Pages

Thursday, May 31, 2007

என் சொத்துக்கள் முழுவதும் உங்களுக்கே..!

May 31, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே,


நோயற்ற வாழ்க்கை ஒரு மனிதனுக்குக் கிடைத்தது என்றால் அவன் நிச்சயமாக பாக்கியசாலிதான். நோய் எதனால் உண்டாகிறது என்றால் உடலின் ஏதோ ஒரு உறுப்புக்கு ஒவ்வாத ஒன்றை மனிதன் தன்னுள் திணித்திருக்கிறான். அல்லது திணிப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறான் என்று சொல்லலாம்.


மரணங்கள் இல்லங்கள் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதே போல் பிறப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒரே ஒரு வித்தியாசம்தான். பிறப்பின்போது வீடு முழுவதும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. ஆனால் மரணத்தின்போது அந்த வீட்டையே துக்கம் சூழ்ந்திருக்கிறது. மரணத்தை வெல்வது சாத்தியமில்லை என்றாலும், அதை முடிந்தபட்சம் தவிர்க்கலாம்.


ஆண்டு தோறும் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அதில் புகையிலை என்னும் கொடிய வஸ்துவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு இரண்டாமிடம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் கூடிக் கொண்டே செல்வதாகவும் புள்ளி விவரங்களும் தெரிவிக்கின்றன.


புகையிலை என்னும் ஆள் விழுங்கும் வஸ்து பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகை பிடிக்கும் முறையிலும், மென்று முழுங்கும் வகையிலும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


சென்னையில் 10 ஆண்டுகளாக நான் வசித்து வந்தாலும், எனக்கு நெருங்கிய நண்பர்கள் மிக மிக குறைவு. என் வீட்டிற்கு தற்போது கடன்காரர்களைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. நான்தான் நண்பர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். காரணம் வெரி சிம்பிள். எனக்குப் புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கம் இல்லை. நான் இருக்கும் மீடியா துறையில், இது இரண்டும்தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு ஆக்ஸிஜன்.


நான் பேச்சிலராகவும் இருப்பதால் வீட்டுக்கு வரும் நண்பர்கள் "சிகரெட் பிடிக்கலாமா..?" என்பார்கள். நான், "வீட்டின் உள்ளே வேண்டாமே.." என்று மறுதலித்ததும், வாசலில் நின்று பிடிப்பார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பறந்துவிடுவார்கள். தொடர்ந்து நான்தான் அவர்களைத் தேடி ஓடுவேன். இப்படித்தான் எனது பத்தாண்டு கால சென்னை வாழ்க்கையில், நண்பர்களைத் தேடும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.


முதலில் ஆண்கள் என்றாலே அவர்கள் கையில் சிகரெட்டுடன் இருந்தால்தான் அது அவர்களுக்கு கவுரவம், மரியாதை என்ற ரீதியில் இந்த சிகரெட் என்னும் போதையை நம் இளைஞர்கள் மத்தியில் புகுத்திவிட்டார்கள்.


போதாக்குறைக்கு அவர்களுடைய 'திரையுலகத் தெய்வங்கள்' முதல் காட்சியிலேயே சிகரெட்டை ஸ்டைலாக உதட்டோரமாக வைத்து கை தட்டலுடன் தோன்ற, அந்தப் பழக்கம் அப்படியே விசிலடிச்சான் குஞ்சுகளாக ஆர்ப்பரிக்கும் நமது இளைஞர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.


இந்த சினிமா, தனி நபர் மயக்கத்திலிருந்து அவர்கள் விடுபட குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆனாலும்கூட, அதற்குப் பின்னும் அந்த போதை அவர்களை விடாது. அல்லது இவர்களும் அதை விடுவதில்லை. அது அவர்களின் ஸ்டேட்டஸை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவே இப்போது மாறிவிடுகிறது.


சமீப ஆண்டுகளாக பெண்களும் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. சென்னையில் சத்யம் தியேட்டர் வளாகம், ஸ்பென்ஸர் பிளாஸா என்று பொருளாதார நுகர்வு அதிகமுள்ள இடங்களில் இது மாதிரியான பெண்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கின்ற அனைவருக்கும் இது டேக் இட் ஈஸியாக தோன்றுகிறது.


இது அவர்கள் உயிர்வாழும் நாட்களில் ஒவ்வொரு நொடியையும் குறைத்துக் கொண்டே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியுமா? தெரியும். கண்டிப்பாகத் தெரியும். தெரிந்தும் ஏன் அதைப் பிடிக்கிறார்கள். வேறென்ன போதைதான்.. விட முடியவில்லை என்பார்கள்.


நிகோடின், பென்சோபைரின் போன்ற புற்று நோயை உருவாக்கக்கூடிய நச்சுப் பொருட்கள்தான் இந்தப் புகையிலையில் உள்ளன. புகைப்பிடிக்கும்போது புகையுடன் சேர்த்து இந்த நச்சுப் பொருட்களும் புகைப்பவரின் ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலின் அனைத்துப் பாகங்களும் பாதிக்கப்பட்டு புற்று நோய் ஏற்படுகிறது.


நகர்ப் பகுதியில் இருப்பவர்களும், படித்தவர்களுமே மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் புகை பிடிக்கும்போது, கிராமப் புறங்களில் புகையிலையை மெல்லும் மக்களை என்னவென்று சொல்வது?


வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை என்பது நமது கிராமப் புறங்களில் தலைமுறை, தலைமுறையாக தொடர்ந்து வரும் ஒரு கலாச்சாரமாக இருந்து வருகிறது.


சுக்குமல்லி காபியும், கஷாயமும், நீராகாரமும், காபித்தண்ணி என்ற பால் இல்லாத காபியும் மணக்கும் கிராமப் பகுதிகளில், இந்த புகையிலை என்னும் அரக்கனும் கோலோச்சிக் கொண்டிருக்கிறான்.


கிராமங்களில் வாழும் மக்களில் அநேகம்பேர் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பதால், இதனால் வரக்கூடிய தீமைகளை அதிகம் அறிந்தவர்களாக இல்லை. அப்படியே ஊரில் ஒருவருக்கு இந்த நோய் வந்து அவர் இறந்ததை கண்ணார பார்த்திருந்தும்கூட இதை விட முடியாமல் தவிக்கிறார்கள். அதற்கான மன தைரியத்தையும், மனத் தெளிவையும் தரக்கூடிய அளவுக்கு அவரது குடும்பத்தாரும், சுற்றத்தாரும் கல்வி கற்றவர்களாக இல்லாததால், இவர்களும் பின்னாளில் அதே நோய்க்கு பலியாகிறார்கள்.


