Pages

Monday, March 26, 2007

இவர்களுக்கு எதற்கு ஓட்டு?

....தேர்தலில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது திருடன், காலித்தனம் செய்பவன், எதற்கும் அருகதையற்றவன், பாமரர் - ஆகிய அனைவருக்கும் ஓட்டு. இவர்கள் எப்பேர்ப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை சற்று நடுநிலையிலிருந்து யோசித்தால், நான் ஏன் அரசியல் வேலை முக்கியமல்ல என்று கூறுகிறேன் என்பது விளங்கும்.

- குடியரசு(14.5.1948)வில் பெரியார்






4 comments:

  1. டூ லேட்!

    இவர்கள் தேர்ந்தெடுத்த தமிழக அரசு தன் ஆண்டு வருவாயில் 20% சாராய விற்பனை 8000 கடைகளில் செய்து ஈட்டுகிறது!

    இந்தியாவிலேயே எப்போதும் வெப்பம் நிலவும் சீதோஷ்ணமுள்ள தமிழ்நாடு தான் அளவுக்கு அதிகமான மொடாக் குடியர்களிருக்கும் நம்பர் 1 மாநிலம்!

    எய்ட்ஸிலும் தமிழ்நாடுதான் ஆல் இந்தியாவில் முதல் இடம்!

    பகுத்தறிவு, சுயமரியாதைச் சுடர் வெளிச்சம் போட்டுக்காட்டி விடுதலை செய்யும் உண்மை!

    அபாயம்! Shock அடிக்கும் உண்மை!

    ReplyDelete
  2. ஹோய்!

    ஹரிஹரனுக்கு ஒரு சரியான ஜோடி கெடைச்சாச்சு டோய்!!!!

    ReplyDelete
  3. ஹரிஹரன் ஸார்.. வெல்கம்.

    பெரியாருடன் எனக்கு சில விஷயங்களில் மட்டும்தான் உடன்பாடு உண்டு. அவற்றில் இதுவும் உண்டு. குடிப்பதில் தமிழ்நாடு முதலிடமில்லை. எனக்குத் தெரிந்து இப்போதைக்கு கேரளாதான்.. நாம் அந்த இடத்தை விரைவில் பிடித்துவிடுவோம்..

    எய்ட்ஸிலும் நாம் இரண்டாமிடம்தான்.. மகாராஷ்டிரா இந்த ஆண்டு துவக்கத்திலேயே நம்மை அடித்துவிட்டதாக புள்ளி விபரப் புள்ளிகள் தெரிவிக்கிறார்கள்.

    நாம் இழந்த 'பெருமையை' எப்பாடுபட்டாவது நாம் பெற்று விடுவோம். கவலைப்பட வேண்டாம்..

    லக்கிலுக் அண்ணேன்..

    உண்மையைத்தாண்ணே சொல்லிருக்காரு பெரியார்..
    கூட்டிக் கழிச்சுப் பாருங்க..
    'உண்மை' தெரியும்.. புரியும்..

    ReplyDelete