Pages

Friday, July 11, 2008

எனது 'புனிதப்போர்' குறும்படம்-உங்களுக்காக இணையத்தில்..!

11-07-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நான் இயக்கிய 'புனிதப்போர்' என்னும் குறும்படத்தை 'மக்கள் தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பியது பற்றி எனது இந்த http://truetamilans.blogspot.com/2008/05/blog-post_21.html பதிவில் சொல்லியிருந்தேன்

அப்போது படத்தினை பார்க்க முடியாதவர்களுக்காகவும், கடல் கடந்த தேசத்தில் இருக்கும் சக கொலைவெறியுடன் காத்திருக்கும் வலைப்பதிவர்களுக்காகவும் 'புனிதப்போர்' குறும்படத்தை இப்போது இணையத்தில் ஏற்றியிருக்கிறேன்.

கால தாமதத்திற்கு நானே முழுப் பொறுப்பேற்று கொள்கிறேன்.. என் அப்பன் முருகப் பெருமானின் திருவிளையாடல்களையெல்லாம் ஒரு வழியாகச் சமாளித்து, இப்போது அதே கோவணாண்டியின் பேருதவியால் இதனை வலையில் ஏற்றியுள்ளேன்.

ஆக இப்படித்தான் நடக்க வேண்டும் என்று 'அவன்' சொல்லும்போது நாம் என்ன செய்ய முடியும்..?

மக்களே.. கால நேரம் 10 நிமிடங்களுக்கு மேல் உள்ளதால் இரண்டு பைல்களாக மாற்றப்பட்டுள்ளன.

உங்களுடைய கருத்துக்களை சொல்ல வேண்டுமெனில் இதிலேயே கேட்கலாம்.. அல்லது உங்களது தளத்திலேயே தனிப்பதிவாகவும் போடலாம். அது அவரவர் வசதி.

ஆனால் தயவு செய்து எனது பதிலை உடனேயே எதிர்பார்க்காதீர்கள்.. முடியாத சூழலில் மாட்டிக் கொண்டுள்ளேன்.. தினமும் இரவு 8 மணிக்கு மேல்தான் நான் முழுச் சுதந்திரத்துடன் இணையத்தில் மேய முடியும்.

ஆக எப்படியும் உங்களுக்கு பதிலைத் தந்துவிடுவேன்..

நன்றி
பாகம்-1

பாகம்-2

42 comments:

  1. ஆகா படம் அருமை தமிழரே

    ReplyDelete
  2. செவுட்டு கம்முனாட்டி இவ்வளவு கேவலமான படத்தை இதுக்கு முன்னால் நான் பார்த்ததே இல்லைடா. இதை எடுத்ததுக்காகவே உன்னை தூக்கில போட்டு சாகடிக்கணும். செவுட்டு நாய் ஒண்ணு ஊர்லே செத்தா எவனும் கேட்கமாட்டான்.

    ReplyDelete
  3. அப்பாடி! ஒரு வழியாக முடிந்ததா? :-)

    ReplyDelete
  4. //கோவை விமல் said...
    ஆகா படம் அருமை தமிழரே..//

    அதிசயமாக முதல் நபராக வந்திருக்கிறீர்.. நன்றி விமல்..

    ReplyDelete
  5. //Anonymous said...
    செவுட்டு கம்முனாட்டி இவ்வளவு கேவலமான படத்தை இதுக்கு முன்னால் நான் பார்த்ததே இல்லைடா. இதை எடுத்ததுக்காகவே உன்னை தூக்கில போட்டு சாகடிக்கணும். செவுட்டு நாய் ஒண்ணு ஊர்லே செத்தா எவனும் கேட்கமாட்டான்.//

    மிக்க நன்றி முருகா..

    ReplyDelete
  6. //வடுவூர் குமார் said...
    அப்பாடி! ஒரு வழியாக முடிந்ததா?:-)//

    முடிந்தது குமார் ஸார்.. தங்களது ஆசிகளுக்கும், உதவிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  7. சார்,
    உங்கள் ப்லோக் இல் வெறும் இரண்டு சதுரங்கள் மட்டும் தெரிகிறது
    link தெரியம்மாட்டேன்கிறதே ! எதனால் ? தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  8. //சார்,
    உங்கள் ப்லோக் இல் வெறும் இரண்டு சதுரங்கள் மட்டும் தெரிகிறது link தெரியம்மாட்டேன்கிறதே ! எதனால் ? தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்//

    உங்களுடைய கம்ப்யூட்டரில் youtube தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அல்லது flash player install செய்யாமல் இருந்திருக்கலாம். இரண்டையும் சரி பார்க்கவும்.

