Pages

Friday, May 04, 2007

இன்னும் என்னதான் வேணுமாம் இவுகளுக்கு?

எம்.பி.க்களின் சம்பளம்

சம்பளம், மாதம் 18000 ரூபாய்.

தொகுதி அலவன்ஸ், மாதம் 20000 ரூபாய்.

பாராளுமன்றக் கூட்டம் நடக்கும்போது ஒரு நாளைக்கு ரூபாய் 1000.

தினமும் எம்.பிக்கள் செய்யும் பயணத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 8 ரூபாய் பயணப்படி.

அலுவலகச் செலவிற்கு ஒரு எம்.பி.க்கு மாதம் 14000 ரூபாய்.

தொகுதி வளர்ச்சி நிதியாக வருடத்திற்கு 2 கோடி ரூபாய்.

சலுகைகள்

ரயிலில் எம்.பி.க்கும் அவருடைய மனைவிக்கும் இலவச முதல் வகுப்பு டிக்கெட்.

இதில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்ற விதிவிலக்கு.

ஒரு வருடத்திற்கு 40 முறை விமானப் பயணத்தில் பிஸினஸ் கிளாஸில் பயணம்.

அரசு வேலையாக வெளிநாடு சென்றால் விமானத்தில் பிஸினஸ் கிளாஸ் கட்டணம்.

எந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்த நாட்டுக்கு ஏற்றபடி தினசரிப் படி.
தங்குமிடச் சலுகைகள்.

டெல்லியில் டிவி, ஏ.சி., பிரிட்ஜ், இலவச பராமரிப்புடன் வெறும் 2000 ரூபாய் வாடகையில் பங்களா.

ஒரு வருடத்திற்கு 50000 யூனிட்டுகள்வரை மின் கட்டணம் இல்லை.

பயன்படுத்தும் ஒரு துளி தண்ணீருக்குக்கூடக் கட்டணமில்லை.

மூன்று இலவச டெலிபோன்கள்.

வருடத்திற்கு 1,70,000 டெலிபோன் கால்கள்வரை இலவசம்.

இன்னும் என்னதான் வேணுமாம் இவுகளுக்கு?

10 comments:

  1. எனக்கு இது போதும்.

    தயவு செஞ்சு எனக்காகவும் ஒரு 'துண்டு' போட்டு வையுங்க:-)))))

    ReplyDelete
  2. //துளசி கோபால் said...
    எனக்கு இது போதும்.

    தயவு செஞ்சு எனக்காகவும் ஒரு 'துண்டு' போட்டு வையுங்க:-)))))//

    மேடம் என் காசுலேயே துண்டு வாங்கிடறேன். அது பிரச்சினையில்லை.

    ஆனா துண்டை எந்தப் 'பந்தி'யில போடுறது? 'அம்மா'வோட பந்திலயா? 'ஐயா'வோட பந்திலயா? 'புயலோட' பந்திலயா? 'மாம்பழத்தோட' பந்திலயா? 'தாமரை'யோட பந்திலயா? இல்லாட்டி கட்டக் கடைசியா 'அரிவாள், சுத்தியலோட' பந்திலயா?

    எம்புட்டுக் குழப்பம் வருது பாருங்க.. தெளிவாச் சொல்லுங்க மேடம்.. சீக்கிரம்.. உங்களுக்கு முன்னாடி யாராவது போட்டுறப் போறாங்க.. ))))))))

    ReplyDelete
  3. உண்மைத் தமிழன்,

    மக்கள் அவ்வழி ஆளுவோர் அவ்வழி.

    நம் சமூகத்தில் பரவலாக இருக்கும் அதே பிணிதான் அரசியல் பிரதிநிதிகளையும் பீடித்திருக்கிறது.

    நீங்கள் மாநகராட்சி பள்ளி மேடை குறித்து எழுதியிருந்தது போல ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் என்ன சிரமம் வந்தாலும் தவறான வழியில் பணம் கேட்கவோ கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதி கொள்ளும்போதுதான் இதற்கு விடிவு ஏற்படும்.

    பெரும்பான்மையினர் கொடுப்பதைக் கொடுத்து வேலையை முடித்துக் கொள்வோம் என்று நினைக்கும் நிலை மாற வேண்டும்.

    உங்கள் விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி.

    அன்புடன்,

    மா சிவகுமார்

    ReplyDelete
  4. //உண்மைத் தமிழன்,

    மக்கள் அவ்வழி ஆளுவோர் அவ்வழி.

    நம் சமூகத்தில் பரவலாக இருக்கும் அதே பிணிதான் அரசியல் பிரதிநிதிகளையும் பீடித்திருக்கிறது.

    நீங்கள் மாநகராட்சி பள்ளி மேடை குறித்து எழுதியிருந்தது போல ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் என்ன சிரமம் வந்தாலும் தவறான வழியில் பணம் கேட்கவோ கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதி கொள்ளும்போதுதான் இதற்கு விடிவு ஏற்படும்.

    பெரும்பான்மையினர் கொடுப்பதைக் கொடுத்து வேலையை முடித்துக் கொள்வோம் என்று நினைக்கும் நிலை மாற வேண்டும்.

    உங்கள் விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி.

    அன்புடன்,

    மா சிவகுமார்//

    நன்றி மா.சி. ஸார்.. ஜனநாயகத்தில் லஞ்சம் என்பதற்கான வழியை அடித்தளமிட்டு அமைத்துக் கொடுப்பது இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள்தான்.. நீங்களே பாருங்கள்..

    இதே பாபுபாய்கடாரா அடுத்தத் தேர்தலில் அதே தொகுதியில் அதே கட்சியின் சார்பாகவும் நிற்கலாம். அல்லது சுயேச்சையாக நின்று ஜெயித்தாலும் ஜெயிப்பார்.

    நம் நாட்டில் மட்டும்தான் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது.

    ReplyDelete
  5. //நம் நாட்டில் மட்டும்தான் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது //


    better than USA
    Judges never appointed PM in india :-)

    ReplyDelete
  6. //எம்புட்டுக் குழப்பம் வருது பாருங்க.. தெளிவாச் சொல்லுங்க மேடம்..
    சீக்கிரம்.. உங்களுக்கு முன்னாடி யாராவது போட்டுறப் போறாங்க.. ))))))))//

    உங்களுக்குத் தெரியாதா என்ன? எதுக்கு மார்கெட் நிச்சயம்னு பாத்து அங்கே இடம்
    புடிச்சுருங்க.:-)

    ReplyDelete
  7. //துளசி கோபால் said...
    உங்களுக்குத் தெரியாதா என்ன? எதுக்கு மார்கெட் நிச்சயம்னு பாத்து அங்கே இடம்
    புடிச்சுருங்க.:-)//

    இப்போதைக்கு 'அம்மா' கட்சின்னா குனிஞ்சு நிமிர்றதுக்குள்ள பெண்டு கழன்றும். இல்லாட்டி அதை எப்படிச் செய்றதுன்னே தனியா டிரெயினிங் எடுத்திட்டு வரணும்..

    'சூரிய'க் கட்சின்னா 'பெரிய வீடு', 'சின்ன வீடு' இதுல ஏதாவது ஒரு கிச்சன் காபினெட்டுல உங்களுக்குச் செல்வாக்கு இருக்கணும்.. இருக்குங்களா மேடம்..

    டாக்டரய்யா கட்சின்னா ஒரு நாளைக்கு ஒத்த வார்த்தைகூட இங்கிலீஷ்ல பேசவே கூடாது. அப்படி தப்பித் தவறி வந்துட்டா டெய்லி நீங்க அபராதம் கட்ட வேண்டி வரும்.. இப்ப இன்னொரு தகுதியும் வேணும்.. அது 100 டிகிரி வெயில்ல சைக்கிள் ஓட்டணும்.. முடியுங்களா மேடம்..

    அப்புறம் 'புரட்சிப்புயல்' கட்சில சீட் கிடைக்கும்.. ஆனா உலக அரசியல் தெரிஞ்சிருக்கணும்.. முக்கியமா எங்கிட்டாச்சும் 'புலி'யைப் பார்த்தீங்கன்னா அது உங்களைக் கடிக்குமோ, கடிக்காதோ அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம பக்கத்துல போய் 'நீ நல்லாயிருக்கியா? உங்க அம்மா அப்பா சவுக்கியமா? தாத்தா, பாட்டிக்கெல்லாம் பல்லு இருக்கா'ன்னு அக்கறையா விசாரிக்கணும்.. தைரியம் இருக்குங்களா மேடம்..?

    அடுத்தாப்புல இருக்கிறது அரிவாள், சுத்தியல்.. இதுல பாருங்க. நீங்க டெய்லி எங்க போனாலும் நடந்துதான் போகணும். தப்பித் தவறி கூலிங்கிளாஸ்கூட போடக்கூடாது.. வீட்டுக்கு வந்தவங்களை பெட்ரூம் வரைக்கும் கூட்டிட்டுப் போய் பேசணும்.. யாராச்சும் மார்க்கெட்ல காசு கொள்ளையடிக்கிறாங்கன்னு வந்து சொன்னாங்கன்னா.. உடனே கிளம்பி குறைந்தபட்சம் அஞ்சு பைசாவாச்சும் குறைச்சுப் பேசி அவுகளுக்கு கேட்டதை வாங்கித் தரணும்.. முடியுமா மேடம்..?

    கடைசியா தாமரை இலைக் கட்சி.. ஒண்ணுமே செய்ய வேணாம்.. 'வெளி நாட்டுல பத்து வருஷம் இருந்தேன். இப்ப இங்க வந்திருக்கேன்.. பொழுது போக மாட்டேங்குது.. எங்கயாவது ஊர் சுத்தணும்னு நினைக்கிறேன்'னு சொல்லுங்க. அவுங்களே.. உங்களுக்கேத்த தொகுதி பார்த்து நிக்க வைச்சிருவாங்க..

    அப்புறம் ஜெயிக்கிறது உங்க தலையெழுத்து..

    பெஸ்ட் ஆ·ப் லக் மேடம்..

    ReplyDelete
  8. Anonymous said...
    //better than USA
    Judges never appointed PM in india :-)//

    ஐயா அனானி

    இப்ப இந்தியால சுப்ரீம் கோர்ட்டுன்னு ஒரு கோர்ட்டுதான் சாமி, நிசமா ஆட்சி செய்யுது..
    அது மட்டும் இல்லேன்னு வைச்சுக்க.. அம்புட்டுதான்.. இந்நேரம் இந்தியா திவாலாகியிருக்கும்.

    இங்கன ஒரு ஆறு மாசம் வந்து இருந்து பாருங்க.. அப்புறம் தெரியும்.. எது பெட்டர்ன்னு..?

    ReplyDelete
  9. Hi mams,
    I think it is not enough for those guys, otherwise why they are under corruption, my thought is we need a man from Shankar's Film as "INDIAN"

    ReplyDelete
  10. //who am I said...
    Hi mams,
    I think it is not enough for those guys, otherwise why they are under corruption, my thought is we need a man from Shankar's Film as "INDIAN"//

    வாடா வா.. பிளாக்கர்ஸ்ல என் பேர்ல ஒண்ணு ஓப்பன் பண்ணிருக்கேன்டா.. வந்து பாருடான்னு எப்ப சொன்னதுக்கு எப்ப வந்து பார்க்குற..?

    அது சரி.. இந்தியன் தாத்தா மாதிரி ஆளுகள்ல்லாம் இன்னிக்கு வந்தாலும் சினிமால மட்டும்தான் அது சாத்தியம்.. நிஜத்துல வந்து கஞ்சா கேஸ்தான்.. பத்து வருஷத்துக்கு உள்ளதான்.. மொதல்ல கம்ப்யூட்டரை விட்டுட்டு வெளில வந்து பேசிப் பாருங்கடா..

    ReplyDelete