Pages

Friday, October 10, 2008

புகைப்படம் புகட்டும் நீதி..!

10-10-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நல்ல விஷயங்களை யாரிடமிருந்தாலும் கற்றுக் கொள்வதில் நாம் தவறக் கூடாது. நம் கலாச்சாரம்தான் உயர்ந்தது; மற்றைய கலாச்சாரங்களில் கற்றுக் கொள்ள ஏதுமில்லை. என்று சொல்லி எதையும் ஏறெடுத்துப் பார்க்காமல் புறக்கணித்தால் நமக்குத்தான் நஷ்டம்.

நியூஜெர்ஸியில் இருக்கும் எனதருமைத் தம்பி செந்தில்குமார் ஒரு புகைப்படத்தை ஈ-மெயிலில் அனுப்பி “அண்ணா.. போட்டோவைப் பார்.. செய்தியைப் படி.. உனக்கேற்றதுதான்..” என்று சொல்லியிருந்தான்.

அந்தப் புகைப்படம் இது.

படத்தில், படகில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ். அவருக்குப் பின்புறமாக அமர்ந்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் ஆஸ்டின் ஹட்ச்சர். அவர் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் மூடில் அவரைக் கொஞ்சிக் கொண்டிருப்பது புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவியும், ஹட்ச்சரின் தற்போதைய மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான டெமிமூர்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா..?

நம் ஊரில் டைவர்ஸ் வாங்கியவர்களில் 90 சதவிகிதத்தினர் “என் மூஞ்சில நீ முழிக்கக் கூடாது.. உன் மூஞ்சில நான் முழிக்க மாட்டேன்” என்று ‘மங்கம்மா சபதம்’ போட்டுத்தான் பிரிகிறார்கள். அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு டைவர்ஸ் ஆனவர்களின் நிலைமைதான் இதில் மிக, மிக சிக்கலில் கொண்டு போய் விடுகிறது.

“குழந்தைகளை நான்தான் வைத்துக் கொள்வேன்” என்று சொல்லி அப்பா, அம்மா இருவரும் கோர்ட் படியேறி சண்டையிடுவது டைவர்ஸிற்கு அடுத்தக் கட்ட மோதலாக இருக்கிறது. “குழந்தைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அப்பாவுடன் இருக்கலாம்..” என்பதுதான் பெரும்பாலான இது போன்ற வழக்குகளின் தீர்ப்பாக உள்ளது.

இதற்குப் பின் அவரவர் தத்தமது போக்கில் வேறு, வேறு திருமணங்களைச் செய்து கொண்டு போனாலும், குழந்தைகளின் நிலைமைதான் மிகவும் வருத்தத்திற்குரியது. வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும் அப்பாவைச் சந்திக்க வருவதும், மீதி நாட்களில் அம்மாவுடன் வாழ்வதுமாக ஒரு நாடோடி வாழ்க்கையை சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஏதாவது ஒரு பள்ளி நிகழ்ச்சி, உறவுக்காரர்கள் நிகழ்ச்சி என்றால்கூட பிள்ளையைப் பெற்றவர்கள் ஒன்றாக கலந்து கொள்ள முடியாத சூழல். “அவ வந்தா நான் வர மாட்டேன்..”; “உன் அப்பன் வந்தா நான் வர மாட்டேன்” என்று ஆளுக்கொரு பக்கமாக குழந்தைகளை இழுத்துக் கொண்டு இம்சிப்பது தொடர்கதையாகத்தான் இருந்து வருகிறது.

ஏன்.. எங்காவது நேருக்கு நேர் சந்திக்கின்ற சூழல் வந்தாலும்கூட கவனமாகத் தவிர்த்துவிட்டுத்தான் போகிறார்கள். சொல்கின்ற காரணம் “அப்படியொரு நபரை நான் சந்திக்கவே இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்” என்கிற அளவுக்கு அவர் மீதான காழ்ப்புணர்வை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இது போகப் போக அவர்களுடைய குழந்தைகள் மீதும் செலுத்தப்பட்டு யாரும், யாரையும் நம்பாத சூழல்தான் சமூகத்தில் உருவாகி வருகிறது.

