Pages

Tuesday, October 14, 2008

குசும்பனாருக்கு நன்றியும், பதில் பதிவும், இரண்டு கேள்விகளும்..!

14-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நமது செல்லக் குசும்பன் தனது குசும்புத்தனத்தின் அடுத்தக் கட்டமாக சினிமாவிலும் கை வைத்து அதகளப்படுத்தியிருக்கிறார். அமர்க்களமான காமெடி.. கூடவே என்னையும் துணைக்கு அழைத்திருக்கிறார். மறவாமல் இருப்பதற்கு, இருந்ததற்கு நன்றி குசும்பா..

அதிர்ஷ்டவசமாக முருகன் அருளால் நேரமும் கிடைக்கப் பெற்று இதோ எனது சினிமா தொடர்பான பதிவு.. எந்தப் புண்ணியவான் ஆரம்பித்தாரோ தெரியவில்லை.. அவரை பாதம் தொட்டு வணங்குகிறேன். தொடர்ந்து பதிவர்கள் பலரும் எழுதி வருபவைகள் அனைத்துமே புதிய, புதிய விஷயங்களை, மறந்து போயிருந்த பல ஆட்டோகிராப் கதைகளை ஞாபகப்படுத்தி வருகின்றன.

நன்றி.. நன்றி.. நன்றி..

இனி எனது பதில்கள்..


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்று சரியாகத் தெரியவில்லை. 5 அல்லது 6 இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் ஒரு மதியானக் காட்சியில் 'பாலும் பழமும்' படத்தினை பார்த்தது நினைவிருக்கிறது. காரணம், அதில் இடம் பெற்ற காலத்தால் அழிக்க முடியாத பாடலான "போனால் போகட்டும் போடா" என்ற பாடலில் இந்த வரிகளை மட்டும் அடுத்த சில நாட்களுக்கு உளறிக் கொண்டேயிருந்தேன் என்று எனது அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சென்னை தேவி திரையரங்கில் 'ராமன் தேடிய சீதை'.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சமீபமாக ஊருக்குச் செல்லும்போது பேருந்தில் 'கில்லி' போட்டார்கள். பாதி பார்த்து மீதியில் தூங்கினேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச சினிமா!

‘பாசமலர்’. எத்தனை முறை பார்த்திருந்தாலும் சரி.. எத்தனையோ தடவைகள் கேட்டிருந்தாலும் சரி.. "கை வீசம்மா கை வீசு.. கடைக்குப் போகலாம் கை வீசு.." என்ற வசன வரிகளைக் கேட்டவுடன், குபுக்கென்று கண்களில் நீர் முட்டுகிறது. ஏன் என்றுதான் தெரியவில்லை.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

‘முதல்வன்’ படத்தினை ஓட விடாமல் செய்ய மதுரையில் உடன்பிறப்புகள் நடத்திய ரெளடித்தனம். நான் அப்போது மதுரையில்தான் குடியிருந்தேன். முதல் நாள் 5 ஷோக்களுக்குமே டிக்கெட் கிடைக்காமல் சோகத்தில் இருந்த எனக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு என் வீட்டு கேபிள் டிவியில் ‘முதல்வன்’ டைட்டிலைப் பார்த்தவுடன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை..

அதன் பின் நடந்த 'பாபா' படப் பெட்டி விவகாரம், இப்போது 'காதலில் விழுந்தேன்' விவகாரத்திற்கெல்லாம் மனம் ஏற்கெனவே கல்லாகிப் போய்விட்டிருந்ததால் வலி உணரவில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

'மைடியர் குட்டிச்சாத்தான்'.. 3D என்றொரு வார்த்தையை அன்றைக்குத்தான் கேள்விப்பட்டேன். சிறார்களுக்கே உரித்தான மனப்பாங்கில் கண்ணாடியை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு ஈட்டி குத்த வரும்போது ‘கிலீர்’.. ‘கிலீர்’.. என்று சிரித்த சந்தோஷம் பாருங்கள்.. அப்பச்சனை ஆயுள் உள்ளவரை மறவேன்..

6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய.. ஒருவர் விடாமல் வாசித்து வருகிறேன். எனது புத்தக தேர்வுகளில் 75 சதவிகிதம் சினிமா பற்றிய பத்தகங்கள்தான். அதிலும் அறந்தை நாராயணன் எழுதிய ‘தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப்’ படிக்கத் தவறிவிடாதீர்கள்.

7. தமிழ் சினிமா இசை?