    இல்லையெனில் நான் youtube-ன் தனி லின்க்கை இங்கே தருகிறேன். அதனை தனி browser-ல் open செய்து பார்க்கவும்.

    தாமத பதிலுக்கு மன்னிக்கவும் நண்பரே..

    Link

    1st Video -

    http://www.youtube.com/watch?v=UoJ_U9jn8nc

    2nd Video -

    http://www.youtube.com/watch?v=e6glxd4zX88

    ReplyDelete
  9. Nice one. Visuals are good. But bit boring to see faceless ppl speaking heavy lines. Still a nice one to watch till the end. Wishing u all the best.

    thamiz

    ReplyDelete
  10. எதற்காக வெளியிட்டு, பதிலும் ?

    ரிஜெக்ட் செய்யவும்...!!!

    படத்தை பார்த்தபின் விமர்சிக்கிறேன்...

    ReplyDelete
  11. பார்த்தேன் !
    நன்றாக இருந்தது !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  12. இந்த படத்துக்கு எதுக்கு புனிதப்போ'ன்னு பெயர் வைத்திருக்கிறீர்கள். படம் வெறும் 'போர்' மட்டும் தானே

    ReplyDelete
  13. தலைவா,
    கொஞ்சம் சுமாராத்தான் இருக்குது. வாய்ப்பை சிறப்பா பயன்படுத்தலைன்னுதான் சொல்லுவேன்.

    ஏதோ சிக்கல்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட சிக்கனமான படம்போல தோன்றியது.

    இன்னும் நன்றாக முயலவும். இதே மேடைப் பெச்சுக்களை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம் என்றே தோணுது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. //Unsettled Woman said...
    Nice one. Visuals are good. But bit boring to see faceless ppl speaking heavy lines. Still a nice one to watch till the end. Wishing u all the best.
    thamiz//

    Thanks 'Woman who is going to settle'.

    ReplyDelete
  15. //செந்தழல் ரவி said...
    எதற்காக வெளியிட்டு, பதிலும்? ரிஜெக்ட் செய்யவும்...!!! படத்தை பார்த்தபின் விமர்சிக்கிறேன்...//

    தெரியட்டும் என்றுதான்..

    இருக்கிறதே 14 நிமிஷம்தான்.. இதுக்கு நேரமில்லையா..? நல்லாயிருப்பூ..

    ReplyDelete
  16. //ARUVAI BASKAR said...
    பார்த்தேன்! நன்றாக இருந்தது !
    அன்புடன்
    அருப்புக்கோட்டை பாஸ்கர்//

    நன்றி பாஸ்..

    ReplyDelete
  17. //nagoreismail said...
    இந்த படத்துக்கு எதுக்கு புனிதப்போ'ன்னு பெயர் வைத்திருக்கிறீர்கள். படம் வெறும் 'போர்' மட்டும்தானே?//

    நன்றி ஸார்.. குபீர் சிரிப்பு எனக்குள்ளும் எழுந்தது.. மறைக்க விரும்பவில்லை..

    ReplyDelete
  18. //சிறில் அலெக்ஸ் said...
    தலைவா, கொஞ்சம் சுமாராத்தான் இருக்குது. வாய்ப்பை சிறப்பா பயன்படுத்தலைன்னுதான் சொல்லுவேன். ஏதோ சிக்கல்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட சிக்கனமான படம்போல தோன்றியது. இன்னும் நன்றாக முயலவும். இதே மேடைப் பெச்சுக்களை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கலாம் என்றே தோணுது. வாழ்த்துகள்.//

    சிறில் ஸார்.. நீங்களாவது புரிந்து கொண்டீர்களே.. மிக்க நன்றி.

    ஒன்றல்ல.. ஆயிரம் பிரச்சினைகள் அன்றைக்கு.. ஒரு புத்தகமே எழுதலாம்.. அந்தளவுக்கு சோதனைகளை கொடுத்துத்தான் முடிக்க வைத்தான் முருகன்.

    9 to 7 Callsheet-ல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். ஆனால் எனது துரதிருஷ்டம்.. வெறும் 3 மணி நேரத்தில் அனைத்தையும் மூட்டை கட்ட வேண்டியதாகிவிட்டது..

    இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் என்கிற உங்களுடைய ஆதங்கமே எனக்குப் புத்துயிர்ப்பு.. நிச்சயம் அடுத்த முயற்சிகளில் அதனை செய்து காட்டுகிறேன்..

    நன்றிகள் சிறில் ஸார்..