இங்கே கதையோ அப்படியே நேர்மாறாக நடந்திருக்கிறது.
11 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு டைவர்ஸ் வாங்கியவர்கள் வில்லிஸ¤ம், டெமிமூரும். இப்படியொரு சூழ்நிலையில் குழந்தைகளுக்காக தனது முன்னாள் மனைவியின் ரொமான்ஸை பார்க்கத் தகுந்த சூழலில் அவர்களுடன் வருவதற்குரிய மனப்பக்குவம் வில்லிஸ் என்ற தந்தைக்கு வந்திருப்பது நிச்சயம் ஆச்சரியத்துக்குரியதுதான்.

புரூஸ் வில்லிஸோ “இதில் என்ன ஆச்சரியம்?” என்கிறார்.

“எனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் ஸ்டெப் பாதர் ஹட்ச்சர்தான். குழந்தைகள் பிக்னிக் போக வேண்டும் என்றார்கள். தனித்தனியே போவதென்றால் குழந்தைகளுக்கு வசதிப்படாது. எல்லாரும் ஒண்ணாவே போவோம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம். டெமி என்னைவிட்டுப் பிரிந்தாலும், என்றென்றும் எனது காதலுக்குரியவர்.. குழந்தைகளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம்.. தப்பில்லை” என்கிறார் வில்லிஸ்.

நிச்சயம்.. பாராட்டக்கூடிய அதே சமயம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்..

42 comments:

  1. நிங்க நினைபதெல்லாம் நடப்பதற்கு பெரிய மனம் வேண்டும் (பிராட் மைண்ட் ) அபப்டி சிலரும் எனக்கு தெரிந்து இருக்கிறார்கள்..

    ReplyDelete
  2. ada ithu unmaiththamizanannanaa ? ivlo chinna pathivaa pOttirukkeengalE ?

    ReplyDelete
  3. ஓ... அப்படியா... சேதி...!!!!!
    நல்ல வேலை விளக்குனீங்க.... சரியா புரிஞ்சி, அறிஞ்சிக்கிட்டேன்...

    இல்லேனா...

    நான் "இவரு மீனை பிடிச்சி, அவருகிட்டே கொடுப்பாரு" என்று தப்பா நினச்சிறுப்பேன்....

    ReplyDelete
  4. live-in relationship மகாராஷ்டிரா -வில் சட்ட பூர்வமாக ஆக்கபோகிறார்கள் தெரியுமா?

    ReplyDelete
  5. பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளாகக் கருதப்படும் இந்திய சூழலில் இவ்வளவு பெருந்தனமை அல்லது கை கழுவும்' தனம் பழக நாளாகும் என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  6. விவாகரத்து ஆன பின்னும், குழந்தையின் பிறந்தநாளை, அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருந்து, குழந்தையின் நண்பர்களுடன் கொண்டாடுவதை இங்கே பார்த்திருக்கிறேன்.

    தவிர, விவாகரத்து ஆகும்போது, ஒருவருக்கொருவர் எந்த விதத்தில் பிடிக்காமல் இருந்தாலும், குழந்தையிடம் பேசும்போது அம்மாவைப் பற்றி அப்பாவோ, அப்பாவைப் பற்றி அம்மாவோ தப்பாக சொல்லாமல் உயர்வாகச் சொல்லி, குழந்தையின் மனதில் தடுமாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.

    இவை நிச்சயம் மேல் நாட்டவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல இயல்புதான்.

    ReplyDelete
  7. //cable sankar said...
    நிங்க நினைபதெல்லாம் நடப்பதற்கு பெரிய மனம் வேண்டும் (பிராட் மைண்ட் ) அப்படி சிலரும் எனக்கு தெரிந்து இருக்கிறார்கள்..//

    வாங்க சங்கர்.. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்ற போக்கில் சென்றாலும், குழந்தைகளுக்காக இது போலவும் விட்டுக் கொடுப்பதில் தவறில்லையே.. பிராட்மைண்ட் அனைவரிடமும் இருக்கிறது. ஈகோதான் அதனைப் பயன்படுத்த விடாமல் தடுக்கிறது..

