Pages

Friday, February 29, 2008

தங்கை தமிழச்சிக்கு ஒரு வேண்டுகோள்

29-02-2008

அன்புத் தங்கை தமிழச்சிக்கு

இணையத்தளம் கட்டற்றத் தளம்தான் ஒத்துக் கொள்கிறேன்.

வலைத்தளம் என்பது நமது கருத்தை வெளிப்படுத்துவது. விரும்பினால் மற்றவர் கருத்தை எதிர்பார்ப்பது.. அல்லது மற்றவரின் கருத்துக்கு பதில் சொல்வது என்பது அவரவர் விருப்பம்தான்.

ஆனால் எல்லாவற்றிலும் ஒரு நாகரிகம் வேண்டும்..

சக வலைப்பதிவர்கள் என்பவர்கள் மனிதர்கள்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சுயமரியாதை உண்டு. அவன் கைதியாகவே இருந்தாலும் சரி.. அல்லது காவல்துறைத் தலைவராக இருந்தாலும் சரி..

உங்களது வீட்டுக்குள் இருந்து கொண்டு உங்களது வீட்டு உறுப்பினர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் திட்டலாம்.. யாரும் கேள்வி கேட்பார் இல்லை..

ஆனால் ஒரு பொதுத்தளத்தில் வந்து சக மனிதர்களை இப்படி ஏக வசனத்தில், 'டா' போட்டு பேசுவதும், 'போங்கடா' என்றும் 'பொறம்போக்குகளா' என்று ஏசுவதும் எந்த விதத்திலும் நாகரீகமில்லை.

தாங்கள் சொல்ல வந்த கருத்தை தவறு என்று நான் சொல்லவே இல்லை.

அது உங்களது தளம்.. உங்களது இல்லம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுஙகள். கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.

ஆனால் சக மனிதர்களை, அதிலும் உங்களது பதிவுகளை படிக்கப் போகும் சக வலைப்பதிவர்களை எழுதும்போதும் இப்படித்தான் எழுதுவதா..?

அப்படியானால் தங்கள் மனதைப் பாதித்தச் சம்பவங்களை எழுதிய பதிவர்கள் அனைவரும் முட்டாள்களா..?

இனி எந்தப் பதிவு எழுதினாலும் தங்களைக் கேட்டுக் கொண்டு எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்று அப்ரூவல் வாங்கிக் கொண்டு எழுத வேண்டுமா?

உங்களது பேச்சைக் கேட்காவிட்டால், உங்களது கொள்கைக்கு ஒத்துவராவிட்டால், உடனே 'போடா'.. 'வாடா'.. 'பொறம்போக்கு'.. என்றெல்லாம் பேசுவீர்களா..?

எந்த ஊர் நாகரிகம் இது..?

எங்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையாவது கொடுங்கள் தாயே..

'சுஜாதா செத்த அன்று ரஜினியும் செத்துப் போயிருந்தால்..' என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். 'நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா?' என்று வழக்குமொழி ஒன்றைச் சொல்வார்கள். அதற்கு உதாரணப்படுத்தியதைப் போல் சொல்லியிருக்கிறீர்கள்.

இது என்ன நாகரிகம் தங்கையே..?

இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட பகுத்தறிவா?

அடுத்த மனிதரையும் எப்போது சாகப் போகிறாய் என்று கேட்பதுதான் நாகரிகமோ..?

உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.. ஆனால் வீடு தேடி வந்து சட்டையைப் பிடித்து அடித்து கேட்பது போல் அநாகரிகமாக உள்ளது உங்களது இந்தப் பதிவு.

தயவு செய்து நீக்கி விடுங்கள். அல்லது பதிவை திருத்தி எழுதுங்கள்.

16 comments:

  1. உண்மைத்தமிழர்,

    இன்னுமா இதை எல்லாம் நம்புறிங்க :-))

    ஜெயலலிதா அடிக்கடி மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் சொல்வது நான் ஒரு பெண் என்றும் பாராமல் என்று அது போல தான் எதாவதுனா நான் ஒரு பெண் என்னை ஏன் குறிவைத்து தாக்குறார்கள் என்று திசை திரும்பிடும் , எனவே உஷார் அய்யா :-))

    ReplyDelete
  2. உங்கள் தலைப்பில் இருக்கும் நாகரீகம் அவர்தம் படைப்பில் இல்லையே என்பது தான் சுயமரியாதைக்காரர்களின் வருத்தம்...
    ஆபாச போஸ்டர் வேண்டாமென்று, மறைக்க முயலும் கூட்டம் ஒருபுறம், தம் வார்த்தைகளில் ஆபாசம் சேர்த்து
    விளம்பரம் தேடும் கூட்டம் மறு புறம்...விளம்பர உலகமிது நண்பா..