    ReplyDelete
  19. படம் இப்பத்தான் பார்த்தேன்.

    முகமில்லாமல் பேசும் ஆட்களை.....
    என்ன செஞ்சாத் தேவலாமுன்னு இருக்கு.

    படம் என்பதே ஒரு விஷுவல் மீடியா இல்லையா?

    அந்த இளநீர், பெப்ஸி கோக் எல்லாம் குடிச்ச ஆளுங்க, குடிச்ச பிறகு அப்படியே கீழே விழுந்து சாகறமாதிரி முடிச்சிருக்கலாம்.

    பெண்களை உயர்த்தவும் வேணாம். கீழே போட்டு மிதிக்கவும் வேணாம். சும்மா விட்டாலே போதும்.

    சப்போர்ட் பண்ணவருக்கு ஆசிட்?

    பொதுக்கூட்டத்துக்குப் போனமாதிரி இருக்குங்க.

    என்னமோ போங்க.

    ReplyDelete
  20. உண்மைத் தமிழன்,

    உங்கள் கடும் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ஒரு குறும்படம் பார்வையாளர்களின் மனதில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த அளவு வெற்றியடையும்.

    உதாரணமாக, 'செருப்பு' குறும்படத்தை சொல்லலாம்:

    http://www.youtube.com/watch?v=6GiljXULrjQ
    http://www.youtube.com/watch?v=SPY9jg6CF2k

    இதே போல பெண்ணுரிமை மறுப்பை வேறு கோணத்தில் சொல்ல முற்படும் 'மனுஷி' குறும்படம்:

    http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

    உங்களின் 'புனிதப் போர்' குறும்படம் போலவும் இல்லை, பொதுக்கூட்டம் போலவும் இல்லை.

    பரவாயில்லை. முயற்சியை தளரவிடாமல் தொடருங்கள்.

    ReplyDelete
  21. //துளசி கோபால் said...
    படம் இப்பத்தான் பார்த்தேன். முகமில்லாமல் பேசும் ஆட்களை..... என்ன செஞ்சாத் தேவலாமுன்னு இருக்கு. படம் என்பதே ஒரு விஷுவல் மீடியா இல்லையா? அந்த இளநீர், பெப்ஸி கோக் எல்லாம் குடிச்ச ஆளுங்க, குடிச்ச பிறகு அப்படியே கீழே விழுந்து சாகற மாதிரி முடிச்சிருக்கலாம். பெண்களை உயர்த்தவும் வேணாம். கீழே போட்டு மிதிக்கவும் வேணாம். சும்மா விட்டாலே போதும். சப்போர்ட் பண்ணவருக்கு ஆசிட்? பொதுக்கூட்டத்துக்குப் போன மாதிரி இருக்குங்க. என்னமோ போங்க.//

    ரீச்சர்... என்னமோ போங்க என்ற உங்களுடைய டிரேட் மார்க் கமெண்ட்டிற்கான அர்த்தம் எனக்குத் தெரியும். ஏற்றுக் கொள்கிறேன்...

    வருகைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  22. தம்பி கோபி..

    நீ தொடுத்திருக்கும் படங்களைப் பார்த்தேன். நன்றி..

    என்னுடையது பழைய, அரதப்பழசான கான்செப்ட் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அது தொண்டையில் குத்திய முள்ளாக இருப்பதால் எடுத்துத் தொலைத்தால்தான் எனக்கு நிம்மதி என்பதாலும்தான் அது எடுக்கப்பட்டது.

    உண்மையான விமர்சனத்திற்கு நன்றி..

    அப்புறம்..

    ஹீரோ வாய்ப்பெல்லாம் என்னாச்சு? கன்னட சினிமாவைவிட தமிழ் சினிமாவுக்கு வரலாம்..

    வந்தவர்களை வாழ வைப்பவர்கள் நாங்கள்தான்..

    ReplyDelete
  23. எழுத்து - இயக்கம் ச.சரவணன் என்று வரும்போது கை தட்டியது கேட்டதா தமிழரே?
    வாழ்த்துக்கள்! அடுத்த குறும்படம் எப்போது?

    ReplyDelete
  24. படம் பார்த்தேன்.ஒன்றும் சொல்வதற்கு இல்லை.ஆண் ஆதிக்க மனோபாவ எதிர்ப்பை இப்படி கூட்டம் கூட்டிப் பேசுவது குழந்தைத்தனமாக இருக்கிறது.அதை வீட்டிலேயே ஆண்கள் ரவுண்டு கட்டி காட்டலாம்.