    ReplyDelete
  8. //Jeeves said...
    ada ithu unmaiththamizanannanaa ? ivlo chinna pathivaa pOttirukkeengalE?//

    ஏன் போடக்கூடாதா..? ச்சும்மா.. ஒரு மாறுதலுக்காக இருக்கட்டுமே என்றுதான் 2 பக்கத்தோடு நிறுத்தியுள்ளேன்..

    பதிவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..

    ReplyDelete
  9. //நையாண்டி நைனா said...
    ஓ... அப்படியா... சேதி...!!!!! நல்ல வேலை விளக்குனீங்க.... சரியா புரிஞ்சி, அறிஞ்சிக்கிட்டேன்... இல்லேனா... நான் "இவரு மீனை பிடிச்சி, அவருகிட்டே கொடுப்பாரு" என்று தப்பா நினச்சிறுப்பேன்....//

    விளக்கறதுக்கானே பதிவே போட்டேன்.. நையாண்டி நைனா எதை எடுத்தாலும் உங்களுக்கு நையாண்டிதானா..?

    ReplyDelete
  10. //பாபு said...
    live-in relationship மகாராஷ்டிரா -வில் சட்ட பூர்வமாக ஆக்கபோகிறார்கள் தெரியுமா?//

    வேறு வழியில்லை.. இதையெல்லாம் சட்டம் போட்டுத் தடை செய்வது நமது நாட்டில் முடியாதது. நல்ல முடிவை, சரியான தருணத்தில் எடுத்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டியது மராட்டிய அரசு.

    ReplyDelete
  11. //அறிவன்#11802717200764379909 said...
    பெண்கள் ஆண்களின் உடமைப் பொருளாகக் கருதப்படும் இந்திய சூழலில் இவ்வளவு பெருந்தனமை அல்லது கை கழுவும்' தனம் பழக நாளாகும் என்றுதான் தோன்றுகிறது.//

    அறிவன் ஸார்.. புகைப்படத்தை நன்கு பாருங்கள்.. யார் கை கழுவியிருக்கிறார்கள் என்பது புரியும்.. இருவருமே சமர்த்தாக விலகிக் கொண்டார்கள்..

    ஹட்ச்சர் டெமிமூரைவிட 15 வயது குறைந்தவர். அதே சமயம் வில்லிஸ¤ம் இதே காலக்கட்டத்தில் தன்னைவிட 20 வயது குறைந்த ஒரு நடிகையுடன் லிவிங் நடத்தி வருகிறார் என்பதையும் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்..

    ReplyDelete
  12. //கலை said...
    விவாகரத்து ஆன பின்னும், குழந்தையின் பிறந்தநாளை, அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருந்து, குழந்தையின் நண்பர்களுடன் கொண்டாடுவதை இங்கே பார்த்திருக்கிறேன்.
    தவிர, விவாகரத்து ஆகும்போது, ஒருவருக்கொருவர் எந்த விதத்தில் பிடிக்காமல் இருந்தாலும், குழந்தையிடம் பேசும்போது அம்மாவைப் பற்றி அப்பாவோ, அப்பாவைப் பற்றி அம்மாவோ தப்பாக சொல்லாமல் உயர்வாகச் சொல்லி, குழந்தையின் மனதில் தடுமாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றார்கள்.
    இவை நிச்சயம் மேல் நாட்டவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல இயல்புதான்.//

    உண்மைதான் கலை. நான் நிறையத் திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதைத் தவிர்க்கும் பழக்கம் கோடீஸ்வரக் குடும்பத்தில் இருந்து காரிலேயே குடும்பம் நடத்தும் வீடு வரையிலும் நடப்பதைக் காட்டியிருந்தார்கள்.

