Pages

Wednesday, December 10, 2008

யாருமே படிக்காத 'காலச்சுவடு..!'


10-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

‘தினசரி’,
‘தமிழ்ச்சுடர்’,
‘தின சூரியன்’,
‘நம் தினமதி’,
‘பிற்பகல்’

படித்து முடித்துவிட்டீர்களா..? குறுக்கெழுத்துப் போட்டிக்காக தயார் செய்யப்பட்டவை அல்ல இவை.. இவையெல்லாம் வெறும் தமிழ் வார்த்தைகளும் அல்ல. தமிழ்நாட்டில் வெளிவருகின்ற தினசரி பத்திரிகைகளின் பெயர்களாம். தமிழக அரசே சொல்கிறது. நம்புங்கள்.

அப்படியே கீழே உள்ளவைகளையும் ஏக் தம்மில் மூச்சு வாங்க படித்து முடித்து விடுங்கள்..

“தி ரெய்சிங் சன், கடலார், கனிமொழி, தாகூர் கல்விச் செய்தி, திரிகமுகம், தெலுங்கர் கீதம், அற்புத ஆலயமணி, எங்களுக்கு மகிழ்ச்சி, சிவ ஒளி, ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர், கவலைப்படாதே, நவசக்தி விஜயம், நல்வழி, நித்யானந்தம், ராமராஜ்யம், பாபாஜி சித்தர் ஆன்மிகம், கருதவேலி, ஞானவிஜயம், திராவிட ராணி, பண்ணாரி அம்மன் செய்திமலர், பாஞ்சஜன்யம், பென்சனர் கணினி, மலர்ந்த ஜீவிதம், மாத்ருவாணி, லேடிஸ் ஸ்பெஷல், வேதாந்த கேசரி, ஜங்கம இதழ், எங்கள் மக்கள் தலைவன்..”

முடிந்ததா..? இவைகளெல்லாம் தமிழ்நாட்டில் வெளிவருகின்ற வார மற்றும் மாத இதழ்களாம்..

இவைகளில் எத்தனை பத்திரிகைகளை நீங்கள் படித்திருக்கிறீர்கள். படிக்கவில்லையெனில் இனிமேற்கொண்டு படியுங்கள். ஆனால் ஒன்று. இவைகள் எந்தக் கடைகளிலும் கிடைக்காது.. படித்தே தீர வேண்டும் என்று நினைத்தீர்களானால், நீங்கள் அரசு பொது நூலகத்திற்குத்தான் செல்ல வேண்டும். நூலகத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சில பருவ இதழ்களும், நாளிதழ்களும் பிரிண்ட் செய்யப்படுகின்றனவாம்.

இதில் ஒரு விஷயம். கடந்த 2008 ஏப்ரல் மாதத்திலிருந்து ‘காலச்சுவடு’ பத்திரிகையை தமிழக பொது நூலகத் துறை, தனது நூலகங்களுக்காக வாங்குவதனை நிறுத்திக் கொண்டு விட்டது.

இது பற்றி காலச்சுவடு பத்திரிகையும், பல்வேறு இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் அரசுக்கு எழுதிச் சொல்லியும், பேசியும் இதுவரை எந்தவிதப் பயனுமில்லை.

இது பற்றிய செய்தி 24.08.08 தேதியிட்ட ஜீனியர்விகடன் இதழில் வெளியானது. அதில் இது குறித்து பேட்டியளித்திருந்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அளித்திருந்த பதில் இது..

“வாசகர்கள் அதிக அளவில் படிக்கும் இதழ்களை நூலகங்களுக்கு வாங்கலாம் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில்தான், ‘காலச்சுவடு’ பத்திரிகையை நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறார்கள். ‘காலச்சுவடு’ பத்திரிகை வாசகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகைகளில் ஒன்றானால், இந்தப் பிரச்சினை தானாக தீர்ந்துவிடும்..”

எப்படி இருக்கிறது கதை..?

‘காலச்சுவடு’ பத்திரிகை அதிகம் வாசகர்களால் படிக்கப்படாத இதழாம். மேலே புதுப் புதுப் பெயர்களில் இன்றைக்குத்தான் நீங்களும், நானும் கேள்விப்பட்டிருக்கும் நாளிதழ்களும், பருவ இதழ்களும் மட்டுமே அதிகமான தமிழ் வாசகர்களால் படிக்கப்படக்கூடியவைகளாம்.