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள். வர வர ரொம்ப ஓவரா போகுது படம் எல்லாம் போட தொடங்கியாச்சு
    அன்புடன் மகி

    ReplyDelete
  4. சோ கணக்காக கலைஞரை கேவலமாக எழுதிய போது உங்க டீசன்சி எங்கே போனது அய்யா?

    ReplyDelete
  5. 'நீ மூடிட்டுப் போடா' அப்படின்னு வாங்கிக்கட்டிக்கொள்ள ஏதாவது வேண்டுதலா?

    ReplyDelete
  6. You are knocking a wrong door Mister Unmaiththamizan.

    Wrong doors & wrong places will give only troubles!

    Palani Thandayuthapani

    ReplyDelete
  7. அய்யா, தெருவில் போகும்போது பணிக்குச் செல்லும் சீருடையாளரையும் சந்திக்கிறோம், கல்லூரிக்குச் செல்லும் பொறுப்புக்கள் ஏற்காத பிள்ளைகளின் சேட்டைகளையும் பார்க்கிறோம், வசதி குன்றிய, உடல்நலம்குன்றிய பெரியவர்களையும் பார்க்கிறோம், மனநலம் பிறழ்ந்தவர்களையும் சந்திக்கிறோம், குடித்து போதையில் ஆடுபவர்களையும் காண்கிறோம்...எல்லோருடனுமா உரையாடுகிறோம் ? அதே நேரத்தில் வேண்டாதவர்களை வீதிக்கே வரவேண்டாம் என்றா சொல்கிறோம் ?
    இணையமும் அத்தகைய பொது இடமே.. நூலகமோ,ஆய்வு களமோ அல்ல. மரியாதை வேண்டுபவர்கள் மரியாதை தெரிந்தவர்களுடன் உரையாடுவது நலம். குடித்தவனுக்கு உதவப்போனால் வாந்தி மேலே விழுந்ததைப் பற்றி கவலைப் படக் கூடாது.

    ReplyDelete
  8. //வவ்வால் said...
    உண்மைத்தமிழர், இன்னுமா இதை எல்லாம் நம்புறிங்க :-)) ஜெயலலிதா அடிக்கடி மாட்டிக்கொள்ளும் போதெல்லாம் சொல்வது நான் ஒரு பெண் என்றும் பாராமல் என்று அது போல தான் எதாவதுனா நான் ஒரு பெண் என்னை ஏன் குறிவைத்து தாக்குறார்கள் என்று திசை திரும்பிடும் , எனவே உஷார் அய்யா :-))//

    என்ன செய்றது வவ்ஸ்..?

    யாராச்சும் கூட குரல் கொடுப்பாங்களான்னு பாக்குறேன்ன.. ஒருத்தரும் வாயைத் தொறக்க மாட்டேங்குறாங்க.. ஆமா நீங்க ஏன் ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க ஸார்..?

    ReplyDelete
  9. //கீழை ராஸா said...
    உங்கள் தலைப்பில் இருக்கும் நாகரீகம் அவர்தம் படைப்பில் இல்லையே என்பதுதான் சுயமரியாதைக்காரர்களின் வருத்தம்... ஆபாச போஸ்டர் வேண்டாமென்று, மறைக்க முயலும் கூட்டம் ஒருபுறம், தம் வார்த்தைகளில் ஆபாசம் சேர்த்து விளம்பரம் தேடும் கூட்டம் மறு புறம்...விளம்பர உலகமிது நண்பா..//

    விளம்பரத்திற்கு நாம்தான் கிடைத்தோமா ஸார்..? இது மாதிரி அவருடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களை அழைத்தால் சும்மா விடுவாரா அவர்..? ஏன் அடுத்தவர்களை மட்டுமே எள்ளி நகையாட வேண்டும்?