    உண்மையிலேயே இது போன்ற நாகரிகமான விலகல்களையும், அதன் பின்னான குழந்தைகளுக்காக ஒருங்கிணைப்பையும் நான் வரவேற்கிறேன். நிச்சயம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமும்கூடத்தான்..

    தங்களது வருகைக்கு நன்றி கலை ஸார்..

    ReplyDelete
  13. நீங்கள் கூறியது போல் சிலர் இப்படியும் இருக்கிரார்கள்,சிலர் பலிவாங்கிங்கி கொண்டே இருக்கிரார்கள்

    இவன்
    www.tamilkudumbam.com
    பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

    ReplyDelete
  14. குழந்தைகள் எதிர் காலம் தான் முக்கியம் என்பதை நம் இந்தியர்கள் அளவுக்கு ஆழ்ந்த கருத்து உடையவர்கள் எவரும் இல்லை

    ReplyDelete
  15. "இவரு மீனை பிடிச்சி, அவருகிட்டே கொடுப்பாரு" என்று தப்பா நினச்சிறுப்பேன்....

    இது சூப்பரூ

    ReplyDelete
  16. எனக்கு இப்படிப் பட்ட பெரிய மனம் இல்லை என்பதை மிகப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்!.
    நீங்கள் இந்த போட்டோவின் தகவலைச் சொல்லியிருக்காமல் இருந்தால் கூட என்னடா இது வேற்று மனுஷன் இருக்கும் போது இந்த மூதேவிகளுக்கு என்ன இது சல்லாபம் என்று மட்டும் நினைத்திருப்பேன்.விஷயத்தைப் படித்த பிறகு கேவலமாக நினைக்கத்தோன்றுகிறது!.என்ன கொடுமை சரவணன்!.

    ReplyDelete
  17. //TAMILKUDUMBAM said...
    நீங்கள் கூறியது போல் சிலர் இப்படியும் இருக்கிரார்கள்,சிலர் பலிவாங்கிங்கி கொண்டே இருக்கிரார்கள்
    இவன்
    www.tamilkudumbam.com
    பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க//

    இப்படியும் இருக்கிறார்கள் எனில் அவர்கள் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலாகத்தான்.. பெருவாரியான டைவர்ஸ் வாங்கியவர்கள் பரம்பரை எதிரிகளாகத்தான் கருதிக் கொள்கிறார்கள்.

    நன்றி தமிழ்குடும்பம்.. நீங்களும் அசத்துறீங்க.

    ReplyDelete
  18. //மோகன் காந்தி said...
    குழந்தைகள் எதிர் காலம் தான் முக்கியம் என்பதை நம் இந்தியர்கள் அளவுக்கு ஆழ்ந்த கருத்து உடையவர்கள் எவரும் இல்லை.//

    மோகன் ஸார்.. ஒரு பக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். அதனால்தான் டைவர்ஸ் செய்யும் சூழலில் வாழும் 99 சதவிகிதத்தினர் அதனைச் செய்யாமல் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

    ReplyDelete
  19. //யாழ்/Yazh said...
    "இவரு மீனை பிடிச்சி, அவருகிட்டே கொடுப்பாரு" என்று தப்பா நினச்சிறுப்பேன்....
    இது சூப்பரூ//

    யாழு..

    நானும் மொதல்ல இப்படித்தான் நினைச்சேன்..

    ReplyDelete
  20. //நல்லதந்தி said...
    எனக்கு இப்படிப்பட்ட பெரிய மனம் இல்லை என்பதை மிகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!//

    இப்படியொரு சூழ்நிலை உருவானால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பதுதான் கேள்வி.. தவறு யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் இருவருக்குமே பொதுவானது சுதந்திரம். அது தங்களுக்குத் தேவை என்பதால் பிரிந்தார்கள்.