அமைச்சரின் கூற்று எப்பேர்ப்பட்ட பொய் என்பது அவருக்கே தெரிந்திருந்தும் ஏதோ ஒரு ‘அழுத்தம்’ காரணமாகவே அவருடைய செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது.

காலச்சுவடின் அரசியலை நான் பார்க்கவில்லை. அதன் இலக்கியத் தன்மையை நான் ஆராயவில்லை. அதனுடைய பத்திரிகை நேர்மையை நான் சல்லடை போடவில்லை. ஆனால், அது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வெகுஜனப் பத்திரிகை என்பதில் எனக்கு ஐயமில்லை.

இதற்கு முன்பு கனிமொழி காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் இருந்தவரையிலும் அதன் வாசகர்கள் அதிகம் பேர் இருந்திருக்கிறார்கள் என்பது அமைச்சரின் மறைமுகமான கருத்து. கனிமொழி காலச்சுவடில் இருந்து விலகிய பின்பு, கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு பற்றியும், மதுரை இளவரசரின் செயல்பாடுகள் பற்றியும் காலச்சுவடு விமர்சிக்கத் தொடங்கிய உடனேயே, அதனுடைய பார்வையாளர்களும், வாசகர்களும் மெதுவாகத் தேய்ந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் சுற்றி வளைத்துத் தெரிவிக்கிறார்.

இன்றைய முதல்வர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒரு பத்திரிகையாளன் என்று மைக் கிடைக்கின்ற இடங்களிலெல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இந்தப் பிரச்சினை வெளிவந்த பின்பு இன்றுவரையில் இதற்கு மட்டுமே பதில் சொல்லாமல் இருக்கிறார்.

கனிமொழியின் நெருங்கிய நண்பர் கார்த்தி சிதம்பரமே முதல் கையெழுத்திட்டு பல்வேறு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியகர்த்தாக்களின் கையொப்பத்துடன் ஆதரவுக் கடிதம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஆனாலும் இன்னமும் அரசு இறங்கி வரவில்லை.

ஆக.. “என்னை எதிர்த்தால், நீ தொழில் செய்ய முடியாது. என்னை அனுசரித்தால், உன் தொழில் நடக்கும்” என்கிற பாசிஸ்டு, சர்வாதிகார மனப்பான்மை இன்னமும் நமது அரசியல்வியாதிகளுக்குப் போகவில்லை என்பது இந்த ஒன்றிலிருந்தே நமக்குப் புலனாகிறது..

வாழ்க ஜனநாயகம்..!

வளர்க திராவிடம்..!

27 comments:

  1. // ... காலச்சுவடின் அரசியலை நான் பார்க்கவில்லை. அதன் இலக்கியத் தன்மையை நான் ஆராயவில்லை. அதனுடைய பத்திரிகை நேர்மையை நான் சல்லடை போடவில்லை...//

    ஆக எதையுமே நீங்கள் செய்யவில்லை...

    //..ஆனால், அது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இலக்கியம் தோய்ந்த பத்திரிகை என்பதில் எனக்கு ஐயமில்லை//...


    எதையுமே செய்யாமல் எப்படி உங்களால் இந்த முடிவுக்கு வர முடிந்தது....

    ReplyDelete
  2. காலச்சுவடுதான் 'வருமானம் போச்சே'-னு புலம்பிட்டு இருக்காங்க.
    நீங்க ஏன் சார்.. loosela விடுங்க. libraryக்கு இன்னும் பல நல்ல books & magazines வருது.

    ReplyDelete
  3. /ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர்//

    மற்ற பத்திரிகை பற்றி தெரியாது.. ஆனால் இந்த பத்திரிகை துறை சார்ந்தது. உடற்கட்டிடக்கலையில் (தமிழில் - பாடிபில்டிங் ) ஈடுபட்டுள்ளோர் மத்தியில் மிகவும் பிரபலமான பத்திரிகை. உமக்குத் தெரியாது என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்காது என்று அர்த்தமா? எங்களுக்கு ரெபரென்ஸுக்கு இருப்பதே இதுவும் “பாடிபில்டிங் ஜெண்டில்மேன்”ம் தான். மார்சியல் ஆர்ட்ஸ் மக்களுக்காக வரும் ஒரே பத்திரிகை “வீரக்கலை” ஊருக்கு நாலு டோஜோ இருக்கு. அதில் ஒருத்தனாவது வாங்கி (மற்றவர்களோடு ஷேர் பண்ணி) படிக்கிறாங்க. இல்லேன்னா மாஸ்டர் வாங்கி வந்து முக்கியமான கட்டுரையை மற்றவர்களுக்கு வாசிக்கத் தருகிறார்கள்.


