Pages

Saturday, September 01, 2007

விடாதுகருப்பு-நான்-மூர்த்தி-போலியார்

01-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அவ்வப்போது பதிவுகள் போடுவது வழக்கமென்றாலும், இந்த விஷயத்தில் நான் முன்பே பதிவு போட்டிருக்க வேண்டும். முடியவில்லை. காரணம், என் அப்பன் முருகன் எனக்குத் தொடர்ந்து கொடுத்த சோதனைகள், இந்த முறை 4 நாட்களுக்குத் தொடர்ந்துவிட்டதால் சற்றே பெரிய தாமதம்.. மன்னிக்கவும்.

வாந்தியும், பேதியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படித்தான் டோண்டு ஸாருக்கு வந்த நோய்கள், இன்று தமிழ்மணத்தின் கோபக்கார இளைஞர்களுக்குத் தொற்றியவுடன் அவர்களின் கோபக் கனலில் தமிழ்மணம் எரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது மிக, மிகத் தாமதமான கோபக் குரல் என்றே நான் கருதுகிறேன். எப்பொழுதே ஒட்டு மொத்தக் குரலாக ஒலித்திருக்க வேண்டும். கொள்கை, கோட்பாடு, ஒரே தலைவர் என்கின்ற பத்தாம்பசலி அடையாளங்களை முன் வைத்து, இந்த சைக்கோவுக்கு வலையுலக நண்பர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் அடையாளம் கொடுத்ததன் விளைவுதான், இன்றைக்கு அவரவர் வீடுகளில் தீ பற்றிக் கொண்டுள்ளது.

ஒரு மனநோயாளியை நம் உடன் வைத்திருக்கும்போது நம் முழு கவனமும் அவர் மீதுதான் இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.. எந்த நேரத்தில் என்ன செய்வார்? என்ன நடக்கும்? என்பது யாருக்கும் தெரியாது அல்லவா.. சில நிகழ்வுகள் நிகழ்ந்த பிறகு அது யாரால் நடந்தது என்று நோண்டிப் பார்த்து அது கடைசியில் மனநோயாளியை நோக்கிச் செல்லும்போது நம்மால் தார்மீக ரீதியாக அவரைக் குற்றம் சொல்ல முடியாதே.. அவர்தான் மனநோயாளியாச்சே..

விடாது கருப்புதான் மூர்த்தி. இந்த மூர்த்திதான் முத்தமிழ் மன்றத்தை நடத்துபவர். இவர்தான் ஆபாசக் களஞ்சியம் எழுதும் போலியார் என்பதை முதலில் பாதிக்கப்பட்ட டோண்டு ஸாரும், வரிசையாக பாதிக்கப்பட்ட பல தோழர்களும் ஆதாரத்தோடு எடுத்து வைத்திருந்தும் அவன் இல்லை.. அவனாக இருக்க முடியாது.. என்றெல்லாம் தங்களுக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அந்த சைக்கோவுக்கு அடையாளம் கொடுத்தவர்களே இன்றைக்கு பக்கம் பக்கமாக டைப் செய்து கொண்டிருக்கிறார்கள்..

கூடவே வலையுலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவரிடமே சமாதானப் பேச்சும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு சமாதானம் என்கின்ற வார்த்தைக்கு மதிப்பேது..?

இந்த சைக்கோ மேட்டரில் நானும் சிக்கிக் கொண்ட பிறகு நண்பர் செல்லாவிடம் பேசும் போதெல்லாம் தவறாமல் நான் கேட்ட கேள்வி, "விடாது கருப்புவிற்கு ஏன் நீங்கள் லின்க் கொடுத்திருக்கிறீர்கள்..?" என்று.. "இல்ல தலைவா.. அவர் பெரியாரோட தொண்டர்.. அவரா இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்.. ஏன்னா பெரியார் தொண்டர் எவரும் இப்படி எழுத மாட்டாங்க.." என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டேயிருந்தார்.

"டோண்டு ஸார் சொல்றாரே.." என்றால் "அவர் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டுமா? எனக்கு நம்பிக்கை இருக்கு.. விடாது கருப்பு, போலி இல்லை என்று.. அதனால்தான் லின்க் கொடுத்திருக்கிறேன்.." என்றார்.

ஆனால் எனது துவக்கக் காலத்திலேயே இந்த சைக்கோ விடாது கருப்புவாகத்தான் இருக்க வேண்டும் நான் நம்பினேன்.. அதற்கான நம்பிக்கை விதைகளையும் அந்த சைக்கோவே என்னிடம் விதைத்துவிட்டுச் சென்றார்.