    //நீங்கள் இந்த போட்டோவின் தகவலைச் சொல்லியிருக்காமல் இருந்தால்கூட என்னடா இது வேற்று மனுஷன் இருக்கும்போது இந்த மூதேவிகளுக்கு என்ன இது சல்லாபம் என்று மட்டும் நினைத்திருப்பேன். விஷயத்தைப் படித்த பிறகு கேவலமாக நினைக்கத்தோன்றுகிறது!. என்ன கொடுமை சரவணன்!.//

    ஒரு கொடுமையும் இல்லை தந்தி ஸார்.. அவங்க கலாச்சாரம் அப்படி.. நாட்டுக்கு நாடு இப்படித்தான் இருக்கும். நாம அதை நோக்கித்தான் இப்ப போய்க்கிட்டிருக்கோம்..

    ReplyDelete
  21. விவாகரத்து என்பது சில குடும்பங்களில் தவிர்க்க முடியாததாக மாறிப்போகிற போது, டெமி-ஆஷ்டன் -வில்லீஸ் கூட்டணியில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. நல்ல open minded பதிவு உண்மைத்தமிழன்.

    ReplyDelete
  22. /////நிச்சயம்.. பாராட்டக்கூடிய அதே சமயம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.///

    உனா தானா! நீங்கள் சொன்னதால் மேட்டர் டபுள் ஓக்கேயாகிவிட்டது. நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான்.

    ReplyDelete
  23. //ivlo chinna pathivaa pOttirukkeengalE ?//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  24. //நான் "இவரு மீனை பிடிச்சி, அவருகிட்டே கொடுப்பாரு" என்று தப்பா நினச்சிறுப்பேன்....//

    அதானே!

    ReplyDelete
  25. //பதிவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே.//

    முதலிலேயே சொல்லிவிட்டேன்!

    ReplyDelete
  26. ஆமாம் உண்மை தமிழன்,

    இது போன்ற பரந்த சிந்தனை இந்தியாவிலும் சீக்கிரம் வரும். நம்முடைய குடும்பத்தினரின் தேவையற்ற தூண்டல்களாலும், நம்முடைய சுற்றத்தாரின் விருப்பு வெறுப்புகளாலும் சேர்ந்து அழகான நம்முடைய குடும்பங்களை சின்னா பின்னா படுத்துகிறது.

    எத்தனை கணவன், மனைவிமார்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கிறார்கள்?!

    இந்த விசயத்தில் அமெரிககர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
    லிவ் இன் ஸ்டைல் இந்தியாவில் வரவேற்க தகுந்ததுதான்.

    வாழ்த்துக்கள் ,
    காவேரி கணேஷ்

    ReplyDelete
  27. அண்ணே உங்களை எழுத அழைச்சு ஒரு பதிவு போட்டு இருக்கேன்.

    http://kusumbuonly.blogspot.com/2008/10/blog-post_14.html

    வாங்க வந்து பாருங்க

    ReplyDelete
  28. //ஹட்ச்சர் டெமிமூரைவிட 15 வயது குறைந்தவர். அதே சமயம் வில்லிஸ¤ம் இதே காலக்கட்டத்தில் தன்னைவிட 20 வயது குறைந்த ஒரு நடிகையுடன் லிவிங் நடத்தி வருகிறார் என்பதையும் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்..//

    அண்ணே யார் பொண்டாட்டிய யார் இப்ப வெச்சு இருக்காங்க என்று விவரத்தை எல்லாம் விரல் நுணியில் ”வெச்சு” இருக்கீங்க. நீங்க ஒரு நடமாடும் யுனிவர்சிட்டின்னே!!!

    ReplyDelete
  29. எந்த விதத்திலும் நம் கலாச்சாரத்தை விட சிறந்த கலாச்சாரம் எதுவும் இல்லை என்பது என் எண்ணம்!.
    இப்போது மேல் நாட்டு கலாச்சாரத்தைப் பின் பற்றி நீதிமன்றங்களில் மணவிலக்கு கேட்டு வரும் எண்ணிக்கை எவ்வளவு?.அதனால் அந்த குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் கதி என்ன?.இந்த மேல் நாட்டு கலாச்சாரத்தின் விளைவாக ஏதுவுமே தவறில்லை என்று நினைக்கின்ற பெண்களின் கதி என்ன?.ஆண்களின் சாவு எப்படி?.இதை யெல்லாம் யோசியுங்கள்.
    நம் கலாச்சாரத்தை விட சிறந்த ஒன்று இல்லை என்பது என்னுடைய திண்ணமான எண்ணம்!...இது பிற்போக்குத் தனமாக இருந்தால் அதற்கு, அப்படி நினைப்பவர்களை,நினைத்து வருத்தப் படுவதைத் தவிர எனக்கு வழியில்லை!.