    அய்யா புத்திசாலி... தெரியலைன்னா பொத்திட்டு இருக்கனும். நமக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்?

    ReplyDelete
  4. பதிவு தூள். மேட்டரும்தான்

    ReplyDelete
  5. ///Vasu said...
    // ... காலச்சுவடின் அரசியலை நான் பார்க்கவில்லை. அதன் இலக்கியத் தன்மையை நான் ஆராயவில்லை. அதனுடைய பத்திரிகை நேர்மையை நான் சல்லடை போடவில்லை...//
    ஆக எதையுமே நீங்கள் செய்யவில்லை...
    //..ஆனால், அது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இலக்கியம் தோய்ந்த பத்திரிகை என்பதில் எனக்கு ஐயமில்லை//...
    எதையுமே செய்யாமல் எப்படி உங்களால் இந்த முடிவுக்கு வர முடிந்தது.///

    தவறுதான்.. மன்னிக்கவும். 'இலக்கியம் தோய்ந்த' என்கிற வார்த்தைகளுக்குப் பதிலாக 'வெகுஜன பத்திரிகை' என்று இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. //Karthikeyan G said...
    காலச்சுவடுதான் 'வருமானம் போச்சே'-னு புலம்பிட்டு இருக்காங்க.
    நீங்க ஏன் சார்.. loosela விடுங்க. libraryக்கு இன்னும் பல நல்ல books & magazines வருது.//

    ஏன் காலச்சுவடுக்கு என்ன குறைச்சல்..? நல்ல பத்திரிகைதானே..? குறிப்பிடத்தக்க அளவில் விற்பனையாகும் ஒரு இதழ்தானே.. இதுநாள்வரைக்கும் வாங்கப்பட்ட பத்திரிகை.. பரவலாத தமிழ்நாட்டில் மூலை, முடுக்கெல்லாம் அறியப்பட்ட பத்திரிகைதானே.. வாங்கிப் போடுவதால் என் போன்ற பணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் படிப்பார்கள் அல்லவா..?

    ReplyDelete
  7. ///Anonymous said...
    //ஜெய் பாடி பில்டிங் மாஸ்டர்//
    மற்ற பத்திரிகை பற்றி தெரியாது.. ஆனால் இந்த பத்திரிகை துறை சார்ந்தது. உடற்கட்டிடக்கலையில் (தமிழில் - பாடிபில்டிங் ) ஈடுபட்டுள்ளோர் மத்தியில் மிகவும் பிரபலமான பத்திரிகை. உமக்குத் தெரியாது என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்காது என்று அர்த்தமா?//

    ஆமாம்.. எனக்குத் தெரியாது. அதனால்தான் எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டிருக்கிறேன்.. உங்களுக்குத் தெரியுமென்றால் எனக்கு சந்தோஷம்தான்..

    //எங்களுக்கு ரெபரென்ஸுக்கு இருப்பதே இதுவும் “பாடிபில்டிங் ஜெண்டில்மேன்”ம் தான். மார்சியல் ஆர்ட்ஸ் மக்களுக்காக வரும் ஒரே பத்திரிகை “வீரக்கலை” ஊருக்கு நாலு டோஜோ இருக்கு. அதில் ஒருத்தனாவது வாங்கி (மற்றவர்களோடு ஷேர் பண்ணி) படிக்கிறாங்க. இல்லேன்னா மாஸ்டர் வாங்கி வந்து முக்கியமான கட்டுரையை மற்றவர்களுக்கு வாசிக்கத் தருகிறார்கள்.//

    நல்லது. படித்துப் பயன் பெறுங்கள். யார் வேண்டாம் என்பது.. இதேபோல் காலச்சுவடையும் வாங்கிப் போட்டால், அதன் வாசகர்கள் வந்து படிப்பார்களே..