சைக்கோ திடீரென்று வந்து, 'விடாது கருப்பு' வேஷத்தில் கூகில் டாக்கில் என்னோடு பேசுவார். அவர் பேசி முடித்துவிட்டுப் போன அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், போலியார் தனது ஆபாச கமெண்ட்டுகளை எனக்குப் போடுவார்.. நான் அதை ஒதுக்கித் தள்ளுவேன். இது தொடர் கதையாகவே இருந்தது. இது தொடர்ந்து நாள் கணக்கில் தொடரவே அன்றைக்கு யோசிக்கத் துவங்கினேன்..

ஒரு நாள் 'விடாது கருப்பு' கூகிள் டாக்கில் பேசி முடித்துவிட்டு 'பை' சொல்லிவிட்டுப் போன பிறகு தொடர்ந்து 5 முறை ஆபாச அர்ச்சனைகள் வந்தன. அவை எதையும் நான் தொடாமல் வைத்திருந்தேன். 6-வதாக வந்த அர்ச்சனையில் கூடுதலாக சில வரிகள்.. அவை "கூகிள் டாக்கை தொறந்து வைச்சுட்டு வெண்ணை.. என்னத்தடா புடுங்குற..? வந்த மெயிலை செக் பண்ணுடா புடுங்கி.." என்று முடிந்திருந்தது. இப்போது எனது கூகிள் டாக்கில் விடாது கருப்புவைத் தவிர வேறு யாரும் online-ல் இல்லை. இதுவும் எனது நம்பிக்கையை அதிகரித்தது.

தொடர்ந்து மறுநாளிலிருந்து விடாது கருப்பு கூகிள் டாக்கில் வரும்போது வேண்டுமென்றே "இப்போ குளோஸ் பண்றேன்.. வேலையிருக்கு.. ஒரு மணி நேரம் கழித்து வர்றேன்.." என்று சொல்லி கட் செய்வேன்.. சரியாக ஒரு மணி நேரம் கழித்து inbox-ஐ ஓப்பன் செய்தால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆபாச அர்ச்சனைகள் வரும்.

ஆனாலும் எனக்கு இருந்த பிடிவாதத்திற்கு, "நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது..?" என்ற நியாயமான கோபத்தில் தொடர்ந்து டோண்டு ஸாருக்கு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டேயிருந்தேன்.

இப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்து போய்க் கொண்டிருக்கும்போதுதான் எனக்கு கண்ணில் கண்ணீர் வரக்கூடிய அளவுக்கு போலியாரைவிட அதிகமாகத் தண்ணி காட்டிக் கொண்டிருந்த போலி உண்மைத்தமிழன் மேட்டர் வெளியானது.

மிகச் சரியாக அன்றைக்குத்தான் சைக்கோ மூர்த்தி, என் பெயரிலும் ஒரு ஆபாசத் தளத்தை(unmaithamizan.blogspot.com) உருவாக்கி வெளியிட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னையும் இன்வைட் செய்திருந்தார். நானும் அவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக அந்தச் செய்தியை எனது தளத்தில் வெளியிட்டு, வெளியீட்டு விழாவிற்கும் நேரில் சென்று ஆஜர் கொடுத்துவிட்டு வந்தேன்.

அப்போது நண்பர் செல்லாவிடம் கேட்டபோது இப்போதுதான் அவருக்கும் ஓரளவுக்கு சந்தேகம் வந்திருந்தது.. ஆனாலும் அப்போதும் தனது 'தோழரை' விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.

இதற்கு முன் தம்பி செந்தழல் ரவி கோவை வலைப்பதிவர் கூட்டத்திலேயே என்னிடம் இந்த சைக்கோவைப் பற்றி புட்டு புட்டு வைத்தார். இவ்வளவும் ரவிக்கு மட்டும்தான் தெரியும் என்று நான் நினைத்தது என்னுடைய மடத்தனம்தான்.

வலைத்தளத்தின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களுக்கும் முத்தமிழ் மன்ற மூர்த்திதான் போலியார் மற்றும் விடாது கருப்பு என்பது தெரியும். ஆனாலும் சிலருக்கு, 'கொள்கை பாசம்' கண்ணை மறைக்க அமைதி காக்கின்றனர் என்பதும் எனக்குப் புரிந்தது.

இந்த நேரத்தில்தான் நானும் வேண்டுமென்றே ஒரு நல்ல செயலை செய்தேன். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு தொலைபேசி தகவலின்படி, மூர்த்தியின் தளத்திற்குள் சென்று பார்த்தேன்.