    ReplyDelete
  30. //கயல்விழி said...
    விவாகரத்து என்பது சில குடும்பங்களில் தவிர்க்க முடியாததாக மாறிப்போகிற போது, டெமி-ஆஷ்டன் -வில்லீஸ் கூட்டணியில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. நல்ல open minded பதிவு உண்மைத்தமிழன்.//

    நன்றி கயல்..

    பிடிக்கவில்லை என்றால் கூட்டுப் பொறுப்புகளிலிருந்து விலகி விடலாம். ஆனால் தொடர்ந்து நண்பர்களாக இருக்கலாம்.. தப்பில்லை.. இந்தக் கருத்தை ஏற்காமல் பிடிக்காவிட்டாலும் வலுக்கட்டாயமாக இருந்துதான் ஆக வேண்டும் என்கிறபோதுதான் முறைகேடுகள் துவங்குகின்றன.

    ReplyDelete
  31. ///SP.VR. SUBBIAH said...
    //நிச்சயம்.. பாராட்டக்கூடிய அதே சமயம் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.//
    உனா தானா! நீங்கள் சொன்னதால் மேட்டர் டபுள் ஓக்கேயாகிவிட்டது. நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான்.///

    நன்றி வாத்தியாரே.. இவ்ளோ வேலைகளுக்கிடையில் எப்படி கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்குகிறீர்கள். உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    ReplyDelete
  32. //நாமக்கல் சிபி said...
    நல்ல (சிறிய) பதிவு!//

    நல்ல (சிறிய) கமெண்ட்டு..

    ReplyDelete
  33. ///நாமக்கல் சிபி said...
    //நான் "இவரு மீனை பிடிச்சி, அவருகிட்டே கொடுப்பாரு" என்று தப்பா நினச்சிறுப்பேன்....//
    அதானே!///

    மறுபடியும் சின்ன கமெண்ட்டு..

    ஏன் நடுராத்திரில இதுக்கு மேல யோசிக்க முடியலையாக்கும்..?

    ReplyDelete
  34. ///நாமக்கல் சிபி said...
    //பதிவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே.//
    முதலிலேயே சொல்லிவிட்டேன்!///

    இருந்தாலும் வரிசையா கமெண்ட் போட்டதுக்கு.. அதுலேயும் அர்த்தராத்திரில டைப் செஞ்சதுக்கு நன்றிங்கோ தம்பீ..

    ReplyDelete
  35. //KaveriGanesh said...
    ஆமாம் உண்மை தமிழன். இது போன்ற பரந்த சிந்தனை இந்தியாவிலும் சீக்கிரம் வரும். நம்முடைய குடும்பத்தினரின் தேவையற்ற தூண்டல்களாலும், நம்முடைய சுற்றத்தாரின் விருப்பு வெறுப்புகளாலும் சேர்ந்து அழகான நம்முடைய குடும்பங்களை சின்னாபின்னாபடுத்துகிறது. எத்தனை கணவன், மனைவிமார்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கிறார்கள்?! இந்த விசயத்தில் அமெரிககர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். லிவ் இன் ஸ்டைல் இந்தியாவில் வரவேற்க தகுந்ததுதான். வாழ்த்துக்கள் ,
    காவேரி கணேஷ்//

    தங்களது ஆதரவிற்கு நன்றிகள் கணேஷ்.. தாங்கள் எப்போது சென்னை வருகிறீர்கள்..? தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்..