    //அய்யா புத்திசாலி... தெரியலைன்னா பொத்திட்டு இருக்கனும். நமக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்?//

    ஐயா அதிபுத்திசாலி பாடிபில்டும், உடற்கட்டும் மட்டுமே உலகமல்ல.. எழுத்து, இலக்கியம் என்று மற்றொரு பக்கமும் இருக்கிறது. அதையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  8. //Boston Bala said...
    பதிவு தூள். மேட்டரும்தான்//

    நன்றி பாபாஜி..

    ReplyDelete
  9. இந்தப் பதிவுக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் இலங்கை TULF தலைவர் திரு.ஆனந்தசங்கரி எழுதியிருக்கும் கட்டுரையை அனானி நண்பர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். அதை இங்கே பிரசுரிக்க முடியாத நிலையில் உள்ளேன். தேவையெனில் படித்து முடித்த பின் தனிப்பதிவாக இடுகிறேன்..

    ReplyDelete
  10. இது வேறயா?
    அடக்கெரகமே!

    ஓ..வாரந்தரி ராணியை விட
    காலச்சுவடு மோசமா?
    எல்லாம்....அவிங்க நேரம்..!

    ReplyDelete
  11. வாழ்க பணநாயகம்

    நித்யன்

    ReplyDelete
  12. //சுரேகா.. said...
    இது வேறயா? அடக்கெரகமே! ஓ..வாரந்தரி ராணியை விட
    காலச்சுவடு மோசமா?
    எல்லாம்....அவிங்க நேரம்..!//

    அப்படீன்னு இந்த அரசாங்கம் நினைக்குது சுரேகா.. அப்ப இந்த அரசாங்கத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளுங்கள்..

    ReplyDelete
  13. //நித்யகுமாரன் said...
    வாழ்க பணநாயகம்
    நித்யன்//

    அன்பு நித்யா.. எழுத மறந்துவிட்டேன்.. நீவிர் சொல்லிவிட்டீர்.. இதற்கும் சேர்த்து ஒரு நன்றி..

    ReplyDelete
  14. காலச்சுவடை அரசு நூலங்கள் வாங்காமல் நிறுத்தியதன் பின்னனியிலுள்ள அரசியல் வேறு.

    ஆனால் இது ஏதோ பத்திரிக்கைத் துறை குரல்வளையை நெரிக்கும் பிரச்சினை போல் காலச்சுவடு படம் காட்டியத்துதான் நகைச்சுவை.

    இதுபோல பிற பத்திரிக்கைகளை நூலகங்களில் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோ அல்லது இவர்கள் நிலையிலுள்ள மற்ற பத்திரிக்கைகளுக்கு ஆதரவாகவோ ஒரு துறும்பும் கிள்ளிப்போட்டது கிடையாது காலச்சுவடு.

    அது ஒரு வெகுஜனப் பத்திரிக்கை என்பதே தவறு. சிறு பத்திரிக்கைகளுக்குக் கிட்டாத விளம்பரமும் மற்ற வசதிகளும் உள்ள ஒரு சிறு பத்திரிக்கை அவ்வளவே. மொத்தமே 10,000 பிரதிகளுக்குக் குறைவாகத்தான் அச்சடிக்கப் படுவதாக அறிகிறேன்.

    இலக்கியப் பரப்பில் தனிநபர் துவேஷம் வளர்த்ததில் காலச்சுவடின் பங்களிப்பு அளப்பரியது.

    சு ரா வின் பிரச்சார பீரங்கி கா சுவடு எனபது தவிர வெளி அடைஅயாளம் கிடையாது. மாற்றுக் கருத்தை ஏற்றுப் பிரசுரிக்கும் நேர்மை இல்லாத பத்திரிக்கை அது.

    இதுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது குறித்து எனக்கு வருத்தமே.

    ReplyDelete
  15. ஏகப்பட்ட இலக்கிய பத்திரிக்கைகள் இருக்கு நாட்ல. இவங்க மட்டும் என்ன ஷ்பெசல் ? சொல்லுங்க பார்க்கலாம்..

    என்னங்க இது?

