பற்றியும், மத்தியக் கிழக்கில் யூதர்களால் அழிக்கப்படும் மக்கள் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்..

    ReplyDelete
  95. அன்பு பதிவர்களே..

    62-வது பதிவராக சந்தோஷ் அவர்கள் இணைந்துள்ளார்.

    அவருடைய முகவரி இது http://biascope.blogspot.com.

    சும்மா படமா காட்டுறாரு மனுஷன்..

    நகைச்சுவையாகவே அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து வைத்திருக்கிறார்..

    கொஞ்சமே எழுதியிருப்பதால் உங்களுக்கு படிக்கும்போது மூச்சு வாங்க நேரம் கிடைக்கும்.. சென்று வாருங்கள்..

    ReplyDelete
  96. ங்கொய்யால. நீயே இப்பத்தான் 55-வது ஆளா சேர்றியா..? உனக்கெல்லாம் வேப்பிலை அடிக்கணும்யா.. மக்களே.. நம்ம ஜாக்கி, வாழ்க்கையில் மிகவும் அடிமட்ட நிலைமையில் இருந்து உயர்ந்திருக்கும் உழைப்பின் சிகரம்.. பழகுவதற்கு இனியவர்.. வெளிப்படையாகப் பேசுபவர். ‘சிறந்த தங்கமணி’ என்கிற பட்டத்தை தாராளமாக இவருக்கு வழங்கலாம்.


    வரிகளுக்கு நன்றி தலை

    ReplyDelete
  97. //jackiesekar said...
    ங்கொய்யால. நீயே இப்பத்தான் 55-வது ஆளா சேர்றியா..? உனக்கெல்லாம் வேப்பிலை அடிக்கணும்யா.. மக்களே.. நம்ம ஜாக்கி, வாழ்க்கையில் மிகவும் அடிமட்ட நிலைமையில் இருந்து உயர்ந்திருக்கும் உழைப்பின் சிகரம்.. பழகுவதற்கு இனியவர்.. வெளிப்படையாகப் பேசுபவர். ‘சிறந்த தங்கமணி’ என்கிற பட்டத்தை தாராளமாக இவருக்கு வழங்கலாம்.

    வரிகளுக்கு நன்றி தலை//

    இதுக்கு இவ்ளோ லேட்டாவா வர்றது..?

    ReplyDelete
  98. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இது ஒரு சேமிப்புங்க.. சில சமயம் சேர்ந்தவங்க ..வேண்டாம்ன்னு ஓடிபோறதும் பாத்திருக்கேன்.. யாரு போனான்னு செக் செய்துக்க வசதியா நல்ல ஐடியா இது.. :) (பட் உங்களுக்கு அந்த அனுபவம் வரும்ன்னு சொல்லவரலை)
    //

    :-))))

    ReplyDelete
  99. // நவீன புனைவு எழுத்தாளர். //

    ஐயகோ! என் இதயமே வெடித்துவிடும்போல் உள்ளதே என் செல்வமே உ.த..!!! இந்தக்கொடுமையை உலகம் தாங்குமா என சற்றேனும் சிந்தித்தீரா?! :)


    // 'கொங்குவாசல்' பதிவில் இவர் எழுதியிருக்கும் 'கொங்கு வட்டார வழக்கு மொழி' நமக்கு மிகப் பெரும் உதவி..//

    அண்ணே... அதை எழுதினது விவசாயி-வவா சங்க தலை இளா.. நான் இளவஞ்சி... நான் உருப்படியா எழுதலைங்கறதை இப்படியா மொதப்பேரா போட்டு கொமட்டுல குத்தறது :(