    ”லொள்ளு சபா” போல் டீவி பட்டி மன்றத்தை நக்கல் செய்வது போல் இருக்கிறது.

    ReplyDelete
  25. Subject இன்னும் கொஞ்சம் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால் தொண்டையில் குத்திய முள் என்று சொல்லி விட்டீர்கள். எடுக்க நினைத்ததை முழுமையாக எடுப்பதில் தயக்கங்களோ தடையோ இருந்திருக்குமோ என்று தோன்றியது

    ReplyDelete
  26. பார்த்தேன். கேட்கமுடியவில்லை. காரணம் கணினி ம்யூட்டில் இருக்கிறது.

    ஆமாம் ஏன் கேமராவை தூக்கி பிடிக்கவில்லை ? யார் முகமும் சரியாக தெரியவில்லை.

    அடுத்த குறும்படத்தில் அனைவரையும் குனிந்து பேசச்சொல்லவும்.

    ReplyDelete
  27. [[[SP.VR. SUBBIAH said...
    எழுத்து - இயக்கம் ச.சரவணன் என்று வரும்போது கை தட்டியது கேட்டதா தமிழரே? வாழ்த்துக்கள்! அடுத்த குறும்படம் எப்போது?]]]

    முப்பதாயிரம் ரூபா வேணும் வாத்தியாரே.. கிடைச்சுட்டா நாளைக்கே ஷூட்டிங்குக்கு கிளம்பிறலாம்..!

    ஒரு வருஷம் கழிச்சு பதில் பின்னூட்டம்.. ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  28. [[[கே.ரவிஷங்கர் said...

    படம் பார்த்தேன். ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆண் ஆதிக்க மனோபாவ எதிர்ப்பை இப்படி கூட்டம் கூட்டிப் பேசுவது குழந்தைத்தனமாக இருக்கிறது. அதை வீட்டிலேயே ஆண்கள் ரவுண்டு கட்டி காட்டலாம். ”லொள்ளு சபா” போல் டீவி பட்டிமன்றத்தை நக்கல் செய்வதுபோல் இருக்கிறது.]]]

    நன்றி ரவிசங்கர்.. தாமதமான நன்றிகளுக்கு மன்னிக்கவும்..!

    இது எனது மனதில் தோன்றிய பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் எடுத்தே தீர வேண்டும் என்ற வெறி இருந்ததால் எடுத்துவிட்டேன்.. கான்செப்ட் பழசாகிவிட்டதை நானும் உணர்ந்துதான் இதனைச் செய்தேன்.. வேறு வழியில்லாமல்..!

    ReplyDelete
  29. [[[ஸ்ரீராம். said...
    Subject இன்னும் கொஞ்சம் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால் தொண்டையில் குத்திய முள் என்று சொல்லி விட்டீர்கள். எடுக்க நினைத்ததை முழுமையாக எடுப்பதில் தயக்கங்களோ தடையோ இருந்திருக்குமோ என்று தோன்றியது]]]

    நிறைய தடைக்கற்கள்.. நினைத்ததையெல்லாம் எடுக்க முடியாமல் போய்விட்டது.. வருந்துகிறேன்..!

    ReplyDelete
  30. [[[செந்தழல் ரவி said...

    பார்த்தேன். கேட்க முடியவில்லை. காரணம் கணினி ம்யூட்டில் இருக்கிறது. ஆமாம் ஏன் கேமராவை தூக்கி பிடிக்கவில்லை ? யார் முகமும் சரியாக தெரியவில்லை.
    அடுத்த குறும்படத்தில் அனைவரையும் குனிந்து பேசச் சொல்லவும்.]]]

    கான்செப்ட்டே யார் முகத்தையும் காட்டக் கூடாது என்பதுதான்..!

    ReplyDelete
  31. மன்னிக்கவும் நண்பா. படம் பிடிக்கவில்லை. முகபாவனைகளும் இல்லாமல் , லியோனி பட்டிமன்றம் கேட்ட உணர்வு,

    ReplyDelete
  32. [[[லதாமகன் said...
    மன்னிக்கவும் நண்பா. படம் பிடிக்கவில்லை. முக பாவனைகளும் இல்லாமல் , லியோனி பட்டிமன்றம் கேட்ட உணர்வு,]]]

    இதை எப்படி பார்த்தீங்க? நான்தான் உள்ளாற பூட்டி வைச்சிருந்தனே..!

    இருந்தாலும் பரவாயில்லை.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..!

    ReplyDelete
  33. ||துளசி கோபால் said...
    படம் இப்பத்தான் பார்த்தேன்.