    ReplyDelete
  36. //குசும்பன் said...
    அண்ணே உங்களை எழுத அழைச்சு ஒரு பதிவு போட்டு இருக்கேன். http://kusumbuonly.blogspot.com/2008/10/blog-post_14.html வாங்க வந்து பாருங்க//

    வரேன்.. கண்டிப்பா வரேன்.. அழைப்புக்கு நன்றி தம்பீ..

    ReplyDelete
  37. ///குசும்பன் said...
    //ஹட்ச்சர் டெமிமூரைவிட 15 வயது குறைந்தவர். அதே சமயம் வில்லிஸ¤ம் இதே காலக்கட்டத்தில் தன்னைவிட 20 வயது குறைந்த ஒரு நடிகையுடன் லிவிங் நடத்தி வருகிறார் என்பதையும் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்..//
    அண்ணே யார் பொண்டாட்டிய யார் இப்ப வெச்சு இருக்காங்க என்று விவரத்தை எல்லாம் விரல் நுணியில் ”வெச்சு” இருக்கீங்க. நீங்க ஒரு நடமாடும் யுனிவர்சிட்டின்னே!!!///

    அடப்பாவி குசும்பா.. எனக்கு வேற வேலை வெட்டியே இல்ல பாரு.. இதையெல்லாம் தெரிஞ்சு வைச்சு நான் என்ன செய்யப் போறேன்..? வயித்தெரிச்சலை வாங்கதப்பா..

    ReplyDelete
  38. நம்ம ஊர்களில் பிரிஞ்சுபோன கணவன் வேற கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பாரே தவிர முன்னாள் மனைவியின் வாழ்க்கையை நரகமாக்கும் வழியில் தொடர்ந்து அவங்களுக்குத் ( பழி வாங்கறானாம்) தொந்திரவு கொடுத்துக்கிட்டே இருப்பார்.
    அதிலும் பிள்ளைகள் இருந்தால் பழிவாங்கல் இன்னும் கூடுதல்.

    நம்ம சமூகமும் புருசனைப்பிரிஞ்ச பொண்ணுக்கு கொடுக்கும் 'மருவாதை' தனி(-:

    வாடகைக்கு வீடுகூட கிடைக்காது.
    அப்படிக் கிடைச்சாலும், அங்கே போய் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவதூறு சொல்லிட்டுவருவார் இந்த முன்னாளர். அப்புறம் அவள் எங்கே நிம்மதியா வாழறது(-:

    தோழி பட்ட அவஸ்த்தையைக் கண்கூடாப் பார்த்து மனம் கசந்துருக்கேன்.

    ReplyDelete
  39. //துளசி கோபால் said...
    நம்ம ஊர்களில் பிரிஞ்சுபோன கணவன் வேற கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா இருப்பாரே தவிர முன்னாள் மனைவியின் வாழ்க்கையை நரகமாக்கும் வழியில் தொடர்ந்து அவங்களுக்குத் (பழி வாங்கறானாம்) தொந்திரவு கொடுத்துக்கிட்டே இருப்பார்.
    அதிலும் பிள்ளைகள் இருந்தால் பழிவாங்கல் இன்னும் கூடுதல்.
    நம்ம சமூகமும் புருசனைப் பிரிஞ்ச பொண்ணுக்கு கொடுக்கும் 'மருவாதை' தனி(-:
    வாடகைக்கு வீடு கூட கிடைக்காது.
    அப்படிக் கிடைச்சாலும், அங்கே போய் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அவதூறு சொல்லிட்டுவருவார் இந்த முன்னாளர். அப்புறம் அவள் எங்கே நிம்மதியா வாழறது(-:
    தோழி பட்ட அவஸ்த்தையைக் கண்கூடாப் பார்த்து மனம் கசந்துருக்கேன்.//

    டீச்சரம்மா.. வணக்கம்.. வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சும்மா.. என் பேரு உண்மைத்தமிழன்னு சொல்வாங்க.. ஞாபகம் வைச்சுக்குங்க..

