Pages

Saturday, November 22, 2008

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் - பாகம்-2

22-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நண்பர் கொழுவி விடாக்கொண்டராக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிட்டு அதில் எனது கருத்தையும் வெளியிட்ட பின்பும் இதோ அடுத்த பாகத்தையும் அனுப்பியுள்ளார்.

கொழுவியிடம் சண்டை போட முடியுமா..?

வெளியிட்டுவிட்டேன்..

பாகம் 2

ராஜீவ் காந்தியின் தீபாவளிக் கொண்டாட்டம்...!


1987-ம் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் நிறையவே நடைபெற்றது. இந்தியா அமைதிப்படை என்ற போர்வையில் ஒரு அழிப்புப்படையை ஏவிவிட, அது விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை பலியெடுத்தது.

விமானத்தில் இருந்து முதலில் உணவுப்பொட்டலங்கள். பின்னர் ஒப்பந்தம். திலீபனின் உயிர் பறிப்பு. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் தீருவில் தீ. முதல் பெண் மாவீரர் ஆகி மாலதி மரணம். இன்னும் இன்னும். அதன் தொடர்ச்சியாய் அப்பாவிகள் மீதான படுகொலை.

ஒக்ரோபர் 21, 1987 அன்று பாரத மக்கள் ஏன் அனைத்து இந்து மக்களும் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணக் குடாநாடோ சோபையிழந்து அந்நிய இராணுவத்தின் அகோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகி கொண்டிருந்தது.

யாழ்ப்பாண கோட்டையில் இருந்து இந்திய இராணுவம் வடக்கு நோக்கி ஒரு முன்னேற்ற முயற்சியில் இறங்கியது. அதற்கு ஆதரவாக கோட்டையில் இருந்து செறிவான எறிகணைத் தாக்குதல் நடாத்தப்படுகிறது. அது யாழ்ப்பாணத்தின் எல்லாப் பாகங்களிலும் விழுந்து வெடிக்கிறது. மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். நிறைய எறிகணைகள் யாழ் மருத்துவமனையை பதம் பார்க்கிறது. பாதுகாப்புக்கு வைத்தியசாலை சிறந்தது என் எண்ணி அதற்குள் ஏராளமானோர் நுழைகிறார்கள். மதியம் ஆரம்பித்த தாக்குதல் இடைவெளி இன்றி தொடர்கிறது.


இப்போது எறிகணைகள் மருத்துவமனையின் நோயாளர் விடுதிகளிலும் வீழ்ந்து வெடிக்கிறது. எல்லோரும் கதறியழுதவாறு சிதறி ஓடுகிறார்கள். சிலர் மேல்மாடியில் இருக்கும் எக்ஸ்ரே அலுவலக அறைக்கும், வைத்தியசாலை அலுவலக அறைக்கும் ஓடுகிறார்கள். மேல்மாடி என்பதால் பாதுகாப்புக்கு உகந்தது என எண்ணியிருக்க கூடும். இதற்குள் காயம் அடைந்தவர்கள் ஒருபுறம். உயிர் பிரிந்த உடலமாக கிடந்தவர்கள் ஒருபுறம்.

மாலை 4.40 மணியளவில் இராணுவம் மேற்கு பக்கமாக வைத்தியசாலைக்குள் நுழைகிறது. ஊழியர்கள் தமது சீருடைகளை தரித்து நிற்கின்றனர். மருத்துவர்களும் தத்தமது உடைகளை அணிந்து அச்சத்துடன் செய்வதறியாது நிற்கின்றனர். இராணுவம் சுட்டபடி உள்ளே நுழைகிறது.

"நாங்கள் ஊழியர்கள்" என்று ஆங்கிலத்தில் ஊழியர்கள் கத்துகிறார்கள். நாங்கள் "சிவிலியன்ஸ்" எனப் பொதுமக்கள் கத்துகிறார்கள். இரத்த வெறி பிடித்த இந்திய இராணுவத்திற்கு இது விளங்குமா? சுட்டுத்தள்ளுகிறது.

"ஐயோ அம்மா! முருகா! முருகா!!" என குழறல் சத்தம் கேட்கிறது. பின்னர் சூட்டுச் சத்தம். இப்போது அந்த குழறல் சத்தங்கள் அடங்குகிறது. நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த அப்பாவி நோயாளர்கள் இங்கும் அங்கும் திகிலுடன் ஓடுகிறார்கள். அங்கே நின்ற ஒரு சிறுவனும் (வயது 15) சிதறி ஓடுகிறான். அவனது தந்தை ஒரு வைத்தியசாலை ஊழியர்.

இப்படி ஒவ்வொரு விடுதியாக இராணுவம் நுழைந்து தனது மிலேச்சத்தனமான கைவரிசையை காட்டி கொண்டிருக்க இருள் சூழ்ந்து கொண்டது. எல்லோரையும் பயம் கவ்விக்கொண்டது. செய்வதறியாது கட்டில்களுக்கு கீழே படுத்தவர்களும், இறந்தவர்களோடு இறந்தவர்களாக பாவனை செய்து படுத்தவர்களும் என நோயாளர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு எங்காவது காயம் அடைந்தவர்களின் முனகல்சத்தம் கேட்கும். அந்த இடத்தை நோக்கி 'டுமீல்' 'டுமீல்' என துப்பாக்கி ரவை பாயும். பின்னர் அந்த சத்தம் அடங்கி விடும். இவ்வாறு அன்று இரவு முழுவதும் முனகல் சத்தமும் பின்னர் சூட்டுச் சத்தமும் நடந்தது. ஏன் என கேட்காமல் அப்பாவிகளை சுட்டுத்தள்ளி தனது கொலைவெறிகளை தீர்த்துக்கொண்டது.


அடுத்தநாள் காலை விடிந்தது(22-10-1987). காலை 8மணியளவில யாரோ ஒரு பெரியவர் இராணுவத்துடன் நோயாளர்களுக்காகவும் நிலைமைகளுக்காகவும் வாதாடினார். பின்னர் வழமைபோல சூட்டுச்சத்தம். ஆட்கள் அலறித்துடித்தபடி வீழ்ந்தனர். அவர் வேறுயாருமல்ல வைத்திய நிபுணர், கலாநிதி அ.சிவபாதசுந்தரம். அவரோடு இறந்தது சில தாதிமார்கள். இச்சத்தம் எல்லா விடுதிகளுக்கும் கேட்டது. மிகுதியாக உயிருடன் இருந்தவர்களை இது உலுப்பி எடுத்தது. என்ன நடக்கும் என அச்சத்தில் இருந்தார்கள்.


10.30 மணி உயிருடன் இருப்பவர்களை கைகளை உயர்த்தியபடி வெளியே வரச்சொல்கிறது இராணுவம். அச்சத்துடன் எல்லோரும் என்னநடக்குமோ என எண்ணியபடி வெளியே வருகிறார்கள். அங்கே இறந்த உடல்கள் எல்லாம் பனங்கிழங்கு அடுக்கியது போல கிடந்தது. வீங்கிய உடல்கள். சிதறிய உறுப்புகள் என பார்ப்பதற்கு கோரமாக இருந்தது. அதற்குள் காயப்பட்டு குறை உயிரில் இருந்தவர்களும் அடங்குவர்.

அந்த சிறுவனும் நண்பனும் வெளியே வருகிறார்கள். அவனுடைய தாயாருடன் ஒரு தம்பி முன்னே செல்வதை காண்கிறான். வெளியே செல்கிறான். ஆனால் அவனது தந்தையாரையும் இரண்டு தம்பிமாரையும் காணவில்லை. எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது அவனுக்கு. விறாந்தையில் கிடந்த உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தது. இரத்தவாடை மிக மோசமாக இருந்தது. உடலங்களுக்கும், இரத்தவெள்ளத்திற்குள்ளாலும் எல்லோரும் வெளியே வருகிறார்கள். கைகளை கூப்பியபடி கிடக்கும் உடலங்கள் (கும்பிட கும்பிட சுட்டிருப்பார்கள்), மகனை கட்டியணைத்தபடி கிடக்கும் தாய், தந்தை உடலம் என மிகவும் உருக்கமாகவும் கோரமாகவும் காட்சியளித்தது.

அவன் தந்தையை தேடினான். எங்கும் காணவில்லை. இரவு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் உற்வினர் இருந்தால் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவனும் சென்று பார்க்கிறான். அங்கே அவனது தந்தையின் உயிரற்ற உடலத்தைப் பார்க்கிறான். திகைத்துப்போகிறான். தம்பிமாரை காணவில்லை. அங்கே காயமடைந்த ஒருவர் சொல்கிறார், "தம்பி உங்கள் அப்பா காயமடைந்த ஒருவர் தண்ணீர் கேட்ட போது, மேசையில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொடுக்க முயன்ற வேளை சிப்பாய் ஒருவனால் சுடப்பட்டு இறந்தார். மனம் கொதித்தான். இருந்தும் நிலைமை மோசம். என்ன செய்ய முடியும்.

இனி தகனக்கிரியைகளை நடத்தவேண்டும் என ஒரு வைத்தியரை அணுகிகேட்க, அவரும் இராணுவத்துடன் தொடர்பு கொண்டார். பிரேத அறைக்கு அருகில் இருந்த வெளியில் எல்லோர் சடலங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த சிறுவனின் தந்தையின் உடலை ஒரு கரையாக வைத்து தீயை மூட்ட சொன்னார்கள். அவனும் தீயை மூட்டினான். அவனை கொண்டே ஏனைய உடல்களுக்கும் தீ மூட்டுவித்தனர். எல்லோர் உடல்களும் தீயுடன் சங்கமமாகியது. 15வயது சிறுவன் 70ற்கு மேற்பட்ட உடலங்களுக்கு தீ வைக்கிறான். இந்த கொடுமை எங்கும் நடக்குமா.


ஒருமாதத்தின் பின்னர் அவனது தம்பியரைக் கண்டுபிடித்தான் அந்த சிறுவன். அவர்கள் கூறினர். "உங்களை இராணுவம் சுடத்தான் (22.10.1987 காலை) கூட்டிக்கொண்டு போறான் என நினைத்து, நாம் காயப்பட்டவர்களுடன் கிடந்து பின்னர் நல்லூரிற்கு தப்பி ஓடி வந்தோம் என்றனர்.

இந்திய இராணுவத்தின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் 70 ற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டணர். அவர்களில் 23 வைத்தியசாலை ஊழியர் அடங்குவர். மூன்று சிறப்பியல் வைத்திய நிபுணர்களும் அடங்குவர். விபரம்....