முத்தமிழ் மன்றம் நடத்தும் மூர்த்திதான் விடாது கருப்பு என்னும் மூர்த்தி என்னும் போலியார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த தளத்தில் இருந்த ஒரு ஆன்மிகச் செய்தியை எடுத்து எனது பதிவில் போட்டுக் கொண்டேன்.

மூர்த்தியின் பெயரைச் சொல்லாமல் "அந்தப் பதிவருக்கு எனது நன்றி" என்று சொல்லி எழுதியிருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களையும் அனுமதித்திருந்தேன்.

அடுத்த நாளே எனது ஜிமெயில் முகவரிக்கு மூர்த்தியிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அந்தப் பதிவு தன்னுடையது என்றும், பின்னூட்டத்தில் தனது மனைவியின் பெயர் இருப்பதாகவும் அதை நீக்கி விடும்படியும் எழுதியிருந்தார். (அவருடைய மனைவியின் பெயர் அன்றுவரையில் எனக்குத் தெரியாது. யாரோ போலி பெயரில் அனானி கமெண்ட் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துத்தான் நானும் அதை அனுமதித்திருந்தேன்.)

நானும் அதற்கு வருத்தம் தெரிவித்து மெயில் அனுப்பிவிட்டு அந்த பின்னூட்டத்தை நீக்கினாலும், எனக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகத்தையும் துடைத்தெறிந்தது இந்த மெயில்தான்.

காரணம், என்னுடைய ஜிமெயில் முகவரியை நான் இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே மறைத்துவிட்டேன். எனது ஜிமெயில் முகவரியை அறிந்து சாட்டிங் செய்ய வருபவர்களில் விடாது கருப்பு உட்பட 10 பேர்கள்தான்.. வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒன்று, தெரிந்தவர்கள் மூர்த்தியிடம் சொல்லியிருக்க வேண்டும். அல்லது விடாது கருப்புதான் இந்த மூர்த்தியாக இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இந்த உறுதியை உறுதி செய்வதைப் போல் மறுநாளிலிருந்து மூர்த்தி மெயில் மூலம் ஆபாச மொழியில் அர்ச்சனை மழை பொழிந்தார்.

எனக்கிருந்த சந்தேகங்கள் முழுவதையும் அவருடனான கூகிள் டாக்கிலேயே கேட்டுத் தெளிந்து கொண்டேன்.

உங்களுக்கும் சந்தேகங்கள் தீர வேண்டுமெனில் இந்தத் (http://www.zshare.net/download/3416645f499902) தளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்து படித்துத் தெளிந்து கொள்ளுங்கள்.

இன்றைக்கு மோதல் என்பது வெட்ட வெளிச்சமானவுடன், இத்தனை நாட்கள் தெரிந்து வைத்திருந்த செய்திகளெல்லாம் தேர்ந்த திரைக்கதையுடன் உங்கள் முன் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் என்னுடைய ஆதங்கம் ஒரே வரியில்..

"இதை முன்னாடியே செஞ்சு தொலைஞ்சிருக்கலாமே.."

17 comments:

  1. hmmm ithu than pasu thol porthiya pulinu solluvangalo?

    ReplyDelete
  2. //ஆனால் இது மிக, மிகத் தாமதமான கோபக் குரல் என்றே நான் கருதுகிறேன். எப்பொழுதே ஒட்டு மொத்தக் குரலாக ஒலித்திருக்க வேண்டும்//

    இது!!

    ReplyDelete
  3. http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_11.html என்னும் பதிவில், "டோண்டு ஸார் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கு விடாது கருப்பு ஒரு எதிர் கருத்தைச் சொல்லியிருக்கிறார். இப்போது மீண்டும் டோண்டு ஸார் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார். இதற்கு விடாது கருப்புதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எவரும் இல்லை. என்னைப் பொறுத்தவரையிலும் டோண்டு ஸாரும், தோழர் விடாது கருப்புவும் ஒரே மாதிரியான நண்பர்கள்தான். இதில் எந்த மாற்றமுமில்லை."
    என்று புதன், ஜூன் 13, 2007 காலை 11:11:00-க்கு கூறிய உண்மைத் தமிழனும் இப்போது உண்மையை உண்மையாகவே ஒப்புக் கொண்டது எனக்கு உண்மையாகவே வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி என்பதுபோல மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  4. //மதுரை மச்சி said...
    hmmm ithu than pasu thol porthiya pulinu solluvangalo?//

    சாதா புலி அல்ல மச்சி.. கழுதைப் புலி..