    நீங்க சொன்ன கதை இங்கதான் நிறைய நடக்குது.. டைவர்ஸ் வாங்கின பின்னாடி புகைப்படங்களையும், தகவல்களையும் வெளியிட்டு சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

    இரு தரப்பிலுமே அது மாதிரி டார்ச்சர் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள் டீச்சர்..

    சமீபத்தில் டைவர்ஸ் வாங்கிவிட்டு வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த முன்னாள் கணவர் போதை மருந்து கடத்துகிறார் என்று போலீஸிற்கு பொய்யான தகவலைக் கொடுத்து அவரை அலைக்கழிக்க வைத்துவிட்டார்கள் பெண் வீட்டார்.. இப்படியும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.

    ஒருமித்த மனப் பிரிவாக இல்லாமல் போனால் இப்படித்தான் நடக்கும்.. சில விஷயங்களில் அடுத்தவர்களைப் பார்த்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டியதுதான்..

    ReplyDelete
  40. //நல்லதந்தி said...
    எந்த விதத்திலும் நம் கலாச்சாரத்தை விட சிறந்த கலாச்சாரம் எதுவும் இல்லை என்பது என் எண்ணம்!//

    தந்தி ஸார்.. கலாச்சாரம் என்ற ஒன்றே இல்லை. அது பழக்க, வழக்கம். பல்வேறு சமூகங்கள் ஒரே விஷயத்தில் பல்வேறு விதமாக பின்பற்றுவார்கள்.. அல்லது தொடர்வார்கள்.. அது அவரவர்களின் சுற்றுச்சூழல், குடும்ப வாழ்க்கை முறைகளை ஒத்தே அமையும். இதில் உயர்வு, தாழ்வு எதுவுமி்ல்லை.

    //இப்போது மேல் நாட்டு கலாச்சாரத்தைப் பின் பற்றி நீதிமன்றங்களில் மணவிலக்கு கேட்டு வரும் எண்ணிக்கை எவ்வளவு?//

    அதிகம்தான். ஆனால் அதற்குக் காரணம் மக்களின் கல்வியறிவு கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம். எவ்வளவு நாளைக்குத்தான் பொறுத்துப் போவது என்பதில்தான் இரு தரப்புமே முந்துகிறார்கள். ஸோ, இது காப்பியடிக்கப்பட்ட நிகழ்வுகள் அல்ல..

    //அதனால் அந்த குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் கதி என்ன?//

    கஷ்டம்தான்.. ஆனால் என்ன செய்ய.. பொதுவாகவே மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்து வருவதே இதற்குக் காரணம்..

    //இந்த மேல் நாட்டு கலாச்சாரத்தின் விளைவாக ஏதுவுமே தவறில்லை என்று நினைக்கின்ற பெண்களின் கதி என்ன?//

    அப்படி நினைக்கும் இரு பாலரின் எண்ணிக்கையும் சதவிகிதத்தில் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.. தப்பை யார் செய்தாலும் அதற்குரியத் தண்டனையை அவர் அனுபவித்தே தீருவார்.. அவருடைய வாழ்க்கை பலருக்குப் பாடமாகும்போது கூடும் எண்ணிக்கை பின்னாளில் நிச்சயம் குறையும். கவலை வேண்டாம்.

    //ஆண்களின் சாவு எப்படி?//

    வழக்கம் போலத்தான்..

    //இதையெல்லாம் யோசியுங்கள்.
    நம் கலாச்சாரத்தை விட சிறந்த ஒன்று இல்லை என்பது என்னுடைய திண்ணமான எண்ணம்!...இது பிற்போக்குத்தனமாக இருந்தால் அதற்கு, அப்படி நினைப்பவர்களை, நினைத்து வருத்தப்படுவதைத் தவிர எனக்கு வழியில்லை!//

    உங்களுடைய எண்ணத்தை நான் குற்றம், குறை சொல்ல முடியாது. ஏனெனில் அது உங்களுடைய நம்பிக்கை.. அவ்வளவுதான்..

    ReplyDelete