எனது முதல் இசை ஆசான் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான். அவருக்குப் பின் ‘திருவிளையாடல்’ படத்திற்காக திரு.கேவி.மகாதேவன், ‘தெய்வம்’ படத்திற்காக திரு.குன்னக்குடி வைத்தியநாதன்.. மற்றபடி அடுத்த இடம் சந்தேகமே இல்லாமல் இசைஞானிதான்.. பிற்காலத்திய தமிழ் இசையின் பொற்காலம் இசைஞானி ஆட்சி புரிந்த காலம்தான்.. இப்போது எல்லாமே உடான்ஸ்தான்..

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய.. இப்போதெல்லாம் தொழிலே இதுதான். அதிகம் பாதித்தப் படங்களின் எண்ணிக்கை அதிகம்.. சில படங்களின் பெயர்கள் ஞாபகமில்லை. அதிகம் ஸ்காண்டிநேவியன் நாடுகளின் திரைப்படங்கள்தான். சமீபகாலமாக ஈரானியத் திரைப்படங்கள்..

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

நிறைய.. சொல்வதற்கு இது நேரமில்லை. பக்கமும் பத்தாது.. நான் சினிமாத் துறையில் உன்மத்தமாக உள் நுழைந்தால் சினிமா மேம்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நான் மேம்படுவேன்.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிச்சயம் பெரியதொரு எதிர்காலம், புதுமை படைக்கவிருக்கும் இயக்குநர்களால் வழி நடத்தப்படும். ஒரு படத்திற்கு 40 லட்சம் வாங்கும் கமர்ஷியல் இயக்குநர்கள் ஒரு கட்டத்தில் சரக்கு தீர்ர்ந்தவுடன் நீக்கப்படுவார்கள். புதிய கமர்ஷியல்கள் வரும்.. ஆனால் அதே சமயம் அமீர், பாலா, சேரன், சசிகுமார் போன்றவர்களின் வாரிசுகள் தமிழ்ச் சினிமா மீதான காதலை நம்மிடமிருந்து நீங்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மக்களுக்கு நிறைய பணம் மிச்சமாகும். அதே சமயம் வழிப்பறி, கொள்ளைகள், திருட்டுக்கள், கொலைகள் அதிகமாகும். சினிமா தியேட்டரில் கொண்டாட வேண்டியவர்களெல்லாம் தெருவுக்கு வருவார்கள். பீச்சில் கால் வைக்க முடியாது.. கட்சிக்காரர்களுக்கு எளிதாக தொண்டர்கள் கிடைப்பார்கள். தப்பித் தவறி அன்றைய வருடத்தில் தேர்தல் நடந்தால், அப்போதைக்கு யார் ஆள்பவர்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தோற்பார்கள்.

அதே சமயம் சினிமாவை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிச்சையெடுப்பார்கள். அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது அந்த சினிமா தொழில் மட்டும்தான். வேறெதுவும் இல்லை..

- - - - - - - - - - - - - - - - - - - -

குசும்பா... எனது பணி முடிந்தது. ஆனால் அழைக்க வேண்டியவர்கள் பட்டியலை யோசித்து யோசித்துப் பார்த்தேன். பலரும் பலவித வழிகளில் நண்பர்களாகி அழைப்பை ஏற்ற வண்ணம் இருக்கிறார்கள்.. இதுவரையிலும் யார், யார் எழுதியிருக்கிறார்கள்.. யார் எழுதவில்லை என்பதையெல்லாம் பட்டியல் எடுத்த பின்புதான் நான் எனது நண்பர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் குசும்பா... மன்னித்துக் கொள்.. எனக்கு சத்தியமாக நேரமில்லை..

எனக்குப் பதிலாக நீயே இன்னொரு பதிவு போட்டு அழைத்துவிடு.. அனைவரையும் எனது நண்பர்களாக்கிவிடு.. புண்ணியம் கிடைக்கும்..

கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?

கேள்வி-2 : இந்த 'சினிமா தொடர் சுற்றைப்' போலவே 'ராமன் தேடிய சீதை' படம் போல் "பதிவர்கள், தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..? கூடவே என்னைப் போன்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு ஒரு அட்வைஸ் கிடைக்குமே.. என்ன சொல்ற..? முதல் போணியை நீயே ஆரம்பித்து வைத்துவிடு..