    ReplyDelete
  16. //அதிபுத்திசாலி பாடிபில்டும், உடற்கட்டும் மட்டுமே உலகமல்ல.. எழுத்து, இலக்கியம் என்று மற்றொரு பக்கமும் இருக்கிறது. அதையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..//

    Fuck with your Literature. May be that's important for you - But definitely not for all others. Don't be fascist in imposing all the shit you read on to others. And don't underestimate others area of interest.

    the point I wanted to make is - that there are different worlds and you keep your nasty nose out and don't poke into others. Did I make myself clear?

    ReplyDelete
  17. காலச்சுவடுக்குதான் தினமலர் இருக்கே! அப்புறம் எதுக்கு கவலை :-) இன்ன பிற பாரதிய வித்யா பவன் பள்ளிகள் எல்லாம் இருக்கே! அங்கு சென்று இலக்கியம் வளர்க்கட்டும்.

    //தவறுதான்.. மன்னிக்கவும். 'இலக்கியம் தோய்ந்த' என்கிற வார்த்தைகளுக்குப் பதிலாக 'வெகுஜன பத்திரிகை' என்று இருந்திருக்க வேண்டும்//

    இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை கொஞ்சம் விளக்குங்களேன்.

    //‘காலச்சுவடு’ பத்திரிகை அதிகம் வாசகர்களால் படிக்கப்படாத இதழாம். மேலே புதுப் புதுப் பெயர்களில் இன்றைக்குத்தான் நீங்களும், நானும் கேள்விப்பட்டிருக்கும் நாளிதழ்களும், பருவ இதழ்களும் மட்டுமே அதிகமான தமிழ் வாசகர்களால் படிக்கப்படக்கூடியவைகளாம்.//

    ஆமாம். அதுதான் நடைமுறை எதார்த்தம்! நாம் மட்டுமே உலகம் அல்ல. அதனால் நாம் படிப்பதே பெரும்பான்மையினரால் படிக்கப்படுகிறது என்று நினைப்பது அபத்தமாகி விடும். இணையத்தில் இயங்கும் நாம் மக்கள் துகளின் ஒரு மிகச்சிறிய பிரதிகள்தாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    //வாழ்க ஜனநாயகம்..!

    வளர்க திராவிடம்..!//

    வெல்க இந்தியானு போடாம விட்டுட்டீங்க!

    அமைச்சரின் மறைமுகமான கருத்துகளை கண்டுணர்ந்து சொல்லும் ஆற்றல் பெற்ற நீங்க முதல் பின்னூட்டம் இட்ட வாசுவின் கேள்விக்கு பதிலையே காணோம். நான் பதில் சொல்லிட்டேன் சொல்லாதீங்க!

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. கலக்கல் பதிவு உண்மை அண்ணே !!!

    ReplyDelete
  19. //வடகரை வேலன் said...
    காலச்சுவடை அரசு நூலங்கள் வாங்காமல் நிறுத்தியதன் பின்னனியிலுள்ள அரசியல் வேறு.//

    என்னவென்பதைச் சொன்னால் தெரிந்து கொள்கிறோம். எனக்குத் தெரிந்ததை நான் இதிலேயே எழுதியிருக்கிறேன்.

    //ஆனால் இது ஏதோ பத்திரிக்கைத் துறை குரல்வளையை நெரிக்கும் பிரச்சினை போல் காலச்சுவடு படம் காட்டியதுதான் நகைச்சுவை.//

    ஆமாம்.. இதுவரையில் வாசகர்கள் அதிகம் கொண்ட பத்திரிகை என்று அறியப்பட்டு திடீரென்று அரசுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுந்தவுடனேயே வாக்கெடுப்பு நடத்தி கண்டுபிடித்ததுபோல் புத்தகத்தை நிறுத்துவது அப்புத்தகத்தின் வளர்ச்சியை தடுக்கும் முறைகளில் ஒன்றுதானே..

    //இதுபோல பிற பத்திரிக்கைகளை நூலகங்களில் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோ அல்லது இவர்கள் நிலையிலுள்ள மற்ற பத்திரிக்கைகளுக்கு ஆதரவாகவோ ஒரு துறும்பும் கிள்ளிப்போட்டது கிடையாது காலச்சுவடு.//

    இது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் எந்தப் பத்திரிகையுமே அதை வாங்குங்கள்.. இதை வாங்குங்கள் என்று எழுதியோ, சொல்லியோ நான் கேள்விப்பட்டதுமில்லை. படித்ததுமில்லை. பொத்தாம்பொதுவாக இந்தாண்டு நூலகத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி கூடுதலாக இருக்க வேண்டும். அதன் மூலம் இன்னமும் வெளிச்சத்திற்கு வராத பல சஞ்சிகைகளும், இதழ்களும் நூலகத்துறை வாங்க வேண்டும் என்ற அர்த்தம் வரும் வார்த்தைகளுடன் பல பத்திரிகைகளில் தலையங்கத்திலும், உட்பகுதி கட்டுரைகளிலும் படித்துள்ளேன்.

    //அது ஒரு வெகுஜனப் பத்திரிக்கை என்பதே தவறு.//

    இது உங்களது கருத்தெனில் நான் எதுவும் செய்ய முடியாது.

    //சிறு பத்திரிக்கைகளுக்குக் கிட்டாத விளம்பரமும் மற்ற வசதிகளும் உள்ள ஒரு சிறு பத்திரிக்கை அவ்வளவே. மொத்தமே 10,000 பிரதிகளுக்குக் குறைவாகத்தான் அச்சடிக்கப்படுவதாக அறிகிறேன்.//

    அடித்தால் என்ன வேலன்..? 10000 என்பதே மிக மிக குறைவு. தமிழ் மொழியை மென்மேலும் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். தமிழில் நல்ல நல்ல புத்தகங்களை நாம்தான் தேடிப் பிடித்து பார்வைக்கு வைக்க வேண்டும்.

    //இலக்கியப் பரப்பில் தனி நபர் துவேஷம் வளர்த்ததில் காலச்சுவடின் பங்களிப்பு அளப்பரியது. சு.ரா.வின் பிரச்சார பீரங்கி கா.சுவடு எனபது தவிர வெளி அடையாளம் கிடையாது. மாற்றுக் கருத்தை ஏற்றுப் பிரசுரிக்கும் நேர்மை இல்லாத பத்திரிக்கை அது.//

    இது அப்பத்திரிகையின் உள்ளடக்கம் சார்ந்த கருத்து. எனக்கும் அப்பத்திரிகை தொடர்பான கருத்து வேறுபாடுகள் உண்டு. அதற்காக அப்பத்திரிகையே இருக்கக் கூடாது என்று நினைப்பது சர்வாதிகாரம் அல்லவா.

    //இதுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது குறித்து எனக்கு வருத்தமே.//

    இப்படி நீங்கள் எழுதியதில் எனக்கும் மனங்கொள்ளா வருத்தம் வேலன் ஸார்..

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  20. //Anonymous said...
    ஏகப்பட்ட இலக்கிய பத்திரிக்கைகள் இருக்கு நாட்ல. இவங்க மட்டும் என்ன ஷ்பெசல்? சொல்லுங்க பார்க்கலாம்..
    என்னங்க இது?//

    மற்ற பத்திரிகைகளையெல்லாம் வாங்கும்போது இதனை வாங்காமல் புறக்கணிப்பது ஏன்? சொல்லுங்க பார்க்கலாம்..

    ReplyDelete
  21. ///Anonymous said...
    //அதிபுத்திசாலி பாடிபில்டும், உடற்கட்டும் மட்டுமே உலகமல்ல.. எழுத்து, இலக்கியம் என்று மற்றொரு பக்கமும் இருக்கிறது. அதையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..//
    Fuck with your Literature. May be that's important for you - But definitely not for all others.
    Don't be fascist in imposing all the shit you read on to others. And don't underestimate others area of interest. the point I wanted to make is - that there are different worlds and you keep your nasty nose out and don't poke into others. Did I make myself clear?///
    நான் இல்லை என்று மறுக்கவில்லை.

    அந்த அனானி நண்பர் பாடிபில்டர் புத்தகத்தை பற்றி மட்டுமே குறிப்பிட்டுவிட்டு காலச்சுவடை வாங்காதது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதனால்தான் நான் இப்படி சொல்ல வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  22. //முத்துகுமரன் said...
    காலச்சுவடுக்குதான் தினமலர் இருக்கே! அப்புறம் எதுக்கு கவலை :-) இன்ன பிற பாரதிய வித்யா பவன் பள்ளிகள் எல்லாம் இருக்கே! அங்கு சென்று இலக்கியம் வளர்க்கட்டும்.//

    பொதுநூலகத் துறை என்பது மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் துறை. அதற்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் பொதுவானது அது. தன்னுடைய புத்தகத்திற்கு என்ன குறைச்சல் என்று அவர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

    ///தவறுதான்.. மன்னிக்கவும். 'இலக்கியம் தோய்ந்த' என்கிற வார்த்தைகளுக்குப் பதிலாக 'வெகுஜன பத்திரிகை' என்று இருந்திருக்க வேண்டும்//
    இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை கொஞ்சம் விளக்குங்களேன்.///

    என்னை மாதிரி கொஞ்சமாக இலக்கிய வார்த்தைகளை படித்துத் தேறி வருபவர்களுக்கு இப்போதைக்கு உயிர்மை, காலச்சுவடை விட்டால் வேறு பத்திரிகைகள் கிடையாது. என் மாதிரியான ஆட்களின் அபிமானம் அப்பத்திரிகைக்கு உண்டு என்பதால்தான் அப்படி சொல்லியிருக்கிறேன்..

    ///‘காலச்சுவடு’ பத்திரிகை அதிகம் வாசகர்களால் படிக்கப்படாத இதழாம். மேலே புதுப் புதுப் பெயர்களில் இன்றைக்குத்தான் நீங்களும், நானும் கேள்விப்பட்டிருக்கும் நாளிதழ்களும், பருவ இதழ்களும் மட்டுமே அதிகமான தமிழ் வாசகர்களால் படிக்கப்படக்கூடியவைகளாம்.//
    ஆமாம். அதுதான் நடைமுறை எதார்த்தம்! நாம் மட்டுமே உலகம் அல்ல. அதனால் நாம் படிப்பதே பெரும்பான்மையினரால் படிக்கப்படுகிறது என்று நினைப்பது அபத்தமாகி விடும். இணையத்தில் இயங்கும் நாம் மக்கள் துகளின் ஒரு மிகச் சிறிய பிரதிகள்தாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.///

    காலச்சுவடின் மீதிருக்கும் மாற்றுக் கருத்தாக இது எனக்குப் படுகிறது. நான் இதற்குப் பதில் சொல்ல இயலாது ஸார்..

    ///வாழ்க ஜனநாயகம்..!
    வளர்க திராவிடம்..!//
    வெல்க இந்தியானு போடாம விட்டுட்டீங்க!///

    போட்டுட்டா போகுது.. காசா? பணமா?

    வெல்க இந்தியா..!

    போதுமா..?

    //அமைச்சரின் மறைமுகமான கருத்துகளை கண்டுணர்ந்து சொல்லும் ஆற்றல் பெற்ற நீங்க முதல் பின்னூட்டம் இட்ட வாசுவின் கேள்விக்கு பதிலையே காணோம். நான் பதில் சொல்லிட்டேன் சொல்லாதீங்க!//

    நான் சொன்ன பதிலைத்தான் நீங்கள் குறிப்பிட்டு எனக்கு கேள்வியாக கேட்டிருக்கிறீர்கள். பின்பு மறுபடியும் சொல்லவில்லையே என்றால் எப்படி ஸார்..?

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. //செந்தழல் ரவி said...
    கலக்கல் பதிவு உண்மை அண்ணே!!!//

    நன்றி தம்பி.. ஸ்வீடன் எப்படி இருக்கு..? வரும்போது நல்ல கலெக்ஷன் டிவிடிக்களை வாங்கி வா..

    ReplyDelete
  24. வாசு கேட்ட கேள்வியையும் அதற்கு உங்கள் பதிலையும் படிச்சிட்டு என் கேள்வியைப் பாருங்க அர்த்தம் புரியும்!

    ReplyDelete
  25. //முத்துகுமரன் said...
    வாசு கேட்ட கேள்வியையும் அதற்கு உங்கள் பதிலையும் படிச்சிட்டு என் கேள்வியைப் பாருங்க அர்த்தம் புரியும்!//

    வாசு ஸாருக்கு உரிய பதிலை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். தங்களுக்கான பதிலையும் புரிந்துதான் சொல்லியிருக்கிறேன்..

    ReplyDelete
  26. பழைய 'அண்ணாத்தே' மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு போலிருக்கு.. நிமிஷத்துக்கு ஒண்ணுன்னு செந்தமிழ்ல்ல போட்டுத் தள்ளுறாரு..

    ReplyDelete