    ReplyDelete
  100. திறமான ஐடியா - - - கச்சிதமா முடிச்சிடிங்க - - - இத்தனை தொடர்பர்கள் யாரிடும் உண்டு - - - இத்தகைய எழுதும் திறனும் பொறுமையும் கடின உழைப்பும் எவரிடம் இருக்கும் - - - பகலில் வேறு எதோ தொழில் - - - இரவில் மட்டும் கணணி அருகில் - - - அந்த சொற்ப நேரத்தில் எத்தனை வேலைகள் - - - எழுத முன்னர் மனதில் DRAFT போட்டுடுவாரோ ? !
    அது இருகட்டும் சார் una thaana இன்னா ''உதா'' என்று வருதே சார் இந்த Google Indic ல !
    ''கச்சிதம்'' என்றால் சுத்தமான தமிழ் சொல்லா ?
    அதே மாதிரி ''பிராப்தம்'' என்பதும் தமிழ் சொல்லா ?
    நான் தமிழ் கிளாஸ் தொடங்க கேட்கவில்லை - - - இந்த இரண்டுக்கும் பதில் தந்தால்
    விட்டுருவேன் - - - ப்ராமிஸ் !

    ReplyDelete
  101. தண்டோரா அண்ணே மன்னிக்க வேண்டும் - - - துரோணர் கிட்ட வேலிக்கு மத்த பக்கம் நின்னு அம்பு வித்தை கத்துகினது யாரு ?
    உங்க Blog பாத்தேனே - - - நன்னா இருக்கண்ணே - - - ரோபோ கதய
    யெப்ப முடிபீங்க ?
    இல்ல முடிச்சிட்டானுவளா ?
    நன்றின்ணே !

    ReplyDelete
  102. ///சென்ஷி said...
    //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இது ஒரு சேமிப்புங்க.. சில சமயம் சேர்ந்தவங்க ..வேண்டாம்ன்னு ஓடிபோறதும் பாத்திருக்கேன்.. யாரு போனான்னு செக் செய்துக்க வசதியா நல்ல ஐடியா இது.. :) (பட் உங்களுக்கு அந்த அனுபவம் வரும்ன்னு சொல்லவரலை)//
    :-))))///

    சென்ஷி தம்பீ.

    அதென்ன முத்தக்கா எங்கிட்டுப் போய் பின்னூட்டம் போ்ட்டாலும் பின்னாடியே போய் அவங்களை வழி மொழியற.. அல்லாட்டி கலாய்க்குற..

    அக்கா ரொம்ப நல்லவங்க போலிருக்கு..

    ReplyDelete
  103. //சென்ஷி said...
    மீ த 99//

    நன்றி..

    ReplyDelete
  104. //சென்ஷி said...
    ஹைய்யா 100 :-)//

    மிக்க நன்றிடா செல்லாம்..

    உன்னை மாதிரி அன்புத் தம்பிகள் இது மாதிரி அப்பப்ப வந்து உதவி பண்றதுனாலதான் என்னைப் போன்ற அப்பாவிகள் இங்கன குப்பைக் கொட்டிக்கிட்டிருக்கோம்..

    நல்லாயிருப்பூ..

    ReplyDelete
  105. ///இளவஞ்சி said...
    // நவீன புனைவு எழுத்தாளர். //
    ஐயகோ! என் இதயமே வெடித்துவிடும்போல் உள்ளதே என் செல்வமே உ.த..!!! இந்தக் கொடுமையை உலகம் தாங்குமா என சற்றேனும் சிந்தித்தீரா?!:)///

    உண்மையைச் சொன்னா தப்பில்லீங்க ஸார்..

    இப்ப எனக்கு நேரமில்லை. அதுனால இன்னொரு சமயத்துல உங்களோட எழுத்துத் திறமையை அம்பலப்படுத்துறேன்..

    //'கொங்குவாசல்' பதிவில் இவர் எழுதியிருக்கும் 'கொங்கு வட்டார வழக்கு மொழி' நமக்கு மிகப் பெரும் உதவி..//
    அண்ணே... அதை எழுதினது விவசாயி-வவா சங்க தலை இளா.. நான் இளவஞ்சி... நான் உருப்படியா எழுதலைங்கறதை இப்படியா மொதப் பேரா போட்டு கொமட்டுல குத்தறது:(//

    ஐயையோ.. தப்புப் பண்ணிட்டனா..? ரெண்டு பேரும் ஏன்யா ஒரே தளத்துல உக்காந்து கும்முறீங்க..! எங்கிட்டோ மிஸ்ஸாயிருச்சு..

    சரி விடுங்க.. இளான்ற பேர்ல நீங்க கொஞ்ச நேரம் இளைப்பாறுங்க.. ஒண்ணும் தப்பில்ல..

    ReplyDelete
  106. //benzaloy said...
    திறமான ஐடியா - - - கச்சிதமா முடிச்சிடிங்க - - - இத்தனை தொடர்பர்கள் யாரிடும் உண்டு - - - இத்தகைய எழுதும் திறனும் பொறுமையும் கடின உழைப்பும் எவரிடம் இருக்கும் - - - பகலில் வேறு எதோ தொழில் - - - இரவில் மட்டும் கணணி அருகில் - - - அந்த சொற்ப நேரத்தில் எத்தனை வேலைகள் - - - எழுத முன்னர் மனதில் DRAFT போட்டுடுவாரோ?!//

    அதை ஏன் கேக்குறீங்க பென்ஸ் ஸார்.. தூங்கற நேரம் இப்பல்லாம் ரொம்ப கம்மியாயிருச்சு.. சரி.. பரவாயில்லை.. ஏதாவது உழைக்கிறோமே என்ற எண்ணத்தில்தான் செய்கிறேன்..

    //அது இருகட்டும் சார் una thaana இன்னா ''உதா'' என்று வருதே சார் இந்த Google Indic ல!//

    இனிமே எனக்கு இப்படியே எழுதுங்க.. தப்பில்ல.. நேரம் மிச்சமாகும் உங்களுக்கு..

    //''கச்சிதம்'' என்றால் சுத்தமான தமிழ் சொல்லா?//

    ஆமாம்.. என்றுதான் நினைக்கிறேன். மிகப் பொருத்தம் என்பதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

    //அதே மாதிரி ''பிராப்தம்'' என்பதும் தமிழ் சொல்லா? நான் தமிழ் கிளாஸ் தொடங்க கேட்கவில்லை - - - இந்த இரண்டுக்கும் பதில் தந்தால்
    விட்டுருவேன் - - - ப்ராமிஸ்!//

    பிராப்தம் என்பதும் தமிழ் வார்த்தைதான்..

    எனக்கு வாய்க்கப்பட்டது அல்லது வாழ்க்கைப்பட்டது அல்லது தலைவிதி என்ற ரீதியில் இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளப்படுகிறது..

    நன்றி பென்ஸ் ஸார்..

    ReplyDelete
  107. //benzaloy said...
    தண்டோரா அண்ணே மன்னிக்க வேண்டும் - - - துரோணர்கிட்ட வேலிக்கு மத்த பக்கம் நின்னு அம்பு வித்தை கத்துகினது யாரு ?
    உங்க Blog பாத்தேனே - - - நன்னா இருக்கண்ணே - - - ரோபோ கதய
    யெப்ப முடிபீங்க? இல்ல முடிச்சிட்டானுவளா ?
    நன்றின்ணே !//

    பென்ஸ் ஸார்.. தண்டோரா நமது நல்ல நண்பர்..

    அப்படியே உள்ளாற போய் படிச்சிட்டு அவரையும் நட்பாக்கிக்குங்க..

    நட்புத் தளம் விரியும்.. நேசமும், பாசமும் அதிகரிக்கும்..

    ReplyDelete
  108. பிரேம்ஜி என்னும் பதிவர் இணைந்திருக்கிறார்.

    இவருடைய தளம் http://www.premkg.com.

    தளத்தில் புதிய, புதிய கண்டுபிடிப்புகள், சாதனங்களின் நவீனமயமாக்கல் என்று புதிய புதிய தேவையான செய்திகளைத் தொகுத்துள்ளார்.

    நிச்சயம் நமக்குத் தேவையான ஒன்றுதான்.. விட்டுவிடாதீர்கள்..!

    ReplyDelete
  109. அடுத்து சரவணக்குமரன் இணைந்துள்ளார்.

    இவருடைய தளம் http://www.saravanakumaran.com.

    பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    ஆஸ்கார் விருது பற்றி நகைச்சுவையாக எழுதியுள்ள கட்டுரை சுவையாக உள்ளது..

    ReplyDelete
  110. அடுத்து சிதம்பரம் சசி என்னும் தோழர் இணைந்துள்ளார்.

    இவர் பதிவு எதையும் இணைக்கவில்லை.

    வலைப்பதிவுலகின் வாசகர் போல் தெரிகிறது.

    எப்படியிருந்தாலும் அன்போடு வரவேற்கிறேன்..

    ReplyDelete
  111. அடுத்து தோழர் கீழைராசா இணைந்துள்ளார்.

    இவருடைய தளத்தை நான் முன்பே பார்வையிட்டுள்ளேன். படித்துள்ளேன்..

    கவிதை, கட்டுரை, தகவல்கள், நகைச்சுவை என்று கலந்து கட்டியிருக்கிறார்..

    குசும்பனைப் பற்றி எழுதியிருப்பது டாப் டக்கராக உள்ளது.. படித்துப் பாருங்கள்..

    இவருடைய தளம் http://sarukesi.blogspot.com

    ReplyDelete
  112. அடுத்து இணைந்துள்ளவர் தம்பி புதுவை சிவா..

    என்னால் மறக்க முடியாத ஒருவர்..

    வலைப்பதிவு எழுதுவதால் என்ன புண்ணியம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் மதியப் பொழுதில் அவர் எனக்கிட்ட பின்னூட்டம் ஒட்டு மொத்த அலுவலகத்தையும் சிரிப்பில் ஆழ்த்தி எனக்கும் கொஞ்சம் பெருமையைப் பெற்றுக் கொடுத்தது..

    இவருடைய தளம் http://puduvaisiva.blogspot.com.

    காற்று காற்று உயிர் என்று தனது தளத்திற்கு பெயர் வைத்துள்ளார்.

    ஆனால் தளத்திற்குள் நுழைந்தால் வில்லங்கமான புகைப்படங்களையும் போட்டு வைத்துள்ளார் ஒரு பக்கம். மறுபக்கம் மகான் ஓஷோவும் இருக்கிறார்..

    ஸோ.. ரெண்டுக்கும் சரியாப் போச்சு..

    ReplyDelete
  113. அடுத்து கதிர் என்னும் தோழர் இணைந்துள்ளார்..

    இவர் பதிவு எதையும் இணைக்கவில்லை..

    நன்றியுடன் வரவேற்கிறேன்..

    ReplyDelete
  114. B.Sreeram என்னும் தோழர் இணைந்துள்ளார்.

    இவரும் பதிவு எதையும் இணைக்கவில்லை..

    வாசகராக இருக்கிறார்..

    இவரையும் வருக, வருக என்று வரவேற்கிறேன்..

    ReplyDelete
  115. வணக்கம் தமிழன் சார்
    வலை உலகின் பல ஜாம்பவான்கள் பற்றிய உங்கள் ''என்னைப் பின் தொடரும் பதிவர்கள்..'' பதிவில் என்னையும் பதிவு செய்ததற்கு நன்றி.

    ''தளத்திற்குள் நுழைந்தால் வில்லங்கமான புகைப்படங்களையும் போட்டு வைத்துள்ளார் ஒரு பக்கம். மறுபக்கம் மகான் ஓஷோவும் இருக்கிறார்..

    ஸோ.. ரெண்டுக்கும் சரியாப் போச்சு..''

    ஓஷோவிடம் பிடித்தது மெய் அறிவு
    அதற்கு எதிர் பதம் இளமைஎன்னும் பொய் அழகு.
    அதை நீ உணர்ந்தால் வாழ்க்கை அடைவாய் நல் உயர்வு..

    :-)))))))))))))


    எனக்கு பல காலமாக உங்கள் பழைய பதிவை (கொசுவத்தி ;-)) (''திண்டுக்கல் ஐடிஐயில் டீசல் மெக்கானிக் படித்துக் கொண்டிருந்தபோது NVGB தியேட்டரில் 'பாவம் கொடூரன்' மலையாளப் படம் பார்க்கும் அவசரத்தில் கிளாஸை கட் அடித்துவிட்டு ஒரே சைக்கிளில் மூவராக டிரிபுள்ஸ் சென்று கொண்டிருந்தோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பான இறக்கத்தில் வரும்போது, சைக்கிளின் முன் பக்க கேரியரே கையோடு வர.. முன்னால் அமர்ந்திருந்த நான் தூக்கி வீசப்பட்டு ஒரு வேனின் முன்புறத்தில் மோதி.. அப்படியே கீழே விழ.. '') விபத்து ஏற்பட்டதாக
    எழுதி பதிவு செய்து இருந்தீர்கள்.

    அதை படித்ததிலிருந்து ஒரு சந்தேகம். முதல் மரியாதை படத்தின் புகழ் பெற்ற வசனமான
    ''ஐயா எனக்கு ஒருஉண்மை தெரிஞ்சாகனும்.....அதை போல்
    அந்த 'பாவம் கொடூரன்' படத்தை மீண்டும் எப்பொது பார்க்க சந்தர்பம் கிடைத்தது??

    :-)))))))))))))))))

    ReplyDelete
  116. ///♠புதுவை சிவா♠ said...

    வணக்கம் தமிழன் சார். வலை உலகின் பல ஜாம்பவான்கள் பற்றிய உங்கள் ''என்னைப் பின் தொடரும் பதிவர்கள்..'' பதிவில் என்னையும் பதிவு செய்ததற்கு நன்றி.
    ''தளத்திற்குள் நுழைந்தால் வில்லங்கமான புகைப்படங்களையும் போட்டு வைத்துள்ளார் ஒரு பக்கம். மறுபக்கம் மகான் ஓஷோவும் இருக்கிறார்.. ஸோ.. ரெண்டுக்கும் சரியாப் போச்சு..''
    ஓஷோவிடம் பிடித்தது மெய் அறிவு
    அதற்கு எதிர் பதம் இளமை என்னும் பொய் அழகு. அதை நீ உணர்ந்தால் வாழ்க்கை அடைவாய் நல் உயர்வு..
    :-)))))))))))))///

    நல்லது சிவா.. உண்மை எங்கேயிருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும் உணர்ந்து கொண்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம் உண்டு..

    ///எனக்கு பல காலமாக உங்கள் பழைய பதிவை (கொசுவத்தி ;-)) (''திண்டுக்கல் ஐடிஐயில் டீசல் மெக்கானிக் படித்துக் கொண்டிருந்தபோது NVGB தியேட்டரில் 'பாவம் கொடூரன்' மலையாளப் படம் பார்க்கும் அவசரத்தில் கிளாஸை கட் அடித்துவிட்டு ஒரே சைக்கிளில் மூவராக டிரிபுள்ஸ் சென்று கொண்டிருந்தோம். ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பான இறக்கத்தில் வரும்போது, சைக்கிளின் முன் பக்க கேரியரே கையோடு வர.. முன்னால் அமர்ந்திருந்த நான் தூக்கி வீசப்பட்டு ஒரு வேனின் முன்புறத்தில் மோதி.. அப்படியே கீழே விழ.. '') விபத்து ஏற்பட்டதாக எழுதி பதிவு செய்து இருந்தீர்கள். அதை படித்ததிலிருந்து ஒரு சந்தேகம். முதல் மரியாதை படத்தின் புகழ் பெற்ற வசனமான
    ''ஐயா எனக்கு ஒருஉண்மை தெரிஞ்சாகனும்..... அதை போல்
    அந்த 'பாவம் கொடூரன்' படத்தை மீண்டும் எப்பொது பார்க்க சந்தர்பம் கிடைத்தது??
    :-)))))))))))))))))///

    அதன் பின்னர் கிட்டத்தட்ட 25 முறையாவது அந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.. அது ஒரு கனாக்காலம்..!

    நீங்களும் ஏற்கெனவே பார்த்துவிட்டீர்களோ..?!

    வருகைக்கு நன்றி சிவா..!

    ReplyDelete