    ReplyDelete
  5. //dondu(#11168674346665545885) said...
    http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_11.html என்னும் பதிவில், "டோண்டு ஸார் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கு விடாது கருப்பு ஒரு எதிர் கருத்தைச் சொல்லியிருக்கிறார். இப்போது மீண்டும் டோண்டு ஸார் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார். இதற்கு விடாது கருப்புதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எவரும் இல்லை. என்னைப் பொறுத்தவரையிலும் டோண்டு ஸாரும், தோழர் விடாது கருப்புவும் ஒரே மாதிரியான நண்பர்கள்தான். இதில் எந்த மாற்றமுமில்லை."
    என்று புதன், ஜூன் 13, 2007 காலை 11:11:00-க்கு கூறிய உண்மைத் தமிழனும் இப்போது உண்மையை உண்மையாகவே ஒப்புக் கொண்டது எனக்கு உண்மையாகவே வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி என்பதுபோல மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. :)))
    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    இதில் உள் குத்தோ, கிண்டலோ இல்லையே..

    அந்த நேரத்தில், அந்த இடத்தில் நீங்கள் இருவரும் என்னுடைய கமெண்ட் பாக்ஸை நிரப்ப வரும் ஒரு வலைப்பதிவர்கள்.. அவ்வளவே.. அப்போது இருவரும் ஒருவர்தானே.. அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்..

    வேறு மாதிரி அர்த்தம் எடுத்துக் கொண்டீர்களென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல..

    ReplyDelete
  6. Super..Karuppu..kozuppu adangattum.

    ReplyDelete
  7. மூர்த்தியும் நீங்களும் அளவளாவிய gmail களை எனக்கு செய்யவும்.
    dont copy/paste, forward as-is.

    எனக்கு மூர்த்தி பெயரில் வந்த கமெண்டில் உங்கள் gmail சாட் எல்லாம் இருந்தது. அவனின் பாஷையை பார்க்கும்போதே தெரிகிறது 100% அந்த சைக்கோ அதேதான்.

    நன்றி!

    ReplyDelete
  8. புரிந்துகொண்டேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  9. Friend

    Everyone knows moorthy is the culprit. don't waste your time on investigation and writing. no one has courage to take action against him. because it is internet

    ReplyDelete
  10. annachi daily kalankathala elunthu blogs a open panale puthusu puthusa naatham pidicha matter a veliya varuthu kadantha sila naala. thalaiya pichukalam pola iruku. doondu blog la inaiku puthusa oru mattera potu irukan

    http://doondu.blogspot.com/2007/09/blog-post.html

    paythiyam than pidikuthu onume puriyala ulagathila marmama iruktuhu. yaar nallavan yaar ketavanuku puiryalaye aandava.

    ReplyDelete
  11. போற போக்க பார்த்தா அனானியா கமெண்டு வந்தாலே போலிடோண்டுன்னு முடிவு கட்டிடுவாங்க போலிருக்குது. எதோ போலியாரை தவிர மற்ற அனைவரும் உத்தமபுத்திரர்களோ? அவனவன் நிலை அவனவனுக்கு தெரியும். இதில் எதற்கு தான் தான் போலியாரை கண்டு பிடித்துவிட்டது போல ஏதோ பெரிய ஷெர்லாக்ஹோம்ஸ் போல் குதித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை.

    பெங்களூரிலிருந்து ஒரு சைக்கோ வார இறுதியில் திராவிட தோழர்கள் தளத்திற்கு சென்று ஆபாச கமெண்ட் போடுவதை தொழிலாக வைத்திருக்கிறார். இவரும் ஒரு போலிதான். அனானியாக வந்து பதிவிட்டுவிட்டு ஓடுவது தான் அந்த பெங்களூர் நாதாரிக்கு தொழில். இவருக்கு ஆப்படித்தவர்கள் யார் என்று லிஸ்ட் போட்டிருந்தது கருப்புபையன் ப்ளாக்ஸ்பாட்டில்.

    ReplyDelete
  12. //மூர்த்தியும் நீங்களும் அளவளாவிய gmail களை எனக்கு செய்யவும். dont copy/paste, forward as-is. எனக்கு மூர்த்தி பெயரில் வந்த கமெண்டில் உங்கள் gmail சாட் எல்லாம் இருந்தது. அவனின் பாஷையை பார்க்கும்போதே தெரிகிறது 100% அந்த சைக்கோ அதேதான். நன்றி!//

    சர்வேஸன் ஸார்.. நான் அவற்றையெல்லாம் டாக்குமெண்ட் பைலாக மாற்றி http://www.zshare.net/download/3416645f499902 - இந்த இடத்தில் upload செய்துள்ளேன். இதைத்தான் போலியார் உங்களுக்கு மெயில் செய்துள்ளார். உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும்கூடத்தான் அனுப்பியுல்ளார். நீங்களும் டவுன்லோட் செய்து பாருங்கள்.. இரண்டும் ஒன்றுதான்..

    ReplyDelete
  13. //வடுவூர் குமார் said...
    புரிந்துகொண்டேன். மிக்க நன்றி.//

    நன்றி வடுவூர் ஸார்.. விடாது கருப்புவுடன் சாட்டிங் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதால்தான் இதை வெளியிட்டேன்..

    ReplyDelete
  14. //Anonymous said...
    Friend, Everyone knows moorthy is the culprit. don't waste your time on investigation and writing. no one has courage to take action against him. because it is internet.//

    நண்பரே, இதை வெளியிட்டது, பதிவு வெளியிட்டது எங்களுடைய துப்பறியும் மூளையைக் காட்டுவதற்காக அல்ல.. புதிதாக வலைத்தளத்தில் நுழைந்திருக்கும் நண்பர்கள் என்னைப் போல் இந்தச் சாக்கடையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதால்தான்.. வேறு ஒன்றுமில்லை.. இதைப் படித்து நான்கு பேராவது போலியாரின் கைகளுக்குள் சிக்காமல் தப்பித்தாலே எனக்கு சந்தோஷம்தான்..

    ReplyDelete
  15. //மதுரை மச்சி said...
    annachi daily kalankathala elunthu blogs a open panale puthusu puthusa naatham pidicha matter a veliya varuthu kadantha sila naala. thalaiya pichukalam pola iruku. doondu blog la inaiku puthusa oru mattera potu irukan
    http://doondu.blogspot.com/2007/09/blog-post.html
    paythiyam than pidikuthu onume puriyala ulagathila marmama iruktuhu. yaar nallavan yaar ketavanuku puiryalaye aandava.//

    மதுரை மச்சி..

    நம்ம ஊர் பாஷைல நம்மகிட்டயே மட்டை உரிக்க வாரான்..உஷாராஇ இருந்துக்குங்க.. காலங்கார்த்தாலன்னா 5.30 மணி இருக்குமே.. கரெக்ட்டா.. ஏன்னா மலேசியா அப்போ நேரம் 9.30. அதான் நமக்கு காலங்கார்த்தால மாதிரி தெரியுது.. அவருக்கு ஆபீஸ் வந்து உட்கார்ந்த உடனேயே முதல் போணி நீங்கதான்னும் புரியுது..

    பில்டரை வைச்சு வடி கட்டிருங்க.. தொடவே தொடாதீங்க.. பக்கத்துல வீட்ல இருக்குறவங்க யாரும் இல்லாம பார்த்துக்குங்க.. வேற என்ன செய்றது? தமிழை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டியிருக்கு பார்த்தீங்களா..? புதுசா யார் வந்திருந்தாலும் அவுங்ககிட்ட கொஞ்சம் இதை காதுல போடுங்க..

    ReplyDelete
  16. //Anonymous said...
    போற போக்க பார்த்தா அனானியா கமெண்டு வந்தாலே போலிடோண்டுன்னு முடிவு கட்டிடுவாங்க போலிருக்குது. எதோ போலியாரை தவிர மற்ற அனைவரும் உத்தமபுத்திரர்களோ? அவனவன் நிலை அவனவனுக்கு தெரியும். இதில் எதற்கு தான் தான் போலியாரை கண்டு பிடித்துவிட்டது போல ஏதோ பெரிய ஷெர்லாக்ஹோம்ஸ் போல் குதித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை.
    பெங்களூரிலிருந்து ஒரு சைக்கோ வார இறுதியில் திராவிட தோழர்கள் தளத்திற்கு சென்று ஆபாச கமெண்ட் போடுவதை தொழிலாக வைத்திருக்கிறார். இவரும் ஒரு போலிதான். அனானியாக வந்து பதிவிட்டுவிட்டு ஓடுவது தான் அந்த பெங்களூர் நாதாரிக்கு தொழில். இவருக்கு ஆப்படித்தவர்கள் யார் என்று லிஸ்ட் போட்டிருந்தது கருப்புபையன் ப்ளாக்ஸ்பாட்டில்.//

    அனானி ஐயா.. கருப்பு பையன் என்பவரே ஒதுக்கப்பட வேண்டியவர் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவருடைய 'ரீல்'களையெல்லாம் நம்புவது உங்களுடைய இஷ்டம்.. அதில் நான் தலையிட முடியாது..

    ReplyDelete