நமது மத்திய அரசும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் புகையிலைப் பொருட்களுக்கு வரி அதிகமாக விதித்தாலும்கூட, சிகரெட், புகையிலை விற்பனை குறையவில்லை. எந்த விலையைக் கொடுத்தாவது வாங்கிப் புகைக்கின்றனர். உலகமயமாக்கல் காரணமாக எது எது ஏழை நாடுகளைப் பாதிக்கக்கூடாதோ, அதுவெல்லாம் இப்போது வளர்ந்து வரும், மற்றும் வளர்ந்த நாடுகளையும் பாதிக்கத் துவங்கிவிட்டது. அதன் முதல்படிதான் இந்த புகையிலை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரிப்பது.


இந்தக் கொடிய புகையிலையை மெல்லுவது, சுவைப்பது, புகைப்பது ஆகிய காரணங்களால் உலகில் ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் புகைக்குப் பலியாகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்து நீடித்தால் வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் பலியாகக் கூடிய நிலைமை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தற்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிகரித்துள்ள போதிலும், பொது இடங்களில் புகை பிடிப்பதற்குத் தடை, பீடி, சிகரெட் விளம்பரங்களுக்குத் தடை என்ற போதிலும், புகைப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. கூடிக் கொண்டேதான் செல்கிறது.


தற்போது உலகம் முழுவதும் 65 கோடி பேர் புகைக்கின்றனர். இவர்கள் அனைவருமே புகையிலையால் புஸ்வாணமாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதற்கென்ன வழி? சிறு வயதிலிருந்தே அதாவது பள்ளிப் பருவத்திலிருந்தே இது போன்ற போதைப் பொருட்களை, நமது குழந்தைகளிடமிருந்து நாம் தள்ளியே வைக்க வேண்டும். எத்தனை வீடுகளில் இதைப் பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள்? வீட்டின் உள்ளேயே குழந்தைகள் முன்பாகவே சிகரெட் பிடிக்கும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். அது குழந்தைகளைப் பாதிக்கும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் அறிவதில்லை.


இன்னும் சில பேர் சிகரெட், பீடி முதலியவைகளை தங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வாங்கி வரச் சொல்கிறார்கள். இப்படி பழக்கமான பிள்ளைகள் எதிர்காலத்தில் என்னவாக வருவார்கள்? அதே பழக்கம் அவர்களையும் தொற்றும்தானே..


குழந்தைகளிடமிருந்து இந்த போதைகளை நாம் விலக்கியே வைக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களை பெரியவர்களாகிய நாம் பார்க்கச் செல்லும்போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அப்போதுதான் இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் இப்படியரு கொடுமைக்கு நாம் ஆளாக நேரிடுமே என்ற பய உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும்.


இது போதாது என்று பலரும் புகை பிடிக்கும்போது அதை அருகிலிருந்து சுவாசிப்போருக்கும் புகையிலை தொடர்பான நோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தவர் புகையால் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதால் - சிகரெட் புகையை சுவாசிக்காமல் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனால்தான் பல்வேறு நாடுகளிலும் பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதற்கு ஆதரவு பெருகி வருகிறது.


தற்போது புகைப்பதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை புகை பிடிப்பவர்கள்கூட வரவேற்றுள்ளனர். புகை இல்லாத சூழ்நிலையில் பழக்கப்படும்போது, புகை பிடிப்பவர்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக அதை மறக்க வாய்ப்புண்டு.


இந்த அரசுகளும் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக புகையிலையை ஆரம்பத்தில் வளர்த்தார்கள். நிறைய வரி கிடைக்கிறதே என்றெண்ணி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காமல் குடிசைத் தொழில் போல் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தவர்கள், எல்லாம் கையை மீறிப் போனவுடன் இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.


புகையிலை மற்றும் சிகரெட்டினால் வரும் வரி வருவாய், இந்திய அரசின் பட்ஜெட்டில் கணிசமான அளவைக் கொண்டிருப்பதால் அவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய முடியாத சூழ்நிலையில் அரசு இருக்கிறது. ஆனால் அதே நேரம் இதே புகையிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆகும் சிகிச்சைக்கான செலவும் இதே அளவுதான் ஆகிறது. வேறென்ன செய்வார்கள் ஆட்சியாளர்கள்?


"வரவுக்கும், செலவுக்கும் சரியாப் போச்சு..." என்று சொல்லி தேய்ந்து போன ரிக்கார்டாக வருடாவருடம் பட்ஜெட்டின்போது கிளிசரின் போடாமலேயே அழுத நிலையில் பேசுகிறார்கள். பட்ஜெட் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த நடிப்பும் காணாமல் போய்விடும். அடுத்த நடிப்பு அடுத்த பட்ஜெட்டின் போதுதான்..


புகையிலையால் பாதிக்கப்பட்டு மரணமடையும் நபரின் குடும்பம் எந்தளவுக்குத் துன்பப்படும் என்பதை அவரவர் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.


இந்த உண்மைத்தமிழன் ஏன் இவ்வளவு உருகி, உருகி எழுதுகிறான் என்றால் அவனும் இப்படியரு கொடுமையான அனுபவத்தைப் பெற்றவன்தான். அதிலும் அவனுடைய வாலிப வயதில் பார்க்கக் கூடாத கொடுமைகளை இந்தப் புகையிலை என்னும் அரக்கன் அவனது தந்தையின் மூலமாகக் காட்டிவிட்டான். அந்த அனுபவத்தால்தான் சொல்கிறான்.. தயவு செய்து.. தயவு செய்து.. புகையிலையைத் தவிருங்கள்..


வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அது முடிகின்றபோது தானாக முடியட்டும். நாமே அதைத் தேடிச் சென்று அடைய வேண்டாம்..


புகை பிடிக்கும் பழக்கமுள்ள வலைப்பதிவர்கள் அதைக் கைவிட உண்மைத்தமிழனின் சில உருப்படியான(!) யோசனைகள்


1. எப்போதும் வீடு அல்லது அலுவலகத்திற்குள்ளேயே இருக்கவும். வெளியே வர முயற்சிக்க வேண்டாம்.


2. எப்பொழுதும் சட்டைப் பாக்கெட்டில் குடும்பத்தினரின் சிறிய புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.


3. அலுவலகத்திலும் ஒரு புகைப்படத்தை பிரேம் செய்து கண் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். திருமணமாகாதவர்கள்கூட பேரன், பேத்திகளை பார்க்க வேண்டுமே என்ற வைராக்கியத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.


4. குச்சி மிட்டாய் அல்லது இஞ்சி மிட்டாய் அல்லது TITBITS அல்லது சூரி மிட்டாய் இவைகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து முழுங்கி விடுங்கள்.


5. புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள உங்களுடைய மாம்ஸ்கள், மச்சான்கள், மாப்பிள்ளைகள் வந்தால் நீங்கள் 'இல்லை' என்று சொல்லச் சொல்லிப் பழகுங்கள்.


6. அப்படியும் வெளியில் செல்லும்போது மாட்டிக் கொண்டால் "எனக்கு சிகரெட் பிடித்தவுடன், ஒட்டக பிரியாணி சாப்பிட்டே ஆக வேண்டும். வாங்கித் தர்றியா மாம்ஸ்..?" என்று கேளுங்கள். உங்களது 'மாம்ஸ்' ஒட்டகம் பாணியிலேயே தவ்வித் தவ்வி ஓடி விடுவார்.


7. வலையுலகில் கொள்கை ரீதியான எதிரிகளை நிறைய சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைப் பற்றி நிறைய புலம்பல்களும் இடுகைகளும் வரும். தொடர்ந்து அதற்குப் பதிலளித்துக் கொண்டே இருக்கலாம். புகை பிடிக்க நேரம் இல்லாமல் போனாலும் போகலாம்.))))


8. குளிக்கும் நேரம், பாத்ரூம் செல்லும் நேரம், அலுவலக நேரம், சாப்பிடும் நேரம்.. இவை போக மீதி நேரமெல்லாம் தமிழ்மணத்தை திறந்து வைத்துக் கொண்டு சும்மாவாச்சும் வெறுமனே பார்த்துக் கொண்டாவது இருங்கள். புகை பிடிப்பது நாளடைவில் மறந்து விடும்.)))))


9. கவிதைகளைப் பிடிக்காதவர்கள் தப்பித் தவறிக்கூட கவிதைகள் பக்கம் போக வேண்டாம். அதேபோல் கட்டுரைகளைப் பிடிக்காது கவிதைகளைச் சுவாசிப்பவர்கள் கட்டுரைகளின் பக்கமே செல்ல வேண்டாம். இரண்டுமே கடைசியில் டென்ஷனில் கொண்டு போய் முடிந்து சிகரெட்டை தொட வைத்துவிடும்.


10. 2077-ம் ஆண்டு மே-31ம் தேதி சென்னை நடேசன் முதலியார் பார்க்கில் நடைபெறவிருக்கும் 300-வது வலைத்தமிழர்களின் மாநாட்டின்போது உண்மைத்தமிழன் அதுவரை தான் சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுவதையும் வலையுலகப் பதிவர்கள் சங்கத்தில் பதிவு பெற்ற பதிவர்கள் அனவருக்கும் சம பங்காகப் பிரித்துத் தர எண்ணியுள்ளான். அன்றுவரை இருந்து எனக்குரிய பங்கை வாங்கித்தான் தீருவேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். புகையிலை வஸ்துவை நாட மனசு வரவே வராது.)))))

வாழ்க வளமுடன்

36 comments:

  1. Dear Friend

    Most of the times the articles you post are good and nice to read.

    Try to reduce the size of your articles. Many times you write a lot of unwanted messages in your posts which you can avoid or may be you can divide one post into three and post it.

    Please take this as a constructive advice from your friend.

    Have a good day

    ReplyDelete
  2. பக்தா!

    பதிவுலகில் எங்கே சென்று பதிவு செய்ய வேண்டும்!

    எனக்குரிய பங்கை பழனி மலையில் வந்து உண்டியலில் சேர்த்து விடவும்.

    டீல் ஓகே!

    ReplyDelete
  3. சொத்தைப் பிரிச்சுக் கொடுடா! உன் சங்காந்தமே வேணாம் நீ ஆளை விடுடா!

    சொத்தைப் பிரிச்சுக் கொடுடா! உன் சங்காந்தமே வேணாம் நீ ஆளை விடுடா!

    ReplyDelete
  4. எங்கே மேன் சொத்து இருக்கு? உன் பேர்ல எல்லாம் கடன்தான் இருக்குது!

    ReplyDelete
  5. உலக புகையிலை ஒழிப்பு தினத்தில் அருமையான கட்டுரை...

    கொஞ்சம் நீளமா இருந்தாலும் இழுத்துப்பிடித்து படிக்கை வெச்சிட்டது..

    சரி...கை எல்லாம் லைட்டா உதறுற மாதிரி இருக்கு...ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன்...

    ReplyDelete
  6. சைத்தான் கி பச்சா..

    இவன் என் கைமேலே கடனே வாங்கி படம் எடுக்றேன் பந்தான் காட்றேன்னு பணத்தை லஞ்சமா குட்த்துட்டான்..

    நம்பள் பணம் கைமேலே போடு..அப்புறம் நிம்பள் படத்தே ரிலீஸ் பண்ணு...

    சைத்தான் கி பச்ச்சா ஒன்ஸ் மோர்..

    ReplyDelete
  7. உண்மையே உன் விலை என்ன?....

    ஆமாம், வெற்றிலையுடன் போடும் புகையிலை பரவாயில்லையா?...

    மாவா?, மாணிக்சந்த்?...

    ReplyDelete
  8. நானும் சிகரெட் பிடிப்பேன்,
    வருடத்திற்கு 12, மாதத்துக்கு ஒன்று. ஒரு மாதம் பிடிக்காவிட்டால் அம்மாதத்திய கோட்டா கண்டிப்பாக அடுத்த மாதத்துக்கு செல்லாது.

    நான் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக பிடித்த சிகரெட் ஒரு வலைப்பதிவரை டென்ஷன் ஆக்கியது என்று அறிகிறேன். :)))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. //True friend said...
    Dear Friend, Most of the times the articles you post are good and nice to read. Try to reduce the size of your articles. Many times you write a lot of unwanted messages in your posts which you can avoid or may be you can divide one post into three and post it. Please take this as a constructive advice from your friend. Have a good day//

    மிக்க நன்றி உண்மை நண்பரே.. தேவையில்லாதவற்றை நான் எழுதுவதில்லை. சொல்ல வந்த கருத்தோடு ஒன்றிப் போகும் சில விஷயங்களைத்தான் எடுத்துக் காட்டுகிறேன். அதனால்தான் பதிவு நீளமாக இருப்பதாகத் தெரிகிறது. மேலும் சொல்ல வந்த விஷயங்களை பாதி, பாதியாக அரையும் குறையுமாக கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. தங்களுடைய சீரியக் கருத்துகளுக்கும், அறிவுறுத்தலுக்கும் மீண்டும் எனது நன்றி.

    ReplyDelete
  10. //செந்தழல் ரவி said...
    உலக புகையிலை ஒழிப்பு தினத்தில் அருமையான கட்டுரை...
    கொஞ்சம் நீளமா இருந்தாலும் இழுத்துப்பிடித்து படிக்கை வெச்சிட்டது..
    சரி...கை எல்லாம் லைட்டா உதறுற மாதிரி இருக்கு...ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன்...//

    அடப்பாவி மனுஷா.. நான் எம்புட்டு கஷ்டப்பட்டு ராத்திரி 1 மணிவரைக்கும் உக்காந்து யோசிச்சு, யோசிச்சு எழுதிருக்கேன்.. அத்தனையையும் ரெண்டு நிமிஷத்துல படிச்சுப்போட்டு கூலா தம் போட போறியா.. ஒரு நிமிஷம் நான் சொல்றதை நல்லா யோசி ராசா.. "அந்தச் சனியனுக்கு நீ ஏன் அடிமையா இருக்கணும்?" - புரியுதாப்பா தம்பி..?

    ReplyDelete
  11. ///dondu(#11168674346665545885) said...
    நானும் சிகரெட் பிடிப்பேன், வருடத்திற்கு 12, மாதத்துக்கு ஒன்று. ஒரு மாதம் பிடிக்காவிட்டால் அம்மாதத்திய கோட்டா கண்டிப்பாக அடுத்த மாதத்துக்கு செல்லாது. நான் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக பிடித்த சிகரெட் ஒரு வலைப்பதிவரை டென்ஷன் ஆக்கியது என்று அறிகிறேன். :)))
    அன்புடன்,
    டோண்டு ராகவன்///

    டோண்டு ஸார் நீங்களுமா? மாதம் ஒண்ணுன்னாலும் தப்பு ஸார் தப்பு.. விட்ருங்க..

    அதென்ன ஸார் கடைசியா "பிப்ரவரி மாசம் பிடிச்ச சிகரெட்..?" உங்க பேரைச் சொன்னாத்தான் வலையுலகத்துல எல்லாரும் டென்ஷனாவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. நீங்க சிகரெட் பிடிக்கிறதே டென்ஷனாயிருச்சா?

    நான் புதுசு ஸார்.. கொஞ்சம் அந்த லின்க்கை எடுத்துக் கொடுங்க.. படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்..

    ஒரு வாரமா 'தமிழ்மணம்' ரொம்ப போரா இருக்கு ஸார்.. ஒரு வம்பு இல்லே.. ஒரு சண்டை இல்லே.. என்ன உலகம் இது?

    ReplyDelete
  12. கட்டுரை அருமை வாழ்த்துக்கள்

    நமகு நாமே கட்டுபாடுகள் அவசியம் புகையை ஓழிக்க அல்லது அழிக்க

    ReplyDelete
  13. //மின்னுது மின்னல் said...
    கட்டுரை அருமை வாழ்த்துக்கள்
    நமகு நாமே கட்டுபாடுகள் அவசியம் புகையை ஓழிக்க அல்லது அழிக்க..//

    நன்றி மின்னுது..

    நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டியதுதான்.. அப்படியென்ன சிகரெட் பிடிச்சுத்தான் நான் வாழ வேண்டுமா? அதற்கென்ன நான் அடிமையாக இருப்பது என்ற ரீதியில் யோசித்துப் பார்த்துச் செயல்பட்டால் அனைவருக்குமே நல்லது.

    மின்னல் ஸார்.. புகையிலையை ஒழிக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஏனெனில் நாம் உலகமயமாக்கல் என்ற போதையில் சிக்கிக் கொண்டுள்ளோம். ஆனால் முற்றிலும் தவிர்க்கலாம். அதற்கு அரசுகளின் முழு ஆதரவும் வேண்டும். யார் தருவார்கள்?

    ReplyDelete
  14. தலைவா! எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் வெளங்கவே மாட்டேங்குது!

    ஒவ்வொரு வருஷமும் இதே நாளில் புகையிலை உபயோகிக்காதீங்க புகையிலை உபயோகிக்காதீங்கன்னு கூப்பாடு போட்டுறத வுட்டுட்டு,

    புகையிலைப் பொருட்களை உற்பத்தி பண்ணாதீங்கன்னு சட்டம் போட்டா

    ஒரு ரெண்டு மூணு மாசத்துலயே சிகரெட் பிடிக்கறவங்க, புகையிலை போடுறவங்க எண்ணிக்கை தானா குறைஞ்சிடாதா?

    விக்கறவங்க பாட்டுக்கு விப்பாங்களாம். வாங்க மட்டும் கூடாதாம். அப்புறம் எதுக்கு இதுக்குன்னு ஒரு நாள், விழிப்புணர்வு கொண்டாரேன் பேர்வழின்னு ஒரு பிரசாரம்.


    உடனே குடிசைச் தொழில் பண்ணுறவங்களுக்கு பொழப்பு போயிடுமேன்னு இன்னொரு கவலை!

    அப்ப லாட்டரி சீட்டு விக்குறவங்களை தடை செய்யலையா! அந்த தொழில் பண்ணினவங்க எல்லாம் வேற நாட்டுக்கா பொழப்பு தேடிப் போய்ட்டாங்க! வேற வேலை பாத்து பொழைக்கலை!

    ReplyDelete
  15. //Anonymous said...
    புகையிலைப் பொருட்களை உற்பத்தி பண்ணாதீங்கன்னு சட்டம் போட்டா ஒரு ரெண்டு மூணு மாசத்துலயே சிகரெட் பிடிக்கறவங்க, புகையிலை போடுறவங்க எண்ணிக்கை தானா குறைஞ்சிடாதா? விக்கறவங்க பாட்டுக்கு விப்பாங்களாம். வாங்க மட்டும் கூடாதாம். அப்புறம் எதுக்கு இதுக்குன்னு ஒரு நாள், விழிப்புணர்வு கொண்டாரேன் பேர்வழின்னு ஒரு பிரசாரம். உடனே குடிசைச் தொழில் பண்ணுறவங்களுக்கு பொழப்பு போயிடுமேன்னு இன்னொரு கவலை!//

    தலைவா நீங்க கோவப்படுறதுலேயும் அர்த்தம் இருக்கு. புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்வதால் நாட்டுக்கு கிடைக்கும் வரி மொத்த பட்ஜெட்டில் கால்வாசி.

    புகையிலைத் தொழிலை தடை செய்தால் உடனே இந்த கால்வாசித் தொகையும் கட்டாயிரும். அந்தத் தொழில் செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் ரோட்டுக்கு வருவாங்க..

    பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அந்தத் தொகைக்கு ஈடாக என்ன செய்து நாட்டை முன்னேற்றலாம். அந்தத் தொகையை நாம் எந்த வகையில் சம்பாதிக்கலாம் என்கிற குறைந்தபட்ச அறிவுகூட நம்ம அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அவுகளுக்குத் தெரிஞ்சது கள்ள ஓட்டு, கமிஷன், பதவி, லஞ்சம் ஊழல்.. அவ்ளோ அறிவாளிக யாரு தலைவா நம்மகிட்ட இருக்கா..?

    வேலை இழக்கும் தொழிலாளர்கள் சும்மா இருந்தாலும் நம்ம எதிர்க்கட்சிக்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க.. பாருங்க.. பாருங்க.. நம்ம தொழிலாளர்களை பிச்சையெடுக்க வைச்சிட்டாங்கன்னு போராட வைச்சு இந்த அரசு தொழிலாளர்கள் விரோத அரசுன்னு சொல்லி தொழிலாளர்களை அவுக பக்கம் இழுக்க பார்ப்பாக.. இவுக எங்க நமக்கு ஓட்டுப் போடாம போயிருவாகளோன்னு கவலைப்பட்டுத்தான் நம்ம மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் சும்மாவாச்சும் அழுவாணி ஆட்டம் ஆடிக்கிட்டிருக்காங்க.. எல்லாமே கேடுகெட்ட அரசியல்தான் தலைவா..

    அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மனம் வைத்தால் உடனே ஒரே நாளில் இதை தடை செய்ய முடியும். மக்களைக் காப்பாற்றவும் முடியும். ஆனால் அவர்களோ இதனால் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் பார்க்கிறார்கள். அப்புறம் சாதாரண மக்களாகிய நாம் என்ன செய்வது?

    //அப்ப லாட்டரி சீட்டு விக்குறவங்களை தடை செய்யலையா! அந்த தொழில் பண்ணினவங்க எல்லாம் வேற நாட்டுக்கா பொழப்பு தேடிப் போய்ட்டாங்க! வேற வேலை பாத்து பொழைக்கலை!//

    சரியான பாயிண்ட்தான்.. லாட்டரி சீட்டுத் தொழிலில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. அதோடு அதன் மூலம் வரக்கூடிய வரிகளும் மாநில அரசுகளுக்குத்தான். அதன் அளவும் குறைவுதான்.. எனவே தைரியமாக அதைச் செய்தார்கள். ஆனால் புகையிலை ஆக்டோபஸ் சைஸ்க்கு நாட்டில் தலை விரித்தாடுகிறது.. அதை அடக்குவது என்பது ஆட்சியாளர்களின் கையில்தான் உள்ளது.

    ReplyDelete
  16. புகையிலை,சிகரெட் பிடிப்பவர்கள் எப்படி அவஸ்தை படுவார்கள் என்று கண்கூடாக பார்க்க ராயப்பேட்டா ம்ருத்துவமனையில் முன்பெல்லாம் புகைப்படம் வைத்திருந்தார்கள் (1982வில்),இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.ஒரே ஒரு தடவை பார்த்தால் போதும் பாதி பேர் அந்த பக்கமே தலைவைக்கமாட்டார்கள்.
    இதன் கடுமையை உணர்ந்து தான் சிங்கை அரசாங்கம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் மீதான வரியை ஏற்றி ஏற்றி இப்போது பத்து சிகரெட் உள்ள ஒரு பாக்கெட் சுமார் 270 ரூபாய்க்கு வந்திருக்குது.சிகரெட் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
    ஒரு மணி வரைக்கும் உட்கார்ந்து யோசித்து எழுதியதற்க்கு இப்படி பின்னூட்டம் கூட போடவில்லை என்றால் எப்படி?
    உங்கள் பதிவு மூலம் ஓரளவு திரட்டியின் முகப்பு மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பல வெட்டி பதிவுகளுக்கு இடையே ஒரு அற்புதமான வலைபூ. தினம் தோறும் google reader வழியாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  18. //
    விக்கறவங்க பாட்டுக்கு விப்பாங்களாம். வாங்க மட்டும் கூடாதாம். அப்புறம் எதுக்கு இதுக்குன்னு ஒரு நாள், விழிப்புணர்வு கொண்டாரேன் பேர்வழின்னு ஒரு பிரசாரம்.
    //

    ஏம்பா மூட்டை பூச்சி மருந்து எலி மருந்து தான் விக்கிறாங்கனு அதை வாங்கி குடிப்பாங்களா..

    உலகத்தோட படைப்பே முரண்பாடனது..

    அரளிசெடியும் இருக்கும் தக்காளி இருக்கும் நீதான் எதுன்னு செலக்ட் பண்ணணும்..

    அத விட்டுட்டு அவன் விக்கிறான் விக்கிறான்னு ஏன் வெட்டி பேச்சு

    ReplyDelete
  19. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

    ReplyDelete
  20. நல்ல பதிவு உண்மை தமிழரே.. புகை பிடிக்கறவங்க பக்கத்துல இருக்கறவங்களுக்கும் இதனால பாதிப்பு தான்.. (passive smoking is also injurious)

    ReplyDelete
  21. புகையிலை ஒழிப்புக்கு ஆதரவா இங்கே நியூஸி மவோரிக் கட்சி கருத்து
    சொல்லி இருக்கு. புகையிலை சம்பந்தப்பட்ட சகலத்தையும் நாட்டை விட்டேத்
    துரத்தப் போறாங்களாம்.

    அப்படி நடந்துருச்சுன்னா ................

    உலகில் இது புகை இல்லாத நாடுகள் வரிசையில் ரெண்டாம் இடத்தைப் பிடிக்குமாம்.

    முதல் இடம் ஏற்கெனவே பிடிச்ச நாடு பூட்டான்.

    இங்கே ஏற்கெனவே நிறைய இடங்களில், 'பார்' களில், வேலை நிறுவனங்களில் எல்லாம்
    புகைக்குத் தடா போட்டாச்சு.

    இங்கு ஆண்களைவிட அதிகமாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் பெண்கள்(-:

    இந்தப் புகையின் கூடவே 'குடி'யையும் ஒழிச்சுட்டா நிம்மதி.

    போட்டும், பீடைகள் விட்டதுன்னு இருக்கலாம்.

    ReplyDelete
  22. டோண்டு, நல்லா யோசிங்க...

    வரவணை அந்த தம்மை ( கிங்ஸ்) உங்களிடம் கொடுத்தார் சரி...அதை யாரிடம் வாங்கி கொடுத்தார் ?

    ஏன்னா வரவணை அடிப்பது ஒன்லி வில்ஸ்...

    அந்த சமயம் பார் அட்டெண்டரிடம் வரவணை ஒரு பாக்கெட் சிகரெட் கேட்டிருந்தார் (சிகரெட் ஏற்கனவே தீர்ந்துவிட்டதால்), மேலும் அது அந்த நேரம் வரவணை கைக்கு வந்து சேரவில்லை...

    வரவணை பக்கத்தில் மிதக்கும் வெளி உட்கார்ந்திருந்தார், அங்கே தான் நான்...நீங்க டேபிளின் கடைசியில் இருந்து ஒரு தம்மு வேண்டும் என்று (சிக்கன் தொடையை கவ்விக்கொண்டிருந்தபோது) கேட்டது வரவணையிடம்...

    அவர் என்னுடைய பாக்கெட்டில் இருந்து தான் எடுத்து கொடுத்தார்...

    ஆகவே - நீங்கள் கொடுத்த 200 ரூபாய் சரியாப்போச்சு..(சிக்கனுக்கும் / பீருக்கும்)...

    கிங்ஸ் சிகரெட் என்னோடது...எனக்கு தான் மூனு அம்பது (3.50) - (இப்ப வெலை ஏறிடிச்சுங்க ரூ 4:00) கொடுக்கனும்...

    ஹா ஹா ஹா :)))))))))

    உண்மைத்தமிழரே, வரவணையான் செந்திலின் சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவை படிக்கவும்....

    ReplyDelete
  23. //வடுவூர் குமார் said...
    புகையிலை,சிகரெட் பிடிப்பவர்கள் எப்படி அவஸ்தை படுவார்கள் என்று கண்கூடாக பார்க்க ராயப்பேட்டா ம்ருத்துவமனையில் முன்பெல்லாம் புகைப்படம் வைத்திருந்தார்கள் (1982வில்),இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.ஒரே ஒரு தடவை பார்த்தால் போதும் பாதி பேர் அந்த பக்கமே தலைவைக்கமாட்டார்கள்.//

    இருக்கிறது குமார் ஸார்.. ஆனாலும் அங்கே வருபவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களே இதைத்தான் செய்கிறார்கள். பிறகு வெளி ஜனங்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?

    //இதன் கடுமையை உணர்ந்து தான் சிங்கை அரசாங்கம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் மீதான வரியை ஏற்றி ஏற்றி இப்போது பத்து சிகரெட் உள்ள ஒரு பாக்கெட் சுமார் 270 ரூபாய்க்கு வந்திருக்குது.சிகரெட் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.//

    இங்கேயும் அதே கதைதான்.. ஒரு நாளைக்கு சிகரெட்டுக்காக அதிகப் பணம் செலவழிக்க வேண்டி அரசு அலுவலகங்களில் சில்லரை விஷயங்களுக்காக 'கை நீட்டும்' பழக்கம் அதிகரித்துவிட்டது. இதற்கு வழியில்லாதவர்கள் குறைந்த செலவில் போதையளிக்கும் பீடா, பான் பராக் என்று தாவிவிட்டார்கள். ஒன்று விட்டால் இன்னொன்று..

    //ஒரு மணி வரைக்கும் உட்கார்ந்து யோசித்து எழுதியதற்க்கு இப்படி பின்னூட்டம் கூட போடவில்லை என்றால் எப்படி? உங்கள் பதிவு மூலம் ஓரளவு திரட்டியின் முகப்பு மறுமலர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.தொடர வாழ்த்துக்கள்.//

    தங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் குமார் ஸார்..

    ReplyDelete
  24. //Anonymous said...
    பல வெட்டி பதிவுகளுக்கு இடையே ஒரு அற்புதமான வலைபூ. தினம் தோறும் google reader வழியாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை//

    மிக்க நன்றி அனானி.. தமிழில் டைப் செய்யத் தெரிந்த நீங்களும் ஒரு வலைப்பூவை ஆரம்பிக்கலாமே.. எதற்காகக அனானியாக வர வேண்டும். தொடரட்டும் உங்களது வலைப்பூ சேவை.. நன்றிகள்..

    ReplyDelete
  25. ///Anonymous said...
    //விக்கறவங்க பாட்டுக்கு விப்பாங்களாம். வாங்க மட்டும் கூடாதாம். அப்புறம் எதுக்கு இதுக்குன்னு ஒரு நாள், விழிப்புணர்வு கொண்டாரேன் பேர்வழின்னு ஒரு பிரசாரம்.//
    ஏம்பா மூட்டை பூச்சி மருந்து எலி மருந்து தான் விக்கிறாங்கனு அதை வாங்கி குடிப்பாங்களா.. உலகத்தோட படைப்பே முரண்பாடனது.. அரளிசெடியும் இருக்கும் தக்காளி இருக்கும் நீதான் எதுன்னு செலக்ட் பண்ணணும்.. அத விட்டுட்டு அவன் விக்கிறான் விக்கிறான்னு ஏன் வெட்டி பேச்சு//

    சரி விடுங்க அனானி. அவர் கேட்டதும் ஒருவகைல நியாயமானதுதான். மனித மனமே ஊசலாட்டமான மனசுதான். தெரிஞ்சேதான எல்லாரும் தப்பு பண்றோம். அந்த பச்சாபதத்துல கேட்டுட்டாரு. அதுல தப்பில்லைன்னு நான் நினைக்கிறேன். மொத்தமா தடை பண்ணிட்டா இந்தப் பேச்சே வராதே..

    ReplyDelete
  26. //சிங்கம்லே ACE !! said...
    நல்ல பதிவு உண்மை தமிழரே.. புகை பிடிக்கறவங்க பக்கத்துல இருக்கறவங்களுக்கும் இதனால பாதிப்பு தான்.. (passive smoking is also injurious)//

    உண்மைதான் சிங்கம்லே ஸார்..

    கோவை பதிவர் முகாமுக்கு போயிருந்தப்ப, அங்கன அம்புட்டு பேரும் விட்டப் புகை முழுசையும் இந்த உண்மைத்தமிழன்தான் தாங்கிக்கிட்டான்.. என்ன ஆகப் போகுதோ? முருகா.. நீதான் காப்பாத்தணும்..

    ReplyDelete
  27. //துளசி கோபால் said...
    புகையிலை ஒழிப்புக்கு ஆதரவா இங்கே நியூஸி மவோரிக் கட்சி கருத்து சொல்லி இருக்கு. புகையிலை சம்பந்தப்பட்ட சகலத்தையும் நாட்டை விட்டேத் துரத்தப் போறாங்களாம். அப்படி நடந்துருச்சுன்னா ................
    உலகில் இது புகை இல்லாத நாடுகள் வரிசையில் ரெண்டாம் இடத்தைப் பிடிக்குமாம். முதல் இடம் ஏற்கெனவே பிடிச்ச நாடு பூட்டான். இங்கே ஏற்கெனவே நிறைய இடங்களில், 'பார்' களில், வேலை நிறுவனங்களில் எல்லாம்
    புகைக்குத் தடா போட்டாச்சு. இங்கு ஆண்களைவிட அதிகமாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் பெண்கள்(-:
    இந்தப் புகையின் கூடவே 'குடி'யையும் ஒழிச்சுட்டா நிம்மதி. போட்டும், பீடைகள் விட்டதுன்னு இருக்கலாம்.//

    நல்லது டீச்சர்.. இந்தப் புகை நமக்குப் பகைன்னு ஊர், ஊருக்கு சுவத்துல எழுதி மட்டும் வைச்சிருக்கோம். அதுக்குப் பக்கத்துலேயே பெட்டிக் கடை வைச்சு வித்துக்கிட்டுத்தான் இருக்கோம்.. என்ன செய்றதுன்னு தெரியலை.. பாருங்க அங்கன ஒரு கட்சிக்காரவுகளுக்கே இதை ஒழிக்கணும்னு யோசனை வந்திருக்கு.. இங்க..? ம்.. பெருமூச்சு விடுறேன் டீச்சர்.. கிறிஸ்ட்சர்ச்வரைக்கும் கேக்கும்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  28. //செந்தழல் ரவி said...
    டோண்டு, நல்லா யோசிங்க... வரவணை அந்த தம்மை ( கிங்ஸ்) உங்களிடம் கொடுத்தார் சரி...அதை யாரிடம் வாங்கி கொடுத்தார்? ஏன்னா வரவணை அடிப்பது ஒன்லி வில்ஸ்... அந்த சமயம் பார் அட்டெண்டரிடம் வரவணை ஒரு பாக்கெட் சிகரெட் கேட்டிருந்தார் (சிகரெட் ஏற்கனவே தீர்ந்துவிட்டதால்), மேலும் அது அந்த நேரம் வரவணை கைக்கு வந்து சேரவில்லை... வரவணை பக்கத்தில் மிதக்கும் வெளி உட்கார்ந்திருந்தார், அங்கே தான் நான்...நீங்க டேபிளின் கடைசியில் இருந்து ஒரு தம்மு வேண்டும் என்று (சிக்கன் தொடையை கவ்விக்கொண்டிருந்தபோது) கேட்டது வரவணையிடம்... அவர் என்னுடைய பாக்கெட்டில் இருந்து தான் எடுத்து கொடுத்தார்... ஆகவே - நீங்கள் கொடுத்த 200 ரூபாய் சரியாப்போச்சு..(சிக்கனுக்கும் / பீருக்கும்)... கிங்ஸ் சிகரெட் என்னோடது...எனக்கு தான் மூனு அம்பது (3.50) - (இப்ப வெலை ஏறிடிச்சுங்க ரூ 4:00) கொடுக்கனும்... ஹா ஹா ஹா :))))))))) உண்மைத்தமிழரே, வரவணையான் செந்திலின் சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவை படிக்கவும்....//

    ஆஹா.. இப்படியரு மேட்டரு இருக்கா.. இன்னிவரைக்கும் தெரியாமப் போயிருச்சே.. மொதல்ல வரவனையான் வூட்டுக்குள்ள பூந்து படிச்சிட்டு அப்பால அதையும் எடுத்துப் போட்டு ஏதாச்சும் கலகம் பண்ண முடியுமான்னு பார்க்குறேன்.. தம்பி செந்தழலு.. இப்படித்தாம்பூ இருக்கணும்.. ஊர் விட்டு ஊர் போயிருந்தாலும் நம்ம குணம் விடாது பார்த்தியா.. நல்லாயிருப்பா.. நல்லாயிரு..

    ReplyDelete
  29. தம்பி செந்தழலு முழுசையும் படிச்சிட்டனே.. ஒண்ணத்தையும் காணோம்.. அடுத்து யார்கிட்ட போய்க் கேக்குறது? வரவனையானுக்கே ஞாபகமில்லைன்னுட்டாரு.. ஏதாவது எடுத்துக் கொடுப்பா.. ரொம்பப் போரடிக்குது..

    ReplyDelete
  30. இங்க கொலைவெறியுடன் அமுக்கவும்

    இந்த போஸ்டால டோண்டு மாமா மிகவும் நொந்து நூடுல்ஸ் ஆனார்...எனக்கு போன் செய்து சொச்ச 14.50 காசை மணியார்டர் அல்லது டி.டி அனுப்புவதாக சொன்னார்..

    நான் தான் கொஞ்சம் கூல் செய்தேன்...

    ஆனாலும் எங்க வரவணை செந்தில் குட்டபுஸ்க்கிக்கு குசும்பு ஈபிள் கோபுரம் அளவுக்கு இருக்குது என்பதை இந்த பதிவை பார்க்கும் எவருக்கும் தெரிந்துபோகும்...

    இந்த பின்னூட்டம் போட்ட விஷயத்தை டோண்டுவிடம் சொல்லிடாதீங்க சரியா...(அட, இவ்ளோ ஈஸியா தப்பிக்கலாமா..)

    ReplyDelete
  31. //செந்தழல் ரவி said...
    இங்க கொலைவெறியுடன் அமுக்கவும்
    இந்த போஸ்டால டோண்டு மாமா மிகவும் நொந்து நூடுல்ஸ் ஆனார்...எனக்கு போன் செய்து சொச்ச 14.50 காசை மணியார்டர் அல்லது டி.டி அனுப்புவதாக சொன்னார்..
    நான் தான் கொஞ்சம் கூல் செய்தேன்...
    ஆனாலும் எங்க வரவணை செந்தில் குட்டபுஸ்க்கிக்கு குசும்பு ஈபிள் கோபுரம் அளவுக்கு இருக்குது என்பதை இந்த பதிவை பார்க்கும் எவருக்கும் தெரிந்துபோகும்...
    இந்த பின்னூட்டம் போட்ட விஷயத்தை டோண்டுவிடம் சொல்லிடாதீங்க சரியா...(அட, இவ்ளோ ஈஸியா தப்பிக்கலாமா..)//

    அடப்பாவமே.. ஒரு மனுஷனை இப்படியா எழுத்தால 'ராகிங்' பண்றது? நண்பர் வரவனையின் குசும்பு ஈபிள் கோபுரம் அளவுக்கில்லை.. அதுக்கும் மேலய்யே..

    அப்பா செந்தழலு, அதான் டோண்டு ஸார் அனுப்புறேன்னு சொல்றாருல்ல.. பேசாம வாங்கிக்க வேண்டியதுதான.. வேணாம்னா உன் பேரைச் சொல்லி ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்ல போடச் சொல்லிரு.. உனக்கு ஆஞ்சநேயர்தான் பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு..

    ReplyDelete
  32. ஓக்கே, இப்போது என்னுடைய இந்தப் பதிவைப் படிக்கவும். பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_12.html

    இன்னும் சற்று அதிகத் தெளிவு கிடைக்கும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  33. 'ஒரு நுனியில் நீ. மறு நுனியில் மரணம்' என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

    புகை உடல் நலத்திற்குக் கேடு என்று தெரிந்தும் அதைப் புகைப்பவர்களை விட அந்த 'பொகைஞ்ச நாத்தத்தையும்' சகிச்சுக்கிட்டு புகைப்பவர்களைக் கண்டால்தான் வினோதமாக இருக்கிறது. குடலைப் பிரட்டும் நாற்றம்.! கருமம்.

    நல்ல பதிவு - பாராட்டுகள்.

    //நான் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக பிடித்த சிகரெட் //

    டோண்டு ஸார். நான் கூட 'நான் சமீபத்தில் 1876-இல் பிப்ரவரி மாதம் கடைசியாகப் பிடித்த சிகரெட்...." என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்! :-)

    //இங்கு ஆண்களைவிட அதிகமாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் பெண்கள்//

    அக்கா அது 'புகையற பழக்கமா' இருக்கும்! பார்த்துச் சொல்லுங்க! அதான் எல்லாவிடத்துக்கும் பொதுவான பழக்கமாச்சே! :-)) Just kidding!

    ReplyDelete
  34. //dondu(#11168674346665545885) said...
    ஓக்கே, இப்போது என்னுடைய இந்தப் பதிவைப் படிக்கவும். பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_12.html இன்னும் சற்று அதிகத் தெளிவு கிடைக்கும்.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்//

    படிச்சிட்டேன் ஸார்.. தெளிவா..? ரொம்ப ரொம்பத் தெளிவாயிட்டேன்.. நான் அப்ப இல்லையேன்னு கொஞ்சம் மன வருத்தமா இருக்கு ஸார்.. இருந்திருந்தா.. உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காமெடியா இருந்திருக்கும்.. அந்தப் போலி டோண்டுவால நீங்க பட்ட கஷ்டத்தை நான் ஏற்கெனவே உங்க வீட்டுக்குள்ள புகுந்து படிச்சிருக்கேன்.. கஷ்டந்தான் சாமி.. நானா இருந்தா இடத்தைக் காலி பண்ணிட்டு ஓடியிருப்பேன். நீங்க எப்படியோ தைரியமா தாக்குப் பிடிச்சிருக்கேள். ஆச்சரியமான விஷயம்.. இதுக்கே உங்களுக்குத் தனியா ஒரு பாராட்டு ஸார்.. அதனாலதான் 'டோண்டு' என்ற பெயருக்கே வலையுலகில் ஒரு தனி மரியாதை கிடைச்சிருக்கு..

    எது நடந்தாலும் அது நன்மைக்கேன்னு நினைக்கிற ஆளு நானு.. ஏன்னா எனக்கு முதல் முதல்லா வந்த பின்னூட்டம், உங்களோட பதிவுல நான் போட்ட ஒரு பின்னூட்டத்துனாலதான். அதுனால இதுக்கும் தனியா உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்..

    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  35. ///"வற்றாயிருப்பு" சுந்தர் said...
    'ஒரு நுனியில் நீ. மறு நுனியில் மரணம்' என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.
    புகை உடல் நலத்திற்குக் கேடு என்று தெரிந்தும் அதைப் புகைப்பவர்களை விட அந்த 'பொகைஞ்ச நாத்தத்தையும்' சகிச்சுக்கிட்டு புகைப்பவர்களைக் கண்டால்தான் வினோதமாக இருக்கிறது. குடலைப் பிரட்டும் நாற்றம்.! கருமம். நல்ல பதிவு-பாராட்டுகள்.//

    ஒரு நுனியில் நீ.. மறுநுனியில் மரணம்.. ஆஹா.. நல்லாயிருக்கே.. யார் எழுதினது ஸார்..? எடுத்துக் கொடுத்ததுக்கும், வந்து கருத்துச் சொன்னதுக்கும் தேங்க்ஸ் ஸார்.. அது நாத்தம்னு நீங்க சொல்றீங்க.. ஆனா புகைக்கிறவங்க ஏதோ ஆவி பிடிக்கிற மாதிரி அது ஒரு புகைங்கறாங்க.. ஆவியாப் போனாத்தான் தெரியும். அது ஆவியா? பாவியான்னு..? என்ன ஸார் நான் சொல்றது?

    //நான் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக பிடித்த சிகரெட் //
    டோண்டு ஸார். நான் கூட 'நான் சமீபத்தில் 1876-இல் பிப்ரவரி மாதம் கடைசியாகப் பிடித்த சிகரெட்...." என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்! :-)

    சந்தோஷப்படுங்க ஸார்.. தப் போய் கிண்டல் பண்ணிக்கிட்டு.. நம்ம வலையன்பர் ஒருத்தர் சிகரெட்டைத் தொட்டே நாலு மாசமாச்சுன்னா நாமதான சந்தோஷப்படணும்.. வாழ்க டோண்டு ஸார்..

    //இங்கு ஆண்களைவிட அதிகமாக புகைப்பழக்கம் உள்ளவர்கள் பெண்கள்//
    அக்கா அது 'புகையற பழக்கமா' இருக்கும்! பார்த்துச் சொல்லுங்க! அதான் எல்லாவிடத்துக்கும் பொதுவான பழக்கமாச்சே! :-)) Just kidding!///

    போச்சு.. போச்சு. டீச்சர் மேடம் உண்மையைச் சொல்லப் போயி அதுக்குள்ள ஒரு உள்குத்தா..? சுந்தர் ஸார்.. காத்திருங்க டீச்சர் வந்து பெஞ்ச் மேல ஏத்தப் போறாங்க.. நல்லவிதமாச் சொன்னா கேக்க மாட்டீகளே சாமி..

    ReplyDelete