* வைத்திய கலாநிதி அ. சிவபாதசுந்தரம்
* வைத்திய கலாநிதி எம்.கே. கணேசரட்ணம்
* வைத்திய கலாநிதி பரிமேலழகர்
* தலைமைத்தாதி திருமதி வடிவேலு
* தாதி திருமதி லீலாவதி
* தாதி திருமதி சிவபாக்கியம்
* தாதி ராமநாதன்
* வாகன ஓட்டுநர் சண்முகலிங்கம்
* தொலைபேசி இயக்குநர் கனகலிங்கம்
* கள மேற்பார்வையாளர் கிருஷ்ணராஜா
* கள மேற்பார்வையாளர் செல்வராஜா
* கோ.உருத்திரன்
* க.வேதாரணியம்
* இரத்தினராஜா
* மு.துரைராஜா
* மெ.வரதராஜா
* இரா.சுகுமார்
* க.சிவராஜா
* க.சிவலோகநாதன்
* சி.ஜெகநாதன்
* இரா.சுப்பிரமணியம்
* எஸ்.மார்க்கண்டு
* க.பீற்றர்


இன்று அந்த சிறுவன் ஒரு விடுதலைப் போராளி. எவைகள் எமது போராளிகளை உருவாக்குகின்றன். எவைகள் எமது விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்தும் என்பதற்கு இவை சான்றுகள்.

ஈழத்தமிழர் வாழ்வில் நடைபெற்ற இந்த துன்ப நிகழ்வுகளின் பதிவுகள் தொடரும்....!

இதே தினத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் எமது கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.

படங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMdBCEIMrtV4BxZwjX8ovOomYjqcVGtwJCW4qUUaEREGWHjpziGkVo_H37-StUb6QFzCOvjSiAE1FKV9rxxoWpCoRd1erpKMOJLaijnlMCg2tluyvxKJOr4MSlktiCT_8kItRDuQ/s320/6b00c_jaffnahospital87-2.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7-WlIVMWxFhL15TEZivxnPIezJYSw7RbThOqYRX-WGCV6QCIabMf4LtfO0JFlwkguMjcyYp6wY8mN4rD0833vpgJlKcmrNZBZNtilqbDaUJ4-aLpK5sOvJVOc1IqaFo_41BR5IQ/s320/08d25_jaffnahospital87-3.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_bGZzgVSYnZOxiBF8NnLu8YANTbu_7miK_0u9jQbGJlmOaPerzWSqR3lHlQZeL_iXH3KKHqY5MtQkXOHSPXdJpdnd_ydXwnY1DMcXLImF_GSN4rYkgN4EAS7b9EkJw7ylArWIpA/s320/8fe84_jaffnahospital87-1.ஜபக்

இதற்கு என்ன பதில் சொல்வது..?

52 comments:

  1. இவ்வளவு இன்னல்கள் அனுபவிக்கும் ஈழததமிழர்கள் காப்பாற்றப் படவும் அவர்களி நிம்மதியாக வாழவும் வழி செய்ய வேண்டும் என்பதுதானே ஒரு உணமையான தலைவனின் உள்ள விருப்பமாக இருக்க வேண்டும்?

    அதற்கு இந்திய அரசின் தலையீடு அவசியம் என்னும்போது,தமிழர்க்ளுக்காக போராடும் ஒரு தலைவன் என்ன் செய்ய வேண்டும்?

    இந்திய அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்.ராஜீவின் மரணம்(அது புலிகளால் நடந்திருக்கும் பட்சத்தில்) எங்கள் தவறுகளில் ஒன்று,அதற்கான சட்ட வழி விளைவுகளை எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைத்த பிறகு நாங்கள் சட்டத்தின் வழி சந்திக்கிறோம்' என் ஒரு அறிக்கை விட்டால் கூட நிலைமை மாறுவதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்றன.
    அப்படி ஒரு நிலையை எடுத்து புலிகள் இந்திய அரசை உள்ளிழுத்து ஈழப் பிரச்னை தீரும் பட்சத்தில் பிரபாகரன் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என உலகச் சமுதாயமே முன்னின்று முழங்கலாம்..

    அதையெல்லாம் செய்யத் தடுப்பது என்ன?

    இன்னும் தமிழக அரசியல்வாதிகளைத் தூண்டி விடுவதின் முலம் இந்திய அரசை ஈழப் பிரச்னையில் தலையிட வைக்க நிர்ப்பந்தப்படுத்த முடியும் எனப் புலிகள் நம்புவது அரசியல் முட்டாள்தனமாக இல்லை?

    இல்லை,இந்திய அரசு அவர்களுக்கான விரோதப் போக்கில்தான் இருக்கிறது,அவர்களிடம் இணக்கமாகப் போகும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை எனப் புலிகள் கருதினால் அவர்களுக்குத் தெரிந்த வழியில் போராட்டத்தைத் தொடர வேண்டியதுதான் அடுத்த வழி.

    இரண்டுக்கும் இடையில் தமிழக மக்களிடையே உண்ர்வுகளைத் தூண்டி விட்டு ஏதேனும் நடக்க வைக்கலாம் என அவர்கள் நம்புவதாகத் தோன்றுகிறது.

    அது அவர்களுக்கு மேலும் மேலும் பாதகங்களைத் தான் தோற்றுவிக்கும் என்பதுதான் உண்மை.

    சில காரியங்களை மேற்கொள்ள தார்மீகத் துணிவு வேண்டும்;அது புலிகளிடம் இல்லை.

    அவர்களிடம் நிரம்பியிருப்பது போர்வெறியும்,தனி நாட்டைத்தவிர வேறெதையும் ஏற்கக் கூடாது என்ற வறட்டுப் பிடிவாதமும்தான்.

    தனி ஈழம் நனவாக பிராக்டிலான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே தெரிகின்றன.

    இவ்வளவு போராட்டத்திற்குப் பின்னர் புலிகளும் பிரபாகரனும் வரலாற்றின் பக்கங்களில் தேய்ந்து மறைந்து மறக்கப்பட்டால் அது இந்த 30 வருட போராட்டத்தைக் காட்டிலும் சோகமானதும் அவலமானதுமாகம் இருக்கும் !

    ReplyDelete
  2. //நண்பர் கொழுவி விடாக்கொண்டராக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிட்டு அதில் எனது கருத்தையும் வெளியிட்ட பின்பும் இதோ அடுத்த பாகத்தையும் அனுப்பியுள்ளார்.
    //

    நீங்க விடாக்கொண்டராக ரெண்டு பதிவு போட்டீங்க இல்ல ? இப்ப படுங்க :))))))

    ReplyDelete
  3. ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் - பாகம் 2"-ஐ எதிர்பார்க்கிறேன்.. அனுப்பினால் நிச்சயம் இடுவேன்..//

    என்ற உங்கள் கருத்துக்கிணங்கவே

    ReplyDelete
  4. kozhuvi is a good editor.
    Noone said why Indian army had to shoot inside Jaffna hospital because "great warriors" were shooting at army from "Hospital".

    ReplyDelete
  5. வாசகன் ஸார் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

    ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட இந்தியா முனைந்து தலையிட பெரியதொரு தடைக்கல் தான்தான் என்பதை உணர்ந்து அதனை சட்ட ரீதியாக எதிர்கொண்டோ அல்லது இந்திய அரசைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பிரபாகரனும், புலிகளும் நடந்து கொண்டால்கூட இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிடுவதற்கான சூழல் நிச்சயம் ஏற்படும்.. அதை அவர்கள் உணரவே இல்லை.. உணரும்பட்சத்தில் அனைவருக்கும் நல்லதுதான்..

    தமிழக அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டு அவர்கள் மூலம் இந்திய அரசை வற்புறுத்துவதோ, நிர்ப்பந்திப்பதோ இனிமேல் நடவாது. காங்கிரஸ் போனால் பாரதிய ஜனதா வரும்.. நிச்சயம் பொடாவும் வரும்.. பின்பு புலி ஆதரவு எங்கிருந்து பேசுவார்கள்..?

    ReplyDelete
  6. ///செந்தழல் ரவி said...
    //நண்பர் கொழுவி விடாக்கொண்டராக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிட்டு அதில் எனது கருத்தையும் வெளியிட்ட பின்பும் இதோ அடுத்த பாகத்தையும் அனுப்பியுள்ளார்.//
    நீங்க விடாக்கொண்டராக ரெண்டு பதிவு போட்டீங்க இல்ல? இப்ப படுங்க:))))))///

    இப்ப சந்தோஷம்தான ராசா.. நல்லா இரு..

    உன் வாழ்த்துக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  7. //கொழுவி said...
    ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் - பாகம்-2ஐ எதிர்பார்க்கிறேன்.. அனுப்பினால் நிச்சயம் இடுவேன்..//
    என்ற உங்கள் கருத்துக்கிணங்கவே...//

    போச்சுடா.. முன்னாடியே வாயைக் கொடுத்திட்டேனா..?

    அது சரி கொழுவி ஸார்.. நான் முதல் பாகத்தில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லவே இல்லையே..

    அது உங்கட பிரச்சினை என்கிறீர்களோ..?

    ReplyDelete
  8. //வெத்து வேட்டு said...
    kozhuvi is a good editor. Noone said why Indian army had to shoot inside Jaffna hospital because "great warriors" were shooting at army from "Hospital".//

    வெத்துவேட்டு ஸார்.. தகவலுக்கு நன்றி..

    இப்படி ஆள் மாற்றி ஆள் ஏதோ ஒன்றை தங்களுக்கு சார்பாக மாற்றி, மாற்றி எழுதினால் எப்படி?

    எங்களைப் போன்ற அப்பாவி மக்கள் யாரை நம்புவது..? எதை நம்புவது..? இந்தக் குழப்பம் தீர்ந்தால்தான் எங்களுக்கும் உங்களை ஆதரிக்கலாமா.. வேண்டாமா என்கிற குழப்பமும் தீரும்..

    ReplyDelete
  9. //kozhuvi is a good editor.
    Noone said why Indian army had to shoot inside Jaffna hospital because "great warriors" were shooting at army from "Hospital".//

    பொய்யையும் பொருத்தமாய் சொல்ல வேண்டாமா ராசா...??

    வைத்திய சாலையில் இருந்து சூடுவந்தால் , முதலிலை நிலை எடுக்க வேண்டும்.. எடுத்த பிறகு எங்கை இருந்து சூடு வருகிறது என்பதை அவதானிக்க வேண்டும்.. பின்னர் அதை நோக்கி நகருவதுக்கான மறைவான பாதையை தெரிவு செய்ய வேண்டும்... பின்னர் பாதுகாப்பு சூடு வழங்கிய வாறோ இல்லை சுடாமலோ நகர்ந்து இலக்கை அழிக்க வேண்டும்... இதுதானையா இராணுவத்துக்கு கொடுக்க படும் தாக்குதல் அடிப்படை பயிற்ச்சியே...