    முகமில்லாமல் பேசும் ஆட்களை.....
    என்ன செஞ்சாத் தேவலாமுன்னு இருக்கு.

    படம் என்பதே ஒரு விஷுவல் மீடியா இல்லையா?

    அந்த இளநீர், பெப்ஸி கோக் எல்லாம் குடிச்ச ஆளுங்க, குடிச்ச பிறகு அப்படியே கீழே விழுந்து சாகறமாதிரி முடிச்சிருக்கலாம்.

    பெண்களை உயர்த்தவும் வேணாம். கீழே போட்டு மிதிக்கவும் வேணாம். சும்மா விட்டாலே போதும்.

    சப்போர்ட் பண்ணவருக்கு ஆசிட்?

    பொதுக்கூட்டத்துக்குப் போனமாதிரி இருக்குங்க.

    என்னமோ போங்க.||

    ரிப்பீட்டு... :(

    பை த வே... உங்களுக்கு வாழ்த்துகளும் உ.த. சார்...

    ReplyDelete
  34. நல்ல முயற்சி அண்ணே. இன்னும் பல ஆக்கங்களை நல்ல முறையில் படைக்க முருகன் துணையிருப்பான். :-)
    வாழ்த்துக்கள்.
    அரசு இயந்திரங்கள் :((

    ReplyDelete
  35. அலைந்த கதை நல்லாருக்கு..

    ஆனா படத்தின் கருத்து ஏற்பல்ல.

    ReplyDelete
  36. [[[கலகலப்ரியா said...

    ||துளசி கோபால் said...
    படம் இப்பத்தான் பார்த்தேன்.

    முகமில்லாமல் பேசும் ஆட்களை.....
    என்ன செஞ்சாத் தேவலாமுன்னு இருக்கு.

    படம் என்பதே ஒரு விஷுவல் மீடியா இல்லையா?

    அந்த இளநீர், பெப்ஸி கோக் எல்லாம் குடிச்ச ஆளுங்க, குடிச்ச பிறகு அப்படியே கீழே விழுந்து சாகறமாதிரி முடிச்சிருக்கலாம்.

    பெண்களை உயர்த்தவும் வேணாம். கீழே போட்டு மிதிக்கவும் வேணாம். சும்மா விட்டாலே போதும்.

    சப்போர்ட் பண்ணவருக்கு ஆசிட்?

    பொதுக்கூட்டத்துக்குப் போனமாதிரி இருக்குங்க.

    என்னமோ போங்க.||

    ரிப்பீட்டு... :(

    பை த வே... உங்களுக்கு வாழ்த்துகளும் உ.த. சார்...]]]

    கை வலியா..? ரிப்பீட்டு போட்டுட்டியேம்மா.. கலகலப்பிரியா செய்யற வேலையா இது..?

    சரி.. சரி.. நமக்கு இவ்வளவுதான்னு நினைச்சு கண்ணைத் தொடைச்சுக்குறேன்..!

    ReplyDelete
  37. [[[Vidhoosh said...
    நல்ல முயற்சி அண்ணே. இன்னும் பல ஆக்கங்களை நல்ல முறையில் படைக்க முருகன் துணையிருப்பான். :-)
    வாழ்த்துக்கள். அரசு இயந்திரங்கள் :((]]]

    நன்றியோ நன்றி..!

    அரசு இயந்திரங்கள் இன்னமும் இயந்திரங்களாகத்தான் இருக்கின்றன..!

    ReplyDelete
  38. [[[பயணமும் எண்ணங்களும் said...
    அலைந்த கதை நல்லாருக்கு.. ஆனா படத்தின் கருத்து ஏற்பல்ல.]]]

    தங்களின் வெளி்ப்படையான கருத்துக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  39. [[[கோக்குமாக்கு said...
    time waste]]]

    வெளிப்படையான பின்னூட்டத்திற்கு நன்றி கோக்குமாக்கு..!

    ReplyDelete
  40. இன்றுதான் தங்களது குறும் படத்தை பார்த்தேன். நல்ல முயற்சி. முகத்தை விட கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தது சரியே. குறும்படத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தவில்லையென்றாலும் இரசித்தேன். நாளைய இயக்குநர் என்கிற டிவிதொடர் பார்த்தால் நான் சொன்னது விளங்கும். மேலும் முயற்சிக்கவும். வாழ்த்துக்கள். எதிர்ப்புகளில் வலுவான வாதம் இல்லாததால் பொருட்படுத்த வேண்டியதில்லை. வாழ்த்துக்கள். அந்த சென்சார் பெண்மணி முழுவதும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete