Pages

Monday, June 11, 2007

நான் எந்த ஜாதி..?

11-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


அபின், கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதை வஸ்துக்களை விடவும், மது என்ற கொடிய அரக்கனை விடவும், பணம் என்னும் மயக்கத்தில் ஆழ்த்தும் பேராசையை விடவும் நம் இளைஞர்களை அதிகம் பீடித்திருப்பது 'ஜாதி' என்கின்ற கொடிய பேய்..

பிரசவம் பார்க்க மருத்துவனைக்குச் சென்ற என் தாய் மருத்துவர் என்ன ஜாதி என்று கேட்டிருப்பாளோ என்று என்னால் நினைக்க முடியவில்லை.

பிறந்தவுடனேயே கையை, காலை உதைத்துக் கொண்டு வீறிட்டு அலறிய நம்மை, முதலில் தூக்கியது எந்த ஜாதிக்காரர் என்பது நம்மைப் பெற்றெடுத்தவளுக்கேத் தெரியாது..

அக்கம்பக்கம் வீட்டார் முறை வைத்து நம்மைத் தூக்கி மகிழும்போதெல்லாம் ஜாதியைக் கேட்டுவிட்டுத்தான் நமது பெற்றோர், நம்மை அவர்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என்று நாம் கருத வாய்ப்பே இல்லை..

நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு மாத தவணையாக மளிகைப் பொருட்கள் கொடுத்த கடைக்காரர், நம்மிடம் ஜாதியைக் கேட்டுத்தான் கடன் கொடுத்திருப்பார் என்ற கருத்துக்குத் துளியும் இடமில்லை.

தண்ணீருக்காக தெருத்தெருவாக அலைந்தபோது எவனோ ஒரு டிரைவர் ஓட்டி வந்த லாரியில் அடிதடிகளுக்கிடையில் தண்ணீரைப் பிடித்த நம் குடும்பத்தினர், அவ்வளவு கூட்டத்திலும், நெருக்கடியிலும் டிரைவரிடம் ஜாதி கேட்டிருப்பார்களோ என்று நினைக்கவே தோன்றவில்லை.

பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, பக்கத்து வீட்டுப் பையனைக் காட்டி "அவன்கூட போய் சூதானமா வந்திரு சாமி.." என்று தெருக்கோடி வரைக்கும் வந்து பயத்துடன் விட்டுவிட்டுப் போன என் அம்மாவுக்கு என் தோழனின் சாதியைப் பற்றிக் கவலையிருந்திருக்காது..

எழுத்துக் கூட்டிச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள் என்ன ஜாதி என்று கேட்டு எனது தந்தையும், அல்லது உங்களது தந்தையும் என்னையும், உங்களையும் பள்ளியில் சேர்த்திருக்க மாட்டார்கள்.

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நம் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் அவர்கள் என்ன ஜாதி என்று கேட்கக்கூடிய வாய்ப்பே நமக்குக் கிடைத்திருக்காது. அவர்கள் நமது சக மாணவர்கள்.. நண்பர்கள்.. தோழர்கள்.. அவ்வளவுதான்..

ஓடிப் பிடித்து விளையாடும்போதும், காயம்பட்டு சிராய்ப்புடன் அழுகும்போது துணிகளைக் கொண்டுத் துடைத்துவிட்ட நண்பர்களிடம் என்ன ஜாதி என்று என்றைக்குமே நாம் யாரும் கேட்டதில்லை.

எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சென்றபோது அரவணைத்துக் கொண்ட நண்பர்கள் அனைவரும் சொன்னது.. "நன்றாக பந்து வீசுகிறாய்.. டீமில் சேர்ந்துவிடு.." என்று.. அவர்களோ, நானோ ஜாதி பற்றிப் பேசிக் கொள்ளவில்லை.

"சாயந்தரம் வீட்டுக்கு வா. எங்கம்மா எனக்கு கணக்குச் சொல்லித் தரும்போது நீயும் கூட இருந்து கேட்டுக்க.." என்று என்னை அழைத்துச் சென்ற நண்பனின் தாய், போகும்போதெல்லாம் சோறு போட்டு, சொல்லிக் கொடுத்தவர் அந்த ஒரு வருடப் படிப்பு முடியும்வரையில் கேட்காத கேள்வி, "நீ என்ன ஜாதி..?" என்பது...

தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவனையில் உடன் இருந்து தாதி வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஓடி வந்து உதவியர்கள் ஒரு நோயாளியாகப் பார்த்தார்கள் என் தந்தையை.. என் ஜாதியைக் கேட்கவில்லை.

மருத்துவமனையில்தான் எத்தனை மருத்துவர்கள், எத்தனை நோயாளிகள், எத்தனை தாதிகள்.. அத்தனை பேரும் ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொள்ளாத வார்த்தையும் யார் யார் என்ன ஜாதி என்பதைத்தான்..

தீ விபத்தில் காயம்பட்டு வந்த இளம்பெண்ணைக் காப்பாற்ற, பெட்டில் சேர்த்திருந்த மனைவிக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்த ஒருவர், என் கண் முன்னேயே ஒரு பாட்டில் ரத்தம் கொடுத்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அந்தப் பெண்ணும் சரி.. அந்த நபரும் சரி பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவேயில்லை என்ன ஜாதி என்று..?

பஸ்ஸில் செல்லும்போது உட்கார சீட் கிடைத்தால் அருகில் இருப்பவர் நம்ம ஜாதி இல்லையே என்று சொல்லி யாரும் அமராமல் இருப்பதில்லை.

டாஸ்மாக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக 500 ரூபாய் தாளை நீட்டி பாட்டில் கேட்கும்போது, கொடுப்பவன் என்ன ஜாதி என்று எந்த ஜாதிச் சிங்கங்களும் கேட்பதில்லை.

அரை வயிறு சோற்றுக்காக வேறு வழியே இல்லாமல் தன் உடலை விற்க வரும் பெண்ணிடம், எந்த ஆணும் அவளுடைய ஜாதியைக் கேட்ட பின்பு தன் சட்டையைக் கழற்றியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

பண உதவிக்காக 'தனம்' இருப்பவர்களை அணுகும்போது, அவர்களிடம் ஜாதி கேட்டு தங்களது வீட்டுத் தன்மானத்தை யாரும் அடகு வைப்பதில்லை.

தங்களது வசதிக்காக வாகனத்தைத் தேர்வு செய்பவர்கள், அதை இந்த ஜாதிக்காரர் கடைகளில்தான் வாங்குவேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை.

எவ்வளவு பசியோடு இருந்தாலும் என் ஜாதிக்கார நாயின் ஹோட்டலில்தான் நான் சாப்பிடுவேன் என்று எந்த ஜாதிக்காரனும் சொல்லி நான் கேட்டதில்லை.

என் ஜாதிக்காரனின் பஸ்தான், கார்தான், வாகனம்தான் எனக்கும் என்று எந்த ஜாதிக்கார தறுதலையும் கதறி நான் பார்த்ததில்லை.

எந்தக் கட்சியில் நான் இருந்தாலும் தேர்தலின்போது என் ஜாதிக்காரர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்பேன் என்று எந்தவொரு அரசியல்வாதி சொல்லியும் நான் படித்ததில்லை.

லஞ்சப் பணம் வாங்கும்போது அதைக் கொடுப்பவன் தன் ஜாதிக்காரனா என்று கேட்ட பிறகு பணக்கட்டை உரசிப் பார்க்கும் பழக்கமுள்ள அரசியல்வாதிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை..

எனக்குப் பிடித்த மேல்கல்வியைக் கற்கும்போது எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், கடைசிவரையிலும் என்னிடம் கேட்காதது நான் என்ன ஜாதி என்பதுதான்.

எனக்குப் பிடித்த வேலையில் இறங்கியபோது வாய்ப்பளித்தவர்களுக்கு இன்றுவரையிலும் நான் என்ன ஜாதி என்பது தெரியாது..

எனக்குப் பிடித்தத் தொழிலில் இறங்கியபோதும் உற்சாகமூட்டியவர்களும், தொழிலைக் கற்றுக் கொடுத்தவர்களும் என் ஜாதி என்ன என்று என்னைக் கேட்கவேயில்லை.

எனக்குப் பிடித்தத் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் பற்றிப் பலரிடம் பேசும்போதும் இந்த ஜாதி பிரச்சினை என்னைச் சுற்றி எழவேயில்லை.

நண்பர்களை விரட்டி விரட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது, அனைவருமே "தலைவா.." என்றுதான் சொன்னார்களே ஒழிய "நீ என்ன ஜாதி..?" என்று கேட்கவில்லை.

எனக்குப் பிடித்தமான எழுத்துக்கு ஒரு வடிகால் கிடைக்கிறதே என்று வலைத்தளத்தில் நுழைய முயற்சித்த போது 'அரவணைத்த கைகள்' எழுது கோலைத்தான் கைகளில் திணித்ததே தவிர.. 'என் ஜாதி என்ன...?' என்று கேட்டுத் தயங்கி நிற்கவில்லை.

எனக்குப் பிடித்த வலைத்தளத்தில் முனைப்போடு ஒரு நாள் இறங்கியபோது சொல்லிக் கொடுத்த 'தெய்வத்திற்கு' இன்றுவரை நான் என்ன ஜாதி என்பது தெரியாது..

எனக்குப் பிடித்தமான வகையில் முதன்முதலில் எழுதிய கட்டுரைக்கு முதல் பின்னூட்டமிட்ட அந்த நண்பரும் 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டுப் போடவில்லை.

அதற்குப் பதில் போட்ட எனக்கும் அதைக் கேட்கும் எண்ணமில்லை.

எனக்குப் பிடித்தமான முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வலைஞர்கள் அனைவரும், 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டு தங்களது பேச்சைத் துவக்கவில்லை.

எனக்குப் பிடித்த வலைத்தளத்தின் மாநாடுகளில் தங்கு தடையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது என் பெயர்தான் கேட்கப்பட்டதே தவிர, என் ஜாதி என்ன என்ற கேள்வி எங்கும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால்தான் உனது வலைத்தளத்திற்குள் வருகிறோம் என்று எவரும் என்னிடம் சொன்னதில்லையே..

ஆனால்....

இப்போது....

எனக்கு எப்போதும் பிடித்தமான முறையில் தொடர்ந்து எழுதி வரும்போது, "நான் என்ன ஜாதி..?" என்ற கேள்வியே இப்போதெல்லாம் பதிலாக வருகிறதே..

ஏன்?

என் வாழ்க்கையின் இத்தனை நாட்களிலும் உடன் இருந்தவர்களுக்கும், இருந்து பழகியவர்களுக்குமே இதுவரையிலும் தோன்றாத எனது ஜாதியைப் பற்றிய சந்தேகம், இப்போது வலைத்தளத்தில் எங்கேயிருந்து தோன்றியது என்பது எனக்குத் தெரியவில்லை.

குற்றம் என்னுடைய பிடித்தமானதினாலா அல்லது எனது எழுத்தினாலா?

எனது பிடித்தமானதினால்தான் என்றால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் விருப்பமும் ஒரே மாதிரியிருக்கிறதா?

எழுத்தினால்தான் என்றால் அத்தனை ஜாதியினரின் எழுத்தும் ஜாதிக்கு ஜாதிக்கு வித்தியாசமாகத் தெரிந்துவிடுமா?

எனக்குப் புரியவில்லை.

கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், எனது எண்ணங்களுக்கும் பதில் எனது ஜாதிதான் என்றால், எனது ஜாதியைச் சேர்ந்த அனைவரும் ஏன் என்னுடன் இல்லை..?

என் ஜாதியைச் சேர்ந்த பலரும் ஏன் எனது தலைக்கு மேல் அமர்ந்திருக்கிறார்கள்.. நான் கீழே இருக்கிறேன்...?

ஜாதிதான் ஒரு மனிதனின் எழுத்தைத் தீர்மானிக்கிறது என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' எதை வைத்துச் சொல்கிறார்கள்?

'என்ன ஆதாரத்தின் கீழ் இந்தந்த ஜாதிக்காரர்களுக்கு இப்படித்தான் எழுத்து வரும்' என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' யோசிக்கிறார்கள்..?

இந்த 'ஜாதிச் சிங்கங்களும்', நானும் ஒரு நாளில் மரித்துப் போனால் அவரவர் வீடுகளில் ஒரு நாள்தானே வைத்திருக்கமுடியும். மறுநாள் தூக்கித்தானே ஆக வேண்டும். இல்லாவிடில் வீடு நாறிவிடுமே..

கொண்டு போக வேண்டிய இடத்திற்குச் சென்றாலும், எல்லா ஜாதிக்கும் ஒரே மாதிரிதானே..

நெருப்பு, ஜாதிக்கு ஜாதி மாறாதே..

ஒரு சொம்பு.. ஒரே சொம்பு.. துணியால் மூடி ஒரு மணி நேரத்தில் கையில் தருவார்கள்.. அவ்வளவுதான்..

அதில் இதுவரையிலும் ஆட்டம் காட்டிய அத்தனை ஜாதித் திமிரும் இருக்கும்.

அப்போது அதைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்..?

42 comments:

  1. Don't worry Mamu, keep up your good work and don't worry about all these nonsense.

    ReplyDelete
  2. ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
    தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
    கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

    வீடுவரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை யாரோ?

    ஆடும் வரை ஆட்டம்
    ஆயிரத்தில் நாட்டம்
    கூடிவரும் கூட்டம்
    கொள்ளிவரை வருமா? (வீடு)

    தொட்டிலுக்கு அன்னை
    கட்டிலுக்குக் கன்னி
    பட்டினிக்குத் தீனி
    கெட்ட பின்பு ஞானி! (வீடு)

    சென்றவனைக் கேட்டால்
    வந்துவிடு என்பான்
    வந்தவனைக் கேட்டால்
    சென்று விடு என்பான்! (வீடு)

    விட்டுவிடும் ஆவி
    பட்டுவிடும் மேனி
    சுட்டுவிடும் நெருப்பு
    சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

    கவியரசு கண்ணதாசனின் இவ்வரிகளை படித்த உணர்வு உங்கள் இப்பதிவை படித்த போதும் வந்தது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...இதுக்கெல்லாம் போய் ஃபீல் ஆனா என்னாவறது....

    அப்புறம் "குட்டி பதிவு" போடுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க ராசா...புண்ணியமாப் போகும்...ஹி..ஹி...

    ReplyDelete
  4. இதென்ன தல இப்படி கேட்டுட்ட... சில பேர் வலைபதிவர் சந்திப்புக்கு வந்து போண்டா சாப்பிடுவதே, அடுத்தவன் என்ன சாதின்னு கேட்டு உறுதிப்படுத்திக்கத் தான்.. அப்படியாப்பட்ட பாரம்பரியமிக்க வலைபதிவுகளில் எழுதிகிட்டு எழுத்துக்கு சாதி கேட்கிறான்னு பொலம்புறது கொஞ்சம் கூட நியாயமில்ல சொல்லிட்டேன்...

    ReplyDelete
  5. neenka saathiyaipatti muthalil eluthiyathellaam sarithaan -
    aanalum marupathirkillai athan ukkirathai - thenthamilnadu centu paarunkal - this is my experience when some one introduced himself with me he told that `i belong to this caste'- why, but i didn't ask him - because i am not belong to the upper caste - athanaal naan athai thavirka othunkukirano
    pokkatum - vizhikka marukkum makkal-
    milk parukumpothu athu karanthavanum, rice marttum veru pala thaaniyankalum, kaaikarikalaum unnumpothu athai than viyarvai cintha ulaitha ulaipaaliyin jaathi kannukku therivathalli - kaaranam ithai ellam paarthaal saapidave mudiyaathu - jaathi nam vasathikkum, thevaikkum thagunthavaaru polum - nanba

    ReplyDelete
  6. நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

    ReplyDelete
  7. திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு நண்பரே.

    அதிக வேலை பளுவால் பின்னூட்டம் இட முடியவில்லை.

    மிகவும் நல்ல பதிவு. என் மனதில் உதித்த நல்ல நினைவுகள்தான் நீங்கள் எழுதியதும்.

    நானும் இதே போன்ற கருத்தை முன்வைத்து பல பதிவுகளில் எழுதி இருக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    பின்குறிப்பு:- ஜாதி வேண்டாம் அல்லது இல்லை என்ற பதிவுக்கு நான் இன்னஜாதி என்று மார் தட்டிய ஜாதிவெறியர் ஒருவரின் பின்னூட்டம் படித்து சிரித்தேன். வேறென்ன சொல்ல?

    ReplyDelete
  9. கவலைப்படாதீங்க சரவணன்.இந்த மாதிரியான விமரிசனங்களையெல்லாம் கண்டுக்காதீங்க !

    ReplyDelete
  10. //கவலைப்படாதீங்க சரவணன்.இந்த மாதிரியான விமரிசனங்களையெல்லாம் கண்டுக்காதீங்க ! \\

    அப்பறமென்ன எம்பட விமர்சனத்தையும் போடலாமில்ல

    ReplyDelete
  11. //இம்சை said...
    Don't worry Mamu, keep up your good work and don't worry about all these nonsense.//

    சரிங்க இம்சை.. இப்படியரு பேரை வைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அட்வைஸ் கொடுக்குறீகளே.. இதுதாங்க நிசமான இம்சை..

    ReplyDelete
  12. டோண்டு ஸார்.. எத்தனை பேர் பட்டுத் திருந்தினாலும் புதுசு புதுசா அதே குணத்தோட வர்றாங்களே.. என்னத்த சொல்றது? கவியரசர் கவியரசர்தான்.. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு போடு போட்டுட்டுப் போயிட்டாரு..

    ReplyDelete
  13. //பங்காளி... said...
    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...இதுக்கெல்லாம் போய் ஃபீல் ஆனா என்னாவறது.... அப்புறம் "குட்டி பதிவு" போடுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க ராசா...புண்ணியமாப் போகும்...ஹி..ஹி...//

    அரசியல்ல இது மாதிரி தாக்குதல்களும் சகஜம்தான் பங்கு.. எனக்கு மனசு பொறுக்கலை.. அதான் பொங்கிட்டேன்..

    சரி சரி.. குட்டிப் பதிவுதான்ன.. அதான் இப்ப தமிழ்மணத்துல என் பேர்ல வளைய வந்துக்கிட்டிருக்கே பங்கு.. படிச்சுப் பாருங்க.. அடுத்தவங்க எழுதினதுதான்னா 1 வரில கூட போடுவேனாக்கும்.. ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  14. ஆங்கில அனானி நண்பரே.. ஜாதி எனது சர்டிபிகேட்டில் மட்டும்தான் இருக்க வேண்டும். அங்கிருந்து தாவி என் சட்டைக்கு வந்து பின்பு என் நாவிற்குச் செல்ல நான் என்றைக்குமே அனுமதிக்க மாட்டேன்.. தங்களது ஆர்வமான பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்..

    ReplyDelete
  15. //கருப்பு ரசிகன் said...
    நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.//

    கண்டிப்பாகப் போகும்தான். ஆனால் அரசியல்வாதிகள் விட மாட்டார்களே. அவர்களுக்கு உங்களுடைய ஜாதிப் பெயரைச் சொல்லி நீ அடிமையாக இருக்கிறாய் என்று ஓராயிரம் முறை சொல்லி அவர்கள் வளர வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் நினைத்தால் இதை ஒழித்துக் கட்டிவிடலாம். ஆனால் இதில் ஊஞ்சல் கட்டி ஆடுபவர்கள் அவர்கள்தான்.. என்ன செய்யச் சொல்கிறீர்கள் கருப்பு ரசிகன்..?

    ReplyDelete
  16. //Anonymous said...
    திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.//

    வார்த்தைகளின் அர்த்தத்தை ஒவ்வொருவரும் அவரவர்க்கென்று ஒரு அர்த்தம் என்ற தொனியில் எடுத்துக் கொண்டதால்தான் பிரச்சினை உருவாகியுள்ளது..

    இவ்வார்த்தைகளின் தொடர்பால் நமது புத்தி தெளிந்துதான் உள்ளது.. இருந்த புத்தியும் அதே டத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை த்துக் கொள்ளத்தான் நிறைய பேருக்கு மனசில்லை. அவ்வளவுதான்..

    ReplyDelete
  17. //விடாதுகருப்பு said...
    நல்ல பதிவு நண்பரே.
    அதிக வேலை பளுவால் பின்னூட்டம் இட முடியவில்லை.
    மிகவும் நல்ல பதிவு. என் மனதில் உதித்த நல்ல நினைவுகள்தான் நீங்கள் எழுதியதும்.
    நானும் இதே போன்ற கருத்தை முன்வைத்து பல பதிவுகளில் எழுதி இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி கருப்பு அவர்களே.. தாங்கள் இந்த வாரம் முழுவதும் மிகவும் பிஸியாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வ.வா.ச.வில் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு காமெடியானவர் நீங்கள் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதே போல் நிறைய எழுதுங்கள். அதே சமயம், இது போன்ற நல்லப் பதிவுகளுக்குள்ளும் வந்து செல்லுங்கள்..

    //பின்குறிப்பு:- ஜாதி வேண்டாம் அல்லது இல்லை என்ற பதிவுக்கு நான் இன்னஜாதி என்று மார் தட்டிய ஜாதிவெறியர் ஒருவரின் பின்னூட்டம் படித்து சிரித்தேன். வேறென்ன சொல்ல?//

    டோண்டு ஐயாவைத்தான சொன்னீங்க.. அவருக்கும் சேர்த்துத்தான் எனது பதிவின் பதில்.. ஸோ.. அவரை கண்ணை மூடிக் கொண்டு நான் ஆதரிப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம்..

    ReplyDelete
  18. ///கதிரவன் said...
    கவலைப்படாதீங்க சரவணன்.இந்த மாதிரியான விமரிசனங்களையெல்லாம் கண்டுக்காதீங்க !

    உங்கள் தமிழன் said...
    //கவலைப்படாதீங்க சரவணன்.இந்த மாதிரியான விமரிசனங்களையெல்லாம் கண்டுக்காதீங்க !
    அப்பறமென்ன எம்பட விமர்சனத்தையும் போடலாமில்ல..///

    கதிரவன் இதென்ன புது கதை ஓடுது.. இதுல எதுக்கு உங்கள் தமிழன் தலையைக் கொடுக்குறாரு.. அதென்ன "எம்பட விமர்சனம்" ஒண்ணும் புரியலை உங்கள் தமிழன்..

    ReplyDelete
  19. அய்யா உண்மைத்தலைவரே,

    போலிஸ்காரன் மீசைய வச்சு கஞ்சி குடிக்கிற மாதிரி,

    ஜாதிய வச்சு தான் அரசியலு, வலைபதிவுனு நடத்தி பொழப்பை ஓட்டுகிட்டுருக்காங்க

    அத பத்தி கவலப்படாம நீங்க உங்க வழில போய்கிட்டே இருங்க

    ReplyDelete
  20. //உண்மைத் தொண்டன் said...
    அய்யா உண்மைத்தலைவரே, போலிஸ்காரன் மீசைய வச்சு கஞ்சி குடிக்கிற மாதிரி, ஜாதிய வச்சு தான் அரசியலு, வலைபதிவுனு நடத்தி பொழப்பை ஓட்டுகிட்டுருக்காங்க அத பத்தி கவலப்படாம நீங்க உங்க வழில போய்கிட்டே இருங்க..//

    அய்யா உண்மைத்தொண்டரே.. உங்களுடைய அன்பான ஊக்கத்திற்கு நன்றிகள்.. ஜாதியை வைச்சுத்தான் பொழைப்பு ஓட்டுறாகன்னு நல்லாத் தெரியுது.. அது அரசியல் உலகத்துல இருந்து வலையுலகத்துக்கும் பரவிருச்சேன்றதுதான் ரொம்பக் கவலையா இருக்கு..

    ReplyDelete
  21. அன்பு அனானி அண்ணன்களா..

    தமிழில் எவ்வளவோ வார்த்தைகள் இருக்க.. உங்களுடைய வாழ்த்துக்களை இப்படித்தான் எழுத வேண்டுமா? இது எந்த வகை நாகரிகம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் பாட்டுக்கு என் வழில போறேன்.. எதுக்கு சாமி குறுக்க குறுக்க வர்றீக.. உங்களுக்கு என் கருத்துக்கள் மீது விமர்சனம் இருந்தால் நாகரிகமாக எழுதுங்கள். அனுமதிக்கிறேன். இல்லாவிடில் உங்களுடைய பதிவுகளிலே என்னைப் பற்றி எழுதிக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது? அதற்காக ஏதாவது ஒன்றை எழுதித் தள்ளி அதை அனுமதிக்கச் சொன்னால் எப்படி? ஆற, அமர யோசித்துப் பாருங்கள் எது நாகரிகம் என்று..

    ReplyDelete
  22. ஜாதியைத் தரைக்கு மேல் தேடியிருக்கிறீர்கள். அதுதான் கிடைக்கவில்லை. அது தரைக்குக்கீழ் நம்மையறியாமல் படர்ந்து வளர்ந்து கட்டிடத்தைத் துளைக்கும் விஷ வேர் போன்றது. கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நம் கட்டிடத்தை /நம் சமூகத்தைத் துளைத்து ஆட்டம் காணச் செய்துவிடும். செய்திருக்கிறது.

    பள்ளியில் சேரச் சென்ற முதல் நாள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்கையில் நிரப்பாமல் சாய்ஸில் விடமுடியாத கேள்வியாக ஜாதி கேட்கப்பட்டிருக்கிறது - "FC-ன்னாவது போட்டுத்தான் ஆவணும் - நிரப்பாம விட முடியாது"

    என் முகத்தைத் தடவி, என் மொழியிலும் தடவிக் கிடைக்காமல், முதுகில் தடவியும் ஜாதியைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். அதிலும் கிடைக்காமல், 'அந்த XYZ இருக்காரே - அவரும் ஒங்காளுதானே?' என்று கேட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

    இதுமாதிரி எல்லாவிடத்திலும் இன்று புரையோடிப் போன சங்கதியாக இருக்கிறது ஜாதி. இதற்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி! ஆனால் அரசு அதைச் செய்யத் தயாரில்லை. நாற்காலி கவிழும் பயம்.

    ஜாதியை எதிர்த்து குரல் எழுப்புகிறோம் என்ற பெயரில் அறுவைச் சிகிச்சைக்கும் ஆளைக் காலி செய்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுபவர்கள் நிறைய பேர்.

    இதற்குப் பதிலாகக் காட்டுக்குப் போய் காட்டுவாசியாக இருந்துவிடலாம் என்று நிறைய தடவை தோணியிருக்கிறது!

    நீங்கள் சஞ்சலமடையாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. என்ன இப்ப ஜாதியை வச்சு இவ்வளவு வியாக்கியானம்?

    அது சரி......ஜாதி, ஜாதின்னு எழுதியிருக்கீங்களே....அப்படீன்னா என்ன?

    ReplyDelete
  24. //"வற்றாயிருப்பு" சுந்தர் said...
    பள்ளியில் சேரச் சென்ற முதல் நாள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்கையில் நிரப்பாமல் சாய்ஸில் விடமுடியாத கேள்வியாக ஜாதி கேட்கப்பட்டிருக்கிறது - "FC-ன்னாவது போட்டுத்தான் ஆவணும் - நிரப்பாம விட முடியாது"//

    முதல்ல இதை கேட்காதபடிக்குச் செய்யணும். இதுதான் நாட்ல ஜாதியே இல்லாம போகச் செய்றதுக்கு முதல் படி..

    //என் முகத்தைத் தடவி, என் மொழியிலும் தடவிக் கிடைக்காமல், முதுகில் தடவியும் ஜாதியைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள். அதிலும் கிடைக்காமல், 'அந்த XYZ இருக்காரே - அவரும் ஒங்காளுதானே?' என்று கேட்டுப் பார்த்திருக்கிறார்கள்.//

    எனக்கும் வலைத்தளத்தில் இப்போது கிடைத்திருக்கும் அடிவருடி பட்டமும் இதே போன்றதுதான் ஸார்..

    //இதுமாதிரி எல்லாவிடத்திலும் இன்று புரையோடிப் போன சங்கதியாக இருக்கிறது ஜாதி. இதற்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி! ஆனால் அரசு அதைச் செய்யத் தயாரில்லை. நாற்காலி கவிழும் பயம். ஜாதியை எதிர்த்து குரல் எழுப்புகிறோம் என்ற பெயரில் அறுவைச் சிகிச்சைக்கும் ஆளைக் காலி செய்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுபவர்கள் நிறைய பேர்.//

    உண்மைதான். அப்படி உளறுபவர்களில் முதன்மையானவர்கள் அரசியல்வாதிகள்தான். காரணம் ஜாதி அரசியலில் முத்துக் குளிப்பவர்கள் அவர்கள்தான். இப்போது மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர்களின் பின்னணியைப் பாருங்கள். அனைத்துக் கட்சிகளுமே ஜாதி பார்த்துத்தான் ஆட்களை நிறுத்தியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் சமுதாய முன்னேற்றத்தைக் காணப் போகிறார்களாம் இவர்கள்.

    //இதற்குப் பதிலாகக் காட்டுக்குப் போய் காட்டுவாசியாக இருந்துவிடலாம் என்று நிறைய தடவை தோணியிருக்கிறது! நீங்கள் சஞ்சலமடையாமல் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.//

    மிக்க நன்றிகள் சுந்தர் ஸார்.. எவ்வளவுதான் நம் மனதுக்குச் சரி என்று படுகின்ற விஷயத்தைச் சொன்னாலும் தான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவன் மனிதனே இல்லை என்று நினைத்துக் கோபப்படும் அற்பர்களும் வலையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் வந்த பின்னூட்டங்களினால்தான் எனது இந்தக் குமுறல்....

    ReplyDelete
  25. //துளசி கோபால் said...
    என்ன இப்ப ஜாதியை வச்சு இவ்வளவு வியாக்கியானம்? அது சரி......ஜாதி, ஜாதின்னு எழுதியிருக்கீங்களே....அப்படீன்னா என்ன?//

    எந்தக் கதையைச் சொல்றது டீச்சர்? வர்ற 10 பின்னூட்டத்துல 8 பின்னூட்டத்தை டெலீட் செய்ய வேண்டியிருக்கு. அவ்ளோ நாகரீகமா எழுதியனுப்புறாங்க.. என் ஜாதியை சம்பந்தப்படுத்தி வருகின்ற பின்னூட்டங்களுக்கு என்னால் பதில் சொல்லி மாளலை.. அதான்.. இப்படியரு 'பிட்'டை போட்டேன்..
    ஜாதின்னா என்னவா? அது சரிதான்.. அவ்ளோ தூரம் தள்ளியிருக்கீகளே ஆத்தா.. அதான்..

    ReplyDelete
  26. //

    "வற்றாயிருப்பு" சுந்தர் said...

    ஜாதியைத் தரைக்கு மேல் தேடியிருக்கிறீர்கள். அதுதான் கிடைக்கவில்லை. அது தரைக்குக்கீழ் நம்மையறியாமல் படர்ந்து வளர்ந்து கட்டிடத்தைத் துளைக்கும் விஷ வேர் போன்றது. கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நம் கட்டிடத்தை /நம் சமூகத்தைத் துளைத்து ஆட்டம் காணச் செய்துவிடும். செய்திருக்கிறது.//

    சரியான வார்த்தைகள் "வற்றாயிருப்பு" சுந்தர் .உணமைத்தமிழனுக்கு கிடைக்கவில்லை என்பதால் அது இல்லை என்று பொருள் அல்ல :-))

    உண்மைத்தமிழரே பார்க்க...

    http://satrumun.blogspot.com/2007/06/blog-post_12.html

    ***

    //துளசி கோபால் said...
    என்ன இப்ப ஜாதியை வச்சு இவ்வளவு வியாக்கியானம்?

    அது சரி......ஜாதி, ஜாதின்னு எழுதியிருக்கீங்களே....அப்படீன்னா என்ன?
    //

    டீச்சர் லொள்ளா :-))) ம்...ம். நடத்துங்க.

    இந்து சனாதன மதமும் சாதியும் பிரிக்க முடியாதது. வெளி நாடுகளில் இருப்பதால் அதன் தாக்கம் குறைவு.குறைவுதானே தவிர சாதிக் குழுக்கள் NRI களிடமும் உண்டு.

    ReplyDelete
  27. பலூன் மாமா.. தொடர்ந்து நான் எழுதி வரும் எழுத்துக்களுக்கு தாங்களும், சுந்தர் ஸாரும் கொடுத்து வரும் ஊக்கத்திற்கு என் முதற்கண் நன்றி.

    திராவிடக் கட்சிகளைக் குறிப்பாக கலைஞரை விமர்சித்து நான் எழுத ஆரம்பித்த பிறகு எனது ஜாதி பற்றி சந்தேகம் கேட்டு வருகின்ற பின்னூட்டங்கள் நிறைய. அதில் பலவற்றை நான் படிக்கவே முடியவில்லை. அப்படி ஒரு சரோஜாதேவி தமிழில் இருக்கின்றன. போகப் போக அதுவே அதிகமாகிக் கொண்டிருக்க.. என் ஜாதி இங்கே எதற்கு? என் எழுத்து போதாதா என்ற ஆதங்கத்தில் எழுதியதுதான் இந்தக் கட்டுரை.

    உங்களுடைய லின்க் சொன்ன செய்தியைப் படித்தேன்.

    இப்படி அரசுகள் அலட்சியப்படுத்துவதால்தான் ஜாதி வளர்ந்து கொண்டே செல்கிறது என்று உங்களுக்கும், எனக்கும் அனைவருக்குமே தெரியும். அந்த தலித் மக்களின் போராட்டக் குணம் பிடித்திருக்கிறது. ஆனால் இப்படி அனைத்து தலித்துகளுக்கும் தனித்தனி பள்ளி என்று அடிமடியிலேயே கை வைத்துவிடடால் ஜாதி ஒட்டாத கனியாகிவிடுமே.. அதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.. அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. அவர்களைக் குறைபட்டுக் கொண்டால் எப்போதுமே அவர்கள்தான் டார்ஜெட்டா.. நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளிகளை ஒழுங்காக அவர்கள் நடத்தினால் இது போன்ற முட்டாள்தனங்கள் ஏன் எழுகின்றன..? சொல்லுங்கள்..

    வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இந்தப் பழக்கம் குறைந்து போயிருப்பதற்குக் காரணம் அவர்களின் கல்வி அறிவால் கிடைத்த வாழ்வியல் பக்குவம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இஇந்த ஆரோக்கியம் நம்மிலும் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த விதையை விதைப்பது யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசுகளுக்குத்தான் முழு பொறுப்பு என்கிறேன் நான்.

    வேறென்ன சொல்வது...?

    ReplyDelete
  28. உண்மைத் தமிழன்

    //வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இந்தப் பழக்கம் குறைந்து போயிருப்பதற்குக் காரணம் அவர்களின் கல்வி அறிவால் கிடைத்த வாழ்வியல் பக்குவம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்//

    இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவும் ஒரு மாயையான பிம்பமே. :-(

    எல்லா மனிதர்களின் ஆழ்மனதிலும் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம் ஜாதி! சிலர் அதை எழுப்புவதே இல்லை. சிலர் அதைத் தூங்க விடுவதே இல்லை. சிலரை அம்மிருகம் ஆள்கிறது. சிலர் அம்மிருகத்தை தன் இஷ்டப்படி ஆட்டி வைக்கிறார்கள். :-)

    வெளிநாடுகளில் நாம் சந்திக்க நேரும் பிரச்சினைகளே வேறு.

    துரதிர்ஷ்டவசமாக நாம் நமது அனுபவங்களை வைத்து உலகை எடை போட வேண்டியிருக்கிறது. ஒரே விஷயத்தில் உங்களுடைய அனுபவமும் என்னுடைய அனுபவமும் வெவ்வேறாக இரு துருவங்களாக இருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆதலால் நான் எனது கருத்தை மட்டும் பதிவுசெய்கிறேன். என் மறுப்பினால் உங்களுடையது தவறாகவோ என்னுடையது சரியாகவோ ஆகிவிடப் போவதில்லை. ஆனால் 'புரிந்து கொள்ளல்' என்பது மட்டுமாவது கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் இருக்கவேண்டியது அவசியம். அது இல்லாத பட்சத்தில் எவ்விவாதமும் சாத்தியமல்ல.

    எனது கருத்து புரிந்து கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  29. //வற்றாயிருப்பு சுந்தர் said...
    உண்மைத் தமிழன்
    //வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இந்தப் பழக்கம் குறைந்து போயிருப்பதற்குக் காரணம் அவர்களின் கல்வி அறிவால் கிடைத்த வாழ்வியல் பக்குவம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதனை அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்//
    இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவும் ஒரு மாயையான பிம்பமே. :-(
    எல்லா மனிதர்களின் ஆழ்மனதிலும் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம் ஜாதி! சிலர் அதை எழுப்புவதே இல்லை. சிலர் அதைத் தூங்க விடுவதே இல்லை. சிலரை அம்மிருகம் ஆள்கிறது. சிலர் அம்மிருகத்தை தன் இஷ்டப்படி ஆட்டி வைக்கிறார்கள். :-)
    வெளிநாடுகளில் நாம் சந்திக்க நேரும் பிரச்சினைகளே வேறு.
    துரதிர்ஷ்டவசமாக நாம் நமது அனுபவங்களை வைத்து உலகை எடை போட வேண்டியிருக்கிறது. ஒரே விஷயத்தில் உங்களுடைய அனுபவமும் என்னுடைய அனுபவமும் வெவ்வேறாக இரு துருவங்களாக இருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆதலால் நான் எனது கருத்தை மட்டும் பதிவுசெய்கிறேன். என் மறுப்பினால் உங்களுடையது தவறாகவோ என்னுடையது சரியாகவோ ஆகிவிடப் போவதில்லை. ஆனால் 'புரிந்து கொள்ளல்' என்பது மட்டுமாவது கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் இருக்கவேண்டியது அவசியம். அது இல்லாத பட்சத்தில் எவ்விவாதமும் சாத்தியமல்ல. எனது கருத்து புரிந்து கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.//

    சுந்தர் ஸார்..
    அனுபவமே கடவுள் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அனுபவம் வெவ்வேறு என்பதையும் நான் உணர்கிறேன். உங்களுடைய கருத்துப்படியே அது அனைவரது மனதிலும் ஆழ்ந்து கிடக்கிறது. இல்லை என்று நான் மறுக்கவில்லை. அம்மிருகத்தை ஆட்டிப் படைக்கின்ற பலரில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் குறைவு என்றுதான் நான் சொல்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பே கிடைக்காது.. எங்கு அறிவுத்தனம் அனைத்து விஷயங்களிலும் பரவியிருக்கிறதோ அங்கு இது மாதிரியான மூட நம்பிக்கைகள் எழ வாய்ப்பில்லை.
    தங்களுடைய கருத்துக்களை நான் புரிந்து கொண்டேன். இது மாதிரியான நல்லதொரு கருத்துப் பரிமாற்றம் நமக்குள் அடிக்கடி நிகழ்வதுகூட நமக்கு நல்லதொரு அனுபவம்தான்..
    நன்றி ஸார்.. மிக்க நன்றி..

    ReplyDelete
  30. ¯ñ¨Áò ¾Á¢Æ§Ã

    ÜØìÌõ ¬¨º, Á£º¡­ìÌõ «¨º. ƒ¡¾¢ º÷ÊÀ¢§¸ðÎ §ÅñÎÁ¡õ, ¬É¡ø ƒ¡¾¢¨Â ¯¼§Å ÁÈóÐñ½Á¡õ. ¬¸¢Ã ¸¡Ã¢ÂÁ¡ ?? ±ó¾ ¯Ä¸ò¾¢ø Å¡ºõ ¯ñ¨Áò¾Á¢Æ¡? ÍìÃýÄ ÌÊò¾ÉÁ¡, Ţ¡ÂýÄ ÌÊò¾Éõ ¦ºö¸¢È£÷¸Ç¡? ¦¿ø¨Ä À¢÷¦ºö¾¡ø, ¦¿øÖ¾¡ý ¸¢¨¼ìÌõ, §º¡Çõ ÅáÐ. ƒ¡¾¢ º÷ÊÀ¢§¸ð, ƒ¡¾¢ ­´Ð츣ÎýÛ ±ùÅÇ× §À¡Ã¡ð¼õ, §Ã¡Î ¦ÅðÎ, §Ã¡ðÎ ÁÃòÐ ¦ÅðÎ, §À¡Ä£º¡÷ ÝÎ, ±É¦ÅøÄõ §À¡Ã¡ð¼õ; ¾Á¢ú¿¡Î «ùÅÇ× ƒ¡¾¢ ¯½÷Å¢§Ä§Â ¿£îºø «ÊòРŢðÎ, ƒ¡¾¢¨Â Å¢ðÎññõÉ¡, «¨¾ô§À¡Ä ¯ÇÃø §Åà ´ñÏÁ¢ø¨Ä. ¯ñ¨Áò¾Á¢Æ¡, ¯ý Í ²Á¡ò¾ÖìÌ ÅÃõ§À¢ø¨Ä.

    ReplyDelete
  31. உண்மைத் தமிழரே

    கூழுக்கும் ஆசை, மீசாஇக்கும் அசை. ஜாதி சர்டிபிகேட்டு வேண்டுமாம், ஆனால் ஜாதியை உடவே மறந்துண்ணமாம். ஆகிர காரியமா ?? எந்த உலகத்தில் வாசம் உண்மைத்தமிழா? சுக்ரன்ல குடித்தனமா, வியாயன்ல குடித்தனம் செய்கிறீர்களா? நெல்லை பயிர்செய்தால், நெல்லுதான் கிடைக்கும், சோளம் வராது. ஜாதி சர்டிபிகேட், ஜாதி இஒதுக்கீடுன்னு எவ்வளவு போராட்டம், ரோடு வெட்டு, ரோட்டு மரத்து வெட்டு, போலீசார் சூடு, எனவெல்லம் போராட்டம்; தமிழ்நாடு அவ்வளவு ஜாதி உணர்விலேயே நீச்சல் அடித்து விட்டு, ஜாதியை விட்டுண்ண்ம்னா, அதைப்போல உளரல் வேர ஒண்ணுமில்லை. உண்மைத்தமிழா, உன் சுய ஏமாத்தலுக்கு வரம்பேயில்லை.

    ReplyDelete
  32. //பின்குறிப்பு:- ஜாதி வேண்டாம் அல்லது இல்லை என்ற பதிவுக்கு நான் இன்னஜாதி என்று மார் தட்டிய ஜாதிவெறியர் ஒருவரின் பின்னூட்டம் படித்து சிரித்தேன். வேறென்ன சொல்ல?//
    போலி டோண்டுவாகிய விடாது கருப்பு தனது போலி டோண்டு அவதாரத்தில் யாரையாவது திட்ட வேண்டுமென்றால் தலித் கம்னாட்டி என்றுதான் திட்டுவார். அந்த ஜாதி மேல் அவ்வளவு இளக்காரம் அவருக்கு. அப்படி அவரால் திட்டப்பட்டவர்கள் காசி, சோம்பேறிபையன், இலவசக் கொத்தனார், டி.பி.ஆர்.ஜோசப்ஃ ஆகியோர். குழலியை வன்னிய சாதிப்பெயர் சொல்லி திட்டியதும் போலி டோண்டுவே.

    இம்மாதிரி ஆட்களெல்லாம் வந்து சாதி ஒழிப்பு பற்றி பேசுவது நேரந்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. திரு.டோண்டு அவர்களின் பின்னூட்டத்திற்குப் பிறகு எனக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் திரு.டோண்டு முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதியிருந்த அவரது கருத்துக்களை மேற்கோள்காட்டி வந்திருக்கின்றன.

    அவற்றை வெளியிடுவது இந்த 'நான் எந்த ஜாதி?' என்ற எனது பதிவின் போக்கையே திசை மாற்றிவிடும் என்பதை அன்பர்கள் கருப்பு ரசிகன், அனானி என்ற பெயரில் வந்திருக்கும் திரு.ஜி.ரமேஷ்குமார், திரு.இறைநேசன் ஆகிய அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அவர்களுடைய நிமிட பின்னூட்டங்களுக்கு எனது நன்றிகள்.

    ஆனால் வெளியிட முடியாமைக்கு எனது வருத்தங்கள்.

    ReplyDelete
  34. அன்பு அனானி தெய்வங்களே..

    மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணையைப் பற்றி முகம் காட்டாத முகமூடிகளாகிய நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அது எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் முகத்தையும் காட்டி அடையாளத்தையும் சொல்லித்தான் வலையுலகில் உலா வருகிறோம். உங்களை மாதிரி போலியான பெயரில் முகத்தைக் காட்டாமல் அடுத்தவரை அநாகரீகமாகத் திட்டுவதை நாங்கள் எப்போதும் செய்ததில்லை. இனி செய்யவும் மாட்டோம்.

    டோண்டு ஸார் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கு விடாது கருப்பு ஒரு எதிர் கருத்தைச் சொல்லியிருக்கிறார். இப்போது மீண்டும் டோண்டு ஸார் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார். இதற்கு விடாது கருப்புதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எவரும் இல்லை. என்னைப் பொறுத்தவரையிலும் டோண்டு ஸாரும், தோழர் விடாது கருப்புவும் ஒரே மாதிரியான நண்பர்கள்தான். இதில் எந்த மாற்றமுமில்லை.

    எனக்கும் அந்த விஷயம் பற்ற முழுமையாகத் தெரியாது. அப்போது நான் வலைத்தளத்திற்குள் நுழையவில்லை. முழுமையாகத் தெரியாத காரணத்தால் அதைப் பற்றி இப்போது நான் எவ்விதக் கருத்தும் தெரிவிக்க முடியாது.

    வலையுலகில் யாரும், யாருடைய ஜாதியைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அவருடைய எழுத்துக்களை மட்டுமே பாருங்கள் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பதிவையே நான எழுதியிருக்கிறேன். இந்த நோக்கத்தையே அடியோடு மாற்றுவதைப் போல் முகமூடி அனானிகள் என் மீது பாய்கிறீர்கள்.

    டோண்டு ஸார் மீது உங்களுக்குக் கோபம் வந்தால் அவருடைய பதிவிலேயே போய் பின்னூட்டமிடுங்கள். நான் தடுக்கவில்லை. ஆனால் இந்தப் பதிவில் தயவு செய்து வேண்டாம்.

    பதிவோடு தொடர்புடையதாகவும், நாகரீகமாகவும் இருந்தால் மட்டுமே நான் அனுமதிப்பேன். தனி மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் வேண்டாம்..

    ReplyDelete
  35. //அம்மிருகத்தை ஆட்டிப் படைக்கின்ற பலரில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் குறைவு என்றுதான் நான் சொல்கிறேன். //

    வலையுலகில் சில காலம் புழங்கியும் இப்படி நீங்கள் கூறுவது வியப்பளிக்கிறது. உங்களுக்கு வரும் தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் அனேகமாக அனைத்துமே நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் இந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தான் இடுகிறார்கள் என்பது புரியாமலா நீங்கள் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். தமிழர்களில் பெரும்பாலோர் சாதியிலேயே பிறந்து, அதிலேயே வளர்க்கப்பட்டு, அதிலேயே சாகப் போகும் நிலை தான் இன்று உள்ளது.
    கருணாநிதிக்கு நீங்கள் ஆதரவாக எழுதியிருந்த வரை உங்களுக்கு இப்படிப் பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்காது. உங்களுக்கு நடுநிலை என்று படும் கருத்தை நீங்கள் எழுத ஆரம்பித்த நாள் முதல் உங்களை சாதி அடிவருடி என கட்டம் கட்டி தாக்க ஆரம்பித்திருப்பார்கள். இந்த அனுபவம் வலையுலகில் (குறிப்பாக தமிழ்மணத்தில்) பலருக்கும் ஏற்கனவே ஏற்பட்டது தான். இதைச் செய்பவர்கள் யார் என்பது வெள்ளிடைமலை. அவர்களாகப் பார்த்து அனுபவப்பட்டு திருந்தாவிட்டால் இந்த நிலை மாறப்போவதில்லை.
    உங்கள் கருத்துக்களை, உங்கள் நடையிலேயே யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து எழுதி வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. ///Anonymous said...
    //அம்மிருகத்தை ஆட்டிப் படைக்கின்ற பலரில் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் குறைவு என்றுதான் நான் சொல்கிறேன். //
    //வலையுலகில் சில காலம் புழங்கியும் இப்படி நீங்கள் கூறுவது வியப்பளிக்கிறது. உங்களுக்கு வரும் தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் அனேகமாக அனைத்துமே நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் இந்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தான் இடுகிறார்கள் என்பது புரியாமலா நீங்கள் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.//

    தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் மட்டுமல்ல.. இந்தத் தமிழ் மொழியில் இப்படியெல்லாம் எழுதித் தொலைகிறார்களே அறிவு கெட்ட முட்டாள்கள், மூடர்கள் என்றெல்லாம் திட்டத் தோன்றுகிறது. வெளிநாட்டுத் தமிழர்கள்தான் இடுகிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. IP முகவரியைக் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்பதால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை நண்பரே.. ஆனாலும் தங்களது தகவலுக்கு எனகு நன்றிகள்..

    //தமிழர்களில் பெரும்பாலோர் சாதியிலேயே பிறந்து, அதிலேயே வளர்க்கப்பட்டு, அதிலேயே சாகப் போகும் நிலை தான் இன்று உள்ளது.//

    உண்மைதான்.. வேறென்ன செய்வது? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இதே தமிழ்ச் சமுதாயம்தான் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எப்போதோ வரப் போகின்ற நன்மைக்காக இப்போது கண் முன் இருக்கின்ற சிற்றின்பத்தை கை விட்டுவிடாதே என்ற ஆர்வத்தில்தான் நமது இளைஞர் சமுதாயம் திளைத்து வருகிறது.. அதில் முதன்மையானது தனது சாதிப் பெயரை காப்பாற்றும் மூடத்தனத்தில் இறங்கியிருப்பது.

    //கருணாநிதிக்கு நீங்கள் ஆதரவாக எழுதியிருந்த வரை உங்களுக்கு இப்படிப் பட்ட பின்னூட்டங்கள் வந்திருக்காது. உங்களுக்கு நடுநிலை என்று படும் கருத்தை நீங்கள் எழுத ஆரம்பித்த நாள் முதல் உங்களை சாதி அடிவருடி என கட்டம் கட்டி தாக்க ஆரம்பித்திருப்பார்கள். இந்த அனுபவம் வலையுலகில் (குறிப்பாக தமிழ்மணத்தில்) பலருக்கும் ஏற்கனவே ஏற்பட்டது தான். இதைச் செய்பவர்கள் யார் என்பது வெள்ளிடைமலை. அவர்களாகப் பார்த்து அனுபவப்பட்டு திருந்தாவிட்டால் இந்த நிலை மாறப்போவதில்லை.
    உங்கள் கருத்துக்களை, உங்கள் நடையிலேயே யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து எழுதி வர வாழ்த்துக்கள்.///

    இதுவும் உண்மைதான் நண்பரே.. நான் கலைஞரை தாக்கி எழுதியப் பதிவுகளுக்குப் பிறகுதான் அனானிகளின் அநாகரீகத் தாக்குதல்கள் வர ஆரம்பித்தன. இப்போது சோவின் துக்ளக் செய்திகளைப் போட்டவுடன் அது இன்னும் அதிகமாகிவிட்டது. திராவிடக் கலாச்சாரம் இதுதான் போலும்..

    ReplyDelete
  37. //குறிப்பாக தமிழ்மணத்தில்) பலருக்கும் ஏற்கனவே ஏற்பட்டது தான். இதைச் செய்பவர்கள் யார் என்பது வெள்ளிடைமலை. //

    This is 100% dondu's comment. This is his type of comments.

    ReplyDelete
  38. ///Anonymous said...
    //குறிப்பாக தமிழ்மணத்தில்) பலருக்கும் ஏற்கனவே ஏற்பட்டது தான். இதைச் செய்பவர்கள் யார் என்பது வெள்ளிடைமலை. //
    This is 100% dondu's comment. This is his type of comments.///

    அனானி அது எனக்குத் தெரியாது.. ஆனாலும் அப்படியே இருந்தால்தான் என்ன? நாகரீகமான முறையில் அட்வைஸ்தான செஞ்சிருக்காரு.. யார் எழுதியிருந்தாலும் ரொம்ப ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்.. உங்களுக்கும் சேர்த்துத்தான்..
    (ஒரு வார்த்தையை வைச்சே ஆள் யாருன்னு கண்டிபிடிக்கறாகப்பா.. டோண்டு ஸார் அவ்வளவு பிரபலம் அல்லது அவருடைய எழுத்து அவ்வளவு பரிச்சயமாகிப் போச்சு அல்லாருக்கும்..)

    ReplyDelete
  39. அந்த அனானி நான் தான். நான் டோண்டு இல்லை.

    //This is 100% dondu's comment. This is his type of comments./// - இப்படி கமெண்ட் போட்ட அனானி - நீங்கள் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் டோண்டு இல்லை என்பதை நிரூபிக்கிறேன். அது சாத்தியமில்லையெனில் உங்கள் யூகங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு வேலை பார்க்கவும்.

    நல்ல கருத்துக்களை வரவேற்கும் உண்மைத் தமிழனுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  40. ///Anonymous said...
    அந்த அனானி நான் தான். நான் டோண்டு இல்லை.
    //This is 100% dondu's comment. This is his type of comments./// - இப்படி கமெண்ட் போட்ட அனானி - நீங்கள் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் டோண்டு இல்லை என்பதை நிரூபிக்கிறேன். அது சாத்தியமில்லையெனில் உங்கள் யூகங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேறு வேலை பார்க்கவும்.
    நல்ல கருத்துக்களை வரவேற்கும் உண்மைத் தமிழனுக்கு என் நன்றிகள்.///

    நல்ல அனானிகளே.. உங்களுக்குள் சண்டை வேண்டாம்..

    டோண்டு இல்லை என்பதை ஒத்துக் கொண்ட அனானிக்கு எனது பல கோடி நன்றிகள்.. இதனால் தூய தமிழ் வார்த்தைகள் கொண்ட மெயில்களை எதிர்பார்த்தேன். நல்ல வேளை.. தடுத்து விட்டீர்கள்.

    சந்தேகத்தைக் கிளப்பிய அனானிக்கு சந்தேகமாக உள்ளது என்றோ அல்லது இதை இப்படியே விட்டுவிடுங்களேன்.. யார் சொன்னால் என்ன? நல்லதுதானே சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  41. ஐயோ ஐயோ; சின்னப்புள்ளயாவே இர்ந்தா எப்புடி ராஜா?

    ReplyDelete