    இதை விட்டு போட்டு யாரோ சுட்டாங்களாம் அதை நோக்கி நீங்கள் சுட்டதிலை 3 சிரேஸ்ர வைத்தியர்கள் நோயாளர் எல்லாம் இறந்து போனார்கள் எண்டு சொல்வது பலம் பொருந்திய ஒரு இராணூவத்தை இன்னும் கேவலப்படுத்துகிறது.... :)

    ReplyDelete
  10. இது வேண்டுமென்றே இந்திய ராணுவத்தின் மீது கூறப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு .
    எனக்கு நினைவு தெரிந்து விடுதலைப்புலிகள் அந்த மருத்துவமனையிலிரிந்து IPKF மீது தாக்குதல் நடத்தினார்கள் . இது போல் கோழைத்தனமான தாக்குதல் களால் ஏராளமான வீரர்களை IPKF இழந்தது !
    மக்களை கேடயமாகவும் , மருத்துவமனையை பதுங்கு குழிகளாகவும் பயன்படுத்திய , பயன்படுத்தி கொண்டிருக்கிற விடுதலை புலிகளை பற்றி நாம் எதிர் கேள்வி எழுப்பினால் அதற்க்கு எந்த புலி ஆதரவாளரும் பதில் கொடுக்க மாட்டேன்கிறார்களே !?

    ReplyDelete
  11. Lanka Tamil Tigers are brazen liars.
    And Koluvi and Vaiko are their bribe taking ''TAILS''.
    When Indian Army entered a ward in the hospital there was complete silence. All the patients and staff were frightened. They could not speak.
    Suddenly patients that were covered with white bed sheets pulled out AK47 rifles and simply fired blindly.
    Indian Army fought back ... many lost lives in cross fire.
    Koluvi, tell us the truth man ... you cannot tell the truth ... for if you do so ... you will be shot and killed within 24 hours.
    Is that it?

    ReplyDelete
  12. When Indian Army entered a ward in the hospital there was complete silence. All the patients and staff were frightened. They could not speak.
    Suddenly patients that were covered with white bed sheets pulled out AK47 rifles and simply fired blindly.
    Indian Army fought back ... many lost lives in cross fire.//

    Good screenplay
    எதையும் சினிமாத்தனமாகவே சிந்திக்க பழகிவிட்டீர்கள். :( வேறென்ன சொல்ல :)

    இப்ப என்ன சொல்கிறீர்கள்?
    புலிகள் சுட்டார்கள் இந்திய இராணுவமும் சுட்டது. அதில் மருத்துவர்களும் நோயாளிகளும் இறந்து விட்டனர்.

    அல்லது புலிகள் சுட்டனர். இந்திய இராணுவம் சுடவில்லை. மருத்துவர்களும் நோயாளிகளும் புலிகள் சுட்டு இறந்தனர்.

    அல்லது புலிகள் சுட்டனர். இந்திய இராணுவம் சுடவில்லை. மருத்துவர்களும் நோயாளிகளும் இறக்கவேயில்லை.

    அல்லது..
    புலிகள் சுட்டனர். இந்திய இராணுவம் இலங்கைக்கு போகவே இல்லை.

    ReplyDelete
  13. Koluvi, tell us the truth man ... you cannot tell the truth ... for if you do so ... you will be shot and killed within 24 hours.
    Is that it?//

    சுடமாட்டர்கள். உண்மையைச் சொன்னால் ஒரு வேளை சிறையில் அடைப்பார்கள். ஆனால் நான் தான் இந்தியாவில் இல்லையே.. :) அதனால் சிறையிலும் அடைக்க முடியாது. அந்த துணிவில்தான் உண்மையை சொல்கிறேன். :)

    ReplyDelete
  14. //இப்ப என்ன சொல்கிறீர்கள்?
    புலிகள் சுட்டார்கள் இந்திய இராணுவமும் சுட்டது. அதில் மருத்துவர்களும் நோயாளிகளும் இறந்து விட்டனர்.//

    இப்படித்தான் நடந்திருக்கும் என்று நானும் நினைக்கிறேன் கொழுவி..

    ReplyDelete
  15. //கொழுவி said...
    Koluvi, tell us the truth man ... you cannot tell the truth ... for if you do so ... you will be shot and killed within 24 hours. Is that it?//
    சுடமாட்டர்கள். உண்மையைச் சொன்னால் ஒரு வேளை சிறையில் அடைப்பார்கள். ஆனால் நான்தான் இந்தியாவில் இல்லையே..:) அதனால் சிறையிலும் அடைக்க முடியாது. அந்த துணிவில்தான் உண்மையை சொல்கிறேன்.:)//

    இங்கேயிருந்து சொன்னாலும் எதுவும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இந்திய மக்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்.. அதே சமயம் இந்திய அரசியல்வியாதிகள் ஆட்சி, அதிகாரத்திற்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள்.

    அதனால்தான் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக நடுத்தெருவில் நின்று வாதாட முடிகிறது.. கோஷம் எழுப்ப முடிகிறது..

    வேறு நாடாக இருந்தால் முடியுமா..?

    ReplyDelete
  16. ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோருக்கு.
    (இதனை பாகம் 3 என வெளியிட வேண்டாம். அதற்கு வேறு வரும்.)


    http://www.tchr.net/reports_commission_IPKF.htm

    ReplyDelete
  17. //கொழுவி said...
    ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோருக்கு.
    (இதனை பாகம் 3 என வெளியிட வேண்டாம். அதற்கு வேறு வரும்.)
    http://www.tchr.net/reports_commission_IPKF.htm//

    விட மாட்டீங்க போலிருக்கு..

    பரவாயில்லை.. நிறைய, நிறைய விஷயங்கள் வெளி வருமே.. தேவையானவைகள்தான் இவை.. வரவேற்கிறேன் கொழுவி..

    ReplyDelete
  18. இந்திய அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்//

    இப்படி புலிகள் கேட்பது இன்னமுமா உங்களுக்குத் தெரியவில்லை. புலிகள் தொடர்ச்சியாக தமிழக சஞ்சிகைகளுக்கு இவ்வாறான வேண்டுகோளை விடுக்கிறார்கள்.

    வாசன் -
    தனது நலன்களுக்காக கையிலெடுத்த இப்பிரச்சனையை இந்தியா தீர்க்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

    சில பல தவறுகளால் நமது இராணுவம் மோசமான கைங்கரியங்களில் ஈடுபட்டுவிட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம் என இந்திய அரசு அறிவித்தால் ஒரு வேளை புலிகளும் அவ்வாறு சொல்லகூடும்.

    ஏனெனில் 87 க்கு பிறகுதான் 91 வருகிறது :)

    ஏனெனில் அதுவரைக்கும் இந்திய இராணுவ கொடுமைகளுக்கு பதிலாக ரஜீவ் கொலையைதான் நாம் பதிலாக சொல்லுவோம். இந்தியா மன்னிப்பு கேட்டால் பிறகு ராஜீவ் கொலையை சொல்ல முடியாது. அதனால நாங்களும் மன்னிப்பு கேட்கத்தானே வேணும் ? என்ன நான் சொல்றது :)

    மன்னிப்பு கேட்ட பிறகு ரஜிவ் கொலைக்கு நீங்க சட்ட நடவடிக்கை எடுக்கிற அதே நேரம் 8000 பொதுமக்கள் கொலைக்காக நாமும் தனியாக சட்டநடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஒற்றுமையாக இருதரப்பும் சட்டநடவடிக்கைகளை எடுக்கும் சூழலை இந்தியாதான் தனது மன்னிப்பு கோரல் மூலமாக ஏற்படுத்தி தரவேண்டும்.

    ReplyDelete
  19. //கொழுவி said...
    இந்திய அரசுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்//
    இப்படி புலிகள் கேட்பது இன்னமுமா உங்களுக்குத் தெரியவில்லை. புலிகள் தொடர்ச்சியாக தமிழக சஞ்சிகைகளுக்கு இவ்வாறான வேண்டுகோளை விடுக்கிறார்கள்.//

    எதற்கு இந்த வேண்டுகோள்.. உங்கள் தலைவர் அவர் வழியிலேயே பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே.. எங்கள் தலைவரைக் கொன்ற பிறகு நாங்கள் ஏன் உங்கள் தலைவர் விஷயத்தில் தலையிட வேண்டும்..?

    ///வாசன் - தனது நலன்களுக்காக கையிலெடுத்த இப்பிரச்சனையை இந்தியா தீர்க்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?//
    சில பல தவறுகளால் நமது இராணுவம் மோசமான கைங்கரியங்களில் ஈடுபட்டுவிட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம் என இந்திய அரசு அறிவித்தால் ஒரு வேளை புலிகளும் அவ்வாறு சொல்லகூடும். ஏனெனில் 87 க்கு பிறகுதான் 91 வருகிறது:)
    ஏனெனில் அதுவரைக்கும் இந்திய இராணுவ கொடுமைகளுக்கு பதிலாக ரஜீவ் கொலையைதான் நாம் பதிலாக சொல்லுவோம். இந்தியா மன்னிப்பு கேட்டால் பிறகு ராஜீவ் கொலையை சொல்ல முடியாது. அதனால நாங்களும் மன்னிப்பு கேட்கத்தானே வேணும்? என்ன நான் சொல்றது:)
    மன்னிப்பு கேட்ட பிறகு ரஜிவ் கொலைக்கு நீங்க சட்ட நடவடிக்கை எடுக்கிற அதே நேரம், 8000 பொதுமக்கள் கொலைக்காக நாமும் தனியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஒற்றுமையாக இருதரப்பும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் சூழலை இந்தியாதான் தனது மன்னிப்பு கோரல் மூலமாக ஏற்படுத்தி தரவேண்டும்.//

    இந்த மன்னிப்பு கோரல் சம்பவம் நிச்சயம் எதிர்கால இந்தியத் தலைமையால் ஈழத்து மக்கள் முன் வைக்கும் நிலைமை கட்டாயம் வரும் என்று நான் நினைக்கிறேன்.

    அதேபோல் புலித் தலைமையையும் விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..

    இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு.

    ReplyDelete
  20. அன்றைக்கு எங்கள் சகோதரர்களுக்கு இடையிலான யுத்தம் . நீங்கள் வெளியேறுங்கள் என்று எங்களை சொன்னீர்கள் .
    இன்று என்ன ஆச்சு ?
    கோழைகளே !
    இன்று யுத்த நிறுத்தத்திற்கு எங்கள் உதவி உங்களுக்கு தேவைபடுகிறதா?
    நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் நாட்டு பாலிசி மேகர்ஸ் உங்களுக்கு செவிசாய்க்க போவதில்லை !
    வேண்டுமானால் வழக்கம் போல வேறு நாட்டிடம் உதவி கேட்டு கெஞ்சுங்கள் !
    தீவிரவாதத்திற்கு இனி எந்த நாடும் உதவி புரியாது என்ற உண்மையை முதலில் ஜீரநியுங்கள் !(பாகிஸ்தான் உட்பட )

    ReplyDelete
  21. நடேசனின் போர் நிறுத்த அறிவிப்பு
    அரசியல் தெரயாதவர்களுக்கு - புலிகளின் பலவீனம்!
    தெரிந்தவர்களுக்கு மகிந்தவின் பதி லை முன்னரே தெரிந்து வைத்த பொறி. இதன் மூலம் புலிகளின் யுத்தத்தை எதிர்காலத்தில் நியாயப்படுத்தும் அரசியல் நடவடிக்கை. புலிகளின் தாக்குதல்களின் போது யாரேனும் போர் நிறுத்தம் ஒன்றை கேட்டுவிடக் கூடாதென்பதற்கான முன் ஏற்பாடு.

    இப்போதைக்கு இத்துடன் நிறுத்தி எதிர்பார்த்த இலக்குகள் நிறைவடைந்ததும் இவை பற்றி மேலும் ஆராய்வோம்.

    அதுவரை தொடர்ந்து போர்நிறுத்தத்திற்கான கோரிக்கையை தொடர்ந்து கொண்டிருப்போம். ஒருபோதும் சிங்கள அரசுகள் உடன்படாது என தெரிந்து கொண்டே..

    ReplyDelete
  22. /நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் நாட்டு பாலிசி மேகர்ஸ் உங்களுக்கு செவிசாய்க்க போவதில்லை !
    வேண்டுமானால் வழக்கம் போல வேறு நாட்டிடம் உதவி கேட்டு கெஞ்சுங்கள் ! /

    Where were you when LTTE were pushing SL Army in late 90's? Your cowardly indian government helped srilanka when SL government went and begged india to help. The pauper indian govenment poured unlimited loan to SL government and also helped with military help. Now you shout loud.

    If LTTE turned the table at this point, you would crawl again. funny you talk big. Your congress has more leaders in tamilnadu than its followers. No power. How come you and few clowns here try to portary as you are the one and only representatives of Tamilnadu.

    ReplyDelete
  23. தீவிரவாதத்திற்கு இனி எந்த நாடும் உதவி புரியாது என்ற உண்மையை முதலில் ஜீரநியுங்கள் !(பாகிஸ்தான் உட்பட )//

    அப்போ இலங்கைக்கு உதவுகிறது எந்த வகையில் :):)

    ஒருவேளை தீவிரவாத அரசுகளுக்கு உதவுவோம் என்று சொல்ல வருகிறீர்களா :)

    ReplyDelete
  24. //Where were you when LTTE were pushing SL Army in late 90's?//

    வீராதி வீரர்களே !,
    அப்புறம் என் போர் நிறுத்தம் வேண்டும் என்று கெஞ்சுகிறீர்கள் .
    இதற்க்கு முந்தைய போர் நிறுத்தத்தை முதலில் மீறியது நீங்கள் தான் என்ற உண்மையை அனைவரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பா ?

    ReplyDelete
  25. //ஒருவேளை தீவிரவாத அரசுகளுக்கு உதவுவோம் என்று சொல்ல வருகிறீர்களா//

    தீவிரவாதிகளுக்கு தீவிரவாதத்தில் பதில் சொன்னால் தான் புரியும் .

    ReplyDelete
  26. சரிதான்
    தீவிரவாதத்தால் பதில் சொல்பவர்களுக்கும் தீவரவாதம் தான் சரியான பதில்.

    ஐயா சிறிலங்கா ஒருபோதும் போர்நிறுத்தத்துக்கு சம்மதிக்காது என்பதை தெரிந்து கொண்டு -
    இந்தியா ஒருபோதும் போர் நிறுத்த சொல்லி சொல்லாது என்பதை புரிந்து கொண்டு

    கேட்கிற இந்த போர் நிறுத்த கோரிக்கைக்கு வேறு அரசியல் பரிணாமங்கள் உண்டு. அவை என்ன என்பதை சிற்றறிவு கொண்டு விளங்க முற்படுக.

    நான் விளக்குவதென்றால் நாளாகும். பொறுத்தருள்க.

    ----
    இனியொருதடவை இந்தியாவோ - வேறு நாடுகளோ - போரை நிறுத்துங்கள் என புலிகளிடம் கேட்கமுடியாத நிலையை புலிகள் உருவாக்குகிறார்கள் என்பதை கூட புரிந்து கொள்ள முடியவில்லையெனில்... ?

    ReplyDelete
  27. நன்றி உண்மைத்தமிழன். உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே உங்கள் மூலமாக செய்திகள் அனைத்து உறவுகளுக்கும் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    இது வேண்டுமென்றே இந்திய ராணுவத்தின் மீது கூறப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு .
    எனக்கு நினைவு தெரிந்து விடுதலைப்புலிகள் அந்த மருத்துவமனையிலிரிந்து IPKF மீது தாக்குதல் நடத்தினார்கள் . இது போல் கோழைத்தனமான தாக்குதல் களால் ஏராளமான வீரர்களை IPKF இழந்தது !
    மக்களை கேடயமாகவும் , மருத்துவமனையை பதுங்கு குழிகளாகவும் பயன்படுத்திய , பயன்படுத்தி கொண்டிருக்கிற விடுதலை புலிகளை பற்றி நாம் எதிர் கேள்வி எழுப்பினால் அதற்க்கு எந்த புலி ஆதரவாளரும் பதில் கொடுக்க மாட்டேன்கிறார்களே !?
    ..../
    சரி வைத்தியசாலைக்குள் இருந்து சுடுகின்ற விடுதலைப்புலிகளைத் தேடித்தேடி சுடுங்களேன். ஏன் அப்பாவிப் பொதுமக்களை ஏன் பொசுக்குகிறீர்கள். ஒரு விடுதலைப் புலிவீரனை சுடும் போது அதில் அகப்பட்டு பொது மக்கள் இறந்தால் ஓரளவு உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லையே.
    இதில் எழுதப்பட்டது முற்றிலும் உண்மை. விடுதலைப்புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அப்பாவிப் பெண்களை கற்பழிப்பார்களா? காக்கும் இராணுவமா? காமுக இராணுவமா?
    ஐயா! உங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை கொன்றிருக்கிறது. வீதி வீதியாக என் கண்முன்னாலேயே வாகனத்தில் கட்டி வீதி வீதியாக இழுத்து சென்றனர். நாம் அதைப்பற்றி கதைக்கவில்லையே.
    அப்பாவிகள் என்ன கேட்டார்கள்? உங்களுக்கு தெரியுமா? அமைதிப்படை என்ற போர்வையில் வந்து காலடி வைக்கும் போது ஈழமக்கள் நிறைகுடம் வைத்தல்லவா வரவேற்றார்கள். அதற்கான கைம்மாறு இதுதானா?

    ReplyDelete
  28. //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    அன்றைக்கு எங்கள் சகோதரர்களுக்கு இடையிலான யுத்தம் . நீங்கள் வெளியேறுங்கள் என்று எங்களை சொன்னீர்கள். இன்று என்ன ஆச்சு?
    கோழைகளே! இன்று யுத்த நிறுத்தத்திற்கு எங்கள் உதவி உங்களுக்கு தேவைபடுகிறதா?
    நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் நாட்டு பாலிசி மேகர்ஸ் உங்களுக்கு செவிசாய்க்க போவதில்லை!
    வேண்டுமானால் வழக்கம் போல வேறு நாட்டிடம் உதவி கேட்டு கெஞ்சுங்கள்!
    தீவிரவாதத்திற்கு இனி எந்த நாடும் உதவி புரியாது என்ற உண்மையை முதலில் ஜீரநியுங்கள்!(பாகிஸ்தான் உட்பட)//

    பாஸ்.. பாகிஸ்தானும், சீனாவும் வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவும் அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.. ஆனால் கொடுப்பதுதான் நேருக்கு மாறான ஆளிடம்.. பிரச்சினையே இதுதான்..

    தார்மீக ரீதியாக நம்மைத் தலையிட வைக்க புலிகள் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.. புலி ஆதரவாளர்கள் அதனை மட்டும் ஏற்க மறுக்கிறார்கள்.

    ReplyDelete
  29. //கொழுவி said...
    நடேசனின் போர் நிறுத்த அறிவிப்பு
    அரசியல் தெரயாதவர்களுக்கு - புலிகளின் பலவீனம்!
    தெரிந்தவர்களுக்கு மகிந்தவின் பதிலை முன்னரே தெரிந்து வைத்த பொறி. இதன் மூலம் புலிகளின் யுத்தத்தை எதிர்காலத்தில் நியாயப்படுத்தும் அரசியல் நடவடிக்கை. புலிகளின் தாக்குதல்களின் போது யாரேனும் போர் நிறுத்தம் ஒன்றை கேட்டுவிடக் கூடாதென்பதற்கான முன் ஏற்பாடு.
    இப்போதைக்கு இத்துடன் நிறுத்தி, எதிர்பார்த்த இலக்குகள் நிறைவடைந்ததும் இவை பற்றி மேலும் ஆராய்வோம்.
    அதுவரை தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான கோரிக்கையை தொடர்ந்து கொண்டிருப்போம். ஒருபோதும் சிங்கள அரசுகள் உடன்படாது என தெரிந்து கொண்டே..//

    கொழுவி நீரே எழுதிவிட்டீர்.. இதெல்லாம் சும்மா ராஜதந்திரம் என்று.. பின்பு நாங்கள் எதற்கு இதனை சீரியஸாக எடுத்து உயிரைக் கொடுத்து உண்ணாவிரதம் இருந்து தொண்டை கிழிய கத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தி, எங்களது குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு ஜெயிலுக்குப் போய்..

    மொத்தத்தில் எங்களைப் போன்ற பைத்தியங்கள் உங்களுக்கு நிச்சயம் வேறு எந்த நாட்டிலும் கிடைக்க மாட்டார்கள்.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  30. //kanaga said...
    /நீங்கள் என்னதான் மன்றாடினாலும் எங்கள் நாட்டு பாலிசி மேகர்ஸ் உங்களுக்கு செவிசாய்க்க போவதில்லை! வேண்டுமானால் வழக்கம் போல வேறு நாட்டிடம் உதவி கேட்டு கெஞ்சுங்கள் ! /
    Where were you when LTTE were pushing SL Army in late 90's? Your cowardly indian government helped srilanka when SL government went and begged india to help. The pauper indian govenment poured unlimited loan to SL government and also helped with military help. Now you shout loud.
    If LTTE turned the table at this point, you would crawl again. funny you talk big. Your congress has more leaders in tamilnadu than its followers. No power. How come you and few clowns here try to portary as you are the one and only representatives of Tamilnadu.//

    Kanaka What is this..? Pig என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள்.. பிடிக்கவில்லையெனில் எப்படி வேண்டுமானாலும் பேசுவதா..?

    எங்கள் நாட்டவருக்கு இருக்கும் புலிகள் மீதான நம்பக்கையின்மைதான் இதற்கெல்லாம் ஒரே காரணம்.. வேறு ஒன்றும் சொல்ல முடியாது..

    ReplyDelete
  31. //கொழுவி said...
    தீவிரவாதத்திற்கு இனி எந்த நாடும் உதவி புரியாது என்ற உண்மையை முதலில் ஜீரநியுங்கள் !(பாகிஸ்தான் உட்பட)//
    அப்போ இலங்கைக்கு உதவுகிறது எந்த வகையில்:):) ஒரு வேளை தீவிரவாத அரசுகளுக்கு உதவுவோம் என்று சொல்ல வருகிறீர்களா:)//

    அரசுகள் என்ற ரீதியில்..

    விடுதலைப்புலிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசு அமைப்பு அல்லவே.. ஒரு நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தவிர மற்ற துப்பாக்கி ஏந்தும் அமைப்புகளுக்கு தீவிரவாதி அமைப்புகள் என்றுதான் பெயர்.. இது எல்லாக் கண்டத்திலும் ஒன்றுதான்..

    ReplyDelete
  32. ///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    //Where were you when LTTE were pushing SL Army in late 90's?//
    வீராதி வீரர்களே!, அப்புறம் என் போர் நிறுத்தம் வேண்டும் என்று கெஞ்சுகிறீர்கள். இதற்க்கு முந்தைய போர் நிறுத்தத்தை முதலில் மீறியது நீங்கள்தான் என்ற உண்மையை அனைவரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பா?///

    இல்லை பாஸ்.. போர் நிறுத்த மீறலில் இலங்கை ராணுவத்திற்கு்ம் பெரும் பங்கு உண்டு. புலிகளை மட்டுமே நாம் பலிகடா ஆக்கக் கூடாது.

    ReplyDelete
  33. ///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    //ஒரு வேளை தீவிரவாத அரசுகளுக்கு உதவுவோம் என்று சொல்ல வருகிறீர்களா//
    தீவிரவாதிகளுக்கு தீவிரவாதத்தில் பதில் சொன்னால்தான் புரியும்.///

    இது தகுந்த பதில் அல்ல.. அரசு அமைப்புகளும், தீவிரவாத அமைப்புகளும் வேறு.. வேறு..

    ReplyDelete
  34. //கொழுவி said...
    சரிதான். தீவிரவாதத்தால் பதில் சொல்பவர்களுக்கும் தீவரவாதம்தான் சரியான பதில்.
    ஐயா சிறிலங்கா ஒரு போதும் போர்நிறுத்தத்துக்கு சம்மதிக்காது என்பதை தெரிந்து கொண்டு -
    இந்தியா ஒருபோதும் போர் நிறுத்த சொல்லி சொல்லாது என்பதை புரிந்து கொண்டு, கேட்கிற இந்த போர் நிறுத்த கோரிக்கைக்கு வேறு அரசியல் பரிணாமங்கள் உண்டு. அவை என்ன என்பதை சிற்றறிவு கொண்டு விளங்க முற்படுக.
    நான் விளக்குவதென்றால் நாளாகும். பொறுத்தருள்க. இனியொரு தடவை இந்தியாவோ - வேறு நாடுகளோ - போரை நிறுத்துங்கள் என புலிகளிடம் கேட்கமுடியாத நிலையை புலிகள் உருவாக்குகிறார்கள் என்பதைகூட புரிந்து கொள்ள முடியவில்லையெனில்...?//

    ஆக மொத்தத்தில் உயிருடன் இருக்கும் கடைசி ஈழத் தமிழனையும் சாகக் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் உயிருடன் இருந்து வெறும் சுடுகாட்டிற்கு தேசியத் தலைவராக ஆகப் போகிறார் உமது தலைவர்.. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  35. /வீராதி வீரர்களே!, அப்புறம் என் போர் நிறுத்தம் வேண்டும் என்று கெஞ்சுகிறீர்கள். இதற்க்கு முந்தைய போர் நிறுத்தத்தை முதலில் மீறியது நீங்கள்தான் என்ற உண்மையை அனைவரும் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பா?/

    Who begged? LTTE? Why don't you read think in the right sense? LTTE maintains its word to Norway. It does the defensive war. Who broke out? Can you show where LTTE begged for a ceasefire?

    ReplyDelete
  36. //தமிழ் விரும்பி said...
    நன்றி உண்மைத்தமிழன். உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே உங்கள் மூலமாக செய்திகள் அனைத்து உறவுகளுக்கும் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    நன்றி தமிழ்.. கருத்துப் பரிமாற்றத்திற்கு எனது தளத்தை திறந்து வைத்துள்ளேன்..

    ///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    இது வேண்டுமென்றே இந்திய ராணுவத்தின் மீது கூறப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு .
    எனக்கு நினைவு தெரிந்து விடுதலைப்புலிகள் அந்த மருத்துவமனையிலிரிந்து IPKF மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போல் கோழைத்தனமான தாக்குதல்களால் ஏராளமான வீரர்களை IPKF இழந்தது !
    மக்களை கேடயமாகவும், மருத்துவமனையை பதுங்கு குழிகளாகவும் பயன்படுத்திய, பயன்படுத்தி கொண்டிருக்கிற விடுதலை புலிகளை பற்றி நாம் எதிர் கேள்வி எழுப்பினால் அதற்க்கு எந்த புலி ஆதரவாளரும் பதில் கொடுக்க மாட்டேன்கிறார்களே?//
    சரி வைத்தியசாலைக்குள் இருந்து சுடுகின்ற விடுதலைப்புலிகளைத் தேடித் தேடி சுடுங்களேன். அப்பாவிப் பொதுமக்களை ஏன் பொசுக்குகிறீர்கள். ஒரு விடுதலைப் புலி வீரனை சுடும் போது அதில் அகப்பட்டு பொது மக்கள் இறந்தால் ஓரளவு உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லையே.
    இதில் எழுதப்பட்டது முற்றிலும் உண்மை. விடுதலைப்புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அப்பாவிப் பெண்களை கற்பழிப்பார்களா? காக்கும் இராணுவமா? காமுக இராணுவமா?
    ஐயா! உங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை கொன்றிருக்கிறது. வீதி வீதியாக என் கண்முன்னாலேயே வாகனத்தில் கட்டி வீதி வீதியாக இழுத்து சென்றனர். நாம் அதைப்பற்றி கதைக்கவில்லையே.
    அப்பாவிகள் என்ன கேட்டார்கள்? உங்களுக்கு தெரியுமா? அமைதிப்படை என்ற போர்வையில் வந்து காலடி வைக்கும் போது ஈழமக்கள் நிறைகுடம் வைத்தல்லவா வரவேற்றார்கள். அதற்கான கைம்மாறு இதுதானா?///

    தமிழ் ஸார்.. தவறுகள் இரண்டு பக்கமும் அளவுக்கு மீறி செய்யப்பட்டிருக்கின்றன.. அதன் விளைவுகள் அவை.. வருத்தப்படுகிறோம்.. வேதனைப்படுகிறோம்..

    அந்த ஒரே காரணத்திற்காகத்தான் மறுபடியும் நமது தொப்புள்கொடி சொந்தங்களான ஈழத்துப் பிரச்சினையில் தலையிட மத்திய அரசு யோசிக்கிறது.. தயங்குகிறது.. அவரவர்க்கு அவரவர் பாடு..

    ReplyDelete
  37. //benzaloy said...
    Lanka Tamil Tigers are brazen liars. And Koluvi and Vaiko are their bribe taking ''TAILS''.
    When Indian Army entered a ward in the hospital there was complete silence. All the patients and staff were frightened. They could not speak. Suddenly patients that were covered with white bed sheets pulled out AK 47 rifles and simply fired blindly. Indian Army fought back ... many lost lives in cross fire. Koluvi, tell us the truth man ... you cannot tell the truth ... for if you do so ... you will be shot and killed within 24 hours.
    Is that it?//

    மோதல் தொடங்காமல் மருத்துவமனை வார்டுக்குள் புகுந்து சுடுவதற்கு இந்திய அமைதிக் காப்புப் படைத் தலைமைக்கு பைத்தியம் பிடித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.. புலிகள் உள்ளேயிருந்து சண்டையைத் துவக்கியிருக்க வேண்டும் என்றுதான் நானும் நம்புகிறேன்..

    ReplyDelete
  38. ஆக மொத்தத்தில் உயிருடன் இருக்கும் கடைசி ஈழத் தமிழனையும் சாகக் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் உயிருடன் இருந்து வெறும் சுடுகாட்டிற்கு தேசியத் தலைவராக ஆகப் போகிறார் உமது தலைவர்.. வாழ்க வளமுடன்..//

    புலிகளின் யுத்தம் தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களின் சாதக பாதக விடையங்களும் ஆராயப் பட வேண்டியவையே..

    ஆனால் - ஏதோ புலிகள் பலவீனமடைந்து விட்டதால் தான் இந்த வேண்டுகோள் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள் - இல்லை அப்படியில்லை என காரணங்கள் சொல்லபோனால் - மறுவளத்தால்.. அப்ப புலிகள் சண்டை பிடித்து மக்களை கொல்ல போகிறார்கள் என்கிறீர்கள் - இல்லை அப்படி இல்லையென்று காரணங்கள் சொன்னால் திரும்பவும் மரமேறிய வேதாளம் போல அப்போ புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்கிறீர்கள்.

    நல்லாயிருக்கிறது இந்த விளையாட்டு.

    தயவு செய்து ஒரு விடயத்தை புரியுங்கள்.
    புலிகளும் வரலாற்று தவறுகள் செய்தார்கள். இந்திய அரசும் அதேமாதிரியான அதற்கு சற்றேனும் குறையாத தவறுகளை செய்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இப்போதுஇ ரண்டு தெரிவுகள் உண்டு.

    1. இரண்டு தரப்பும் நடந்ததை மறந்து இணைதல்.

    2. இரண்டு தரப்பும் காலம்காலமாக நடந்ததை மறக்காது வன்மம் பேணியிருத்தல்.

    நாம் முதற்தெரிவை விரும்புகிறோம். நீங்கள் இல்லை இரண்டாவதுதான் என்கிறீர்கள். சரி!

    ஆக - ரஜீவோடு செத்த 13 உயிர்கள் குறித்தும் நீங்கள் பேசும் போது ராஜிவால் செத்த 8000 உயிர்கள் குறித்து நாமும் பேச வேண்டும். இதில் எத்தடவையும் நான் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட புலிகள் பற்றி பேச வில்லை. பேசப் போவதும் இல்லை.

    புலிகள் செய்தது மோசமான செயல். இந்தியா செய்தது ஏதோ அப்பிடியிப்பிடி வழமையா நடக்கிற செயல் என கடந்து நீங்கள் செல்வதை அனுமதிக்க முடியாது.

    அரசமைப்பு வேறு அவ்வாறில்லாத அமைப்பு வேறு என நீங்கள் நிறுவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு நிறுவின் அதைத்தான் அறம் அற்ற செயல் என்கிறோம். அவ்வாறு நீங்கள் நிறுவுவது எந்த ஒரு பயங்கர வாதமும் அரச முகமூடியால் மறைக்கப் பட்டால் அது அங்கீகரிக்கப் படும் என்ற தவறான அருவருக்கத்தக்க வாதத்தை முன்வைக்கிறது.

    ஒரு விவாதத்திற்காக இதே அளவு கோலில் வைத்து பார்த்தால் நாளை புலிகளும் தேசம் அமைத்து ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசானால் முன்னர் அவர்களை தீவிர வாதிகள் எனச் சொன்ன இந்தியா அவர்களுடனும் கை குலுக்கும் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்வதைப் போலானது.

    தீவிரவாதம் எங்கிருந்தாலும் கை குலுக்க முடியாதென சொல்லுங்கள். ஓகே..
    அதை விடுத்து தீவிரவாதம் எங்கிருந்தாலும் அரவணைக்க முடியாது. என உரத்து சொல்லி விட்டு ஒலி வாங்கியை நிறுத்தி விட்டு - அரச தீவிரவாதத்துக்கு மட்டும் சிறப்பு சலுகை என்று சொல்வதை போன்றது. அதை தானா இந்தியா செய்கிறது.?

    அடுத்தது - யாழ்பாணத்தில் ஆஸ்பத்திரியில் புலிகள் தாக்கிய கதை குறித்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தாம் அதீத அச்சத்தில் அதனை செய்து விட்டதாக சொன்னது குறித்து அனுப்புகிறேன்.

    அதை விட கொக்குவிலில் பிரம்படி எனும் இடத்தில் 40 பொதுமக்கள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டு டாங்கியால் ஏற்றி நெரித்து கொல்லப் பட்ட சம்பவத்தை பகிர இருக்கிறேன்.

    அந்த அளவிற்கு இந்திய இராணுவத்திற்கு பைத்தியம் பிடிக்காது. ஆகவே அதற்கும் ஒரு காரணம் இருக்கலாம் என நீங்கள் சொல்ல இருக்கும் காரணத்தை இப்பொழுதே யோசித்து வைக்கவும். சில தெரிவுகள் தருகிறேன்.

    1. புலிகள் பொதுமக்களை மேலே படுக்க விட்டு கீழே படுத்திருந்து இராணுவத்தினரை தாக்கினார்கள். புலிகளை டாங்கியால் நெரித்த போது மக்களும் மாண்டனர்.

    2. 40 புலிகள் படுத்திருந்து இராணுவத்தினரை தாக்கினர். அவர்கள இராணுவம் நெரித்தது.

    3. 40 பொதுமக்களை புலிகள் நெரித்து கொன்றனர். இந்திய இராணுவத்திடம் டாங்கிகளே இல்லை.

    ReplyDelete
  39. புலிகள் உள்ளேயிருந்து சண்டையைத் துவக்கியிருக்க வேண்டும் என்றுதான் நானும் நம்புகிறேன்..//

    அண்ணை நம்புவது எதுவும் நடந்திருக்க வேண்டுமென்றில்லை. இந்த நம்பிக்கையென்பது இந்தியா மீதான உங்களது தேச பக்தி.

    ஆனாலும் வரலாறு எப்போதும் நம்பிக்கைகளுக்குள் கட்டுண்டதல்ல!

    ரஜனி திரணகம எனும் ஒரு யாழ்பாண பல்கலைக் கழக மாணவி. அவர் புலிகளின் சகல செயற்பாடுகளோடும் அவர்களது நடவடிக்கைகளோடும் முரண்பட்டு நின்றார். அவர் பின்னாளில் புலிகளால் சுட்டு கொல்லப் பட்டார். இல்லை வேறு குழுவால் சுடப்பட்டார் எனும் கதைகளும் உண்டு. ஆனால் பொதுவாக அவர் புலிகளால் கொல்லப்பட்டார் என்பதே நம்பப்படுகிறது. புலிகள் மீதான அவரது விமர்சனத்தை அதற்கு காரணமாய் கூறுகின்றனர்.

    அது வேறு விடயம். அதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால் -
    கொழுவி தேசியத் தலைவர் அனுதாபி - அதனால் அவர் சொல்வதை நம்ப முடியாது என நீங்கள் கருதுகிறீர்கள். சரி

    ஆனால் புலிகளோடு முரண்பட்டவர் - புலிகளால் கொல்லப் பட்டவர் - தனது முறிந்த பனை நூலில் யாழ்பாண ஆஸ்பத்திரி சம்பவம் குறித்து எழுதியிருக்கிறார்.
    ஆக அவர் புலிகளுக்கு சார்பாக வேண்டுமென்றே இட்டுகட்டி எழுதியிருக்க மாட்டாரல்லவா?

    ----------
    யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

    அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர்.

    பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது.
    "ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை"
    என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.

    இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

    ReplyDelete
  40. ///கொழுவி said...
    ஆக மொத்தத்தில் உயிருடன் இருக்கும் கடைசி ஈழத் தமிழனையும் சாகக் கொடுத்துவிட்டுத் தான் மட்டும் உயிருடன் இருந்து வெறும் சுடுகாட்டிற்கு தேசியத் தலைவராக ஆகப் போகிறார் உமது தலைவர்.. வாழ்க வளமுடன்..//
    புலிகளின் யுத்தம் தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களின் சாதக பாதக விடையங்களும் ஆராயப்பட வேண்டியவையே..
    ஆனால் - ஏதோ புலிகள் பலவீனமடைந்து விட்டதால்தான் இந்த வேண்டுகோள் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.//

    புலிகள் ஜெயிப்பதும், பின்பு தோற்பதும், பின்பு ஜெயிப்பதுமாக பரமபத விளையாட்டுதானே அங்கே நடந்து கொண்டிருக்கிறது.. ஆனாலும் ஒவ்வொரு தமிழனையும் சாவுக்குக் கொடுக்கிற அந்த யுத்தத்தை பிரபாகரன் நிறுத்தினால் பலன் நமது தமிழ்ச் சமூகத்திற்குத்தான்.. விலை மதிக்க முடியாத தமிழனின் உயிர்தான் ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருக்கிறது. அதை உங்களது தலைவரால் மீட்டுத் தர முடியுமா..?

    //புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று சொல்கிறீர்கள் - இல்லை.. அப்படியில்லை என காரணங்கள் சொல்லபோனால் - மறுவளத்தால்.. அப்ப புலிகள் சண்டை பிடித்து மக்களை கொல்ல போகிறார்கள் என்கிறீர்கள் - இல்லை அப்படி இல்லையென்று காரணங்கள் சொன்னால் திரும்பவும் மரமேறிய வேதாளம் போல அப்போ புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்கிறீர்கள். நல்லாயிருக்கிறது இந்த விளையாட்டு.//

    புலிகள் இப்போதைக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் சற்று பின் வாங்கியிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்..

    //தயவு செய்து ஒரு விடயத்தை புரியுங்கள். புலிகளும் வரலாற்று தவறுகள் செய்தார்கள். இந்திய அரசும் அதே மாதிரியான அதற்கு சற்றேனும் குறையாத தவறுகளை செய்திருக்கிறார்கள்.//

    இதுதான் வரலாற்று உண்மை.. மறுக்க முடியாத வாதம்.

    //இந்த நிலையில் இப்போது இரண்டு தெரிவுகள் உண்டு.
    1. இரண்டு தரப்பும் நடந்ததை மறந்து இணைதல்.
    2. இரண்டு தரப்பும் காலம் காலமாக நடந்ததை மறக்காது வன்மம் பேணியிருத்தல்.
    நாம் முதற் தெரிவை விரும்புகிறோம். நீங்கள் இல்லை இரண்டாவதுதான் என்கிறீர்கள்.சரி!//

    இல்லை.. நானும் முதல் தெரிவைத்தான் விரும்புகிறேன்.. நீங்கள் விரும்பும் காலக்கட்டத்தில் சிங்கள அரசு விரும்ப மறுக்கிறது. சிங்கள அரசு விரும்பும் காலக்கட்டத்தில் உங்கட புலிகள் விரும்ப மறுக்கிறார்கள்..

    //ஆக - ரஜீவோடு செத்த 13 உயிர்கள் குறித்தும் நீங்கள் பேசும்போது ராஜிவால் செத்த 8000 உயிர்கள் குறித்து நாமும் பேச வேண்டும்.//

    நிச்சயமாகப் பேசலாம்.. பேசுவதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.

    //இதில் எத்தடவையும் நான் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட புலிகள் பற்றி பேசவில்லை. பேசப் போவதும் இல்லை.//

    அப்படியானால் அமைதி காப்புப் படையினர் இழந்த 1500 இந்திய ராணுவத்தினர் பற்றி நாங்களும் பேசவில்லை.

    //புலிகள் செய்தது மோசமான செயல். இந்தியா செய்தது ஏதோ அப்பிடியிப்பிடி வழமையா நடக்கிற செயல் என கடந்து நீங்கள் செல்வதை அனுமதிக்க முடியாது.//

    இல்லை.. நான் அப்படிச் சொல்லவில்லை.. நடந்தவிட்ட நிகழ்வுகள் ஏன் அன்றைக்கு அப்படி நடந்தன என்பதனை பொதுவாகச் சொன்னேன்.. அவ்வளவுதான்.. என் கருத்துப்படி புலிகள் எதிர்க்கிறார்கள் என்பது தெரிந்தவுடனேயே அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டு அமைதி காப்புப் படை நாடு திரும்பியிருக்கலாம்..

    //அரசமைப்பு வேறு அவ்வாறில்லாத அமைப்பு வேறு என நீங்கள் நிறுவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு நிறுவின் அதைத்தான் அறம் அற்ற செயல் என்கிறோம். அவ்வாறு நீங்கள் நிறுவுவது எந்த ஒரு பயங்கரவாதமும் அரச முகமூடியால் மறைக்கப்பட்டால் அது அங்கீகரிக்கப்படும் என்ற தவறான அருவருக்கத்தக்க வாதத்தை முன்வைக்கிறது.//

    நான் உலகத்தோடு பொருந்திப் போய்தான் இதனைச் சொல்கிறேன். இன்றைய தேதியில் அனைத்து நாடுகளிலுமே இது போன்ற பிரச்சினைகளும், ஆயுதம் தாங்கிய குழுக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    அவர்களை ஜனநாயக ரீதியாக போராடத்தான் ஐ.நா.சொல்கிறது. ஆயுதம் தாங்கச் சொல்லவில்லை. ஆயுதக் குழுக்களுக்கு பரிந்து பேச ஆட்களே முன் வராத நிலையில் நாடுகளா வரப் போகின்றன. இதுதான் சர்வதேசிய அளவுக்கு அரசுகளின் கவனத்தையும்,ஆதரவையும் நம்மால் பெற முடியாமைக்கு முதல் காரணம்.

    //ஒரு விவாதத்திற்காக இதே அளவுகோலில் வைத்து பார்த்தால் நாளை புலிகளும் தேசம் அமைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசானால் முன்னர் அவர்களை தீவிரவாதிகள் எனச் சொன்ன இந்தியா அவர்களுடனும் கை குலுக்கும் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்வதைப் போலானது.//

    நிச்சயமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. வேறு வழியில்லை..

    //தீவிரவாதம் எங்கிருந்தாலும் கை குலுக்க முடியாதென சொல்லுங்கள். ஓகே.. அதை விடுத்து தீவிரவாதம் எங்கிருந்தாலும் அரவணைக்க முடியாது. என உரத்து சொல்லி விட்டு ஒலி வாங்கியை நிறுத்தி விட்டு - அரச தீவிரவாதத்துக்கு மட்டும் சிறப்பு சலுகை என்று சொல்வதை போன்றது. அதைதானா இந்தியா செய்கிறது?//

    அரசத் தீவிரவாதத்தை இந்திய அரசியல்வியாதிகள் அனுமதிப்பது அவர்களுடைய சுயநலனுக்காக.. நான் பொறுப்பில் இருந்தால் நிச்சயம் இதனை செய்யமாட்டேன். சீனா, பாகிஸ்தான், அமெரி்ககா,இஸ்ரேல் என யார் ஆயுதங்கள் கொடுத்தாலும் கவலையில்லை என்றுதான் சொல்லுவேன்..

    //அடுத்தது - யாழ்பாணத்தில் ஆஸ்பத்திரியில் புலிகள் தாக்கிய கதை குறித்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தாம் அதீத அச்சத்தில் அதனை செய்து விட்டதாக சொன்னது குறித்து அனுப்புகிறேன். அதை விட கொக்குவிலில் பிரம்படி எனும் இடத்தில் 40 பொதுமக்கள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டு டாங்கியால் ஏற்றி நெரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை பகிர இருக்கிறேன்.
    அந்த அளவிற்கு இந்திய இராணுவத்திற்கு பைத்தியம் பிடிக்காது. ஆகவே அதற்கும் ஒரு காரணம் இருக்கலாம் என நீங்கள் சொல்ல இருக்கும் காரணத்தை இப்பொழுதே யோசித்து வைக்கவும். சில தெரிவுகள் தருகிறேன்.
    1. புலிகள் பொதுமக்களை மேலே படுக்க விட்டு கீழே படுத்திருந்து இராணுவத்தினரை தாக்கினார்கள். புலிகளை டாங்கியால் நெரித்த போது மக்களும் மாண்டனர்.
    2. 40 புலிகள் படுத்திருந்து இராணுவத்தினரை தாக்கினர். அவர்கள இராணுவம் நெரித்தது.
    3. 40 பொதுமக்களை புலிகள் நெரித்து கொன்றனர். இந்திய இராணுவத்திடம் டாங்கிகளே இல்லை.//

    ஐயோ கொழுவி.. தமாஷ் பண்ணாதீங்க..

    ReplyDelete
  41. ஃஃ
    வாசன் -
    தனது நலன்களுக்காக கையிலெடுத்த இப்பிரச்சனையை இந்தியா தீர்க்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?

    சில பல தவறுகளால் நமது இராணுவம் மோசமான கைங்கரியங்களில் ஈடுபட்டுவிட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம் என இந்திய அரசு அறிவித்தால் ஒரு வேளை புலிகளும் அவ்வாறு சொல்லகூடும்.

    ஏனெனில் 87 க்கு பிறகுதான் 91 வருகிறது src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif">

    ஏனெனில் அதுவரைக்கும் இந்திய இராணுவ கொடுமைகளுக்கு பதிலாக ரஜீவ் கொலையைதான் நாம் பதிலாக சொல்லுவோம். இந்தியா மன்னிப்பு கேட்டால் பிறகு ராஜீவ் கொலையை சொல்ல முடியாது. அதனால நாங்களும் மன்னிப்பு கேட்கத்தானே வேணும் ? என்ன நான் சொல்றது src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif">

    மன்னிப்பு கேட்ட பிறகு ரஜிவ் கொலைக்கு நீங்க சட்ட நடவடிக்கை எடுக்கிற அதே நேரம் 8000 பொதுமக்கள் கொலைக்காக நாமும் தனியாக சட்டநடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஒற்றுமையாக இருதரப்பும் சட்டநடவடிக்கைகளை எடுக்கும் சூழலை இந்தியாதான் தனது மன்னிப்பு கோரல் மூலமாக ஏற்படுத்தி தரவேண்டும்.
    ஃஃ

    கொழுவி,நீங்கள் ஏதேனும் புரிந்து எழுதுகிறீர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது.

    இப்போது இந்திய அரசுக்கு ஒன்றும் வயிற்று வலி இல்லை;ஆனால் புலிகள் தான் தமிழக அரசியல் அடிப்பொடிகளைத் தூண்டி விட்டு இந்தியா தலையிட வேண்டும் என்று கோஷம் போடுகிறார்கள்.
    தேவை புலிகளுக்குத்தானே தவிர இந்திய அரசுக்கல்ல !

    இந்திய அரசைப் பொறுத்தவரை புலிகள் அழிக்கப்படட்டும்,பின்னர் பார்க்கலாம்" என்ற நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது.இந்த நிலையை மாற்ற வேண்டும் என புலிகள் விரும்பினால் அவர்கள் தான் இறங்கி வர வேண்டும்.

    தமிழக அரசியல் வாதிகளை வைத்து எந்தப் பருப்பையும் வேக வைக்க முடியாது !

    மற்றபடி புலிகள் எதிர்காலத்தில் எந்த போர்நிறுத்தத்துக்கும் ஒத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைக்காகவே நடேசன் இப்போது வேண்டுகோள் வைத்தார் என்ற நோக்கில் உங்கள் பதில்......ரொம்ப தமாஷான ஆள் சார் நீங்க !!!!

    ReplyDelete
  42. //ரஜனி திரணகம எனும் ஒரு யாழ்பாண பல்கலைக் கழக மாணவி. //

    ஒரு சிறு திருத்தம் கொழுவி- அவர் மாணவி அல்ல யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்தை சேர்ந்த்த உடற்கூற்றியல்/ உடற்தொழிலியல் பேரசிரியர்/ சிரேஸ்ட விரிவுரையாளர்.

    மற்றும்படி இதுவரை பார்த்த அளவில் "உண்மை தமிழனுக்கு" நீங்கள் உண்மையை சொல்லி புரியவைப்பது என்பது கல்லில் நார் உரிக்கும் காரியம் என்பது போல் படுகிறது. எதற்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. //kanaga said...
    yawn!
    The wheels on the bus go round and round,
    round and round,
    round and round.
    The wheels on the bus go round and round,
    all through the town.
    The wipers on the bus go Swish, swish, swish;
    Swish, swish, swish;
    Swish, swish, swish.
    The wipers on the bus go Swish, swish, swish,
    all through the town.
    The horn on the bus goes Beep, beep, beep;
    Beep, beep, beep;
    Beep, beep, beep.
    The horn on the bus goes Beep, beep, beep,
    all through the town..
    The money on the bus goes, Clink, clink, clink;
    Clink, clink, clink;
    Clink, clink, clink.
    The money on the bus goes, Clink, clink, clink,
    all through the town.
    The Driver on the bus says "Move on back,
    move on back, move on back;"
    The Driver on the bus says "Move on back",
    all through the town.
    The baby on the bus says "Wah, wah, wah;
    Wah, wah, wah;
    Wah, wah, wah".
    The baby on the bus says "Wah, wah, wah",
    all through the town.
    The mommy on the bus says "Shush, shush, shush;
    Shush, shush, shush;
    Shush, shush, shush."
    The mommy on the bus says "Shush, shush, shush"
    all through the town.//

    கனகா என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை..

    தமிழிலேயே சொல்லவும்..

    ReplyDelete
  44. ///கொழுவி said...
    புலிகள் உள்ளேயிருந்து சண்டையைத் துவக்கியிருக்க வேண்டும் என்றுதான் நானும் நம்புகிறேன்..//
    அண்ணை நம்புவது எதுவும் நடந்திருக்க வேண்டுமென்றில்லை. இந்த நம்பிக்கையென்பது இந்தியா மீதான உங்களது தேச பக்தி.
    ஆனாலும் வரலாறு எப்போதும் நம்பிக்கைகளுக்குள் கட்டுண்டதல்ல!//

    சரி.. எனது தேசபக்தி என்னோடயே இருந்து தொலையட்டும்.. விடுங்கள்..

    //ரஜனி திரணகம எனும் ஒரு யாழ்பாண பல்கலைக் கழக மாணவி. அவர் புலிகளின் சகல செயற்பாடுகளோடும் அவர்களது நடவடிக்கைகளோடும் முரண்பட்டு நின்றார். அவர் பின்னாளில் புலிகளால் சுட்டு கொல்லப் பட்டார். இல்லை.. வேறு குழுவால் சுடப்பட்டார் எனும் கதைகளும் உண்டு. ஆனால் பொதுவாக அவர் புலிகளால் கொல்லப்பட்டார் என்பதே நம்பப்படுகிறது. புலிகள் மீதான அவரது விமர்சனத்தை அதற்கு காரணமாய் கூறுகின்றனர்.
    அது வேறு விடயம்.//

    ஓ.. தெரியுமே.. கடந்த சில மாதங்களுக்கு முன் 'பாரீஸ் சூறாவளி'யால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு தமிழ்மணத்தையே கலக்கிவிட்டுச் சென்ற கதைதானே..? படித்தேன்..

    //அதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. கொழுவி தேசியத் தலைவர் அனுதாபி - அதனால் அவர் சொல்வதை நம்ப முடியாது என நீங்கள் கருதுகிறீர்கள்.//

    இது தவிர்க்க முடியாதது கொழுவி. புலிகள் தவறு செய்திருக்கிறார்கள் என்று நீங்களும், இந்திய அமைதி காப்புப் படை பல கொலைகளைச் செய்தது என்று நானும் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளோம்.. பிறகென்ன..?

    //சரி.. ஆனால் புலிகளோடு முரண்பட்டவர் - புலிகளால் கொல்லப்பட்டவர் - தனது 'முறிந்தபனை' நூலில் யாழ்பாண ஆஸ்பத்திரி சம்பவம் குறித்து எழுதியிருக்கிறார். ஆக அவர் புலிகளுக்கு சார்பாக வேண்டுமென்றே இட்டுக்கட்டி எழுதியிருக்க மாட்டாரல்லவா?//

    சரி.. ஆனால் இதில் ஒன்றைக் கவனித்தீர்களா..? இதை எழுதியவரே ஒத்துக் கொள்கிறார் அந்த மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் புலிகள் இருந்துள்ளனர் என்று.. அதுதான் முதல் படி.. அதன் விளைவுதான் அந்தப் படுகொலைகள்..

    எப்படி பார்த்தாலும் புலிகளும், அவர்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களும்தான் இன்றளவும் தீராத ஈழத்து மக்களின் துயரத்திற்கு காரணம் என்பதை மறுபடியும் நான் சொல்கிறேன்..

    ReplyDelete
  45. இந்திய அரசைப் பொறுத்தவரை புலிகள் அழிக்கப்படட்டும்,பின்னர் பார்க்கலாம்"//

    அலோ.. நான் புலிகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லவில்லையே.. :)

    இதென்ன கொடுமை.. தாம் செய்த மனிதப் படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்பதற்கு அந்த மக்களிடம் கேட்டால் போதும்.

    அதற்கும் புலிகள் தமிழக அரசியல் வாதிகளை தூண்டி விடுவதற்கும் சம்மந்தம் கிடையாது.

    நான் கேட்பது புலிகள் அல்லாத ஈழத்து மக்களிடம் மன்னிப்பு கேட்பது பற்றி!

    இதற்கும் உதவி செய்வது செய்யாதற்கும் தொடர்பில்லை.

    ReplyDelete
  46. ///வாசகன் said...
    //வாசன் - தனது நலன்களுக்காக கையிலெடுத்த இப்பிரச்சனையை இந்தியா தீர்க்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? சில பல தவறுகளால் நமது இராணுவம் மோசமான கைங்கரியங்களில் ஈடுபட்டுவிட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம் என இந்திய அரசு அறிவித்தால் ஒரு வேளை புலிகளும் அவ்வாறு சொல்லகூடும்.
    ஏனெனில் 87-க்கு பிறகுதான் 91 வருகிறது. ஏனெனில் அதுவரைக்கும் இந்திய இராணுவ கொடுமைகளுக்கு பதிலாக ரஜீவ் கொலையைதான் நாம் பதிலாக சொல்லுவோம். இந்தியா மன்னிப்பு கேட்டால் பிறகு ராஜீவ் கொலையை சொல்ல முடியாது. அதனால நாங்களும் மன்னிப்பு கேட்கத்தானே வேணும்? என்ன நான் சொல்றது? மன்னிப்பு கேட்ட பிறகு ரஜிவ் கொலைக்கு நீங்க சட்ட நடவடிக்கை எடுக்கிற அதே நேரம் 8000 பொதுமக்கள் கொலைக்காக நாமும் தனியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். இவ்வாறு ஒற்றுமையாக இருதரப்பும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் சூழலை இந்தியாதான் தனது மன்னிப்பு கோரல் மூலமாக ஏற்படுத்தி தரவேண்டும்.//
    கொழுவி,நீங்கள் ஏதேனும் புரிந்து எழுதுகிறீர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. இப்போது இந்திய அரசுக்கு ஒன்றும் வயிற்று வலி இல்லை;ஆனால் புலிகள்தான் தமிழக அரசியல் அடிப்பொடிகளைத் தூண்டி விட்டு இந்தியா தலையிட வேண்டும் என்று கோஷம் போடுகிறார்கள்.
    தேவை புலிகளுக்குத்தானே தவிர இந்திய அரசுக்கல்ல!//

    இதனை ஒத்துக் கொண்டால் அவர்கள் நிலைமை சிக்கலில் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்வதைப் போலாகிவிடும் என்பதால் மறுத்துக் கொண்டே வருகிறார்.

    //இந்திய அரசைப் பொறுத்தவரை புலிகள் அழிக்கப்படட்டும், பின்னர் பார்க்கலாம்" என்ற நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது.//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நம்ம அரசியல்வியாதிகளைப் பற்றி நமக்குத் தெரியாதா..? எவ்ளோ அரசியலைப் பார்த்திருக்கோம்..

    //இந்த நிலையை மாற்ற வேண்டும் என புலிகள் விரும்பினால் அவர்கள்தான் இறங்கி வர வேண்டும்.
    தமிழக அரசியல்வாதிகளை வைத்து எந்தப் பருப்பையும் வேக வைக்க முடியாது!//

    இப்போது பந்து புலிகளின் கையில்தான் உள்ளது..

    //மற்றபடி புலிகள் எதிர்காலத்தில் எந்த போர் நிறுத்தத்துக்கும் ஒத்துக் கொள்ளக்கூடாது என்ற நிலைக்காகவே நடேசன் இப்போது வேண்டுகோள் வைத்தார் என்ற நோக்கில் உங்கள் பதில்..
    ரொம்ப தமாஷான ஆள் சார் நீங்க!//

    நான் அப்படி கருதவில்லை. அதுதான் ஒருவர் போரை நிறுத்துகிறேன் என்கிறாரே.. நீயும் நிறுத்தலாமே என்று இலங்கை அரசை நோக்கி கேள்விக்கணைகள் பாயலாம் என்று எதிர்பார்த்து அவர் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனாலும் அது டூ லேட்..

    முன்பேயே, இலங்கை ராணுவம் தாக்குதலைத் தொடங்கிய போதே சொல்லியிருக்க வேண்டும்..

    ReplyDelete
  47. ///குழைக்காட்டான் said...
    //ரஜனி திரணகம எனும் ஒரு யாழ்பாண பல்கலைக் கழக மாணவி.//
    ஒரு சிறு திருத்தம் கொழுவி- அவர் மாணவி அல்ல.. யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்தை சேர்ந்த்த உடற்கூற்றியல்/ உடற்தொழிலியல் பேரசிரியர்/ சிரேஸ்ட விரிவுரையாளர்.//

    புதிய தகவலுக்கு நன்றி ஸார்..

    //மற்றும்படி இதுவரை பார்த்த அளவில் "உண்மை தமிழனுக்கு" நீங்கள் உண்மையை சொல்லி புரியவைப்பது என்பது கல்லில் நார் உரிக்கும் காரியம் என்பது போல் படுகிறது. எதற்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//

    ஓ.. மை காட்.. நீங்களுமா..? கொழுவிக்கு சப்போர்ட் செய்யத்தான் நிறைய பேர் இருக்காங்கப்பா..

    ReplyDelete
  48. unmaithamizan ayya it was my fault. knowing you i should not have expected you to click the nursery rhyme link. the nursery rhyme is for kozhuvi ayya. he has a lot of time.

    The wheels on the bus go round and round,
    round and round,
    round and round.
    The wheels on the bus go round and round,
    all through the town.

    ReplyDelete
  49. //கொழுவி said...
    இந்திய அரசைப் பொறுத்தவரை புலிகள் அழிக்கப்படட்டும்,பின்னர் பார்க்கலாம்"//
    அலோ.. நான் புலிகளிடம் மன்னிப்பு கேட்க சொல்லவில்லையே..:)//

    சரி.. கேட்கலை..

    //இதென்ன கொடுமை.. தாம் செய்த மனிதப் படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்பதற்கு அந்த மக்களிடம் கேட்டால் போதும்.//

    சரி கேட்கிறோம்.. அதன் பின் என்ன..? புலிகள் பதிலுக்கு என்ன செய்வார்கள்..?

    //அதற்கும் புலிகள் தமிழக அரசியல்வாதிகளை தூண்டி விடுவதற்கும் சம்மந்தம் கிடையாது.//

    இப்போது நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்தானே புலிகள்தான் எங்களது அரசியல்வாதிகளைத் தூண்டி விடுவது என்று..?

    //நான் கேட்பது புலிகள் அல்லாத ஈழத்து மக்களிடம் மன்னிப்பு கேட்பது பற்றி! இதற்கும் உதவி செய்வது செய்யாதற்கும் தொடர்பில்லை.//

    அதான் சொல்றோமே.. மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறோம். அதன் பின்னர்.. புலிகளும் எங்களிடம் மன்னிப்பு கேட்ட பின்பு, இந்தியா ஈழப் பிரச்சினையில் இரண்டாவது முறையாகத் தலையிடும்போது புலிகள் எங்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்பார்களா..?

    கேட்டுச் சொல்லுங்கள்..

    ReplyDelete
  50. //kanaga said...
    unmaithamizan ayya it was my fault. knowing you i should not have expected you to click the nursery rhyme link. the nursery rhyme is for kozhuvi ayya. he has a lot of time.
    The wheels on the bus go round and round,
    round and round,
    round and round.
    The wheels on the bus go round and round,
    all through the town.//

    ஐயா கொழுவி ஐயா..

    இந்த நர்ஸரி ரைம்ஸ் உங்களுக்காக கனகா கொடுத்திருக்காங்கோ..

    பாடிப் பார்த்திட்டு சொல்லுங்கோ என்ன அர்த்தம்ன்னுட்டு..?

    ReplyDelete