    ReplyDelete
  10. //மகி said...
    சரியாக சொன்னீர்கள். வர வர ரொம்ப ஓவரா போகுது படம் எல்லாம் போட தொடங்கியாச்சு
    அன்புடன் மகி.//

    படம் போடட்டும்.. அதுவும் ஒரு அளவுலதான் நிக்கணும்.. பார்க்கலாம்.. நன்றி மகி..

    ReplyDelete
  11. //Anonymous said...
    சோ கணக்காக கலைஞரை கேவலமாக எழுதிய போது உங்க டீசன்சி எங்கே போனது அய்யா?//

    யார் சாமி எழுதினது..?

    சோவா..?

    நானா..?

    தமிழச்சியா..?

    ReplyDelete
  12. //Anonymous said...
    'நீ மூடிட்டுப் போடா' அப்படின்னு வாங்கிக்கட்டிக்கொள்ள ஏதாவது வேண்டுதலா?//

    இல்லை.. அப்படி பேச மாட்டார் என்கின்ற எதிர்பார்ப்பில்தான்..

    ReplyDelete
  13. // Anonymous said...
    You are knocking a wrong door Mister Unmaiththamizan. Wrong doors & wrong places will give only troubles! Palani Thandayuthapani//

    முருகா.. சரியான கதவைத்தான் தற்போதைக்குத் தட்டியிருக்கிறேன்.. பிறகு உன் வீட்டுக் கதவுக்கு வருகிறேன்.. காத்திரு..

    ReplyDelete
  14. //Anonymous said...
    அய்யா, தெருவில் போகும்போது பணிக்குச் செல்லும் சீருடையாளரையும் சந்திக்கிறோம், கல்லூரிக்குச் செல்லும் பொறுப்புக்கள் ஏற்காத பிள்ளைகளின் சேட்டைகளையும் பார்க்கிறோம், வசதி குன்றிய, உடல்நலம் குன்றிய பெரியவர்களையும் பார்க்கிறோம், மனநலம் பிறழ்ந்தவர்களையும் சந்திக்கிறோம், குடித்து போதையில் ஆடுபவர்களையும் காண்கிறோம்...எல்லோருடனுமா உரையாடுகிறோம் ? அதே நேரத்தில் வேண்டாதவர்களை வீதிக்கே வரவேண்டாம் என்றா சொல்கிறோம் ?
    இணையமும் அத்தகைய பொது இடமே.. நூலகமோ,ஆய்வு களமோ அல்ல. மரியாதை வேண்டுபவர்கள் மரியாதை தெரிந்தவர்களுடன் உரையாடுவது நலம். குடித்தவனுக்கு உதவப்போனால் வாந்தி மேலே விழுந்ததைப் பற்றி கவலைப்படக் கூடாது.//

    நல்ல அறிவுரைதான் அனானி.. எனக்குத் தேவையானதுதான்.. ஆனால் சில சமயங்களில் மூளை சொல்வதை மனசு கேட்க மறுக்கிறது.. மனதின் பாதிப்பு அதிகமாக இருந்தபோது எழுதப்பட்டதுதான் இந்தப் பதிவு.

    எல்லாம் ஒரு நம்பிக்கைதானே.. மனிதர்களை பேசித்தான் பழக்க வேண்டும்.. அதுதான் இயற்கையான சரியான வழிமுறை..

    ReplyDelete
  15. உண்மைத்தமிழர்,

    //ஆமா நீங்க ஏன் ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க ஸார்..?//

    நாம் சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் சொல்லிட்டு தான் இருக்கோம், சிலர் பின்னூட்டமே வெளியிடுவதில்லை. நீங்கள் வெளியிடுவதால் தெரியுது.

    இதெல்லாம் நாலுப்பேர் நம்மை கவனிக்கிறார்களே என்று செய்வது, யாரும் கண்டுக்கலைனா காத்துப்போன பலூன் தான். இப்போவே ஒரு 4 பேரைத்தவிர பெரிதாக யாரும் கண்டுக்கொள்வதில்லை, உங்களைப்போல பதிவு போட்டா அது இலவச விளம்பரமாகவே எடுத்துக்கொள்வார்கள். எனவே கண்டுக்காம விட்டாலே தன்னாலே காணாமல் போய்விடும் வகையறா இதெல்லாம்.

    ReplyDelete