வாழ்க வளமுடன்

36 comments:

  1. //2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? -

    ஹாலந்து நாட்டுத் திரைப்படம் "JOHAN"
    //

    //3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    வீட்டில் டிவிடியில் பார்த்தது கொரிய நாட்டுத் திரைப்படம் "ALMOST LOVE"
    //

    ????

    அண்ணாச்சி கேள்வி தமிழ் சினிமா பற்றியது :)

    :)

    ReplyDelete
  2. 2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

    3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    கேள்வியை மீண்டும் படித்து பார்க்கவும் :)

    ReplyDelete
  3. நிறைய.. சொல்வதற்கு இது நேரமில்லை. பக்கமும் பத்தாது..
    //

    அப்பாடி தப்பித்தோம்..:)

    ReplyDelete
  4. கேள்வியை மீண்டும் படித்து பார்க்கவும் :)
    //

    தப்பு போடாமல் இது என்ன சாய்ஸ் குடுத்து மறுபடியும் எழுதினா இன்னும் ரெண்டு பக்கம் அதிகமாகும்
    அத நாம படிக்க வேண்டி வரும் இது தேவையா..? வெட்டி :)

    ReplyDelete
  5. மின்னுது மின்னல் said...

    me the 1st :)
    //


    ஜஸ்ட் மிஸ் :(

    ReplyDelete
  6. ????

    அண்ணாச்சி கேள்வி தமிழ் சினிமா பற்றியது :)

    :)
    //

    புரியுது புரியுது :)

    ஆனா உனா தானா பதிவை ஃபுல்லா படிக்கிறிங்களானு டெஸ்ட் பண்ணுறாரு அப்படி தானே தல :)

    ReplyDelete
  7. ஆர்வ கோளாறுல கை பற பறனு இருந்திருக்கும்..

    பாவம் விட்டுடுங்க





    (எங்களை:)!! )

    ReplyDelete
  8. கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?
    //

    கேள்விக்கு பதில் மட்டும் தான் போடனும்
    இடையில் சொந்த கேள்வி தனி பதிவில் கேட்கவும்..!! :)

    ReplyDelete
  9. தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..?
    //

    ம்

    அந்த தப்பை பண்ணிட்டு அனுபவிக்கிறது போதாது...

    ReplyDelete
  10. அண்ணே நன்றி உடனே பதிவு எழுதியதுக்கு, ஆமா என்ன ஆச்சு ஏதும் உடம்பு சரி இல்லையா? பதில் எல்லாம் ரொம்ப சின்னதா கொடுத்து இருக்கீங்க, யானை இளைச்சா நல்லா இருக்காதுன்னே:)

    ReplyDelete
  11. //அதிகம் ஸ்காண்டிநேவியன் நாடுகளின் திரைப்படங்கள்தான்.//

    ஆமாம் ஆமாம் ரொம்ப சூப்பராக இருக்கும் அந்த நாட்டு படங்கள்.
    (வேற வழி:( , யாராவது அந்த நாடுகள் எல்லாம் எங்கே இருக்குன்னு சொல்லுங்கப்பா!)

    ReplyDelete
  12. //கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?//

    அண்ணே இது கொஞ்சம் கூட நல்லா இல்லை அம்புட்டுதான் எனக்குதான் பார்சி தெரியாது தெரியாதுன்னு சொல்றேன் அதே மொழியில் கேள்வி கேட்குறீங்க:)

    ReplyDelete
  13. //கேள்வி-2 : இந்த 'சினிமா தொடர் சுற்றைப்' போலவே 'ராமன் தேடிய சீதை' படம் போல் "பதிவர்கள், தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..? கூடவே என்னைப் போன்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு ஒரு அட்வைஸ் கிடைக்குமே.. என்ன சொல்ற..? முதல் போணியை நீயே ஆரம்பித்து வைத்துவிடு..//

    உங்கள் கேள்விக்கு பதிவு எழுத முடியாத ஆள் அண்ணே நான், பெண் எல்லாம் பார்க்க போகவில்லை எல்லாமே நாமாக தேடிக்கிட்டதால் பஜ்ஜி சொச்சிக்கு வாய்பு இல்லாம போச்சு:)

    ReplyDelete
  14. //nathas said...
    அண்ணாச்சி கேள்வி தமிழ் சினிமா பற்றியது:)//

    ஹி.. ஹி.. உண்மைதான்.. கொஞ்சம் மறந்திட்டேன்..

    ReplyDelete
  15. //மின்னுது மின்னல் said...
    me the 1st)//

    இல்ல.. செகண்ட்டு..

    ReplyDelete
  16. //வெட்டிப்பயல் said...
    கேள்வியை மீண்டும் படித்து பார்க்கவும் :)//

    சரியாப் படிக்கல.. மறந்திட்டேன்.. ஸாரி.. கோச்சுக்காதீங்கோ..

    ReplyDelete
  17. ///மின்னுது மின்னல் said...
    நிறைய.. சொல்வதற்கு இது நேரமில்லை. பக்கமும் பத்தாது..//
    அப்பாடி தப்பித்தோம்..:)///

    விடமாட்டேன்.. அந்த வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தத்தான் போகிறேன்.. மாட்டிக் கொள்ளத்தான் போகிறீர்கள்..

    ReplyDelete
  18. //மின்னுது மின்னல் said...
    கேள்வியை மீண்டும் படித்து பார்க்கவும் :)//
    தப்பு போடாமல் இது என்ன சாய்ஸ் குடுத்து மறுபடியும் எழுதினா இன்னும் ரெண்டு பக்கம் அதிகமாகும். அத நாம படிக்க வேண்டி வரும் இது தேவையா..? வெட்டி :)//

    வெட்டிக்கு அட்வைஸா..? மின்னலு அட்ரஸ் என்ன..?

    ReplyDelete
  19. //மின்னுது மின்னல் said...
    அண்ணாச்சி கேள்வி தமிழ் சினிமா பற்றியது :)//
    புரியுது புரியுது :) ஆனா உனா தானா பதிவை ஃபுல்லா படிக்கிறிங்களானு டெஸ்ட் பண்ணுறாரு அப்படி தானே தல :)//

    ஐயோ.. இப்படியெல்லாம் தப்பா எழுதி பேரைக் கெடுக்காதீங்கப்பா.. நிசமாவே சரியாப் படிக்காம விட்டுப்புட்டேன்.. மன்னிச்சுக்குங்கோ..

    ReplyDelete
  20. //மின்னுது மின்னல் said...
    ஆர்வ கோளாறுல கை பற பறனு இருந்திருக்கும்.. பாவம் விட்டுடுங்க. (எங்களை:)!!)//

    விடமாட்டனே.. யோசிக்க ஆரம்பிச்சிட்டனே..

    ReplyDelete
  21. //மின்னுது மின்னல் said...
    கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?//
    கேள்விக்கு பதில் மட்டும் தான் போடனும். இடையில் சொந்த கேள்வி தனி பதிவில் கேட்கவும்..!! :)//

    குசும்பனுக்கு தோஸ்த்தா.. விடமாட்டேனாக்கும் உன் தோஸ்த்தை.. சொல்லி வை..

    ReplyDelete
  22. //மின்னுது மின்னல் said...
    தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..?//
    ம் . அந்த தப்பை பண்ணிட்டு அனுபவிக்கிறது போதாது...///

    போதாது.. எப்படி துவங்கியது அந்தத் தப்புன்னு எல்லார்கிட்டேயும் சொல்லணுமாக்கும்..

    ReplyDelete
  23. //குசும்பன் said...
    அண்ணே நன்றி உடனே பதிவு எழுதியதுக்கு, ஆமா என்ன ஆச்சு ஏதும் உடம்பு சரி இல்லையா? பதில் எல்லாம் ரொம்ப சின்னதா கொடுத்து இருக்கீங்க, யானை இளைச்சா நல்லா இருக்காதுன்னே:)//

    இருக்காதுதான்.. கேள்வியெல்லாம் சின்னச் சின்னதா இருந்ததே நான் என்ன செய்யறது..?

    ReplyDelete
  24. ///குசும்பன் said...
    //அதிகம் ஸ்காண்டிநேவியன் நாடுகளின் திரைப்படங்கள்தான்.//
    ஆமாம்.. ஆமாம்.. ரொம்ப சூப்பராக இருக்கும் அந்த நாட்டு படங்கள். (வேற வழி:( , யாராவது அந்த நாடுகள் எல்லாம் எங்கே இருக்குன்னு சொல்லுங்கப்பா!)///

    ஐரோப்பிய மேப்ல தேடிப் பாரு தெரியும்.. துபாய்ல மட்டும்தான் உனக்கு வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னப்பவே நினைச்சேன்.. இப்படித்தான் இருக்கும்னு..

    ReplyDelete
  25. ///குசும்பன் said...
    //கேள்வி-1 : நான் கேட்ட நூல் விமர்சனம் எங்கே..?//
    அண்ணே இது கொஞ்சம் கூட நல்லா இல்லை அம்புட்டுதான் எனக்குதான் பார்சி தெரியாது தெரியாதுன்னு சொல்றேன் அதே மொழியில் கேள்வி கேட்குறீங்க:)///

    டபாய்க்குறியா.. விடமாட்டேனாக்கும்..

    ReplyDelete
  26. ///குசும்பன் said...
    //கேள்வி-2 : இந்த 'சினிமா தொடர் சுற்றைப்' போலவே 'ராமன் தேடிய சீதை' படம் போல் "பதிவர்கள், தாங்கள் பெண் பார்த்த.. அல்லது மாப்பிள்ளை பார்த்த சம்பவங்களை" விவரிக்கலாமே.. காமெடியாக இருக்குமல்லவா..? கூடவே என்னைப் போன்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு ஒரு அட்வைஸ் கிடைக்குமே.. என்ன சொல்ற..? முதல் போணியை நீயே ஆரம்பித்து வைத்துவிடு..//
    உங்கள் கேள்விக்கு பதிவு எழுத முடியாத ஆள் அண்ணே நான், பெண் எல்லாம் பார்க்க போகவில்லை எல்லாமே நாமாக தேடிக்கிட்டதால் பஜ்ஜி சொச்சிக்கு வாய்பு இல்லாம போச்சு:)///

    அடப்பாவி சரவணா.. உனக்கும் இதுல அனுபவமில்லையா..? என்ன கொடுமை சரவணன் இது..?

    ReplyDelete
  27. //சமீபமாக ஊருக்குச் செல்லும்போது பேருந்தில் 'கில்லி' போட்டார்கள். பாதி பார்த்து மீதியில் தூங்கினேன்.
    //

    அப்போ ராமன் தேடிய சீதை உங்களுக்கு பிடித்திருக்குமே? அப்படியே அன்பே அன்பே, ராஜா, பிரியமான தோழி போன்று உங்களை கவர்ந்த படங்களின் வரிசையை கூற‌வும்.

    ReplyDelete
  28. ///கார்க்கி said...
    //சமீபமாக ஊருக்குச் செல்லும்போது பேருந்தில் 'கில்லி' போட்டார்கள். பாதி பார்த்து மீதியில் தூங்கினேன்.//
    அப்போ ராமன் தேடிய சீதை உங்களுக்கு பிடித்திருக்குமே? அப்படியே அன்பே அன்பே, ராஜா, பிரியமான தோழி போன்று உங்களை கவர்ந்த படங்களின் வரிசையை கூற‌வும்.///

    ராமன் தேடிய சீதை ரொம்பவே பிடித்திருந்தது கார்க்கி.. விமர்சனம் எழுதியிருக்கேனே.. படிக்கவில்லையா.

    மற்ற படங்களை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..

    ReplyDelete
  29. தலைவரே...

    சினிமா பத்தி எழுதுங்க...

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  30. ALL THE BEST U.T FOR UR CARRER, surely u can get good sucess.nambikkai enbathu vendum namathu valvil, latchiyam velluum oru nalil.

    wishes
    kaveri ganesh

    ReplyDelete
  31. //நித்யகுமாரன் said...
    தலைவரே... சினிமா பத்தி எழுதுங்க...
    அன்பு நித்யகுமாரன்//

    எழுதலாம் அப்பனே..

    அது எதுக்குத் தேவையில்லாம "தலைவரே"

    தேவையா எனக்கு..

    ReplyDelete
  32. //KaveriGanesh said...
    ALL THE BEST U.T FOR UR CARRER, surely u can get good sucess. nambikkai enbathu vendum namathu valvil, latchiyam velluum oru nalil.
    wishes
    kaveri ganesh//

    நன்றி கணேஷ்..

    உங்களது வாழ்த்துக்கள் வெற்றி பெற என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்..

    ReplyDelete
  33. நன்று......உலக cinema வரிசையில் "LIFE IS Beautiful"என்னை மிகவும் கவர்ந்த படம்...

    ReplyDelete
  34. //coolzkarthi said...
    நன்று......உலக cinema வரிசையில் "LIFE IS Beautiful" என்னை மிகவும் கவர்ந்த படம்...//

    எனக்கும் பிடித்தமான படம்தான்.. பட்டியல் போட்டால் நீளமாக இருக்குமே என்பதால்தான் போடவில்லை. அந்தச் சின்னப் பையன் இன்னமும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான்.. வருகைக்கு நன்றி ஸார்..

    ReplyDelete